PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!



Pages : 1 2 3 4 5 [6] 7 8

பாபு
21-11-2008, 04:24 AM
பிள்ளைக்கு அன்னை நிழல்
அன்னைக்கு பிள்ளை நிஜம்
பிள்ளைக்கு அன்னை மடி மஞ்சம்
அன்னைக்கு பிள்ளையுடன் தஞசம்
தன்னுடலிலிருந்து பிரிந்த பிள்ளை
உயிருடன் ஒன்றிடும் அன்னை

அருமை !!

மதுரை மைந்தன்
21-11-2008, 08:03 AM
அருமை !!

வாங்க பாபு ரொம்ப நாளைக்கப்புறம் உங்களை மன்றத்தில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டுக்கு நன்றி. உங்களது ஹைகூ கவிதைகளை படிக்க ஆவலாயுள்ளேன்.

அமரன்
21-11-2008, 08:52 AM
முந்தைய நிழலுக்கு உயிர் கொடுத்த சொந்தங்களுக்கு நன்றிகள் கோடி.
உங்களுக்கான தங்கக்காசு விரைவில் வரும் உங்களை தேடி.


கண்ணாரக் கண்ட காட்சிதனை
கமெராக் கண்களால் சுட்டு
நிழலாக்கிய அக்னியின் வண்ணம்.
உயிர் கொடுக்கட்டும் உங்கள் எண்ணம்.
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=80

Narathar
24-11-2008, 01:50 AM
நன்றி அமரனே நீங்கள் தந்த நிழலுக்கு!
எங்கே மன்ற புதிய, பழைய கவிகளே...
நிழலுக்கு உயிர் கொடுங்கள் பார்ப்போம்!

Narathar
25-11-2008, 04:03 AM
மானம் மறைக்க உடைகேட்டால்
மேனி மிளிர வண்ணமடிக்கின்றீர்கள்,
யுத்தமில்லா அமைதிகேட்டால்
புசித்துவாழ உணவழிக்கின்றீர்கள்
கேட்டதை எப்போ கொடுப்பீர்கள்?

நதி
25-11-2008, 07:00 AM
கண்ணி வயலில் சிக்கி
காலிழிந்த தருணத்தில்
தன்காலை தந்தது தாயாடு.

கொடூர யுத்தக் காற்று
ஆடைகளை சுருட்டிச் சென்றது.
உள்ளங்கை குவிந்து
மானத்தை மறைத்தது.

இன்னும்பலர் வருவார்கள்
என்ற சோக எண்ணத்தில்
மரஞ்செடிகளிடன் தொடங்கியது
எனது வாழ்வு.

நொடி முள்ளும் நிமிட முள்ளும்
ஓடிப் பிடித்து விளையாடுவதைப் போல்
சமாதான விரும்பிகள் விளையாட
என் கைசேர்ந்தது சமாதனப்புறா.

தனிச்சையாய் ஒரு கை
புறாதனை அணைக்க
துணிச்சலாய் மறுகை
பாறையை ஊன்றுகோலாக்க
தொடர்கிறது என் பயணம்
புறாவுக்காகவும் எனக்காவும்.

நம்பிகோபாலன்
25-11-2008, 07:18 AM
இங்கே
மிதிப்பவர்களும்
கீழே விழுந்தவர்களும்
ஆயிரம் பேர்...
கவலையில்லை......
என்னிடம் இருக்கும் பொறுமை
அதற்கு அத்தாட்சி
கையில் பறவை.....
புறப்படுகிறேன்
அமைதிக்காய்.......

சிறுபிள்ளை
25-11-2008, 08:20 AM
மிகவும் அசத்தலான கவிதைகள படங்களுக்கேற்ப... நன்றிகள் பலப்பல..

நானும் இங்கே நான் என் கேமராவில் பிடித்த படங்களை பதிக்கலாமா நண்பர்களே?

Narathar
25-11-2008, 02:26 PM
மிகவும் அசத்தலான கவிதைகள படங்களுக்கேற்ப... நன்றிகள் பலப்பல..

நானும் இங்கே நான் என் கேமராவில் பிடித்த படங்களை பதிக்கலாமா நண்பர்களே?

நிச்சயமாக!
உங்கள் படங்கள் கவிதையை தூண்டுபவையாக இருக்கும் பட்சத்தில்,
நிச்சயமாக இடலாம். முடிந்தால் உங்கள் படங்கள் சிலவற்றை
எங்காவது தரவேற்றி லிங்கை தனிமடலில் கொடுங்கள்.
அவை திரிக்கு பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை இங்கு
பகிர்ந்துகொள்வோம்.

Narathar
26-11-2008, 02:10 PM
தொடர்கிறது என் பயணம்
புறாவுக்காகவும் எனக்காவும்.



கையில் பறவை.....
புறப்படுகிறேன்
அமைதிக்காய்.......

எத்தனை பேர் புறப்பட்டாலும் அமைதிதான் கிடைக்காத பொருளாகிவிட்டது!

நன்றி உங்களது கவிதகளுக்கு!!

என்ன ஆச்சு நம்ம மன்ற கவிகளுக்கு???

சிறுபிள்ளை
27-11-2008, 03:04 AM
நிச்சயமாக!
உங்கள் படங்கள் கவிதையை தூண்டுபவையாக இருக்கும் பட்சத்தில்,
நிச்சயமாக இடலாம். முடிந்தால் உங்கள் படங்கள் சிலவற்றை
எங்காவது தரவேற்றி லிங்கை தனிமடலில் கொடுங்கள்.
அவை திரிக்கு பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை இங்கு
பகிர்ந்துகொள்வோம்.

தகவலுக்கு நன்றி நாரதரே..விரைவில் தருகிறேன்.

பாபு
29-11-2008, 01:55 AM
மானம் மறைக்க உடைகேட்டால்
மேனி மிளிர வண்ணமடிக்கின்றீர்கள்,
யுத்தமில்லா அமைதிகேட்டால்
புசித்துவாழ உணவழிக்கின்றீர்கள்
கேட்டதை எப்போ கொடுப்பீர்கள்?


மிக அருமை நாரதரே...

Narathar
29-11-2008, 06:31 AM
நன்றி தங்கள் பாராட்டுக்கு!

அப்படியே ஒரு கவிதையும் தந்திருக்கலாமே பாபு?

சிவா.ஜி
29-11-2008, 08:55 AM
தரையோடு அழுத்திவிட
தயாராய் உயர்ந்த கால்கள்
தலைமீது காத்திருக்க...
தன்னுயிரே போனாலும்
தஞ்சமடைந்த பறவைக் காக்கும்
தற்கால சிபிச் சக்ரவர்த்தி...!

நிரன்
01-12-2008, 05:39 PM
தட்ட முனைகிறதே உன் கால்கள்
ஏன் தழுவ முனையவில்லையா உன் கைகள்
தள்ளிச் செல்கிறேன் என் நிலையிருந்து
தள்ளாடும் ஒரு நாள் உன் நிலை
அன்நாளை என்நாளில் பொன்நாளாக்குவேன்
மதியற்ற உன்னிடம் மரியாதை கொடுத்து

mathuran
02-12-2008, 04:02 AM
மிதிபட எம் தலையிருக்கு
மதிகெட்ட மானுடத்தில்
மானம்காக்க மனமில்லை...
வெந்துபோன வெண்புறாவே!
பொத்திவைத்து காட்டுகிறேன்
இடம்மாறித் துடிக்கும்
இதயத்துடிப்பை
வலப்பக்கம் கேட்டுப்பார்...!

Narathar
02-12-2008, 04:15 AM
தன்னுயிரே போனாலும்
தஞ்சமடைந்த பறவைக் காக்கும்
தற்கால சிபிச் சக்ரவர்த்தி...!

தற்காலத்திலும் சிபிகளின் தேவையை உணர்த்தி நிற்கின்றது
உங்கள் கவிதை பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

நன்றி பங்கு பற்றியமைக்கு..........

Narathar
02-12-2008, 04:20 AM
தட்ட முனைகிறதே உன் கால்கள்
ஏன் தழுவ முனையவில்லையா உன் கைகள்
தள்ளிச் செல்கிறேன் என் நிலையிருந்து
தள்ளாடும் ஒரு நாள் உன் நிலை
அன்நாளை என்நாளில் பொன்நாளாக்குவேன்
மதியற்ற உன்னிடம் மரியாதை கொடுத்து

இன்னாச்செய்தாரை ஒருத்தல்
அவர் நாண நன்னயஞ்செய்ய விளைகின்றீர்கள்

வாழ்த்துக்கள்! இப்படி எல்லோரும் நினைத்திருந்தால்
சமாதானம் எப்பவோ நம்ம கதவை தட்டியிருக்கும்!


காத்திருப்போம் காத்திருப்போம்
கதவுகள் தட்டப்படும் வரை
வெள்ளை வான் காரர்டிடமிருந்தல்ல
வெண்புறாக்களின் சமாதானத்தூதுவர்களிடமிருந்து

உங்கள் கவிதைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

Narathar
02-12-2008, 04:24 AM
மிதிபட எம் தலையிருக்கு
மதிகெட்ட மானுடத்தில்
மானம்காக்க மனமில்லை...
வெந்துபோன வெண்புறாவே!
பொத்திவைத்து காட்டுகிறேன்
இடம்மாறித் துடிக்கும்
இதயத்துடிப்பை
வலப்பக்கம் கேட்டுப்பார்...!

இந்தத்திரிக்கு இன்னுமொரு புதிய கவி கிடைத்ததையிட்டு
மிக்க மகிழ்ச்சி......

தொடர்ந்து இந்தத்திரிக்கும் தங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.

இனி உங்கள் கவிதைக்கு வருவோம்.........

இடம் மாறித்துடிக்கும் இதயங்கள் என்று அருமையாக
எம்மவர் துயர் உணர்த்தி நிற்கின்றது உங்கள் கவிதை

வாழ்த்துக்களும் வரவேற்புக்களும்........
மட்டற்ற மகிழ்ச்சி உங்கள் கவிதையை இங்கு கண்டமையால்

அமரன்
02-12-2008, 06:57 AM
நாரா...
அடுத்த நிழலைத் தாருங்களேன்.

தமிழ்தாசன்
02-12-2008, 04:56 PM
அருமையான பக்கம்!
படத்தைப்படிக்கவும், அவைதரும் பாடத்தைப்படிக்கவும் ஆயுள் போதுமா என்ன?
அத்தனையும் அள்ளிவரும் கவிப்பாடங்கள் அத்தனையும் அற்புதம்.
கருத்தாக்களுக்கும், இப்பக்கத்தை ஆரம்பித்த நண்பருக்கும் பாராட்டுக்கள்.
அத்தோடு படம் பிடித்தவர் விபரமும் தந்தால் (ஏதாவது) நல்லது என நினைத்தேன்.

அமரன்
02-12-2008, 08:22 PM
அன்புள்ள தமிழ்தாசன்!
பல படங்கள் வலையில் அகப்பட்டவை. சில படங்கள் புகைப்படக்கருவின் கண்களால் சிறைப்பிடிக்கப்பட்டவை. எனினும் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார்கள். படங்களால் உடையும் மடையினூடு உங்கள் கவிதையும் பாயட்டுமே இங்கு.

Narathar
03-12-2008, 01:24 PM
இதோ அன்பர்களே.............அடுத்த நிழல்!
எங்கே இந்த நிழலுக்கு உங்கள் கவிதைகளால் உயிரூட்டுங்கள்

http://img26.picoodle.com/img/img26/3/12/3/narathar/f_Nizalukkuuym_6878990.jpg
பட உபயம் pbase இணையதளம்
படத்தை எடுத்தவர் பிரான்ஸை சேர்ந்த Joel Dousset

யவனிகா
03-12-2008, 01:31 PM
எத்தனை முறை
முயற்சித்து விட்டேன்
கவிதை வரவில்லை..
அழுகை தான் வருகிறது..
இனி இப்படி ஒரு தூக்கம்
கிடைக்கவேபோவதில்லை
எனக்கு என்பதால்...

தமிழ்தாசன்
03-12-2008, 02:22 PM
தோள் சாய்ந்த கணமே!
நித்திரை நீளுமோ ?
நீளுமோ நிம்மதி?
நிம்மதி தாயே நின் மடி
மடி என்றா பிரசவித்தாய்
தாய் வாழ்வில் என் இருப்பு.
இருப்பு எண்ணி திடுக்கிடுது என் கனவுலகம்.

பாரதி
03-12-2008, 02:25 PM
அம்மாவின் முதுகிலே ஆவர்த்தனம்
ஆனந்த மயக்கத்தில் சயனம்.
அடுத்த கச்சேரிக்கு
ஆயத்தப் பணியோ?

தமிழ்தாசன்
03-12-2008, 02:26 PM
மிக்க மகிழ்ச்சி
அமரன் அவர்களே!


அன்புள்ள தமிழ்தாசன்!
பல படங்கள் வலையில் அகப்பட்டவை. சில படங்கள் புகைப்படக்கருவின் கண்களால் சிறைப்பிடிக்கப்பட்டவை. எனினும் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார்கள். படங்களால் உடையும் மடையினூடு உங்கள் கவிதையும் பாயட்டுமே இங்கு.

ஓவியத்தை விஞ்சுமா என் கவி ஓவியம்?
முயற்சிக்கிறேன்.

Narathar
03-12-2008, 03:35 PM
52 ஆம் பக்க பார்வைக்காக................


இதோ அன்பர்களே.............அடுத்த நிழல்!
எங்கே இந்த நிழலுக்கு உங்கள் கவிதைகளால் உயிரூட்டுங்கள்

http://img26.picoodle.com/img/img26/3/12/3/narathar/f_Nizalukkuuym_6878990.jpg
பட உபயம் pbase இணையதளம்
படத்தை எடுத்தவர் பிரான்ஸை சேர்ந்த Joel Dousset

தமிழ்தாசன்
03-12-2008, 05:28 PM
தகவலும், படமும் கலக்கல்.

அமரன்
04-12-2008, 08:31 AM
மல்லிச் சரம் மீது
ஒற்றை ரோஜா
முந்தானை மஞ்சம் மீது
பெற்ற ராஜா!

அன்னையின் 'கைப்பிடி'
தூக்கத்தில் பிள்ளை நழுவாதிருக்க
பிள்ளையின் 'கைப்பிடி'
துக்கத்தை அன்னை தழுவாதிருக்க!

இருவர் இதழ்களிலும்
பேச்சுத் தோகைகள் உறங்கினாலும்
இருதயங்கள் இரண்டும்
பேசிக்கொள்கின்றன கதைகள் பல.

ஓ...

இவர்களைப் பார்த்துத்தான்
காதலர்கள் கற்றறிந்தார்களோ
நெஞ்சங்களால் பேசிக்கொள்ள!

ஆதவா
04-12-2008, 08:47 AM
எத்தனை முறை
முயற்சித்து விட்டேன்
கவிதை வரவில்லை..
அழுகை தான் வருகிறது..
இனி இப்படி ஒரு தூக்கம்
கிடைக்கவேபோவதில்லை
எனக்கு என்பதால்...

ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பேரானந்தம்,
மறுமுறை கிடைக்காதா என்று ஏங்கும் மனம்,

அடுத்த ஜென்மம் என்பது உண்மையாகவேண்டும். மீண்டும் ஒருமுறை அம்மாவின் மடி மீதோ, மார்பின் மீதோ உறங்கும் சுகம் கிடைக்கவேண்டும்.

நான் நிறைய முறை இதைப் பற்றி யோசித்திருக்கிறேன் யவனி க்கா...

அருமை..


தோள் சாய்ந்த கணமே!
நித்திரை நீளுமோ ?
நீளுமோ நிம்மதி?
நிம்மதி தாயே நின் மடி
மடி என்றா பிரசவித்தாய்
தாய் வாழ்வில் என் இருப்பு.
இருப்பு எண்ணி திடுக்கிடுது என் கனவுலகம்.

அத் தாய்க்கு, அந்தாதி அளித்த தமிழ்தாசன் ஐயாவின் கவிதை கவர்கிறது. அந்த திடுக்கிடும் கனவுலகம் பலமுறை கண்ணில் வந்து வழிந்ததுண்டு, (தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். அது எப்படிப்பட்ட முறை, வகை என்பது தெரியாது, ஆனால் தோள் சாய்ந்தழவோ, முகம்புதைத்து வெற்றி சூடவோ, பாசத்தை காதலாக மாற்றி கண்ணீர் நனைத்திடவோ மீண்டும் ஒருதாய் கிடைக்கிறாள் என்பது மட்டிலும் மனதிற்கு நம்பிக்கை தருகிறது,)


அம்மாவின் முதுகிலே ஆவர்த்தனம்
ஆனந்த மயக்கத்தில் சயனம்.
அடுத்த கச்சேரிக்கு
ஆயத்தப் பணியோ?

அண்ணே, படத்துக்குக் கவிதை ஒட்டவில்லை (:)) அம்மாவின் மார்பில் அல்லவா குழந்தை உறங்குகிறது???? ஆனால்.., படத்திற்கு ஒட்டாவிடில் என்ன, கவிதை டாப்..... இப்படிப்பட்ட இருப்பைக் கண்டு, அடுத்த கச்சேரியே வேண்டாம், இந்நிலையே போதும் என்றுகூட நினைத்துவிடுவோம்.. :)


மல்லிச் சரம் மீது
ஒற்றை ரோஜா
முந்தானை மஞ்சம் மீது
பெற்ற ராஜா!

அன்னையின் 'கைப்பிடி'
தூக்கத்தில் பிள்ளை நழுவாதிருக்க
பிள்ளையின் கைப்பிடி
துக்கத்தை அன்னை தழுவாதிருக்க!

இருவர் இதழ்களிலும்
பேச்சுத் தோகைகள் உறங்கினாலும்
இருதயங்கள் இரண்டும்
பேசிக்கொள்கின்றன கதைகள் பல.

ஓ...

இவர்களைப் பார்த்துத்தான்
காதலர்கள் கற்றறிந்தார்களோ
நெஞ்சங்களால் பேசிக்கொள்ள!

அமரன்... பல இடங்களில் Cross பண்ணுகிறீர்கள்.. பாராட்டாமல் இருக்க முடிவதில்லை. நல்ல ரைமிங்கான வார்த்தைகளைக் கச்சிதமாகக் கோர்த்து அழகாக முடித்த விதம் மிகவும் அருமை.........

இக்கவிதையையும் படத்தையும் வரும் மின்னிதழுக்குப் பரிந்துரைக்கிறேன்.................

அன்புடன்
ஆதவன்.

பாரதி
04-12-2008, 09:17 AM
கூந்தலில் வாடியப்பூ
தோளில் வாடாப்பூ.

அமரன்
04-12-2008, 08:32 PM
கூந்தலில் வாடியப்பூ
தோளில் வாடாப்பூ.

அசத்தல் அண்ணா..

அவனெழில் கண்டு
பூ வாடியதோ...!
அவன் பரிசம் கொண்டு
மீண்டும் மலராதோ..!

"பொத்தனூர்"பிரபு
04-12-2008, 10:19 PM
///
எத்தனை முறை
முயற்சித்து விட்டேன்
கவிதை வரவில்லை..
அழுகை தான் வருகிறது..
இனி இப்படி ஒரு தூக்கம்
கிடைக்கவேபோவதில்லை
எனக்கு என்பதால்...
////////

மிக அழகான வரிகள்

ஓவியா
04-12-2008, 11:57 PM
கருப்பு வலையலும்
கருமைப் பொட்டும்
எதிர்கால திட்டமா?
எங்கள் கண்ணேல்லாம்
இன்று உனக்கு படுமென்று
யார் சொல்லியது? பலே!!

யாழ்_அகத்தியன்
05-12-2008, 01:03 AM
ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்

*

எல்லாம் சேலைதான்
எனினும்

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

யாழ்_அகத்தியன்
05-12-2008, 01:23 AM
சுடும் சூரியனும்
தோற்றுப்போனான்

தாயே
உன் தோள் சாய்ந்ததால்
வந்த என் தூக்கத்திடம்

mathuran
05-12-2008, 03:28 AM
தேள் கொட்டும்
வாழ்க்கையிதில்
தோள்கொடுக்கும்
என்தாயே...
மார்தட்டி
சொல்லிடுவேன்
உன் விழிப்பில்
என்னை துயிலவைக்கும்
உன் அன்பிற்கு
நிகரேது...?

வசீகரன்
05-12-2008, 07:02 AM
அன்னையின் ஆரவணைப்பில்
ஆழ்ந்திருக்கும் அழகே...
அள்ளிப்பருகிட ஆவல் கொள்ளுதே
உன் அழகே....

கண்ணயர்ந்து கவிந்திருக்கும்
கனியமுதே...
கண்பட்டு போகுமே இந்த கணமே...
வெள்ளை மனம் கொண்ட உன்
முகம் காண்கையில் கொள்ளை
போனது என் மனமே..

ஆதவா
05-12-2008, 08:09 AM
அன்னையின் ஆரவணைப்பில்
ஆழ்ந்திருக்கும் அழகே...
அள்ளிப்பருகிட ஆவல் கொள்ளுதே
உன் அழகே....

கண்ணயர்ந்து கவிந்திருக்கும்
கனியமுதே...
கண்பட்டு போகுமே இந்த கணமே...
வெள்ளை மனம் கொண்ட உன்
முகம் காண்கையில் கொள்ளை
போனது என் மனமே..

