PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!Pages : 1 2 3 4 5 6 [7] 8

Narathar
22-01-2010, 05:42 PM
துங்காதே தோழா, தினம் ,
உன் இமையை திறந்து விழித்திடு இக்கணம் ,
வாழ்க்கை ஒரு போர் களம் ,
பயமில்லா யானை பலம் ,
கடின உழைப்பின் கரம் ,
இவை இரண்டும் இணைந்தால் ஏற்படுத்தும் ,
மனித வாழ்வில் வளம் ..

அந்த புகை படத்தில் எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன் , திரு நாரதர் அவர்களே இது சரிதானா ?

நிழலை வேறு ஒரு கோணத்தில் பார்த்திருக்கின்றீர்கள். இதுவே நீங்கள் ஒரு தலைசிறந்த கவிஞ்சராவதற்கு ஒரு நல்ல அறிகுறி!

தொடர்ந்து எழுதுங்கள்

Narathar
03-02-2010, 08:40 AM
கடந்த நிழலுக்கு உயிரூட்டிய அனைத்து மன்றக்கவிகளுக்கும் நாரதரின் அன்புகலந்த நன்றிகள்.

அடுத்த நிழலை மன்றத்தில் யாராவது தரலாமே????

Narathar
04-02-2010, 06:23 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_amma.jpg


அன்பின் மன்றக்கவிகளே............
இதோ உங்கள் கவித்திறமைக்கு வேலை கொடுப்பதற்காக அடுத்த நிழலை பதிக்கின்றேன்................

எங்கே உங்கள் கவி விரல்களால் இந்த நிழலுக்கு உயிரூட்டுங்கள்

யவனிகா
04-02-2010, 11:05 AM
பார்த்தவுடன்ஓடிச்சென்று
உட்கார்ந்து விட்டது
என் மனம் காலணிக்குள்...
அதனாலோ என்னவோ
பிஞ்சு கால்களுக்கு
இடம் போதாமல் போனது....

யவனிகா
04-02-2010, 11:09 AM
மல்லிகை மலர் போல
பெண்குழந்தை பெற்றுவிட்டாய்...
இப்போதைய பாதைக்கு
காலணிக் காவல்...
நாளைய பாதைக்கு
கடவுளே காவல்...
பொறுப்பின் கவலை
புரிகிறது முகத்தில்...

ஆதி
04-02-2010, 12:06 PM
இந்த வெண் பாதுகையை
அணிந்து கொள் ஜெஃபி..

தேவதைகளுடையதோ
பாறக்கும் ஆற்றல் கொண்டதோ
இல்லை இது

எனினும்,
கூர் பல்லுடைய
முற்களின் பாதைகளிடம் இருந்தும்
கோர பல் கொண்ட
கற்களின் பாதைகளிடம் இருந்தும்
உன்னை பாதுக்காக்கும்..

குணமதி
04-02-2010, 12:56 PM
அஞ்செஞ் சீறடி!

மேலும் சிவந்ததோ!

அம்மா முதன் முதல் பள்ளிக்குப் போன போதும் இப்படித்தான்!

அப்போது பாட்டி என்ன செய்தாள் தெரியுமா?

வெதுவெதுப்பான நீரால் துடைத்து -

வெண்பஞ்சுப் பொதியைக் காலில் சுற்றினாள்!

அம்மாவும் அதையே செய்கிறேன்,

கவலைப்படாதே, செல்லம்!


அஞ்செஞ்சீறடி> அம் + செம் + சீறடி = அழகிய சிவந்த சிறிய அடி.

கலையரசி
04-02-2010, 01:22 PM
காலணியை அணிந்து கொள் அன்புக் குழந்தாய்!
பஞ்சு மெத்தையல்ல, நீ போகும் பாதை
பிஞ்சுப் பாதங்களை ருசிக்கக் காத்திருக்கும்
முள்ளிடமிருந்து காக்கும் இந்தக் காலணி!
உன் காலில் குத்தும் ஒவ்வொரு கல்லும்
உதிரத்தைக் கொட்ட வைப்பது
உன் அம்மாவின் நெஞ்சில் அல்லவோ?

சிவா.ஜி
04-02-2010, 01:56 PM
அம்மா...
இப்படித்தான் உன் அம்மாவும்
உனக்கணிவித்தாளோ....
இல்லை...உனக்கு கிடைக்காததை
எனக்களித்து மகிழ்கிறாயோ...!!!

யவனிகா
04-02-2010, 03:43 PM
கண்ணில் பொறுமையோடு
காத்திருக்குது
காலணிக்காக குட்டிப்பாப்பா...


ஒரு ஷூ போட்டுவிட
இத்தனை நேரமா
சரியான லூசும்மா நீ
இனி மகன் கத்தும் போதெல்லாம்
நிழல்படம் நினைவுக்கு வரும்
மகள் இல்லாத கவலையும்...

யவனிகா
04-02-2010, 03:50 PM
ஷூ போட அம்மா
தலை வார அம்மா
பூவைக்க அம்மா
சோறூட்ட அம்மா
மீண்டும் ஒரு முறை
மகளாகப்
பிறக்கவேண்டும்
இந்த முறை
இந்தமுறை உன்னைப்படுத்தமாட்டேன்
என் பிள்ளைகள் மேல் சத்தியமாய்

Narathar
08-02-2010, 04:36 AM
அம்மா சென்டிமெண்டுக்கு மவுசு அத்கிகம் என்பதை நிழலுக்கு கிடைத்திருக்கும் கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன........

இன்னும் கவிதைகளை நம் மன்றக்கவிகள் தரலாமே???

Narathar
09-02-2010, 06:19 AM
பார்த்தவுடன்ஓடிச்சென்று
உட்கார்ந்து விட்டது
என் மனம் காலணிக்குள்...
அதனாலோ என்னவோ
பிஞ்சு கால்களுக்கு
இடம் போதாமல் போனது....

மிகத்தெளிவான
அருமையான வரிகள் பாரட்டுக்கள்


மல்லிகை மலர் போல
பெண்குழந்தை பெற்றுவிட்டாய்...
இப்போதைய பாதைக்கு
காலணிக் காவல்...
நாளைய பாதைக்கு
கடவுளே காவல்...
பொறுப்பின் கவலை
புரிகிறது முகத்தில்...

தாய்மையினின் கவலையை
தக்கவாரு உணர்துகின்றது உங்கள் கவிதை.....

நன்றிகளும் வாழ்த்து மலர்களும்கண்ணில் பொறுமையோடு
காத்திருக்குது
காலணிக்காக குட்டிப்பாப்பா...


ஒரு ஷூ போட்டுவிட
இத்தனை நேரமா
சரியான லூசும்மா நீ
இனி மகன் கத்தும் போதெல்லாம்
நிழல்படம் நினைவுக்கு வரும்
மகள் இல்லாத கவலையும்...


ஷூ போட அம்மா
தலை வார அம்மா
பூவைக்க அம்மா
சோறூட்ட அம்மா
மீண்டும் ஒரு முறை
மகளாகப்
பிறக்கவேண்டும்
இந்த முறை
இந்தமுறை உன்னைப்படுத்தமாட்டேன்
என் பிள்ளைகள் மேல் சத்தியமாய்

இது உண்மையான கவலையா யவனி(க்)கா??

இல்லை கவிதைக்கான அலங்கார வரிகளா?

எது எப்படியோ இந்த நிழல் உங்களை ஆழமாக பாதித்திருக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது எனக்கு....

வாழ்த்துக்கள்

Narathar
10-02-2010, 03:41 PM
இந்த வெண் பாதுகையை
அணிந்து கொள் ஜெஃபி..

தேவதைகளுடையதோ
பாறக்கும் ஆற்றல் கொண்டதோ
இல்லை இது

எனினும்,
கூர் பல்லுடைய
முற்களின் பாதைகளிடம் இருந்தும்
கோர பல் கொண்ட
கற்களின் பாதைகளிடம் இருந்தும்
உன்னை பாதுக்காக்கும்..

நன்றி ஆதன் உங்கள் அழகிய கவிதை பகிர்வுக்கு........
தொடர்ந்து இப்பகுதியில் உங்கள் கவிதைகளை பதியுங்கள்

Narathar
10-02-2010, 03:44 PM
அஞ்செஞ் சீறடி!

மேலும் சிவந்ததோ!

அம்மா முதன் முதல் பள்ளிக்குப் போன போதும் இப்படித்தான்!

அப்போது பாட்டி என்ன செய்தாள் தெரியுமா?

வெதுவெதுப்பான நீரால் துடைத்து -

வெண்பஞ்சுப் பொதியைக் காலில் சுற்றினாள்!

அம்மாவும் அதையே செய்கிறேன்,

கவலைப்படாதே, செல்லம்!


அஞ்செஞ்சீறடி> அம் + செம் + சீறடி = அழகிய சிவந்த சிறிய அடி.

அருமையான ஒரு கவிதையைத்தந்து....
புரியாது என்று நீங்கள் நினைத்த வார்த்தையை புரியவைத்து....
அழகாக கொடுத்திருக்கின்றீர்கள்

உங்கள் பதிவை, நன்றி

தொடர்ந்து இப்பகுதியில் உங்கள் கவிதைகளை தாருங்கள்...
கூடவே சொல் விளக்கங்களும்

Narathar
10-02-2010, 03:51 PM
காலணியை அணிந்து கொள் அன்புக் குழந்தாய்!
பஞ்சு மெத்தையல்ல, நீ போகும் பாதை
பிஞ்சுப் பாதங்களை ருசிக்கக் காத்திருக்கும்
முள்ளிடமிருந்து காக்கும் இந்தக் காலணி!
உன் காலில் குத்தும் ஒவ்வொரு கல்லும்
உதிரத்தைக் கொட்ட வைப்பது
உன் அம்மாவின் நெஞ்சில் அல்லவோ?

கலையரசியின்
கவிதை
கலைத்துவமாக
காட்டி நிற்கின்றது
கனிந்த ஊள்ளம் கொண்ட தாயன்பை

நன்றி உங்கள் கவிதைக்கு
திஒடர்ந்து எழுதுங்கள்

Narathar
10-02-2010, 03:55 PM
அம்மா...
இப்படித்தான் உன் அம்மாவும்
உனக்கணிவித்தாளோ....
இல்லை...உனக்கு கிடைக்காததை
எனக்களித்து மகிழ்கிறாயோ...!!!

சிறிய கவிதைதான்
சிவா.ஜி ஆனால்
சிந்திக்க பல விடயங்கள்
சிந்திக்கிடக்கிறது உங்கள்
சின்னக்கவிதையிலே

தொடர்ந்து நிழலுக்கு உயிரூட்டுங்கள்

Narathar
10-02-2010, 04:29 PM
தாய்ப்பாசக்கவிதை மட்டும் தான் எழுதுவார்களா நம்ம கவிகள்?

இல்லை இல்லை தந்தை பாசத்தைப்பற்றியும் எழுதுவார்கள் என்று தோன்றியது....

அதுதான் கொஞ்சம் அலசி இந்த நிழலை அடுத்த உங்கள் கவிதை உயிரூட்டலுக்காக தேர்ந்தெடுத்தேன்.......

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_father_and_son_b.jpg


எங்கே நம்மது மன்றக்கவிகளே உங்கள் "கவிதை" உயிரூட்டல் தொடரட்டும்

குணமதி
11-02-2010, 12:23 PM
சின்னக் கிளியே...!


சின்னக் கிளியே, செஞ்சுடரே!

.....செல்வக் குவையே சீரழகே!

கன்னற் குரலே கனிவாயே!

.....கயமை அடிமை கடிந்திங்கே

முன்னர் அறியா முழுஉரிமை

.....முகிழ்க்கச் செய்வாய் முழுநிலவே!!

யவனிகா
11-02-2010, 12:36 PM
உறங்கும் போது முத்தம்
உறங்கும் போது தலைகோதல்
உறங்கிய பிள்ளையை
உலுப்பி எழுப்பி திண்பண்டம்
உறங்கிய பின் அவன்
படிப்பு பற்றிய விசாரணை..
ஒவ்வொரு தந்தைக்குள்ளும்
ஒரு தாய் ஒளிந்தே கிடக்கிறாள்...
அதை அவன்
விழித்திருக்கும் போதும்
காட்டி விடு...
பின் எப்போதும் அவன்
உன்னை விலகிப்போக மாட்டான்...

சிவா.ஜி
11-02-2010, 02:03 PM
அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்திருக்கு
என்பதை....
உன் பிள்ளைக்கும்
இதைப்போல
தாய் முத்தம் தந்து
சொல்ல வை....
தாயுமான தந்தை பந்தம்
தொடர வை...!!!

சிவா.ஜி
11-02-2010, 02:07 PM
இந்த முத்தத்தின் ஈரத்தை
உன்னுள் எங்காவது
ஒட்ட வைத்துக் கொள்
பின்னாளில் என்னை
பெட்டியுடன் வெளியனுப்பும்போது
அந்த ஈரத்தை மனதுக்குள் எண்ணிக்கொள்...!!!

கலையரசி
12-02-2010, 12:28 PM
"காலமிது, காலமிது கண்ணுறங்கு மகனே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகனே"

மின்சார வேலிக்குள் உன்னன்னை
சிறைபட்டுச் சீரழிந்த நிலை நீயறிந்தால்
கண்ணுறக்கம் உனைவிட்டு நீங்கிவிடலாம்;

பால்மணம் மாறா உன்னருமை அண்ணனை
ஆமிக்காரனுக்கு உயிரோடு பலி கொடுத்த
உண்மையை நீயறிந்தால் கண்ணுறக்கம்
உன்னை விட்டுப் பறந்து விடலாம்;

செத்தும் சாகாமல் நடைப்பிணமாக உலவும்
உன் தந்தையின் சோகத்தை நீயறிந்தால்
கண்ணுறக்கம் உனை விட்டு ஓடிவிடலாம்;

"காலமிது, காலமிது கண்ணுறங்கு மகனே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகனே"

கீதம்
13-02-2010, 10:01 AM
கண்மூடித் துயிலும் என்
கையளவு உலகே!
என் நேற்றைய நினைவுகள் தந்த
நாளைய கனவு நீ!
என் சிறுமுத்தத்தால்
விழித்தெழுந்து விடுவாயோ?

உறக்கம் கலைந்தால் ஒருவேளை
மீளா உறக்கம் கொண்டுவிட்ட
உன் தாயைத் தேடி அழக்கூடும்
என்பதால் பதைக்கிறேன்!
ஆகவேதான் கண்ணே
உதடு ஒட்டா முத்தம் ஒன்றை
உன் உச்சியில் பதிக்கிறேன்!

Narathar
13-02-2010, 10:59 AM
சின்னக் கிளியே...!


சின்னக் கிளியே, செஞ்சுடரே!

.....செல்வக் குவையே சீரழகே!

கன்னற் குரலே கனிவாயே!

.....கயமை அடிமை கடிந்திங்கே

முன்னர் அறியா முழுஉரிமை

.....முகிழ்க்கச் செய்வாய் முழுநிலவே!!


நிழலுக்கு முதலில் உயிரூட்டி.....
ஒரு அழகிய கவிதை தந்த உங்களுக்கு
நாரதரின் பணிவன்பான நன்றிகள்!

தொடர்ந்து இப்பகுதிக்கு வந்து உங்கள் கவிதைகளால் உரமூட்டுங்கள்.

அமரன்
13-02-2010, 11:09 AM
எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிட்டே இருங்க..

பரிசுகள் நிச்சயம் உங்களை அடையும்....தாமதமாகவேனும்!

Narathar
13-02-2010, 11:10 AM
உறங்கும் போது முத்தம்
உறங்கும் போது தலைகோதல்
உறங்கிய பிள்ளையை
உலுப்பி எழுப்பி திண்பண்டம்
உறங்கிய பின் அவன்
படிப்பு பற்றிய விசாரணை..
ஒவ்வொரு தந்தைக்குள்ளும்
ஒரு தாய் ஒளிந்தே கிடக்கிறாள்...
அதை அவன்
விழித்திருக்கும் போதும்
காட்டி விடு...பின் எப்போதும் அவன்
உன்னை விலகிப்போக மாட்டான்...

தந்தைமார் பாசம் இருந்தும் அதை மறைத்து வைத்திருப்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்

மிகச்சரியான வார்த்தைகள்

நன்றி உங்கள் கவிதைக்கு

சிவா.ஜி
13-02-2010, 11:12 AM
எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிட்டே இருங்க..

பரிசுகள் நிச்சயம் உங்களை அடையும்....தாமதமாகவேனும்!

இப்படிச் சொல்லியே உசுப்பேத்திக்கிட்டிருங்க....இதுவரைக்கும் ஒண்ணும் வந்தபாடில்லை.....வராவிட்டால்....இனி பாட்டில்லை...

