PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!



Pages : 1 2 3 4 5 6 7 [8]

ஆதி
19-11-2010, 01:59 PM
பாடம் பார்த்து கவிதை சொல்லுங்க திரிக்கும், நிழலுக்கு உயிர் தாங்க திரிக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை, இரண்டும் ஒரு நோக்குடைய இரு திரிகள் ஆகையால் அவை ஒன்றாக்கப்படுகிறது, உறவுகள் தொடர்ந்து இதில் பங்களியுங்கள்..

புரிதலுக்கு நன்றி..


பொறுப்பாளர்

வானவர்கோன்
19-11-2010, 02:06 PM
வான் மழை பார்த்து
ஏர் கொண்டு உழுது
நெல் விதைத்து
நாற்று நட்டு
பக்குவமாய் பயிராக்கி
களையெடுத்து
உரமிட்டு உருமாற்றி
பொற்கதிர் விளைச்சல் கண்டு
பட்டினி இனி
உலகில் இல்லையென
குதூகலிப்பான் உழவன்!

இணைய நண்பன்
16-12-2010, 10:11 AM
"படம் பார்த்து எமது எண்ணங்களை கவிதையாய் வடிப்போம்"


http://img138.imageshack.us/img138/4459/56804464.jpg (http://img138.imageshack.us/i/56804464.jpg/)

இணைய நண்பன்
16-12-2010, 10:12 AM
உணவுத்தேடலுக்காய்
வானில் வட்டமிட்ட
வண்ணத்துப்பூச்சை -தன்
நறுமணத்தால்
தன்னகத்தே அரவணைத்து
தாகம் தீர இதழ்விரித்து
தேனூட்டும்
சந்தோச நிமிடங்கள்!

ஆதி
16-12-2010, 12:29 PM
அன்பின் இணைய நண்பன் அவர்களே, இதை போன்ற ஒரு திரி நம் மன்றத்தில் "நிழலுக்கு உயிர்" எனும் தலைப்பில் முன்பே இருக்கிறது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16415&page=117

அதனால் இந்த திரியையும் அதிலேயே இணைத்துவிடலாம்..

ஆன்டனி ஜானி
16-12-2010, 01:46 PM
பூவுக்குள் மறைந்து இருக்கும்
கனிகள் அதை அருந்த வட்ட
மிடும் வண்ணத்து பூச்சிகள்

M.Jagadeesan
16-12-2010, 01:53 PM
என்னைச்
சுற்றிப் பறந்தவனே!
சும்மா நீ போகாதே!
புத்தம் புதுமலரின் தேனை
நித்தம் சுவைப்பாயே!

இணைய நண்பன்
16-12-2010, 04:39 PM
அன்பின் இணைய நண்பன் அவர்களே, இதை போன்ற ஒரு திரி நம் மன்றத்தில் "நிழலுக்கு உயிர்" எனும் தலைப்பில் முன்பே இருக்கிறது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16415&page=117

அதனால் இந்த திரியையும் அதிலேயே இணைத்துவிடலாம்..

அந்த திரியுடன் இதையும் இணைத்துவிடுங்கள் ஆதவன் அவர்களே.நன்றி

பாலகன்
16-12-2010, 04:43 PM
படம் பார் கவிதை வடி
மலர் கள் வடிகிறது
வண்ணத்துப்பூச்சியை பார்
கண்ணீர் வடிக்கிறது
தேன் கொஞ்சம் தான் உள்ளதென்று

கௌதமன்
16-12-2010, 05:16 PM
நீ ஓரிடத்திலிருக்கும்பூ; நானோ பறக்கும்பூ
வண்ணத்தைக் காட்டியெனையழைத்தாய்
மதுவிருந்ததளித்தாய்! நன்றி
பதிலுக்கு உன் மகரந்தத்தூள் சுமக்கும்
பணியை செய்யென்றால் எப்படி?

