PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!Pages : 1 2 3 4 [5] 6 7 8

தீபன்
17-09-2008, 07:28 AM
கலைந்த கேசத்தில்
வகிடை தேடுவதை போல
சிதைந்த தேசத்தில்
வாழ்கையை தேடுகிறேன்
வலியுடன்
களவு போன கனவில்
எஞ்சியிருப்பது என் கண்முன்னே
ஒரு குவழை மட்டுமே
என்று தனியும்
இந்த தீவிரவாத தாகம்....(கண்ணீருடன்)சிதைந்த தேசம்-
இது
தீவிரவாதத்தாலல்ல...
தீவிரவாதம்-
சிதைந்த தேசத்திற்காய்..!

அமரன்
17-09-2008, 07:29 AM
உலகம் முன்னேறுகிறதா...
யார் சொன்னது..?
44 ஆண்டுகளுக்குமுன்
வியட்னாமில்...
இன்றும் அதே நிலை
நம் தேசத்தில்!

நமக்கில்லை என ஒதுங்கியிருப்போரே
கவனம்....
நாளை இது
உங்களுக்காயுமிருக்கலாம்...!

பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமல்லாது பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கும் சேர்த்து சற்றே எச்சரிக்கும் தொனியுடன் பதறுகிறது கவிதை. வியட்நாம், நம்தேசம் என்ற சொல்லாடல்கள் போர் அவலங்களை மட்டும் காட்டுகிறது. இதைவிடவும் மனித அவலங்கள் மலிந்திருக்கின்றன. அவற்றையும் தொட்டுக் கவிதை பிறந்திருந்தால் கனம் கூடி இருக்கும். வல்லாதிக்கம் ஒழிந்து ஒற்றுமை ஓங்க இது போலக் கவிதைகள் குளிர்தழலாக வரட்டும்.

அமரன்
17-09-2008, 07:35 AM
எதுவுமே அறியாத
உலகமே புரியாத
வயதில்
ஏழ்மையை
உணர்ந்து விட்டான் !

உணர்த்தி விட்டான் ??

வருக பாபு..

நிழலுக்கு உயிர் எமக்களித்த மூன்றாவது கவிஞர் நீங்கள். இனிய நாராதருக்கு நன்றி.
உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

கடுகு போல இருந்தாலும் காரம் மிகுந்த கவிதை. உலகை இளமையில் கற்றதோடல்லாமல் இளமையில் கற்பித்தான் என்ற வரிகள் சாட்டையாகி மனதில் வரிகளை தோற்றுவித்தது.

அமரன்
17-09-2008, 07:45 AM
இதோ இங்குதான் என் அன்னை
என்னைப் பெற்றெடுத்தாள்
இங்குதான் என்னைக் கண்ணே மணியே என
கொஞ்சி வளர்த்தாள்....
இங்குதான் என் அன்னையும், பிதாவும்
இல்லறத்தில் இன்புற்று இணைந்திருந்தார்கள்
இங்குதான் என் எல்லா சந்தோஷமும் இருந்தது
எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது...
விதி என்னை விளையாட வெளியேற்றிவிட்டு...
என் எல்லாவற்றையும் எடுத்துக்கொன்டது...
அதோ நிற்கும் அவர்களும் நானும்
இப்போது வலியுணர்ந்த வலிமையாளர்கள்
அடுத்து ஒரு அழிவுக்கரம்
எங்களை அணைக்காதிருந்தால்
வாழ முயல்கிறோம்....
வளர்ந்து பெரிதாகி போரில்லா உலகை
ஆள முயல்கிறோம்....
வலிகளை வலிமையாக்கி சோதனையில் சாதனை படைக்கத்தூண்டும் கவிதை. விதி அவனை விளையாட அனுப்பிவிட்டு தான் அவனில் விளையாடி விட்டது. உருவத்துடனும் உறுதியுடனும் இருக்கும் அவனுக்கு அரூபமாக அவந்தந்தையும் தாயும் வழிகாட்ட உலகாள முடிவெடுக்கின்றான். அந்த நிலையில் அவன் சொல்லும் இன்னொரு அழிவுக்கர எதார்த்தம் ஊசி குத்துகிறது. சுமை ஏற்றுகிறது. சொல்ல வந்த கருத்தை மந்தமாக நகரவைக்கிறது.

அமரன்
17-09-2008, 07:57 AM
கலைந்த கேசத்தில்
வகிடை தேடுவதை போல
சிதைந்த தேசத்தில்
வாழ்கையை தேடுகிறேன்
வலியுடன்
களவு போன கனவில்
எஞ்சியிருப்பது என் கண்முன்னே
ஒரு குவழை மட்டுமே
என்று தனியும்
இந்த தீவிரவாத தாகம்....(கண்ணீருடன்)


தீவிரவாதக் காட்டுத்தீ உலகை காய்ச்சுகிறது. மனக்காயங்களை தருகிறது. கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஆனால் குவளை நிரம்பக் காணோம். தீவிர தாகம் தணியக்காணோம்.