(ஹி...ஹி....கண்னை உறுத்துது பாஸ் அந்த அம்மாம் பெரிய தொகை....)

அமரன்
13-02-2010, 11:19 AM
இப்படிச் சொல்லியே உசுப்பேத்திக்கிட்டிருங்க....இதுவரைக்கும் ஒண்ணும் வந்தபாடில்லை.....வராவிட்டால்....இனி பாட்டில்லை...

(ஹி...ஹி....கண்னை உறுத்துது பாஸ் அந்த அம்மாம் பெரிய தொகை....)

இதான் சொல்றது வங்கியில் வைப்புச் செய்யனும்னு..

எல்லாக் கவிதைகளுக்கும் பரிசுண்டுஎன்றாலும் கவிதைகளைப் படிக்காமல் வழங்க மனமேனோ ஒப்பவில்லைப் பாஸ். அதான் இந்த இழுத்தடிப்பு,

சிவா.ஜி
13-02-2010, 11:54 AM
படிங்க படிங்க......அப்புறமா பிடிங்க....பிடிங்கன்னு சொல்லுங்க பாஸ்....!!!(விட மாட்டமில்ல....)

Narathar
15-02-2010, 05:33 AM
அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்திருக்கு
என்பதை....
உன் பிள்ளைக்கும்
இதைப்போல
தாய் முத்தம் தந்து
சொல்ல வை....
தாயுமான தந்தை பந்தம்
தொடர வை...!!!

ஒரு தாய்க்குள் தாய் மட்டுமே இருப்பாள்
ஆனால் தந்தைக்குள் தாயும் சேர்ந்து இருப்பாள் என்பதை அழகாக சொல்லி நிற்கின்றது உங்கள் கவி வரிகள்.

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

Narathar
15-02-2010, 05:36 AM
இந்த முத்தத்தின் ஈரத்தை
உன்னுள் எங்காவது
ஒட்ட வைத்துக் கொள்
பின்னாளில் என்னை
பெட்டியுடன் வெளியனுப்பும்போது
அந்த ஈரத்தை மனதுக்குள் எண்ணிக்கொள்...!!!

இந்த முத்தத்தின் ஈரம் அவன் மனதில் ஒட்டியிருந்தால் நிச்சயமாக அவன் அப்பாவை பெட்டியுடன் வெளியே அனுப்பமாட்டான்!!!!!

யதார்த்தத்தை வலிகளோடு உணர்த்தி நிற்கும் வரிகள்.

வாழ்த்துக்கள்

Narathar
15-02-2010, 05:40 AM
"காலமிது, காலமிது கண்ணுறங்கு மகனே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகனே"

மின்சார வேலிக்குள் உன்னன்னை
சிறைபட்டுச் சீரழிந்த நிலை நீயறிந்தால்
கண்ணுறக்கம் உனைவிட்டு நீங்கிவிடலாம்;

பால்மணம் மாறா உன்னருமை அண்ணனை
ஆமிக்காரனுக்கு உயிரோடு பலி கொடுத்த
உண்மையை நீயறிந்தால் கண்ணுறக்கம்
உன்னை விட்டுப் பறந்து விடலாம்;

செத்தும் சாகாமல் நடைப்பிணமாக உலவும்
உன் தந்தையின் சோகத்தை நீயறிந்தால்
கண்ணுறக்கம் உனை விட்டு ஓடிவிடலாம்;

"காலமிது, காலமிது கண்ணுறங்கு மகனே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகனே"

தந்தை பாசத்தை ஒரு புதுக்கண்ணோட்டத்தில் நோக்கியிருக்கின்றார் கலையரசி.................

உண்மைதான் காலத்தை தவறவிட்டல் உறக்கமில்லைதான்!!!!

வாழ்த்துக்கள் கலையரசி,
உங்கள் வித்தியாசமான சிந்தணைகளால் இத்திரியை சிறப்புர செய்யுங்கள்

Narathar
15-02-2010, 05:43 AM
கண்மூடித் துயிலும் என்
கையளவு உலகே!
என் நேற்றைய நினைவுகள் தந்த
நாளைய கனவு நீ!என் சிறுமுத்தத்தால்
விழித்தெழுந்து விடுவாயோ?

உறக்கம் கலைந்தால் ஒருவேளை
மீளா உறக்கம் கொண்டுவிட்ட
உன் தாயைத் தேடி அழக்கூடும்
என்பதால் பதைக்கிறேன்!
ஆகவேதான் கண்ணே
உதடு ஒட்டா முத்தம் ஒன்றை
உன் உச்சியில் பதிக்கிறேன்!

கவித்துவமான வரிகளும்
கவலைதரும் கற்பனையும்........
சேர்ந்து அழகான கவிதை யாத்திருக்கின்றீர்கள்.

இப்பகுதியில் நிச்சயமாக உங்கள் கவிப்பயணம் தொடர வேண்டுமென்று அன்புக்கட்டளையிடுகின்றேன்

Narathar
15-02-2010, 05:47 AM
எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிட்டே இருங்க..

பரிசுகள் நிச்சயம் உங்களை அடையும்....தாமதமாகவேனும்!

சொல்லுங்க சொல்லுங்க சொல்லிக்கிட்டே இருங்க........ :)

Narathar
15-02-2010, 05:49 AM
படிங்க படிங்க......அப்புறமா பிடிங்க....பிடிங்கன்னு சொல்லுங்க பாஸ்....!!!(விட மாட்டமில்ல....)

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க :D

Narathar
17-02-2010, 05:22 AM
அன்பின் மன்ற சொந்தங்களே................

செல்லிடப்பேசி அல்லது மொபைல் போன்
என்றழைக்கப்படும் இக்கருவி
நம் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பல
என்று சொன்னால் அது தவறல்ல
என்று நான் நினைக்கின்றேன்.....................

எனவே கீழுள்ள நிழலைப்பார்த்து
உங்கள் மனதில் தோன்றும் எண்ணக்கருக்களை
கவிதையாக வடித்து
இந்த நிழலுக்கும் உயிரூட்டுங்கள்http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_Nilalukku-uyir.JPG

சிவா.ஜி
17-02-2010, 09:21 AM
பாலகன் முதல்
பல்லுபோன கிழவி வரை,
மாடு மேய்ப்பவர் முதல்
மாடர்ன் மங்கைகள் வரை
எல்லோருக்கும் துணை செல்
எகிறவைக்குது சில நேரம் அதன் பில்...!!

ஆர்.ஈஸ்வரன்
17-02-2010, 09:46 AM
காதும் கேட்கவில்லை
கண்ணும் தெரியவில்லை
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
தடி ஊண்றி நடந்தாலும்
எனக்கு வேண்டும் செல்

சிவா.ஜி
17-02-2010, 11:37 AM
உன் செவிமடலை
எந்நேரமும் முத்தமிடும்
செல்லாய் நானில்லையே என
பொல்லாக் கோபமெனக்கு...
உன் விரல்களால் ஒற்றி
என்னையும் காதருகே வை
நானும் சொல்லுவேன்...
ஓராயிரம் பொய்....!!!

ஜனகன்
17-02-2010, 11:54 AM
மரணத்தை தேடும் பழங்கள்
மானத்தை தொலைக்கும் மலர்கள்
மனமொத்த காதலர்கள்
பள்ளி செல்லும் சிறார்கள்
தொ(ல்)லை பேசியின் தொடர்போடு
தெருவெல்லாம் திரிந்து
பைத்தியம் ஆகின்றனர்.

குணமதி
17-02-2010, 12:36 PM
மரணத்தை தேடும் பழங்கள்
மானத்தை தொலைக்கும் மலர்கள்
மனமொத்த காதலர்கள்
பள்ளி செல்லும் சிறார்கள்
தொ(ல்)லை பேசியின் தொடர்போடு
தெருவெல்லாம் திரிந்து
பைத்தியம் ஆகின்றனர்.

நன்றாக எழுதுகிறீர்கள் ஜனகன்.

இப்பொழுதுதான் முதன்முதலாகக் கவனித்தேன்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

நன்றி.

ஜனகன்
17-02-2010, 01:15 PM
நன்றாக எழுதுகிறீர்கள் ஜனகன்.

இப்பொழுதுதான் முதன்முதலாகக் கவனித்தேன்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

நன்றி.

நன்றி நண்பரே,
எனக்கு எழுதுவதெல்லாம் எட்டாத்தூரம்
இந்த மன்றத்திற்கு வந்த பின்தான் எதோ கொஞ்சம்.

குணமதி
17-02-2010, 02:02 PM
கைப்பேசிக் காலம்!


கம்பம் நட்டுக் கம்பி இழுத்து

சம்பளத் திற்குமேல் கிம்பளம் பெற்று

சில்லரை மிக்கச் செல்வர் பேச

இல்ல இணைப்பு நல்கினர் அந்நாள்!

இன்றெல் லார்க்கும் இணைப்புகள் உடனே

என்றுமெப் போதும் குன்றா வினையில்

நன்று செயற்படும் நற்குழு மம்பல

அன்றன் றும்புது அறிவிப் போடு

அளிக்கின் றார்கள் அழகுறு வடிவில்

களிப்புடன் பேச கைப்பே சிகளே!

பாட்டா ளிக்கும் பணக்கா ரர்க்கும்

பாட்டியர் மூத்த பாட்டன் மார்க்கும்

சிறுபெண் குமரிக் குறுதுணை என்றும்

தொறுவர் முதியோர் துறவிய ரோடு

எல்லார் கையும் ஏந்துகைப் பேசி

தொல்லை என்பாரும் இல்லாம லில்லை!

நல்ல பயனே நல்கிடும் படியதை

வல்ல வகையில் எல்லை அறிந்தே

பயனுறப் பேசி உயர்வுற

இயல ஏந்தி இன்பம் சேர்ப்பமே!


(தொறுவர் = மாடுமேய்ப்போர், இயல = பொருத்தமாக)

சிவா.ஜி
17-02-2010, 02:30 PM
நவீன அலைபேசிக்கு, அழகான மரபுக்கவிதை. மிக நன்றாக இருக்கிறது குணமதி அவர்களே. வாழ்த்துகள்.

குணமதி
17-02-2010, 03:29 PM
நவீன அலைபேசிக்கு, அழகான மரபுக்கவிதை. மிக நன்றாக இருக்கிறது குணமதி அவர்களே. வாழ்த்துகள்.

நன்றி சிவா.

கலையரசி
18-02-2010, 04:23 PM
தொலைத் தொடர்பில் ஒரு புரட்சி!
அலைபேசியின் வருகையால்
உலகம் சுருங்கி விட்டது
விரல் நுனியில்!
பாமரர் முதல் படித்தவர் வரை
சிறார் முதல் முதியவர் வரை
சித்தாளு முதல் முதலாளி வரை
யாவரது கையிலும் செல்!
காதலர்க்குப் பிரிவுத் துயர் நீக்கும்
உற்ற நண்பன்!
சுருங்கச் சொல்லின்,
செல் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

Narathar
19-02-2010, 11:17 AM
எல்லோருக்கும் துணை செல்
எகிறவைக்குது சில நேரம் அதன் பில்...!!

சிவா.......
நீங்கள் தைரியமாக சினிமாவுக்கு பாட்டெழுதலாம்

வாழ்த்துக்கள் :icon_b:

கீதம்
19-02-2010, 09:22 PM
மீள இயலா மாயவலையில்
சிக்குண்டோரின் கைகள் ஏந்திய
மந்திரக்கோல் அது!
காலமெல்லாம் ஓய்வின்றியே
அவர் காதோடு மந்திரம் பேசுது!

அவசியத்திற்காய் சிலரிடம்
அடைக்கலமானது, ஆரம்பத்தில்!
அசகாயசூரனாய் உருக்கொண்டு
அடுத்தவரிடம் தாவிய அது,
காலத்தின் வேகத்தால்
கட்டாயமாகிப் போனதோடு,
கையிலிருப்பதே நாகரிகமென
கட்டியமும் கூறியது!

கண்களுக்குப் பூட்டுகள் போட்டு
வாயின் தாழினை
வரைமுறையின்றித் திறந்தது.
கவனக்குறைவாய் நடந்தோர் வாழ்வை
கணநேரத்தில் பறித்தது.

காதல் என்னும் உணர்வையும்
கண்மூடித்தனமாய் வளர்த்தது.
பரதேசம் புகுந்த உறவுகளின்
பற்றுக்கொடியாய் ஆனது!

துப்புரவுத் தொழிலாளியையும்
துரிதமாய் அழைக்கத் தேவை இது!
விருவிருவென வியாபாரம் வளர்த்தது;
வினையும் சிலவிடம் துளிர்த்தது!

உள்ளங்கைக்குள் அடக்கிவைக்கப்பட்ட
குதிரையெனத் திமிறுது;
அதன் கடிவாளமோ ஊரார் கையில்
கணடபடித் திண்டாடுது!

பந்தயமைதானம் போல
பரபரவென இயங்கும் உலகில்
பலரைப் பைத்தியமாயும் காட்டுது,
தானே பேசித் தானே சிரிக்கையில்!

Narathar
24-02-2010, 07:22 AM
காதும் கேட்கவில்லை
கண்ணும் தெரியவில்லை
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
தடி ஊண்றி நடந்தாலும்
எனக்கு வேண்டும் செல்

செல் இருந்தால் சொல் வரும்மோ என்னவோ????

நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

Narathar
24-02-2010, 07:25 AM
உன் செவிமடலை
எந்நேரமும் முத்தமிடும்
செல்லாய் நானில்லையே என
பொல்லாக் கோபமெனக்கு...
உன் விரல்களால் ஒற்றி
என்னையும் காதருகே வை
நானும் சொல்லுவேன்...
ஓராயிரம் பொய்....!!!

அட-டட-டடா :lachen001:

முன்னர் சொன்ன வரிகளே இந்தக்கவிதைக்கும் சொல்வேன்...

வர வர வளர்ந்துகிட்டே போறீங்க
ஒருநாள் வைரமுத்துவை மிஞ்சிவிட வாழ்த்துகின்றேன்

Narathar
24-02-2010, 07:30 AM
மரணத்தை தேடும் பழங்கள்
மானத்தை தொலைக்கும் மலர்கள்
மனமொத்த காதலர்கள்
பள்ளி செல்லும் சிறார்கள்
தொ(ல்)லை பேசியின் தொடர்போடு
தெருவெல்லாம் திரிந்து
பைத்தியம் ஆகின்றனர்.


மனமொத்த கிளிகள்
பள்ளி செல்லும் பிஞ்சுகள் என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். :)

அழகான வரிகள்
அருமையான கருத்துக்கள்

அடுத்த கவிஞ்சர் தயாராகிவிட்டார்!!!!! பராக் பராக்

Narathar
24-02-2010, 07:38 AM
கைப்பேசிக் காலம்!


கம்பம் நட்டுக் கம்பி இழுத்து

சம்பளத் திற்குமேல் கிம்பளம் பெற்று

சில்லரை மிக்கச் செல்வர் பேச

இல்ல இணைப்பு நல்கினர் அந்நாள்!

சரியாகச்சொல்லியிருக்கின்றீர்கள்.
அதை அழகாகவும் எழுதியிருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள் உங்கள் வரிகளுக்கு
நன்றிகள் இத்திரியில் கவி எழுதியதற்கு
இன்னொறு நன்றி இனி தொடர்ந்து எழுதுவதற்கு
கைப்பேசிக் காலம்!தொல்லை என்பாரும் இல்லாம லில்லை!

நல்ல பயனே நல்கிடும் படியதை

வல்ல வகையில் எல்லை அறிந்தே

பயனுறப் பேசி உயர்வுற

இயல ஏந்தி இன்பம் சேர்ப்பமே!


(தொறுவர் = மாடுமேய்ப்போர், இயல = பொருத்தமாக)

நிச்சயமாக.............

தொழில் நுட்ப வளர்ச்சியால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதத்தை சாபமாக்காமல் காப்பது நம் அனைவரதும் கடமை

மீண்டும் நன்றிகள்

Narathar
24-02-2010, 07:41 AM
செல் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

புதுமொழி தந்த கலையரசிக்கு நன்றி

வாழ்த்துக்களும் நன்றிகளும்........
தொடர்ந்து எழுதுங்கள்

குணமதி
24-02-2010, 03:40 PM
சரியாகச்சொல்லியிருக்கின்றீர்கள்.
அதை அழகாகவும் எழுதியிருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள் உங்கள் வரிகளுக்கு
நன்றிகள் இத்திரியில் கவி எழுதியதற்கு
இன்னொறு நன்றி இனி தொடர்ந்து எழுதுவதற்கு

நிச்சயமாக.............