நல்ல ட்யூன் கிடைத்தால் பாடலாக பாடப்பெறலாம்... படத்திற்குத் தகுந்தாற்போல் கவிதை...
வாழ்த்துக்கள்


தேள் கொட்டும்
வாழ்க்கையிதில்
தோள்கொடுக்கும்
என்தாயே...
மார்தட்டி
சொல்லிடுவேன்
உன் விழிப்பில்
என்னை துயிலவைக்கும்
உன் அன்பிற்கு
நிகரேது...?

ஆமாம் மதுரன்,,, நிகரில்லைதான்.. அம்மாவின் மடியில் படுத்துறங்கும் எந்த ஒருவனுக்கும் கோபம் நீங்கி, மனம் தெளிவுறும்... என்றாவது ஒருநாள் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் கவிதை கொட்டும்... தூரக் கிடக்கும் பேனா என்னை வெறித்துக் கொண்டேயிருக்கும்..


சுடும் சூரியனும்
தோற்றுப்போனான்

தாயே
உன் தோள் சாய்ந்ததால்
வந்த என் தூக்கத்திடம்


ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்

*

எல்லாம் சேலைதான்
எனினும்

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

அருமை யாழ்....

யாழிசைத்ததைப் போன்று மெல்லிசை நிலவுகிறது உங்கள் கவிதையில்... (பேக்ரவுண்ட் மியூசிக் :D)

மெத்தை இதுவரையிலும் அளித்ததெல்லாம் துக்கம்... உன் கரங்கள் அளிக்கிறது எனக்குத் தூக்கம். நிம்மதியை சேலைக்குள் வைத்து நெய்தவர்களுக்கு நன்றி நவிழும் இக்கவிதைக்கு வந்தனங்கள்...

மிக அழகாக கட்டிய கவிதை..



கருப்பு வலையலும்
கருமைப் பொட்டும்
எதிர்கால திட்டமா?
எங்கள் கண்ணேல்லாம்
இன்று உனக்கு படுமென்று
யார் சொல்லியது? பலே!!

இன்னாக்கா!! ஓவியாக்கா!!! நல்ல சொகமாத்தான் கீறியா? :)

நீங்கள் கவிதை எழுதினீர்களா? இல்லை கமெண்ட் அடித்தீர்களா? (தா.செ.அ மன்னிக்கவும்) கண்ணு படும் என்பதால்தான் என்னவோ கண்ணை மூடி நித்திரை கொள்ளுதோ குழந்தை??

அழகு அக்கா..


கூந்தலில் வாடியப்பூ
தோளில் வாடாப்பூ.

வாடியப்பூவுக்கு சுகந்தம் ஒருநாள்
வாடாப்பூவுக்கு எதுவரை?

இருவரிகளில் அசத்திய அண்ணலுக்குப் பாராட்டுக்கள் :)

தமிழ்தாசன்
05-12-2008, 10:19 AM
உங்கள் கவிதை.அதுவே அழகான பின்னூட்டம்.
ஆதவா! அதுவே அழகு தரும். ஒளிப்பூட்டும்.
உங்கள் கவிவரிகளை எதிர்பார்த்து.

ஆதவா
05-12-2008, 12:10 PM
உங்கள் கவிதை.அதுவே அழகான பின்னூட்டம்.
ஆதவா! அதுவே அழகு தரும். ஒளிப்பூட்டும்.
உங்கள் கவிவரிகளை எதிர்பார்த்து.

சிலமுறை இந்தக் கவிதை வரிகளை வரவழைக்க ரொம்பவும் மெனக்கெடுவதுண்டு தமிழ்தாசன் ஐயா.. அது ஒரு கட்டாயத் திணிப்புக்கு உள்ளாவதைக் கண்டு கவிதை எழுதுவதை நிறுத்தி வேறு செயல்களை கவனம் செலுத்தப் பார்ப்பேன்.. இதுவும் ஒருவகையில் வறட்சி. நினைவாற்றலின் வார்த்தை வறட்சியால் ஒரு கட்டுக்குள் கட்டத் தெரியாமல் எத்தனிக்கும் மனம். அதற்காக இப்படம் உணர்வுகளை எழுப்பவில்லை என்று எண்ணவியலாது... நான் சொல்ல நினைக்க வந்ததை வேறு ஒருவர் சொல்லிவிட்டதால் மேலதிகம் சொல்ல என் வார்த்தை இடங்கொடுக்கவில்லை.

அன்புடன்
ஆதவன்

அக்னி
05-12-2008, 01:09 PM
கருவறையில் சுமந்தாய்,
கோயிலானாய்...
கைகளில் சுமக்கின்றாய்,
தெய்வமானாய்...

சுகமானலும் சுமை உனக்கு...
சுமையானலும் சுகம் எனக்கு...

உன் சேலையின் தடுப்பைத்
தாண்டி ஸ்பரிசிக்கின்றாய்...
பூ மாலையின் சுகந்தம்
மேவி வாசமாகின்றாய்...

தடுக்க முடியாததால்
தாங்குதோ சேலை...
தவிர்க்க முடியாததால்
வாடுதோ மாலை...

ஆதவா
05-12-2008, 01:40 PM
கருவறையில் சுமந்தாய்,
கோயிலானாய்...
கைகளில் சுமக்கின்றாய்,
தெய்வமானாய்...

சுகமானலும் சுமை உனக்கு...
சுமையானலும் சுகம் எனக்கு...

உன் சேலையின் தடுப்பைத்
தாண்டி ஸ்பரிசிக்கின்றாய்...
பூ மாலையின் சுகந்தம்
மேவி வாசமாகின்றாய்...

தடுக்க முடியாததால்
தாங்குதோ சேலை...
தவிர்க்க முடியாததால்
வாடுதோ மாலை...

விக்கிரகம் இருக்குமிடத்தை கர்ப்பக்கிரகம் என்று அழைப்பார்கள். அவ்வறை இறை சிலைக்கு கருவறை என்று பொருளாகிறது. அதை அப்படியே அழகாக உபயோகித்தமைக்கு சபாஷ் அக்னி.

சுமையொரு சுகமானால் சுமையென்றழைப்பதில்லை அக்னி, நாம் ஒவ்வொரு விதத்திலும் ஏதாவது ஒன்றை சுமந்து கொண்டுதான் இருக்கிறோம்.. இதே அன்னை, குழந்தை நிலை உரித்து சிறுவனான பின்னர் தூக்கியலைந்தால் அது சுமையெனப்படும்.

பூவைச் சுமக்க வலிப்பதில்லை கைகள்.

எஞ்சிய வரிகளுக்கு நோ கமெண்ட்ஸ்....

அக்னி
05-12-2008, 08:07 PM
பூவைச் சுமக்க வலிப்பதில்லை கைகள்.

பூவைச் சுமக்க வலிப்பதில்லை கைகள்...
பூவைச் சுமக்க வலிப்பது, இல்லை கைகள்...

எஞ்சிய வரிகளுக்கு நோ கமெண்ட்ஸ்....

அவற்றில் விசேடமாக ஏதுமில்லைதான்.
ஆனாலும், படம் சார்ந்து வரட்டுமே என்றுதான் வரைந்தேன்.
உண்மையில், நான் முற்றுப்புள்ளி போட எண்ணியது, முதல் நான்கு வரிகளோடுதான்.

உங்கள் விமர்சனத்திற்காகவே, நிறைய எழுதலாம்.

நன்றி ஆதவரே,
விமர்சனத்திற்கும், ஊக்குவிப்புக்கும்...

அமரன்
05-12-2008, 08:24 PM
கருவறையில் இருப்பது - தெய்வம் - மூலவர்
தோளில் சுமப்பது - தெய்வம் - உற்சவ மூர்த்தி.

கோயிலாகி.
பூ'சித்து
புனஸ்கரித்து
வாகனமாகி
தேராகி
தெய்வமாகி..

இப்படிக் கவிதையை வடிவமைத்திருந்தால் சுவை அத்கரித்திருக்குமோ அக்னி.

கவிதைகளை நாடி பிடித்து அரோக்கியம் தரும் ஆதவாவுக்காகவே கவிதைகளை எழுதிக் குவிக்கலாம் என்ற அக்னியின் கருத்து சாலப் பொருத்தம்.

அடுத்த நிழலை யாராச்சும் கொடுங்கள் மக்களே!!

"பொத்தனூர்"பிரபு
05-12-2008, 09:11 PM
http://img26.picoodle.com/img/img26/3/12/3/narathar/f_Nizalukkuuym_6878990.jpg

:icon_ush::icon_ush::icon_ush:""உஷ்ஷ்ஷ்ஷ்
சப்தம் போடாதிங்க":icon_ush::icon_ush::icon_ush:

Narathar
06-12-2008, 02:07 AM
அப்பாடா!!! எத்தனை கவிகள்?
எத்தகைய விமர்சனங்கள்?
நன்றி நன்றி கவி எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும்
விமர்சித்த ஆதவா மற்றும் அனைவருக்கும்!

அமரன் சொன்னதுபோல் யாராவது அடுத்த நிழல் தரலாமே? ( இல்லைன்னா நான் கொடுத்துறுவேன்..........)

தமிழ்தாசன்
09-12-2008, 11:02 PM
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/SL380624.jpg
மன்ற முகம்தெரியா ஆனால் அன்பு விடைபகர்வார் அமரன் அவர்களுக்கு என் மகிழ்ச்சி.

படம் எடுத்தவர் பெயர் தெரியவில்லை. தமிழர்தாயகம், வயல் வெளிக்காட்சி.

பாலகன்
10-12-2008, 01:17 AM
ஓங்கி வளர்ந்த தென்னை
உள்ளே ஒய்யாரமாய் இருக்கும்
பண்ணை வீட்டுக்கு காவலோ?
எங்காலும் உயரமுடியவில்லையே
என்ற ஆதங்கத்தில் பயிர்களோ?

Narathar
12-12-2008, 02:49 AM
எங்கே அன்பு சொந்தங்களே.........
தமிழ் தாசனின் பச்சை வயல் நிழலுக்கு உங்கள் கவிவரிகளால் உயிரூட்டுங்கள்!!!

காத்துக்கிடக்கிறது "பச்சை வயல்" உங்கள் கவிதை நீரூற்றுக்காக.......

ஆதவா
12-12-2008, 03:29 AM
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/SL380624.jpg
மன்ற முகம்தெரியா ஆனால் அன்பு விடைபகர்வார் அமரன் அவர்களுக்கு என் மகிழ்ச்சி.

படம் எடுத்தவர் பெயர் தெரியவில்லை. தமிழர்தாயகம், வயல் வெளிக்காட்சி.

படம் தெரியவில்லை... வேறு தளத்தில் ஏற்றித் தாருங்களேன்...

பாரதி
12-12-2008, 05:28 AM
எந்த வருடம் எடுத்ததோ..?
ஏக்கப்பெருமூச்சுதான் வருகிறது -
முடியிழந்த தென்னைகள்,
ஆழ அழுந்திப்போன அழகுப்பயிர்கள்,
அலங்கோலத்தின் அடையாளச்சின்னமாய்
எல்லாப்பக்கமும் குண்டுதாங்கி குற்றுயிருடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு,
எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்
துப்பாக்கிச்சத்தம்;
இவற்றின் நடுவே.....
எப்போதோ எடுத்த இப்படம்
வயலின் பசுமைபோல்
மனதில் பசுமையாய்...

Narathar
12-12-2008, 05:37 AM
படம் தெரியவில்லை... வேறு தளத்தில் ஏற்றித் தாருங்களேன்...


http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=30&pictureid=168

இதோ ஆதவா.........
உங்கள் கவிதையை எதிர்பார்த்து!

அக்னி
12-12-2008, 10:45 PM
பத்திரப்படுத்தி வையுங்கள்...
படத்திலாவது பசுமையாக
இருக்கட்டும்,
நம் தாய்நிலம்...

உயிர்வாழ விதைக்கப்பட்ட
இந்த வயல்களுக்குள்தான்,
இன்று
உயிரெடுக்கப் புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகள்...

ஓங்கியுயர்ந்த
அந்தத் தென்னைகள்தான்,
இன்று
காப்பரண்களில்
தடுப்பரண்களாய்...

அதோ...
கூடிக் குலாவிய
அந்த வீடுதான்,
இங்கே,
குவியலாய்க் கிடப்பது...

பத்திரப்படுத்தி வையுங்கள்...
படத்திலாவது பார்த்துப்
பரவசப்படட்டும்,
நம் சந்ததி...

Narathar
13-12-2008, 02:38 AM
எங்காலும் உயரமுடியவில்லையே
என்ற ஆதங்கத்தில் பயிர்களோ?

வித்தியாசமான பார்வை வாழ்த்துக்கள் அழகிய மணாளன் அவர்களே! தொடர்ந்து வாங்க! இன்னுமின்னும் எழுதுங்க..............



துப்பாக்கிச்சத்தம்;
இவற்றின் நடுவே.....
எப்போதோ எடுத்த இப்படம்



பத்திரப்படுத்தி வையுங்கள்...
படத்திலாவது பசுமையாக
இருக்கட்டும்,
நம் தாய்நிலம்....

பசுமையிலும் உங்கள் பார்வைக்கு தென்படுவது யுத்ததின் அகோரம்!
ஆம் அவ்வளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றோம்...............
எப்போ வரும் விடிவு காலம்????

அருமையான கவிதை வாழ்த்துக்கள் பாரதி மற்றும் அக்னி.

ஆதவா
13-12-2008, 03:45 AM
ஓங்கி வளர்ந்த தென்னை
உள்ளே ஒய்யாரமாய் இருக்கும்
பண்ணை வீட்டுக்கு காவலோ?
எங்காலும் உயரமுடியவில்லையே
என்ற ஆதங்கத்தில் பயிர்களோ?

அழகிய மணவாளன்... படத்தில் இருப்பதை அப்படியே கவிதையில் அப்பட்டமாகக்

காண்பித்துவிட்டீர்கள்.. ஆனால் இன்னும் கொஞ்சம் இக்கவிதையை வளர்த்து மெஸெஜ்

சொல்லியிருக்கலாம்....


எந்த வருடம் எடுத்ததோ..?
ஏக்கப்பெருமூச்சுதான் வருகிறது -
முடியிழந்த தென்னைகள்,
ஆழ அழுந்திப்போன அழகுப்பயிர்கள்,
அலங்கோலத்தின் அடையாளச்சின்னமாய்
எல்லாப்பக்கமும் குண்டுதாங்கி குற்றுயிருடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு,
எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்
துப்பாக்கிச்சத்தம்;
இவற்றின் நடுவே.....
எப்போதோ எடுத்த இப்படம்
வயலின் பசுமைபோல்
மனதில் பசுமையாய்...

காடு இழந்தால் வானம் அழுவதில்லை.

இன்றைய நகர வாழ்வில் கொலை செய்யப்படும் பசுமைகளை இனி எதிர்காலத்தில் இப்படி படங்களாக வைத்துத்தான் பார்க்கவேண்டுமோ என்னவோ??

பூமித்தாயின் பசுஞ்சேலையை உரித்து, அவளை மானபங்கப்படுத்தும் மனித குலத்திற்கு மன்னிப்பே கிடையாது.........

அருமையான கவிதை அண்ணா.. முடியிழந்த தென்னைகள் என்ற வார்த்தையாடலை ரசித்தேன்.


பத்திரப்படுத்தி வையுங்கள்...
படத்திலாவது பசுமையாக
இருக்கட்டும்,
நம் தாய்நிலம்...

உயிர்வாழ விதைக்கப்பட்ட
இந்த வயல்களுக்குள்தான்,
இன்று
உயிரெடுக்கப் புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகள்...

ஓங்கியுயர்ந்த
அந்தத் தென்னைகள்தான்,
இன்று
காப்பரண்களில்
தடுப்பரண்களாய்...

அதோ...
கூடிக் குலாவிய
அந்த வீடுதான்,
இங்கே,
குவியலாய்க் கிடப்பது...

பத்திரப்படுத்தி வையுங்கள்...
படத்திலாவது பார்த்துப்
பரவசப்படட்டும்,
நம் சந்ததி...

அப்படியொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது அக்னி. மக்கள்தொகை பெருக்கத்தில் நிற்க இடமில்லா நிலையில் பசுமைகள் அழிக்கப்பட்டோ,
ஒருத்தரையொருத்தர் முந்திக் கொள்வதில் குண்டுகள் பட்டு கருகிப்போய்விடவோ விதிக்கப்பட்ட இயற்கை......... மீண்டெழுந்தோ வெகுண்டெழுந்தோ மனிதகுலத்தின் மேல் கோபப்படுவதில் ஆச்சரியமில்லை..

அருமை..... அக்னி...........

ஆதவா
13-12-2008, 03:51 AM
பசுங்காட்டுக் கதிர்களின்
நடனமும்
தென்னங்கீற்றுத் தழுவலின்
முணுகளும்
வழிபதிக்கும் நீர்த்தடத்தின்
தழும்பும்
கீதம் இசைக்கும் குயிலின்
கர்வமும்

என் வீட்டுச் சுவற்றில்
ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

பாபு
13-12-2008, 03:52 AM
நீ நினைத்து
நான் நனைந்து,

நான் நனைந்து
நாம் இணைந்தால்

நம் குழந்தை
வாய் சிரிக்கும்

பச்சைப் பசேல்
என பற்கள் தெரிய !!

ஆதவா
13-12-2008, 03:55 AM
நீ நினைத்து
நான் நனைந்து,

நான் நனைந்து
நாம் இணைந்தால்

நம் குழந்தை
வாய் சிரிக்கும்

பச்சைப் பசேல்
என பற்கள் தெரிய !!


அருமை பாபு....

இக்கவிதையினூடே வானுக்கும் பூமிக்குமான காதலொன்றைத் திணித்து அழகிய கவிதை வாசித்துவிட்டீர்கள்...

பிரம்மாதம்

Narathar
13-12-2008, 11:16 AM
என் வீட்டுச் சுவற்றில்
ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.


சொல்லவந்த மெஸேஜை "பச்சக்" என்று அந்த கடைசிவரியில்
அருமையாக சொல்லிவிட்டிர்கள்! வாழ்த்துக்கள் ஆதவரே.............:icon_b:

அக்னி
13-12-2008, 11:45 AM
என் வீட்டுச் சுவற்றில்
ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஒட்டி வைக்கப்பட்டிருந்த
சுவரும்
இன்றில்லை...

அருமை ஆதவா...

இறுதி வார்த்தை இறந்தகாலத்தில் அமைந்தது,
கவிதை சொல்ல வந்ததை, முழுமையாகவே வெளிப்படுத்துகின்றது.

மிகுந்த பாராட்டுக்கள்...

Narathar
13-12-2008, 11:59 AM
ஒட்டி வைக்கப்பட்டிருந்த
சுவரும்
இன்றில்லை...



தீபன் இல்லாத குறையை நன்றாகவே தீர்க்கின்றீர்கள்............

நன்றி

தமிழ்தாசன்
13-12-2008, 12:37 PM
அந்தக்காலம் அது பசுமைதான்.
நினைவுத்திடல்களில் தெரியும் உம் நிகழ்வுகளின் பதிவுகள்.
அத்தனையும் தத்தம் வாழ்வியற் பதிவுகளின் கசிவுகள்.
நாரதர் குறிப்பிட்டவை பொறுத்தமான பார்வைகள்.
படைப்புக்கள் அன்றை, இன்றைப் பக்கங்களைப் புறட்டுகின்றன.
பசுமையே! மனிதக் கனவு.

Narathar
14-12-2008, 12:01 AM
எங்காலும் உயரமுடியவில்லையே
என்ற ஆதங்கத்தில் பயிர்களோ?



வயலின் பசுமைபோல்
மனதில் பசுமையாய்...



படத்திலாவது பார்த்துப்
பரவசப்படட்டும்,
நம் சந்ததி...



என் வீட்டுச் சுவற்றில்
ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.




பச்சைப் பசேல்
என பற்கள் தெரிய !!



படைப்புக்கள் அன்றை, இன்றைப் பக்கங்களைப் புறட்டுகின்றன.
பசுமையே! மனிதக் கனவு.

நிழலுக்கு உயிர்தந்த மன்றக்கவிகள் அனைவருக்கும் நாரதரின் நன்றிகள் உரித்தாகட்டும்! உரிய இ பணம் சீக்கிரமே உங்கள் கணக்கை நாடிவரும்.................. வரவிட்டால் தட்டிக்கேட்கப்படவேண்டிய இடம் உயர்திரு அமரன் அவர்கள்.............

நாராயணா!!!!

இந்த நிழலையும் வழங்கி.............
அதற்கு கவிஉயிரும் ஊட்டிய தமிழ் தாசருக்கு கூடுதல் நன்றி!

சரி அடுத்த நிழலுக்கு போவோமா?

Narathar
14-12-2008, 12:06 AM
இதோ மன்றக்கவிகளே...........
உங்கள் கவிப்புலமையை தூண்ட
அடுத்த நிழல்...............

http://img37.picoodle.com/img/img37/3/12/13/narathar/f_Nizalukkuuym_74467da.jpg

எங்கே உங்கள் கவிதைகள்
இந்நிழலுக்கு உயிரூட்டட்டும்

தமிழ்தாசன்
14-12-2008, 12:40 AM
ஆழப் புதைந்து போனதே!
வயதும், வாழ்வும்.
ஆகப் போவது என்னவோ?

