PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!



Pages : [1] 2 3 4 5 6 7 8

Narathar
03-07-2008, 03:23 AM
எந்திரன் :: நிழலுக்கு உயிர்
::::: படக்கவிதை உங்களுக்காக!

அன்பின் மன்ற சொந்தங்களே......

நமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது!
ஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.
அந்த காதலினால் இந்த திரியை நான்
மன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........

இந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்
புதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.

==========================================================================

இத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,
அந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......

அது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..

உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......

கவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...

அதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...
ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.

=========================================================================


இதோ உங்கள் கற்பனைக்கு..........
உங்கள் கவி வரிகளை எதிர்பார்த்து
எனது முதலாவது படம்.

http://img26.picoodle.com/img/img26/4/7/2/narathar/f_motherandbam_ebbf841.jpg

எங்கே உங்கள் கவிதைகள் களைகட்டட்டும்.!!!

shibly591
03-07-2008, 03:35 AM
குழந்தைக்கு அன்னையின் முத்தம்
கடவுளின் தூது

விகடன்
03-07-2008, 03:44 AM
பாசத்தை கற்பிக்கும்
அன்னையின்
பதிவு...
முத்தம்.

சிவா.ஜி
03-07-2008, 05:09 AM
நான் ஜணித்தபோது
என் அன்னை எனக்கீந்த முத்தத்தின்
ஈரம் காய்ந்துவிடாமல்
காத்து வந்ததை....அதனுள்ளிருந்த பாசத்தை
சேர்த்து வந்ததை...
இன்றுனக்கு ஈந்து
அர்த்தமுணர்ந்தேன்...நானும்
அன்னையாகி முழுமையடைந்தேன்!
நன்றி மகளே............!!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2008, 05:32 AM
இதயங்கள் மறத்துப் போன
எந்திர சப்தத்திற்குள்
துல்லியமாய் முத்த சப்தம் கேட்கும்
வித்தையை உலகிற்கு கற்றுக்கொடு
அப்பொழுதாச்சும் பார்க்கலாம்
உலகம் உய்யுமாவென்று!

aren
03-07-2008, 06:30 AM
உன்னை நீ இன்றே அறிந்துகொள் மகனே
நாளை உலகம் உன்னை அறிந்து கொள்ளும்!!!!

ஓவியன்
03-07-2008, 06:37 AM
தூக்கம் பல தொலைத்து
நீ உழைக்கப் போகும்
இரவுகள் பலவற்றிற்காக
இன்றே நீ தூங்கு மகனே தூங்கு....!!

ஓவியன்
03-07-2008, 06:39 AM
இதயங்கள் மரத்துப் போன
எந்திர சப்தத்திற்குள்
துல்லியமாய் முத்த சப்தம் கேட்கும்
வித்தையை உலகிற்கு கற்றுக்கொடு
அப்பொழுதாச்சும் பார்க்கலாம்
உலகம் உய்யுமாவென்று!


அன்பினால் உலகினை வெல்லச் சொல்லுகிறீர்கள்...!!

அழகான வரிகள், பாராட்டும் வாழ்த்துக்களும்...!! :)

பாலகன்
03-07-2008, 08:28 AM
குழந்தையாய் நீ இருக்கும் வரை
கவலை உனக்கில்லை.......
இது போல ஆயிரம் முத்தங்களை நீ
பெற்றிடுவாய்
பெரியவனாய் வளர்ந்துவிட்டால்
நீ என்னை நினைக்க இது உதவுமே
என் செல்வ மகனே..................

நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

அன்புடன்
பில்லா

meera
03-07-2008, 08:29 AM
நான்
பல முறை
மரணிக்க தயார்

ஒருமுறை
உன்
பட்டுமேனியை
தொட்டு நுகர்வதற்காக........

meera
03-07-2008, 08:32 AM
நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........

பாலகன்
03-07-2008, 08:35 AM
மீராவின் இரண்டு கவிதையுமே அருமை

வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா

அக்னி
03-07-2008, 08:46 AM
நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........
எம் சமுதாயத்தில் புரையோடிப்போன ஒரு விடயத்தை அழகாகச் சொல்லும் கவிதை.
பாராட்டுக்கள் மீரா...

நம்பிகோபாலன்
03-07-2008, 09:00 AM
உன் கன்னத்தில்
முத்தம் பதிக்க
எத்தனை முறை
வேண்டுமானாலும்
இறந்து பிறப்பேன்
பிரசவத்தில்....

அக்னி
03-07-2008, 09:16 AM
புரியாத நீ...
தெரியாத நான்...

உன்னை
முத்தமிட்ட கணத்தில்
தெரிந்து கொண்டேன்..,
உனக்குப் புரிந்த மொழியை...

ஓவியன்
03-07-2008, 09:23 AM
நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........


எத்தனை கொடுமையான விடயமிதுவென்பதை அழகாக வரிகளில் புகுத்திய மீராவுக்கு என் பாராட்டுக்களும்....

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2008, 10:16 AM
பாராட்டுக்கு நன்றி ஓவியன் அவர்களே

ஆதவா
03-07-2008, 11:06 AM
மூன்று கிலொ எடையுள்ள
கையடக்கப் பூவினை

மொழியில்லா உலகினுள் உலவிவிட்டு
விழி திறக்காமல் மறுத்தவளை

பெறுதற் கில்லா பேறு பெற்ற
எனக்குப் பிறக்காமல் பிரசவித்தவளை

ஏற்று முத்தமிடுகிறேன்

ஏச்சுக்கள் மகிழ்வாய் திரும்பியது
இந்நிழலுக்கு உயிராய்.

விகடன்
03-07-2008, 11:08 AM
நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........

வெறுமனே கவிதை என்று படித்தால் அசத்தலான கவிதை மீரா...
அதற்கு முதற்ற்கண் பாராட்டுக்கள்.

ஆழ ஊன்றிப்பார்ப்பின்...
ஒரு தாய் ஒருபோதும் தன் குழந்தையை நன்றி கூறும் முகமாக முத்தமிடுவது கிடையாது. ஒரு பிரதிபலனையும் எதிர்பாராது அன்பை பொழிபவளே தாய். அப்படிப்பட்ட தாயின் முத்தத்தை தாங்கள் குற்றிப்பிட்டதுபோல சித்தரிக்க முடியுமா?

இது என்னுடைய கருத்து.

ஆதவா
03-07-2008, 11:27 AM
எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாய் அன்னையே
இத்தனை இன்பங்கள் உன்னுள் - மலர்ந்திட
முத்தம் பொழிந்திடும் உன்னில் பிறக்கநான்
எத்தனை கொண்டிருந்தேன் பேறு

- வெண்பா

ஓவியா
03-07-2008, 01:44 PM
நான்
பல முறை
மரணிக்க தயார்

ஒருமுறை
உன்
பட்டுமேனியை
தொட்டு நுகர்வதற்காக........

மிகவும் உயர்ந்த சிந்தனை மீரா. :)



நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........

பாராட்டுக்கள்.
நான் என்றுமே உங்கள் கவிதைக்கு அடிமை.

கண்மணி
03-07-2008, 01:47 PM
நான்
பல முறை
மரணிக்க தயார்

ஒருமுறை
உன்
பட்டுமேனியை
தொட்டு நுகர்வதற்காக........

இதுக்கு மேல என்ன சொல்றது...???:icon_b::icon_b::icon_b:

நுகர்வது - வேணாம் தங்கச்சி .. முகர்வதுன்னு சொல்லிடலாமா?

நுகர்வதுன்னா பலன் தேடுவது... தாய் தன் மகளை நுகர மாட்டாள்.. உச்சி முகர்வாள்.. சரியா?:icon_b:

(தங்கச்சி, எனக்கு புரியறது உனக்குப் புரியுதா?)

Narathar
03-07-2008, 01:59 PM
திரியை தொடங்கி ஒரு சில நிமிடங்களிலேயே பதிவிட்டு இத்திரியை உயிரூட்டிய சிப்லி, விராடன் மற்றும் சிவாவுக்கும் நன்றிகள் பல..........

தொடர்ந்து என் அழைப்பையேற்றுவந்து பதிவிட்ட ஹசனீ , அரேன், ஓவியன் , பில்லா , மீரா....... ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்..........

தொடர்ந்து வந்து கவிதை தந்த அக்னி, நம்பிகோபாலன்,
ஆதவன் ஆகியோருக்கும்..... பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய ஓவிய மற்றும் கண்மணிக்கும் நாரதரின் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.......

இத்திரியை தொடர்ந்து உயிர்ப்பாக வைத்திருப்பது உங்களனைவரதும் பொறுப்பு........




நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

அன்புடன்
பில்லா

ஆஹா! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்........
இன்னும் எழுதுங்கள். இன்றைய கிறுக்கல்கள் நாளைய உலகின் தலைவிதியாக கூட மாறலாம்!

உங்கள் முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள்

கண்மணி
03-07-2008, 02:05 PM
முத்தமுரசிச் சொல்வேன்
காதோர ரகசியம்
உனக்கொன்று கண்ணே!

உன் முனகல் கூட
அம்மா என ஒலிக்கக் கேட்டு
மரத்த மனது
துளிர்க்குதடி!

பூவின் மென்மை
தண்டின் உறுதி
இலையின் கருணை
வேரின் ஆற்றல்

(தொப்புள்)கொடியில் பூத்த மலர்
உன்னுள்ளும் இருக்கட்டும்

உன் பூவிதழ் கோதலில்
பூத்துச் சுரந்து
மேகங்களுக்கு மேல் எனைப்
பறக்க வைப்பவளே

கண்ணுறங்கு மகளே
காலங்கள் காத்திருக்கும்
உனக்காக.

மன்மதன்
03-07-2008, 02:10 PM
........

நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

அன்புடன்
பில்லா

நன்றாகத்தானே இருக்கிறது.. தொடர்ந்து கவிதை எழுதுங்க தல...

மன்மதன்
03-07-2008, 02:12 PM
அம்மாவின்
முத்தம்
அமுதம்.. !!

மன்மதன்
03-07-2008, 02:14 PM
நான்
பல முறை
மரணிக்க தயார்

ஒருமுறை
உன்
பட்டுமேனியை
தொட்டு நுகர்வதற்காக........



மரணிக்க என்பது நெகடிவ்வாக இருப்பதால்..
'புதிதாய் பிறக்க' என்று மாற்றி பாஸிட்டிவாக சிந்திப்போம்..!!:)

மன்மதன்
03-07-2008, 02:16 PM
நன்றியுடன்
முத்தமிட்டேன் உன்னை..
மலடி என்னும்
வார்த்தையில் மடிந்துவிடாமல்
எனக்கு
மறு ஜென்மம் தந்ததற்க்காக..........

அருமை..:icon_b:

கண்மணி
03-07-2008, 02:16 PM
பிரசவம் என்பது மறுபிறவிதே மன்மி(மம்மி??)யண்ணா!

மலர்விழி
03-07-2008, 03:03 PM
இன்றும்
தேடி பார்க்கிறேன்
என் கன்னங்களில்

அம்மா,
உன் இதழ் ரேகை
பதிந்திருக்கிறதா என்று!

மலர்விழி
03-07-2008, 03:15 PM
முதல் முத்தத்தில்
சுகம் தந்தாய்,

தழுவலில்
இதம் சேர்த்தாய்,

கருணையில்
கடவுளானாய்,

சாதத்தில்
அன்பையும் ஊட்டினாய்,

என்னை நீ சுமந்தது பத்து மாதம் - நான்
உன்னை சுகமாய் சுவாசிப்பது என் ஆயுட்காலம்...

அம்மா,
இறைவன் தந்த உம்மையும்
நீ அருளிய தமிழையும் நான் மறவேன்!:icon_rollout::icon_rollout:

அக்னி
03-07-2008, 03:30 PM
என் முகவரியாக
தந்திடுவாய் முத்தம்...
உன் முகம் வரியாகினும்
தாங்குவேன் நித்தம்...

இது,
பேரம் அல்ல...
பேரின்பத்தை இழக்கவிரும்பாத
பயத்தின் பிரதிபலிப்பு...

முத்தமிட்டு
அரசுத் தொட்டிலில் மட்டும்
இட்டுவிடாதே...

Narathar
03-07-2008, 03:35 PM
நான் ஜணித்தபோது
என் அன்னை எனக்கீந்த முத்தத்தின்
ஈரம் காய்ந்துவிடாமல்
காத்து வந்ததை....அதனுள்ளிருந்த பாசத்தை
சேர்த்து வந்ததை...
இன்றுனக்கு ஈந்து
அர்த்தமுணர்ந்தேன்...நானும்
அன்னையாகி முழுமையடைந்தேன்!
நன்றி மகளே............!!!!

அருமையான வரிகள்............
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்

அக்னி
03-07-2008, 03:41 PM
என்னை நீ சுமந்தது பத்து மாதம் - நான்
உன்னை சுகமாய் சுவாசிப்பது என் ஆயுட்காலம்...

கவரும் வரிகள்... :icon_b:
பாராட்டுக்கள் மலர்விழி...

மன்மதன்
03-07-2008, 03:41 PM
பிரசவம் என்பது மறுபிறவிதே மன்மி(மம்மி??)யண்ணா!

கரெக்டுக்கா....

சூரியன்
03-07-2008, 03:56 PM
திடீர்னு கேட்டா நமக்கு கவிதையெல்லாம் வராது.
பொறுங்க யோசிச்சு பதிகிறேன்..

Narathar
03-07-2008, 04:40 PM
மன்மி(மம்மி??)யண்ணா!


கரெக்டுக்கா....


:lachen001: நாராயணா!!!!!

இளசு
03-07-2008, 04:57 PM
நண்பர் நாரதரின் இந்த அருமையான திரிக்கு என் வாழ்த்துகள்..

உலகின் முதல் மொழி அன்பு..
அந்த மொழியின் முதல் ஒலி முத்தம்..

அங்கே தொடங்கியதால்
இங்கே கவிக்குவியல்..

அசத்தும் அனைவருக்கும் என் அன்பு!

