PDA

View Full Version : நீரில் விழுந்த நிலவாய்....



சிவா.ஜி
03-07-2008, 11:11 AM
நான் உன்னை
என்ன செய்ய சொல்லிவிட்டேன்....?

சின்ன நாய், செல்லப் பூனை
வண்ணமீன், வாடா மல்லி
அன்னப் பறவைக்கெல்லாம்
உன்னிலிருந்து தரும் அன்பை
சின்னதாய் விள்ளி
என்னுள் எறிந்து விடு என்றுதானே....?

நீரில் விழுந்த நிலா
அலையால் உடைக்கப்படுவதைப் போல
உன்னில் விழுந்த நான்....உன்
நிலையால் உடைந்து போகிறேன்!

நிலா........அலை தாண்டி அகன்றுவிடும்
நான்........உனைத் தாண்டி எங்கு செல்ல?
உடைக்கப்பட்டாலும் ஒவ்வொரு சில்லிலும்
உன் நினைவு தாங்கி இங்கேயே
இருக்கத்தானே படைக்கப் பட்டேன்....!

கண்மணி
03-07-2008, 11:35 AM
நான் உன்னை
என்ன செய்ய சொல்லிவிட்டேன்....?

சின்ன நாய், செல்லப் பூனை
வண்ணமீன், வாடா மல்லி
இன்னபிற பறவைக்கெல்லாம்
உன்னிலிருந்து தரும் அன்பை
சின்னதாய் விள்ளி
என்னுள் எறிந்து விடு என்றுதானே....?

நீரில் விழுந்த நிலா
அலையால் உடைக்கப்படுவதைப் போல
உன்னில் விழுந்த நான்....உன்
நிலையால் உடைந்து போகிறேன்!

நிலா........அலை தாண்டி அகன்றுவிடும்
நான்........உனைத் தாண்டி எங்கு செல்ல?
உடைக்கப்பட்டாலும் ஒவ்வொரு சில்லிலும்
உன் நினைவு தாங்கி இங்கேயே
இருக்கத்தானே படைக்கப் பட்டேன்....!

---------------------------------------
இன்ன பிற = இதுபோன்ற வேறு....



காக்கை குருவி குயில் மயில் இன்னபிற பறவைகள் என்றல் சரி..

அண்டா, குண்டா, குடம் இன்னபிற பாத்திரங்கள் சரி..
சின்ன நாய், செல்லப் பூனை, வண்ண மீன் வாடா மல்லி இவையெல்லாம் பறவைகளா என்ன?

---------------------------------------------------------

உன்னில் விழுந்த நான்....உன்
நிலையால் உடைந்து போகிறேன்!

உன்னிலிருந்து தரும் அன்பை
சின்னதாய் விள்ளி
என்னுள் எறிந்து விடு


அதெப்படிங்க? நீங்க அவளில் விழுந்தாச்சு.. அவள் கிள்ளி எறிந்தால் அன்பு உங்களை விட்டுப் போயிடாதா?:lachen001::lachen001::lachen001:

(என்னடா இது சிவனேன்னு ஒரு கவிதை எழுதினேன் கடிச்சிட்டாளேன்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது கத்தாழைக் கண்ணில பட்டுருச்சே!!)

அவளில் விழுந்த நீங்கள் உடைகிறீர்கள் என்றால் அவள் மனம் கல்லா? கல்மேல விழுந்தா உடைந்தீர்கள்? அழகா திட்டறீங்க. நான் கண்ணாடி உன் மனம் கல்லு அதில் விழுந்து நான் உடைஞ்சிட்டேன்னு,,,, ஹையோ ஹையோ

நிலா ஆயிரம் குட்டைகளில் முகம் காட்டும்.. அதனால் நிலா நீரில் தெரிவதை காதலுக்குச் சொன்னா நான் எப்ப மட்டும் எஸ்க்கேப்பாவேன் என்பது தான் அர்த்தம். நீங்களும் சொல்லி இருக்கீங்க அதை கவனிச்சீங்க தானே..


காதலில் என் மனதில் அவளிருக்கிறாள் என்றால் எனக்கு அவள் மேல் காதல் என்று அர்த்தம். அவள் மனதில் நானிருக்கிறேன் என்றால் அவளுக்கு என்மேல் காதல் என்று அர்த்தம். அப்போ இந்தக் கவிதையோட அர்த்தம் என்ன?

சிவா.ஜி
03-07-2008, 11:49 AM
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி. அந்த இன்னபிறவை சுட்டிக் காட்டினதுக்கு. மாத்திடறேன்.

மத்ததுக்கெல்லாம் ஒரே பதில்......

காதலில் இதெல்லாம் சகஜமம்மா.....ஹி...ஹி..

இதுதான் லாஜிக் இல்லா மேஜிக்.

நம்பிகோபாலன்
03-07-2008, 11:49 AM
உன்னில் விழுந்த நான்....உன்
நிலையால் உடைந்து போகிறேன்!

உடைக்கப்பட்டாலும் ஒவ்வொரு சில்லிலும்
உன் நினைவு தாங்கி இங்கேயே
இருக்கத்தானே படைக்கப் பட்டேன்....!

திரும்ப திரும்ப படிக்க சொல்லும் வரிகள் . அருமை சிவா 'னா.

சிவா.ஜி
03-07-2008, 11:58 AM
எப்போதும் கிடைக்கும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ந(த)ம்பி.