காற்றலையும் கேசத்தை கலைக்கும். அதிலும் எதிர்காற்றில் போவோர் கேசம் சொல்லத்தேவை இல்லை.

நம்மில் பலர் படிய வாரிய கேசத்தை ஸ்டைலுக்காக கலைத்து விடுவதும் உண்டு. கடைசீல கேசமே இல்லாமல் போவதும் உண்டு.

ஆடிய ஆட்டத்தை நினைத்து வேதனைப் படும்போது பாதை விட்டு நீண்ட தூரம் விலகி வந்திருப்பார்கள். அனுபவப்பட்டவன் சொன்னால் கேட்கும் கூட்டம் என்றும் இருக்கத்தான் செய்யும். இதை விட இப்போதைக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை.

அமரன்
17-09-2008, 08:05 AM
நாட்டுக்குள் நரிகள் புகுந்ததால்
காட்டுக்குள் எங்கள் வாழ்க்கை...
வேட்டுக்கள் புலியை விரட்ட
வீட்டுக்குள் எலிகள் விருந்து...
பதுங்கியவை பாய்கையில்-காட்டுள்
ஒதுங்கியவர்கு விடிவு வரும்...
விடியல் வர விலையாய்
இளையவனும் காவலிருப்பான்!

ஆயிரமாவது பதிவாய் என் பதிவு....!:icon_b:

ட்ட்ட்ட்டென்று
சுட்டுத்தள்ளுகிறது கவிதையில் எதுகை.
பல இடங்களில் தித்திப்பு.
சில இடங்களில் திணிப்பு.

அசெம்பிள் செய்தால் அசதியரை உசுப்பி அசரவைக்கும்.

ஆயிரம் பதிவுகளை கடந்த திரிக்கும்
ஆயிரமவது பதிவைத்தந்த உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.

தீபன்
18-09-2008, 03:48 AM
நன்றி அமரன்.


சில இடங்களில் திணிப்பு.
எந்த இடங்களிலென்பதையும் குறிப்பிட்டிருந்தால் திருத்திக்கொள்ள உதவியாயிருக்கும்.

அசெம்பிள் செய்தால் அசதியரை உசுப்பி அசரவைக்கும்.

அப்படியென்றால்....?

பாபு
18-09-2008, 06:12 AM
வருக பாபு..

நிழலுக்கு உயிர் எமக்களித்த மூன்றாவது கவிஞர் நீங்கள். இனிய நாராதருக்கு நன்றி.
உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

அறிமுகம் என்னவோ ஏற்கனவே செய்து விட்டேன். இடையில் நான் முகம் காட்டாததால் புதிதாய் தோன்றுகிறேன். இருப்பினும் மீண்டும் என்னைப் பற்றி விவரிக்கிறேன். நன்றி.


கடுகு போல இருந்தாலும் காரம் மிகுந்த கவிதை. உலகை இளமையில் கற்றதோடல்லாமல் இளமையில் கற்பித்தான் என்ற வரிகள் சாட்டையாகி மனதில் வரிகளை தோற்றுவித்தது.

மிக்க நன்றி அமரன் அவர்களே. உங்கள் எண்ணங்கள் சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது.

Narathar
18-09-2008, 02:12 PM
கறுப்பும் வெள்ளையும்
கலந்த நிழலுக்கு
எண்ண வண்ணங்களை பூசுங்கள்


கறுப்பு வெள்ளைப்படம் என்றாலும்....
கவிதையில் பல நிரங்களை காட்டாக்கூடிய படம்....

நிழல் தந்து உயிரூட்டச்சொன்ன உங்களை வாழ்த்துகின்றேன்....

நன்றி

Narathar
18-09-2008, 02:16 PM
ஆயிரமாவது பதிவாய் என் பதிவு....!:icon_b:

அட! ஆயிரமாவது பதிவை தாண்டிவிட்டதா?? மிக்க மகிழ்ச்சி

இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு இந்தத்திரி வெற்றி நடைபோட உங்கள் அனைவரது ஆதரவையும் நாடி நிற்கின்றேன்

அக்னி
18-09-2008, 08:00 PM
நிழலுக்கு உயிர் கொடுக்கும்,
அடுத்த நிழற்படம்...


வேர்கள் இருக்கும்வரை,
உயிர்கள் இறக்காது...


http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/DSCN0372-1.jpg

தீபன்
19-09-2008, 01:08 AM
வெட்டிச்சாய்த்தாலும்
பூக்களை பிரசவிப்பேன்-
மண்ணில் என்
வேருள்ளவரை!

பாபு
19-09-2008, 02:08 AM
ஏ....மானுடனே. !

வேரோடு வெட்டிச் சாய்க்காமல்
விட்டு விட்டதற்கு உனக்கு
என் மனமார்ந்த நன்றி !!