சாலைஜெயராமன்
03-07-2008, 06:24 PM
உயிரின் உணர்வை உதட்டில் உரைத்த
உண்மையின் ஒளியாம் அன்னையின் முத்தம்
அன்பின் பரிமாணம் அளவில்லாது அளித்த
அமுத முகத்தின் அழகுத் தூது
மூலமான இம்மொழிதான் என் காதென்ற
யோனியில் கரைந்து நின்ற முதல் சத்தம்
ஊமையாய் உலகில் உதித்தெழுந்த சவத்திற்கு
அன்பெனும் உயிரை அறிவித்த முதல் அமுதம்
காதலைக் காட்டும் காரிகையின் முத்தம்
காணாது கலைந்துவிடும் கணநேரச் சத்தம்
முத்தத்தின் முகங்கள் முடிவில்லாது மாறிடினும்
என்றும் மாறா அன்பின் அடையாளம்
அன்னை தந்த அமுதச் சுரங்கம்

நம்பிகோபாலன்
03-07-2008, 06:44 PM
உன் கருவறையின்
பாதுகாப்பு
எனக்காக நீ
தாங்கி கொண்ட வலிகள்
உச்சி முகர்ந்து
நீ தந்த முத்தம்
வார்த்தைகளில்
சொல்லி விட முடியுமா
உந்தன் பெருமையை
உயிருக்கு உயிர் தருவது
பெண்மையின் சிறப்பு
உனக்கு நான் என்ன
செய்ய போகிறேன்..... ( கண்ணீருடன்)....

நம்பிகோபாலன்
03-07-2008, 06:53 PM
நீ
முத்தமிட்ட போதுதான்
உணர்ந்தேன்
நீயும்
பிறந்திருக்கிறாய் என்று....

(பிரசவத்தை மறுப்பிறப்பு என்ற அர்த்தத்தில் எழுதிருக்கிறேன்.)

தீபன்
03-07-2008, 11:57 PM
சிறை வைத்த உன்னை
இன்று
சிரம் வைத்து வணங்குகின்றேன்!

முந்நூறு நாள் நீ வைத்த
சிறையினால்தான்
இந்நாளில் நான்
நலமோடு மண்ணில் வாழ்கிறேன்!

நீயுண்டதில் நானுமுண்டு
உனக்குள்ளே உறங்கிக்கொண்டு
உன் பல்லக்கு வயிற்றில்
பயணித்த நாட்கள்
இனியும் வருமா?

கூலி வாங்காமல் தூளிசுமக்க
உன்னையன்றி
எவருக்கும் முடியுமா?

கண்மணி
04-07-2008, 12:53 AM
நான் ஜணித்தபோது
என் அன்னை எனக்கீந்த முத்தத்தின்
ஈரம் காய்ந்துவிடாமல்
காத்து வந்ததை....அதனுள்ளிருந்த பாசத்தை
சேர்த்து வந்ததை...
இன்றுனக்கு ஈந்து
அர்த்தமுணர்ந்தேன்...நானும்
அன்னையாகி முழுமையடைந்தேன்!
நன்றி மகளே............!!!!

மையக் கருத்து சூப்பர் சிவாஜியண்ணா,, வார்த்தைப் பிசிறுகளைக் கவனத்துடன் களைந்தீர்களானால்.....

பட்டைத்தீட்டப்பட்ட வைரமாய் மிளிரலாம்...

கண்மணி
04-07-2008, 12:57 AM
இதயங்கள் மறத்துப் போன
எந்திர சப்தத்திற்குள்
துல்லியமாய் முத்த சப்தம் கேட்கும்
வித்தையை உலகிற்கு கற்றுக்கொடு
அப்பொழுதாச்சும் பார்க்கலாம்
உலகம் உய்யுமாவென்று!


நல்ல சிந்தனை,, உலகம் வேண்டாம், களைத்து வந்து சாப்பிட்டு விட்டு, அந்தச் சனியனை தூங்க வச்சியா என்று கேட்கும் சில அப்பன்களையாவது!!!:icon_rollout:

கண்மணி
04-07-2008, 12:58 AM
உன்னை நீ இன்றே அறிந்துகொள் மகனே
நாளை உலகம் உன்னை அறிந்து கொள்ளும்!!!!

இது அப்பாவா அம்மாவா? :confused::confused::confused:

தாயுமானவன்!:icon_rollout:

கண்மணி
04-07-2008, 01:00 AM
தூக்கம் பல தொலைத்து
நீ உழைக்கப் போகும்
இரவுகள் பலவற்றிற்காக
இன்றே நீ தூங்கு மகனே தூங்கு....!!

சரியான அறிவுரைதான்,..:icon_b::icon_ush:

கண்மணி
04-07-2008, 01:01 AM
குழந்தையாய் நீ இருக்கும் வரை
கவலை உனக்கில்லை.......
இது போல ஆயிரம் முத்தங்களை நீ
பெற்றிடுவாய்
பெரியவனாய் வளர்ந்துவிட்டால்
நீ என்னை நினைக்க இது உதவுமே
என் செல்வ மகனே..................

நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

அன்புடன்
பில்லா

அடுத்த முத்தம் வந்தவுடன் இந்த முத்தம் மறந்திடுமோ?
நியாயமான கவலைதான் சூரியன்.

கண்மணி
04-07-2008, 01:03 AM
உன் கன்னத்தில்
முத்தம் பதிக்க
எத்தனை முறை
வேண்டுமானாலும்
இறந்து பிறப்பேன்
பிரசவத்தில்....

மீராவின் கரு வேறு வார்த்தைகளில்..:icon_ush:

கண்மணி
04-07-2008, 01:06 AM
புரியாத நீ...
தெரியாத நான்...

உன்னை
முத்தமிட்ட கணத்தில்
தெரிந்து கொண்டேன்..,
உனக்குப் புரிந்த மொழியை...

பசியுடன் நீ
என் நெஞ்சில்
பதில் சொன்ன பொழுது!!!:icon_b:

கண்மணி
04-07-2008, 01:08 AM
மூன்று கிலொ எடையுள்ள
கையடக்கப் பூவினை

மொழியில்லா உலகினுள் உலவிவிட்டு
விழி திறக்காமல் மறுத்தவளை

பெறுதற் கில்லா பேறு பெற்ற
எனக்குப் பிறக்காமல் பிரசவித்தவளை

ஏற்று முத்தமிடுகிறேன்

ஏச்சுக்கள் மகிழ்வாய் திரும்பியது
இந்நிழலுக்கு உயிராய்.

மகளை மகவாய்ப் பெறும் மகளியர்க்கெல்லாம் இந்த மன நிம்மதி வருவதெப்போ???:traurig001:

கண்மணி
04-07-2008, 01:13 AM
இன்றும்
தேடி பார்க்கிறேன்
என் கன்னங்களில்

அம்மா,
உன் இதழ் ரேகை
பதிந்திருக்கிறதா என்று!

நல்ல கவிதை. படத்திற்கேற்றதா எனப் புரியலை.... இருந்தாலும்... நல்ல கவிதை

கண்மணி
04-07-2008, 01:14 AM
முதல் முத்தத்தில்
சுகம் தந்தாய்,

தழுவலில்
இதம் சேர்த்தாய்,

கருணையில்
கடவுளானாய்,

சாதத்தில்
அன்பையும் ஊட்டினாய்,

என்னை நீ சுமந்தது பத்து மாதம் - நான்
உன்னை சுகமாய் சுவாசிப்பது என் ஆயுட்காலம்...

அம்மா,
இறைவன் தந்த உம்மையும்
நீ அருளிய தமிழையும் நான் மறவேன்!:icon_rollout::icon_rollout:

அம்மான்னா பாசம் எப்படியெல்லாம் வருதுலே!!

கண்மணி
04-07-2008, 01:16 AM
என் முகவரியாக
தந்திடுவாய் முத்தம்...
உன் முகம் வரியாகினும்
தாங்குவேன் நித்தம்...

இது,
பேரம் அல்ல...
பேரின்பத்தை இழக்கவிரும்பாத
பயத்தின் பிரதிபலிப்பு...

முத்தமிட்டு
அரசுத் தொட்டிலில் மட்டும்
இட்டுவிடாதே...

அரசுத் தொட்டில் கூடப்
பரவாயில்லை
குப்பைத் தொட்டி வேண்டாம்
வேண்டுமானால்
பாலோடு பாலாய்
கள்ளியும் சேர்த்து
அதற்கு முன்
ஒன்ஸ் மோர் ப்ளீஸ்!

கண்மணி
04-07-2008, 01:47 AM
உயிரின் உணர்வை உதட்டில் உரைத்த
உண்மையின் ஒளியாம் அன்னையின் முத்தம்
அன்பின் பரிமாணம் அளவில்லாது அளித்த
அமுத முகத்தின் அழகுத் தூது
மூலமான இம்மொழிதான் என் காதென்ற
யோனியில் கரைந்து நின்ற முதல் சத்தம்
ஊமையாய் உலகில் உதித்தெழுந்த சவத்திற்கு
அன்பெனும் உயிரை அறிவித்த முதல் அமுதம்
காதலைக் காட்டும் காரிகையின் முத்தம்
காணாது கலைந்துவிடும் கணநேரச் சத்தம்
முத்தத்தின் முகங்கள் முடிவில்லாது மாறிடினும்
என்றும் மாறா அன்பின் அடையாளம்
அன்னை தந்த அமுதச் சுரங்கம்


அன்னையின் முத்தம் அமுதம் - மன்மி சொன்னது
அமுதத்தை கடைந்தெடுக்கும் தேவர்க்குமில்லை, அசுரர்க்குமில்லை
புலவருக்குண்டு.

கண்மணி
04-07-2008, 01:58 AM
அம்மாவின்
முத்தம்
அமுதம்.. !!

அக்னியின் பாஷையில் சொன்னால் "அன்னை முத்தம்"

பாலகன்
04-07-2008, 01:59 AM
அன்னையின் முத்தம் அமுதம் - மன்மி சொன்னது
அமுதத்தை கடைந்தெடுக்கும் தேவர்க்குமில்லை, அசுரர்க்குமில்லை
புலவருக்குண்டு.

இருக்காதா பின்ன, அன்னையின் முத்தம் அமுதமே

தாயிற் சிறந்த கோவிலுமில்லை

============================================
சிப்பி தன் முத்திற்கு இடும் முத்தம்
தாயின் முத்தம்

பில்லா

கண்மணி
04-07-2008, 02:08 AM
உன் கருவறையின்
பாதுகாப்பு
எனக்காக நீ
தாங்கி கொண்ட வலிகள்
உச்சி முகர்ந்து
நீ தந்த முத்தம்
வார்த்தைகளில்
சொல்லி விட முடியுமா
உந்தன் பெருமையை
உயிருக்கு உயிர் தருவது
பெண்மையின் சிறப்பு
உனக்கு நான் என்ன
செய்ய போகிறேன்..... ( கண்ணீருடன்)....


கண்ணீர் மிச்சம் வைத்துக் கொள் மகனே
இன்றே தீர்த்து விடாதே
உன்னை நான் என்ன செய்துவிட்டேன்
என்றழவும் சிறிது தேவை!

தாய்மையை நினைக்கும் போது
வரும் நெகிழ்ச்சி
தாயை நினைக்கும் பொழுதெல்லாம் வந்தால்...

அது மட்டும் போதாது
தாயானவளையும்
தாயாக்கியவளையும்
தாயாகப் போகிறவளையும்
நினைத்து!!!

தாய் என்பது பொதுநலம்
எந்தாய் என்பது சுயநலம்.

கண்மணி
04-07-2008, 02:14 AM
சிறை வைத்த உன்னை
இன்று
சிரம் வைத்து வணங்குகின்றேன்!

முந்நூறு நாள் நீ வைத்த
சிறையினால்தான்
இந்நாளில் நான்
நலமோடு மண்ணில் வாழ்கிறேன்!

நீயுண்டதில் நானுமுண்டு
உனக்குள்ளே உறங்கிக்கொண்டு
பல்லக்காய் உன்வயிற்றில்
பயணித்த நாட்கள்
இனியும் வருமா?

கூலி வாங்காமல் தூளிசுமக்க
உன்னையன்றி
எவருக்கும் முடியுமா?

பல்லாக்காய் உன்வயிற்றில்
பயணித்த நாட்கள்!!!

பல்லாக்கு -- வயிறா? நீரா?
பல்லாக்காம் சரியானப் பிரயோகமோ!

அன்னையின் சுமப்பு ,, இதயத்தில் கனம்!

கண்மணி
04-07-2008, 02:24 AM
http://news.yahoo.com/s/nm/20080703/us_nm/transgender_birth_dc

தாய்!!!

செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமிருக்கு.. கொஞ்சமா!

meera
04-07-2008, 03:57 AM
மீராவின் இரண்டு கவிதையுமே அருமை

வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா


குழந்தையாய் நீ இருக்கும் வரை
கவலை உனக்கில்லை.......
இது போல ஆயிரம் முத்தங்களை நீ
பெற்றிடுவாய்
பெரியவனாய் வளர்ந்துவிட்டால்
நீ என்னை நினைக்க இது உதவுமே
என் செல்வ மகனே..................

நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

அன்புடன்
பில்லா


விமர்சனத்திற்க்கு நன்றி பில்லா.


உங்கள் முதல் கவிதை அழகாய் இருக்கிறது. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.

தீபன்
04-07-2008, 04:24 AM
பல்லாக்காய் உன்வயிற்றில்
பயணித்த நாட்கள்!!!

பல்லாக்கு -- வயிறா? நீரா?
பல்லாக்காம் சரியானப் பிரயோகமோ!

அன்னையின் சுமப்பு ,, இதயத்தில் கனம்!
பல்லாக்காய் உன் வயிற்றில் - பல்லாக்குப் போல் அமைந்த உன் வயிற்றில் நான் பயணித்த நாட்கள்.

meera
04-07-2008, 04:35 AM
எம் சமுதாயத்தில் புரையோடிப்போன ஒரு விடயத்தை அழகாகச் சொல்லும் கவிதை.
பாராட்டுக்கள் மீரா...

நன்றி அக்னி அண்ணா.

உங்கள் அனைவரின் உற்சாகமான விமர்சனத்தால் தான் எனக்கு புத்துயிர் வருகிறது.