ஆதவா
15-12-2008, 12:13 PM
துருப்பிடித்த இயந்திரமும்
வெறுப்படித்த கிழவன் வாழ்வும்
காண்கையிலே
கவிதையும் கண்ணீரில் மூழ்குகிறது...

(யாராச்சும் இதைக் கவிதைன்னு சொல்லிடாதீங்க :D)

தமிழ்தாசன்
15-12-2008, 12:39 PM
துருப்பிடித்த இயந்திரமும்
வெறுப்படித்த கிழவன் வாழ்வும்
காண்கையிலே
கவிதையும் கண்ணீரில் மூழ்குகிறது...
(யாராச்சும் இதைக் கவிதைன்னு சொல்லிடாதீங்க :D)

அருமை வரிகள்

இவ் வரி என்னைக் கவர்ந்தது.

கவிதையும் கண்ணீரில் மூழ்கியது கண்டு,
கண்களும் கவிதையில் கரைவதை என்னென்பேன்.
கண்ணீரும் கவியெழுத விளைந்தால் பூமியும் முழ்கிடும் அன்றோ.
காரணம் உலகமே காய்ந்திடும் கண்ணீர்கண்டு கண்ணீரில் சுழலுதின்று.

----
துருப்படிந்த இயந்திரமும்
வெறுப்படிந்த முதுமையும் கண்டு
கவிதையே கண்ணீரில் மூழ்கியதே!

என வந்திருக்கலாமோ?
------

நிரன்
15-12-2008, 01:40 PM
துருப்பிடித்த இயந்திரமும்
வெறுப்படித்த கிழவன் வாழ்வும்
காண்கையிலே
கவிதையும் கண்ணீரில் மூழ்குகிறது...

(யாராச்சும் இதைக் கவிதைன்னு சொல்லிடாதீங்க :D)

நன்றாக உள்ளது வரிகள்!

படத்திற்கு நன்றாகவே பெருந்திய வரிகள் கவி வரிகளை
படிக்கும்போது அப்படமே மனதில் காட்சியளிக்கிறது.

(நாங்கள் கவிதை இல்ல என்டு சென்னாலும் நீங்க விட்டுடுவீங்களாக்கும்:aetsch013: :D:D சும்மம்மா..)

நிரன்
15-12-2008, 01:45 PM
அருமை வரிகள்

இவ் வரி என்னைக் கவர்ந்தது.

கவிதையும் கண்ணீரில் மூழ்கியது கண்டு,
கண்களும் கவிதையில் கரைவதை என்னென்பேன்.
கண்ணீரும் கவியெழுத விளைந்தால் பூமியும் முழ்கிடும் அன்றோ.
காரணம் உலகமே காய்ந்திடும் கண்ணீர்கண்டு கண்ணீரில் சுழலுதின்று.

----
துருப்படிந்த இயந்திரமும்
வெறுப்படிந்த முதுமையும் கண்டு
கவிதையே கண்ணீரில் மூழ்கியதே!

என வந்திருக்கலாமோ?
------


ஆதவா அண்ணாவோட கவிக்கு உங்கள் அருமையான
பின்னுட்ட வரிகள்...
தொடருங்கள் ..............


(என்னால எட்ட இருந்து தட்டிக் கொடுக்கத்தான் இயலும்
கிட்ட வந்து பின்னுட்டம் கொடுக்க ஞானம் இல்லங்கோவ்)

ஆதவா
15-12-2008, 01:58 PM
அருமை வரிகள்

இவ் வரி என்னைக் கவர்ந்தது.

கவிதையும் கண்ணீரில் மூழ்கியது கண்டு,
கண்களும் கவிதையில் கரைவதை என்னென்பேன்.
கண்ணீரும் கவியெழுத விளைந்தால் பூமியும் முழ்கிடும் அன்றோ.
காரணம் உலகமே காய்ந்திடும் கண்ணீர்கண்டு கண்ணீரில் சுழலுதின்று.

----
துருப்படிந்த இயந்திரமும்
வெறுப்படிந்த முதுமையும் கண்டு
கவிதையே கண்ணீரில் மூழ்கியதே!

என வந்திருக்கலாமோ?
------


நன்றாக உள்ளது வரிகள்!

படத்திற்கு நன்றாகவே பெருந்திய வரிகள் கவி வரிகளை
படிக்கும்போது அப்படமே மனதில் காட்சியளிக்கிறது.

(நாங்கள் கவிதை இல்ல என்டு சென்னாலும் நீங்க விட்டுடுவீங்களாக்கும்:aetsch013: :D:D சும்மம்மா..)


இருவருக்கும் நன்றி...

பிக்காஸோ கிறுக்கியதெல்லாம் ஓவியமாகக் கருதினார்கள்... அவர் அமைப்புறாவை வரைந்த பொழுது அவர் எடுத்துக் கொண்ட நொடிகள் சுமார் பத்து நொடிகள் இருக்கலாம்...
அதைப் போன்றுதான்.. எனக்குக் கவிதை ஒன்றும் தோன்றவில்லை.. ஏதாவது தோன்றியதை எழுதலாமே என்று வந்தேன்.... அட..... நம்ம ஐயாவும் நிரஞ்சனும் நம்மளை இப்படி பண்ணிப்புட்டீங்களே :D

மனமார்ந்த நன்றி.......

எங்கே நிரஞ்சன்? உங்கள் கவிதை???

பாரதி
15-12-2008, 02:12 PM
தேய்ந்த இயந்திரத்தில்
ஓய்ந்த கைகள்...
தண்ணீரால் துருப்பிடிப்பதையும்
கண்ணீரால் முடிநரைப்பதையும்
எண்ணி எப்படித்தான்
நகைக்க முடிகிறது
தத்தளிக்கும் வாழ்க்கையிலும்?

ஆதவா
15-12-2008, 02:24 PM
ஆழப் புதைந்து போனதே!
வயதும், வாழ்வும்.
ஆகப் போவது என்னவோ?

அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை எத்தனை இனிப்பாக இருக்கும்!!!! வயதும் வாழ்வும் போனாலும் கழித்த வாழ்வை எண்ணி சுகித்திருப்போம்....

நல்லதொரு கவிதை தமிழ்தாசன் ஐயா..




தேய்ந்த இயந்திரத்தில்
ஓய்ந்த கைகள்...
தண்ணீரால் துருப்பிடிப்பதையும்
கண்ணீரால் முடிநரைப்பதையும்
எண்ணி எப்படித்தான் நகைக்கமுடிகிறது
தத்தளிக்கும் வாழ்க்கையிலும்?

மனிதர்கள் மீண்டும் குழந்தைகள் ஆவது கிழப்பருவத்தில் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.. வாழ்க்கை நீரில் தத்தளித்தால்தான் நம்பிக்கை நீச்சல் கற்றுக் கொள்ளமுடியும்....

அழகிய பொருத்தமான கவிதை அண்ணா..

நிரன்
15-12-2008, 02:29 PM
இருவருக்கும் நன்றி...

பிக்காஸோ கிறுக்கியதெல்லாம் ஓவியமாகக் கருதினார்கள்... அவர் அமைப்புறாவை வரைந்த பொழுது அவர் எடுத்துக் கொண்ட நொடிகள் சுமார் பத்து நொடிகள் இருக்கலாம்...
அதைப் போன்றுதான்.. எனக்குக் கவிதை ஒன்றும் தோன்றவில்லை.. ஏதாவது தோன்றியதை எழுதலாமே என்று வந்தேன்.... அட..... நம்ம ஐயாவும் நிரஞ்சனும் நம்மளை இப்படி பண்ணிப்புட்டீங்களே :D

மனமார்ந்த நன்றி.......

எங்கே நிரஞ்சன்? உங்கள் கவிதை???

நாங்க மின்மினி போல இரவுலை மடடும்தான் கண்ணுக்குத் தொரிவோம்
நீங்கள் இப்படத்திற்கு கவி போட்டால் பிறகு நான் கிட்டவே வரமாட்டன்
அந்த யாருமே கவனிக்காமல் .இருக்கிற படத்தைத்தான் நான் கவனிப்பேன் (1 நான் மட்டும் கலந்து கொண்டால் நான் தானே வெற்றி )
கி.... கி .. கி:D
புதுசா மன்றத்தில் கவிதைப் போட்டி வேற தொடங்கி இருக்கிறார்கள்.
புதிதாய் ஒரு பூமி. என்று அதுக்காவது முயற்சி செய்வம்.... அந்த
வாக்கெடுப்பில ஒரு ஓரத்தில பேர் வர்றதுக்காவது.... :D:D:D:D
நாளையிலுருந்து 2 வார கல்லுரி விடுமுறை.... படிக்கத்தான் இல்ல
உருப்படியா இதையாவது செய்வமன்....

(ரூம் போட்டு யோசிக்கேலது ரூமை புாட்டீட்டுத்தான் யோசிக்கனும்:D:D:D)

யவனிகா
15-12-2008, 02:34 PM
தையல் எந்திரத்தில்
உன் தையலவள் விட்டுச்சென்ற
ரேகைகளை அழிக்க
தண்ணீருக்கு சக்தியில்லை...
எப்படியும் நீ கரைசேர்ந்திருப்பாய்,
துருப்பிடிக்க முடியாத உன் காதலுடன்....
எனக்குத் தெரியும், கட்டாயம்
உன் கல்லறைக்கும் நீ
இதை சுமந்தே செல்வாய்....

நிரன்
15-12-2008, 02:35 PM
தேய்ந்த இயந்திரத்தில்ஓய்ந்த கைகள்...தண்ணீரால் துருப்பிடிப்பதையும்கண்ணீரால் முடிநரைப்பதையும்எண்ணி எப்படித்தான் நகைக்க முடிகிறதுதத்தளிக்கும் வாழ்க்கையிலும்?

கவிதையை ஒரு வரியில் கொடுத்திருந்தாலும் பஞசமிர்தம் போல் சுவைக்கிறது.

ஆதவன் அண்ணா கீழே பிரித்த பின்புதான் 6 வரி என்று தெரிந்தது......

நிரன்
15-12-2008, 02:42 PM
தையல் எந்திரத்தில்
உன் தையலவள் விட்டுச்சென்ற
ரேகைகளை அழிக்க
தண்ணீருக்கு சக்தியில்லை...
எப்படியும் நீ கரைசேர்ந்திருப்பாய்,
துருப்பிடிக்க முடியாத உன் காதலுடன்....
எனக்குத் தெரியும், கட்டாயம்
உன் கல்லறைக்கும் நீ
இதை சுமந்தே செல்வாய்....


மேலே சுட்டிக்காட்டிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
யானிகா + அக்கா.. வரிகள் நன்றன்று என்றியலாது....

கல்லறைக்கு சுமந்து செல்வது
காதலையா இல்லை..... கையிலிருக்கும் .இயந்திரத்தையா....?

ஆதவா
17-12-2008, 10:06 AM
நாங்க மின்மினி போல இரவுலை மடடும்தான் கண்ணுக்குத் தொரிவோம்
நீங்கள் இப்படத்திற்கு கவி போட்டால் பிறகு நான் கிட்டவே வரமாட்டன்
அந்த யாருமே கவனிக்காமல் .இருக்கிற படத்தைத்தான் நான் கவனிப்பேன் (1 நான் மட்டும் கலந்து கொண்டால் நான் தானே வெற்றி )
கி.... கி .. கி:D
புதுசா மன்றத்தில் கவிதைப் போட்டி வேற தொடங்கி இருக்கிறார்கள்.
புதிதாய் ஒரு பூமி. என்று அதுக்காவது முயற்சி செய்வம்.... அந்த
வாக்கெடுப்பில ஒரு ஓரத்தில பேர் வர்றதுக்காவது.... :D:D:D:D
நாளையிலுருந்து 2 வார கல்லுரி விடுமுறை.... படிக்கத்தான் இல்ல
உருப்படியா இதையாவது செய்வமன்....

(ரூம் போட்டு யோசிக்கேலது ரூமை புாட்டீட்டுத்தான் யோசிக்கனும்:D:D:D)

அப்படி என்ன பாவங்க பண்ணினேன்?? நான் கவிதை எழுதினா நீங்க வரமாட்டீங்களா? என்னக் கொடுமை இது?

நீங்க ஒன் மேன் ஆர்மி தான்... அதற்காக இப்படியா?

புதுப்போட்டியிலாவது பங்கெடுப்பேன்னு சொன்னீங்களே, அதுவே போதும்....



தையல் எந்திரத்தில்
உன் தையலவள் விட்டுச்சென்ற
ரேகைகளை அழிக்க
தண்ணீருக்கு சக்தியில்லை...
எப்படியும் நீ கரைசேர்ந்திருப்பாய்,
துருப்பிடிக்க முடியாத உன் காதலுடன்....
எனக்குத் தெரியும், கட்டாயம்
உன் கல்லறைக்கும் நீ
இதை சுமந்தே செல்வாய்....

நல்ல கவிதை யவனிக்கா..

காதல் கவிதையாகக் கொடுத்திருக்கிறீர்கள்... உன் கல்லறைக்கும் இதை சுமந்து செல்வாய் என்று சொன்னீர்களே, எதை என்று சொல்லுங்கள்..

அன்புடன்
ஆதவன்.

சிவா.ஜி
17-12-2008, 11:36 AM
நல்ல கவிதை யவனிக்கா..

காதல் கவிதையாகக் கொடுத்திருக்கிறீர்கள்... உன் கல்லறைக்கும் இதை சுமந்து செல்வாய் என்று சொன்னீர்களே, எதை என்று சொல்லுங்கள்..

அன்புடன்
ஆதவன்.


துருப்பிடிக்க முடியாத காதலைத்தான் ஆதவா........

Narathar
17-12-2008, 12:06 PM
இதோ மன்றக்கவிகளே...........
உங்கள் கவிப்புலமையை தூண்ட
அடுத்த நிழல்...............

http://img37.picoodle.com/img/img37/3/12/13/narathar/f_Nizalukkuuym_74467da.jpg

எங்கே உங்கள் கவிதைகள்
இந்நிழலுக்கு உயிரூட்டட்டும்

54 ஆம் பக்க பார்வைக்காக....

நிரன்
17-12-2008, 12:20 PM
புதுப்போட்டியிலாவது பங்கெடுப்பேன்னு சொன்னீங்களே, அதுவே போதும்....




எல்லாம் அவன் செயல்........:D:D:D

பாபு
18-12-2008, 01:16 AM
கண்டுபிடித்துவிட்டேன் !
முதல் திருமண நாளில்
என் மனைவிக்கு கொடுத்த பரிசை !!
இப்போது தான் நான்
மகிழ்ச்சி வெள்ளத்தில் !!

Narathar
19-12-2008, 05:49 AM
என்ன ஆதவரே...........
அடுத்த நிழல் கொடுக்கலாமா?

சிவா.ஜி
19-12-2008, 06:11 AM
தோளில் தூக்கி வளர்த்த பிள்ளை
எனக்கென எதுவும் செய்யவில்லை
காலால் உதைபட்ட நீயே
எனக்கு கஞ்சி ஊற்றும் தாயே...
வெள்ளம் கூடி என்னை அழித்தாலும்
உன்னைக் கரை சேர்ப்பேன் - நீ
என்னைப்போல் பலரை கரைசேர்ப்பாய்!!

ஆதி
19-12-2008, 06:23 AM
தையல் எந்திரத்தில்
உன் தையலவள் விட்டுச்சென்ற
ரேகைகளை அழிக்க
தண்ணீருக்கு சக்தியில்லை...
எப்படியும் நீ கரைசேர்ந்திருப்பாய்,
துருப்பிடிக்க முடியாத உன் காதலுடன்....
எனக்குத் தெரியும், கட்டாயம்
உன் கல்லறைக்கும் நீ
இதை சுமந்தே செல்வாய்....

அருமைங்க அக்கா, உங்கள் கவிதையை காண கிடைத்தது பெருவனை பெருக்குகிறது..

அதுவும் அந்த கடைசிவரிகள் அருமையிலும் அருமை..

அக்னி
19-12-2008, 12:11 PM
துருப்பிடித்தாலும்,
என் தையல் இயந்திரமல்லவா...
அதுதான் சுமக்கின்றேன்..,
இயந்திரத்தைத் தோளிலும்...
இதயத்தில் தையலையும்...

யவனிகா
19-12-2008, 01:39 PM
துருப்பிடித்தாலும்,
என் தையல் இயந்திரமல்லவா...
அதுதான் சுமக்கின்றேன்..,
இயந்திரத்தைத் தோளிலும்...
இதயத்தில் தையலையும்...

மனங்களைத் தைக்கும்
காதல் இயந்திரம்...
நினைவுகளைக் கோர்த்து
நெய்து கொண்டோம் வாழ்க்கையை...
உயிர் நூலை உருவிப்போட்டபின்னும்
ஊசி இன்னும் உன் நினைவாகவே....

அக்னியின் கவிதைக்கு ஒரு குட்டி பின்னூட்டக்கவிதை...நல்ல கவிதை அக்னி,வாழ்த்துக்கள்.

ஆதவா
19-12-2008, 01:58 PM
கண்டுபிடித்துவிட்டேன் !
முதல் திருமண நாளில்
என் மனைவிக்கு கொடுத்த பரிசை !!
இப்போது தான் நான்
மகிழ்ச்சி வெள்ளத்தில் !!

ஹா ஹா.... இயந்திரம் பரிசாக, மகிழ்ச்சி வெள்ளமாக... இருந்தாலும் மனைவி இப்படி கழுத்து வரை மூழ்கும் ஆனந்தத்தைத் தந்திருக்கக் கூடாது!!!!


தோளில் தூக்கி வளர்த்த பிள்ளை
எனக்கென எதுவும் செய்யவில்லை
காலால் உதைபட்ட நீயே
எனக்கு கஞ்சி ஊற்றும் தாயே...
வெள்ளம் கூடி என்னை அழித்தாலும்
உன்னைக் கரை சேர்ப்பேன் - நீ
என்னைப்போல் பலரை கரைசேர்ப்பாய்!!

சிலருக்கு அஃறிணைகள்தானே தாயும் தந்தையும்,.. அது எத்தனையோ பேரை வாழவைத்திருக்கிறது இல்லையா அன்ணா? கவிதையும் பலே!!!


துருப்பிடித்தாலும்,
என் தையல் இயந்திரமல்லவா...
அதுதான் சுமக்கின்றேன்..,
இயந்திரத்தைத் தோளிலும்...
இதயத்தில் தையலையும்...

தைத்த இதயம் தோளில்.... குத்தின மகனை தூக்கின அப்பன் போல..
கவிதையிலே ஏதோ குறைகிறதா அக்னி?


மனங்களைத் தைக்கும்
காதல் இயந்திரம்...
நினைவுகளைக் கோர்த்து
நெய்து கொண்டோம் வாழ்க்கையை...
உயிர் நூலை உருவிப்போட்டபின்னும்
ஊசி இன்னும் உன் நினைவாகவே....

அக்னியின் கவிதைக்கு ஒரு குட்டி பின்னூட்டக்கவிதை...நல்ல கவிதை அக்னி,வாழ்த்துக்கள்.

என்னா மேடம் நீங்க.... வந்தா வந்தா இவ்ளோ அருமையா ஒரு கவிதை எழுதிட்டி நீங்க பாட்டுக்குப் போயிடறீங்க...

இந்தக் கவிதைக்கு விமர்சனம் எனும் போர்வை போர்த்தி குத்த விரும்பவில்லை.... ஏனெனில் பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,.,

அக்னி
19-12-2008, 02:21 PM
உயிர் நூலை உருவிப்போட்டபின்னும்
ஊசி இன்னும் உன் நினைவாகவே....

:icon_b::icon_b::icon_b:

இதுவல்லோ கவிதை...
அபரிமிதமான வரிகள்...

நூலின்றி ஓடுது ஊசி...
வாழ்க்கைக் கிழியல்களின் ஓரம்,
புதிதாய் ஓட்டைகள்...

மிகுந்த பாராட்டுக்கள் யவனிகா+அக்கா...


தைத்த இதயம் தோளில்.... குத்தின மகனை தூக்கின அப்பன் போல..
கவிதையிலே ஏதோ குறைகிறதா அக்னி?
தையல் என்றால் பெண் என்றும் அர்த்தப்படுமல்லவா...

நீங்கள் பார்த்த கோணம், இப்போதுதான் எனக்குத் தெரிகின்றது.

யவனிகா+அக்கா வின் கவிதைதான்,
அனைத்துக் குறைகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டதே...


இந்தக் கவிதைக்கு விமர்சனம் எனும் போர்வை போர்த்தி குத்த விரும்பவில்லை.... ஏனெனில் பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை...

உண்மைதான் ஆதவா...
யவனிகா+அக்காவிடமிருந்து வரும் கவிதைகளில்,
நளினமும், எளிமையும், ஆழமும்
எப்போதுமே குறைந்ததில்லை.

அமரன்
22-12-2008, 04:12 PM
அடுத்த படம் எங்கேப்பா..

பாலகன்
22-12-2008, 04:23 PM
அடுத்த படம் போடும் முன்னாடி என் உளரலையும் சேர்த்துக்கங்க

என் வாழ்வை சுமக்கும்
உன்னை என் தோளில் சுமந்தேன்
மார்பில் சுமக்க ஆசைதான்.. ஆனால்
மார்பளவு தண்ணீர் உன்னை மாய்த்துவிடும் தம்பி
நீ இல்லையேல் நான் இல்லை

Narathar
22-12-2008, 04:45 PM
http://img03.picoodle.com/img/img03/3/12/22/narathar/f_Ammam_c95c188.jpg


நம் கவிதைகளில், அம்மா , அப்பா,
காதலன் , காதலி, அல்லது நண்பர்கள்
இவர்களைத்தான் பொதுவாக கருவாக எடுப்போம்......