இந்தா !
எடுத்துக்கொள் பூச்செண்டு !!

Narathar
19-09-2008, 06:34 AM
நிழலுக்கு உயிர் கொடுக்கும்,
அடுத்த நிழற்படம்...


வேர்கள் இருக்கும்வரை,
உயிர்கள் இறக்காது...

நன்றி அக்னி...............
உயிர் கொடுக்க ஒரு நிழல் கொடுத்ததற்கு........

கருத்தாழம் மிக்க படம் நன்றி

நதி
19-09-2008, 10:18 AM
வெட்டிச்சாய்த்தாலும்
பூக்களை பிரசவிப்பேன்-
மண்ணில் என்
வேருள்ளவரை!

நல்ல கற்பனை.
வீழ்த்தின் வேருடன் வீழ்த்து;அன்றேல்
தோல்வியே உனக்குப் பரிசு.


ஆனால் படத்தில்
வேர்விட்டு
வீழ்த்தப்பட்ட மரத்தில்
வேர்விட்டு
வளர்ந்துள்ளது பூச்செடி.

அதுசரி..
படம் தூண்டல்.
கவிதைகள் விளைவுகள்தானே..

நதி
19-09-2008, 10:22 AM
ஏ....மானுடனே. !

வேரோடு வெட்டிச் சாய்க்காமல்
விட்டு விட்டதற்கு உனக்கு
என் மனமார்ந்த நன்றி !!

இந்தா !
எடுத்துக்கொள் பூச்செண்டு !!

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" குறளை நினைவூட்டும் கவிதை. வெட்டி வீழ்த்தாத வேரின் பாசம் வாசமாகக் வீசும் மலர்ச்செண்டில். வேரிருந்தால் போதும். மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையை அகத்தில் கொண்ட கவிதைக்கு பாராட்டுகள்.

Narathar
19-09-2008, 05:07 PM
வெட்டிச்சாய்த்தாலும்
பூக்களை பிரசவிப்பேன்-
மண்ணில் என்
வேருள்ளவரை!

ஆஹா அதே சிந்தணை!
எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?

நாராயணா!!!! :)


ஏ....மானுடனே. !

வேரோடு வெட்டிச் சாய்க்காமல்
விட்டு விட்டதற்கு உனக்கு
என் மனமார்ந்த நன்றி !!

இந்தா !
எடுத்துக்கொள் பூச்செண்டு !!

நீங்கள் கொடுக்கும் பூச்செண்டை வாங்கிவிட்டு வேரறுத்துவிடுவார்கள் கவனம்!

நிழலுக்கு உயிர் பகுதியில் உங்கள் கவிதைகளை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பங்களிப்பை செழுத்துங்கள்

தீபன்
19-09-2008, 05:20 PM
வீழ்த்தின் வேருடன் வீழ்த்து;அன்றேல்
தோல்வியே உனக்குப் பரிசு.

படம் தூண்டல்.
கவிதைகள் விளைவுகள்தானே..
ரவுத்திரா...
நீங்க நல்லவரா? கெட்டவரா..?


ஆஹா அதே சிந்தணை!
எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?

நாராயணா!!!! :)வேறு சிந்தனை வர விடவே மாட்டீர்கள்போல...!

Keelai Naadaan
19-09-2008, 05:40 PM
பட்ட மரத்தின் மேலும்
பூக்கள் மலரலாம்
மரம் தடை சொல்லாதவரை...

Narathar
19-09-2008, 05:48 PM
ரவுத்திரா...
நீங்க நல்லவரா? கெட்டவரா..?
...!

பாவம் அவர் உங்கள் நோக்கை புரியாதவர்.........

தீபன்
20-09-2008, 01:27 AM
பட்டமரமாய் தானிருந்தேன்...
உன் பார்வை பட்டதும்-
பூத்துவிட்டேன்!

பாபு
20-09-2008, 02:18 AM
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" குறளை நினைவூட்டும் கவிதை. வெட்டி வீழ்த்தாத வேரின் பாசம் வாசமாகக் வீசும் மலர்ச்செண்டில். வேரிருந்தால் போதும். மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையை அகத்தில் கொண்ட கவிதைக்கு பாராட்டுகள்.

நன்றி ரவுத்திரன் அவர்களே...மிக்க நன்றி.
நீங்கள் கொடுக்கும் பூச்செண்டை வாங்கிவிட்டு வேரறுத்துவிடுவார்கள் கவனம்!

நிழலுக்கு உயிர் பகுதியில் உங்கள் கவிதைகளை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பங்களிப்பை செழுத்துங்கள்

உண்மை தான் நாரதரே..மிக்க நன்றி.

Narathar
20-09-2008, 07:30 AM
பட்ட மரத்தின் மேலும்
பூக்கள் மலரலாம்
மரம் தடை சொல்லாதவரை...