உங்கள் கருத்து உண்மை தான் அண்ணா, எத்தனைதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், மக்கள் மட்டும் மாறுவதே இல்லை. வார்த்தையால் கொல்லவும் தயங்குவதில்லை.


எத்தனை கொடுமையான விடயமிதுவென்பதை அழகாக வரிகளில் புகுத்திய மீராவுக்கு என் பாராட்டுக்களும்....

பாராட்டுக்கு நன்றி ஒவியன் அண்ணா.






வெறுமனே கவிதை என்று படித்தால் அசத்தலான கவிதை மீரா...
அதற்கு முதற்ற்கண் பாராட்டுக்கள்.

ஆழ ஊன்றிப்பார்ப்பின்...
ஒரு தாய் ஒருபோதும் தன் குழந்தையை நன்றி கூறும் முகமாக முத்தமிடுவது கிடையாது. ஒரு பிரதிபலனையும் எதிர்பாராது அன்பை பொழிபவளே தாய். அப்படிப்பட்ட தாயின் முத்தத்தை தாங்கள் குற்றிப்பிட்டதுபோல சித்தரிக்க முடியுமா?

இது என்னுடைய கருத்து.

முதலில் பாராட்டுக்கு நன்றி விராடன் அண்ணா.

உண்மைதான் எந்த தாயும் பிரதிபலன் எதிர்பார்ப்பது இல்லை.

ஆனால் நிச்சயம் ஒவ்வொரு தாய்க்குள்ளும் தான் தாயனதில் ஒரு பூரிப்பும்,தன் குழந்தையிடன் கொஞ்சமேனும் நன்றியும் இருக்கதான் செய்யும்.
ஏனெனில் குழந்தைபேறு எத்தனை அறிய பொக்கிஷம், அதை வேண்டாமென்று சொல்ல யாரேனும் துணிவார்களா நம் சமுதாயத்தில்?.திருமணமான ஒரு வருடத்தில் சமுதாயத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். நான் இப்படி யோசித்ததாலேயே நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அது சரியா ? தவறா? என்று அறிந்தவர்கள் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.

கண்மணி
04-07-2008, 04:35 AM
பல்லாக்காய் உன் வயிற்றில் - பல்லாக்குப் போல் அமைந்த உன் வயிற்றில் நான் பயணித்த நாட்கள்.

பொருளைப் புரிந்து கொள்ள இயல்வதற்குக் காரணம் இயல்பாய் நான் என்பது பல்லாக்கு அல்ல என்பதே..

பல்லாக்காய் உன் வயிற்றில் என்னும் பொழுது பல்லாக்கு வயிற்றுக்கு பல்லாக்கை உவமிக்க எண்ணுகிறீர்கள், ஆனால் தமிழ் மொழியில் அப்படி இணைக்கவியலாது. இதற்கு அடுத்து வரும் பெயர்ச்சொல்லுடன் தான் அந்த உவமை இணைகிறது!


கருவாய் உன் வயிற்றில் நானிருந்த நாட்கள்
கரு என்பது வயிறா? நானா?


பல்லாக்காய் உன் வயிற்றில் என்று சொல்லும் பொழுது உன் வயிற்றில் பல்லாக்கு போல என அர்த்தம் வரும். அதனால் பல்லாக்கு என்பது அவள் வயிற்றில் இருந்தக் கருவுக்கு உவமையாகும்.

உன் வயிறு பல்லாக்கு போல என்று வரவேண்டுமானால்

பல்லாக்காய் உன்வயிறு (இல் விகுதி வரக்கூடாதண்ணே!!!)


மொழியாய் என்நாவில் உதித்தெழுந்த தமிழ்
மொழி என்பது தமிழா? நாவா?

கற்கண்டாய் என்மனதில் தித்திக்கும் தமிழ்

தேனாய் உன்காதில் பொழியும் கானமழை!

இது தமிழில் தெளிவாய் எழுதும் முறைதான் அண்ணா! வேறொன்றுமில்லை..

தீபன்
04-07-2008, 05:44 AM
பொருளைப் புரிந்து கொள்ள இயல்வதற்குக் காரணம் இயல்பாய் நான் என்பது பல்லாக்கு அல்ல என்பதே..

பல்லாக்காய் உன் வயிற்றில் என்னும் பொழுது பல்லாக்கு வயிற்றுக்கு பல்லாக்கை உவமிக்க எண்ணுகிறீர்கள், ஆனால் தமிழ் மொழியில் அப்படி இணைக்கவியலாது. இதற்கு அடுத்து வரும் பெயர்ச்சொல்லுடன் தான் அந்த உவமை இணைகிறது!


கருவாய் உன் வயிற்றில் நானிருந்த நாட்கள்
கரு என்பது வயிறா? நானா?


பல்லாக்காய் உன் வயிற்றில் என்று சொல்லும் பொழுது உன் வயிற்றில் பல்லாக்கு போல என அர்த்தம் வரும். அதனால் பல்லாக்கு என்பது அவள் வயிற்றில் இருந்தக் கருவுக்கு உவமையாகும்.

மொழியாய் என்நாவில் உதித்தெழுந்த தமிழ்
மொழி என்பது தமிழா? நாவா?

கற்கண்டாய் என்மனதில் தித்திக்கும் தமிழ்

தேனாய் உன்காதில் பொழியும் கானமழை!

இது தமிழில் தெளிவாய் எழுதும் முறைதான் அண்ணா! வேறொன்றுமில்லை..

அடடா... இப்படியெலாம் இருக்கிறதா... நன்றி சகோதரி... (அண்ணாவா...?, சரி, பிழைச்சுப் போங்க...).
இலக்கண அறிவு எனகு அதிகம் கிடையாது. ஆனால் நீங்கள் பாடமெடுத்தபின் புரிந்து கொண்டேன். சற்றே மாற்றியுள்ளேன். இப்ப சரியா...?

கண்மணி
04-07-2008, 05:49 AM
அடடா... இப்படியெலாம் இருக்கிறதா... நன்றி சகோதரி... (அண்ணாவா...?, சரி, பிழைச்சுப் போங்க...).
இலக்கண அறிவு எனகு அதிகம் கிடையாது. ஆனால் நீங்கள் பாடமெடுத்தபின் புரிந்து கொண்டேன். சற்றே மாற்றியுள்ளேன். இப்ப சரியா...?

இப்பச் சரியாய் இருக்கண்ணா!.. :icon_b: உங்களுக்கு மட்டும் சொல்றதுண்ணா தனிமடலிலேயே சொல்லி இருப்பேன். ஆனால் அங்கங்க இதுபோல பலபிழைகள். பலருக்கும் பயனளிக்கும் என்பதால் பதிவாய் இருக்கு,

தமிழைச் சரியாய் உபயோகிக்கக் கற்றுக் கொள்வதும் மன்றத்தின் ஒரு பயன்தானே!!!

தீபன்
04-07-2008, 06:00 AM
இப்பச் சரியாய் இருக்கண்ணா!.. :icon_b: உங்களுக்கு மட்டும் சொல்றதுண்ணா தனிமடலிலேயே சொல்லி இருப்பேன். ஆனால் அங்கங்க இதுபோல பலபிழைகள். பலருக்கும் பயனளிக்கும் என்பதால் பதிவாய் இருக்கு,

தமிழைச் சரியாய் உபயோகிக்கக் கற்றுக் கொள்வதும் மன்றத்தின் ஒரு பயன்தானே!!!

நன்றி தங்காய். நல்ல நோக்கம். தொடரும்மா உன் நக்கீர வேலையை.

சிவா.ஜி
04-07-2008, 06:03 AM
அன்னையின் முத்தம் என்றதும், இளசு சொன்னதைப் போல அற்புதக் கவிதைகள் குவிந்திருக்கின்றன. ஒவ்வொருவரும் அவரர் பார்வையில் அந்த அமுதத்தை உணர்ந்து, உணர்த்தியிருக்கிறார்கள்.

ஹை-லைட்டாக சொல்லவேண்டுமானால், மீரா,கண்மணி, பில்லா(முதல் கவிதையே அன்னையின் முத்தத்திற்கு..:icon_b:)இவர்களின் கவிதைகள். அழகு, அருமை.

வாழ்த்துகள் கவிசெல்வங்களே. திரி நாயகன் நாரதருக்கு சிறப்பு பாராட்டுகள்.

நேசம்
04-07-2008, 06:03 AM
அருமையான திரியை ஆரம்பித்த நாரதருக்கு முதலில் வாழ்த்துகள்.மன்ற உறவுகளின் படைப்புகள் அனைத்துமெ அசத்தலாக இருந்தது.அனைவருக்கும் வாழ்த்துகள்

கண்மணி
04-07-2008, 06:07 AM
வாழ்த்துகள் கவிசெல்வங்களே. திரி நாயகன் நாரதருக்கு சிறப்பு பாராட்டுகள்.

ஒரே வார்த்தைதான் அண்ணே! எம்பூட்டு அர்த்தம் பாருங்க..

நாரதன் திரிலோக சஞ்சாரியாம்... ஒரு இடத்திலில்லாமல் எப்பவும் திரிஞ்சிகிட்டே இருப்பாராம்.

அப்போ, இங்க மட்டுமில்ல எங்கயுமே திரி நாயகன் நாரதர்தானே!!!:icon_b:

அதுமட்டுமில்ல, நாரதருடைய வேலையும் கலக்மூட்டுவது.. அதாவது திரித்து விடுவது அதனால இப்படிப் பார்த்தாலும் திரி நாயகன் நாரதர் தானே!!

சிவா.ஜி
04-07-2008, 06:10 AM
கண்மணி அசத்துறீங்க......!!:icon_b::icon_b:

aren
04-07-2008, 06:12 AM
ஒரே வார்த்தைதான் அண்ணே! எம்பூட்டு அர்த்தம் பாருங்க..

நாரதன் திரிலோக சஞ்சாரியாம்... ஒரு இடத்திலில்லாமல் எப்பவும் திரிஞ்சிகிட்டே இருப்பாராம்.

அப்போ, இங்க மட்டுமில்ல எங்கயுமே திரி நாயகன் நாரதர்தானே!!!:icon_b:

அதுமட்டுமில்ல, நாரதருடைய வேலையும் கலக்மூட்டுவது.. அதாவது திரித்து விடுவது அதனால இப்படிப் பார்த்தாலும் திரி நாயகன் நாரதர் தானே!!

கண்மணி, நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க!!! கலக்குறீங்க!!!

meera
04-07-2008, 06:59 AM
மிகவும் உயர்ந்த சிந்தனை மீரா. :)




பாராட்டுக்கள்.
நான் என்றுமே உங்கள் கவிதைக்கு அடிமை.

நன்றி ஓவி நீஈஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்கு பின்னர் உங்கள் பாராட்டு சந்தோஷமாய் இருக்கிறது.


இதுக்கு மேல என்ன சொல்றது...???:icon_b::icon_b::icon_b:

நுகர்வது - வேணாம் தங்கச்சி .. முகர்வதுன்னு சொல்லிடலாமா?

நுகர்வதுன்னா பலன் தேடுவது... தாய் தன் மகளை நுகர மாட்டாள்.. உச்சி முகர்வாள்.. சரியா?:icon_b:

(தங்கச்சி, எனக்கு புரியறது உனக்குப் புரியுதா?)

நன்றி அக்கா,

உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.


ம்ம்ம்ம்ம் நல்ல புரியுது அக்கா.

Narathar
04-07-2008, 09:01 AM
தனித்தனியாக பிரித்துச்சொல்ல முடியாத அளவுக்கு அன்பு சொந்தங்களின் கவிதை மழையை கண்டு அசந்துவிட்டேன்............... நான் ஏதோ மூன்று கவிதை எதிர்பார்த்தால் இங்கு ஒரு கவிதை மழையே பொழிந்து விட்டது.............

கவிதை எழுதிய அனைத்து மன்ற சொந்தங்களுக்கும் மிக்க நன்றி...

பின்னூட்டமிட்ட கவிஞ்சர்களுக்கு ஊக்கமருந்து கொடுத்த சொந்தங்களுக்கும் நன்றி.

சந்தடி சாக்கில் என்னை வாரிச்சென்றவர்களுக்கும் பாராட்டியவர்களுக்கும் நன்றி.........

இனி அடுத்த படத்தை கொடுக்க வேண்டியதுதான் என்று நினைக்கின்றேன்..... மன்ற சொந்தங்கள் யாராவது படத்தை தாருங்கள்... ஏனெனில் இது நான் மட்டும் நடத்தும் திரியாக இருக்க கூடாது என்று விரும்புகின்றேன்............. ( அப்படி யாரும் கொடுக்காத பட்சத்தில் இன்று இரவு அடுத்த படத்தை நான் தருகின்றேன்)

ஓவியா
04-07-2008, 09:11 AM
என்
ஒரு முத்தத்தில்
உணர்ந்தேன்
உலகிலுள்ள
அனைத்து தளிர்களும் - உன்
ரோஜா கன்னத்திடம்
தோற்றுவிட்டன..

'அம்மாவின் முத்தம்' படத்திற்க்கு என் கவிதை.


இனி அடுத்த படத்தை நானே போடுகிறேன். :)

ஓவியா
04-07-2008, 09:21 AM
கவிதையை ஆரம்பிக்கவும் மக்களே.


http://www.africancrisis.org/images/ShoesAfricanStyle.jpg


நன்றி.

அக்னி
04-07-2008, 09:24 AM
ஒவ்வொரு பதிவையும் பார்த்துப் பாராட்டி சீராக்கிய,
கண்மணிக்கு முதலில் நன்றிகளும் பாராட்டுக்களும்...


பசியுடன் நீ
என் நெஞ்சில்
பதில் சொன்ன பொழுது!!!:icon_b:
:icon_b:
காம்பில் இதழ் பதியப்
பூக்கும் அற்புதம்...

பிரசவத்தில் வேதனை,
தருவதும் தீர்ப்பதும்
மழலையே...


அரசுத் தொட்டில் கூடப்
பரவாயில்லை
குப்பைத் தொட்டி வேண்டாம்
வேண்டுமானால்
பாலோடு பாலாய்
கள்ளியும் சேர்த்து
அதற்கு முன்
ஒன்ஸ் மோர் ப்ளீஸ்!
இப்படியும் சில வேதனை முரணாக...