தொழில் நுட்ப வளர்ச்சியால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதத்தை சாபமாக்காமல் காப்பது நம் அனைவரதும் கடமை

மீண்டும் நன்றிகள்


மிக்க நன்றி.

Narathar
25-02-2010, 04:31 AM
மீள இயலா மாயவலையில்
சிக்குண்டோரின் கைகள் ஏந்திய
மந்திரக்கோல் அது!
காலமெல்லாம் ஓய்வின்றியே
அவர் காதோடு மந்திரம் பேசுது!

அவசியத்திற்காய் சிலரிடம்
அடைக்கலமானது, ஆரம்பத்தில்!
அசகாயசூரனாய் உருக்கொண்டு
அடுத்தவரிடம் தாவிய அது,
காலத்தின் வேகத்தால்
கட்டாயமாகிப் போனதோடு,
கையிலிருப்பதே நாகரிகமென
கட்டியமும் கூறியது!

கண்களுக்குப் பூட்டுகள் போட்டு
வாயின் தாழினை
வரைமுறையின்றித் திறந்தது.
கவனக்குறைவாய் நடந்தோர் வாழ்வை
கணநேரத்தில் பறித்தது.

காதல் என்னும் உணர்வையும்
கண்மூடித்தனமாய் வளர்த்தது.
பரதேசம் புகுந்த உறவுகளின்
பற்றுக்கொடியாய் ஆனது!

துப்புரவுத் தொழிலாளியையும்
துரிதமாய் அழைக்கத் தேவை இது!
விருவிருவென வியாபாரம் வளர்த்தது;
வினையும் சிலவிடம் துளிர்த்தது!

உள்ளங்கைக்குள் அடக்கிவைக்கப்பட்ட
குதிரையெனத் திமிறுது;
அதன் கடிவாளமோ ஊரார் கையில்
கணடபடித் திண்டாடுது!

பந்தயமைதானம் போல
பரபரவென இயங்கும் உலகில்
பலரைப் பைத்தியமாயும் காட்டுது,
தானே பேசித் தானே சிரிக்கையில்!

அருமையாக யாத்திருக்கின்றீர்கள் உங்கள் கவிதையை..................

வாழ்த்துக்களும் நன்றிகளும் கீதம்

தொடர்ந்து வாருங்கள், வந்து இப்பக்கத்தை உங்கள் அழகிய கவிதைகளால் அழகு படுத்துங்கள்!!!!!

நன்றிகள் மீண்டும்
கவிதைக்கும்
பங்களிப்புக்கும்

கீதம்
25-02-2010, 10:37 AM
அருமையாக யாத்திருக்கின்றீர்கள் உங்கள் கவிதையை..................

வாழ்த்துக்களும் நன்றிகளும் கீதம்

தொடர்ந்து வாருங்கள், வந்து இப்பக்கத்தை உங்கள் அழகிய கவிதைகளால் அழகு படுத்துங்கள்!!!!!

நன்றிகள் மீண்டும்
கவிதைக்கும்
பங்களிப்புக்கும்

வாழ்த்துக்கு நன்றி நாரதர் அவர்களே. உங்கள் அன்பான வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்.

ஜனகன்
25-02-2010, 12:07 PM
மனமொத்த கிளிகள்
பள்ளி செல்லும் பிஞ்சுகள் என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். :)

அழகான வரிகள்
அருமையான கருத்துக்கள்

அடுத்த கவிஞ்சர் தயாராகிவிட்டார்!!!!! பராக் பராக்

நீங்கள் சொல்வதுதான் சரி நாரதரே. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராது.
மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி விடுவேன்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

ஜனகன்
25-02-2010, 12:20 PM
எல்லா திசைகளும் எனக்குள் அடக்கம்
எல்லோர்க்கும் என்மீதே இன்றைய மயக்கம்
வடிவத்தில் சிறியவன் நான்
வாமண அவதாரம் நான்
அடி எடுத்து நான் அளந்தால்
அண்டமெல்லாம் சிறிதாகும்
கையளவு இதயத்தில்
கடலளவு ஆசைகளை
கடல் கடந்து இருந்தாலும்
கட்சிதமாய் நான் உரைப்பேன்.

தானாக பேசினாலோ
தனியாக சிரித்த படி போனாலோ
பைத்தியம் தான் போகுதென்பார் அந்நாளில்
வீதியிலே இன்றைக்கு
வாகன நெரிசலிலும்
பாதிப்பேர் சிரித்த படி
பைத்தியம் போல் உளறுகின்றார்
காரணம்தான் தெரிகின்றதா
கைபேசி என்னிடம்தான்
ஊர்கதைகள் அளக்கின்றார்
உலகினையே மறக்கின்றார்.

எப்போதோ டிவி நிகழ்ச்சியில் கேட்டது.

சிவா.ஜி
25-02-2010, 01:38 PM
அட-டட-டடா :lachen001:

முன்னர் சொன்ன வரிகளே இந்தக்கவிதைக்கும் சொல்வேன்...

வர வர வளர்ந்துகிட்டே போறீங்க
ஒருநாள் வைரமுத்துவை மிஞ்சிவிட வாழ்த்துகின்றேன்

ரொம்ப ரொம்ப நன்றிங்க நாரதர். அவரு எங்கே நான் எங்கே.....!!

Narathar
05-03-2010, 05:50 AM
அன்பர்களே...............
இதோ உங்கள் கற்பனை சிறகை தட்டிவிட அடுத்த நிழல்........


(யாரும் என்னை திட்டாதீர்கள்)இது காலத்தின் (அலங்)கோலம்!!!!!!

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_23834_337131524613_664464613_3353899_1429044_n.jpg
:)

அக்னி
05-03-2010, 07:36 AM
இது காலத்தின் (அலங்)கோலம்
எனத் தலைப்பிடுவதே பொருத்தம்...

*****
ஏன் இந்தப் பரிகாசம்...
இது என்ன சோதனை...

பிரம்மச்சாரியத்தின் சிறப்பறியும்
பரிசோதனையை
இப்படி உடைத்துப் பார்க்கலாமா...

குணமதி
05-03-2010, 03:23 PM
துறக்காத துறவி காணீர்!

.....தோய்கின்ற கீழ்மை காணீர்!

மறக்காத நடிப்பை இங்கே

.....மறைவினில் வழங்கக் காணீர்!

சிறக்காத புனைவில் புன்மைச்

.....சிறுமைசெய் கயமை காணீர்!

திறக்காதோ அறிவுக் கண்கள்

.....தீராதோ போலி ஏய்ப்பே!

Narathar
06-03-2010, 07:08 AM
இது காலத்தின் (அலங்)கோலம்
எனத் தலைப்பிடுவதே பொருத்தம்......


நீங்க சொல்லி மாற்றாமல் இருக்க முடியுமா????

இதோ மாற்றியாச்சு!!!! :)

சிவா.ஜி
06-03-2010, 08:11 AM
பரமானந்தத்தை மறந்து
பரத்தையானந்தத்தில்
நித்தம் திளைக்கும்
நித்தியானந்தம்.....

துறவியான பின்னும்
காமம் தொலைக்காது
காவியைக் களங்கப்படுத்தும்
காமுகானந்தம்....!!!

கலையரசி
06-03-2010, 09:43 AM
தணிக்கைச் சான்றிதழ் பார்த்து
தவிர்ப்பன தவிர்த்துக்
குடும்ப சகிதமாய்ப்
படம் பார்க்கப் போனது
அந்தக்காலம்.

தணிக்கை சிறிதுமின்றி
சின்னஞ் சிறுசுகள் முன்னே
நீலப்படம் அரங்கேறுவது
இந்தக் காலம்.

ஊடகத்துறையின் தர்மம்
பறக்குது காற்றிலே!
பெற்றோர் நெஞ்சமோ
கொதிக்குது வீட்டிலே!

rajureva
06-03-2010, 09:49 AM
அந்த காலம்- ராஜாக்களுக்கு பல மனைவிகள்
இந்த் காலம்- சாமியாருக்கு பல பெண்கள்
வரும் காலம்?----------

அக்னி
06-03-2010, 10:09 AM
ஊடகத்துறையின் தர்மம்
பறக்குது காற்றிலே!
பெற்றோர் நெஞ்சமோ
கொதிக்குது வீட்டிலே!
:icon_b: :icon_b: :icon_b:

அருமை கலையரசி...

இந்தப் பக்கத்திலும் ஒன்றை எழுத நினைத்திருந்தேன். முந்திவிட்டீர்கள்...

கலையரசி
06-03-2010, 10:18 AM
:icon_b: :icon_b: :icon_b:

அருமை கலையரசி...

இந்தப் பக்கத்திலும் ஒன்றை எழுத நினைத்திருந்தேன். முந்திவிட்டீர்கள்...

எனக்கு அவ்வளவாக கவிதை வராது. எந்தவொரு படைப்பிற்கும் அழகிய கவிதை மூலம் நீங்கள் எழுதும் பின்னூட்டம் என்னைக் கவர்ந்த ஒன்று. இன்று உங்களிடமிருந்து பாராட்டு கிடைத்ததும் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Narathar
06-03-2010, 10:23 AM
எனக்கு அவ்வளவாக கவிதை வராது. எந்தவொரு படைப்பிற்கும் அழகிய கவிதை மூலம் நீங்கள் எழுதும் பின்னூட்டம் என்னைக் கவர்ந்த ஒன்று. இன்று உங்களிடமிருந்து பாராட்டு கிடைத்ததும் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவிதை எழுதாதவர்களும்
கவிதை எழுத வேண்டும்
என்ற நோக்கத்தில் தான்
இந்த திரி ஆரம்பிக்கப்பட்டது..........

எனவே உங்களைப்போன்ற
பலர் இங்கு வந்து கவிதை எழுதி
பாராட்டுக்களை பெறும்போது
அது எனக்கும் கிடைத்த
பாராட்டாகவே கருதுகின்றேன்.

உங்களது கவிப்பயணம் தொடரட்டும்

கலையரசி
06-03-2010, 10:27 AM
என்னைக் கவி எழுத ஊக்குவித்த உங்களுக்கு நன்றி நாரதர் அவர்களே!

Narathar
07-03-2010, 07:16 PM
ஏன் இந்தப் பரிகாசம்...
இது என்ன சோதனை...

பிரம்மச்சாரியத்தின் சிறப்பறியும்
பரிசோதனையை
இப்படி உடைத்துப் பார்க்கலாமா...

ஆரம்பித்து வைத்த அக்னிக்கு நன்றி :)

Narathar
07-03-2010, 07:25 PM
துறக்காத துறவி காணீர்!

.....தோய்கின்ற கீழ்மை காணீர்!

மறக்காத நடிப்பை இங்கே

.....மறைவினில் வழங்கக் காணீர்!

சிறக்காத புனைவில் புன்மைச்

.....சிறுமைசெய் கயமை காணீர்!

திறக்காதோ அறிவுக் கண்கள்

.....தீராதோ போலி ஏய்ப்பே!

நன்றி குணமதி தங்களது அழகிய கவிதைக்காக

அமரன்
07-03-2010, 09:54 PM
சுடச் சுடக் கவிதை வடிக்க நெருப்பு மூட்டிய நாரா..

படித்தேன் கவிதைகளை..

கண்டிலேன் கவிதைக்களை..

கவிஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினேன் நாரா..
அலங்கோலம்னதும் அமரன் ஓடி வந்துட்டார்னு உன்மையை உடைச்சுடாதீங்க நாரா:lachen001:

Narathar
08-03-2010, 08:29 AM
பரமானந்தத்தை மறந்து
பரத்தையானந்தத்தில்
நித்தம் திளைக்கும்
நித்தியானந்தம்.....

துறவியான பின்னும்
காமம் தொலைக்காது
காவியைக் களங்கப்படுத்தும்
காமுகானந்தம்....!!!தங்களின் கோபம் கவிதையில் தெரிகின்றது.........

வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்...

அது சரி நம்ம அமரன் கணக்கு வழக்குகளையெல்லாம் சீர் செய்து விட்டரா?

நாராயணா!!!!!

சிவா.ஜி
08-03-2010, 08:53 AM
கணக்கை சரி செஞ்சுட்டாரான்னு தெரியலையே....!!!

(மொத்தமா ஒரு தொகை ஏறினா தெரியும்....சின்னச் சின்ன*த் தொகை கண்ணுக்குத் தெரியுமா....நாராயணா....)

நாகரா
08-03-2010, 10:26 AM
இல்லறமாம் நல்லறத்தில்
ஒருவனுக்கு ஒருத்தியாய்
இருதயக் காதலின் கனியாய்
அர்த்தமுள்ள காம நிறைவு!
இருதயந் திறவாக்
கருமன வியாபாரி
பேருக்குத் துறவியாய்
ஊருக்கு உபதேசம்!
இருவிழி வசியத்தால் ஞானத்
திருவிழி பூட்டுந்
திருட்டுச் சாமியார்!
ஞான வாலைத் தாயவள் பாலை
மோனத் தவத்தே உண்ணாப் பாவி
காம வயப்பட்டே செய்யும் லீலை!
நித்யானந்த சிவத்தைத் திரித்தான்
ரஞ்சித சத்தியை தன் அவ காமத் தீயில் கருக்கினான்!
பொய்க்குரு அவலட்சணம் யாவருங் காண விரித்தாய்
மெய்க்குரு இலட்சணம் நின்னால் விரிக்கலாகுமோ?
(சன் டிவி நியூசுக்குச் சங்கடமான கேள்வி)
ஞானப் பெண்ணின் திரு உருவைக்
காமப் பண்டமாக்கிக் கூவிக் கூவி உம் பொருள் விற்கும்
லாப நோக்கே பிரதானமாகக் கொண்ட
நாசமாய்ப் போன வியாபாரப் பிசாசுகளே!
(அப்பேய் வாய் சிக்கிய நாராச ஊடகங்களே!)
தேக நிறுவனத்தில்
ஆவியாய் ஓடும் மேலாளன்
நேச இருதய மேசையில்
பேதபாவம் பாராமல்
ஆணும் பெண்ணுமாய்(அம்மையப்பனாய்) அமர்ந்துளான்!
உமது கான்கிரீட் பிளாஸ்லடிக் செயற்கைக் காட்டில்
லாப நோக்கப் பிரதான அவசரப் பிழைப்பில்
அகத்தே மேலாளன் அவனைக் காண
உமக்கு அவகாசமேது?
மன்னித்து மன்னித்து மன்னித்துச் சலித்த தயாளன் அவன்
சுத்த பூமியைத் திரிக்கும் உம் பித்தத்தைத் திருத்த
தண்டிக்க எழுந்தான்!
மனந் திரும்புங்கள்!
இன்றே இன்னே!
அவகாசமில்லை அறிவீர்!
மேலாளனின் அவசர அறிக்கை புரிவீர்!

(அனல் தெறிக்கும் வார்த்தைகள், எவர்க்கேனும் தவறாகப் பட்டால், என்னை மன்னிப்பீர்)

சிவா.ஜி
08-03-2010, 11:05 AM
இந்த அனல் தேவைதான் நாகரா அவர்களே. இப்படிப்பட்ட அனலில் வெந்து மடியட்டும் மூட நம்பிக்கைகளும்....கருமன காமத்துறவிகளும்.

மேலாளனைவிட தங்களை மேலானவனாய் நினைக்கும் லீலாவினோத சாமியார்களின் பொய் முகங்களைப் பொசுக்கட்டும்.

ஆதி
12-03-2010, 06:52 AM
சாமியாருடன் சரசமாடுவதால்
சஞ்சலம் தொலைந்து
சௌந்தர்யம் சேருமென்று
நம்பி இருக்கலாம்
அந்த நடிகை..

சிருங்காரம் பற்றி தெரியாதவர்களுக்கும்
சின்னப்பாடம் எடுத்துவிட்டதாய்
அந்த தொலைக்காட்சி
பெருமிதம் கொள்ளலாம்..

வார இதழிலும்.. நாளிதழிலும்..
வெளியான படங்களை
வெட்டி சிலர் தம் படுக்கையறையில்
ஒட்டி வைத்திருக்கலாம்..

சாமியார் ரூபத்தில்
சாமி பாலுறவு கொள்வதாய்
பக்தர்கள் கருத்திருத்தி இருக்கலாம்..

சரசமாடுவது சாமியாரென்பதால்
வாச்சாயன சூட்சமங்களில்
புதிய விதிகள் இணைக்கபடலாமென
பலர் எதிர்ப்பார்த்திருக்கவும் கூடும்..

சாமியார் கலவாடியது குற்றமென்றவர்கள்
சாமி யாரையும் கலவாடமாட்டேனென
சொல்லவில்லை என்பதை
கவனத்தில் கொள்ளவில்லை..