நீண்ட நாட்களாக உங்களை
இந்தப்பக்கம் காணவில்லையே
என்று நினைத்திருந்தேன்.......

வந்துவிட்டீர்கள்!
கவி தந்துவிட்டீர்கள் - நன்றி!!!

தொடர்ந்து வாருங்கள்

Narathar
20-09-2008, 10:48 AM
பட்டமரமாய் தானிருந்தேன்...
உன் பார்வை பட்டதும்-
பூத்துவிட்டேன்!

யார் பார்வை?

தலைவன் பார்வையா?
இல்லை தலைவி பார்வையா?

தலைவன் என்றால் இது புரட்சிக்கவிதை
தலைவியென்றால் காதல் கவிதை :D

நாராயணா!!!

அமரன்
20-09-2008, 10:55 AM
மன்றம் சோர்வாக இருக்கும் காலமாகையால் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்தப்படம் இருக்கட்டும் என நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் நாரா?

தீபன்
20-09-2008, 03:39 PM
தலைவன் என்றால் இது புரட்சிக்கவிதை
தலைவியென்றால் காதல் கவிதை :D

நாராயணா!!!

பாம்பின் கால் பாம்பறியும்...
(பாம்புக்கு எத்தின காலெண்டு கொஞ்சப்பேர் கிளம்ப போறாங்க...)

ஆமா, தலைவநன் - காதலன் பார்வை பட்டு பட்ட மரமாய் இருக்கும் காதலி உள்ளம் பூக்காதா...

Narathar
20-09-2008, 07:30 PM
மன்றம் சோர்வாக இருக்கும் காலமாகையால் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்தப்படம் இருக்கட்டும் என நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் நாரா?


ஆம்! திங்கட்கிழமைக்கு பிறகு படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்

அமரன்
20-09-2008, 07:37 PM
அன்பான அடிமரம்
அழகான பூஞ்செடி
ரம்மியமான காட்சி
என்று சிலிர்த்தார்கள்
பார்த்தவர்கள் யாவரும்.

யாருக்கும் தென்படவில்லை
விதை தூவிய பறவைகள்

Narathar
21-09-2008, 05:19 AM
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" குறளை நினைவூட்டும் கவிதை. வெட்டி வீழ்த்தாத வேரின் பாசம் வாசமாகக் வீசும் மலர்ச்செண்டில். வேரிருந்தால் போதும். மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையை அகத்தில் கொண்ட கவிதைக்கு பாராட்டுகள்.

என்ன ரவுத்திரரே.......
விமர்சனத்தோடு நிறுத்தி விட்டீர்கள் ? :)

உங்கள் சார்பிலும் ஒரு கவிதையை எடுத்துவிடுங்கள்........

சிவா.ஜி
21-09-2008, 05:58 AM
வயதாகி, இனி வாழாது
எனும் நிலை எய்திய தருவை
வலிக்காமல் வெட்டி, பூமித்தாயின்
வரவேற்ப்பறையில்
வாசனைப் பூக்களின் சாடியாய்
வாழ வைத்திருக்கிறார்கள்!

Narathar
21-09-2008, 01:35 PM
அன்பான அடிமரம்
அழகான பூஞ்செடி
ரம்மியமான காட்சி
என்று சிலிர்த்தார்கள்
பார்த்தவர்கள் யாவரும்.

யாருக்கும் தென்படவில்லை
வ????விதை தூவிய பறவைகள்


இப்படி கண்டுகொள்ளப்படாதவைகள் ஏராளம்
அதில் உங்களைப்போன்றவர்களின் தாராளத்தில் சில இப்படிப்பட்ட கவிதையாக

வாழ்த்துக்கள்

அக்னி
21-09-2008, 01:47 PM
உனக்கு நான் உயிர்...
எனக்கு நீ பாதுகாப்பு...

நான் தனியானால், பசுமை.
நீ தனியானால், கொடுமை.
இணைந்ததால் புதுமை.

நதி
22-09-2008, 08:12 AM
அறுதாலி மரம்

கண்ணீரும் கனவுகளும்
பூக்களாய் ஆனதில்
அழகாய் தோன்றினாலும்
இன்னும் தொடர்கிறது
அடி மனச்சிதைவு;சில
சமூகக் கோடாரிக் காம்புகளால்.

அமரன்
22-09-2008, 01:28 PM
http://i373.photobucket.com/albums/oo179/amaran2008/f_1353m_a3e823c.jpg
மனத்தேனீயின்
சிந்தனைச் சிறகுகள்
விரியட்டும்
கவித்தேன் குவியட்டும்

Narathar
22-09-2008, 02:00 PM
அக்னியவர்கள் வழங்கியவேர்கள் இருக்கும்வரை,
உயிர்கள் இறக்காது...


நிழலுக்கு உயிர்தந்த...........