பிரசவத்தில் வேதனை,
தீர்ப்பதும் தருவதும்
மழலையே...


அக்னியின் பாஷையில் சொன்னால் "அன்னை முத்தம்"
யக்கோவ்,
உள்குத்து :icon_smokeing: ஏதும் இல்லையே...

அமரன்
04-07-2008, 09:30 AM
பட்டை தீட்டும் முகமாக அமைத்த திரி, அப்படியே அமைந்ததையிட்டு மகிழ்ச்சி.. திரி பற்றித் தெரிந்தும் பற்றி எரிய என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. இயலும் என நினைத்து வந்தபோது அக்கா தந்த இன்னொரு படம். அதுக்கான கவிதைக்கு முன்பாக முதல்க்கவிதை எழுதிய பில்லாவுக்கு உற்சாகமூட்டும் பரிசாக 100 ஐ கேஷ்... மீராவின் கவிதையை படித்த கணத்தில் பார்த்திபன் நடித்த படத்தின் வசனம் நினைவுக்கு வந்தது. தாயை வைரியாக நினைக்கும் பார்த்திபன் போதையில் வீசுவார் அம்மா என்பது நான் உனக்குப் போட்ட பிச்சை என்பதை. அது இங்கே வரமாக. தொடருங்கள் நட்புகளே. அப்பப்போ நானும் உங்களுடன் இணைகிறேன்.

அக்னி
04-07-2008, 09:34 AM
தாயை வைரியாக நினைக்கும் பார்த்திபன் போதையில் வீசுவார் அம்மா என்பது நான் உனக்குப் போட்ட பிச்சை என்பதை.
நிஜத்திலும் இப்படித்தான் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.
உண்மையான நடிகர்தான் போலும்...

அக்னி
04-07-2008, 09:52 AM
பிளாஸ்டிக் பாட்டில்கள் போட்டு
நின்றாலும்,
உன் சுவடுகள்
அழுந்தப் பதிகின்றன
பூமியில்...

*****

பூமியில் உன் சுவடுகள்
பதிய வேண்டாம் என்றோ,
பிளாஸ்டிக் பாட்டில்கள்
போட்டு நிற்கின்றாய்..?

அக்னி
04-07-2008, 09:59 AM
என்னையும் உன்னையும்
எறிந்துவிட்டது இவ்வுலகம்...
வா, நாம் சேர்ந்து,
தேடுவோம் புதுவுலகம்...

*****

அழிக்கும் உலகில்
பதிவதிலும்,
அழியாத உன்னில்
என் சுவட்டைப்
பதிந்துவைக்கின்றேன்...

காலங்கள் தாண்டிய காலத்தில்,
என்னையும் உலகிற்கு
நினைவுறுத்து...

ஆதவா
04-07-2008, 09:59 AM
பிளாஸ்டிக் தடுப்பு மாநாடு
பிளாஸ்டிக் செருப்புடன் முதியவர்

அக்னி
04-07-2008, 10:01 AM
பிளாஸ்டிக் தடுப்பு மாநாடு
பிளாஸ்டிக் செருப்புடன் முதியவர்
இதச் சொல்லத்தான் மேலே (#80 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362420&postcount=80)) அவ்வளவு கஸ்ரப்பட்டேன்...
ஆதவா... :icon_b:

கண்மணி
04-07-2008, 10:28 AM
அழிந்து போகாதாம் பிளாஸ்டிக்!
அழிந்து போகும்
பாத ரேகைகள்
அணைத்துக் கொண்டன
பாசத்துடன்..

--------------------------

கண்ணீர் வற்றியவனும்
தண்ணீர் வற்றியவனும்...

-------------------------

கண்மணி
04-07-2008, 10:30 AM
என்னையும் உன்னையும்
எறிந்துவிட்டது இவ்வுலகம்...
வா, நாம் சேர்ந்து,
தேடுவோம் புதுவுலகம்...

அசத்தல் அக்னி!!!

என்னையும் உன்னையும்
எறிந்து விட்டது உலகம்
ஆனால்
அவர்களால்
நம்மை அழிக்க முடியாது!
---------------------

இதெப்படி இருக்கு!!!

அமரன்
04-07-2008, 10:30 AM
உன் சுவடு பற்றி
யாரும் வரவேண்டாம் என்பதுக்காகவா
காலில் மிதிக்கிறாய்
காலி போத்தல் தாய்!

கண்மணி
04-07-2008, 10:38 AM
உன் சுவடு பற்றி
யாரும் வரவேண்டாம் என்பதுக்காகவா
காலில் மிதிக்கிறாய்
காலி போத்தல் தாய்!

காலி பாட்டில்
தாய்தான்..

உள்ளிருந்த ஈரத்தையெல்லாம்
உறிஞ்சி எறிந்து விட்டுப்
போனான் மகன்..

அவளும்
யார் காலடியையோ
அண்டிப் பிழைக்கிறாள்..

அண்ணா, :traurig001::traurig001::traurig001::traurig001: அழ வைக்கிறீங்களே!!!

கண்மணி
04-07-2008, 12:44 PM
என்ன நாரதரே!

பாட்டுப் பாடும்
தருமிகளுக்கு
கருமித்தனம் காட்டாம
அருமையான கவிதைன்னு சொல்லி
ஐ-கேஷ் தருவீரா?

---

என்னுடைய ஐ-கேஷ் அத்தனையும், கவிமாமணிகளுக்கு பரிசா பிரிச்சுக் கொடுங்க..

சரியா?

மன்மதன்
04-07-2008, 01:14 PM
கண்ணீர் வற்றியவனும்
தண்ணீர் வற்றியவனும்...

-------------------------

சூப்பர்....:icon_b:

Narathar
04-07-2008, 01:35 PM
கவிதையை ஆரம்பிக்கவும் மக்களே.


http://www.africancrisis.org/images/ShoesAfricanStyle.jpg


நன்றி.

நன்றி ஓவியா..........
உங்கள் படத்திற்கு.
நான் வந்து பார்ப்பதற்குள் பல கவிதைகளும் பதிந்துவிட்டன. மிக்க மகிழ்ச்சி...

இந்தப்படம் நிச்சயமாய் நம் கவி உள்ளங்களை எழுதச்சொல்லி கட்டளையிடும்..... இன்னும் வரட்டும் பார்ப்போம்

Narathar
04-07-2008, 04:56 PM
என்ன நாரதரே!

பாட்டுப் பாடும்
தருமிகளுக்கு
கருமித்தனம் காட்டாம
அருமையான கவிதைன்னு சொல்லி
ஐ-கேஷ் தருவீரா?

---

என்னுடைய ஐ-கேஷ் அத்தனையும், கவிமாமணிகளுக்கு பரிசா பிரிச்சுக் கொடுங்க..

சரியா?

எனது இ பணத்தில் பாதியை கவி எழுதியவர்களுக்கும், பின்னூடமிட்டவர்களுக்கும் வழங்கி விட்டேன்....

கண்மணிக்கு போனஸாக கொடுத்துள்ளேன்!!
(அரசியல் வாதி போல கேட்டு வாங்கி கொடுத்ததற்காக... )

மீதியை அடுத்தடுத்த பதிவுகளுக்கு கொடுக்கலாம் என்று மிச்சம் வைத்துள்ளேன்........

இப்போ திருப்தியா?.....................:D :D :D
===========================================


உங்கள் இ பணத்தை முழுமையாக கொடுத்து பாராட்டியமைக்கு தலை வணங்குகின்றேன்........... :icon_b::aktion033:

இன்னும் தருவேன் இதே போல பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தினால்!

பாலகன்
04-07-2008, 05:13 PM
தண்ணீரை சுமந்த இந்த பாட்டில்கள்
இன்று கண்ணீரை சுமக்கிறது

//////////////////////////////////////////////////////////////////////////

பில்லா

கண்மணி
04-07-2008, 06:07 PM
ஒட்டிய வயிறு
தாங்கும்
ஒட்டிய வயிறு!!!

அக்னி
04-07-2008, 06:34 PM
ஒட்டிய வயிறு
மிதிக்கும்
ஒட்டிய வயிறு...

எந்நிலையானாலும்
மிதிக்கவே பழகிவிட்ட மனிதன்...

பாலகன்
04-07-2008, 06:44 PM
கண்மணி அன்போடு,,,,,,,,,
பில்லா நான்,,,,,,,,, நீக்கிய வரிகள்,,,,,,,
நன்றி கண்மணி.................
வானாகி
மண்ணாகி
காற்றாகி
நீராகி
நீரை அடைக்கும்
பாட்டிலாகி
கடைசியில்
அவனது செருப்பாகி

சே எத்தனை மாற்றங்கள்

அன்புடன்
பில்லா

சிவா.ஜி
04-07-2008, 07:17 PM
அழியாத அரக்கனின்
அடுத்த அவதாரம்
காசில்லா ஏழையின்
கால்களுக்கு காவலனாக!

தீபன்
05-07-2008, 12:17 AM
பார்க்கலாம்,
இந்தக் கவசங்களாவது
காத்திடுமா என் கால்களை -

காலடியில் உறைந்திருக்கும்
கந்தக விதைகளிடமிருந்து!

கண்மணி
05-07-2008, 01:37 AM
கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுல வச்சான்

ஒட்டிய வயிறு
கட்டிய கயிறு

வானாகி
மண்ணாகி
காற்றாகி
நீராகி
நீரை அடைக்கும்
பாட்டிலாகி
கடைசியில்
அவனது செருப்பாகி

சே எத்தனை மாற்றங்கள்

அன்புடன்
பில்லா

முதல் நான்கு வரி வேணாமே!! மிச்சமிருப்பது சூப்பர்!!!!

விகடன்
05-07-2008, 05:45 AM
பொருளாதாரம் தடைப்படினும் - பிற
பொருளால் ஆரமாக்கும் சமூகம்.

விகடன்
05-07-2008, 05:59 AM
வறண்ட உதடு
வற்றிய தொண்டை
ஒட்டிய வயிறு
உருக்குலைந்த சரீரம்
அனைத்தையும் சொல்லி நிற்கும்
கட்டிய செருப்பு...

meera
05-07-2008, 06:14 AM
வறண்ட உதடு
வற்றிய தொண்டை
ஒட்டிய வயிறு
உருக்குலைந்த சரீரம்
அனைத்தையும் சொல்லி நிற்கும்
கட்டிய செருப்பு...
ஏழ்மையின் சின்னம் அவை.

அழகிய வரிகள் அண்ணா.

Narathar
05-07-2008, 06:36 AM
புழுதியில் பிரண்ட
பசியினில் வரண்ட
பாதங்களை காத்தது
போத்தல் (பாட்டில் ;) ) இரண்டு

(யாரும் அடிக்க வராதீயுங்கோவ்!!! )

விகடன்
05-07-2008, 06:51 AM
மிதிபடுவது போத்தலுமில்லை...
மிதிப்பது கால்களுமல்ல ...
மனிதனும்
பொருளாதார அழுத்தமுமே.

யவனிகா
05-07-2008, 08:15 AM
கலக்கி வைத்த மருதாணியை
கால்களிலே வரைந்துவிட்டு
காய்வதற்காய் அமர்ந்தநேரம்
கணிணியிலே உன் கால்கள் கண்டேன்
கனத்துப் போனது மனது...

மருதாணி உதிரும் வரை
மனதில் நடக்கும் உன் கால்கள்
நசித்துப் போன பாட்டில்போலவே
விசித்து அரற்றிய பின்
மறந்து போகும் மனதை விட்டு...
மருதாணி காயும் பொழுதுவரை தான்
மற்றவர் பற்றிய கவலை எமக்கு...!!!

யவனிகா
05-07-2008, 08:24 AM
பிளாஸ்டிக் இல்லா
உலகம் செய்வோம்
வறுமை இல்லா
உலகம் செய்தபின்...

சிவா.ஜி
05-07-2008, 08:24 AM
ஆஹா......வாங்க யவனிகா......கலக்கலான கவிதையைக் கையோடக் கொண்டு வந்திருக்கீங்க. வாழ்த்துகள்.

யவனிகா
05-07-2008, 08:27 AM
மினரல் வாட்டர்
பருகும் உதடுகள்
பாட்டில் செருப்பு
தரிக்கும் பாதங்கள்..
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரடா எங்கள் பாரத நாடு...

விகடன்
05-07-2008, 08:46 AM
பிளாஸ்டிக் இல்லா
உலகம் செய்வோம்
வறுமை இல்லா
உலகம் செய்தபின்...

அசத்தலான கவிதை.
பாராட்டுகள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 08:49 AM
இந்த உதட்டு மோதல்களின்
வற்றிய ஆற்றில்தான்
ஆயுதங்கள் பேசிக்கொள்கின்றனவென்று
அழுதாவது பறைசாற்று
ஆயுத மொழியை வலுக்கட்டாயமாய்
நீயும் கற்றாகும் வரை.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 08:55 AM
கருவைக் குடைந்து
வார்த்தைகள் வீடு கட்டிக்கொள்ளும்
கவிதை மைதானத்தில்
எழுதி மட்டும்
எதை மாற்றப்போகிறாயென்று
கைகளில் விலங்கிட்டுவிட்டது
இந்த கவிதைப்படம்

இளசு
05-07-2008, 08:57 AM
வாங்க யவனிகா!

கவிச்சமரில் புதைந்துபோயிருக்கும் பல வைரங்களில் சில உங்களுடையவை!

இந்தப் புதுத்திரியிலும் மின்னும் தெறிப்புகள் கண்டேன்.


அட நல்லாயிருக்கே என எண்ணி, உடன் அடுத்த திரி போன வேளைகள்..
அடேயப்பா, இத்தனை பதிவா, அப்புறம் வாசிக்கலாம் என அகன்ற கணங்கள்..

நல்லதைக் கண்டு பாராட்டாமல் போய்விட்டால்
வேறொரு வாய்ப்பு ஈடாய் வராமலே போய்விட்டால்..??