ஆனால் நம் தாயை உலகுக்கு தந்தவரை
தந்தையை உலகத்தில் இவ்வுலகில் ஈன்றவரை
மறந்துவிடுகின்றோம்!!!

சில நேரங்களில் தாய் தந்தையரை விட நம் மேல்
அதிக பாசம் செழுத்தும் / செழுத்திய நமது பாட்டியை
மறந்து விடுகின்றோம்.

இதோ இந்தமுறை உங்கள் கவிதைகள்
உங்கள் பாட்டி நினைவாக வரட்டும்......

அமரன்
22-12-2008, 04:49 PM
பாட்டி செலுத்தும் பாசம் செழுமையானது என்பதை அழகாக உணர்த்திய நாராவுக்கு பாராட்டு. பாட்டிக்கொரு பாட்டு பூமகள் பாடியுள்ளார். ஆதியும் பாடியுள்ளார். நாங்களும் பாடுவோம்ல..

நிரன்
22-12-2008, 05:10 PM
சீக்கிரமா பாடுங்கப்பு....................
(ஏலும் என்றால் நானும் பாடுகிறேன்)

நல்லவேளை நாரா கொஞ்சம் விட்டிருந்தால் நான் போட்டிருப்பேன் நிழலை:)

தமிழ்தாசன்
22-12-2008, 05:19 PM
அம்மம்மா! என்னம்மம்மா!
நீங்கள் சொல்லித்தந்த பாடல்கள்
என் வாழ்வின் பாடங்களம்மம்மா!.

........சா என
அன்புடன் அழைத்து!
உச்சி மோர்ந்து அள்ளி அணைத்து
பொக்கைவாய் முத்தம்
எச்சில் படுத்திக் கொடுப்பாய்.
அச்சம் தவிர்க்க கற்றுக் கொடுத்தாய்!
அன்பையள்ளி இறைத்தாய்!
என் அம்மாவின் அன்புத்தாய்!

உனையிழந்தபோது உள்ளம்,உயிர் தவித்தேன்.
என்னில் உம் எண்ணங்கள் விதைத்தேன்.


(படம் தந்து மனம் நிழற்படம் நினைவை மீட்ட நாரதர் அவர்களுக்கு மகிழ்ச்சி)

நிரன்
22-12-2008, 05:45 PM
அம்மம்மா! என்னம்மம்மா!
நீங்கள் சொல்லித்தந்த பாடல்கள்
என் வாழ்வின் பாடங்களம்மம்மா!.

........சா என
அன்புடன் அழைத்து!
உச்சி மோர்ந்து அள்ளி அணைத்து
பொக்கைவாய் முத்தம்
எச்சில் படுத்திக் கொடுப்பாய்.
அச்சம் தவிர்க்க கற்றுக் கொடுத்தாய்!
அன்பையள்ளி இறைத்தாய்!
என் அம்மாவின் அன்புத்தாய்!

உனையிழந்தபோது உள்ளம்,உயிர் தவித்தேன்.
என்னில் உம் எண்ணங்கள் விதைத்தேன்.


(படம் தந்து மனம் நிழற்படம் நினைவை மீட்ட நாரதர் அவர்களுக்கு மகிழ்ச்சி)

முதலாவதாகவே அம்மம்மாவைப் பற்றி அருமையாக
ஒரு கவியை வடித்து மற்றவா்களுக்கு ஒரு
கோலையும் கொடுத்துள்ளீா்கள்
நன்றி அண்ணா மற்றும் அழகானதொரு கவிக்கு என் பாராட்டுக்கள்

பாலகன்
22-12-2008, 06:02 PM
பல் இல்லையென்று வாயை
மூடி சிரிக்கின்றாயோ தாயே
கவலை படாதே நீ எப்படியிருந்தாலும்
எனக்கு அழகு தேவதை நீ
நாங்கள் பார்ப்பது உன் அழகையல்ல
உன் அன்பை

ஆதவா
23-12-2008, 04:02 AM
அடுத்த படம் போடும் முன்னாடி என் உளரலையும் சேர்த்துக்கங்க

என் வாழ்வை சுமக்கும்
உன்னை என் தோளில் சுமந்தேன்
மார்பில் சுமக்க ஆசைதான்.. ஆனால்
மார்பளவு தண்ணீர் உன்னை மாய்த்துவிடும் தம்பி
நீ இல்லையேல் நான் இல்லை


மகாபிரபு... உங்களை இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்தமாதிரி தெரியலையே!

கவிதை அருமை பிரபு.. மார்பில் சுமப்பது பாசம், தோளில் சுமப்பது நட்பு.. இரண்டும் இல்லையேல் வாழ்க்கையே இல்லை..

இன்னும் கொஞ்சம் முயற்சித்து எழுதியிருக்கலாம்...


அம்மம்மா! என்னம்மம்மா!
நீங்கள் சொல்லித்தந்த பாடல்கள்
என் வாழ்வின் பாடங்களம்மம்மா!.

........சா என
அன்புடன் அழைத்து!
உச்சி மோர்ந்து அள்ளி அணைத்து
பொக்கைவாய் முத்தம்
எச்சில் படுத்திக் கொடுப்பாய்.
அச்சம் தவிர்க்க கற்றுக் கொடுத்தாய்!
அன்பையள்ளி இறைத்தாய்!
என் அம்மாவின் அன்புத்தாய்!

உனையிழந்தபோது உள்ளம்,உயிர் தவித்தேன்.
என்னில் உம் எண்ணங்கள் விதைத்தேன்.


(படம் தந்து மனம் நிழற்படம் நினைவை மீட்ட நாரதர் அவர்களுக்கு மகிழ்ச்சி)

எல்லோருக்குமே பாட்டி என்றால் நிச்சயம் ஒரு பாசம் பீறிட்டு வரும். அந்தப் பீறிடல் உங்களுக்கும் நேர்ந்தது குறித்து நாரதருக்கு நன்றி நவில்கிறேன். அம்மாவைப் பெற்றவள் என்பதால் அவள் இரு அன்னைகளுக்குச் சமானமாகிறாள். அன்னை என்றால் அன்பு. பாட்டி என்றால் பாசம்.

அழகு கவிதை தந்த தாசர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..


பல் இல்லையென்று வாயை
மூடி சிரிக்கின்றாயோ தாயே
கவலை படாதே நீ எப்படியிருந்தாலும்
எனக்கு அழகு தேவதை நீ
நாங்கள் பார்ப்பது உன் அழகையல்ல
உன் அன்பை

ஆமாம்ம்...... அழகு என்பதற்கு எந்த வரையறையும் இல்லை.. அழகு என்பது உள்ளம் வெளிப்படுத்துவது. வேஷங்கள் அழகல்ல..... ஒரு குழந்தையும் முதியவளும்(ரும்) வெளிப்பாட்டில் அழகாக மிளிருவார்கள்...

பற்கள் முளைக்கும் பொழுது நம்முள் மனமும் இருமுனைகளாகப் பிரிக்கிறது. பற்கள் விழும்பொழுது அம் மனம் மாறாதா எனும் ஏக்கம் பிறக்கிறது.

ஆதவா
23-12-2008, 04:07 AM
அடுத்தடுத்து முதுமை பற்றிய அல்லது இப்படம் குறித்த கவிதை எழுதுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கு.....

பாலகன்
23-12-2008, 09:25 AM
ஓடி ஓடி உழைச்சி ஓஞ்சிட்டேன்டா பேரான்டி
உன் தாத்தன் உப்பு மிளகாய்க்கு கூட
தம்புடி சேர்த்து வைக்கல
பத்து தேய்ச்சி தேய்ஞ்சுது என் பத்து கைவிரல்கள்
பத்து வீடு ஏறி இறங்கி தேய்ஞ்சது என் பத்து கால்விரல்கள்
முறைவாசல் செய்து தேய்ஞ்சது என் முதுகு....
மிச்சம் இருப்பது இந்த மூஞ்சிதான்டா சின்னப்பயலே
அந்த மூஞ்சிலேயும் மீதி இருக்கிறது இந்த பொக்கை சிரிப்பும்
இந்த உடம்புல ஒட்டியிருக்குற பாழும் உசுரும் தான்டா
நாளைக்கு ஒரு நாள் லீவு சொல்லிடுடா வீட்டு எசமானிகிட்ட

Narathar
23-12-2008, 09:30 AM
http://img03.picoodle.com/img/img03/3/12/22/narathar/f_Ammam_c95c188.jpg


நம் கவிதைகளில், அம்மா , அப்பா,
காதலன் , காதலி, அல்லது நண்பர்கள்
இவர்களைத்தான் பொதுவாக கருவாக எடுப்போம்......


ஆனால் நம் தாயை உலகுக்கு தந்தவரை
தந்தையை உலகத்தில் இவ்வுலகில் ஈன்றவரை
மறந்துவிடுகின்றோம்!!!

சில நேரங்களில் தாய் தந்தையரை விட நம் மேல்
அதிக பாசம் செழுத்தும் / செழுத்திய நமது பாட்டியை
மறந்து விடுகின்றோம்.

இதோ இந்தமுறை உங்கள் கவிதைகள்
உங்கள் பாட்டி நினைவாக வரட்டும்......

55 ஆம் பக்க பார்வைக்காக..........

Narathar
23-12-2008, 10:12 AM
பாட்டி செலுத்தும் பாசம் செழுமையானது என்பதை அழகாக உணர்த்திய நாராவுக்கு பாராட்டு. பாட்டிக்கொரு பாட்டு பூமகள் பாடியுள்ளார். ஆதியும் பாடியுள்ளார். நாங்களும் பாடுவோம்ல..

இப்ப கொஞ்சநாளாத்தான் நீங்க இங்கு சரியா பாடுறதே இல்லையே????
பார்ப்போம் பாட்டி பாசமாவது பாடவைக்குதான்னு!


சீக்கிரமா பாடுங்கப்பு....................
(ஏலும் என்றால் நானும் பாடுகிறேன்)

நல்லவேளை நாரா கொஞ்சம் விட்டிருந்தால் நான் போட்டிருப்பேன் நிழலை:)

நிரஞ்சன் உங்க பாட்டூக்கு நீங்களும் அந்த நிழலுக்கு உயிர் கொடுக்க முயற்சியுங்கள்.......

சரி இப்பவே சொல்லிப்புட்டன் அடுத்த நிழல் நீங்கதான் தரனும்!

நிரன்
23-12-2008, 11:00 AM
என் பாசக்கடலில் பாரமுகம் நீ ......... !
என்னம்மா அவளம்மா கதை கூறுகையில்
பார்க்கத் துடிக்கிறேன் என்னம்மம்மா முகம்
என்னம்மா இது வாழ்க்கையெனும் வேளையில்
என்னம்மம்மாதான் நினைவில்

இன்னும் என் கண்னில் தவிப்படங்கவில்லை
உனை சொர்க்கத்தில் காணுவேன் என -- அவை கூறுகையில்
என் மனதில் பல்லாயிரம் இடிகள்
நான் நரகத்திற்கு சென்றுவிடுவேனா என!


(இதைக்கவிதை என்டு சொல்லீடாதங்கப்பு ஏதோ மனதில் தோன்றிய ஒரு சிறு பந்தி)

தமிழ்தாசன்
23-12-2008, 11:33 AM
அருமையான பின் ஊட்டம் .
அழகான கவிகள்..

தமிழ்தாசன்
23-12-2008, 11:35 AM
அடுத்தடுத்து முதுமை பற்றிய அல்லது இப்படம் குறித்த கவிதை எழுதுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கு.....

அப்படி என்றால் ? முதல் எழுதிய எங்களுக்கில்லையா? (சும்மா ஆதவா!)

நிரன்
23-12-2008, 11:45 AM
அப்படி என்றால் ? முதல் எழுதிய எங்களுக்கில்லையா? (சும்மா ஆதவா!)

கவலைப்படாதீங்கண்ணா.............. ஆதவாட எக்கவுன்ட்ல Cash Credits: 36,716.7
இருக்கு அதுல பாதிய உங்களுக்கு டிரான்சர் பன்னீடுவார் :rolleyes:
(மன்றகோடீசுவரருங்கோவ்)

நான் சென்வது சரிதான ஆதவா:aetsch013:

ஆதவா
23-12-2008, 12:30 PM
ஓடி ஓடி உழைச்சி ஓஞ்சிட்டேன்டா பேரான்டி
உன் தாத்தன் உப்பு மிளகாய்க்கு கூட
தம்புடி சேர்த்து வைக்கல
பத்து தேய்ச்சி தேய்ஞ்சுது என் பத்து கைவிரல்கள்
பத்து வீடு ஏறி இறங்கி தேய்ஞ்சது என் பத்து கால்விரல்கள்
முறைவாசல் செய்து தேய்ஞ்சது என் முதுகு....
மிச்சம் இருப்பது இந்த மூஞ்சிதான்டா சின்னப்பயலே
அந்த மூஞ்சிலேயும் மீதி இருக்கிறது இந்த பொக்கை சிரிப்பும்
இந்த உடம்புல ஒட்டியிருக்குற பாழும் உசுரும் தான்டா
நாளைக்கு ஒரு நாள் லீவு சொல்லிடுடா வீட்டு எசமானிகிட்ட

ரொம்பவும் தேய்ந்து போன வாழ்க்கை.. சுருக்கங்கள் விழுந்த வாழ்நிலை.. பற்கள் விழுந்த வாய்.. சொல்லமுடியாத சோகம். ஒரு சாதா மொழியில் அழகை வருணித்துவிட்ட உமக்கு என் பாராட்டுக்கள்..


என் பாசக்கடலில் பாரமுகம் நீ ......... !
என்னம்மா அவளம்மா கதை கூறுகையில்
பார்க்கத் துடிக்கிறேன் என்னம்மம்மா முகம்
என்னம்மா இது வாழ்க்கையெனும் வேளையில்
என்னம்மம்மாதான் நினைவில்

இன்னும் என் கண்னில் தவிப்படங்கவில்லை
உனை சொர்க்கத்தில் காணுவேன் என -- அவை கூறுகையில்
என் மனதில் பல்லாயிரம் இடிகள்
நான் நரகத்திற்கு சென்றுவிடுவேனா என!


(இதைக்கவிதை என்டு சொல்லீடாதங்கப்பு ஏதோ மனதில் தோன்றிய ஒரு சிறு பந்தி)

என்னம்மா இது?

அம்மா சரி, அம்மம்மா எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை? சொர்க்க நரக தள்ளப்படுதலுக்கு இடையே பாசம் நடந்துகொண்டிருக்கிறது. ஏனுங்க நிரஞ்சன்... அம்மம்மாவுக்காக சொர்க்கத்தில் காண தவிக்கிறதே உங்கள் கண்கள், இங்கே இருப்பவர்களைக் கண்டு என்ன சொல்கிறதாம்?

இரு கவிதைகளும் எளியமொழியைக் கையாண்ட சிறப்பைப் பெறுகின்றன...

ஆதவா
23-12-2008, 12:33 PM
அப்படி என்றால் ? முதல் எழுதிய எங்களுக்கில்லையா? (சும்மா ஆதவா!)

:eek::eek::eek: எல்லோருக்கும் உண்டு... :icon_b:

நிரன்
23-12-2008, 12:59 PM
என்னம்மா இது?

அம்மா சரி, அம்மம்மா எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை? சொர்க்க நரக தள்ளப்படுதலுக்கு இடையே பாசம் நடந்துகொண்டிருக்கிறது. ஏனுங்க நிரஞ்சன்... அம்மம்மாவுக்காக சொர்க்கத்தில் காண தவிக்கிறதே உங்கள் கண்கள், இங்கே இருப்பவர்களைக் கண்டு என்ன சொல்கிறதாம்?

இரு கவிதைகளும் எளியமொழியைக் கையாண்ட சிறப்பைப் பெறுகின்றன...

என்ன செய்யிறது ஆதவா நாரா அடிக்கடி இப்படிப்பட்ட படத்தைப்போட்டு கொல்லுறாரே:aetsch013:
(அதுதான் அடுத்தமுறை சிப்ட் எனக்கென்று அக்ரிமன்ட் போட்டுட்டம்:D)

நிரன்
23-12-2008, 01:03 PM
ஓடி ஓடி உழைச்சி ஓஞ்சிட்டேன்டா பேரான்டி
உன் தாத்தன் உப்பு மிளகாய்க்கு கூட
தம்புடி சேர்த்து வைக்கல
பத்து தேய்ச்சி தேய்ஞ்சுது என் பத்து கைவிரல்கள்
பத்து வீடு ஏறி இறங்கி தேய்ஞ்சது என் பத்து கால்விரல்கள்
முறைவாசல் செய்து தேய்ஞ்சது என் முதுகு....
மிச்சம் இருப்பது இந்த மூஞ்சிதான்டா சின்னப்பயலே
அந்த மூஞ்சிலேயும் மீதி இருக்கிறது இந்த பொக்கை சிரிப்பும்
இந்த உடம்புல ஒட்டியிருக்குற பாழும் உசுரும் தான்டா
நாளைக்கு ஒரு நாள் லீவு சொல்லிடுடா வீட்டு எசமானிகிட்ட

பாட்டி கூறுதைப்போன்று எளிமையாக நன்றாக எழுதிள்ளீா் மகாபிரபு அவர்களே...

வாழ்த்துக்கள்....:icon_b:

அக்னி
23-12-2008, 01:11 PM
பொன்நகையின் பிரகாசம்
மங்கித்தான் போகின்றது
உன் புன்னகையில்...

மாலைகளின் அலங்காரம்
குன்றித்தான் போகின்றது
உன் சுருக்கங்களில்...

கண்ணாடியின் பளபளப்பு
அற்றுத்தான் போகின்றது
உன் ஒளிர்விழிகளில்...

வெல்லமுடியாத முதுமை..,
தோற்கின்றது
பாசத்திடம்...

சசிதரன்
23-12-2008, 01:35 PM
நல்லதொரு திரி நண்பர்களே...

மிக அருமையான வரிகள் நண்பர் அக்னி அவர்களே...
வெல்ல முடியாத முதுமை தோற்கின்றது பாசத்திடம்...
அருமையான வரிகள்...:)

சசிதரன்
23-12-2008, 01:36 PM
நீ சொன்ன கதைகள் மூலம்...
உலகம் பார்க்க கற்று கொண்டவர்கள்...
இன்று உன் கண்பார்வை சிகிச்சைக்காய்...
செலவு செய்ய யோசிக்கின்றோம்.

உன் தாலாட்டு பாடல் கேட்டே...
குழந்தைகளாய் உறங்கி போனவர்கள்...
உன் இருமல் சத்தம் கேட்பதால்...
தூக்கம் கலைவதாய் கோபப்படுகிறோம்...

புன்னகை தவிர்த்து...
வேறெதுவும் கண்டதில்லை உன்னிடம்...
உன்னிடம் மட்டும்...
புன்னகை தவிர்த்து திரிகிறோம் நாங்கள்...

நீ முதுமை அடைந்தாய்...
உன் தோலிலும்... எங்கள் மனதிலும்...
வந்துவிட்டது சுருக்கங்கள்...

நிரன்
23-12-2008, 02:21 PM
பொன்நகையின் பிரகாசம்
மங்கித்தான் போகின்றது
உன் புன்னகையில்...

மாலைகளின் அலங்காரம்
குன்றித்தான் போகின்றது
உன் சுருக்கங்களில்...

கண்ணாடியின் பளபளப்பு
அற்றுத்தான் போகின்றது
உன் ஒளிர்விழிகளில்...

வெல்லமுடியாத முதுமை..,
தோற்கின்றது
பாசத்திடம்...

ஐயமாயுங்க அக்னி :icon_b:

பட்டியின் புன்னகை நகையை விட யொலிக்குமென்றால் அதுல கொஞ்சம் தாங்களன் நகை வாங்கிற காசு மிச்சமாகும்:icon_shok::D

நன்றாக உள்ளது கவியென நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா:icon_b:

(காத்திருங்க ஆதவா டிப்போசிட் பண்ணுவார்:))

நிரன்
23-12-2008, 02:31 PM
நீ சொன்ன கதைகள் மூலம்...
உலகம் பார்க்க கற்று கொண்டவர்கள்...
இன்று உன் கண்பார்வை சிகிச்சைக்காய்...
செலவு செய்ய யோசிக்கின்றோம்.

உன் தாலாட்டு பாடல் கேட்டே...
குழந்தைகளாய் உறங்கி போனவர்கள்...
உன் இருமல் சத்தம் கேட்பதால்...
தூக்கம் கலைவதாய் கோபப்படுகிறோம்...

புன்னகை தவிர்த்து...
வேறெதுவும் கண்டதில்லை உன்னிடம்...
உன்னிடம் மட்டும்...
புன்னகை தவிர்த்து திரிகிறோம் நாங்கள்...

நீ முதுமை அடைந்தாய்...
உன் தோலிலும்... எங்கள் மனதிலும்...
வந்துவிட்டது சுருக்கங்கள்...


அருமையாக கவியை வடித்துள்ளீர்கள் சசி கவனிப்பற்ற பாட்டியின் நிலையை கவி மூலம் எடுத்துக்காட்டியுள்ளீா் ..