ஆதவா
03-07-2008, 12:08 PM
அண்ணா.. கவிதையின் பாதை தனிவழியே செல்ல எத்தனிக்கும்போது அதன் கரு குறுக்கே வந்து தடைசெய்கிறது.

ஒரு நாய்க்குக் கூட பகிர முடிந்த அன்பைத் தனக்குத் தரவேண்டி மன்றாடும் காதலனின் மன்றாட்டம்.

நீரில் விழுந்த நிலா, அவளில் விழுந்த அவன். நல்ல ஒப்புமை. அதில் அவள் ஒப்புதல் இல்லாமையின் நிலைப்பாடு.. அலை அடித்த நிலவாய் ஒடியும் அவன் நிலை.. கச்சிதமான பொருத்தம். ஆனால் அலை, நிலவை உடைக்க விரும்புவதில்லை.. அது உடைக்கத் தள்ளப்படுகிறது..

இது குறித்த எனது காட்சிகவிதை ஒன்று இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16348)

நிலா அகல்வதில்லை. அது திரும்பவும் முயற்சிக்கும்.. ஒவ்வொரு முறையும். அதன் பிரதி பிம்பத்தை நிலையாக்கும் முயற்சியில் தோற்றுப் போய் நிற்கும் திரவம்...

நிலவுக்கு என்றும் நிலையான பிம்பம் கிடைக்காது. ஆனால்.. இங்கு காதல் உறுதியானால் ??

ஒரு சின்ன ஏமாற்றம் அண்ணா. உங்களது காதல் கவிதைகளில் எப்போதும் நிலைத்திருக்கும் ஒருவித புதுமை இக்கவிதையில் சட்டெனத் தோன்றி மறைந்துவிடுவதுதான்... அது...

வாழ்த்துகள்... அண்ணா..

ஆதவா
03-07-2008, 12:14 PM
உன்னில் விழுந்த நான்....உன்
நிலையால் உடைந்து போகிறேன்!

உன்னிலிருந்து தரும் அன்பை
சின்னதாய் விள்ளி
என்னுள் எறிந்து விடு


அதெப்படிங்க? நீங்க அவளில் விழுந்தாச்சு.. அவள் கிள்ளி எறிந்தால் அன்பு உங்களை விட்டுப் போயிடாதா?:lachen001::lachen001::lachen001:


நல்ல கடிங்க.... பார்த்துங்க.. காயம் ஆயிடப்போவுது



அவளில் விழுந்த நீங்கள் உடைகிறீர்கள் என்றால் அவள் மனம் கல்லா? கல்மேல விழுந்தா உடைந்தீர்கள்? அழகா திட்டறீங்க. நான் கண்ணாடி உன் மனம் கல்லு அதில் விழுந்து நான் உடைஞ்சிட்டேன்னு,,,, ஹையோ ஹையோ

:lachen001:


நிலா ஆயிரம் குட்டைகளில் முகம் காட்டும்.. அதனால் நிலா நீரில் தெரிவதை காதலுக்குச் சொன்னா நான் எப்ப மட்டும் எஸ்க்கேப்பாவேன் என்பது தான் அர்த்தம். நீங்களும் சொல்லி இருக்கீங்க அதை கவனிச்சீங்க தானே..

இதுக்குப்பேருதான் உள்ள வெச்சு குத்தறது..... :icon_rollout:

காதலில் என் மனதில் அவளிருக்கிறாள் என்றால் எனக்கு அவள் மேல் காதல் என்று அர்த்தம். அவள் மனதில் நானிருக்கிறேன் என்றால் அவளுக்கு என்மேல் காதல் என்று அர்த்தம். அப்போ இந்தக் கவிதையோட அர்த்தம் என்ன?


அவ மனசிலதான் அவர் இல்லையே!! (வெயிட்டு தாங்காதும்மா) :D

சிவா.ஜி
03-07-2008, 12:23 PM
நன்றி ஆதவா. கொஞ்சம் சந்தத்துக்காக செய்த வார்த்தை சுருக்கங்கள்..தெளிவில்லாமல் போய் விட்டதோ.
அலையால் உடைக்கப்படும் நிலா...அவள் நிலையால் உடைக்கப்படும் அவன்...அதாவது அவளும் விரும்பி உடைக்கவில்லை. அலையைப் போலத்தான் அவள் நிலையும். முடிவு செய்ய இயலாத நிலை. அது அவனை உடைக்கிறது.
மற்றபடி...நிலா குளத்தில் விழவேண்டுமென்று விழுவதில்லை. அதன் பயணத்தில் ஒரு பிரதிபலிப்பு. ஆனால் அவன் நிலையைத்தான் அந்த நிலா உடைப்புக்கு உதாரணமாக்கினேனே தவிர அவனை நிலாவுக்கு நிகராக்கவில்லை.

அதனால்தான் சொன்னேன் நிலா அகன்றுவிடும் என்று. இவன் அகல மாட்டானே. எனவே பொருளை ஒப்பிடாமல், நிகழ்வை ஒப்பிட்டேன்

மீண்டும் நன்றி ஆதவா. கவிதையைப் பொருத்தவரையில் இன்னும் கற்றுக்கொள்ளும் சிறுவன்போலத்தானே..நான். பின்னூட்டங்கள் நிறைய கற்றுக்கொடுக்கின்றன.