எண்ணெய் காயுமுன் கடுகு போட..
காய்ந்த சருகு காலடியில் நொறுங்கிப்போக..
மருதாணி காயும் வரை மனிதம் பற்றிய கவலை... என

அன்றாடம் நாம் திளைக்கும் நிகழ்வுகளை உங்கள்
அற்புத வரிகளால் சாசுவத கவிதைகளாய் நெய்யும் உங்களை
அவ்வப்போது பாராட்டாவிட்டால்....
பின் எப்போதும் அக்கடன் என்னுறக்கம் கெடுக்கும்!


எழுத்து வரமாய் வாய்த்த தங்கைக்கு
நெகிழ்ந்த அன்ணனின் அன்பும் வாழ்த்தும்!

விகடன்
05-07-2008, 09:00 AM
படம் தாண்டி பல பக்கம் வந்துவிட்டோம். ஆகையால் தொடரும் கவிதைக்கு அந்த படத்தை மீள பதிக்கிறேன்..... நாரதரிற்காக...


http://www.africancrisis.org/images/ShoesAfricanStyle.jpg

சுகந்தப்ரீதன்
05-07-2008, 09:35 AM
வளரும்
எம் பாரதத்தில்
வளராத
எம் பாதங்கள்..!!

கண்மணி
05-07-2008, 09:43 AM
மொழி விவாதங்களை விவாதத்தில் ஒரு தனித்த்ரிக்கு நகர்த்தி விடுங்கள் பொறுப்பாளர்களே!

கல்யாண அவசரம்
ஜோடி மாறிப்போச்சு
ஒன்று பெப்ஸி கம்பெனி
இன்னொன்று கோக்கோ கோலாவாம்

ஓவியா
05-07-2008, 04:06 PM
உலக நலத்திற்காக
விஞ்ஞானம் தேடுகிறது
பிலாஸ்டீக்கின் அழிவை

என் சுயநலத்திற்காக
மெய்ஞானம் வேண்டுகிறது
இ/அதற்கு நூறாண்டினை!!

நம்பிகோபாலன்
05-07-2008, 07:50 PM
சுற்றுச்சூழலை
அழிக்கும் எந்த சக்தியும்
அழிந்து போகும்
என் பாதங்களில்...

செழியன்
05-07-2008, 10:44 PM
கடவுளே நன்றி உனக்கு
இதையாவது கொடுத்தாயே எனக்கு


(நாங்களும் எழுத பழகிறமெல்ல)

செழியன்
05-07-2008, 10:45 PM
என்ன ஒற்றுமை பார்
நானும் நீயும்
உபயோகித்து எறிந்தவை

செழியன்
05-07-2008, 10:49 PM
எனக்குள்ளேயும் ஒரு பெருமை
எங்க ஊரில்
நான் ஒருவன்தான்
பாதனி போட்டவனாம்

பாலகன்
06-07-2008, 02:44 AM
மொழி விவாதங்களை விவாதத்தில் ஒரு தனித்த்ரிக்கு நகர்த்தி விடுங்கள் பொறுப்பாளர்களே!

கல்யாண அவசரம்
ஜோடி மாறிப்போச்சு
ஒன்று பெப்ஸி கம்பெனி
இன்னொன்று கோக்கோ கோலாவாம்

இது புதுசா இருக்கே, வாழ்த்துக்கள் கண்மணி

அன்புடன்
பில்லா

கண்மணி
06-07-2008, 03:36 AM
என்
ஒரு முத்தத்தில்
உணர்ந்தேன்
உலகிலுள்ள
அனைத்து தளிர்களும் - உன்
ரோஜா கன்னத்திடம்
தோற்றுவிட்டன..



தளிர்கள் - பச்சிளம் குழந்தைகள் என்ற அர்த்தத்தில் உபயோகப் படுத்தப் படும் ஒரு வார்த்தை. இப்பொழுதுதான் முளைக்க ஆரம்பித்த சிறு இலைகள்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற அர்த்தத்தை நோக்கி இந்த வார்த்தை திசை திருப்புது ஓவியாக்கா!!!

நீங்க எழுத நினைச்சது வேறதானே!!!!

கண்மணி
06-07-2008, 04:15 AM
அழியாத அரக்கனின்
அடுத்த அவதாரம்
காசில்லா ஏழையின்
கால்களுக்கு காவலனாக!

காவலன் காதகனா?

காதகன் அல்லவா காவலனாக..

உழைக்கும் மக்களின்
கால்தூசுப் பட்டு
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
பிளாஸ்டிக்கே!!!

கண்மணி
06-07-2008, 04:19 AM
பார்க்கலாம்,
இந்தக் கவசங்களாவது
காத்திடுமா என் கால்களை -

காலடியில் உறைந்திருக்கும்
கந்தக விதைகளிடமிருந்து!

கண்ணி வெடிகளில் பதிந்து சுவடழிந்துப் போனப் பாதங்களின் விசும்பல்...

நிஜம் தீபன்

கண்மணி
06-07-2008, 04:22 AM
வறண்ட உதடு
வற்றிய தொண்டை
ஒட்டிய வயிறு
உருக்குலைந்த சரீரம்
அனைத்தையும் சொல்லி நிற்கும்
கட்டிய செருப்பு...

ஒருவனின் வளமையை அவன் காலணியைப் பார்த்தேச் சொல்லி விடலாம்.
ஒரு சமுதாயத்தின் வளமையை அதன் உழைக்கும் மக்களைக் கொண்டேச் சொல்லி விடலாம்..

இங்குக் காலணி அவன் வளமையைச் சொல்ல, அவன் அந்தச் சமுதாயத்தின் வளமையைச் சொல்கிறான்..

இல்லையா விராடனண்ணா?

கண்மணி
06-07-2008, 04:26 AM
மிதிபடுவது போத்தலுமில்லை...
மிதிப்பது கால்களுமல்ல ...
மனிதனும்
பொருளாதார அழுத்தமுமே.

இவர்கள் நசுக்கப்பட்டதுக்கு ஒருவனே காரணம்..

நசுக்கப்பட்டவர்களின் கூட்டணி..
ஒருவரை ஒருவர் காத்துக் கொண்டு...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!!:icon_b:

கண்மணி
06-07-2008, 04:29 AM
கலக்கி வைத்த மருதாணியை
கால்களிலே வரைந்துவிட்டு
காய்வதற்காய் அமர்ந்தநேரம்
கணிணியிலே உன் கால்கள் கண்டேன்
கனத்துப் போனது மனது...

மருதாணி உதிரும் வரை
மனதில் நடக்கும் உன் கால்கள்
நசித்துப் போன பாட்டில்போலவே
விசித்து அரற்றிய பின்
மறந்து போகும் மனதை விட்டு...
மருதாணி காயும் பொழுதுவரை தான்
மற்றவர் பற்றிய கவலை எமக்கு...!!!

மருதாணியின் ஈரம் மனதிற்குள் சிறிது நேரம்..
மருந்து போடாத ஆணி விழுந்த சில கால்களுக்காய்...

மருதாணியைக் களைவது போல்
நினைவுகளைக் களைந்து போனாலும்
அழுதுச் சிவந்தக் கண்களின் சிவப்பு
காலப் போக்கில் வெளுத்துக் கொண்டே!!

அழகு யவனிகா!

கண்மணி
06-07-2008, 04:33 AM
மினரல் வாட்டர்
பருகும் உதடுகள்
பாட்டில் செருப்பு
தரிக்கும் பாதங்கள்..
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரடா எங்கள் பாரத நாடு...

தலை முதல் கால் வரை
வெளி நாட்டு மோகம்!!!:icon_rollout::icon_rollout::icon_rollout:

செத்தும் கொடுத்தான் சீதக்காதி பிளாஸ்டிக்...

ஓவியன்
06-07-2008, 04:37 AM
உள்ளே உள்ள வரைதான்
இருவருக்கும் மதிப்பு
இருந்தது வற்றினால்
இருவரும் செருப்பு..!!

(பி.கு - இருந்து வற்றியது பணமும் பானமும்)

கண்மணி
06-07-2008, 04:38 AM
பிளாஸ்டிக் இல்லா
உலகம் செய்வோம்
வறுமை இல்லா
உலகம் செய்தபின்...

தனியொரு மனிதனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.

எது முக்கியம் என்பதில் மூளையும் இதயமும் வேறுபட்டேச் சிந்திக்கின்றன.

இல்லையா யவனிகா?

:icon_b:

ஓவியன்
06-07-2008, 04:43 AM
எது முக்கியம் என்பதில் மூளையும் இதயமும் வேறுபட்டேச் சிந்திக்கின்றன.

இல்லையா யவனிகா?

தனக்குச் சிந்திக்க மூளை,
தன்னுடன் பிறரையும் சிந்திக்க இதயம்..!!

சரியா கண்மணிக்கா...??

கண்மணி
06-07-2008, 04:47 AM
இந்த உதட்டு மோதல்களின்
வற்றிய ஆற்றில்தான்
ஆயுதங்கள் பேசிக்கொள்கின்றனவென்று
அழுதாவது பறைசாற்று
ஆயுத மொழியை வலுக்கட்டாயமாய்
நீயும் கற்றாகும் வரை.


நீருக்காக ஒரு யுத்தம் வருமாம்.. விஞ்ஞானச் சோதிடர்களின் கணிப்பு!!!

அந்த யுத்தபூமியின் செத்தபிணங்களின் மீது
உழைத்து உரமேறியதால்..
வீழாமல் நிற்கும் இரு உழைக்கும் கால்கள்...

..

..
புதிய சிந்தனைகள்... புதுமைச் சிந்தனைகள்...

கண்மணி
06-07-2008, 04:49 AM
கருவைக் குடைந்து
வார்த்தைகள் வீடு கட்டிக்கொள்ளும்
கவிதை மைதானத்தில்
எழுதி மட்டும்
எதை மாற்றப்போகிறாயென்று
கைகளில் விலங்கிட்டுவிட்டது
இந்த கவிதைப்படம்

கையாலாகதது
காலாலானது
நசுங்கின
பன்னாட்டுக் கம்பெனிகள்..

படத்தின் பிரமிப்பு உங்கள் வார்த்தைகளில் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது .. வாழ்த்துக்கள்..:icon_b:

கண்மணி
06-07-2008, 04:53 AM
வளரும்
எம் பாரதத்தில்
வளராத
எம் பாதங்கள்..!!

வளராத பாதங்கள் தேய்ந்து விடுமே சுகந்தா!!!
பாரதமே தேயாமல் காக்கும் பாதங்கள் அல்லவா இவை!!!

கண்மணி
06-07-2008, 05:17 AM
உலக நலத்திற்காக
விஞ்ஞானம் தேடுகிறது
பிலாஸ்டீக்கின் அழிவை

என் சுயநலத்திற்காக
மெய்ஞானம் வேண்டுகிறது
இ/அதற்கு நூறாண்டினை!!

அழிக்க முடியாச் சூரனைப் படைத்து
அவனையே (மயில்) வாகனமாக்கிப் பயணம்
மனிதனும் இறைவன்தான்,,

(மெய்ஞானம்னு சொன்னீங்களாக்கா!!! இதான் ஞாபகத்திற்கு வந்தது)

கண்மணி
06-07-2008, 05:19 AM
சுற்றுச்சூழலை
அழிக்கும் எந்த சக்தியும்
அழிந்து போகும்
என் பாதங்களில்...

புதிய சிந்தனை நம்பியண்ணா!!!

எங்களாற்றுத் தண்ணீரைக்
கொள்ளையடிப்பவனே!
உமிழ்ந்து விடு
நீயுறிஞ்சிய கடைசித் துளி வரை!!!

:icon_b::icon_b::icon_b:

கண்மணி
06-07-2008, 05:22 AM
கடவுளே நன்றி உனக்கு
இதையாவது கொடுத்தாயே எனக்கு


(நாங்களும் எழுத பழகிறமெல்ல)


என்ன ஒற்றுமை பார்
நானும் நீயும்
உபயோகித்து எறிந்தவை




எனக்குள்ளேயும் ஒரு பெருமை
எங்க ஊரில்
நான் ஒருவன்தான்
பாதனி போட்டவனாம்


மூன்றுக் கவிதைகளும் மூன்று கோணங்கள். சபாஷ் செழியன்,.. !!!

கண்மணி
06-07-2008, 05:23 AM
உள்ளே உள்ள வரைதான்
இருவருக்கும் மதிப்பு
இருந்தது வற்றினால்
இருவரும் செருப்பு..!!

(பி.கு - இருந்து வற்றியது பணமும் பானமும்)

செருப்பும் நாடாளும்..
என்ன
இன்னும் கொஞ்சம் நாளாகும்!
அவ்வளவுதான்..

ஓவியன்
06-07-2008, 05:48 AM
அன்பு நாரதரின் அற்புதத் திரியில் அடுத்து பொதிக்கப்படவிருக்கும் கவிதைகளுக்கான படத்தினை நான் வழங்குகிறேன்...

இதோ படம்...!! :)


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image001.jpg

எங்கே மக்களே புகுந்து விளையாடுங்க பார்ப்போம்...?? :icon_b:

பாலகன்
06-07-2008, 06:06 AM
கழுதை தேய்ந்து
கட்டெரும்பு
இது தானோ?

பில்லா

ஓவியன்
06-07-2008, 06:08 AM
கழுதை தேய்ந்து
கட்டெரும்பு
இது தானோ?

ஆனால் இங்கே
கட்டெறும்பு வடிவத்துக்குத் தேய்ந்தாலும்
கழுதைக் குணம் மாறவில்லையே...??

ஓவியன்
06-07-2008, 06:11 AM
இருநூறு, இருபதாக
இளமைக்குத் திரும்ப
தேவை
இருபது வருடங்கள்...!!:)

பூமகள்
06-07-2008, 06:16 AM
ஓரறை தாண்டி..
ஓர் விரல் வடிவம்..

நீ
சேமிப்பாயா??
சோதிப்பாயா??

ஆதவா
06-07-2008, 06:18 AM
கூனிக் குறுகி சிறுத்து
கவிஞன் மனம் போல
பிரபஞ்சத்தை விரிக்காமல்
கைக்குள்ளே அடங்கிப் போனது
நவீன மூளை.