தீபனின் : மண்ணீல் வேறுள்ளவரை கவிதை

பாபுவின் ஏ....மானுடனே. ! கவிதை

கீழை நாடான் அவர்களின் பட்டமரம் கவிதைக்கும்

அமரின் அடிமரம் கவிதைக்கும்

சிவாவின் வாழவைத்திருக்கின்றார்கள் கவிதைக்கும்

அக்னியின் உனக்கு நான் உயிர் கவிதைக்கும்

ரவுத்திரனின் அறுதாலி மரம் கவிதைக்கும்

இ பணம் வழங்குகின்றேன்.........

நம்பிகோபாலன்
22-09-2008, 02:19 PM
வண்ணத்துபூச்சியே
நான் வளைந்து கொடுப்பவள்
முட்கள் பட்டதிற்காகவா
பயந்து பறக்கிறாய்
எந்தவொரு
சுகத்தை அனுபவிப்பதற்க்கும்
கொஞ்சம் கஷ்டங்கள் உண்டு
புரிந்து கொண்டு வருவாய்
தேனுடன் காத்திருப்பேன்...

தீபன்
22-09-2008, 04:35 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=30
மனத்தேனீயின்
சிந்தனைச் சிறகுகள்
விரியட்டும்
கவித்தேன் குவியட்டும்

சிந்தனை சிறகுகள் விரிந்தன..
கவித்தேன் குவிந்தன...
ஆனால்,
குருடானாகி விட்டேனோ...

(படம் போட்டிருக்கிங்களா... அல்லது உங்க அவதாருக்கு எழுதணுமா...?)

அக்னி
22-09-2008, 04:50 PM
தேடி வந்து
மலர வைத்து..,
விலத்திச் சென்று
வாட வைக்கின்றாய்...
ஓ...
இதுதான் காதலா...


*****

தேன் சிந்தி
வரவழைத்துச்..,
சிதைத்துவிடத்
துடிக்கின்றாய்...
அதுதான்
ஓடுகின்றேன் காதலா...

அமரன்
22-09-2008, 06:18 PM
வண்ணத்துபூச்சியே
நான் வளைந்து கொடுப்பவள்
முட்கள் பட்டதிற்காகவா
பயந்து பறக்கிறாய்
எந்தவொரு
சுகத்தை அனுபவிப்பதற்க்கும்
கொஞ்சம் கஷ்டங்கள் உண்டு
புரிந்து கொண்டு வருவாய்
தேனுடன் காத்திருப்பேன்...

சோகங்களைக் கண்டு கலங்கினால் அருகில் இருக்கும் சுகங்களும் மங்கலாகத்தான் தெரியும் என்ற தத்துவார்த்தமான கவிதை. நன்று..
பரிசு 20 இ-காசு விரைவில் வந்தடையும்.


வந்தது யாரென்று பார்த்திட மடல் திறந்தால்
இமைகள் குத்தியதோ. இறகுகள் விரித்தனையோ.
மூட வண்டே.. "மூடு"வதுக்குள் வந்துடு..

படம் போட்டிருக்கேன் தீபன்.. என் அவதாரத்துக்கு கவிதை எழுத இயலுமானாலும் பரவாயில்லை. தனியாக் கவனிக்கிறேன்:)

அமரன்
22-09-2008, 06:33 PM
தேடி வந்து
மலர வைத்து..,
விலத்திச் சென்று
வாட வைக்கின்றாய்...
ஓ...
இதுதான் காதலா...


பூத்த பூ பூப்பதுக்கு வண்டுகளின் வரவும் காரணம் என்ற அழகிய வாழ்க்கையை கவிதையில் பிடித்துள்ளீர்கள். பருக வந்த பருவமா பார்க்க வந்த உருவமா என்று வாடும் வாழ்க்கையை காதற் தூரிகையால் வரைந்துள்ளீர்கள். காதற் கனி நீ அக்னி.. ஆனாலும் கல்யாண ஏற்பாடுகளுக்கும் பொருந்தும் வண்ணமும் உள்ளது.தேன் சிந்தி
வரவழைத்துச்..,
சிதைத்துவிடத்
துடிக்கின்றாய்...
அதுதான்
ஓடுகின்றேன் காதலா...

பூ காதலனாக வண்டு காதலியாக புதிய கவிதை சரித்திரம் படைத்து விட்டீர்கள் அக்னி. என்னவென்று சொல்வது உங்களது வித்தகத்தை.. இந்த வண்டுகளிடம் ஒரு பொல்லாத குணம்.. தேனிருக்கும் மலர்களை தேடித்திரியும். தேன் சிந்திய மலர்களை நாடவே நாடாது..


எதிரும் புதிருமாக ரசிக்கும்படியாக இருப்பது கவிதைகளின் சிறப்பு. பரிசுத்தொகை 35 இ-காசு.