வெளியான வீடியோவின்
ஒளிபரப்பில் முழுமை இல்லையென்று
மௌன ஏக்கத்தோடு பலர்
வக்ர கோபப்பட்டிருக்கலாம்..

முற்றும் கடந்தவனுக்கு
முத்தம் கூட ஒரு காணிக்கைதானென
சாமியார் எதிர்காலத்தில் சத்தியம் செய்யலாம்..

காமத்தை கடந்தவன்
கலவி கொள்ளுதல்
காயத்துக்காக அல்ல
தேவத்துக்கென்று ஒரு
புத்தகமும் எழுதப்படலாம்..

வீடியோவை
வெளிட்டவர்கள்
எடுத்தவர்கள்
பார்த்தவர்கள் எல்லோரும்
தம் கலவி பொழுதில்
தங்களையும் ஒரு கேமிரா
படமெடுப்பதாய் உணரலாம்..

நீலப்படங்களை துல்லியமாக
நீளம் குறைக்காமல்
எந்த தொலைக்காட்சியும் திரையிட
இந்த வீடியோ உபயம் செய்யலாம்..

பாலுறவை காட்சிபடுத்தல்
பண்பாட்டுக்கு ஒவ்வாதது
எனும் வாதத்தை
தகர்த்துவிட்டதாய்
அந்த தொலைக்காட்சி எக்காளமிடலாம்..

இந்த வீடியோ
இன்ன பிற
எத்தனையோவையும் சாத்திருக்கலாம்..

அமரன்
14-03-2010, 10:08 PM
கணக்கை சரி செஞ்சுட்டாரான்னு தெரியலையே....!!!

(மொத்தமா ஒரு தொகை ஏறினா தெரியும்....சின்னச் சின்ன*த் தொகை கண்ணுக்குத் தெரியுமா....நாராயணா....)

கோலத்துக்கு மட்டும்தான் பட்டுவாடா செய்தேன் பாஸ்.

பா.ராஜேஷ்
15-03-2010, 01:27 PM
உடுத்தி இருப்பது காவி
உண்மையில் மிக பாவி
உபதேசம் ஊருக்கு
உற்சாகம் தனக்கு

பணம் ஒன்றை எண்ணியே
பரமானந்தத்தை சுற்றியே
பக்தை என்று காட்டியே
பாதகம் செய்யும் நடிகை

அசிங்கம் என்று தெரிந்தும்
அம்பலம் செய்யும் நோக்கில்
அலை பரப்பும் அவலம்
அதை ரசிக்கும் கூட்டம்

இதற்கெல்லாம் மாற்றுத்தான் என்ன?
சிந்திப்பீர் மக்களே !!

Narathar
16-03-2010, 10:11 AM
கோலத்துக்கு மட்டும்தான் பட்டுவாடா செய்தேன் பாஸ்.

இப்படி (அலங்)கோலமான படங்கள் போட்டால் தான் நம்ம அமரர் இப்பக்கம் வருவார் போல..........

ம்ஹூம்

நாராயணா!!!!! :traurig001:

Narathar
17-03-2010, 01:18 PM
துறக்காத துறவி காணீர்!
.....தோய்கின்ற கீழ்மை காணீர்!

மறக்காத நடிப்பை இங்கே

.....மறைவினில் வழங்கக் காணீர்!
சிறக்காத புனைவில் புன்மைச்

.....சிறுமைசெய் கயமை காணீர்!

திறக்காதோ அறிவுக் கண்கள்

.....தீராதோ போலி ஏய்ப்பே!

மிக அருமை குணமதி..............

தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்....

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

Narathar
17-03-2010, 01:21 PM
நித்தியானந்தம்.....

காமுகானந்தம்....!!!

இதுக்குத்தான் சொல்றது அதிகமா டொப் 10 பார்க்காதீர்கள் என்று!!!!! ;) :lachen001:

சிவா அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

தொடருங்கள்

Narathar
17-03-2010, 01:24 PM
தணிக்கைச் சான்றிதழ் பார்த்து
தவிர்ப்பன தவிர்த்துக்
குடும்ப சகிதமாய்ப்
படம் பார்க்கப் போனது
அந்தக்காலம்.

தணிக்கை சிறிதுமின்றி
சின்னஞ் சிறுசுகள் முன்னே
நீலப்படம் அரங்கேறுவது
இந்தக் காலம்.

ஊடகத்துறையின் தர்மம்
பறக்குது காற்றிலே!பெற்றோர் நெஞ்சமோ
கொதிக்குது வீட்டிலே!

உடன்படுகின்றேன்.........

உங்கள் கோபம் கவிதையில் தெரிகின்றது

இந்தச்செய்தியை ஊடகங்கள் "கௌரவமாக" கையாண்டிருக்கலாம் என்பது எனது கருத்தும் கூட!

Narathar
17-03-2010, 01:26 PM
அந்த காலம்- ராஜாக்களுக்கு பல மனைவிகள்
இந்த் காலம்- சாமியாருக்கு பல பெண்கள்
வரும் காலம்?----------

LOGIC படி யோசித்தால் தப்பாகத்தான் வருகின்றது!

நாராயணா!!!

கலி முத்திடுத்து

Narathar
20-03-2010, 06:59 PM
இல்லறமாம் நல்லறத்தில்
ஒருவனுக்கு ஒருத்தியாய்.......................

(அனல் தெறிக்கும் வார்த்தைகள், எவர்க்கேனும் தவறாகப் பட்டால், என்னை மன்னிப்பீர்)

உண்மை .... ஆனால் சிவா சொன்னதுபோல இந்த அனல் கோபம் தேவைதான்,

இதுவுய்ம் போதாதோ என்று நினைக்கின்றேன்

நன்றி உங்கள் கவிதைக்கு

Narathar
20-03-2010, 07:03 PM
நம்பி இருக்கலாம்

பெருமிதம் கொள்ளலாம்..


ஒட்டி வைத்திருக்கலாம்..

கருத்திருத்தி இருக்கலாம்..

விதிகள் இணைக்கபடலாமென

வக்ர கோபப்பட்டிருக்கலாம்..

சத்தியம் செய்யலாம்..

புத்தகமும் எழுதப்படலாம்..

படமெடுப்பதாய் உணரலாம்..

இந்த வீடியோ உபயம் செய்யலாம்..

தொலைக்காட்சி எக்காளமிடலாம்..

எத்தனையோவையும் சாத்திருக்கலாம்..

நீர் பேசாமல் அரசியல் வாதியாகியிருக்கலாம்................

எத்தனை "லாம்" கள்

அருமையான வரிகள்

இப்படியான படங்களைப்போட்டால்தான் சிலர் அழகாக கவிதை எழுதுகின்றார்கள் ;) நாராயணா!!!!!!

நன்றி ஆதன் கவிதைக்கு

Narathar
20-03-2010, 07:05 PM
உடுத்தி இருப்பது காவி
உண்மையில் மிக பாவி

அலை பரப்பும் அவலம்
அதை ரசிக்கும் கூட்டம்

இதற்கெல்லாம் மாற்றுத்தான் என்ன?
சிந்திப்பீர் மக்களே !!

நல்ல கேள்வி

மக்கள் சிந்திப்பார்களா??????

சிந்திக்கவேண்டும்.

நன்றி உங்கள் கவிதைக்கு...............

Narathar
20-03-2010, 07:09 PM
காலத்தின் (அலங்)கோலத்துக்கு கவிதை எழுதிய அனைவருக்கும் நன்றி........

உங்களுக்குரிய ஈ :D பணம் அமரன் அவர்களால் வழங்கப்படும் ......

இனி அடுத்த நிழலுக்கு செல்வஓம்.................

யாராவது நிழல் தரலாமே?

தராதபட்சத்தில் நாளை நான் அடுத்த நிழல் தருகின்றேன்

ஆனால் எமது உறுப்பினர்கள் யாராவது தந்தால் மிக்க மகிழ்ச்சி

அமரன்
20-03-2010, 10:40 PM
காலத்தின் கோலத்துக்கு காசு கொடுத்தாச்சு நாரா.

கிடைக்காதோர் சொல்லுங்க..

அப்படியே இந்த நிழலுக்கு உயிரும் கொடுங்க.


http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_seven1.jpg

சிவா.ஜி
21-03-2010, 09:25 AM
ஒட்டி வைத்த வட்ட நிலா
சுற்றிப் பறக்கும் நீலப்புறா
கட்டி வைத்த வண்ண மாளிகை
எட்டு வைத்து நடக்கும் சின்னக் காரிகை

ஒளி உன்னால் விளைந்ததா
ஒளியால் நீ விளைந்தாயா...
இறைச் சிற்பி உன்னை
உளியால் உருவாக்கினானா...தன்
விழியால் உருவாக்கினானா...?

சிவா.ஜி
21-03-2010, 09:40 AM
கெண்டைக்காலை மட்டுமே
கொஞ்சம் காட்டினாய்...
இதற்கே இத்தனை பிரகாசமா..!!

சாளர வெளிச்சத்துக்கு
உன் பாவாடைக் கால்கள்
சந்திர வெளிச்சத்துக்கு
உன் சூரிய முகமா...?

யாரடிப் பெண்ணே நீ....
என்னையும் பாரடிப் பெண்ணே நீ
ஓரடிப் பின் வைத்து
சேரடி என் மடியில்....
சட்டென்று திரும்பாதே
அதீத பிரகாச*த்தில் நான்
அந்தகனாகிவிடுவேன்
விழி மூடித் தயாராகிறேன்
உன் முகம் மூடி...
விரலிடுக்கு வழியே
மெல்ல வழியவிடு ஒளியை....!!

பா.ராஜேஷ்
21-03-2010, 09:56 AM
உன்னால் நிலவு
மிகவும் அவதியுறுகிறது
மேகத்தின் பின்னே
பாவம் , எத்தனை நேரம் ஒளிந்திருக்கும்!
போதுமடி பெண்ணே! திரும்பிவிடு.

நட்சத்திரங்களுக்கும் கண் கூசுகின்றன போலும்
பல நட்ச்சத்திரங்களை காணவில்லையே!
உன்னால் விண்ணில் விபரீதம்,
போதுமடி பெண்ணே! திரும்பிவிடு.

பா.ராஜேஷ்
21-03-2010, 09:57 AM
அமரன் அவரகளே! எனக்கு ஏதும் கிடைக்கவில்லையே!!?? ;)

Narathar
21-03-2010, 10:12 AM
காலத்தின் கோலத்துக்கு காசு கொடுத்தாச்சு நாரா.

கிடைக்காதோர் சொல்லுங்க..

அப்படியே இந்த நிழலுக்கு உயிரும் கொடுங்க.


:D ஈ பணம் தந்து நிழலும் தந்த அமரனுக்கு நன்றி........

எங்கே மன்ற சொந்தங்களே இந்த நிழலுக்கு உங்கள் கவிதை வரிகள் உயிரூட்டட்டும்

ஆதி
21-03-2010, 10:16 AM
எத்தடுப்புமில்லை
என்றாலும்
விடுவித்து அழைத்துச் செல்ல இயவில்லை
வரைப்படத்தில் இருந்து இவளை..

சிவா.ஜி
21-03-2010, 12:03 PM
ஆமாம்....மின் பண வள்ளலே.....அள்ளித்தரும் அமரனே(ரே வேண்டாம்....ஹி...ஹி..) நீவீர் வாழ்க. இன்னும் அள்ளி வழங்குக...!!!

நன்றி....நன்றி....நன்றி....

Narathar
21-03-2010, 02:59 PM
ஒட்டி வைத்த வட்ட நிலா
சுற்றிப் பறக்கும் நீலப்புறா............................
.............உளியால் உருவாக்கினானா...தன்
விழியால் உருவாக்கினானா...?கெண்டைக்காலை மட்டுமே
கொஞ்சம் காட்டினாய்...
இதற்கே இத்தனை பிரகாசமா..!!.........
.....................
உன் முகம் மூடி...
விரலிடுக்கு வழியே
மெல்ல வழியவிடு ஒளியை....!!

சிவா உண்மையாகச்சொல்கின்றேன்...................
ஜனரஞ்சகம் என்பார்களே அது உங்கள் கவிதையில் கொட்டிக்கிடக்கிறது.............
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

எப்போதாவது "அழிக்க முடியாத" ;) வசதி வந்து நான் ஒரு படம் எடுத்தால் அந்தப்படத்தில் நீங்கள் தான் பாட்டெழுதுவீர்கள்..... நாராயணா!!!!

வாழ்த்துக்கள்

குணமதி
21-03-2010, 05:40 PM
புறாவின் மயக்கம்!

அழகுச் சிலையே அருங்கலையே!

..........அங்கே என்ன பார்க்கின்றாய்?

பழமை மாறா முழுமதியில்

..........பறக்கும் புறவுப் புதுமையையா?

வழமை மதியின் ஒளியோடுன்

..........வயங்கல் சேர்ந்தே கதிரொளியை

வழங்க மயங்கிப் பகலென்றே

..........வந்து பறக்கும் புறவினமே!

கீதம்
22-03-2010, 12:06 AM
ம்ஹும்!
உன்னோடு பேசமாட்டேன், போ!
என்னை நிலவுக்கு ஒப்பிட்டாயே,
பார்! அது கோபத்தில்
முகம் கறுத்து நிற்பதை!

படபடக்கும் என் நீலவிழிகளுக்கு
பறவையை உவமை சொன்னாயே!
பார்! அவை
பரிதவித்துப் பறந்துபோவதை!

அகிலின் வாசம்
என் அழகிய கூந்தலில் என்றாய்!
அதைக் கேட்டதால்தானோ
அவிந்துபோனது அதுவும்?

என் பாத அழகை
வர்ணித்தநொடி
பால்கனியும் பனியுறைந்துபோயிற்று,
கவனித்தாயா?

போதும், வேறேதும் சொல்லாதே!
நான் படியிறங்கத் தயாராகிவிட்டேன்!

govindh
22-03-2010, 10:14 AM
செல்லப் பெண்ணே...!

*இயற்கை...
உனைக் கண்டு வியக்க -
அதைப் புறந்தள்ளி..
ஒய்யார நடை பயிலும்..
சிங்காரச் சிலை அழகே..
அலங்கார உயிரோவியமே..

*உன் அழகை வர்ணிக்கும்...
கவிமாலை நான் தொடுக்க -
செயற்கையாய்..
வார்த்தைப் பூக்களைத் தேட முனைந்துள்ளேன்..

*உனக்கேத் தெரியாமல்..
உன் அகவாசல் வழியாக..
உன் முகவாசல் தரிசிக்க -
உன் உப்பரிகையில் ஒளிந்துள்ளேன்...!

*உன் நிஜத்தை...நிழலாக்கி -
என் மனம் பதிக்க எத்தனித்துள்ளேன்..!

*நீ தேடும் கள்வன்...
யாரென்று யாருக்கும் தெரியாது...
உனக்கும்..எனக்கும் தவிர..!

*திரும்பிப் பாரடி -
என் செல்லப் பெண்ணே...!

கலையரசி
22-03-2010, 01:54 PM
வான்மீதில் ஓடிப் பிடித்து விளையாட
வெண்ணிலாவைத் தேடிய
வெண்முகில்கள் புவி மீது நின்ற
வெள்ளி நிலவைக் கண்டவுடன்
தரையிறங்க எத்தனித்தன;
துள்ளும் அவளது கயல்விழிகளைக் கண்டு
கண் சிமிட்ட மறந்தன விண்மீன்கள்;
சுடரொளி வீசும் அவள் மதிவதனம் கண்டபின்
தன்னை யாரும் சட்டை செய்யாததை எண்ணி
பொறாமையில் கறுத்தது நிலவின் முகம்

Narathar
22-03-2010, 02:51 PM
உன்னால் நிலவு
மிகவும் அவதியுறுகிறது
மேகத்தின் பின்னே
பாவம் , எத்தனை நேரம் ஒளிந்திருக்கும்!
போதுமடி பெண்ணே! திரும்பிவிடு.

நட்சத்திரங்களுக்கும் கண் கூசுகின்றன போலும்
பல நட்ச்சத்திரங்களை காணவில்லையே!
உன்னால் விண்ணில் விபரீதம்,
போதுமடி பெண்ணே! திரும்பிவிடு.

நம்ம சிவாவைப்போல உங்களுக்கும் சரளமாக கவிதை வருகின்றதே?

ஓ சிவாவின் நண்பரா நீங்கள்? நைஜீரியாவில் இருக்கின்றீர்களே?? ஒரு வேளை நைஜீரிய அழகிகளை பார்த்து கவிதை எழுத கற்றுக்கொண்டீர்களா???