ஆதவா
06-07-2008, 06:21 AM
(ஆளுக்கு ஒரு கவிதைன்னு நென்சே பழசுக்கு எழுதலீங்கோ!! உம்னு சொல்லுங்க கிடைச்சதெல்லாம் எழுதிப்புடலாம்..)


வித்தியாசம் ஒன்றுதான்..
அன்று பெருத்திருந்தாய்
உன்னைத் தூக்கி அலைவது துர்லபம்
இன்று சிறுத்துவிஒட்டாய்
உன்னைத் தூக்கி அலைவதே லாபம்.
:D

தீபன்
06-07-2008, 06:36 AM
அன்று
மரபுக் கவிதை...
இன்று
கைக்கூ...
ஆனாலும்
காரம் குறையவில்லை!

ஓவியன்
06-07-2008, 06:41 AM
கூனிக் குறுகி சிறுத்து
கவிஞன் மனம் போல
பிரபஞ்சத்தை விரிக்காமல்
கைக்குள்ளே அடங்கிப் போனது
நவீன மூளை.

கவியால் பிரபஞ்சம் அழக்கும் கவிஞனையும்
மதியால் பிரபஞசத்தை
கைக்குள் அடக்கும் வித்தகனையும்
ஒப்பிட்டு ஆதவா வரைந்த கவி அழகு..!!:)

ஓவியன்
06-07-2008, 06:54 AM
அன்று
மரபுக் கவிதை...
இன்று
கைக்கூ...
ஆனாலும்
காரம் குறையவில்லை!

வடிவங்கள் மாறினாலும்
உள்ளடக்கம் மாறவில்லை...

அழகான கவிதை தீபன்..!!

ஓவியன்
06-07-2008, 07:20 AM
வித்தியாசம் ஒன்றுதான்..
அன்று பெருத்திருந்தாய்
உன்னைத் தூக்கி அலைவது துர்லபம்
இன்று சிறுத்துவிஒட்டாய்
உன்னைத் தூக்கி அலைவதே லாபம்.
:D

ஒரு ஜிபி நினைவு தகட்டுக்குத்தானே இக்கவிதை...?? :D:D:D

Narathar
06-07-2008, 07:26 AM
பார்க்கலாம்,
இந்தக் கவசங்களாவது
காத்திடுமா என் கால்களை -

காலடியில் உறைந்திருக்கும்
கந்தக விதைகளிடமிருந்து!

அருமையான வரிகள் தீபன்!

Narathar
06-07-2008, 07:31 AM
மருதாணி காயும் பொழுதுவரை தான்
மற்றவர் பற்றிய கவலை எமக்கு...!!!


நிதர்சனமான வரிகள்
பாராட்டுக்களும் இ பணமும்!

Narathar
06-07-2008, 07:34 AM
எனக்குள்ளேயும் ஒரு பெருமை
எங்க ஊரில்
நான் ஒருவன்தான்
பாதனி போட்டவனாம்


நல்லாத்தான் எழுதிப்பழகுறீங்க.........
வாழ்த்துக்களோடு இ பணமும்
இன்னும் ஜமாயுங்கள்

Narathar
06-07-2008, 07:37 AM
அன்பு நாரதரின் அற்புதத் திரியில் அடுத்து பொதிக்கப்படவிருக்கும் கவிதைகளுக்கான படத்தினை நான் வழங்குகிறேன்...


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image001.jpg

எங்கே மக்களே புகுந்து விளையாடுங்க பார்ப்போம்...?? :icon_b:


ஓவியரின் சிந்தையை தூண்டும் படத்துக்கு நன்றி.........

இதற்கு கவி எழுதியவர்களுக்கும்
இனி எழுதப்போகின்றவர்களுக்கும்
வாழ்த்துக்களை சொல்லி வைக்கின்றேன்

கண்மணி
06-07-2008, 08:35 AM
சென்ற சுற்றில் பணமுடிப்பு பரிசளிக்கப் பட்டவர்கள்:


அக்னி என்னையும் உன்னையும் எறிந்த உலகத்திற்கு
பில்லா கண்ணீரைச் சுமக்கும் பாட்டில்களுக்கு
பில்லா வானாகி மண்ணாகி
ஓவியா மெய்ஞானத்திற்கு
தீபன் கந்தக விதைக் கவசத்திற்கு
செழியன் புது முயற்சி + பாதவணி முதல்வனுக்கு.. (பாதம்+அணி பாதவணி... கால்+அணி = காலணி (வழக்கில் உள்ளச் சொல்)
யவனிகா வறுமை இல்லா உலகம் செய்ய
எஸ்.எம். சுனைத் ஹஸனீ கட்டப்பட்ட கைகளுக்காக


குறுந்தொகைதான்.. ஆயினும் வளர்தொகை

ஓவியா
06-07-2008, 09:16 AM
Originally Posted by ஓவியா

என்
ஒரு முத்தத்தில்
உணர்ந்தேன்
உலகிலுள்ள
அனைத்து தளிர்களும் - உன்
ரோஜா கன்னத்திடம்
தோற்றுவிட்டன..



தளிர்கள் - பச்சிளம் குழந்தைகள் என்ற அர்த்தத்தில் உபயோகப் படுத்தப் படும் ஒரு வார்த்தை. இப்பொழுதுதான் முளைக்க ஆரம்பித்த சிறு இலைகள்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற அர்த்தத்தை நோக்கி இந்த வார்த்தை திசை திருப்புது ஓவியாக்கா!!!

நீங்க எழுத நினைச்சது வேறதானே!!!!


நான், நீங்கள் குறிப்பிட்ட புதிதாக முளைக்க ஆரம்பித்த சிறு இலைகளைத்தான் நினைத்து கவிதை வடித்தேன்.

இரண்டு தலிர்களின் மென்மையில் குழந்தைக்கே முதலிடம். :)

உங்கள் விமர்சனம் கண்டு மனதினில் ஆயிரம் பட்டாம்ப்பூச்சி பறந்தன. மிக்க நன்றி. பரிசுக்கும் நன்றி கண்மணி.


அனைவரின் கவிதையும் ரொம்ப பிரமாதம்.

மறத்தமிழன்
06-07-2008, 09:16 AM
பார்க்கலாம்,
இந்தக் கவசங்களாவது
காத்திடுமா என் கால்களை -

காலடியில் உறைந்திருக்கும்
கந்தக விதைகளிடமிருந்து!
என் நினைவுகளைக் கிளறிய வரிகள்.
என் தோழனின் பாதங்களை காவுகொண்ட அரக்கனின் கொடுமையை கிடைத்த இடைவெளியில் பயன்படுத்திவிட்டீர்கள் தோழரே.

கண்மணி
06-07-2008, 11:00 AM
இரண்டு தலிர்களின் மென்மையில் குழந்தைக்கே முதலிடம். :)

.

தளிர்கள் செடியின் குழந்தைகள் அல்லவா ஓவியாக்கா???

ஓவியா
06-07-2008, 02:23 PM
தளிர்கள் செடியின் குழந்தைகள் அல்லவா ஓவியாக்கா???

ஆமாம் கண்மணியக்கா, குழந்தைக்கும் குழந்தைக்கும் தான் போட்டி வைக்க முடியும்.

அதான் அவங்கம்மா காதோரம் போய் சொல்லறாங்களே மகளே/மகனே நீதான் போட்டியில் வென்றாயென்று!! :icon_b:

கண்மணி
06-07-2008, 02:26 PM
உள்ளங்கையில்
சுருங்கிப் போனது
உலகம்

இன்னும்
கற்றது கைமண்ணளவுதான்,

மதி
06-07-2008, 02:39 PM
நானோ தொழில்நுட்பம்
காணாமல் போனது நானோ..

கண்மணி
06-07-2008, 02:44 PM
கண்டது
நானோ தொழில் நுட்பம்
காணாமல் போனதும்
நானோ

-------------------------------------

அழகான கவிதை மதி!!!

ஓவியா
06-07-2008, 02:45 PM
ஒல்லிதான் அழகென்று
இன்று உலகச்சந்தையில்
நானும் இளைத்தேன்.
.
.
.
சிம்ரன்வழி என் வழி..

ஓவியா
06-07-2008, 02:49 PM
கண்டது
நானோ தொழில் நுட்பம்
காணாமல் போனதும்
நானோ

-------------------------------------

அழகான கவிதை மதி!!!

உன்மை, மதி ஒரு அழகான கவிதைதான்.
அது (மதி=நிலவு) அனைவரின் கண்களுக்கும் எப்பொழுதுமே அழகாகததான் தெரியும்.

மதி
06-07-2008, 02:56 PM
உன்மை, மதி ஒரு அழகான கவிதைதான்.
அது (மதி=நிலவு) அனைவரின் கண்களுக்கும் எப்பொழுதுமே அழகாகததான் தெரியும்.

அக்கா......ஆஆஆஆ..
ஏன்..? நான் அழகுங்கறத இப்படி தான் ஊருக்கே சொல்லணுமா என்ன?

மதி
06-07-2008, 03:00 PM
ஒல்லிதான் அழகென்று
இன்று உலச்சந்தையில்
நானும் இளைத்தேன்.
.
.
.
சிம்ரன்வழி என் வழி..

யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லிட்டாங்க போலருக்கு.. இப்பல்லாம் கொஞ்சம் பூசினாப்ல இருந்தா தான் அழகு.. :D:D:D:D

கண்மணி
06-07-2008, 03:05 PM
பூசினாப்ல அப்படின்னு மொட்டையாச் சொல்லாதீங்க மதி.. அப்புறம் சந்தனத்தை (மொட்டைக்குச் சந்தனம் தானே பூசணும்?)

பேஸா, க்ரீமா, பவுடரா, லிப்ஸ்டிக்கா எதுன்னு கிளியராச் சொல்லுங்க...!!!

பாலகன்
06-07-2008, 03:05 PM
கடவுள் படைத்த எதுவும்
அளவில் சுருங்காத போது
மனிதன் படைத்தது மட்டும்
ஏன் இப்படி அளவில் சுருங்கி
செல்கிறது...........

அன்புடன்
பில்லா

mukilan
06-07-2008, 03:07 PM
யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லிட்டாங்க போலருக்கு.. இப்பல்லாம் கொஞ்சம் பூசினாப்ல இருந்தா தான் அழகு.. :D:D:D:D
என்ன பூசணும்னு நீங்களே சொல்லிடுங்க மதி! மாவா, பெயிண்ட்டா, :D:D

mukilan
06-07-2008, 03:08 PM
நான் கொஞ்சம் லேட்டா வந்திட்டேனோ? மன்னிச்சிடுங்க மக்களே

mukilan
06-07-2008, 03:12 PM
அறிவியலின் முன்னேற்றத்தில்
சுருங்கியது இடத்தேவை மட்டுமல்ல
மனிதநேயமும்தான்!

மதி
06-07-2008, 03:16 PM
பூசினாப்ல அப்படின்னு மொட்டையாச் சொல்லாதீங்க மதி.. அப்புறம் சந்தனத்தை (மொட்டைக்குச் சந்தனம் தானே பூசணும்?)

பேஸா, க்ரீமா, பவுடரா, லிப்ஸ்டிக்கா எதுன்னு கிளியராச் சொல்லுங்க...!!!

மேக்கப்னு பொதுவா சொல்லலாமே கண்மணிக்கா..

கண்மணி
06-07-2008, 03:52 PM
அறிவியலின் முன்னேற்றத்தில்
சுருங்கியது இடத்தேவை மட்டுமல்ல
மனிதநேயமும்தான்!

இதயங்களும்
இல்லங்களும்
குடும்பங்களும்
எல்லாமுமே சுருங்கிப் போயின..
காலத்தின் வேகத்தில்

எந்த அளவு நினைவகக் கொள்ளளவு என்பது பெரிதல்ல..
அதில் என்ன சேமிக்கிறோம் என்பதுதானே முக்கியம்..

அழகான கவிதை முகிலன்

கண்மணி
07-07-2008, 01:05 AM
கடவுள் படைத்த எதுவும்
அளவில் சுருங்காத போது
மனிதன் படைத்தது மட்டும்
ஏன் இப்படி அளவில் சுருங்கி
செல்கிறது...........

அன்புடன்
பில்லா

கடவுள் படைத்த மனித மனம்
சுருங்கிப் போகவில்லையா பில்லா?:eek::eek::eek:

meera
07-07-2008, 01:40 AM
இதை
நான் அணிந்ததால்
பரிதாபம்
நடிகன் அணிந்திருந்தால்...?
கொள்ளை லாபம்....

கண்மணி
07-07-2008, 02:24 AM
இதை
நான் அணிந்ததால்
பரிதாபம்
நடிகன் அணிந்திருந்தால்...?
கொள்ளை லாபம்....

வித்தியாசமான சிந்தனை மீரா! அபாரம்!:icon_b:

டாக்டர் அண்ணாதுரை
07-07-2008, 02:40 AM
அப்படியிருந்த நான்...
இப்ப இப்படியாயிட்டேன்!!! (நன்றி விவேக்!!)

meera
07-07-2008, 02:49 AM
வித்தியாசமான சிந்தனை மீரா! அபாரம்!:icon_b:

கண்மனி அனைவரின் கவிதைக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்கள் பணி என்றும் தொடரட்டும்.

வாழ்த்துக்கு நன்றி கண்மனி.

கண்மணி
07-07-2008, 04:23 AM
மீரா யார் காலில் - ஓவியா தந்த படத்திற்கான கவிதை


ஓவியன் தந்த படத்திற்கானக் கவிதைகளில் ..

கவிதைகளின் தாக்கத்திற்கேற்ப ஐ-கேஷ் அளவு வேறுபாடு உண்டு..
உங்கள் கணக்கைப் பார்த்தால் உங்கள் மதிப்பெண் தெரிந்து விடும். :icon_b:

முகிலன் இடத்தேவை
பில்லா மனிதன் படைப்பு
ஓவியா சிம்ரன்
மதி நானோ
தீபன் ஹைக்கூ
ஆதவா குறுகிய மூளை

கண்மணி
07-07-2008, 04:23 AM
அடுத்த படம்


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/amazing_rocks_02.jpg

மதி
07-07-2008, 04:26 AM
படமே சரியா தெரியலக்கா...