தீபன்
22-09-2008, 06:52 PM
படம் போட்டிருக்கேன் தீபன்.. என் அவதாரத்துக்கு கவிதை எழுத இயலுமானாலும் பரவாயில்லை. தனியாக் கவனிக்கிறேன்:)

எனக்கு படம் தெரியவில்லை. இதுவரை இப்படி நிலை ஏற்பட்டதுமில்லை. சரி... உங்க அவதாருக்கு எழுதுகிறேன்... (அதையும் திரியில் இடுங்கள்... நல்ல படம்... பல நல்ல கவிதைக்கு கருவாகும்...)

மலரில் மலர்ந்த மலர்...
அதுதான் மழலை!

அமரன்
22-09-2008, 08:11 PM
என்னவதாரத்துக்கான கவிதை அருமை. படம் இப்ப தெரிகிறதா தீபன்..

Narathar
23-09-2008, 12:39 AM
என்னவதாரத்துக்கான கவிதை அருமை. படம் இப்ப தெரிகிறதா தீபன்..


அட! இது புதுசா இருக்கே.........
படத்துக்கு கவிதை எழுதச்சொன்னா அவதாரைப்பார்த்தே கவிதை தர்ராரே நம்ம தீபன்...

நாராயணா!!!

தீபன்
23-09-2008, 01:40 AM
என்னவதாரத்துக்கான கவிதை அருமை. படம் இப்ப தெரிகிறதா தீபன்..
இப்ப தெரியுது.... ஆமா.. தனியா கவனிக்கிறதா சொன்னிங்க ஹி ஹி..:p

அட! இது புதுசா இருக்கே.........
படத்துக்கு கவிதை எழுதச்சொன்னா அவதாரைப்பார்த்தே கவிதை தர்ராரே நம்ம தீபன்...

நாராயணா!!!
அப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச படம் அதுதான் நாரதரே.... இதில என்ன கலகம் பண்ணலாம்னு கிளர்றிங்க...

தீபன்
23-09-2008, 01:43 AM
புனர்வாழ்வு நிலையங்களின்
கவர்ச்சியில் சிக்குமா
இந்த
சிறகடிக்கும்
அகதிப் பறவை....?

தீபன்
23-09-2008, 01:50 AM
தேன் பார்வை வீசி
அழகாடை போர்த்தி
காத்திருந்தாள்...
வந்தவன் -
தேகங்கள் வருடி
தேனுண்டு மயங்கி
ஏகிவிட்டான்..!

தீபன்
23-09-2008, 01:54 AM
மயிர்கொட்டி பறவையின்
உயிர் கொள்ள காத்திருக்கும்
ஊன் உண்ணும் பூ அது...
தேன் தேடி வந்து தேனுக்கு பதிலாய்
தானாவோமென கண்டு
வண்ணப் பூச்சி அடிக்கும்
U இது...!

நிதர்சனம்
23-09-2008, 02:05 AM
உலகமே உற்றுப்பார்.
அலங்கரிக்கப்பட்ட இதழ்களுக்குள்
ஆழப் பார்,
அதற்குள் புதைகுழி தெரியும்.
அகழ்ந்து பார்,
அதன் ஆழம் புலப்படும்.

அழகாக அழைப்பது,
உரிமை அளிக்கவல்ல,
முழுமையாய் அழிக்க.

உலகமே!
இனியும் காட்டாதே
பாராமுகம்.
முகத்திரை கிழித்துப் பார்
கொடூரமுகம்.

பார்ப்பாரே என்றஞ்சாதவரையும்
பார்ப்பாரோ எனத்துஞ்சுவோரையும்
பார் பாரே.

பாபு
23-09-2008, 03:17 AM
உன்னிடம் சிறகுகள் இருக்கும் வரைக்கும்
என் இதழ்களிலும் முட்கள் இருக்கும் !!
உன் சிறகுகள் எனக்கிருந்தால்
உன் மனதோடு ஒன்றி விடும் !!

Narathar
23-09-2008, 08:01 AM
அப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச படம் அதுதான் நாரதரே.... இதில என்ன கலகம் பண்ணலாம்னு கிளர்றிங்க...


புனர்வாழ்வு நிலையங்களின்
கவர்ச்சியில் சிக்குமா
இந்த
சிறகடிக்கும்
அகதிப் பறவை....?

அடடா! அதுதானே பார்த்தேன் எங்கே நம்ம தீபனின் "அக்மார்க்" கவிதையை காணவில்லையே என்று பார்த்தேன் வந்துவிட்டது.....

நாராயணா!!!!

தீபன்
23-09-2008, 08:13 AM
அடடா! அதுதானே பார்த்தேன் எங்கே நம்ம தீபனின் "அக்மார்க்" கவிதையை காணவில்லையே என்று பார்த்தேன் வந்துவிட்டது.....

நாராயணா!!!!
:shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup:

Narathar
23-09-2008, 10:01 AM
சுகத்தை அனுபவிப்பதற்க்கும்
கொஞ்சம் கஷ்டங்கள் உண்டு
புரிந்து கொண்டு வருவாய்
தேனுடன் காத்திருப்பேன்...

