PDA

View Full Version : புலம்பெயர்ந்த தேவதையின் கதை



சுஜா
03-07-2008, 11:42 AM
புலம்பெயர்ந்த தேவதையின் கதை





அவள் பெரிதாய் ஒன்றும்
கேட்டதில்லை.


மழைக்கால வெல்வெட் பூச்சிகளும்,
தான் வளர்க்கும் கிளிக்கு ஒரு ஆப்பிளையும் ,
கயிற்று உஞ்சலையும் மட்டுமே கேட்டிருக்கிறாள் .

பூக்களை காட்டிலும்
புதிய புத்தகத்தின் வாசனையே அவளுக்கு
பிடித்திருந்தது .


மயிலுக்கு வலிக்கும் என்று,
அரசயிலையையும் ,ஆவரம் பூக்களையும் .... மட்டும் புத்தகத்தில் பாடம் செய்வவள்.

உமத்தன்காயை சீப்பாக்கியவள்.

நெல்லி தின்ற தொண்டையில் ,
நீர்பருக்ச்சொல்லி வேதிவினை நிகழ்த்திகாட்டியவள்.



இன்னும் நிறைய மாயங்கள்
நிகழ்த்திக்காட்டியவள்.


அவளின் ஒவ்வொரு பிறந்தநாளன்று,
ஒரு ரகசிய கேசரிதுண்டு எனைவந்து சேரும் .


பின் ஒருநாள் தலை குனிந்தால்(வைக்கப்பட்டாள் )
அதன் பிறகு யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை .

என்னை மட்டும் தராசின் முள்போல்
தயங்கி தயங்கி பார்ப்பாள்.


பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்தது .
அவளும் நானும் வேறு வேறு திசையில் புலம்பெயர்ந்தோம் .



சார்பியல் தத்துவத்திற்கினங்க
வருடங்கள் வேகமாக ஊர்ந்து விட்டது.......
மறந்து போன அவளின்,
பழைய தொலைபேசி எண்கள் ,
நிகழ்தகவாடியும் கைக்கெட்டவில்லை.


என்னிடம் இருப்பதெல்லாம்,
அவளுக்காக எழுதி, கொடுக்காமல் பத்திரபடுத்தியிருகும்
எழுத்துபிளைகளுடன் கூடிய காதல் கடுதாசிகள்தான்.

_____________________________________________
அன்புடன் சுஜா

நம்பிகோபாலன்
03-07-2008, 11:47 AM
" எழுத்துபிளைகளுடன் கூடிய காதல் கடுதாசிகள்தான் "

அருமையான வார்த்தைகள் வாழ்த்துக்கள்.

ஓவியா
03-07-2008, 01:16 PM
பிரமாதம். மிகவும் ரசித்து படித்தேன்.

முதல் காதலா? அப்ப இப்படிதான் ரசனையாக வரும். பாராட்டுக்கள்.

ஆதவா
03-07-2008, 01:30 PM
பிரமாதம். மிகவும் ரசித்து படித்தேன்.

முதல் காதலா? அப்ப இப்படிதான் ரசைனாயக வரும். பாராட்டுக்கள்.

நீங்க ரசனைன்னு சொல்றீங்களா? இல்லை ரசாயனம்னு சொல்றீங்களா?

(ரெண்டும் ஒண்ணுதாண்டா மடையா அப்படீன்னும் சொல்றீங்களா? :D )

ரொம்ப நல்லா இருக்குங்க சுஜா... நீங்க எழுதிய பிளை(?) இல்லா கடிதங்கள் ரொம்ப பெரிசு போல... அதான் இங்க கொட்டை எழுத்தில போட்டிருக்கீங்க... :D

கவிதை அழகா போகுது. வார்த்தைகளும் நல்லா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க.. ரசனைகள் புதுமை...ம்ம்ம் இன்னும் என்ன சொல்ல... நமக்கு ஒண்ணும் தோணலைங்க.


புலம்பெயர்தல் அப்படின்னு தலைப்பு இருக்கிறதால, என்னிக்கோ எழுதிவெச்ச ஒரே ஒரு கவிதையை மட்டும் உங்களுக்கு பரிசாக வழங்குகிறேன்.


குடியிருப்பதற்காக
வீட்டைச் சுத்தப்படுத்துகையில்
புலம்பெயர்ந்தன பூச்சிகள்

(அடிக்க வாராதீங்க.. நமக்கு இப்படித்தான் எழுதத்தெரியும்..)

சுஜா
04-07-2008, 08:27 AM
" எழுத்துபிளைகளுடன் கூடிய காதல் கடுதாசிகள்தான் "

அருமையான வார்த்தைகள் வாழ்த்துக்கள்.

வார்த்தைகளை ரசித்ததிற்கு நன்றி .
_______________________________
அன்புடன் சுஜா

சுஜா
04-07-2008, 08:35 AM
பிரமாதம். மிகவும் ரசித்து படித்தேன்.

முதல் காதலா? அப்ப இப்படிதான் ரசனையாக வரும். பாராட்டுக்கள்.

யய்யோ நான் காதலித்ததே கிடையாது .
பள்ளி வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை ஒன்றுதிரட்டியிருந்தன் அவ்வளவு தான் .
___________________________________
அன்புடன் சுஜா .

சுஜா
04-07-2008, 08:46 AM
குடியிருப்பதற்காக
வீட்டைச் சுத்தப்படுத்துகையில்
புலம்பெயர்ந்தன பூச்சிகள்

(அடிக்க வாராதீங்க.. நமக்கு இப்படித்தான் எழுதத்தெரியும்..)

எனது கவிதைகளை விமர்சனம் செய்ததிற்கும் ,
பரிசாக கவிதை வழங்கியதற்கும் மிக நன்றி .
____________________________
அன்புடன் சுஜா