சிவா.ஜி
07-07-2008, 04:59 AM
ஓவியனின் படத்துக்கு.....

பலவரி பாக்கள்,
குறுகி குறளானதைப் போல
சிறிதானாலும்
அரிதான பொருளை
அகத்தில் வைத்திருக்கும்!

சிவா.ஜி
07-07-2008, 05:04 AM
கண்மணியின் படத்துக்கு.....
http://www.imagehosting.com/out.php/i1821067_amazingrocks02.jpg



கரணம் தப்பினால் மரணம்
ஆபத்துக்குக் காரணம்
ஆசையா..? அறியாமையா..?

கண்மணி
07-07-2008, 05:17 AM
பேண்ட் விட்த் பிரச்சனை போலிருக்கிறது... எனக்கும் இப்போ கட்டம்தான் தெரியுது...

முடிந்தால் படம் தெரிபவர்கள் அதை சேமித்து சுட்டி கொடுத்தால் நன்று!!!

ஓவியன்
07-07-2008, 06:08 AM
படமே சரியா தெரியலக்கா...

மதி, உங்க கண்ணை இன்னொரு தபா வைத்தியரிடம் காட்டணும் போல...!! :lachen001:

நன்றாகப் பாருங்க, இப்போ தெரியும்..!! :aetsch013:

மதி
07-07-2008, 06:12 AM
மதி, உங்க கண்ணை இன்னொரு தபா வைத்தியரிடம் காட்டணும் போல...!! :lachen001:

நன்றாகப் பாருங்க, இப்போ தெரியும்..!! :aetsch013:

அண்ணா.. உண்மையிலேயே தெரியல.. இப்போ தான் தெரியுது..
எத்தனை முறை வைத்தியரிடம் காட்டினாலென்ன... இருந்தா தானே தெரியும்...

"பாறைக்கு நடுவில் ஆடு
கால் தவறினால்
பறைக்கு நடுவில் ஆடு"

பாலகன்
07-07-2008, 06:23 AM
எப்போதும் வெட்டுபவனை நம்பும் ஆடு
இப்போதும் எவனையோ நம்பி இங்கே

///////////////////////////////////////////////////////////////////////

ஆடு புலம்புது,..........

மேலே வானம்
கீழே பூமின்னு சொன்னாங்க
ஆனா கீழே கடல் இருக்கே
அய்யகோ மோசம்போயிட்டேனே

=======================
இன்னமும் வரும்


அன்புடன்
பில்லா

யவனிகா
07-07-2008, 06:23 AM
நெருக்கும் மலைத் தொடர்
அரணா ஆபத்தா? ஆட்டுக்கு?
நெருக்கும் நினைவுகள்
வரமா சாபமா மனதுக்கு...?

யவனிகா
07-07-2008, 06:27 AM
பொறுப்பற்ற மேய்ப்பனின் கீழ்
ஆட்டுக்குட்டியும்
அவசர மனமும்...!

பாலகன்
07-07-2008, 06:28 AM
நான் என்ன சினிமா நடிகையா
இங்கே வைத்து என்னை அழகு பார்க்க

============================================

என்னோட கடைசி ஆசை
என்னான்னு கேட்டான் என் எசமான்
நான் மேல போறதுக்கு முன்னாடி
கீழே போகனும்னு சொன்னேன்

அன்புடன்
பில்லா

இதயம்
07-07-2008, 06:30 AM
சீரியஸ் சிந்தனை:

இளைஞர்கள்:(ஆடு)
அந்த பக்கம்
சமூகத்தின் புறக்கணிப்பு
இந்த பக்கம்
அரசாங்கத்தின் அலட்சியம்
கீழே தீவிரவாத ஆபத்து காத்திருக்க..
இடையில் தன்னம்பிக்கை மட்டும்
எங்களை தாங்கிக்கொண்டிருக்கிறது.!!

ஓவியன்
07-07-2008, 06:32 AM
வரை கலை
வித்தையால்
ஆடு அந்தரத்தில்......

யவனிகா
07-07-2008, 06:34 AM
வரை கலை
வித்தையால்
ஆடு அந்தரத்தில்......

அவ்வளவு தானா ஓவியன்? பயந்தே போயிட்டேன்...

கவிதை எழுதறத நிறுத்திட்டு அடடா நிஜமாவே மாட்டிக்கிச்சா ஆடுன்னு கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன்....

ஓவியன்
07-07-2008, 06:37 AM
கவிதை எழுதறத நிறுத்திட்டு அடடா நிஜமாவே மாட்டிக்கிச்சா ஆடுன்னு கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன்....

கவிதைக்குப் பொய் அழகுதானே அக்கா,
ஆடு அந்தரத்தில் இருக்குனே நினைச்சுக்குவோம்...!! :D

பூமகள்
07-07-2008, 06:40 AM
நெறிக்கத் துடிக்கும்
பெரிய பாறை..
காக்கத் துடிக்கும்
குட்டிப் பாறை...

சில நேரங்களில்..
பெரியவை அற்பமாய்..!
சின்னவை அற்புதமாய்..!

யவனிகா
07-07-2008, 06:44 AM
நெறிக்கத் துடிக்கும்
பெரிய பாறை..
காக்கத் துடிக்கும்
குட்டிப் பாறை...

சில நேரங்களில்..
பெரியவை அற்பமாய்..!
சின்னவை அற்புதமாய்..!

கலக்கல் பூ...!!!

பூமகள்
07-07-2008, 06:47 AM
நெருக்கும் மலைத் தொடர்
அரணா ஆபத்தா? ஆட்டுக்கு?
நெருக்கும் நினைவுகள்
வரமா சாபமா மனதுக்கு...?
இத இத இதைத் தான் அக்கா எதிர்பார்த்தேன்...:icon_b::icon_b:

உங்கள் முத்திரை கவிதை காணாம காஞ்சே போயிட்டேன் பாருங்க பூ...!:traurig001:

இதயம்
07-07-2008, 06:49 AM
க(காத)ல்:
பொருளாதாரமும்,
குடும்பமும் கொடுக்கும்
வேதனையால் சிதைந்த
எனக்கு கை கொடுத்து
காத்த உன் காத(க)ல்..!

அக்னி
07-07-2008, 06:57 AM
உணவில்லை...
நீரில்லை...
ஆனால், இங்கிருந்தாலே
என் ஆயுள்
அதிகமாயிருக்கும்...

ஒரு புறம்,
இறைச்சிக்காக...
மறு புறம்,
படையலுக்காக...
இருபுறமும் கத்தியுடன் மனிதர்கள்...

சற்றே நீடிக்கும்
என் ஆயுளின் முடிவில்,
பறவைகளுக்கோ மீன்களுக்கோ
உணவாகிவிட்டுப் போகின்றேன்...
என் எலும்புகளாவது மிஞ்சிடும்...

அக்னி
07-07-2008, 07:03 AM
எனக்குப்
பேசும் சக்தியிருந்து,
மலையே
உனக்குக் கேட்கும் சக்தியிருந்து,
நான் என் பெயர் சொன்னால்...
நீ கேட்டால்...

கண்மணி
07-07-2008, 07:11 AM
கற்தூண்களின் ஆதரவில்
நிற்கும் ஆடு
கவலைப் பட்டன
ஆதரவே இல்லாமல் நிற்கும்
மனித மனங்கள்!!!

கண்மணி
07-07-2008, 07:20 AM
எந்த மலையின் அகங்காரமோ
உருண்டு விழுந்ததில்
உறவுப் பாலம்...
அமைதித் தூதுவனாய்
ஆட்டுக் குட்டி!

ஓவியன்
07-07-2008, 07:23 AM
கவலைப் பட்டன
ஆதரவே இல்லாமல் நிற்கும்
மனித மனங்கள்!!!

கவிதைகளை எழுதினவங்களைத் தானே சொல்லுறீங்க...?? :rolleyes:

மதி
07-07-2008, 07:25 AM
பெரிய பாறைக்கிடையில்
சிக்கித் தவிக்கும்
சின்ன பாறைக்குத் தெரியுமா?
சிக்கலிலும்
யமன் கையில் சிக்காமல்
ஓர் உயிர் காப்பாற்றியிருக்கிறோம்
என்று..

minmini
07-07-2008, 08:01 AM
அழகான படம் கண்மனீ. கவிதை எழுதத்தான் வராதே...
இந்தப்பக்கத்துக்கு வருபவர்களுக்கு இந்தப்படத்தையாவது கொடுபோம் என்று மாற்றிவிட்டேன்

ஓவியன்
07-07-2008, 08:30 AM
எனக்குப்
பேசும் சக்தியிருந்து,
மலையே
உனக்குக் கேட்கும் சக்தியிருந்து,
நான் என் பெயர் சொன்னால்...
நீ கேட்டால்...

இந்தப் பாறையிலும்
படி வெடிக்கும்...
அந்த படிகளிடை
பூப் பூக்கும்...

எனக்காக, உனக்காக
எங்களைத்
தொடரப் போகும்
நம் சந்ததிக்காக....

அக்னி
07-07-2008, 08:46 AM
எனக்குப்
பேசும் சக்தியிருந்து,
மலையே
உனக்குக் கேட்கும் சக்தியிருந்து,
நான் என் பெயர் சொன்னால்...
நீ கேட்டால்...


இந்தப் பாறையிலும்
படி வெடிக்கும்...
அந்த படிகளிடை
பூப் பூக்கும்...

எனக்காக, உனக்காக
எங்களைத்
தொடரப் போகும்
நம் சந்ததிக்காக....
என்று நான் சிந்திக்க,
ஆடு என்ற சத்தம் கேட்டு
ஆடிடாதே மலையே...

அக்னி
07-07-2008, 08:47 AM
நான் பாதுகாப்பாயில்லையா...?
திரும்பிப்பார் முதலில்,
அதுதான் சுனாமி...

யவனிகா
07-07-2008, 08:48 AM
என்று நான் சிந்திக்க,
ஆடு என்ற சத்தம் கேட்டு
ஆடிடாதே மலையே...

மலை ஆடினாலும்
மல்லுக்கு நிக்காதே
அன்பு ஆடே...!!!

யவனிகா
07-07-2008, 08:52 AM
பெரிய பாறைக்கிடையில்
சிக்கித் தவிக்கும்
சின்ன பாறைக்குத் தெரியுமா?
சிக்கலிலும்
யமன் கையில் சிக்காமல்
ஓர் உயிர் காப்பாற்றியிருக்கிறோம்
என்று..

தெரியுமான்னு தெரியலையே மதி
வேணும்னா ஆட்டுக்குட்டி நிக்கிற இடத்துக்கு
அனுப்பி வெக்கவா?
பாறைக்கு தெரியுமான்னு கேட்டுச் சொல்லுங்க.

அக்னி
07-07-2008, 08:57 AM
மலை ஆடினாலும்
மல்லுக்கு நிக்காதே
அன்பு ஆடே...!!!
ஏதோ அன்புரசிகருக்கு சொல்ற மாதிரி இருக்குதே... :rolleyes::rolleyes::rolleyes:

கல்லில் நின்றாலும்
என் பார்வை போகுது
புல்லுக்கு...
இதில் எப்படி நிற்பேன்
மல்லுக்கு...

நான் தேடுவது உணவுக்குப் புல்லு...
என்னைத் தேடுவது ஃபுல்லுக்கு உணவு...

யவனிகா
07-07-2008, 09:02 AM
ஏதோ அன்புரசிகருக்கு சொல்ற மாதிரி இருக்குதே... :rolleyes::rolleyes::rolleyes:



அன்புவ ஆடுன்னு சொன்ன அக்னியை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
அன்பு ஆடினா மன்றம் தாங்குமா...இல்ல அந்தக் கல்லு தான் தாங்குமா?(நான் சொல்லல அன்பு, இந்த அக்னி தான் ஃபேட் பாய்)

ஓவியன்
07-07-2008, 09:05 AM
அன்புவ ஆடுன்னு சொன்ன அக்னியை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
அன்பு ஆடினா மன்றம் தாங்குமா...இல்ல அந்தக் கல்லு தான் தாங்குமா?(நான் சொல்லல அன்பு, இந்த அக்னி தான் ஃபேட் பாய்)

கல்லுத் தாங்குதோ இல்லையோ
அவரை நோக்கிக் கல்லு வருவது
உறுதி.......!!!! :D:D:D

இதயம்
07-07-2008, 09:35 AM
நான் தேடுவது உணவுக்குப் புல்லு...
என்னைத் தேடுவது ஃபுல்லுக்கு உணவு...
அன்பு அக்னி.. அனுபவமே இங்கே கவிதையானதோ..? :D:D

ஓவியன்
07-07-2008, 09:42 AM
அன்பு அக்னி.. அனுபவமே இங்கே கவிதையானதோ..? :D:D

அன்புவா, அக்னியா...??? :confused:

ஓவியன்
07-07-2008, 09:46 AM
எனக்குப்
பேசும் சக்தியிருந்து,
மலையே
உனக்குக் கேட்கும் சக்தியிருந்து,
நான் என் பெயர் சொன்னால்...
நீ கேட்டால்...


இந்தப் பாறையிலும்
படி வெடிக்கும்...
அந்த படிகளிடை
பூப் பூக்கும்...

எனக்காக, உனக்காக
எங்களைத்
தொடரப் போகும்
நம் சந்ததிக்காக....
என்று நான் சிந்திக்க,
ஆடு என்ற சத்தம் கேட்டு
ஆடிடாதே மலையே...

நீ ஆடின்
நான் ஆடாயிருக்க (ஆடு ஆக)
முடியாதே...!! :traurig001:

கண்மணி
07-07-2008, 09:53 AM
கரணம் தப்பினால் மரணம்
ஆபத்துக்குக் காரணம்
ஆசையா..? அறியாமையா..?

ஆபத்து எங்கே இருக்கிறது?
ஆபத்து எங்கேதான் இல்லை?
:confused:

கண்மணி
07-07-2008, 09:55 AM
"பாறைக்கு நடுவில் ஆடு
கால் தவறினால்
பறைக்கு நடுவில் ஆடு"

தவறிய காலில் விசித்திர வினோதம்..