பாலகன்
16-12-2010, 05:22 PM
நீ ஓரிடத்திலிருக்கும்பூ; நானோ பறக்கும்பூ
வண்ணத்தைக் காட்டியெனையழைத்தாய்
மதுவிருந்ததளித்தாய்! நன்றி
பதிலுக்கு உன் மகரந்தத்தூள் சுமக்கும்
பணியை செய்யென்றால் எப்படி?

நல்ல கவிதை! அருமையாக இருந்தது. சிறப்பு பரிசாக 100 இணைய காசுகள் அளித்து மகிழ்கிறேன்.

கௌதமன்
16-12-2010, 05:26 PM
முதன்முதலில் கவிதைக்கு நான் வாங்கும் பரிசு இது. நன்றி தாராள பிரபு, மன்னிக்கவும் மகா பிரபு.

பாலகன்
16-12-2010, 05:33 PM
முதன்முதலில் கவிதைக்கு நான் வாங்கும் பரிசு இது. நன்றி தாராள பிரபு, மன்னிக்கவும் மகா பிரபு.

ஓ அப்படியா? அப்படின்னா நான் அடுத்ததாக நடத்த இருக்கும் உறுப்பினர் போட்டிகள் எண்.05 - கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளுங்களேன்.

கௌதமன்
17-12-2010, 10:33 AM
வேலைய முடிச்சிக்கிட்டு வெரசாப் போகவேணும்
ரேசனிலக் கொடுக்குறாக ஒரு ருபாய்க்கு அரிசி

வல்லம் தமிழ்
17-12-2010, 01:09 PM
என்ன பார்க்கிறாய் தாயே..
கண்ணீரில் நீ வளர்த்து
காலடியில் நிற்கும் பயிர்
காய்வதற்குள் வருமோ காவிரி நீர் என்றா?
அவ மாரி...
மழையாய் தான் பொழிஞ்சு
மனச குளிர வச்சு
அணைகளை நிரம்பி அழிச்சு
தமிழச்சி வளர்த்த பயிரை
தழுவி அணைப்பதற்காய்
அவசியம் வருவா நீ
அழுவாம வீட்டுக்கு போ

அக்னி
20-12-2010, 12:31 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=293

அன்றும் இப்படித்தான்,
மடித்துக்கட்டிய புடவையோடு
பாடிய பாட்டுக்கு வாயசைத்து
நாற்று நட்டாள் அவள்...

நான்
நாற்று நடுகையில்
பாட்டுப்பாடுகின்றேன்,
பசியை மறக்க...

காலில் பட்ட வயல்நீரினால்
தலையில் நீர்கோர்த்து
விட்டதாம் அவளுக்கு...

வயல்நீரிற் கால் பட்டதனால்
உலையில் நீர்கொதிக்கும்
என் வீட்டில் இன்று...

அவள் ஓய்வெடுக்கின்றாளாம்,
கோடிகளில் நஷ்டம் கொடுத்து...

கோடி ஒன்றில் ஓய்வெடுக்கின்றேன்,
நாளைய கஷ்டம் நினைத்தபடி...

நடிகைவீட்டு நாய்க்குக்
காவலுக்கு இரண்டுபேராம்...

பாதிப்பசியை நீரில் நிரப்பிவிட்டு,
காவல்காக்குது என்வீட்டு நாய்...

Narathar
25-06-2012, 08:47 AM
வணக்கம் அன்பு சொந்தங்களே....

மீண்டும் நிழலுக்கு உயிர்கொடுப்போமா ???

சிவா.ஜி
25-06-2012, 09:16 AM
வாங்க நாரதரே...நலமா? நிச்சயமாய் கொடுப்போமே....உறவுகளின் வித்தியாச பார்வைகள் அழகான கவி வரிகளாய் வந்து விழுவதை மீண்டும் கண்டு ரசிப்போமே....!!!

Narathar
27-06-2012, 12:09 PM
அன்பின் மன்ற சொந்தங்களே............
இந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் எழும் என்னங்களை
கவிதையாக இங்கு பதிந்து
இந்த நிழலுக்கு உயிரூட்டுங்கள்

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=852&d=1340798619

:):):):):):):):):)

Narathar
27-06-2012, 12:13 PM
அன்பின் மன்ற சொந்தங்களே......

நமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது!
ஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.
அந்த காதலினால் இந்த திரியை நான்
மன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........

இந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்
புதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.

==========================================================================

இத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,
அந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......

அது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..

உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......

கவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...

அதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...
ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.

அக்னி
27-06-2012, 06:50 PM
இல்லாத உணவுண்டு,
பானையைக் கழுவியது
தண்ணீராலல்ல.., கண்ணீரால்...

அந்த ஈரம் காய்த்துவிட,
அடுப்பில் வெப்பமில்லை..,
எரித்து நீண்ட நாள்...

பசி எரியக் காய்ந்துபோனது
அன்னையில் எனக்கான பால்...

அதை அணைக்கத்
தேடிச் சென்றுவிட்டாள்
அன்னை...
அவள் வரும்வரையில்,
எனக்கும் கொஞ்சம்
கிடைக்குமா உன் பால்...

கீதம்
28-06-2012, 07:02 AM
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=852&d=1340798619



தாய்ப்பால் -
சுரக்கவில்லை என் தாயின்பால்!
ஆவின்பால் -
அது என் ஆசைகளுக்கப்பால்!
ஆட்டுப்பால் -
ஒருவேளை சாத்தியம்!
குட்டியது குடித்தபின்
கிட்டக்கூடும் சொட்டுப்பாலேனும்!

சிவா.ஜி
28-06-2012, 07:07 AM
அக்னியின் வறுமை காட்டும் வளமான வரிகளும், தங்கை கீதத்தின் மிகப்பொருத்தமான அழகிய வரிகளும் நிழலுக்கு உயிரூட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
28-06-2012, 07:13 AM
மேய்ச்சலுக்கும் போகாமல்
பீய்ச்சுகிறது பாலை
தன் குட்டிக்கு தாய் ஆடு
இப்போதைக்கு ஒரு மழலையேனும் பசியாறட்டுமென
இந்த தாய்க்கும், தன் பிள்ளைக்கும்
உணவு கொண்டுவர
அந்தத் தாய் வேலைக்குச் சென்றிருக்கிறாள்
திரும்ப வரும்வரை
குட்டியின் பசியாறுகிறதா எனக் கண்காணிக்க
குழந்தையை விட்டுப்போயிருக்கிறாள்...!!!

இராஜிசங்கர்
28-06-2012, 07:18 AM
[B][COLOR="#FF0000"][COLOR="#0000FF"]
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=852&d=1340798619


தாலாட்டுப் பாடிக் கேட்டதில்லை
தாய்ப்பால் ருசி கண்டதில்லை
அப்பாவுக்கு அரவணைக்க நேரமில்லை
அவர் அன்னைக்கு உடல்நலம் போதவில்லை
சொத்துக்கள் அதிகம் இருக்கவில்லை
சொந்தபந்தங்களுக்கு உறவு தெரிவதில்லை
சிரிக்க அவசியம் வருவதில்லை
சிந்தவும் கண்ணீர் மிச்சமில்லை
அம்மா என்று யாருமில்லை
அதனால் தானே இந்தநிலை?
அந்தக் கவலை உனக்கில்லை
அன்னை இருக்காள் துயரில்லை
ஒருமுறை காட்டு உன் முகத்தை
ஒத்த குழந்தைப்பருவ சந்தோசத்தை
உனைப் பார்த்தாவது தெரிந்து கொள்கிறேன்!!

சிவா.ஜி
28-06-2012, 07:24 AM
தங்கை ராஜிசங்கரின் கோணமும் அருமை. அழகான வார்த்தைகளில் ஆதங்கம் சொல்லும் கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்ம்மா.

இராஜிசங்கர்
28-06-2012, 07:26 AM
தங்கை ராஜிசங்கரின் கோணமும் அருமை. அழகான வார்த்தைகளில் ஆதங்கம் சொல்லும் கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்ம்மா.