பாராட்டுக்கள்.............. தொடர்ந்து எழுதுங்கள்

பா.ராஜேஷ்
22-03-2010, 07:40 PM
நம்ம சிவாவைப்போல உங்களுக்கும் சரளமாக கவிதை வருகின்றதே?

ஓ சிவாவின் நண்பரா நீங்கள்? நைஜீரியாவில் இருக்கின்றீர்களே?? ஒரு வேளை நைஜீரிய அழகிகளை பார்த்து கவிதை எழுத கற்றுக்கொண்டீர்களா???

பாராட்டுக்கள்.............. தொடர்ந்து எழுதுங்கள்

அச்சோ நாராயணா, நாராயணா!! என்ன நாரதரே, இப்படி சொல்லிவிட்டீர்கள்! நான் மன்றம் வந்த பின்தான் கொஞ்சமாய் கிறுக்க ஆரம்பித்தேன். நைஜீரிய அழகிகளை கண்டால் கவிதை வராது, இருப்பதும் ஓடி விடும்; அந்த கொடுமையை எல்லாம் இங்கே சொல்ல முடியாது, மன்னிக்கவும்.

சிவா அண்ணா நைஜீரியா வருவதற்கு முன்பு இருந்தே நான் இங்குதான் இருக்கிறேன். அவரை மன்றம் மூலமாகத்தான் தெரியும். அலை பேசியில் அவ்வபோது பேசுவதுடன் சரி...

அமரன்
22-03-2010, 09:46 PM
அமரன் அவரகளே! எனக்கு ஏதும் கிடைக்கவில்லையே!!?? ;)

அனுப்பி இருக்கு.

வந்துசேரத் தாமதமாகலாம்.:)

அமரன்
22-03-2010, 09:48 PM
ஒட்டி வைத்த வட்ட நிலா
சுற்றிப் பறக்கும் நீலப்புறா
கட்டி வைத்த வண்ண மாளிகை
எட்டு வைத்து நடக்கும் சின்னக் காரிகை

ஒளி உன்னால் விளைந்ததா
ஒளியால் நீ விளைந்தாயா...
இறைச் சிற்பி உன்னை
உளியால் உருவாக்கினானா...தன்
விழியால் உருவாக்கினானா...?


கெண்டைக்காலை மட்டுமே
கொஞ்சம் காட்டினாய்...
இதற்கே இத்தனை பிரகாசமா..!!

சாளர வெளிச்சத்துக்கு
உன் பாவாடைக் கால்கள்
சந்திர வெளிச்சத்துக்கு
உன் சூரிய முகமா...?

யாரடிப் பெண்ணே நீ....
என்னையும் பாரடிப் பெண்ணே நீ
ஓரடிப் பின் வைத்து
சேரடி என் மடியில்....
சட்டென்று திரும்பாதே
அதீத பிரகாச*த்தில் நான்
அந்தகனாகிவிடுவேன்
விழி மூடித் தயாராகிறேன்
உன் முகம் மூடி...
விரலிடுக்கு வழியே
மெல்ல வழியவிடு ஒளியை....!!


சந்தம் கொஞ்சும்.. சிந்தனை விஞ்சும்.. வாசகன் கருத்தோ துஞ்சும். அஞ்சுகம் கண்டேன் உங்கள் கவிமொழியில்.

பாராட்டுகள் சிவா.ஜி

சிவா.ஜி
23-03-2010, 05:44 AM
ரொம்ப நன்றி பாஸ். எல்லாம் மன்றப்பள்ளியில் உங்களைப் போன்ற ஆசான்களிடம் கற்றுக்கொள்வதுதான்....அவ்வப்போது வான்கோழியாய் ஆடி மகிழ்கிறேன்.

ஆதி
23-03-2010, 05:56 AM
இந்த நிலா
இந்த வானம்
இந்த விண்மீன்கள்
இந்த பறவைகள்
இந்தமரம்
யாவும்
உன் முன்னழகை கண்டு
ஏமாந்திருக்கவும் கூடும்
என்றாலும்
மறைக்கப்பட்ட யாவும்
மேன்மையானவை
அழகானவை எனும் போது
உன் முகமெனக்கு தெரியாத வரை
நீ ஒரு தேவதைதான்..

சிவா.ஜி
23-03-2010, 06:04 AM
ரொம்பச் சரி ஆதன்....முகம் காணாதவரை தேவதைதான்....

(ஹி...ஹி...எந்த உள்குத்தும் இல்லீங்கோ...)

Narathar
23-03-2010, 06:24 PM
சிவா அண்ணா நைஜீரியா வருவதற்கு முன்பு இருந்தே நான் இங்குதான் இருக்கிறேன். அவரை மன்றம் மூலமாகத்தான் தெரியும். அலை பேசியில் அவ்வபோது பேசுவதுடன் சரி...

அவர் கவிதையாகவே பேசுவாரோ???? ;)

பா.ராஜேஷ்
23-03-2010, 06:39 PM
அவர் கவிதையாகவே பேசுவாரோ???? ;)

இருந்தாலும் நாரதருக்கு நையாண்டி கொஞ்சம் ஜாஸ்திதான் !! :D

Narathar
28-03-2010, 05:23 AM
எத்தடுப்புமில்லை
என்றாலும்
விடுவித்து அழைத்துச் செல்ல இயவில்லை
வரைப்படத்தில் இருந்து இவளை..

நல்ல கவிதை ஆதன்!

வாழ்த்துக்கள்.

தொடர்ந்து முயற்சியுங்கள்
வரைபடதில் உள்ளவள்
உங்கள் வாசல் கதவை தட்டும் காலம் வரும்

பா.சங்கீதா
28-03-2010, 09:51 AM
பெண்ணே நீ என்று நினைத்துதான்
வண்ணத்து பூச்சி நிலவை சுற்றுகிறதா?
நீ பூவென்று நினைத்துதான் அவை
உன்னை தேடி வருகிறதா?
நீ வெட்கம் என்று தான் திரும்பி நிற்கிறாயா?
உன்முகத்தை காண விழைகிறது
என் கண்கள்...
நீ திரும்பும் வரை இங்கயே காத்திருப்பேன்
உன் அருகில் நிற்கும் தூண் போல........

சிவா.ஜி
01-04-2010, 12:04 PM
http://i194.photobucket.com/albums/z250/sivag/Mom1.jpg

இதோ இன்னொரு புதிய நிழல். கவிகளின் கைவண்ணம் காட்ட....

சிவா.ஜி
03-04-2010, 04:34 PM
யாருமே இந்தப்பக்கம் வரைலையா.....

சரி நானே ஆரம்பித்து வைக்கிறேன்...


நான் பெற்றவையெல்லாம்
எனக்கு அற்றவையானபின்
எனது உற்றவையெல்லாம்
அவரை விற்றவரானபின்....
என் அன்னையுள்ளம் சிரிக்க
உன் அன்புப்புன்னகை விரிக்க
பிள்ளையாய் வந்தப் புலிப்பயலே
வெள்ளையாய் சிரிக்கும் சிறுப்பயலே
என் தாய்மை வறட்சிக்கு
தண்ணீர்ப் பாய்ச்சிய நந்நீர் வயலே
மனம் பூரிக்க வைக்குது உந்தன் செயலே....!!!

ஜனகன்
03-04-2010, 05:50 PM
நான் பெற்றவையெல்லாம்
எனக்கு அற்றவையானபின்
எனது உற்றவையெல்லாம்
அவரை விற்றவரானபின்....[/B]

கருத்துள்ள வரிகள்
பொருத்தமான அமைப்பு.....
நன்றாக உள்ளது கவிதை, வாழ்த்துக்கள் சிவா:icon_b:

கீதம்
03-04-2010, 09:53 PM
பெற்றதைப் பறிகொடுத்து
பெருந்துன்பத்துக்கு ஆளாகி
பித்தெனத் திரிந்தவேளை
பேதையென் மடிசேர்ந்தாய் மகளே!

நீயும் ஒருநாள், உன் தாய்போல
உணவின் பொருட்டோ, அன்றி
உன் குணத்தின் பொருட்டோ
என்னைக்கொல்லவும் துணியக்கூடும்!

அயினும் கண்ணே, அதுபற்றி
எனக்கு கவலையில்லை!

இன்றைய என் தாய்மைக்கு
இறவாவரம் தந்துவிட்டாய்!
இன்னல்தனைத் தீர்த்து
இன்பக்கண்ணீர் சொரியச்செய்தாய்!

வேதனையில் விம்மிநிற்கும்
என் மார்பகங்களூடே
வழிகின்ற அமுதம் பருகி
என் வலியைப் போக்குகிறாய்!

இதற்குக் கைம்மாறாய்
தருவேனடி என் உயிரை
உனக்குக் காணிக்கையாய்!

அமரன்
03-04-2010, 09:58 PM
சிவா கொடுத்த படமும்
கொடுத்துத் தொடங்கிய கவிதை வண்ணமும்
தொடர்ந்து கீதம் தீட்டிய நிறமும்..
ஒன்றை ஒன்று விஞ்சத் துடிக்கின்றன.

குணமதி
04-04-2010, 01:54 AM
பெற்றதைப் பறிகொடுத்து
பெருந்துன்பத்துக்கு ஆளாகி
பித்தெனத் திரிந்தவேளை...

கலங்கச் செய்யும் நினைவுகள்.

சிவா.ஜி
04-04-2010, 05:20 AM
நன்றி ஜனகன்.

நன்றி பாஸ்.

கீதம் அவர்களின் கவிதையினுள் இழையோடும் தாய்மை சோகம் மனதை அசைக்கிறது.

கலையரசி
05-04-2010, 01:54 PM
கள்ளமிலா மழலைச் சிரிப்பில்
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட
என் செல்லக் குட்டியே!
நீ புலிக்குட்டியாயிருப்பினும்
என் மார்புதனில் ஏந்தி
உனைக் கொஞ்சுகின்றேன்
நாடு, மதம், இனங் கடந்த
அற்புத உணர்வன்றோ தாய்மை!

குணமதி
05-04-2010, 05:41 PM
புலிக்குட்டி கவல வேண்டா!


புலிக்குட்டி நீயெதற்கும் கவல வேண்டா!

..........புன்னகைப்பாய் போதும்நீ பட்ட துன்பம்!

கலிக்கின்ற இவ்வுலகில் கனிவு காட்ட

..........கலங்காதே நானுள்ளேன் கரையா மான

வலிமிக்கார் உன்முன்னோர் வாழ்வில் வீர

..........வரலாற்றை நீயெழுத வளர்க மண்ணில்

பொலிமிக்க நல்வாழ்வும் புகழும் சேர

..........பொதுமைநிலை நாட்டிடுவாய், புதுக்கு வாயே!

ஜனகன்
05-04-2010, 06:12 PM
படத்துக்கேற்ற அருமையான கவிதைகள்.
வாழ்த்துக்கள் கலையரசி, குணமதி.

பா.சங்கீதா
18-04-2010, 12:37 PM
புதிய நிழல் எதுவும் இல்லையா? :icon_hmm:

பா.சங்கீதா
26-05-2010, 01:54 PM
உங்களுக்காக! புதிய நிழல்................

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/1_11.jpg

சிவா.ஜி
26-05-2010, 03:14 PM
கைகூப்பிக் கதறுகிறாள் கானகத்தாய், தன்
தருப்பிள்ளைகளின்
உருவழித்து வீழ்த்தியதில்..
உருவான வெண்குருதி
வீழ்ச்சியாய் வீழ்கிறதே....
கண்டும் மனம் இரங்காது...
கையின் கோடரி இறங்காது
இன்னும் வெட்டுவீரா
மண்ணின் மாந்தரே.....
பின்னும் வரும் உன் சந்ததி
மண்ணில் வாழ சம்மதி...
எறிந்துவிடுக் கோடரியை
நிறுத்திவிடு மரக்குருதியை...!!!

அக்னி
27-05-2010, 06:38 AM
நீராடைதானோ இயற்கை இவளாடை...

தலைகீழாய்க் கரம்கூப்பி வேண்டுவது
அவளுக்கு வரமல்ல..,
நமக்கு வாழ்க்கை...

பசுமை காப்போம்.
இயற்கை மானம் காப்போம்.
நம்மைக் காப்போம்.

Narathar
27-05-2010, 04:06 PM
நன்றிகள் கோடி சங்கீதா................
உங்களின் நிழலுக்கு...
கவி வரிகளை தூண்டும் நிழல் இது
எங்கே நம்மவர்கள் கவிதை மழை பொழியட்டும்

சிவா.ஜி
27-05-2010, 04:15 PM
வாங்க திரியின் நாயகரே....நாரதர் எங்க ரொம்ப நாளா அளைக் காணோமே...திரிலோக சஞ்சாரத்துக்குப் போய்விட்டீரோ....நலமா?

அக்னி
27-05-2010, 05:04 PM
கெண்டைக்காலை மட்டுமே
கொஞ்சம் காட்டினாய்...
இதற்கே இத்தனை பிரகாசமா..!!


அபாரமான வர்ணனை...
அபாயமான ஓர் நிலையில் வடிக்கப்பட்ட கவிதை.
சற்றே சறுக்கினாலும் ஆபாசக் கவிதையாகிவிடும்.
அழகாகக் கையாண்டு, ரசிக்கவைத்துவிட்டீர்கள் சிவா.ஜி...
பாராட்டு...

இந்தப் படத்தைப் பார்த்து விட்ட ஜொள்ளை அண்ணி பார்த்தால்... பார்க்க வைத்தால்...

பாலகன்
27-05-2010, 05:09 PM
கீழே குளிக்கும் பிள்ளைகளை
தலை தேய்க்கும் இயற்கை அன்னை
கையில் இருக்கும் சோப்பின்
பெயர் என்னவோ?

பா.சங்கீதா
28-05-2010, 01:30 PM
நன்றிகள் கோடி சங்கீதா................
உங்களின் நிழலுக்கு...
கவி வரிகளை தூண்டும் நிழல் இது
எங்கே நம்மவர்கள் கவிதை மழை பொழியட்டும்

இதற்கெல்லாம் எதற்கு அண்ணா நன்றி ????
ஆமாம்,எங்கே உங்கள காணவே இல்லையே?:smilie_abcfra:

சிவா.ஜி
28-05-2010, 03:30 PM
நன்றி அக்னி. அண்ணிக்கு என்னிக்கு காட்டினாலும்.....அன்னிக்கு எனக்கு இருக்கு ஆப்பு...!!! எனவே.....அக்னி....அடக்கி வாசிக்கும்படி...கேட்டுக்கொள்கிறேன்.

குணமதி
29-05-2010, 02:46 AM
பதைபதைக்கக் குற்றுயிராய்ப் பாயும்நீர் விட்டார்!


கைகூப்பித் தொழுதுமுனைக் கனிவின்றி வீழ்த்திக்

காட்டாற்று வெள்ளத்தில் கடுகிடச்செய் தாரே!

பொய்க்கூற்று அன்பருளர் புரைகாணா நீரைப்

பொன்விளையும் நன்னிலத்தை பூங்காற்றை எல்லாம்

மைகூர்ந்த நஞ்சாக்கி மாசுறவே செய்தார்

மகிழ்வூட்டும் நல்லியற்கை மாத்தாயே! உன்றன்

பைக்கலத்தின் நல்லமுதை பாழும்நஞ் சாக்கிப்

பதைபதைக்கக் குற்றுயுராய்ப் பாயும்நீர் விட்டார்!

சிவா.ஜி
29-05-2010, 12:46 PM
அழகுதமிழில் அருமையானக் கவிதை.

வாழ்த்துக்கள் குணமதி.

(தொழுதுமுனை என்பது மொழுதுமுனை என இருக்கிறது....மாற்றிவிடுங்கள்)

குணமதி
29-05-2010, 05:20 PM
பாராட்டுக்கும் தட்டச்சுப்பிழை சுட்டியதற்கும் நன்றி சிவா.

திருத்தியிருக்கிறேன்.

Narathar
30-05-2010, 07:08 PM
வாங்க திரியின் நாயகரே....நாரதர் எங்க ரொம்ப நாளா அளைக் காணோமே...திரிலோக சஞ்சாரத்துக்குப் போய்விட்டீரோ....நலமா?

நலமாக இருக்கின்றேன்............. :)
ஆனால் இந்தப்பக்கம் தான் அடிக்கடி வரமுடியாமல் போயிற்று மன்னிக்கவும்.

பா.சங்கீதா
19-06-2010, 09:48 AM
இதோ உங்களுக்காக அடுத்த நிழல்......

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/1_gardenbaby.jpg

சிவா.ஜி
19-06-2010, 10:17 AM
படம் ரொம்ப நல்லாருக்கும்மா சங்கீதா. இன்னும் கொஞ்ச நேரத்துல வரிகளோட வரேன். பகிர்வுக்கு நன்றிம்மா.