மாட்டுத் தோலில் தான் பறை செய்கிறார்கள் மதி..!!! இருந்தாலும் அது மன்னிக்கப் படலாம்..
:icon_b:

ஓவியன்
07-07-2008, 09:58 AM
ஆடாதே நீ
ஆடே
ஆடின் நீ
ஆடிடும் கல்லும்
உன் வாழ்வும்...!!

சுகந்தப்ரீதன்
07-07-2008, 09:58 AM
பாறையிடுக்கில் பச்சை
ஆட்டுக் குட்டிக்கதில் இச்சை..!!
உயர்திணைகளே உணராதபோது
அஃறிணை அஃதோ பாவம்...!!
ஆசைதானே அழிவுக்கு காரணம்..!!

கண்மணி
07-07-2008, 10:04 AM
நெருக்கும் மலைத் தொடர்
அரணா ஆபத்தா? ஆட்டுக்கு?
நெருக்கும் நினைவுகள்
வரமா சாபமா மனதுக்கு...?

பசுமை தலை காட்டும்
பகைவர் தலைகாட்டார்
ஆட்டுக்கு நிம்மதி

சோம்பல் இல்லை
சோகமும் இல்லை
வரம் தான் மனதுக்கு

கண்மணி
07-07-2008, 10:07 AM
செங்குத்தான பாறைகளில் ஏறிவிளையாடும் மலையாடுகளை யாருமே பார்த்ததில்லை போல இருக்கிறது.. எல்லோருக்குமே ஆடு விழுந்து விடுமோ என்ற பயம்தான் அதிகமாய் இருக்கிறது...

ஆடுகளென்ன மாடுகள் கூட செங்குத்தான பாறைகளின் மீது மேய்வதுண்டு...

கண்மணி
07-07-2008, 10:30 AM
சீரியஸ் சிந்தனை:

இளைஞர்கள்:(ஆடு)
அந்த பக்கம்
சமூகத்தின் புறக்கணிப்பு
இந்த பக்கம்
அரசாங்கத்தின் அலட்சியம்
கீழே தீவிரவாத ஆபத்து காத்திருக்க..
இடையில் தன்னம்பிக்கை மட்டும்
எங்களை தாங்கிக்கொண்டிருக்கிறது.!!

தன்னம்பிக்கையை
அலட்சியமும் புறக்கணிப்பும்
உயரத்தில் நிறுத்தியுள்ளன..
இல்லாவிட்டால்
அது ஆபத்தில் விழுந்து விடும்
எங்களோடு.
:confused::confused::confused:

அக்னி
07-07-2008, 10:30 AM
அன்பு அக்னி.. அனுபவமே இங்கே கவிதையானதோ..? :D:D
இதயத்தின் சோகமே இங்கே பதிவானதோ...
(எப்படிப் பார்க்காமப் போனேன் இத... :sauer028:)

அன்புவா, அக்னியா...??? :confused:
இன்னும் இரண்டு பேர் இருக்குதே ஓவி... தெரியலையா...

கண்மணி
07-07-2008, 10:32 AM
நெறிக்கத் துடிக்கும்
பெரிய பாறை..
காக்கத் துடிக்கும்
குட்டிப் பாறை...

சில நேரங்களில்..
பெரியவை அற்பமாய்..!
சின்னவை அற்புதமாய்..!

பாறைகள் தேமேவெனக் கிடக்கின்றன!
ஆடு அதுபாட்டுக்கு மேய்ந்து கொண்டு!
அற்பமாயும் அற்புதமாயும்
மனதில் சலனங்கள்!!!

கண்மணி
07-07-2008, 10:34 AM
க(காத)ல்:
பொருளாதாரமும்,
குடும்பமும் கொடுக்கும்
வேதனையால் சிதைந்த
எனக்கு கை கொடுத்து
காத்த உன் காத(க)ல்..!

குடும்பத்தையும் பொருளாதாரத்தையும்
இணைத்தது காதல்

பாலமிட்டு!!!!

அட.. :D:D:D:D:D

அக்னி
07-07-2008, 10:36 AM
இருக்கும் பசுமை விட்டு,
தெரியும் பசுமை தேடி...
அபாயம் தெரியா(த)து
பயணம்...

(எனது பசுமை நாடிய பயணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10133) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.)

கண்மணி
07-07-2008, 10:38 AM
உணவில்லை...
நீரில்லை...
ஆனால், இங்கிருந்தாலே
என் ஆயுள்
அதிகமாயிருக்கும்...

ஒரு புறம்,
இறைச்சிக்காக...
மறு புறம்,
படையலுக்காக...
இருபுறமும் கத்தியுடன் மனிதர்கள்...

சற்றே நீடிக்கும்
என் ஆயுளின் முடிவில்,
பறவைகளுக்கோ மீன்களுக்கோ
உணவாகிவிட்டுப் போகின்றேன்...
என் எலும்புகளாவது மிஞ்சிடும்...

உச்சியில் இருக்கும்
கொஞ்சம் புல் போதும்..
கத்திகள்
தழை அறுத்துப் போடவும் வேண்டாம்
தலை அறுத்துப் போடவும்வேண்டாம்.:icon_b:

கண்மணி
07-07-2008, 10:47 AM
எனக்குப்
பேசும் சக்தியிருந்து,
மலையே
உனக்குக் கேட்கும் சக்தியிருந்து,
நான் என் பெயர் சொன்னால்...
நீ கேட்டால்...

உரக்கக் கத்திப் பார்
நானும் கத்துகிறேன்

என் உச்சந்தலையில்
மிச்சச் சிகைகளைக் கோதி
முத்தமிடும் மேகமும் மேடமும் (மேடம் னா ஆடுங்க, கண்மணி மேடம் இல்லை)
காலடியில் விளையாடும்
கடலின் கைகளும்
எங்கோ புள்ளியாய்க் கிடக்கும்
மனித மனங்களை விடச்
சந்தோஷமாய்..

காமிராக் கண்பட்டது..
இனி
எந்த ஆபத்து
எந்த ரூபத்தில்
எங்கிருந்தோ

யார் என் உடலில்
ஓங்கி ஆணியடடித்து
உச்சந்தலையேறி
வெற்றிக் கொடி நாட்டுவாரோ?

இருதலைக்கும் இடையே
எல்லைப் போர் மூண்டிடுமோ?

நட்புப் பாலம்
பாதாளத்தில் விழுந்திடுமோ

அலைகளின் அலைச்சல்
இன்று
மலைகளின் மனங்களிலும்..

கண்மணி
07-07-2008, 10:50 AM
இருக்கும் பசுமை விட்டு,
தெரியும் பசுமை தேடி...
அபாயம் தெரியா(த)து
பயணம்...

(எனது பசுமை நாடிய பயணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10133) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.)

மக்களின் மத்தியில்
மாறி விட்ட பசுமை
பாறைகளின்
உச்சியில் சற்று
மிச்சமிருக்கிறது
சமாதான ஆட்டிற்காக

இதயம்
07-07-2008, 11:04 AM
இருக்கும் பசுமை விட்டு,
தெரியும் பசுமை தேடி...
அபாயம் தெரியா(த)து
பயணம்...

(எனது பசுமை நாடிய பயணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10133) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.)
என் மனக்கண்ணில் அக்னி ஆடாகி போனதையும் (அது பரிதாபமாய் ...ம்ம்மே..! என்று அலறுவதையும்) கற்பனையில் தவிர்க்க முடியவில்லை..!!

சிவா.ஜி
07-07-2008, 11:44 AM
உச்சியில் ஏற்றிவிட்டு ஆடு என்கிறார்கள்
ஆடினால் ஆட்டின் ஆட்டம் என்னாகும்.....

சிவா.ஜி
07-07-2008, 11:44 AM
கூட்டணிக்கட்சிகளின் தாங்குதலில்,
தொங்கும் அரசாங்கத்தின்
பரிதாப முதல்வர்

கண்மணி
07-07-2008, 11:46 AM
இந்தச் சுற்று பணமுடிப்பு விழா!

சுகந்தப்ரீதன் ஆசை அழிவுக்கு
ஓவியன், அக்னி அக்னி ஓவியன் கவிமாலை
அக்னி சுனாமி
பூமகள் சின்னவை அற்புதமாய்
இதயம் இளைஞர்கள்:(ஆடு)
யவனிகா அரணா ஆபத்தா?
மதி பாறை - பறை
சிவா.ஜி ஆசையா?
சிவா.ஜி முதல்வர்.

கண்மணி
07-07-2008, 11:50 AM
கூட்டணிக்கட்சிகளின் தாங்குதலில்,
தொங்கும் அரசாங்கத்தின்
பரிதாப முதல்வர்

ஆடும் நாற்காலியில்
ஆடாய்த்தான் முதல்வர்(பிரதமர்???).( சிறந்த சிந்தனை!!:icon_good::icon_35: )
ஆட்சித் தொங்கலில் என்றாலும்
மேய்ச்சலில் குறைவில்லை... :eek::eek::eek:

சிவா.ஜி
07-07-2008, 12:03 PM
ஆடும் நாற்காலியில்
ஆடாய்த்தான் முதல்வர்(பிரதமர்???).( சிறந்த சிந்தனை!!:icon_good::icon_35: )
ஆட்சித் தொங்கலில் என்றாலும்
மேய்ச்சலில் குறைவில்லை... :eek::eek::eek:

சூப்பர் "நச்" அசத்துங்க கண்மணி.:icon_b::icon_b:

இதயம்
07-07-2008, 12:04 PM
ஆட்சித் தொங்கலில் என்றாலும்
மேய்ச்சலில் குறைவில்லை... :eek::eek::eek:
எந்த அளவுக்கு மேய்ச்சல் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பலி கொடுக்கப்போகும் நாட்களின் எண்ணிக்கையும் குறையும்.:p

கண்மணி
07-07-2008, 12:17 PM
எந்த அளவுக்கு மேய்ச்சல் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பலி கொடுக்கப்போகும் நாட்களின் எண்ணிக்கையும் குறையும்.:p

வெட்டிய புல்லுக்கு ஆசைப்பட்டு
வீழ்ந்து கிடந்தால் பலியாடு

பலியாடான பிறகு
பட்டினிப் போரில்
பிரயோசனமில்லை


உச்சிப் புல்லை
உயர்ந்து பறிப்பது பலே ஆடு!!!

காலிலும் நெஞ்சிலும்
வலுவிருக்கும் வரை
வாழவும் வழியுண்டு..

கண்மணி
07-07-2008, 01:23 PM
நிழலுக்கு உயிர் ::::: படக்கவிதை உங்களுக்காக!

அன்பின் மன்ற சொந்தங்களே......

ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.




என்னமா மன்றத்தைக் குறைச்சு எடை போட்டிருக்கீங்க நாரதரே!!!:sauer028::sauer028::sauer028:

விகடன்
07-07-2008, 01:27 PM
அசைந்தாலும்
உறைந்தாலும்
பிரியப்போவதோ
என் உயிர்தான்.
-------------------

பட்டினிச் சாவா?
பரிதாபச் சாவா?
இருதலைக்கொல்லி எறும்பாக
நான்.......

கண்மணி
07-07-2008, 01:33 PM
"கல்"யாண மேடையில்
அவள் (ஆடு)
பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
இடையில்..!!!

விகடன்
07-07-2008, 02:04 PM
[B]அவள் (ஆடு)
பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
இடையில்..!!!

இரண்டிலும் இல்லையா கண்மணி??

சுகந்தப்ரீதன்
07-07-2008, 02:33 PM
இரண்டிலும் இல்லையா கண்மணி??
ஆத்துல ஒருகால்; சேத்துல ஒருகால் அறிந்ததில்லையா நீவிர்..??:sprachlos020:

கண்மணி
07-07-2008, 04:06 PM
அடுத்தப்படம் இதோ

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/iyarkai.jpg

mukilan
07-07-2008, 04:19 PM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!

ஓவியா
07-07-2008, 04:21 PM
அடுத்த படம்


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/amazing_rocks_02.jpg


அழகிய இருக்கரந்தனில்
அன்னையும் பிதாவும்
ஏந்திய சேயாய்
நிரந்தரமற்ற வாழ்வெனக்கு
அந்தரத்தில் வாழ்ந்தாலும் - ஆட்டுக்கு
உயிர்பிச்சையளிக்கும் வள்ளல் நான்.

பாலகன்
07-07-2008, 04:23 PM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!

அருமையான ஒப்பனை முகில்ஸ்
பாராட்டுக்கள்

=========================================

ஓவியா
07-07-2008, 04:25 PM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!


விவசாய ஆபீசரே,
படத்தை பார்த்ததும் பாய்ந்து வந்து கவிதை போடறீங்க, எல்லாம் முன் ஜேன்மத்திலே மணிக்கனக்கா உக்காந்து 'கோஸ்-வோர்க்' செய்த நினைவுதானே!! :D:D


அழகிய கவிதை. நன்று.

மதி
07-07-2008, 04:26 PM
கடவுள்
ஓவியனான போது
தூரிகையிலிருந்து
தெரித்து விழுந்த
வண்ணச்சிதறல்களோ

மதி
07-07-2008, 04:27 PM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!

அட..முகில்ஸ்...இதை பார்க்காமல் அவசரப்பட்டுவிட்டேனே..

கலக்கல்ஸ்..

பாலகன்
07-07-2008, 04:27 PM
அடுத்தப்படம் இதோ

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/iyarkai.jpg

இது தான் கடைசிபடம் என்று நினைக்கிறேன்................. இதையே தொடரலாம்

=============================================================

நிலமெனும் நங்கை
வெட்கத்தில் அணிந்த
நீலவர்ணச் சேலை


========================

குளிரெனும் காதலன் தீண்ட
வெட்கிப் போனாள் மலைமகள்
அதனால் தான் என்னமோ
இந்த போர்வை

அன்புடன்
பில்லா

மதி
07-07-2008, 04:29 PM
வியாபார உலகில்
மலைத்தொடருக்கும்
மேக்கப்

கண்மணி
07-07-2008, 04:30 PM
இரகசியமாய்
புகைப்படமெடுத்து
பத்திரப் படுத்தினான் கடவுள்
நம்மன்றத்தை!