மிக்க நன்றிங்க அண்ணா

Narathar
28-06-2012, 07:38 AM
பானையைக் கழுவியது
தண்ணீராலல்ல.., கண்ணீரால்...

அன்னை... அவள் வரும்வரையில்,
எனக்கும் கொஞ்சம்
கிடைக்குமா உன் பால்...

மனதை பிசையவைக்கும் வரிகள்.....
வாழ்த்துக்கள் அக்னி.. தொடர்ந்து எழுதுங்கள்

Narathar
28-06-2012, 07:41 AM
தாய்ப்பால் -
தாயின்பால்!
ஆவின்பால் -
ஆசைகளுக்கப்பால்!
ஆட்டுப்பால் -
சொட்டுப்பாபால் !

எதுகை மோணையில் பிச்சு உதரிட்டீங்க போங்க...............
வாழ்த்துக்கள்!!! இன்னும் வரட்டும்

Narathar
28-06-2012, 07:43 AM
இப்போதைக்கு ஒரு மழலையேனும் பசியாறட்டுமென
இந்த தாய்க்கும், தன் பிள்ளைக்கும்
உணவு கொண்டுவர
அந்தத் தாய் வேலைக்குச் சென்றிருக்கிறாள்
திரும்ப வரும்வரை
குட்டியின் பசியாறுகிறதா எனக் கண்காணிக்க
குழந்தையை விட்டுப்போயிருக்கிறாள்...!!!

உங்கள் அதீத கற்பனை சிலிர்க்க வைக்கின்றது...........
வாழ்த்துக்கள் சிவா.ஜி அவர்களே..
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

Narathar
28-06-2012, 07:47 AM
அம்மா என்று யாருமில்லை
அதனால் தானே இந்தநிலை?
அந்தக் கவலை உனக்கில்லை
அன்னை இருக்காள் துயரில்லை
!

இராஜிசங்கரின் பார்க்கும் கோணமும்
கவி வரிகளும் வித்தியாசமானவை....
வாழ்த்துக்கள்!!!! தொடருங்கள்...................

இராஜிசங்கர்
28-06-2012, 08:04 AM
இராஜிசங்கரின் பார்க்கும் கோணமும்
கவி வரிகளும் வித்தியாசமானவை....
வாழ்த்துக்கள்!!!! தொடருங்கள்...................

நன்றிங்க Narathar

சிவா.ஜி
28-06-2012, 08:17 AM
பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நாரதரே.

(அதென்ன புதிதாய் ”அவர்களே”.....வேண்டாமே...)

கீதம்
28-06-2012, 08:28 AM
அக்னியின் வறுமை காட்டும் வளமான வரிகளும், தங்கை கீதத்தின் மிகப்பொருத்தமான அழகிய வரிகளும் நிழலுக்கு உயிரூட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

உடனுக்குடன் தரும் ஊக்கப் பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா.


எதுகை மோணையில் பிச்சு உதரிட்டீங்க போங்க...............
வாழ்த்துக்கள்!!! இன்னும் வரட்டும்

நன்றி நாரதரே... சிந்திக்கத் தூண்டும் ஒரு அழகான படத்தை அளித்தமைக்காய் உங்களுக்கு நன்றி.

தாமரை
28-06-2012, 08:42 AM
விலையில்லா ஆடு
விலை போன தேசம்
ஆட்டுப் பால் தேடி
அடுத்த காந்தி!!!

Narathar
28-06-2012, 09:55 AM
வித்தியாசமான பார்வை வாழ்த்துக்கள்
விலைபோன தேசத்தை மீட்கவந்த மீட்பராக நீங்கள் அக்குழந்தையை காண்பது
உங்கள் நாட்டுப்பற்றை காட்டுகின்றது!!!

சிவா.ஜி
28-06-2012, 07:37 PM
அசத்தலான வரிகள் தாமரை. நிழலுக்குள் நிகழ்காலம் இணைத்து, எதிர்காலம் கூறும் நல்ல நாலு வரிகள்.