சமீபகாலமாக உங்கள் கவிப்படைப்புகள் ஓங்கிவருவதையிட்டு
மகிழ்ச்சியடைகிறேன்...
தொடர்ந்தும் படைத்து எம்முடன் இனைந்திருங்கள்.

கவி நன்றாக உள்ளது பாராட்டுக்கள்:icon_b:

அக்னி
23-12-2008, 02:46 PM
பட்டியின் புன்னகை நகையை விட யொலிக்குமென்றால் அதுல கொஞ்சம் தாங்களன் நகை வாங்கிற காசு மிச்சமாகும்:icon_shok::D
நல்லவேளை,
ஒன்றில் எடுத்த காலை, மற்றையதிற் கைக்குப் பதிலாகப் போடாமல் விட்டீர்கள்.
அந்தவகையில் சந்தோஷம்.

இருந்தும் சிறு சந்தேகம்.
மலையாளப் பட்டி இல்லைதானே...

நன்றி நண்பா...

அக்னி
23-12-2008, 02:56 PM
புன்னகை தவிர்த்து...
வேறெதுவும் கண்டதில்லை உன்னிடம்...
உன்னிடம் மட்டும்...
புன்னகை தவிர்த்து திரிகிறோம் நாங்கள்...

நீ முதுமை அடைந்தாய்...
உன் தோலிலும்... எங்கள் மனதிலும்...
வந்துவிட்டது சுருக்கங்கள்...
:icon_b::icon_b::icon_b:

இந்த வரிகளைக் கையாண்ட விதம் மிக மிக அழகு.

நாளை,
நம் தோல்களில் சுருக்கங்கள்
விழும்போது,
நம் மனங்களின் சுருக்கங்கள்
விலகலாம்.

ஆனால்,
நாம் தந்த,
வருத்தங்கள் ஆறுமா..?
ஆற்றத்தான் முடியுமா..?

பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...

Narathar
23-12-2008, 03:03 PM
அம்மம்மா! என்னம்மம்மா!
நீங்கள் சொல்லித்தந்த பாடல்கள்
என் வாழ்வின் பாடங்களம்மம்மா!.

உனையிழந்தபோது உள்ளம்,உயிர் தவித்தேன்.
என்னில் உம் எண்ணங்கள் விதைத்தேன்.


(படம் தந்து மனம் நிழற்படம் நினைவை மீட்ட நாரதர் அவர்களுக்கு மகிழ்ச்சி)

நன்றிகள் தமிழ் தாசரே..............
உங்கள் அம்மம்மாவை நான் தந்த நிழல் மூலம் நீங்கள் நினைவுகூர்ந்திருந்தால் அதை நினைத்து பெருமைப்படுகின்றேன்





நாங்கள் பார்ப்பது உன் அழகையல்ல
உன் அன்பை

நிச்சயமாக.............
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் மகாபிரபு!
உங்களை நிழலுக்கு உயிர் திரியில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.... தொடர்ந்து இந்தத்திரிக்கு வந்து
உங்கள் கவிதைகளை கொடுங்கள்




அடுத்தடுத்து முதுமை பற்றிய அல்லது இப்படம் குறித்த கவிதை எழுதுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கு.....

ஆஹா வந்துடாருப்பா கிறிஸ்துமஸ்து தாத்தா........ கவிதைக்கு மட்டும்தானா?
கவியூக்கிய நிழல் தந்தவருக்கு இல்லையா?

நிரன்
23-12-2008, 03:10 PM
இருந்தும் சிறு சந்தேகம்.
மலையாளப் பட்டி இல்லைதானே...

நன்றி நண்பா...


முத்து படம் பார்த்துத்தான் இதற்கு விளக்கமறிந்தேன்:aetsch013::lachen001:

அக்னி
23-12-2008, 03:14 PM
முத்து படம் பார்த்துத்தான் இதற்கு விளக்கமறிந்தேன்:aetsch013::lachen001:
யாரது முத்து...
அவரோட படத்தப் பார்த்தா பட்டியோட விளக்கம் தெரியுமா...
ஓ... பட்டியோட பெயர்தான் முத்துவா...
அப்பச்சரி.

அந்தப் படத்தைப் பார்த்து,
பட்டியை விளங்கிக் கொண்டீர்கள் என்பது,
உங்கள் ஸ்மைலீஸ் பார்த்தாலே புரிகின்றது... :080402cool_prv:

நிரன்
23-12-2008, 03:24 PM
யாரது முத்து...
அவரோட படத்தப் பார்த்தா பட்டியோட விளக்கம் தெரியுமா...
ஓ... பட்டியோட பெயர்தான் முத்துவா...
அப்பச்சரி.

அந்தப் படத்தைப் பார்த்து,
பட்டியை விளங்கிக் கொண்டீர்கள் என்பது,
உங்கள் ஸ்மைலீஸ் பார்த்தாலே புரிகின்றது... :080402cool_prv:


ஆமாங்க எங்க வீட்டு பட்டி பெயர் அதுதாங்கோவ்


(இன்னொரு அறுவை வேண்டாம்.... அறுக்காம ஆ10 க்கு போங்க நாரா பாத்தால் :sauer028: ஆக போறாரு இதையும் அரட்டையா மாத்தீட்டம் என்று:D நம்ம வேலையே அதுதான:D)

பாலகன்
23-12-2008, 03:30 PM
என் கிறுக்கல்களையிம் உளரல்களையும் பாராட்டிய ஆதவன், நாரதர், நிரஞ்சன் மற்றும் அனைவருக்கும்

இன்னும் கொஞ்ச நாள் உங்களோடு பழகினாலே எனக்கும் கவிதை எழுத வந்துடும்னு நினைக்கிறேன்

யவனிகா
23-12-2008, 04:13 PM
Originally Posted by யவனிகா
கிழிந்திருந்த பாயின்
கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில்
என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்
கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்
விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்
தவறி விழுந்தேன் என்ற
ஞாபகம் இருக்காது...

விடியலில்...
கதையின் மீதி
கேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...

எனக்கான உலகத்தை சிருஷ்டித்து
ஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து
நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...

நான் வருவதற்குள்
நீ தூங்கி விடாதே....
என் செல்லப்பாட்டியே...

கவிச்சமரில் எழுதிய கவிதை இது...பொருந்துகிறதா பாருங்களேன்.

யவனிகா
23-12-2008, 04:16 PM
நீ சொன்ன கதைகள் மூலம்...
உலகம் பார்க்க கற்று கொண்டவர்கள்...
இன்று உன் கண்பார்வை சிகிச்சைக்காய்...
செலவு செய்ய யோசிக்கின்றோம்.

உன் தாலாட்டு பாடல் கேட்டே...
குழந்தைகளாய் உறங்கி போனவர்கள்...
உன் இருமல் சத்தம் கேட்பதால்...
தூக்கம் கலைவதாய் கோபப்படுகிறோம்...

புன்னகை தவிர்த்து...
வேறெதுவும் கண்டதில்லை உன்னிடம்...
உன்னிடம் மட்டும்...
புன்னகை தவிர்த்து திரிகிறோம் நாங்கள்...

நீ முதுமை அடைந்தாய்...
உன் தோலிலும்... எங்கள் மனதிலும்...
வந்துவிட்டது சுருக்கங்கள்...

நல்லாயிருக்குங்க சகோதரரே!

யவனிகா
23-12-2008, 04:48 PM
உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...

ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...

குளிக்குமுன்னே காத்திருக்கும் மைகோதியும்
மணக்கும் சாம்பிராணி புகையும்...

மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...

பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!

பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...

உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....

யவனிகா
23-12-2008, 04:50 PM
55 ஆம் பக்க பார்வைக்காக..........

படத்துக்காக ஸ்பெசல் பாராட்டுகள் நாரதருக்கு...

நிரன்
23-12-2008, 04:59 PM
http://img03.picoodle.com/img/img03/3/12/22/narathar/f_Ammam_c95c188.jpg


நம் கவிதைகளில், அம்மா , அப்பா,
காதலன் , காதலி, அல்லது நண்பர்கள்
இவர்களைத்தான் பொதுவாக கருவாக எடுப்போம்......


ஆனால் நம் தாயை உலகுக்கு தந்தவரை
தந்தையை உலகத்தில் இவ்வுலகில் ஈன்றவரை
மறந்துவிடுகின்றோம்!!!

சில நேரங்களில் தாய் தந்தையரை விட நம் மேல்
அதிக பாசம் செழுத்தும் / செழுத்திய நமது பாட்டியை
மறந்து விடுகின்றோம்.

இதோ இந்தமுறை உங்கள் கவிதைகள்
உங்கள் பாட்டி நினைவாக வரட்டும்......


56 ஆம் பக்க பார்வைக்காக..........

நிரன்
23-12-2008, 05:06 PM
உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...

ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...

குளிக்குமுன்னே காத்திருக்கும் மைகோதியும்
மணக்கும் சாம்பிராணி புகையும்...

மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...

பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!

பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...

உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....


அக்கா கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் தருகிறார்

அன்பைப்பொழியும் பாட்டிக்காய்
எழுத முடியாத பேனவுடனும் வார்த்தைகளில்லா கற்பனையிலும்
தோற்றுப்போய் நிற்கும் யவனிகா + அக்காவுக்கு என் பாரட்டுக்கள்
தங்கள் கவி மிகவும் அருமையாக உள்ளது :icon_b:

Narathar
23-12-2008, 05:21 PM
மூஞ்சிலேயும் மீதி இருக்கிறது இந்த பொக்கை சிரிப்பும்
இந்த உடம்புல ஒட்டியிருக்குற பாழும் உசுரும் தான்டா


மிகவும் ரசிக்கத்தக்கதாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!

தொடர்ந்து கவிதை தாருங்கள்

நிழலுக்கு உயிர் பகுதியால்
உயிர் பெற்ற கவிஞ்சராக நீங்கள் உயருங்கள்



இன்னும் என் கண்னில் தவிப்படங்கவில்லை
உனை சொர்க்கத்தில் காணுவேன் என -- அவை கூறுகையில்
என் மனதில் பல்லாயிரம் இடிகள்
நான் நரகத்திற்கு சென்றுவிடுவேனா என!


என்னே ஒரு தன்னம்பிக்கை!
ஹா ஹா ஹா

நீங்களும் இந்தத்திரியில்
தொடர்ந்து கவிதை எழுதிவாருங்கள்
தலை சிறந்த கவிஞ்சராகலாம்....




வெல்லமுடியாத முதுமை..,
தோற்கின்றது
பாசத்திடம்...

பொன்னெழுத்துக்களில்
பொரிக்கப்படவேண்டிய வரிகள்

வாழ்த்துக்கள் அக்னி......

நிரன்
23-12-2008, 05:34 PM
என்னே ஒரு தன்னம்பிக்கை!
ஹா ஹா ஹா

நீங்களும் இந்தத்திரியில்
தொடர்ந்து கவிதை எழுதிவாருங்கள்
தலை சிறந்த கவிஞ்சராகலாம்....




பொன்னெழுத்துக்களில்
பொரிக்கப்படவேண்டிய வரிகள்

வாழ்த்துக்கள் அக்னி......

நன்றி நாரா...

தலைகளுக்கு மத்தியில் வெறும் சிறப்பு மட்டுமே போதும்.....
(சிவப்பெளுத்தால ஒரு தலைய குறிச்சு காட்டி இருக்கிறன்)

ஓவரா கொமாண்ட் பண்ணி முருங்கை மரத்தில ஏத்தி விட்டுடாதீங்கய்யைா;) மரம் தாங்காது என் மனமும்தான்:icon_ush:

தமிழ்தாசன்
23-12-2008, 06:28 PM
அழகான அந்த முதுமையை
கவியாக வடிக்கும் வரிகள் கண்டு
மெழுகாகும் எம் உணர்வுகள்.

அத்துனைக் கவிகளுக்கும் பாராட்டுக்கள்.

மகாபிரபு, நிரஞ்சன், அக்னி,சசிதரன், யவனிகா.... என அனைவரும் சிறப்பு.
ஊக்கமாத்திரைகளுடன் வலம் வரும்
ஆதவா, நிரஞ்சன், நாரதர்..... என அனைவரும் சிறப்பு.


அப்பிடியே மன்றத்திரைவானம் காத்திருக்கு உங்களுக்காக.....

அமரன்
24-12-2008, 09:46 AM
இந்தக் கடிதத்தை
உயரத்தில் சேர்த்த திருப்தியில்
உறங்கச் சென்றது
கசங்கிய அந்த உறை..!

அதன் முகவரியை உருவி
தன் மனச்சுவரில் பதித்தது
இந்தக் கடிதம்..!

நீங்களே பாருங்கள்..!

நான் செழிக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
அதனுயிரை பாயவிட்ட தடங்கள்
அழுத்தமாய் பதிந்துள்ளன..!

மூச்சிரைத்த இமைப்பொழுதுகளை
கரையோர நுரைகள் போல்
முடியாகத் தரித்துள்ளது..!

ஒற்றைக் கண்ணூடு
தொலை தூரம் தெரிகின்ற
இலக்கை குறிபார்த்த
இலாகவம் செறிந்துள்ளது!

தன் சந்தோசம் நான் என்று
வாழ்ந்த தருணங்களில்
எடுத்த அவதாரங்கள்
பின்னாலே நிழல்களாய் ஒளிக்கிறது!
என்னைக் காட்டும்
கண்ணாடி முகம் களிக்கிறது!

இப்பொழுது புரிகிறதா
இழந்த பின்னும் அழாதிருக்கும்
எந்தன் இரகசியம்..!

தமிழ்தாசன்
24-12-2008, 10:47 AM
நான் செழிக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
அதனுயிரை பாயவிட்ட தடங்கள்
அழுத்தமாய் பதிந்துள்ளன..!

மூச்சிரைத்த இமைப்பொழுதுகளை
கரையோர நுரைகள் போல்
முடியாகத் தரித்துள்ளது..!


பின்னாலே நிழல்களாய்.

இப்பொழுது புரிகிறதா
இழந்த பின்னும் அழாதிருக்கும்
எந்தன் இரகசியம்..!

பாராட்டுக்கள் அமரன் அவர்களே!

இழமையின் இழப்புக்கள்
அனுபவப் பிறப்புக்கள்!
ஆழப் புதைந்துபோன அற்புத விளக்குகள்!

ஆதவா
24-12-2008, 11:45 AM
நீ சொன்ன கதைகள் மூலம்...
உலகம் பார்க்க கற்று கொண்டவர்கள்...
இன்று உன் கண்பார்வை சிகிச்சைக்காய்...
செலவு செய்ய யோசிக்கின்றோம்.

உன் தாலாட்டு பாடல் கேட்டே...
குழந்தைகளாய் உறங்கி போனவர்கள்...
உன் இருமல் சத்தம் கேட்பதால்...
தூக்கம் கலைவதாய் கோபப்படுகிறோம்...

புன்னகை தவிர்த்து...
வேறெதுவும் கண்டதில்லை உன்னிடம்...
உன்னிடம் மட்டும்...
புன்னகை தவிர்த்து திரிகிறோம் நாங்கள்...

நீ முதுமை அடைந்தாய்...
உன் தோலிலும்... எங்கள் மனதிலும்...
வந்துவிட்டது சுருக்கங்கள்...


கலக்கல்.......

முதுமையை எப்படியெல்லாம் உதாசீனப்படுத்தியிருக்கிறோம் என்பதை பொட்டி அடித்துச் சொல்லுகிறது உங்கள் கவிதை. எழுத்து நடையும் கையாண்ட கருவும் சொல்ல வந்த கருத்தை (பலர்) முகத்தில் அறைந்து சொல்கிறது..

கண்தந்தவளுக்கு, கண்சிகிச்சை தயக்கம்,
தாலாட்டியவளுக்கு, இருமல் கோபம்,
நகைத்தவளுக்கு, சலித்தல்,

என அத்தனையும் அபாரம்........... சுருக்கங்களைச் சுருக்கமாகச் சொன்ன உங்களை எப்படி பாராட்டுவதென்றெ தெரியவில்லை..



கிழிந்திருந்த பாயின்
கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில்
என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்
கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்
விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்
தவறி விழுந்தேன் என்ற
ஞாபகம் இருக்காது...

விடியலில்...
கதையின் மீதி
கேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...

எனக்கான உலகத்தை சிருஷ்டித்து
ஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து
நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...

நான் வருவதற்குள்
நீ தூங்கி விடாதே....
என் செல்லப்பாட்டியே...

கவிச்சமரில் எழுதிய கவிதை இது...பொருந்துகிறதா பாருங்களேன்.

எப்போதோ எழுதினாலும் எப்போதும் பொருந்தும் கவிதைகளே, காலத்தை வெல்லும் கவிதைகள்.. காட்சி விளக்கமும் ஏக்க முடிவும் கைதேர்ந்த கவிஞரிடம் உருவானதால் அடம் பிடிக்கவில்லை. முதுமை குறித்த இப் பழைய கவிதைக்கு..... வாழ்த்துக்கள் யவனிகா!!




உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...

ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...

குளிக்குமுன்னே காத்திருக்கும் மைகோதியும்
மணக்கும் சாம்பிராணி புகையும்...

மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...

பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!

பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...

உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....


எப்படி??? இந்தமாதிரி எழுதிப் பழகினீர்கள்!!!! சான்ஸே இல்லை.... சசியின் கவிதை படித்துவிட்டு வந்து வியப்பைப் போக்குவதற்கு முன்னர் அதே தரத்தில் அழகு கவிதை..... பெண்வாசம் தூக்கும் இக்கவிதைக்கு.... மனமாழ்ந்த பாராட்டுக்கள்.

பங்கிடும் பாசம், முந்தானைக் குடை, சாம்பிராணி வாசம், மடிதாங்கும் கவனம் என்று அத்தனையையும் கட்டுக்கு அடங்காத காளையைப் போன்று வந்தாலும், கவிதை, சிறைபிடிக்க முடியாமல் தோற்கிறது....

டபுள் பாராட்டுக்கள் யவனிக்கா..


இந்தக் கடிதத்தை
உயரத்தில் சேர்த்த திருப்தியில்
உறங்கச் சென்றது
கசங்கிய அந்த உறை..!

அதன் முகவரியை உருவி
தன் மனச்சுவரில் பதித்தது
இந்தக் கடிதம்..!

நீங்களே பாருங்கள்..!

நான் செழிக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
அதனுயிரை பாயவிட்ட தடங்கள்
அழுத்தமாய் பதிந்துள்ளன..!

மூச்சிரைத்த இமைப்பொழுதுகளை
கரையோர நுரைகள் போல்
முடியாகத் தரித்துள்ளது..!

ஒற்றைக் கண்ணூடு
தொலை தூரம் தெரிகின்ற
இலக்கை குறிபார்த்த
இலாகவம் செறிந்துள்ளது!

தன் சந்தோசம் நான் என்று
வாழ்ந்த தருணங்களில்
எடுத்த அவதாரங்கள்
பின்னாலே நிழல்களாய் ஒளிக்கிறது!
என்னைக் காட்டும்
கண்ணாடி முகம் களிக்கிறது!

இப்பொழுது புரிகிறதா
இழந்த பின்னும் அழாதிருக்கும்
எந்தன் இரகசியம்..!

கடிதத் திறப்பில் திறக்கும் கவிதை,,, கண்ணீர் வாரா முடிவில் முடிகிறது. கையான்ற சொற்கள் அருமை. வித்தியாசமான கரு. லாவகமான நடைப்போக்கு.

நிழல்கள் ஒளிக்கிறது??? கொஞ்சம் சந்தேகமான வார்த்தை... ஒளி என்றால் வெளிச்சம்... அல்லது ஒன்றை பிரதியிட்டுக் காட்டுவது... நிழல்கள் ஒளிப்பதில்லை.. (தக்க விளக்கம் தார யாரேனும் வரலாம்)

முதுமை செழிக்க, சுருக்கத் தடங்கள் வித்தியாசமானை பிணைப்பு, கடந்து சென்ற நொடிகள் வெண்கூந்தலாய் பின்னியவிதம், இளமை இழந்த போதும், முதுமை கிடைத்த சந்தோசம்... ஆச்சரிய கவிதை அமரன்.....

இம்மூன்று கவிதைகளையும் அடுத்த இதழில் சேர்க்க இதழ்குழுவை பரிந்துரைக்கிறேன்...

தரம் வாய்ந்த கவிதை தர ஊக்கியான நாரதருக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி...

poornima
24-12-2008, 12:35 PM
அன்பின் மகாபிரபு, நிரஞ்சன், அக்னி,சசிதரன், யவனிகா,அமரன்

உங்கள் வரிகளில் எல்லாம் நெகிழ்ந்து போய் நிற்கிறேன்.. எவ்வளவு அருமையாய்
எழுதியிருக்கிறீர்கள்..

தாய் ஒரு வாரிசை பிரசவிக்க தாயைப் பெற்றவள் மரபுக்கவிதையாய் ஆகிவிடுகிறாள்.
தாய் பெற்றதோ தன்னைப் பெற்றவளை புதுக்கவிதையாகவே கொண்டாடுகிறது..

பரம்பரை தொடர்வதில் மரபுக்கவிதைகள் யாவும் பரிபூரணத்துவம் பெற்றுவிடுகின்றன.