சிவா.ஜி
20-06-2010, 09:38 AM
வீடு வீசியெறிந்தாலும்
கூடு குடியமர்த்திய
தேவதைக் கரங்கள்...
கலக்கம் வேண்டாம் கண்ணா
வளர்ந்ததும் பறக்க
சிறகுகள் உள்ளது...
வாழ்ந்து காட்டு....!!!

அமரன்
20-06-2010, 12:14 PM
தீபமேற்றும் வரிகள் சிவா..

கல்லுக்குள் ஈரம்..

கசிந்தது
எந்தன் விழியோரம்..

கலை நயமிக்க கல்லில்
எழுத்துப் போல் நீ..

கொலை பயம் மிக்க கல்லில்
கழுத்தறுந்து எந்தேசக் குழந்தை..

குணமதி
21-06-2010, 12:48 PM
சற்றுமிதை எண்ணாரோ?


பெற்றது பெண்ணென்றால் பெற்றவரே நஞ்சூட்டும்

குற்ற உலகென்று கோவித்தோ - முற்றழகே

கற்றச்சன் செய்த கவின்குழவி யாகிவிட்டாய்

சற்றுமிதை எண்ணாரோ சார்ந்து!

சிவா.ஜி
21-06-2010, 03:40 PM
அருமையான வரிகள் அமரன். எழுத்துபோல் நீ....கழுத்தறுந்தக் குழந்தை...மிக அருமை.

பா.சங்கீதா
26-06-2010, 05:53 AM
இதோ உங்களுக்காக அடுத்த நிழல்......

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/2_ArtMotherNature.jpg

பாலகன்
26-06-2010, 11:03 AM
இயற்கையின் மகளோ
இவள் மலர் தலையை
கூந்தலாக பெற்றவளோ

பேர்ங்கப்பா போன கவிதையை கூட யாரும் கண்டுக்கல :(

இன்பா
26-06-2010, 11:15 AM
மலர்ச் செண்டாய் இருப்பதும்
எரிச் செண்டாய் ஆவதும்
உன் கையில்...

சொல் அணுவா? அன்பா?

----

புவி வெப்பமயமாதை பின்னனியாக வைத்து கிறிக்கினேன்... :D

குணமதி
26-06-2010, 03:57 PM
இயற்கைப் பேரழகே!
இனி,
கொஞ்சம் கொஞ்சமாய்
இந்த எழிலும் எடுப்பும்
இழக்கப் போவதை நினைத்தால்
வெம்மூச்சில் வேகுமெம்
நெஞ்சம்!

பாலகன்
26-06-2010, 04:16 PM
மலர்ச் செண்டாய் இருப்பதும்
எரிச் செண்டாய் ஆவதும்
உன் கையில்...

சொல் அணுவா? அன்பா?

----

புவி வெப்பமயமாதை பின்னனியாக வைத்து கிறிக்கினேன்... :D

ரொம்வே நல்லாயிருக்கு மொட்டை பையா!!
மலர்களை வைத்து சென்ட் தயாரிப்பதை சொல்லாமல் சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

பாராட்டுகள்


இயற்கைப் பேரழகே!
இனி,
கொஞ்சம் கொஞ்சமாய்
இந்த எழிலும் எடுப்பும்
இழக்கப் போவதை நினைத்தால்
வெம்மூச்சில் வேகுமெம்
நெஞ்சம்!

உங்கள் ஆதங்கம் ஞாயமானது தான். இப்ப எல்லாம் கால் காணி கிடைச்சாலே ப்ளாட் போட்டு வித்துடுறாங்க குணமதி அக்கா :D

govindh
27-06-2010, 12:19 AM
பூக்களைச் சூடிக்கொண்டு...
புன்முறுவல் பூத்த வண்ணம் ...
ஒரு பூம்பாவை...!

செயற்கை தூரிகைகளை
ஏந்திக் கொண்டு...
இன்முகம் காட்டிய வண்ணம்
ஓர் இயற்கை மகள்...!

இயற்கையை நேசி....
இனிய காற்றை சுவாசி...!
எனச் சொல்லிய வண்ணம்...
இந்த நிழல் ஓவியம்...!

kulirthazhal
27-06-2010, 04:03 AM
நீல நிறம்,
ஜனனம் தந்த ஆழி,
பயணம் தந்த
நதிகள்,
வழியை தொலைத்த
வானம்,
வாலிபம் தொலைத்த
விழிகள்,

இது
மலர்வாசம்
ஒளிவீச
மயக்கும் விழிகளோடு
விஷத்தை
தெளிக்கும்
நீல நிறம்....

கனவுகளே
ஒளிந்துகொள்ளுங்கள்..
கற்பனைகள்
இழுக்ககூடும்...

-குளிர்தழல்

சிவா.ஜி
29-06-2010, 03:40 PM
ஓஹோ....நீதான் நிலமகளோ
ஏதேது...உன் மடியிலிருக்கும்
அத்தனையையும் ஆபரணங்களாக்கி
அணிந்துகொண்டிருக்கிறாய் போல....
உன்னில் பிறந்து உன்னில் வாழும்
உயிரினங்களெல்லாம்
ஆனந்தமாய் திரிந்து கொண்டிருப்பதாய்
ஆசுவாசமாயிருந்துவிடாதே....
ஓரத்தில் ஒரு ஓநாய்....
மனிதப் போர்வையில் பேயாய்
உன்னை உருக்குலைக்க எத்தனிக்கிறான்
எச்சரிக்கையாய் இரு.....!!!
மறுமுறை உன்னைக் காணும்போது...
மலர்களும், மரங்களும்,
நதிகளும், அன்னங்களும்
விலங்குகளும், வண்ணங்களும்
எதுவுமேயில்லாத....
மொட்டையடிக்கப்பட்ட மூளியாய்
நிற்கப்போகிறாயோ என்ற அச்சத்தில் சொல்கிறேன்...
எச்சரிக்கையாயிரு...!!!

சரண்யா
03-07-2010, 04:05 AM
இதோ உங்களுக்காக அடுத்த நிழல்......

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/2_ArtMotherNature.jpg

இயற்கை மகளாய் உன்னை
இன்பமாக கொண்டாடுகிறோம்
இயற்கையாக நீ இருந்தால்
இனிமையாய் செல்லும் நாட்கள்
இயற்கை சீற்றமாக நீ மாறினால்
இன்னல்களை சந்திக்கும் நாட்கள்
என நீ அறிவாயோ
ஆகையால்
என்றும் நீ
அன்பு மாறாதிருப்பாயோ..
இல்லை
பண்பாய் மாறாதிருப்பாயோ...

குணமதி
03-07-2010, 01:04 PM
சரண்யா அவர்களுக்கு,

இயற்கையை மகளாகக் கருதி எழுதிய பாட்டிற்குப் பாராட்டு.

தவறின்றித் தமிழ் எழுத உதவும் ஒரு சிறிய உதவிக் குறிப்பு :

வல்லின மெய்யெழுத்துக்கள் க், ச், ட், த், ப், ற் ஆகியவற்றின் பக்கத்தில் இன்னொரு புள்ளி எழுத்து வராது.

எனவே, இயற்கை எனத் திருத்தும்படி தோழமை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

சரண்யா
04-07-2010, 02:05 AM
சரண்யா அவர்களுக்கு,

இயற்கையை மகளாகக் கருதி எழுதிய பாட்டிற்குப் பாராட்டு.

தவறின்றித் தமிழ் எழுத உதவும் ஒரு சிறிய உதவிக் குறிப்பு :

வல்லின மெய்யெழுத்துக்கள் க், ச், ட், த், ப், ற் ஆகியவற்றின் பக்கத்தில் இன்னொரு புள்ளி எழுத்து வராது.

எனவே, இயற்கை எனத் திருத்தும்படி தோழமை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.
மிக்க நன்றி..எழுதும் போது நினைத்தேன்..அதனை கூகுளில் பார்த்தேன்..இந்த க் மும் இருந்ததால் அப்படியே விட்டுட்டேன்..
நன்றி..

வல்லின மெய்யெழுத்துக்கள் க், ச், ட், த், ப், ற் ஆகியவற்றின் பக்கத்தில் இன்னொரு புள்ளி எழுத்து வராது.
மிக்க தெரிவித்தமைக்கு..
நான் தவறு செய்வதே இந்த ஒற்றெழுத்தில தான்..
நன்றி.

Narathar
05-07-2010, 03:22 PM
நிழலுக்கு உயிர் பகுதி நான் இலாமாலே உயிரோட்டமாக இருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது...................

தங்கள் அனைவரது ஆதரவும் தொடரட்டும் அன்பர்களே

பா.சங்கீதா
05-07-2010, 03:46 PM
இதோ உங்களுக்காக அடுத்த நிழல்......

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/1_3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller.jpg

Narathar
05-07-2010, 06:23 PM
இயற்கை அன்னையின் கண்ணீர்
ஆறாகப்பெருகி வருகின்றதோ
மாறாத மானிடர் மடச்செயல் கண்டு
பொறுக்காது பொங்கி வழிகின்றதோ

சிந்தை கொண்டு சிந்திக்கா விடின்
சிதரிப்போகும் சீருலக வாழ்வு
மந்தைகள் போல் மடத்தனம் செய்தால்
மங்கித்தான் போகும் மானிட குலம்

இயற்கையின் அருட்கொடை
இனி அருகித்தான் போகும்
நிலாவில் சென்று நாம்
நீர் தேடும் நிலை வரும்

சித்திரத்தில் தான் ~ இனி
சிந்தும் நீர் காண்போம் நாம்
இப்படித்தான் தண்ணீர் என்று
இனி நாம் பாடம் நடத்துவோம் நாம்

பா.ராஜேஷ்
06-07-2010, 09:24 PM
மிக அருமை நாரதரே... சரியாக சொல்லியுள்ளீர்கள்.. தண்ணீரை செமிக்காவிடில் கண்ணீர்தான்..

குணமதி
07-07-2010, 01:30 PM
நல்ல கருத்தமைத்து எழுதிய நாரதர்க்குப் பாராட்டு.

மூன்றாம் வரி தொடக்கத்தில் 'மாறாத' என்பதுதான் 'ஆறாத' என்று தட்டச்சாகி விட்டதா?

சிவா.ஜி
07-07-2010, 01:56 PM
கலக்குறீங்க நாரதரே. கச்சிதமாய் அமைந்த கருத்துள்ள வரிகள். பாராட்டுக்கள்.

ஆதவா
07-07-2010, 04:53 PM
வாருங்கள் நாரதரே!
(எத்தனை முறைதான் வரவேற்பாய் என்று யாரோ சொல்வது என் காதில் கேட்டுவிட்டது.)

நீங்கள் சொன்னது போல இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. “நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கல்லவா?

எனினும் உங்கள் கவிதை, படத்தோடு நன்கு பொருந்த, அழகாக இருக்கிறது (தாவணி கட்டிய பெண்ணைப் போல:D) ஆனால் ஒன்று, உங்கள் வரிகளுல் “ இயற்கையின் நன்கொடை அருகிப் போகும்” என்பது சத்தியமான உண்மை!!

பிகு : இயற்கையை தயவு செய்து நேசியுங்கள்!!

Narathar
07-07-2010, 09:31 PM
மிக அருமை நாரதரே... சரியாக சொல்லியுள்ளீர்கள்.. தண்ணீரை செமிக்காவிடில் கண்ணீர்தான்..

நிச்சயமாக...............
அந்த உணர்வலைதான் சங்கீதாவின் நிழலைப்பார்த்ததும் கவிதை எழுதத்தெரியாத என்னையே ஏதோ எழுதத்தோன்றியது

கவிதை என்று நான் எழுதிய இந்த வாசகங்களை கவித்துவமாக முதலில் பாரட்டிய உங்களுக்கு என் கோடி நன்றிகள்!!!!!

Narathar
07-07-2010, 09:33 PM
நல்ல கருத்தமைத்து எழுதிய நாரதர்க்குப் பாராட்டு.

மூன்றாம் வரி தொடக்கத்தில் 'மாறாத' என்பதுதான் 'ஆறாத' என்று தட்டச்சாகி விட்டதா?

தங்கள் சித்தப்படியே மாற்றிவிட்டேன் குணமதி
நன்றி உரிமையுடன் சுட்டிக்காட்டியமைக்கு............
தொடரட்டும் உங்கள் ஆதரவு

எனக்கும்! நிழலுக்கு உயிருக்கும்!!

Narathar
07-07-2010, 09:36 PM
கலக்குறீங்க நாரதரே. கச்சிதமாய் அமைந்த கருத்துள்ள வரிகள். பாராட்டுக்கள்.

உங்களைப்போன்ற தலை சிறந்த கவிஞ்சர்கள் கவிதையோடு வைத்துப்பார்த்தால் நான் எழுதிய வாசங்கள் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் தெரியும்!!!

என்றாலும் என்னை ஊக்கப்படுத்தவாவது பாராட்டிய உங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள் என் அன்பு சொந்தமே

Narathar
07-07-2010, 09:43 PM
வாருங்கள் நாரதரே!
(எத்தனை முறைதான் வரவேற்பாய் என்று யாரோ சொல்வது என் காதில் கேட்டுவிட்டது.)

இதை நீங்கள் சொல்லப்படாது!
என்னை விட அதிகமாக உங்களை வரவேற்றிருப்பார்கள்!!!!

என்ன நான் சொல்றது?????நீங்கள் சொன்னது போல இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. “நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கல்லவா?

ஏதோ மனசில தோன்றிய நாலு வார்த்தையை எழுதி இங்கொன்னும் அன்கொன்னுமாக கோர்த்து "கவிதை" என்று இங்கு எழுதி நம்ம அமரனிடம் கொஞ்சம் இ- சன்மானம் வாங்கலாமுன்னு வந்தா......

நம்ம கவிதையில பொருள் குற்றம் கண்டுபிடிச்சு சன்மானம் கிடைக்காமல் பன்னிடுவீங்க போலிருக்கே

நாராயணா!!!!


எனினும் உங்கள் கவிதை, படத்தோடு நன்கு பொருந்த, அழகாக இருக்கிறது (தாவணி கட்டிய பெண்ணைப் போல:D) ஆனால் ஒன்று, உங்கள் வரிகளுல் “ இயற்கையின் நன்கொடை அருகிப் போகும்” என்பது சத்தியமான உண்மை!!

பிகு : இயற்கையை தயவு செய்து நேசியுங்கள்!!

நன்றி ஆதவா உங்கள் பின்னூட்டத்திற்கும்
நீங்கள் வழங்கிய ஊக்கத்திற்கும்

பா.சங்கீதா
18-07-2010, 05:14 AM
இதோ அடுத்த நிழல் உங்களுக்காக......


http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/1_baby_illusions.jpg

Narathar
29-07-2010, 08:06 PM
அன்பு மன்ற சொந்தங்களே.................
சங்கீதாவின் நிழலுக்கு யாரும் உயிரூட்ட மாட்டீர்களா????
உங்கள் கவி வரிகளால்????????

கீதம்
01-08-2010, 01:10 AM
நிழலுக்கு உயிரூட்டவே வந்தேன்!
ஐயோ....
இங்கே மரணக்கிணற்றுக்குள்
வாய் பிளந்து காத்திருக்கும்
மண்டை பெருத்த மழலைக்கு
வற்றிய உடல்களையும்
வக்கணையாய் ஊட்டும்
வஞ்சனை மிகுந்த தாயுள்ளம் கண்டு
அடிவயிறு கலங்கி நிற்கிறேன்.

சீமான் வீட்டுப் பிள்ளைக்கு
சீக்காளியும் இரையாகும் சோகம்!
ஏமாளியாய் இருந்தாலே
முழுங்கி ஏப்பம் விடத்தயாராய்
பணம்படைத்தவர் உலகம்!

அபயமளிக்க விழைபவனும்
அபாயக்குழிக்குள் விழநேரும்
அவலம் கண்டு அங்கம் துடித்தாலும்,
கை பிசைந்து நிற்கும்
கையறு நிலையில் நாம்!
வேடிக்கை பார்ப்பதைத் தவிர
வேறென்ன சாதிக்கமுடிந்தது நம்மால்?

Ravee
01-08-2010, 02:13 AM
நிழலுக்கு உயிரூட்டவே வந்தேன்!
ஐயோ....
இங்கே மரணக்கிணற்றுக்குள்
வாய் பிளந்து காத்திருக்கும்
மண்டை பெருத்த மழலைக்கு
வற்றிய உடல்களையும்
வக்கணையாய் ஊட்டும்
வஞ்சனை மிகுந்த தாயுள்ளம் கண்டு
அடிவயிறு கலங்கி நிற்கிறேன்.