எந்த ஒரு சுகத்தை அடைவதென்றாலும்....... அதற்கு விலையாக ஒரு கஷ்டத்தை அனுபவிக்கத்தான் வேண்டும் என்ற விதியை உணர்த்தி நிற்கிறது உங்கள் கவிதை

இ சன்மானம் தேடிவரும்

வாழ்த்துக்கள்

Narathar
23-09-2008, 10:03 AM
:shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup:


:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

சும்மா சொன்னேனப்பா...............
அதற்காக வாயை மூடிக்கொள்ளாதீர்கள்

நிழலுக்கு உயிர் பகுதியின் உயிர்ப்பான கவிஞ்சர் நீங்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

தீபன்
23-09-2008, 10:26 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

சும்மா சொன்னேனப்பா...............
அதற்காக வாயை மூடிக்கொள்ளாதீர்கள்

நிழலுக்கு உயிர் பகுதியின் உயிர்ப்பான கவிஞ்சர் நீங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
நா வாயமூடி கொண்டது நீங்க சொன்னதுக்கு.... மத்தபடி அவ்வளோ லேசில மூடிக்குவமா.... ஹ ஹ ஹ....
நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு...

ஆமா, அப்ப மத்தவங்களெல்லாம் உயிர்ப்பில்லாத கவிஞர்களென்று சொல்றியளா....
நாராயணா....

Narathar
24-09-2008, 10:50 AM
ஆமா, அப்ப மத்தவங்களெல்லாம் உயிர்ப்பில்லாத கவிஞர்களென்று சொல்றியளா....
நாராயணா....

அப்போ நீங்க உயிருடன் இருக்கீங்கன்னு நான் சொன்னா.....
மத்தவங்களெல்லாம் செத்துட்டாங்கன்னு அர்த்தமா? :D

ஓவியன் கொஞநாள் ட்ரை பன்னி பார்த்தார்... ;)
இப்போ நீங்க...... நடத்துங்க ஹா ஹா :lachen001:

Narathar
24-09-2008, 10:58 AM
தேடி வந்து
மலர வைத்து..,
விலத்திச் சென்று
வாட வைக்கின்றாய்...
ஓ...
இதுதான் காதலா...
.

அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே

அமைதியில்லா
வாழ்வு தந்து
எங்கு சென்றாளோ?

என்ற களத்தூர் கண்ணம்மா படப்பாடல் நினைவுய்க்கு வந்தது எனக்கு!

அழகான கவிதை வாழ்த்துக்கள் இ காசு தேடி வரும்

தீபன்
24-09-2008, 03:56 PM
அப்போ நீங்க உயிருடன் இருக்கீங்கன்னு நான் சொன்னா.....
மத்தவங்களெல்லாம் செத்துட்டாங்கன்னு அர்த்தமா? :D

ஓவியன் கொஞநாள் ட்ரை பன்னி பார்த்தார்... ;)
இப்போ நீங்க...... நடத்துங்க ஹா ஹா :lachen001:

நிழலுக்கு உயிர் பகுதியின் உயிர்ப்பான கவிஞர் என்றது போல் மன்றத்தில் உயிரோடிருக்கும் நபர் நீங்கள்தான் என்று சொல்லிப்பாருங்கள்.... மத்தவங்க நிலை என்னன்னு சொல்லாமலே தெரியும்...:D (நீங்க வசனத்த மாத்தி சொல்லும் தொனியையும் மாத்தி தப்பாட்டம் ஆடக்கூடாது...)

அட ராமா... ஓவியன் உங்களையா ட்ரை பண்ணினார்... :confused:
நாரதர் பிறப்பின் கதையே நாரதருக்குமா....:icon_ush:

நதி
24-09-2008, 06:16 PM
முக்கண் கவிதை தந்து கலக்கிட்டீங்க தீபன்.

புனர்வாழ்வு நிலையங்களின்
கவர்ச்சியில் சிக்குமா
இந்த
சிறகடிக்கும்
அகதிப் பறவை....?
கூடில்லாத பறவைக்கு
கூண்டாவது கிடைக்கட்டுமே..


தேன் பார்வை வீசி
அழகாடை போர்த்தி
காத்திருந்தாள்...
வந்தவன் -
தேகங்கள் வருடி
தேனுண்டு மயங்கி
ஏகிவிட்டான்..!
தேனைக் குடிச்சிட்டு பறந்தானா..
வாடிக்கையாளன் காசு கொடுக்காமல் போனால்
இப்படித்தான் வாய் கிழிய தூசிப்பார்கள்..

மயிர்கொட்டி பறவையின்
உயிர் கொள்ள காத்திருக்கும்
ஊன் உண்ணும் பூ அது...
தேன் தேடி வந்து தேனுக்கு பதிலாய்
தானாவோமென கண்டு
வண்ணப் பூச்சி அடிக்கும்
U இது...!
கவரப்படுவதும், சுதாரித்துக்கொள்வதுமாய் மனவியலை கவிதையாக்கிய விதம் அருமை.