நாரதர் .. எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த படம்? அந்த கண்கள்.. அந்த முகம்
பார்க்கையில் மனதைப் பிசைகிறது..நெஞ்சு நெகிழ்கிறது..

பின்னே வந்த கவிதை வரிகள் யாவும் கண்களை நீரால் திரையிட..

இங்கு உயிர் நிழலுக்கல்ல.. நிஜத்தில் இருக்கும் இந்த உறவுகளை இன்னும்
அழுத்தமாய் பற்றிக் கொள்ள..

பாலகன்
24-12-2008, 12:49 PM
நன்றி பூர்ணிமா....... இன்னும் எழுதனும் போல இருக்குது....

சீக்கிரத்தில் நானும் மத்தவங்க போல கவிதை நடையில எழுத முயற்சிக்கிறேன்

நிரன்
24-12-2008, 01:55 PM
இந்தக் கடிதத்தை
உயரத்தில் சேர்த்த திருப்தியில்
உறங்கச் சென்றது
கசங்கிய அந்த உறை..!

அதன் முகவரியை உருவி
தன் மனச்சுவரில் பதித்தது
இந்தக் கடிதம்..!

நீங்களே பாருங்கள்..!

நான் செழிக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
அதனுயிரை பாயவிட்ட தடங்கள்
அழுத்தமாய் பதிந்துள்ளன..!

மூச்சிரைத்த இமைப்பொழுதுகளை
கரையோர நுரைகள் போல்
முடியாகத் தரித்துள்ளது..!

ஒற்றைக் கண்ணூடு
தொலை தூரம் தெரிகின்ற
இலக்கை குறிபார்த்த
இலாகவம் செறிந்துள்ளது!

தன் சந்தோசம் நான் என்று
வாழ்ந்த தருணங்களில்
எடுத்த அவதாரங்கள்
பின்னாலே நிழல்களாய் ஒளிக்கிறது!
என்னைக் காட்டும்
கண்ணாடி முகம் களிக்கிறது!

இப்பொழுது புரிகிறதா
இழந்த பின்னும் அழாதிருக்கும்
எந்தன் இரகசியம்..!



ஆகா பாடிடுவன் பாடிடுவன் என்று சொல்லி அமரன் நியமாகவே
பாடிட்டார்... அவரைப்பாட வைத்த அந்தப்பாட்டிக்கு என் நன்றியைக்
கூறிக்கொண்டு பாட்டியை அழைத்து வந்து இருத்திய நம் நாராவுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்


இக்கவிதைக்கு கண்டிப்பாக நான் பின்னுாட்டம் இடப்போவதில்லை:D
:D ஆ10 ல் கூறியது ஞாபகம் இருக்குங்கோவ்:D
நல்லதொரு கவிதைக்கு பின்னுாட்டங்கள் தேவையில்லை(இது நீங்க சொன்னதுதான்)
பின்னுாட்டம் கிடைக்காத பட்சத்தில் அக்கவிதையில் தவறேதும் இருக்காது.
அதை ரசி்த்து பிடித்திருந்தால் பாராட்டு மட்டுமே போதும்..... உங்கள்
கவிதைக்கு என் பாரட்டுக்கள் அமர்:icon_b:

நிரன்
24-12-2008, 01:57 PM
நன்றி poornima
தங்கள் பாராட்டிய வார்த்தைகள் நெஞ்சில் இன்னும் இனிக்கின்றன;)

பாரதி
25-12-2008, 03:43 PM
வண்ணப்படத்தில்
வாடாப்பூவாய்
வாழ்ந்து வரும்
வசந்தமே.

உடைந்த கட்டிலில்
ஓரமாய் படுத்துக்கொண்டு
எம் பேராண்டி என்றழைத்து
ஆனந்தித்த அற்புதமே..

அருகில் படுத்து
அழகான கதை உரைத்து
ஆனந்த உலகில் ஆலாபனை செய்ய
ஆவலுடன் நானிருக்க....

பள்ளி செல்லும் நேரத்தில்
சுருக்குப்பை திறந்து
கட்டுவதை வாங்கிக்கொள்ள
எட்டணா தரக் காத்திருந்தாய்.

நாட்களை எண்ணினால்.......

நான்காவது படிக்கையில்
நான் வந்து பாலூற்ற
நல்ல நேரம் பார்த்திருந்தாய்.

நான்கு பேர் தூக்கிச்செல்ல
நான் மட்டும் பத்திக்குச்சி ஏந்த
ஒற்றை மூக்குத்தியுடன்
ஓராளாய் தரையிறங்கினாய்.

உரையாடல் ஏதுமின்றி
உற்சாகமாய் எப்போதும்...
உணர்விழந்த ஜனங்களை
உள்ளூர நகைத்து நோக்கும்
உன் புன்னகையில் புரிகிறது

ஒரு முறை பாலூற்றி
ஓரிரு முறை அழுது,
ஒரு வாரத்திற்குப் பின்
உறவினர்கள் பேசியது
உன்னுடன் மறைந்த மூக்குத்தியை மட்டுமேயென...

பாலகன்
25-12-2008, 04:33 PM
அன்புள்ள பாரதி...

உங்கள் கவிதையின் ஆழம் மிக மிக அழகாக புரிகிறது...

சிறுவயதில் நமக்கு துணையாக இருந்த பாட்டியின் பிரிவின் சோகம் தெரிகிறது... உங்கள் கவிதை நடை மிக மிக அருமை

Narathar
26-12-2008, 08:13 AM
சரி நாம் அடுத்த நிழலை கொடுக்கலாமா?

என்ன நிரஞ்சனாரே..... நிழல் தயரா???

தமிழ்தாசன்
26-12-2008, 10:23 AM
அடுத்து அன்று தந்த நிழல் தரலாமா?
அல்லது ஏற்கனவே தயாரா?

சொல்லுங்கள். பின்னர் நான் ஒரு ஆர்வத்தில் நிழல்தர ....

அமரன்
26-12-2008, 10:28 AM
தமிழ்தாசன் அவர்களே!
அடுத்து தர என்னிடம் நிழலில்லை. ஆனால் உங்கள் அந்நிழல் அடுத்தத்துக்கு அடுத்ததாக கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. பிறக்கும் புத்தாண்டு புதிதாகவே இருக்க அந்த நிழலின் உயிர்கள் புத்துணர்வூட்டும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

தமிழ்தாசன்
26-12-2008, 10:32 AM
நல்லது அன்பர் அமரன் அவர்களே!

இதோ புதிய உதயம்!


http://i419.photobucket.com/albums/pp274/kathravann/Sunset.jpg

(எனது கணனியில் இருந்தது)

அமரன்
26-12-2008, 10:38 AM
புரிதலுக்கு நன்றி தமிழ்தாசன் அவர்களே!
அருமையான நிழல். பல கவிதைகளை உதயமாக்கும் கவிதையாக..முன்னையதுடன் தொடர்பு படுத்தக் கூடியதாக,,

தமிழ்தாசன்
26-12-2008, 10:42 AM
மகிழ்ச்சி அன்பர் அமரன் அவர்களே!
உங்கள் கவியை எதிர்பார்க்கும் எம் இதயம்!
எங்கே உங்கள் கவியின் புதிய உதயம்!

நிரன்
26-12-2008, 10:42 AM
அருமையான நிழல் அடிக்கடி நாம் எல்லோரும் பார்த்த நிழல் என்றாலும்
கவிதை வடிவில் இன்னும் சிந்திக்காத நிழல்
சிந்திக்க வைத்தமைக்கு நன்றி அண்ணா!

விரைவில் வருகிறேன் நிழலுக்கு உயிர் கொண்டு

தமிழ்தாசன்
26-12-2008, 10:49 AM
சரி நாம் அடுத்த நிழலை கொடுக்கலாமா?

என்ன நிரஞ்சனாரே..... நிழல் தயரா???

பாராட்டுக்கும் வரவேற்புதலுக்கும் மகிழ்ச்சி!
உங்களைத்தான் அழைத்தார் நண்பர் நாரதர் அவர்கள்!
ஆனால் என் ஆர்வம்... குறையொன்றுமில்லையா?
மறை மூர்த்தி ...
நாரயணா,,,,,,,,,,!!!!!!

நிரன்
26-12-2008, 11:09 AM
பாராட்டுக்கும் வரவேற்புதலுக்கும் மகிழ்ச்சி!
உங்களைத்தான் அழைத்தார் நண்பர் நாரதர் அவர்கள்!
ஆனால் என் ஆர்வம்... குறையொன்றுமில்லையா?
மறை மூர்த்தி ...
நாரயணா,,,,,,,,,,!!!!!!

யார் நிழல் கொடுத்தால் என்ன செய்யும் பொருள் வேறாக இருந்தாலும்
செயற்பாடு ஒனறுதானே

அடுத்தமுறை கிடைத்தால் நான் பதிகிறேன்
இம்முறை இந்நிழலுக்கு நானும் தருகிறேன் கவியை:)

பாலகன்
26-12-2008, 11:29 AM
கை பற பறங்குது.... எனக்கு நிழல் தெரியவில்லை நாரதா....

Narathar
26-12-2008, 12:09 PM
இதோ தமிழ் தாசனவார்கள் கொடுத்த நிழல் 57 ஆம் பக்க பார்வைக்காகவும், மகாபிரபுவுக்காகவும்....

இப்போது தெரிகின்றதா??

http://img19.picoodle.com/img/img19/3/12/26/f_Sunsetm_c5b464f.jpg

யவனிகா
26-12-2008, 04:02 PM
செவ்வான இதழ்ச்சுளையில்
செயற்கை வண்ணச்சிவப்பு
தீட்டிவிட்ட தூரிகையை
கடல்கழுவிக் காத்திருக்கிறது
சாயங்காலம்...
நானும் காத்திருக்கிறேன்
என் தூரிகையில் தோய்த்தெடுத்த
நீலவண்ணத்துடன்...
முதல் கதிர் முத்தம்
என்முகம் தொடும் போது
நீலவண்ணமாய்நிலமெல்லாம்
நிறம்மாறிப்போகும்
நிஜமாகிப்போகும்...!!!

பாபு
27-12-2008, 03:22 AM
காதலியின் சீற்றம் அது
காதலனின் நெஞ்சம் அது
கண்கொள்ளாக் காட்சியாம்
காமிராவின் தீனி அது !

வெற்றியின் வண்ணமிது
வெண்மேக மறுவிவாகமிது
வன்முறையை எதிர்த்து ரத்த
வண்ணக் குளியல் இது !

இயற்கையை காதலிக்காத
கவிஞர்கள் ஏது ?
கவிதையில் உண்மையை
எப்போதுதான் எழுதுவது ?!!

பாலகன்
27-12-2008, 05:32 AM
ஏய் மன்னவா
நீ மலைக்கு பின்னால்
ஒளிந்தாலும் உனக்காக
நாள் காலை வரை காத்திருப்பேன்

உறங்கப் போனாயோ
உலகின் ஒளியே
சரி அப்போ நாங்களும்
உறங்க செல்கிறோம்

பாலகன்
27-12-2008, 05:34 AM
நீல வான ஓடையில்ன்னு
பாடின எங்களை
இப்படி சித்திர செவ்வானம்
சிவக்கக்கண்டேன் பாடவைத்த
பரிதியே உன் திறமையே திறமை

shibly591
27-12-2008, 08:25 AM
என் பங்குக்கு கவிதைகள்

01)
அந்திமாலை செஞ்சடர் தீப
ஒளி வழியே பெருகிக்கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம் வர்ணக்கவிதைகள்...

02)
நீல வான மேடையில் நிறங்களாடும் நாட்டியம்

03)
இறக்கும் தறுவாயிலும்
என்னமாய்ச்சிரிக்கிறது சூரியன்..??

04)
தேனீர்
தனிமை
காதலி
கூடவே அந்திமாலை..
ஆஹா
இப்படியே வேண்டும்
காலம் நகரா வரம்..????

நிரன்
27-12-2008, 11:32 AM
நிழலுக்கு உயிர்..............பங்குக்கு என் கவி (கவியோ என்னவோ... எனக்கு உறுதியாகல்ல)


எத்தனையழகு எத்தனைவடிவம்
எல்லமே உன் கோலங்களா!
புத்தியில் புளுங்குமென் வேதனைக்கு
புகளிடம் கொடுக்குதிந்த மாலை.
தணலில் அனலென. பனியில் குளிரென..
உன்னில் செஞ்சுடரடங்குதிந்த மாலையிலே
- அந்த மலைக்குப்பின்னால்.
மறைந்து செல்லும் உன்னையென்னி
மணிக்கணக்கில் கனக்குதென்நெஞ்சம்....
மீண்டும் உனையிப்படிக்கானுவேனோ என....!


:D:D:D:D
(அப்பாட ஏதோ எழுதிப்புட்டன்)

நிரன்
27-12-2008, 11:35 AM
செவ்வான இதழ்ச்சுளையில்
செயற்கை வண்ணச்சிவப்பு
தீட்டிவிட்ட தூரிகையை
கடல்கழுவிக் காத்திருக்கிறது
சாயங்காலம்...
நானும் காத்திருக்கிறேன்
என் தூரிகையில் தோய்த்தெடுத்த
நீலவண்ணத்துடன்...
முதல் கதிர் முத்தம்
என்முகம் தொடும் போது
நீலவண்ணமாய்நிலமெல்லாம்
நிறம்மாறிப்போகும்
நிஜமாகிப்போகும்...!!!


நன்றாக உள்ளது ....
தூரிகை கொண்டு தீட்டிய ஓவியமென விளக்கும் வரிகள்
அருமை

வாழ்த்துக்கள் யவனிகா+அக்கா

நிரன்
27-12-2008, 12:16 PM
ஏய் மன்னவா
நீ மலைக்கு பின்னால்
ஒளிந்தாலும் உனக்காக
நாள் காலை வரை காத்திருப்பேன்

உறங்கப் போனாயோ
உலகின் ஒளியே
சரி அப்போ நாங்களும்
உறங்க செல்கிறோம்

காத்திருக்கும் உன்காக
காலையில் வருவேன்....:D
உன் ஒரு கவியை பார்த்தேன்
அது என் மறைவு
உன் மறுகவிகான வருவேன்
அதிகாலையில் மறந்து விடாதே
எனக்கான காலைக்காவித்தை

(மறைந்து போறவரின் றிப்ளை:D)


உங்கள் கவிதை நன்றாக உள்ளது மகாபிரபு அவர்களே

வாழ்த்துக்கள் தொடர்ந்தும் படையுங்கள் வரிகளை உறுக்கி...:icon_b:

நிரன்
27-12-2008, 12:33 PM
என் பங்குக்கு கவிதைகள்



03)
இறக்கும் தறுவாயிலும்
என்னமாய்ச்சிரிக்கிறது சூரியன்..??

மக்கள் உறங்கும் வேளையென
என்னித்தான் சிரிக்கிறானோ

04)
தேனீர்
தனிமை
காதலி
கூடவே அந்திமாலை..
ஆஹா
இப்படியே வேண்டும்
காலம் நகரா வரம்..????

காலங்கள் உறைய வேண்டும்
காதலி உன் கரம்பற்றியே...





நன்றாக உள்ளது....
நீண்டதொரு கவியமைப்பு இல்லையென்றாலும்
வரிகளின் அர்த்தங்கள் இனிமை

பாராட்டுக்கள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்

சிவா.ஜி
27-12-2008, 02:43 PM
மும்பையில் அவர்கள்
துப்பிய தோட்டாக்களால்
சிந்திய ரத்தம்
சிவப்புதானென்றாலும்....
கீழ் வானை வெளுக்கும்
சூரியனாய் நாங்கள்
சிலிர்த்தெழுவோம்......
எங்கள் வெண்மையின் ஜொலிப்பில்
கூசும் அவர்களின் கண்களும் அழுக்கு மனங்களும்!!

Narathar
27-12-2008, 03:04 PM
அடுத்து அன்று தந்த நிழல் தரலாமா?
அல்லது ஏற்கனவே தயாரா?

சொல்லுங்கள். பின்னர் நான் ஒரு ஆர்வத்தில் நிழல்தர ....


தமிழ்தாசன் அவர்களே!
அடுத்து தர என்னிடம் நிழலில்லை. ஆனால் உங்கள் அந்நிழல் அடுத்தத்துக்கு அடுத்ததாக கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. பிறக்கும் புத்தாண்டு புதிதாகவே இருக்க அந்த நிழலின் உயிர்கள் புத்துணர்வூட்டும் என்பது என் ஆழமான நம்பிக்கை.


புரிதலுக்கு நன்றி தமிழ்தாசன் அவர்களே!
அருமையான நிழல். பல கவிதைகளை உதயமாக்கும் கவிதையாக..முன்னையதுடன் தொடர்பு படுத்தக் கூடியதாக,,


மகிழ்ச்சி அன்பர் அமரன் அவர்களே!



:) :) :) :) :) :) :) :) :) :) :) :)

நிரன்
27-12-2008, 03:19 PM
இயற்கையை காதலிக்காத
கவிஞர்கள் ஏது ?
கவிதையில் உண்மையை
எப்போதுதான் எழுதுவது ?!!


கவிஞன் என்பவனே ரசிக்க வைக்கும் பொய்களை கூறுபவன்தானே

எனக்குத் தெரிந்து நான் இது வரை உண்மையே எழுதியதில்லை :)

உண்மைகள் கசக்கும் அது கவிதைக்கு உண்மை;)

வாழ்த்துக்கள் பாபு அவர்களே :icon_b:

பாலகன்
27-12-2008, 03:41 PM
ஏய் சூரியா எங்களைவிட்டு
போவதால் உன் கண்கள்
சிவந்தனவோ, அதனால்
அலைகடலும் சிவந்ததோ.....

அன்புள்ள நிரஞ்சன்
உங்கள் பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகம் அடைய வைக்கிறது... இந்த கவிதை உங்களுக்கு சமர்ப்பனம்

kulirthazhal
28-12-2008, 05:26 AM
இடைவெளிகள்
ஏதுமில்லை நமக்குள்,
தடைகள் என்ன செய்யும்.
உன் கனல்தெறிக்கும்
கோபத்தை
சிறுநேரம் எதிர்த்துவீழும்.
மயங்காமல்
நாடிவா
மலைகளும் தடையில்லை.
செவ்வானம் சொல்வது
உனக்குத்தான்
என்னவளே!

தீபா
28-12-2008, 05:44 AM
வர்ணக்குப்பிகள் வீசிய
இறைவனின் ஓவியம்

குழந்தை பூசிய
செஞ்சுவற்றுக் கிறுக்கல்கள்

காதலன் பேசிய
கதிரவன் வார்த்தைகள்

உலகோர் தேசிய
வர்ணக் கொடி

----------------------------

அன்புடன்
தென்றல் (எ) ஸ்டெபானி

தீபா
28-12-2008, 05:49 AM
இறக்கும் தறுவாயிலும்
என்னமாய்ச்சிரிக்கிறது சூரியன்..??



எரியும் கனலில் கொஞ்சம்
துப்பிய சூரியன் எச்சில்கள்

அது மடிந்து போவதில்லை..

சூரியனின் மரணத்திற்கு
இன்னும் நெருக்கமில்லை.

அன்புடன்
தென்றல்

தமிழ்தாசன்
28-12-2008, 09:36 AM
மீண்டும் அதே ஒளிநிழல்...
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/Sunset.jpg

தமிழ்தாசன்
28-12-2008, 09:54 AM
வானிடையேறிய சூரியனே!
செக்கச் சிவப்பானாய்!
அழகுக்கோலமா?
அன்றி மானிட நிலைசொல்லும் கோலமா?

நிலம் வாழ் உயிர்களை ஆள்பவனே!
உலகின் இருள் போக்கி
வலம்வர எழுதலில் ஆயிரம் கற்பிதனே!
எதிர்காலம் யாமறியோம்
ஆனாலும் நம்கடமைகள் தான் மறவோம்!

உலகாள்பவரே!
மீண்டும் எழும் ஆதவன்போல்
மீண்டெழுவோம் இப்பூவுலகில்!

தமிழ்தாசன்
31-12-2008, 03:45 PM
என்னங்க வரியையும் காணும்
புது நிழலையும் காணும்?

Narathar
31-12-2008, 03:51 PM
அடுத்த நிழலைத்தர நிரஞ்சன் அவர்களை அழைக்கின்றேன்...........

நிரன்
31-12-2008, 03:55 PM
அடுத்த நிழலைத்தர நிரஞ்சன் அவர்களை அழைக்கின்றேன்...........
நாளை நிழலைத் தருகிறேன் நாரா
தலைக்கு மேல் வேலை இன்று இன்று இரவு படம் பிடித்து நாளை
தருகின்றேன்

தமிழ்தாசன்
31-12-2008, 03:57 PM
நாளை நிழலைத் தருகிறேன் நாரா
தலைக்கு மேல் வேலை இன்று இன்று இரவு படம் பிடித்து நாளை
தருகின்றேன்


காத்திருக்கிறோம். எதிர்பார்த்திருக்கிறோம்.!

நிரன்
31-12-2008, 11:48 PM
பனியில் மூடிய நகரமிது பல்லாயிரக்கணக்காணோர் சேர்ந்து வரவேற்கும் புது ஆண்டு


http://farm4.static.flickr.com/3090/3154295779_cd07fb7714_b.jpg


இந்த இனிய பொன் நாளில் அணைவரும் மகிழ்ச்சி
பொங்கும் தருணத்திற்கேற்ற நிழல்.. கடும் குளிரையும்
பொருட்படுத்தாது முகம் மலர வானவேடிக்கைகள் சூழ
வரவேற்றவொரு இனிய நாள் நாமும் இனிய கவிதைகளைப்
பொழிவோம் இன் நாழுக்காய்


அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Narathar
01-01-2009, 04:19 AM
இன்றைய தினத்துக்கு மிக பொருத்தமான படம்! வாழ்த்துக்கள் நிரஞ்சனாரே.....