சீமான் வீட்டுப் பிள்ளைக்கு
சீக்காளியும் இரையாகும் சோகம்!
ஏமாளியாய் இருந்தாலே
முழுங்கி ஏப்பம் விடத்தயாராய்
பணம்படைத்தவர் உலகம்!

அபயமளிக்க விழைபவனும்
அபாயக்குழிக்குள் விழநேரும்
அவலம் கண்டு அங்கம் துடித்தாலும்,
கை பிசைந்து நிற்கும்
கையறு நிலையில் நாம்!
வேடிக்கை பார்ப்பதைத் தவிர
வேறென்ன சாதிக்கமுடிந்தது நம்மால்?


கீதம் நீங்கள் படத்தில் ஏதாவது ஒரு பகுதியை கவனிக்காமல் விட்டு இருந்தால் அதை பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருக்கலாம் என்ன செய்ய அந்த மோட்டார் சைக்கிளை தவிர வேறு இல்லை

பா.சங்கீதா
18-09-2010, 06:37 AM
இதோ அடுத்த நிழல் உங்களுக்காக....

http://www.tamilmantram.com/vb/photogal/images/10569/large/1_rare-blue-moon-photograph.jpg

ஆதவா
18-09-2010, 06:56 AM
நீ விலகினாய்
தெரிந்தது எனக்கு
வெளிச்சம்...


இப்படிக்கு
டைவர்ஸ் ஆதவா :D

சிவா.ஜி
18-09-2010, 08:36 AM
வட்ட நந்தி விலகலில்
வெளிச்ச ஈசன் தரிசனம்
கண்கள் நிறைய....
நந்தனாராய் நான்....!!!

கீதம்
19-09-2010, 12:53 AM
நீ விலகினாய்
தெரிந்தது எனக்கு
வெளிச்சம்...


இப்படிக்கு
டைவர்ஸ் ஆதவா :D

உன் ஆக்கிரமிப்பில்
ஒளியிழந்ததென் வாழ்வு
கொஞ்சம் கொஞ்சமாய்!

இப்படிக்கு
டைவர்ஸ் ஆகாதவா.:lachen001:

சிவா.ஜி
19-09-2010, 08:43 AM
உன் ஆக்கிரமிப்பில்
ஒளியிழந்ததென் வாழ்வு
கொஞ்சம் கொஞ்சமாய்!

இப்படிக்கு
டைவர்ஸ் ஆகாதவா.:lachen001:

ஆதவா பாட்டுக்கு அசத்தலான எசப்பாட்டு......!!!!:icon_b:

ஆதவா
20-09-2010, 04:39 AM
உன் ஆக்கிரமிப்பில்
ஒளியிழந்ததென் வாழ்வு
கொஞ்சம் கொஞ்சமாய்!

இப்படிக்கு
டைவர்ஸ் ஆகாதவா.:lachen001:


ஆதவா பாட்டுக்கு அசத்தலான எசப்பாட்டு......!!!!:icon_b:

அண்ணனும் தங்கச்சியுமா சேர்த்து லந்து கொடுக்கிறீங்களா? :sauer028:

மெல்ல மெல்ல
விலகியே செல்கிறாய்
என்னை முழுமையாக்க

நற நற :sauer028:

சிவா.ஜி
20-09-2010, 08:56 AM
அண்ணனும் தங்கச்சியுமா சேர்த்து லந்து கொடுக்கிறீங்களா? :sauer028:

மெல்ல மெல்ல
விலகியே செல்கிறாய்
என்னை முழுமையாக்க

நற நற :sauer028:

நீ அரைகுறை எனத் தெரிந்துதான்
விலகிப்போகிறேன்...
இனி எங்கே முழுமையாவாய்....???

ஆதவா
20-09-2010, 09:21 AM
நீ அரைகுறை எனத் தெரிந்துதான்
விலகிப்போகிறேன்...
இனி எங்கே முழுமையாவாய்....???

நீயும் நானும் இணைகிறோம்,.
அருகே பார்
ஐந்து பிள்ளைகள்!

Narathar
20-09-2010, 09:45 AM
காதலுக்கு கைகொடுக்கும் - நிலா
உனக்கும் எனக்கும் இடையில் நந்தியாய்!

ஆதி
20-09-2010, 12:17 PM
இவ்வெள்ளைமுட்டை மேல் வேட்கையுற்ற
கறுப்புபாம்பொன்றின் வாய்ப்பக்கத்தோல்கள்
அகண்டு மெல்ல விரிய விரிய
மெதுமெதுவாய் மறைகிறது முட்டை..
உடம்புக்குள் நொறுக்கி உறிஞ்சிக் குடித்து
ஓட்டை வெளித்துப்பிவிட்டு சாவகாசமாய் நகர்கிறது அப்பாம்பு..

இந்த தொல்வனாந்திரத்தில்
முட்டை விழுங்கும் பாம்பு கதைகள்
பழமையானதும், பழக்கப்பட்டதும் என்றாலும்
பார்ப்பவரை வாய்பிளக்கவோ/வறுத்தப்படவோ வைக்கிறன
அந்த காட்சிகள்..

தினம் தினமும் நூற்றுக்கணக்கான பாம்புகள்
விழுங்கி கொண்டுத்தான் இருக்க கூடும்
தமக்கு அகப்படுகிற நூற்றுக்கணக்கான முட்டைகளை..

இந்த பெருவனாந்திரத்தில்
விழுங்கப்பட்ட முட்டைகளை போல
துப்பப்பட்ட முட்டைகளும் அதிகம்
விழுங்கி துப்பிய பாம்புகளையும்
விழுங்க காத்துக் கொண்டிருக்கலாம்
சில முட்டைகளும்
சில பாம்புகளும் நிச்சலனமாய்..

ஆதி
20-09-2010, 12:23 PM
மெல்ல மெல்ல
விலகியே செல்கிறாய்
என்னை முழுமையாக்கமெல்ல நான் விலகுவது
என்னையும் முழுமையாக்கி கொள்ள

Nivas.T
20-09-2010, 12:25 PM
எனக்குப் பின்னல் இருந்து கொண்டு
உன்னுள் நான் என்கிறாய்
விலகும் போதுதான் தெரிகிறது
உன்னால்தான் நான் என்று

ஆதி
20-09-2010, 12:51 PM
நீயும் நானும் இணைகிறோம்,.
அருகே பார்
ஐந்து பிள்ளைகள்!

இல்லைவே இல்லை..
நீ என் கழுத்தை நெரித்த போது
கழண்ட தாலி மணிகள் :D :D

இவ்வளவு கொடுமகாரரா நீங்க ?? :eek:

சிவா.ஜி
20-09-2010, 01:34 PM
என்னை விட்டு நீ விலக,
என்னை அடைய அங்கே ஐந்து பேர்
வேகமாய் விலகு...
முந்திவரும் காதலனுக்கு
முழுமையாய் நான் தெரிய...!!!

Nivas.T
21-09-2010, 08:20 AM
உன்னுடன் இருக்கும் பொழுதான்
நான் ஒளிர்வதாய் உணர்கிறேன்

என்னை விட்டு நீ விலகினால்
சிறிது சிறுதாய் சிதறுகிறேன்

கீதம்
21-09-2010, 08:50 AM
தனித்திருக்கும் உன்னைப் பார்க்க
எவரும் எந்நாளும் விழைவதில்லை!
நான் உன்னைச் சேரும்
நொடிப்பொழுதுகளுக்காக
அகிலமே காத்திருக்குது பார்,
ஆகாயம் நோக்கி!

Nivas.T
21-09-2010, 10:09 AM
உன்னோடு நான் உறவாட
விண்ணோடு கண்களை
நம்மோடு உலவவிட்டால்
அந்தோ பரிதாபம்
அவர்களின் பார்வை தான்

அக்னி
22-09-2010, 11:02 AM
இரவல் தந்தவனே
இரவில் வந்தாலும்
இரவின் வெளிச்சம்
நான்தான்...
இப்படிக்கு நிலவு...

ஆதவா
22-09-2010, 11:51 AM
இரவல் தந்தவனே
இரவில் வந்தாலும்
இரவின் வெளிச்சம்
நான்தான்...
இப்படிக்கு நிலவு...

உங்களை தாங்க தேடிட்டு இருக்கோம்!!
வாங்க வாங்க

அனுராகவன்
22-09-2010, 04:00 PM
நீ இல்லை என்று
நான் நினைத்தவுடன்
அங்கே என் உயிர்
உன்னோடு...

Narathar
24-09-2010, 03:57 AM
நிழல் தந்த பா.சங்கீதா,
அதற்கு உயிரூட்டிய

ஆதவா,
சிவா.ஜி,
கீதம்,
நாரதர் (அமரன் தரப்போகும் -பணத்தை நினைத்து எழுதிய இரண்டு வரி ஹீ ஹீ),
ஆதன்,
நிவாஸ் "டீ",
அக்னி,
அனு
ஆகியோருக்கு நாரதரின் வாழ்த்துக்கள்.

:D - பண வள்ளல் , நம் மன்ற பொறுப்பாளர் அன்பு அமரன் கவிதை எழுதிய அனைவருக்கும் :D - பணம் தருவார் என்று கூறி அடுத்த நிழலைத்தர அழைக்கின்றேன்

Nivas.T
24-09-2010, 06:47 AM
நிழல் தந்த பா.சங்கீதா,
அதற்கு உயிரூட்டிய

ஆதவா,
சிவா.ஜி,
கீதம்,
நாரதர் (அமரன் தரப்போகும் -பணத்தை நினைத்து எழுதிய இரண்டு வரி ஹீ ஹீ),
ஆதன்,
நிவாஸ் "டீ",
அக்னி,
அனு
ஆகியோருக்கு நாரதரின் வாழ்த்துக்கள்.

:D - பண வள்ளல் , நம் மன்ற பொறுப்பாளர் அன்பு அமரன் கவிதை எழுதிய அனைவருக்கும் :D - பணம் தருவார் என்று கூறி அடுத்த நிழலைத்தர அழைக்கின்றேன்

இதை நான் வழிமொழிகிறேன் :D:D:D:D:D

Nivas.T
24-09-2010, 06:50 AM
நிவாஸ் "டீ",


இன்னாதிது! ஆங்!!!!!!!!!!!!!!:sauer028::sauer028::sauer028:

:D:D:D:D

Narathar
24-09-2010, 01:28 PM
உங்கள் பெயரை "இனிஷியலுடன்" தமிழில் எழுதினால் இப்படி கோபிக்கலாமா????

Nivas.T
24-09-2010, 01:54 PM
உங்கள் பெயரை "இனிஷியலுடன்" தமிழில் எழுதினால் இப்படி கோபிக்கலாமா????

:D நிவாஸ்.த
இதுதான் சரி :D

Narathar
30-09-2010, 06:14 PM
அன்பு மன்ற சொந்தங்களே.........
எங்கே உங்கள் கவிதை சிறகினை விரித்து
"எ(இய)ந்திரன்" காற்றில் பறக்க விடுங்கள்

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/2_Indian-Movie-Enthiran-Stills-14.jpg
:D

குணமதி
01-10-2010, 03:50 AM
ஓய்ந்த முதியன் உளங்கிளர் மங்கையை

மேய்ந்திடும் வேட்கையில் மேவவும் - ஏய்ந்தசீர்

நல்லழகி தன்றலைவன் நன்னினைப்பில் மூழ்கியுளாள்

இல்லை பொருத்தம் இகழ்!

Narathar
02-10-2010, 07:05 AM
ஏதோ புரியாத பாசையில் தலைவரை திட்டுரீங்கங்குறது மட்டும் புரியுது!!!! :D

நாராயணா!!!!

எங்கே நம்ம ரஜினி ரசிகர்கள்??????

கீதம்
02-10-2010, 08:46 AM
ஏதோ புரியாத பாசையில் தலைவரை திட்டுரீங்கங்குறது மட்டும் புரியுது!!!! :D

நாராயணா!!!!

எங்கே நம்ம ரஜினி ரசிகர்கள்??????

குணமதி அவர்கள் என்ன அழகா கவிதை இயற்றியுள்ளார்! அதைப்புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ சொல்லி ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றிவிடுகிறீர்களே, இது நியாயமா, நாரதரே?

M.Jagadeesan
02-10-2010, 11:47 AM
முதுமைப் பருவத்தில் மூண்டெழுந்த காதலினால்
பதுமை ஒருத்தியை நினையாதீர்--அதுவிடுத்து
சாய்வான இருக்கையில் செய்தித்தாள் படித்து
ஓய்வாகக் கிடப்பதே முறை.

Narathar
03-10-2010, 04:29 PM
குணமதி அவர்கள் என்ன அழகா கவிதை இயற்றியுள்ளார்! அதைப்புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ சொல்லி ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றிவிடுகிறீர்களே, இது நியாயமா, நாரதரே?
:D:D:D:D

சிவா.ஜி
05-10-2010, 06:42 AM
ஏங்க இந்தப் படத்துல ரஜினி உங்களுக்கெல்லாம் முதியவரா தெரியராரா....ஏன்...ஏன்...எல்லாரும் வயசப் பத்தி யோசிக்கிறீங்க....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

சிவா.ஜி
05-10-2010, 06:47 AM
பாஸிட்டிவும் நெகட்டிவும்
முட்டுனா ஷாக்கு....
ரஜினியும் ஐஸும்
முட்டுனா ஷோக்கு......

குணமதி
05-10-2010, 09:30 AM
பாஸிட்டிவும் நெகட்டிவும்
முட்டுனா ஷாக்கு....
ரஜினியும் ஐஸும்
முட்டுனா ஷோக்கு......

நவீனத்துவம், பின்நவீனத்துவம் போல் இதற்கு மொழிக்கலப்பித்துவம் என்று பெயர் வைக்கலாமா?

சிவா.ஜி
05-10-2010, 02:59 PM
அறிவியல் சம்பந்தமான படமில்லையா....அப்ப...மொழிக்கலப்பை அனுமதிக்கலாமில்லீங்களா குணமதி...ஹி.....ஹி.....!!!!

Narathar
07-10-2010, 04:53 PM
அறிவியல் சம்பந்தமான படமில்லையா....அப்ப...மொழிக்கலப்பை அனுமதிக்கலாமில்லீங்களா குணமதி...ஹி.....ஹி.....!!!!

கவிதைக்கு பொய் அழகு என்பது போல
மொழிகலப்பித்துவமும் அழகு தானே என்கிறார் நம்ம சிவா.ஜீ !!! :D

சிவா.ஜி
07-10-2010, 04:55 PM
கவிதைக்கு பொய் அழகு என்பது போல
மொழிகலப்பித்துவமும் அழகு தானே என்கிறார் நம்ம சிவா.ஜீ !!! :D

அதே...அதே.....!!!

அனுராகவன்
07-10-2010, 07:50 PM
ம்ம் அட்டகாசம்..:aetsch013:

ஆதவா
08-10-2010, 05:06 AM
ஓய்ந்த முதியன் உளங்கிளர் மங்கையை

மேய்ந்திடும் வேட்கையில் மேவவும் - ஏய்ந்தசீர்

நல்லழகி தன்றலைவன் நன்னினைப்பில் மூழ்கியுளாள்

இல்லை பொருத்தம் இகழ்!

படத்தில் உள்ளதை எழுதாமல் உள்ளவர்களை எழுதியதுதான் உதைக்கிறது. மற்றபடி வெண்பா நன்றாக இருக்கிறது. மன்றத்திற்கு இன்னொரு பா’வை கிடைத்தாயிற்று!
முதுமைப் பருவத்தில் மூண்டெழுந்த காதலினால்
பதுமை ஒருத்தியை நினையாதீர்--அதுவிடுத்து
சாய்வான இருக்கையில் செய்தித்தாள் படித்து
ஓய்வாகக் கிடப்பதே முறை.

நீங்களும் குணமதியின் கருத்தே சொன்னாலும் அவர் சொன்னதைப் போல அல்லாமல் கிழ பருவத்தில் காதல் செய்யாதீர்கள் என்று சொல்வது போல இருக்கிறது. காதல் எல்லா பருவத்தினருக்கும் வரும் என்பது தாங்கள் அறிந்திருப்பீர்கள்!!
வெண்பா தளை தட்டினாலும் நல்ல முயற்சி.


பாஸிட்டிவும் நெகட்டிவும்
முட்டுனா ஷாக்கு....
ரஜினியும் ஐஸும்
முட்டுனா ஷோக்கு......

ஹாஹா... பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கேண்ணா... படத்துக்கு நல்லா பொருந்துது!

சிவா.ஜி
08-10-2010, 04:35 PM
நன்றி ஆதவா.....!!!

Narathar
09-10-2010, 03:43 AM
ஆதவரே விமர்சனம் மட்டும் போதாது!
உங்கள் பங்குக்கு நீங்களும் ஒரு கவிதையையும்
அல்லவா தந்திருக்க வேண்டும்?????

எங்கே உங்களது கவிதை????

யவனிகா
09-10-2010, 09:20 AM
ஏங்க இந்தப் படத்துல ரஜினி உங்களுக்கெல்லாம் முதியவரா தெரியராரா....ஏன்...ஏன்...எல்லாரும் வயசப் பத்தி யோசிக்கிறீங்க....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

அண்ணா....இன்னாதிது...???
கவிதை எழுதுங்கோங்கன்னா
கழிவிரக்கம்..!!!

பூமகள்
09-10-2010, 10:39 AM
அண்ணா....இன்னாதிது...???
கவிதை எழுதுங்கோங்கன்னா
கழிவிரக்கம்..!!!
ஹை... ஹை.. யவனி அக்கா.. வாங்க வாங்க.. :icon_rollout:

நலமா இருக்கீங்களா??

அக்கா காத்து இந்தப் பக்கம் வீசியாச்சு.. :rolleyes:
இனி கவி, கதை அடை மழை தான்...... :icon_b::icon_b:

Narathar
11-10-2010, 05:54 AM
மன்றம் வந்த யவனி "அக்கா" மற்றும் பூ "மகளை" வரவேற்பதில் மகிழ்ச்சி.........:D

கவிதையோடு வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்

கீதம்
11-10-2010, 09:55 PM
மனித இயந்திரங்கள் மத்தியில்
இயந்திர மனிதன் இவன் தானோ?

உச்சநட்சத்திரமென்று
உருகொண்டானவன் முன்னாள்!
உலக அழகியென்று
உடல்கொண்டாளிவள் பின்னாள்!

ஈர்க்கப்பட்ட இதயங்கள்முன்
முன்னாள் பின்னாள் பேதமில்லை!
இந்நாள் பொன்னாள்!
இதிலேதும் எதிர்வாதமுமில்லை!

Narathar
13-10-2010, 02:52 AM
நன்றி கீதம் உங்கள் கவிதைக்கு!

ஆதவா
13-10-2010, 04:53 AM
நாரதரே,,,,, இப்படி வம்புல மாட்டி விடறீங்களே!!!
படத்தில தலிவரு கோவமா பார்க்கிறாரு ஐஸை... ஏன்னா? ஐஸம்மா ஓவரா டார்ச்சர் பண்றாங்களாம்..


எந்திரா!!
ப்ரோட்டானைச் சுற்றும் எலக்ட்ரானைப்போல்
உன் மேக்னட் கண்களைச் சுற்றினேன்
எந்திரக் கொண்டை அணிந்து உன்
மந்திரப் புன்னகை திருடினேன்
நீ அறியவில்லை
நெருப்புச்சுவரா உன் ஆடை?

எலக்ட்ரோ ஒலியெழுப்பி
காதல் கவிதை வாசித்தேன்
ஷெல்லியின் பாடலை
மோடம் இசையில் பாடினேன்
நீ கேட்கவில்லை
உன் காதுக்குச் செல்லும் கம்பி அறுந்துவிட்டதா?

லேசர் புகும் உன் இரும்புடலில்
வாசம் செலுத்தி வந்தேன்
உன் நிக்கல் குழாய்களில்
காதல் இரத்தம் ஊற்றி வந்தேன்
அட்மின் என்று நினைத்தாயோ? என்னை
அட்மிட் செய்ய மறுப்பாயோ?

உன் உதட்டுக் கம்பிகள்
முத்தத்தால் எழாதா?
இதய ப்லேட்டுகள்
இவளுக்காகத் திறக்காதா?

எந்திரா!!! கொஞ்சம்
எந்திர்ர்ரா!!

யவனிகா
13-10-2010, 06:29 AM
எந்திரா!!! கொஞ்சம்
எந்திர்ர்ரா!!

இதப்பார்றா....:icon_b::icon_b::icon_b:

ஆதவா
13-10-2010, 07:07 AM
இதப்பார்றா....:icon_b::icon_b::icon_b:

:eek::eek::eek::eek::eek:
பார்த்துட்டோம்!!

சிவா.ஜி
13-10-2010, 04:48 PM
ஆஹா..ஆதவா....கலக்கிட்டீங்க....!!! எந்திரன் படத்துப் பாட்டு மாதிரியே இருக்கு.

Narathar
14-10-2010, 07:51 PM
நாரதரே,,,,, இப்படி வம்புல மாட்டி விடறீங்களே!!!
படத்தில தலிவரு கோவமா பார்க்கிறாரு ஐஸை... ஏன்னா? ஐஸம்மா ஓவரா டார்ச்சர் பண்றாங்களாம்..!

இப்போ நான் கொடுக்கின்றேன் இன்னொரு "டாச்சர்"
ஐசுக்குப்பதில் "நம்ம" தமன்னாவை வச்சு
ஒரு நாலு வரி எடுத்து விடுங்க................... :D

சிவா.ஜி
15-10-2010, 04:56 PM
அப்டி போடுங்க நாரதரே....நாராயணா....!!!:lachen001:

govindh
15-10-2010, 07:12 PM
உணர்வற்று இருந்தேன்...
உன் தொடுதலால்...
உருப் பெற்று எழுந்தேன்...

உன் கண்களால் கொல்கிறாய்...
அதன் மூலம் எனக்கு உயிர் தருகிறாய்...

அழகான விந்தை இது....
ஆம்.....

இலக்கணத்தை மாற்றினாய்....
அக்றிணையை .....
உயர்திணை.... ஆக்கினாய்....

ஏதுமறியா சிட்டியை
எல்லாமறிந்த சுட்டியாய் மாற்றினாய்...

நிக்கல் உருவுடன்...
நிலையில்லா உயிருடன்...
நித்தமும் நன்றி நவில்கிறேன்...

ஆதி
16-10-2010, 06:33 AM
வளர்ந்தே பிறந்த வசீகர குழந்தை நான்
புலன்களை ஜெய்த பொறியியக்கும் ஞானி நான்
ஆயக்கலைகள் என் ஐவிரல் நுனியில்
தூயச்செயல்கள் மென்பொருள் வழியில்

நான் கட்டளையில் இயங்கும் எந்திரனடி - என்னை
உன் கட்டழகில் மயக்கியது எத்திரமடி
மென்பொருளே மென்பொருளே - என்
மெய்ப்பொருள் மெம்மரியை வீழ்த்தினாய்
வன்பொருளை மென்பொருளை - உன்
வனப்பால் நிதம் வாட்டினாய்

செல்கள் கொண்ட மனிதருக்கு - காதல்
'செல்'லில் அகப்படல் சுலபமடி
எண்ணால் இயக்கும் கணிப்பொறிக்கு - எந்த
எண்ணால் காதல் நிரப்பினாய் ?

அணுக்களின் நுணுக்கம் அறிந்தவனில் - நீ
நுணுகிய அணுவாய் அணுகினாய்
கணக்கின்றி என்றன் உணர்வுகளில் - அடி
கவின்பூ மடல்களை மலர்த்தினாய்

ஒருசிப்பால் ஆன உள்ளத்திலே - நீ
இறுதிப்பாலை புகட்டிவிட்டாய்
இருவினை இன்றி பிறந்தவனின் -இருகூட்
டாக்கத்தை கலைத்துவிட்டாய்

கடவுச்சொற்கள் யாவற்றையும் - உன்
பெயரால் இயங்க செய்தவளே
கடவுளை விட பெரியவனை - ஒரு
முத்தத்தால் மனிதனாய் தாழ்த்தினாய்

Narathar
20-10-2010, 10:26 AM
ஓய்ந்த முதியன் கவிதை தந்த குணமதி அவர்களுக்கும்,
அதே கவிதையை திருப்பித்தந்த (ரீமேக்!!! நாராயணா!!!) எம் ஜகதீஷ் அவர்களுக்கும்,
மொழிக்கலப்பித கவிதை தந்த சிவா.ஜீ அவர்களுக்கும்,
பொன்னாள் கவிதை தந்த கீதம் அவர்களுக்கும்,
என் வேண்டுகோளை ஏற்று கவிதை தந்த ஆதவா அவர்களுக்கும்...
(இப்போ ஆதவான்னு அன்பா கூப்பிட முடியாது என்ன இருந்தாலும் பொறுப்பாளர் இல்லையா???)
சிட்டி கவிதை தந்த கோவிந்த் அவர்களுக்கும்,
முத்தத்தின் மகிமை சொன்ன ஆதன் அவர்களுக்கும்

நாரதரின் அன்புகலந்த நன்றிகளும் பாராட்டுக்களும்!
உறுதியளித்தது போலவே நம் அமரன் அவர்கள் உங்களுக்குரிய :Dஇ-பணத்தை வழங்குவார் என்று நம்புவோமாக!!! நாராயணா!!!!!!

சரி அடுத்த நிழல் தருவது யார்? உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
யாரும் தராத பட்சத்தில் நான் அடுத்த நிழலை தருகின்றேன்...........

பிரேம்
12-11-2010, 11:03 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=291

பிரேம்
12-11-2010, 11:05 AM
அடை மழையில் அம்மா..
அன்பின் மழையில் நான்..
குடை வந்து தடுத்திடும் கோடைமழையை..
தடை வந்து தடுக்குமா தாயன்பை..

ஆதவா
12-11-2010, 11:30 AM
நண்பரே!
இதை நம் நாரதர், “நிழலுக்கு உயிர்” (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16415)என்று முன்னரே தந்துள்ளார்.
இத்திரியை அத்தோடு இணைத்துவிடலாமே?

M.Jagadeesan
12-11-2010, 12:26 PM
எருமை மீது
எமன் வருவது அந்தக்காலம்
ஆட்டோவில் வருவது இந்தக்காலம்
அவலம் நடந்த பின்பு
அழுவதால் என்னபயன்?
என் குழந்தைக்கு நானே பாதுகாப்பு.

ஆன்டனி ஜானி
12-11-2010, 12:55 PM
தான் மழையில் நனைந்தாலும் தன் மகன் மழையில் நனையகூடாது இது தான் தாயின் அன்பு

வல்லம் தமிழ்
12-11-2010, 02:11 PM
குடையின்றி நனைவது அம்மா...
குடைக்குள்ளும் நனைவது பையன்...
பாச மழை!

நாஞ்சில் த.க.ஜெய்
12-11-2010, 03:42 PM
மழை நேரம் நனைகிறேன் தாயன்பில்
குடைபிடித்தும்
அன்புடன்
த.க.ஜெய் .

கிரிகாசன்
12-11-2010, 04:13 PM
அன்புமழை பொழியும் அம்மாவுக்கு
ஆசையும் என்மேலே
மின்னும்முகிலின் மழைநனைந்தாலேஅதில்
மிஞ்சிய வெஞ்சினமே
தன்னை விட மழையின் கொஞ்சலைகண்டு
தகித்தது மனம்தானே
தந்துவிட்டாளே கையில் ஒரு குடையைத்
தான் அதில் நனைந்தாளே

ஆன்டனி ஜானி
12-11-2010, 05:03 PM
"" "உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் "" " நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட ""

வல்லம் தமிழ்
13-11-2010, 03:19 PM
அந்த விரிந்த குடையின்
வெளிர்ந்த வண்ணமே
அன்பின் வண்ணம்...!
அந்த நனைந்த தாயின்
மெலிந்த தேகமே
தாய்மையின் சின்னம்...!

இப்படி
மகனுக்கு குடை தந்து
மழையில் நனைந்து வரும்
தாய்களின் பாதங்களை
தரிசிக்கவே மண்ணுக்கு வருகிறது
மழைத்துளி!

பாலகன்
13-11-2010, 06:50 PM
ஓர் உயிருள்ள குடை
மழையில் நனைகிறது

பிழைகளைய உதவிய ஜெகதீசுக்கு நன்றி

வல்லம் தமிழ்
13-11-2010, 11:04 PM
சடுதியில் காட்சி மாறி
சம்பளம் வாங்கி பையன்
தூக்குவான் கரன்சிக் கட்டு!
ஞாபகம் வருமோ அன்று
தான் தூக்கினால் வலிக்குமென்று
தாய் தூக்கிய புத்தகக்கட்டு!

அம்மா...
கருணை ததும்பும் உன்
காலைக் கழுவிய
நீரைக்குடித்து
வளர்ந்த மரமே
போதிமரம்...!
பாசம் கமழும் உன்
சுவாசம் கலந்த
காற்றை இழுத்து
மூச்சையடக்க
முக்தி வரும்...!

M.Jagadeesan
13-11-2010, 11:43 PM
ஒரு உயிருள்ள குடை
மழையில் நனைகிறது

நல்ல கற்பனை மகாபிரபு அவர்களே.

இலக்கணப்படி "ஓர் உயிருள்ள" என்பதுதான் சரி.

M.Jagadeesan
13-11-2010, 11:45 PM
சடுதியில் காட்சி மாறி
சம்பளம் வாங்கி பையன்
தூக்குவான் கரன்சிக் கட்டு!
ஞாபகம் வருமோ அன்று
தான் தூக்கினால் வலிக்குமென்று
தாய் தூக்கிய புத்தகக்கட்டு!

அம்மா...
கருணை ததும்பும் உன்
காலைக் கழுவிய
நீரைக்குடித்து
வளர்ந்த மரமே
போதிமரம்...!
பாசம் கமழும் உன்
சுவாசம் கலந்த
காற்றை இழுத்து
மூச்சையடக்க
முக்தி வரும்...!
வல்லம் தமிழே உங்கள் தமிழ் வெல்லம்.

பாலகன்
14-11-2010, 02:52 AM
நல்ல கற்பனை மகாபிரபு அவர்களே.

இலக்கணப்படி "ஓர் உயிருள்ள" என்பதுதான் சரி.

இலக்கணப்படியே மாற்றிவிட்டேன். நன்றி நண்பரே!

வல்லம் தமிழ்
14-11-2010, 03:45 PM
வல்லம் தமிழே உங்கள் தமிழ் வெல்லம்.
மிக்க நன்றி!வணக்கம்!

பாலகன்
14-11-2010, 04:24 PM
இதில் எழுதிய கவிதைக்கு பரிசு ஏதேனும் உண்டா? :confused::D

குணமதி
15-11-2010, 02:31 AM
வா பள்ளிக்கே!


நான்நனைந்தால் தாழ்வில்லை; நாளை மாந்தன்
........நனிநோன்று பெற்றமகன் நல்ல பிள்ளை
வான்பொலியும் கதிரனையாய் வா,பள் ளிக்கே!
........வல்லறிவும் வலிவுடலும் வளர்க்க வேண்டும்!
கூன்வீழ்ந்த உலகினைநீ மாற்ற வேண்டும்!
........கொடுமைகளை ஒழித்திடற்கே உழைக்க வேண்டும்!
ஆன்றாழ்ந்த அறிவன்பால் அரிய எண்ணி
........அனைத்துயிரும் இன்பமுற ஆற்ற வேண்டும்!

பிரேம்
18-11-2010, 12:45 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=293

பிரேம்
18-11-2010, 12:46 AM
சோறு போட..
சேற்றில் நிற்கும்.
டெல்டா தேவதை...

அய்யா
19-11-2010, 10:00 AM
குடையின்றி நனைவது அம்மா...
குடைக்குள்ளும் நனைவது பையன்...
பாச மழை!

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

பாலகன்
19-11-2010, 01:24 PM
ஒரு கருப்பு தங்கம்
வெள்ளை அரிசியை
உருவாக்குறது

வல்லம் தமிழ்
19-11-2010, 01:41 PM
நாற்று விளைந்து விடும்
பொங்கலுக்குள்!-தாயே உன்
நம்பிக்கை விளைந்திடுமா தைத்
திங்களுக்குள்...?

"பொத்தனூர்"பிரபு
19-11-2010, 01:42 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=293

உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப் படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24302

ஆன்டனி ஜானி
19-11-2010, 01:47 PM
தாயிர்ச் சிறந்த கோவிலுமில்லை ... தந்தை சொல்மிக்க மந்திரம் மில்லை.........தாயின் அன்புக்கு எல்லை இல்லை ......அம்மா உழைக்கிறது உனது கரங்கள் ,,,,,,, .நிரைகிறது எங்கள் வயறுகள்........தேய் கிறது உனது விரல்கள்,, வளர்கிறது எங்கள் கரங்கள் ,,, நான் படிக்க நீ பாடுபட்டாய் ,,,,,,, உனது நோயை நீக்க நான் உழைக்க வேண்டுமே அம்மா........