மன்ற சொந்தங்கள் அனைவருக்கும் மற்றும் நிழலுக்கு உயிர் திரியில் கவிதை தரும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இப்புத்தம் புதுவருட குதூகலத்துடன்
மேலுள்ள நிழலுக்கு உயிரூட்ட அனைத்து உறவுகளையும் அன்போடு அழைக்கின்றேன்

shibly591
01-01-2009, 06:58 AM
புத்தாண்டை வரவேற்க
வான்வெளித்தோரணங்கள்...

கூசிய கண்களைதிறக்க முடியாமல்
பசித்திருக்கும் தெருப்பிச்சைக்காரனுக்கு
பொருளாதார சமத்துவம் பற்றித்தெரியாது..
ஆயினும்
வீணடிக்கப்படும் ஆடம்பரங்களில்
அவனுக்கும் கொஞ்சம் கொடுத்திருப்பின்
உங்கள் புது வருட வெற்றிகட்கான பிரார்த்தனையில்
அவன் கரங்களும் இணைந்திருக்கும்....இல்லையா...???

(அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....புத்தாண்டில் இனிய வார்த்தைகளால் நிழலுக்கு உயிரூட்ட முடியாமைக்கு என்னை மன்னிக்கவும்)

நிரன்
01-01-2009, 10:04 AM
நன்றி நாரதரே!

58ம் பக்கப்பார்வைக்காக



பனியில் மூடிய நகரமிது பல்லாயிரக்கணக்காணோர் சேர்ந்து வரவேற்கும் புது ஆண்டு


http://farm4.static.flickr.com/3090/3154295779_cd07fb7714_b.jpg


இந்த இனிய பொன் நாளில் அணைவரும் மகிழ்ச்சி
பொங்கும் தருணத்திற்கேற்ற நிழல்.. கடும் குளிரையும்
பொருட்படுத்தாது முகம் மலர வானவேடிக்கைகள் சூழ
வரவேற்றவொரு இனிய நாள் நாமும் இனிய கவிதைகளைப்
பொழிவோம் இன் நாழுக்காய்


அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நிரன்
01-01-2009, 10:15 AM
புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் ஷிப்லி

கவிதையிலி புத்தாண்டு நன்நாளையும் இன்முகம்
மலர வரவேற்க முடியாதவரின்... கவலைகளையும்
அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும் என்பதனையும்
நன்றாக கவியில் விளக்கியுள்ளீர்கள்
அது மட்டுமல்ல இந்நன்நாளை கொண்டாட முடியாமலும்
யுத்தம் போன்ற இன்னல்களிலும் உலகில் பலர் அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
நாமெல்லாம் நன்றாக உணவு அளவிற்கேற்ப உடை உறையுள்
என எல்ல வசதியுடனும் வாழ்கிறோம்... பலர் அதற்கு எட்டா
துாரத்தில் காடுகள் கோயில்கள் என தஞ்சம் புகுந்துள்ளார்கள்
இவ் ஆண்டு அவர்கள் எல்லோருக்கும் ஒரு நல்ல ஆண்டாக
அமைய பிரார்த்திப்போம்


வாழ்த்துக்கள் ஷிப்லி:)

தமிழ்தாசன்
01-01-2009, 11:38 AM
உலகே விழித்தது
உயரே எழுந்தது ஒளி கீற்று!
உலகெங்கும் சமாதான ஒளி பரப்பும் இனிக்காற்று!
நேற்றுப் போலல்லாமல் வானம் சிந்திது பனிக்காற்று!

அழகான நிழல் தந்தாருக்கு பாராட்டு!
அன்போடு அழைத்தவர்க்கு பாராட்டு!

இன்பாக வாழ்க இவ்வையம்!
என்பாவும் கரைந்தததே இம்மன்றம்.

Narathar
02-01-2009, 05:25 AM
புத்தாண்டை வரவேற்க
வான்வெளித்தோரணங்கள்...

கூசிய கண்களைதிறக்க முடியாமல்
பசித்திருக்கும் தெருப்பிச்சைக்காரனுக்கு
பொருளாதார சமத்துவம் பற்றித்தெரியாது..
ஆயினும்
வீணடிக்கப்படும் ஆடம்பரங்களில்
அவனுக்கும் கொஞ்சம் கொடுத்திருப்பின்
உங்கள் புது வருட வெற்றிகட்கான பிரார்த்தனையில்
அவன் கரங்களும் இணைந்திருக்கும்....இல்லையா...???

(அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....புத்தாண்டில் இனிய வார்த்தைகளால் நிழலுக்கு உயிரூட்ட முடியாமைக்கு என்னை மன்னிக்கவும்)

அருமையாக இருக்கின்றது ஷிப்லி உங்கள் சமத்துவ கவிதை!

வாழ்த்துக்கள்

shibly591
03-01-2009, 10:51 AM
அருமையாக இருக்கின்றது ஷிப்லி உங்கள் சமத்துவ கவிதை!

வாழ்த்துக்கள்

நன்றிகள் நாரதரே............

Narathar
05-01-2009, 08:02 AM
எங்கே நம்ம மக்களின் புத்தாண்டு எழுச்சி சற்று மந்தமாக உள்ளதே???

ஹ்ம்ம்........

சரிதான் கொண்டாட்டங்களை ரசிக்கும் காலமா இது?

நிரன்
07-01-2009, 06:26 PM
புதுவருட நிகழ்வை கவிவடிக்கும் நிலையில் யாரும் இல்லை....

ஹிம்ம்...எப்பட் இருக்கும்...

சரி நாரதரே!
அடுத்த நிழல் நீங்கள் கொடுக்கிறீங்களா இல்லையென்றால் என்னிடம்
நானே..கமராவில் சிறைபிடித்த படடெமான்றுள்ளது
பிறகு போட்டுடுவன்:D

அக்னி
17-01-2009, 10:03 AM
நாரதரைக் காணோமே...

நிரன்...
நீங்கள் சிறைவைத்துள்ள நிழலை, இங்கு விடுவியுங்களேன்.

நிரன்
20-01-2009, 02:47 PM
நாரதரைக் காணோமே...

நிரன்...
நீங்கள் சிறைவைத்துள்ள நிழலை, இங்கு விடுவியுங்களேன்.

ஹிம்ம்ம்....
நார எந்த மூலைக்குள்ள இருக்கிறாறோ....
நாராயண நாராயண!!!

சிறைவைத்த நிழல் சிறகு முளைத்து பறந்துவிட்டது அக்னி விரைவில்
நிழலுடன் வருகிறேன்... உங்களிடம் நிழல் இருந்தாலும் கொடுங்கள் அக்னி

தமிழ்தாசன்
26-01-2009, 09:44 PM
http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/IMG_3826.jpg



நன்றி
VoT

Narathar
25-03-2009, 11:19 AM
என்ன அன்பு சொந்தங்களே...............
நம்ம நிழலுக்கு உயிர் பகுதி இப்படி உயிரோட்டமே இல்லாமல் இருக்கு??????

இந்தப்படத்துக்கான உங்கள் கவிதைகளை காண ஆவலாக இருக்கின்றேன்

ஓவியன்
25-03-2009, 11:27 AM
வாங்க நாரதரே...!!

இனி மீளக் களைகட்டும், இந்தத் திரியும் இன்னும் பல திரிகளும்...!! :icon_b:

______________________________________________________________________________________________

உயிர் வாழும் உரிமை
அதைக் கேட்கும் உரிமை
கேட்டதால் விளைந்ததை
சொல்லும் உரிமை,
என எல்லாவற்றையும்
தொலைத்து,
இனித் தொலைக்க ஏதுமின்றி
நாதியற்றுக் கிடக்கிறது
ராஜ ராஜ வம்சம்...!!

நதி
25-03-2009, 11:42 AM
உணவில்லை..மாற்று
உடையில்லை..மாற்று(ம்)
உணர்வில்லை..மற்றும்
உறைவிடமில்லை..

சொந்தமாய் இருக்கும் மண்ணை
முத்தமிட்டபடியே விட்டுவிடுவோம்
ஒட்டி வைத்த உயிரை.

அமரன்
25-03-2009, 12:18 PM
வாங்கோ நாரா!
நிழலுக்கு உயிர் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்க எவ்வளவு காசு சேர்த்து வைத்திருக்கேன் பாத்தீங்களா. இதைச் சொல்லலாம்னும் உங்களி தொடர்பு கொண்டால் முடியலையே..

நிதர்சனம்
26-03-2009, 06:24 PM
இந்தப் படத்தில்
அப்படி என்னதான்
இருக்கின்றது...

இந்தப் படத்தால்
எனக்குப் பாதிப்பில்லை...

குவியலாய்ப் பிணங்கள் இல்லை.
குதறப்பட்ட உடலங்கள் இல்லை.
சிதறிய அவயவங்கள் இல்லை.
கருகிய காட்சிகள் இல்லை.

கருவறைக்குள்ளேயே
காயம்பட்ட சிசுவும்,
கருவறை பிளந்து
கருகிப் போன கருவும்,
காட்சிகளாக இல்லை.

இங்கு இல்லாத இந்தக் காட்சிகளைத்
தினம் தினம் பார்த்து
மரத்துப்போன மனதிற்கு
இந்தப் படத்தால்
எந்தப் பாதிப்புமில்லை.

Narathar
06-04-2009, 07:30 AM
வரவேற்ற ஓவியர் மற்றும் அமரனுக்கும்........
கவிதை தந்த ரவுத்திரன் மற்றும் நிதர்சனத்துக்கும் நன்றிகள் பல.........

தொடர்ந்து வர முயற்சிக்கின்றேன்............

விகடன்
06-04-2009, 07:56 AM
வணக்க நாரதரே....
மிக நீண்.......................ட காலமாக தங்களை காணவில்லையே? என்னாயிற்றுது?

ஆதி
19-08-2009, 10:19 AM
http://www.executiveretreats.com.au/content_images/article_image_gallery/Holidays_for_Couples_1.jpg

நன்றி - கவிதா123

மக்கா..
கடலூடி முத்து குளித்தாலும் சரி
கரையோடு காதல் குளித்தாலும் சரி
திரியோடு உறவாட வாருங்கள்..

அமரன்
19-08-2009, 04:44 PM
என்
இடுப்பில் தலைமோத
அருகே வர மறுத்து..

என்
மனத்தில் அலைமோத
வைத்தபடி..

என்
கை பிடித்தபடி
நடந்து வரும்
நீ
குழந்தையா... குமரியா..

அலைகளுக்கும்
சந்தேகம் போலும்..
எங்கிருந்தோ
ஓடோடி வந்து விடுகின்றனவே..

வேண்டாம்...
அவைகளுக்குச் சொல்ல வேண்டாம்..
எனக்கு மட்டும் சொல்லிவிடு..
நீ
குழந்தை என்றே சொல்லி விடு..

வசீகரன்
20-08-2009, 10:45 AM
அஸ்தமித்து கொண்டிருக்கும்
ஆதவனும்
மென்மையுடன் ரசிக்கிறான்
அமைதிதழுவிய
அந்தி நேரமிது.....

இதயம்முழுதும் காதலாக
கைகோர்த்து நடக்கிறேன்
உன்னுடன்...
மனதில் அலைஅடிக்காத
அந்திமநேரமிது....

சிலு சிலுக்கும் இதமான
சாரல்காற்றில்
உடல் நனைந்து உற்சாகமாய்
உடன்வரும் உன்னைப்போல்
அழகாக இனிமையாக
இருக்கிறது இந்த
அந்திமநேரம்......

உலகே அழகாக
இதமாகத்தான்
இருக்கிறதோ இந்தநேரம் என்று
எண்ணத்தோன்றுகிறது
எனக்கு இந்த
அந்திமநேரம்.....

எவ்வளவு தூரம் நடக்கலாம் என்று
செல்லமாக என் மார்பில்குத்தி கேட்கிறாய்......

அதோ தெரிகிறதுபார் அஸ்தமனம்
அதுவரை கைபிடித்து
நடக்கலாம்....
நம்முடன் கைகோர்த்து
நடந்துவர
காதலுடன் காத்திருக்கிறது பார்
இந்த இதமான
அந்திமநேரம்....

ஆதி
20-08-2009, 01:03 PM
நீரூறிய மணலில்
பார்வைகளில் இருந்து காதலையும்
பாதங்களில் இருந்து ஸ்பரிசத்தையும்
சிந்தி நடக்கலாம் வா
ஒருவேளை நாம் பிரிந்துவிட்டாலும்
காதலும்
பாத ஸ்பரிசங்களும்
உயிர்ப்புடன் வாழ்ந்திருக்கும்
இக்கரைகளில்..

அமரன்
21-08-2009, 08:13 AM
அடப்பாவி..
பைசா செலவிலாமல்
காட்டிவிட்டாயே
செங்கடல்..

ஆதி
21-08-2009, 12:18 PM
நீண்ட இடைவேளைக்கு பிறகு
மீண்டும் நடக்கிறோம்
இக்கடல்வெளியில்..

முன்னொரு பொழுதில்
காதலின் நிழலில்
இதழ் வழி ஆன்மா அளாவ
கண்ட சொர்க்கத்தையும்
நம் முத்த சிதறல்களையும்
கரைப்பரப்புகளில் தேடிப்பார்க்கலாம்
அவை இங்கெதிலாவது
பத்திரப்பட்டிருக்கலாம்..
கிடைக்காவிடின்
அந்நினைவாய் செய்வோம் வா
இதழ் அளாவலையும்
ஆன்ம தழுவலையும்..
மீண்டுமொரு நினைவுக்காக..

அமரன்
21-08-2009, 12:30 PM
நம்மைப் பார்த்து
கடலும் கதிரவனும்
வெட்கம் கொள்கின்றன..

beulamary
20-09-2009, 01:04 PM
நீ கண் மூடினாலும்
முழிதாலும
என் முத்தம் சபதம்
உன்னருகே நான்
உன்னக்காக நான்
என்று சொல்லும் ..

--
Beula

மஞ்சுபாஷிணி
22-09-2009, 04:26 PM
சேர்ந்து வாழவிடாத கடன்
சேர்த்து கொ(ல்லு)ள்ளும் கடல்....

பாலகன்
23-09-2009, 06:44 PM
கடலின் நீளத்தை காலால் அளந்தான்
ஆனால் அவளின் மனதை

meera
06-12-2009, 04:48 PM
நிழலுக்கு உயிர் படக்கவிதை ஏன் இப்படி திண்டாடிக்கொண்டிருக்கிறது. யாராவது அடுத்த படம் தாருங்கள் மக்கா.

குணமதி
07-12-2009, 01:29 AM
கடலே!

இப்படி எத்தனை இணையை
உன் கரையில் சேர்த்து வைத்திருக்கிறாய்!

உன் ஈடிணையற்ற தொண்டுக்கு -
தலைதாழ்ந்த வணக்கம்.

ஆனால், அதற்குக்கட்டணமாக-
சில இணைகளின் உயிரை
விழுங்குகிறாயே!

இது கொடுமை அல்லவா?

Narathar
25-12-2009, 09:53 PM
அன்பர்களே நீண்ட நாட்களுக்கு பின்னர் இப்பகுதியில் உங்கள் கவிவரிகளுக்காக இந்த நிழலை தந்துள்ளேன்

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_rain_by_biblegeek.jpg

எங்கே நம் மன்ற கவிஞ்சர்கள் இந்த நிழலுக்கு உயிரூட்டட்டும்

குணமதி
26-12-2009, 03:39 AM
இன்பூட்டும் தண்மழையே!


என்னேயிவ் இன்பமென எடுத்து ரைப்பேன்

இனிதினிதே மழைத்துளியில் நனைந்து நிற்றல்!

தன்கதிரால் இவ்வுலகைப் புரந்து காக்கும்

தன்னேரில் கதிரவற்குத் தாழா வண்மை!

உன்வழங்கல் இல்லையெனில் உலகில் என்றும்

உறுதவமுந் தானமுந்தான் உண்டோ? இல்லை!

இன்னருளே! தண்மழையே! இயற்கை அன்பே!

இன்பூட்டி மகிழ்விக்கும் உனக்கெம் நன்றி!

Narathar
28-12-2009, 07:00 AM
நீண்ட இடைவெளிக்குப்பின்னால்........
நான் மன்றம் வந்து தந்த புது நிழலுக்கு அருமையான கவிதந்து வரவேற்ற குணமதிக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியரிதலையும் தெரிவிக்கின்றேன்............

தங்கள் கவி வரிகளை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பண்டிதனல்ல...... எனவே நம் மன்றக்கவிமணிகள் வந்து உங்களுக்கு மகுடம் சூட்டுவார்கள்.....

என்னால் முடிந்தது வெறும் பாராட்ட மட்டுமே.....

rajarajacholan
28-12-2009, 02:15 PM
இதுக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்றீங்களா ப்லீஸ்

இன்பூட்டும் தண்மழையே!


என்னேயிவ் இன்பமென எடுத்து ரைப்பேன்

இனிதினிதே மழைத்துளியில் நனைந்து நிற்றல்!

தன்கதிரால் இவ்வுலகைப் புரந்து காக்கும்

தன்னேரில் கதிரவற்குத் தாழா வண்மை!

உன்வழங்கல் இல்லையெனில் உலகில் என்றும்

உறுதவமுந் தானமுந்தான் உண்டோ? இல்லை!

இன்னருளே! தண்மழையே! இயற்கை அன்பே!

இன்பூட்டி மகிழ்விக்கும் உனக்கெம் நன்றி!

குணமதி
29-12-2009, 03:44 PM
சுருக்கமாக, இயன்றவரை புரியும்படிக் கூறுகிறேன் :

மழையில் நனைந்து நின்று மகிழும் பேரின்பத்தை எவ்வகை இன்பமென எடுத்துரைப்பேன்!
தன் கதிர்களால் இந்த உலகத்தைப் பேணிக் காப்பாற்றும் தனக்கு நிகரில்லாத கதிரவனுக்குக் குறையாத வள்ளல் தன்மை உடைய மழையே, நீ நீர் வழங்காவிடில் இவ்வுலகில் தவம் போலும் வினை ஆற்ற முடியுமா? தானம்தான் இயலுமா?
இயலாது.
இனிய அருளைக் கொண்ட குளிர்ந்த மழையே! அன்பு கொண்ட இயற்கை ஆற்றலே!
இன்பமும் மகிழ்வும் அளிக்கும் உனக்கு எங்களின் நன்றியைக் கூறுகிறோம்.

பாரதி
29-12-2009, 03:48 PM
அழகுத்தமிழில் இனிய கவிதை.
மிகவும் அருமை நண்பரே!

குணமதி
29-12-2009, 03:53 PM
அழகுத்தமிழில் இனிய கவிதை.
மிகவும் அருமை நண்பரே!

மிக்க நன்றி.

Narathar
30-12-2009, 11:14 AM
எங்கே நம் மன்றக்கவிகள்?
என்னாச்சு குணம்தியைத்தவிர யாரும் கவிதை தரக்காணோமே????

சரண்யா
30-12-2009, 11:30 AM
மிக அருமையாக விளக்கத்துடன் கொடுத்துள்ளீர்கள் குணமதி அவர்களே...
வாழ்த்துகள்..

சரண்யா
30-12-2009, 11:44 AM
மழைத்துளிகள் மண்ணில் சேர்வதற்குள்
மாந்தரில் இன்பமென கருதுவோருமுண்டு
துன்பமென தூற்றுபவரும் உண்டு அந்த
வான் மழையை வரவேற்று இரு கரங்கள்
தன்னை விரித்து கொண்டாடும் பெண்மை
சந்தோஷமாக கருதும் தருணத்தில் இதுவும்
ஒன்றென நீ அறிவாயோ..இறைவா

சிவா.ஜி
30-12-2009, 12:46 PM
வாளி நீரை கவிழ்த்ததுபோல் கொட்டாது
பூவாளியின் சிதறலால்
புள்ளிப் புள்ளி துளிகளாய்
விண்ணிலிருந்து வீழும்
பன்னீர்ச் சாரலாய்
பொழிகிறதே மழை...

உனக்கும் எனக்குமென்றா நினைத்தாய்...?

மெல்லிய மலரும்.
புல்லும், புள்ளினமும்
மெள்ள நனைந்திடத்தான்...

புல்லினிடை மலராய்
மழையை ஏமாற்றி
நனைந்து மகிழ்கிறாயோ
சின்னப்பெண்ணே....!!!

Narathar
01-01-2010, 06:31 PM
மழைத்துளிகள் மண்ணில் சேர்வதற்குள்
மாந்தரில் இன்பமென கருதுவோருமுண்டு
துன்பமென தூற்றுபவரும் உண்டு அந்த
வான் மழையை வரவேற்று இரு கரங்கள்
தன்னை விரித்து கொண்டாடும் பெண்மை
சந்தோஷமாக கருதும் தருணத்தில் இதுவும்
ஒன்றென நீ அறிவாயோ..இறைவா

மழையையும் மங்கையையும் அழகாக இணைத்திருக்கின்றீர்கள்!

வாழ்த்துக்கள், இப்பகுதியில் உங்கள் கவிதைகள் தொடரட்டும் :icon_b:


புல்லினிடை மலராய்
மழையை ஏமாற்றி
நனைந்து மகிழ்கிறாயோ
சின்னப்பெண்ணே....!!!


அடடா! சிவா மழையையுமா பெண்கள் ஏமாற்றுவார்கள்??? :)

நல்ல கற்பனை!!!
இப்பகுதியில் வழமை போல தொடரட்டும் உங்கள் பங்களிப்பு

சரண்யா
02-01-2010, 02:06 AM
மழையையும் மங்கையையும் அழகாக இணைத்திருக்கின்றீர்கள்!

வாழ்த்துக்கள், இப்பகுதியில் உங்கள் கவிதைகள் தொடரட்டும் :icon_b:



நன்றிகள் Narathar அவர்களே...

Narathar
02-01-2010, 10:57 AM
நிழலுக்கு உயிரூட்டிய குணமதி, சரண்யா மற்றும் சிவாவுக்கு நன்றிகள்.... வழமை போல இ-பணத்தை அமரனவர்கள் வழங்குவார்கள்???!!!!

நாராயணா!!!!

அமரன்
02-01-2010, 11:03 AM
அடப்பாவிகளா..

காசில்லாத சமயத்தில பார்த்துப் பார்த்து ஆப்பு வைக்கிறாங்கப்பா.

ம்...ம்....

நடக்கட்டும்.

கவிதைகளைப் படித்து இ-காசுகளை விரைவில் வழங்குகிறேன்.

சிவா.ஜி
02-01-2010, 11:12 AM
அடப்பாவிகளா..

காசில்லாத சமயத்தில பார்த்துப் பார்த்து ஆப்பு வைக்கிறாங்கப்பா.


கவிதைகளைப் படித்து இ-காசுகளை விரைவில் வழங்குகிறேன்.

யப்பா சாமி இது உலகமகா அக்குறும்புப்பா.....!!!


ஆனா கடேசியா சொன்னது சூப்பரு.....!!! கடையேழு வள்ளல்களுக்கு அப்புறமா அமரன்ஜி தான் அப்படீன்னு பரவலா பேசிக்கிறாங்கப்பா....!!!!

ஆதி
05-01-2010, 09:24 AM
இந்த
பச்சை குமரி மீதில்
இச்சைக் கொண்டு வழியும் மழையின்
நச்சு குணம்
"நாசமா போகட்டு"மென
வைய எங்கோ தெறித்திருக்கலாம்
ஒரு இடி..

நிலா முகம் காட்டி
நட்சத்திர எழுத்துக்களால்
நித்தம் காதல் சொல்லியும்
மற்ற எவனுக்கோ மொத்த மனதையும்
இவள் தர
இடிந்த வானம் இமை கசித்திருக்கலாம்..

கரி பூசிக்கொண்ட மேகம்
இவளின் வெளுப்பை பார்த்த
வெட்கி சிந்தும்
வேதனை துளியாகவும் இருக்கலாம்
இந்த மழை..

சிவா.ஜி
07-01-2010, 12:23 PM
அசத்தல் வரிகள் ஆதன்.

இச்சை கொண்ட மழைத் துளிகள்,

இடிந்த வானம்,

வெட்கிய மேகம்.......

அருமையான கற்பனை, அதற்கேற்ற* சொற்பிரயோகம். பாராட்டுக்கள் ஆதன்.

வசீகரன்
08-01-2010, 06:57 AM
இதயம் நனைக்கும் மழையேஉன்னோடு இணைந்து களிக்கிறேன்....என்னோடு நனைந்து சிலிர்க்கிறேன்....குமரி நானும் குழந்தையாகியே குதுகலிக்கிறேன்....உலகைமறந்து ஓடியாடியே உள்ளம் குளிர்கிறேன்.... கரைபுரண்டு கரைந்துவரும் மழையே உன்னோடு கலந்தாடியே கரைந்திடுவேன் மழையே...சிறகொடித்து சிதறிவரும் மழையே...உன்னோடு சிறகடித்து விரிந்திடுவேன் மழையே....பொலபொலவென பொழிந்துவரும் மழையே பொங்கிநிற்கும் காதலுடன் கைகள்ஏந்தி நின்றேன் நான் மழையே....புவியெங்கும் பூரிக்கும் பூமழையே உன் துளிகள்தெறித்து பூக்களானேன் பூவை நான் மழையே....என் மனம்நனைத்த மழையே.....என் மனம்மகிழ்ந்தமழையே.....எப்போதும் என்னோடுவேண்டும் நீ என் மழையே....எப்போதும் என்தோழி நீ என் மழையே....

வசீகரன்
08-01-2010, 07:13 AM
அன்பு மன்றத்தோரே இந்த கவிதையை யாராவது சரியாக செதுக்குங்களேன் என் கணினியில் செய்ய முடியவில்லை.... எழுத்துக்கள் எடிட் செய்தாலும் இப்படித்தான் வருகிறது......! இந்த கவிதையைசரியாக செதுக்கி யாரேனும் உதவுங்களேன்....,.

ஆதி
08-01-2010, 07:38 AM
இதயம் நனைக்கும் மழையே
உன்னோடு இணைந்து களிக்கிறேன்....
என்னோடு நனைந்து சிலிர்க்கிறேன்....

குமரி நானும் குழந்தையாகியே குதுகலிக்கிறேன்....
உலகைமறந்து ஓடியாடியே
உள்ளம் குளிர்கிறேன்....

கரைபுரண்டு கரைந்துவரும் மழையே
உன்னோடு கலந்தாடியே
கரைந்திடுவேன் மழையே...

சிறகொடித்து சிதறிவரும் மழையே...
உன்னோடு சிறகடித்து விரிந்திடுவேன் மழையே....

பொலபொலவென பொழிந்துவரும் மழையே
பொங்கிநிற்கும் காதலுடன்
கைகள்ஏந்தி நின்றேன் நான் மழையே....

புவியெங்கும் பூரிக்கும் பூமழையே
உன் துளிகள்தெறித்து பூக்களானேன்
பூவை நான் மழையே....என் மனம்நனைத்த மழையே.....

என் மனம் மகிழ்ந்த மழையே.....
எப்போதும் என்னோடு வேண்டும் நீ
என் மழையே....
எப்போதும் என்தோழி நீ
என் மழையே....

----------------

சரியாய் இருக்கானு பார்த்து சொல்லுங்கள் வசீகரன்..

சிவா.ஜி
08-01-2010, 07:42 AM
சரியாகவும் இருக்கிறது. மிக நன்றாகவும் இருக்கிறது. வசீகரனின் வசீகர வரிகளில், நாமும் அந்தப் பெண்ணோடு மழையில் நனைந்த உணர்வைத் தருகிறது. வாழ்த்துகள் வசீ.

வசீகரன்
08-01-2010, 08:37 AM
ரொம்ப நன்றி ஆதி..! சில இடங்களில் சின்ன மாறுதல்கள் தேவை நீங்கள் சொன்னல் உங்களுக்கு நான் தனிமடல் இடுகிறேன் மீண்டும் ஒருமுறை எடிட் செய்து சரிசெய்ய முடியுமா ஆதி....?

ஆதி
08-01-2010, 09:25 AM
தாராளமாய் அனுப்புங்க வசீ..

ஆதி
08-01-2010, 11:30 AM
அசத்தல் வரிகள் ஆதன்.

இச்சை கொண்ட மழைத் துளிகள்,

இடிந்த வானம்,

வெட்கிய மேகம்.......

அருமையான கற்பனை, அதற்கேற்ற* சொற்பிரயோகம். பாராட்டுக்கள் ஆதன்.

மிக்க நன்றி சிவா அண்ணா..

Narathar
08-01-2010, 06:29 PM
அடப்பாவிகளா..

காசில்லாத சமயத்தில பார்த்துப் பார்த்து ஆப்பு வைக்கிறாங்கப்பா.

ம்...ம்....

நடக்கட்டும்..

என்னாது??????

கையில் காசு இல்லாத நேரமா? இ காசுப்பை லட்சத்தை தொடப்போகின்றதே???

நாராயணா!!!!

கவிதைக்கு மட்டுமல்லாது நிழல் கொடுத்தவருக்கும் இ பணம் தாராளமாய் தரலாம்!



கவிதைகளைப் படித்து இ-காசுகளை விரைவில் வழங்குகிறேன்.

எங்கே நம்ம அமரனுக்கு எல்லோருமா சேர்ந்து ஒரு "ஓ....." போடுங்க... ;)

Narathar
08-01-2010, 06:31 PM
நிலா முகம் காட்டி
நட்சத்திர எழுத்துக்களால்
நித்தம் காதல் சொல்லியும்
மற்ற எவனுக்கோ மொத்த மனதையும்
இவள் தர
இடிந்த வானம் இமை கசித்திருக்கலாம்..

கரி பூசிக்கொண்ட மேகம்
இவளின் வெளுப்பை பார்த்த
வெட்கி சிந்தும்
வேதனை துளியாகவும் இருக்கலாம்
இந்த மழை..


அட அட அட!!
வைரமுத்துவை விஞ்சிவிட்டீர்கள் போங்க!

வாழ்த்துக்கள்

Narathar
08-01-2010, 06:34 PM
இதயம் நனைக்கும் மழையே
உன்னோடு இணைந்து களிக்கிறேன்....
என்னோடு நனைந்து சிலிர்க்கிறேன்....

குமரி நானும் குழந்தையாகியே குதுகலிக்கிறேன்....
உலகைமறந்து ஓடியாடியே
உள்ளம் குளிர்கிறேன்....

கரைபுரண்டு கரைந்துவரும் மழையே
உன்னோடு கலந்தாடியே
கரைந்திடுவேன் மழையே...

சிறகொடித்து சிதறிவரும் மழையே...
உன்னோடு சிறகடித்து விரிந்திடுவேன் மழையே....

பொலபொலவென பொழிந்துவரும் மழையே
பொங்கிநிற்கும் காதலுடன்
கைகள்ஏந்தி நின்றேன் நான் மழையே....

புவியெங்கும் பூரிக்கும் பூமழையே
உன் துளிகள்தெறித்து பூக்களானேன்
பூவை நான் மழையே....என் மனம்நனைத்த மழையே.....

என் மனம் மகிழ்ந்த மழையே.....
எப்போதும் என்னோடு வேண்டும் நீ
என் மழையே....
எப்போதும் என்தோழி நீ
என் மழையே....
..


மிக அழகான வரிகள் வசீகரன்
தொடர்ந்து எழுதுங்கள் ஒரு தலை சிறந்த கவிஞ்சராகலாம்

Narathar
08-01-2010, 06:41 PM
சரி அன்பர்களே கடந்த மழை படத்துக்கு கவி தந்த அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இனி அடுத்த நிழலுக்கு உயிரூட்டுவோம்....... வாருங்கள்

இதோ அடுத்த நிழல்

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_genoside_l.jpg

மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு
வரிகளை கொடுங்கள். கவிதையாய் அது மலரட்டும்...

இது கவிதை பயிலும் இடம்.
எனவே புதியவர்களும் தாராளமாய் முயற்சிக்கலாம்

வசீகரன்
09-01-2010, 07:01 AM
தாராளமாய் அனுப்புங்க வசீ..

நன்றி ஆதி... உங்கள் ஜி மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன்...!

வசீகரன்
09-01-2010, 07:03 AM
சரியாகவும் இருக்கிறது. மிக நன்றாகவும் இருக்கிறது. வசீகரனின் வசீகர வரிகளில், நாமும் அந்தப் பெண்ணோடு மழையில் நனைந்த உணர்வைத் தருகிறது. வாழ்த்துகள் வசீ.

நன்றி சிவாண்ணா.....!

வசீகரன்
09-01-2010, 07:06 AM
மிக அழகான வரிகள் வசீகரன்
தொடர்ந்து எழுதுங்கள் ஒரு தலை சிறந்த கவிஞ்சராகலாம்

ரொம்ப நன்றி நாரதரே......! அடுத்த கவிதை தருகிறேன்....

Narathar
09-01-2010, 07:42 AM
இந்தப்பக்க பார்வைக்காக................

மக்களே எங்கே உங்கள் கவிதைகளை தாருங்கள்.

அமரன் உங்களுக்கு ஈ சண்மானம் வழங்க தயாராக இருக்கின்றார்




சரி அன்பர்களே கடந்த மழை படத்துக்கு கவி தந்த அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இனி அடுத்த நிழலுக்கு உயிரூட்டுவோம்....... வாருங்கள்

இதோ அடுத்த நிழல்

http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_genoside_l.jpg

மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு
வரிகளை கொடுங்கள். கவிதையாய் அது மலரட்டும்...

இது கவிதை பயிலும் இடம்.
எனவே புதியவர்களும் தாராளமாய் முயற்சிக்கலாம்

muthuvel
10-01-2010, 04:32 PM
நன்றி ஆதி... உங்கள் ஜி மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன்...!


மங்கை நீ ,
மழலை ஆனாய் ,
மழையில் நனைந்து....

muthuvel
10-01-2010, 04:35 PM
நிழலுக்கு உயிர் ::::: படக்கவிதை உங்களுக்காக!

அன்பின் மன்ற சொந்தங்களே......

நமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது!
ஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.
அந்த காதலினால் இந்த திரியை நான்
மன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........

இந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்
புதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.

==========================================================================

இத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,
அந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......

அது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..

உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......

கவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...

அதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...
ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.

=========================================================================


இதோ உங்கள் கற்பனைக்கு..........
உங்கள் கவி வரிகளை எதிர்பார்த்து
எனது முதலாவது படம்.

http://img26.picoodle.com/img/img26/4/7/2/narathar/f_motherandbam_ebbf841.jpg

எங்கே உங்கள் கவிதைகள் களைகட்டட்டும்.!!!

ஒருவருக்கு ஒருவர்,
பரஸ்பர நன்றிகள்,
தாய்மை ஆக்கியதற்கும்,
என்னை பெற்றதற்கும் ...

muthuvel
11-01-2010, 07:17 AM
அக்னி! இந்த வயசில் உங்களுக்கு எதைப்பார்த்தாலும் இப்படித்தான் தோணும்...... நாராயணா!!!

அருமையான கற்பனை வாழ்த்துக்கள்



மனிதனின் குணத்தை
இந்த நீர்த்துளில் பார்த்த உங்கள் கவிப்பார்வை பாராட்டத்தக்கது...

வாழ்த்துக்கள்...

உங்கள் கவிதைகள் வர வர மிக மெருகேறிவருவதை காண்கின்றேன்..... தொடர்ந்து எழுதுங்கள்



ரசிக்கவைத்தன உங்கள் வார்த்தை ஜாலங்கள்......

உங்கள் பார்வை வித்தியாசமானது!

வாழ்த்துக்கள்.. இன்னும் எழுதுங்கள்



தீபனின் அதே அக்மார்க் பார்வை
பெயரைப்பார்க்காமல் சொல்லலாம்
இது தீபன் கவிதை என்று

இன்னும் எழுதுங்கள்.........
வாழ்த்துக்கள் தீபன் - உங்கள் கவிதைக்கு



அடடா என்ன வரிகள்
என்ன வரிகள்.....
இதில் கவிதை மாதிரி என்று "பிகு" வெறு.....

அழகிய ஓவியம் போல் வடித்துள்ளீர்கள் உங்கள் கவிதையை வாழ்த்துக்கள்

உன்னில் பட்ட மழைத்துளிகள் ,
கரைந்து போயின ,
இசல்கள் போல ...

Narathar
12-01-2010, 10:27 AM
ஒருவருக்கு ஒருவர்,
பரஸ்பர நன்றிகள்,
தாய்மை ஆக்கியதற்கும்,
என்னை பெற்றதற்கும் ...



மங்கை நீ ,
மழலை ஆனாய் ,
மழையில் நனைந்து....


உன்னில் பட்ட மழைத்துளிகள் ,
கரைந்து போயின ,
இசல்கள் போல ...

நன்றி முத்துவேல் உங்கள் கவிதைகளுக்கு.........

உங்களுக்கு ஹைக்கூ நன்றாகவே வருகின்றது தொடருங்கள்!!!

நான் கொடுத்துள்ள கடைசிப்படத்துக்கு கவிதை தந்து அசத்துங்கள் பார்க்கலாம்

Narathar
15-01-2010, 05:56 PM
என்ன நம்ம மன்றக்கவிகள் மௌனம் காக்கின்றார்கள்????

ஒரு வேளை நிழல் கொஞம் காட்டமாக இருக்கின்றதோ???

என்ன கவிஞ்சர்களே வேறு நிழல் வேண்டுமா?????

அக்னி
15-01-2010, 09:34 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/24/large/1_genoside_l.jpg



சடலங்களையும் குதறிக் குதூகலிக்குது
அரக்கத்தனம்...
அதையும் தாண்டிக் காக்கத்துடிக்குது
தாயின் மனம்...

தப்பட்டும் அந்த உயிர்...
பழிவாங்கவல்ல..,
இந்தக் கொடூரக்கணங்களுக்குச்
சாட்சியாவதற்காக...

அக்னி
15-01-2010, 09:46 PM
அட...
நசுக்குவதற்கும் சிதைப்பதற்குமென்றால்,
எத்தனை கொடும் கரங்கள்
இணைகின்றன...

எலும்புக்கூடுகளுக்குள்
உயிர் இருக்குமோ
எனக் கிளறிப்பார்ப்பது
அத்தனை இன்பமா...
இல்லை, அச்சமா...

இன்பமானாலும் அச்சமானாலும்
அனுபவிப்பவர்களுக்கு
அது தருவது
துன்பம் மட்டுமே...

சிவா.ஜி
16-01-2010, 06:52 AM
எத்தனைமுறை
எத்தனை பேரால்தான்
குத்திக்கிழிக்கப்படுவோம்,

எழுந்துநிற்க இயலாமல்
இரும்புக்கரம் தடுக்க,
முன்னேற விடாமல்
கோரைப்பற்கள் கிழிக்க
வெற்று வாழ்க்கை வாழ்கிறோமென்ற
அத்தாட்சியாய்...வெறும் ரத்தம் ஓடும்
உடலாய் உயிர் வாழும் ஜனங்களாய்
எத்தனைநாள் வாழ்வது?

Narathar
18-01-2010, 07:03 AM
சடலங்களையும் குதறிக் குதூகலிக்குது
அரக்கத்தனம்...
அதையும் தாண்டிக் காக்கத்துடிக்குது
தாயின் மனம்...

தப்பட்டும் அந்த உயிர்...
பழிவாங்கவல்ல..,
இந்தக் கொடூரக்கணங்களுக்குச்
சாட்சியாவதற்காக...


அட...
நசுக்குவதற்கும் சிதைப்பதற்குமென்றால்,
எத்தனை கொடும் கரங்கள்
இணைகின்றன...

எலும்புக்கூடுகளுக்குள்
உயிர் இருக்குமோ
எனக் கிளறிப்பார்ப்பது
அத்தனை இன்பமா...
இல்லை, அச்சமா...

இன்பமானாலும் அச்சமானாலும்
அனுபவிப்பவர்களுக்கு
அது தருவது
துன்பம் மட்டுமே...


நான் இந்த நிழலுக்கு எப்படியான வரிகளை எதிர்பார்த்தேனோ அதை விட சற்று அதிகமாகவே வந்திருக்கின்றது உங்கள் வரிகள்

வாழ்த்துக்கள் அக்னி
தொடரட்டும் உங்கள் பணி

பழிவாங்கவல்ல...... சாட்சியாக என்பது மிகச்சரியான வரி

muthuvel
18-01-2010, 03:25 PM
சடலங்களையும் குதறிக் குதூகலிக்குது
அரக்கத்தனம்...
அதையும் தாண்டிக் காக்கத்துடிக்குது
தாயின் மனம்...

தப்பட்டும் அந்த உயிர்...
பழிவாங்கவல்ல..,
இந்தக் கொடூரக்கணங்களுக்குச்
சாட்சியாவதற்காக...




துங்காதே தோழா, தினம் ,
உன் இமையை திறந்து விழித்திடு இக்கணம் ,
வாழ்க்கை ஒரு போர் களம் ,
பயமில்லா யானை பலம் ,
கடின உழைப்பின் கரம் ,
இவை இரண்டும் இணைந்தால் ஏற்படுத்தும் ,
மனித வாழ்வில் வளம் ..








அந்த புகை படத்தில் எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன் , திரு நாரதர் அவர்களே இது சரிதானா ?

Narathar
22-01-2010, 05:37 PM
எத்தனைமுறை
எத்தனை பேரால்தான்
குத்திக்கிழிக்கப்படுவோம்,

எழுந்துநிற்க இயலாமல்
இரும்புக்கரம் தடுக்க,
முன்னேற விடாமல்
கோரைப்பற்கள் கிழிக்க
வெற்று வாழ்க்கை வாழ்கிறோமென்ற
அத்தாட்சியாய்...வெறும் ரத்தம் ஓடும்
உடலாய் உயிர் வாழும் ஜனங்களாய்
எத்தனைநாள் வாழ்வது?


நிதர்சனமான வார்த்தைகள் சிவா!

நன்றிகள் உங்கள் கவிதைக்காக. தொடர்ந்து இப்பகுதிக்கு உயிர் கொடுங்கள்....

நான் இங்கு வர மறந்தாலும்!