திரிலோக சஞ்சாரியே..தீபனின் அக்மார்க் கவிதைகள் என்பதுக்கு பதிலாக தீபன் கவிதைகள் என்று இந்தமாதிரிக் கவிதைகளுக்கு பெயரிடுங்கள்.

நதி
24-09-2008, 06:21 PM
உலகமே உற்றுப்பார்.
அலங்கரிக்கப்பட்ட இதழ்களுக்குள்
ஆழப் பார்,
அதற்குள் புதைகுழி தெரியும்.
அகழ்ந்து பார்,
அதன் ஆழம் புலப்படும்.

அழகாக அழைப்பது,
உரிமை அளிக்கவல்ல,
முழுமையாய் அழிக்க.

உலகமே!
இனியும் காட்டாதே
பாராமுகம்.
முகத்திரை கிழித்துப் பார்
கொடூரமுகம்.

பார்ப்பாரே என்றஞ்சாதவரையும்
பார்ப்பாரோ எனத்துஞ்சுவோரையும்
பார் பாரே.

என்ன ஒரு உறுமல்..
சிங்கத்தின் முகத்தில் சாந்தம் என்றால் சிந்திக்க வேண்டாமோ.. உங்கள் உறுமலாவது அறைந்து எழுப்பட்டும் உலகை..

நதி
24-09-2008, 06:44 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=15&pictureid=31

சொல்லத்துடிக்கும் மனசை
நில்லெனச் சொல்லாதீர்கள்.
சொல்லெடுத்துக் கொடுங்கள்
சொல்லடுக்கை கொட்டுங்கள்.

Narathar
25-09-2008, 06:31 AM
நன்றி ரவுத்திரன் அவர்களே புதிய படத்திற்கு.......

கடந்த படத்திற்கு கவிதை எழுதிய அனைவருக்கும்....... இ பணம் வந்து சேரும்...

வந்துறும்ல.................. ??? ;)

ஓவியன்
25-09-2008, 11:27 AM
வாழ் நாள் கொஞ்சமாயிருக்கலாம்
அதற்காக நான் வளாவிருப்பதா...??
வானத்தைத் தொட முயலுகிறேன்
'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'
என நம்பி...........!!

ஓவியன்
25-09-2008, 11:28 AM
ஓவியன் கொஞநாள் ட்ரை பன்னி பார்த்தார்... ;) :lachen001:

என்ன கொடுமை சார் இது......?? :eek:

அமரன்
25-09-2008, 01:59 PM
பூவுக்கும் ஆசை வந்ததோ
உயரத்தில் இருந்து விழுந்து பார்க்க
சில மனிதர்களைபோல்..

தீபா
25-09-2008, 03:29 PM
தேனிருந்தாலும் பரவாயில்லை
உயிராவது மிஞ்சட்டும்
விலகு !!! விலகு !! :D :D :D

அத்தனை கவிதையும் அருமைங்க சார்..

தீபன்
25-09-2008, 04:00 PM
சிறு பறவையா.... சீறும் வல்லூறா...
மென் மலரா... மலர் வடிவில் மரணத் தூதா...
இனங் காண்பதில் இணக்கமின்றி
எதிரி(ல்) நின்(றா/றே)ன் திணறி...!

Narathar
26-09-2008, 01:26 AM
சொல்லத்துடிக்கும் மனசை
நில்லெனச் சொல்லாதீர்கள்.
சொல்லெடுத்துக் கொடுங்கள்
சொல்லடுக்கை கொட்டுங்கள்.

அப்படியே உங்கள் மனசு சொல்வதையும் ஒரு கவிதையாய் தந்தா நல்லா இருக்குமே ரவுத்திரா......வாழ் நாள் கொஞ்சமாயிருக்கலாம்
அதற்காக நான் வளாவிருப்பதா...??
வானத்தைத் தொட முயலுகிறேன்
'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'
என நம்பி...........!!

பரவாயில்லையே.........
ஆட்டோ அனுப்பாமலே ஒரு கவிதை தந்திருக்கீங்க...
அருமையான கவிவடிவம்

நன்றி, ஏன் இந்தப்பக்கம் அடிக்கடி வருவதில்லை?


பூவுக்கும் ஆசை வந்ததோ
உயரத்தில் இருந்து விழுந்து பார்க்க
சில மனிதர்களைபோல்..

சிறு மலருக்கும்
ஆசை வந்துவிட்டது
சிறிய புத்தியுள்ள
மனிதர்களைப்பார்த்து

அருமையான கவிதை அமரன் வாழ்த்துக்கள்


தேனிருந்தாலும் பரவாயில்லை
உயிராவது மிஞ்சட்டும்
விலகு !!! விலகு !! :D :D :D

அத்தனை கவிதையும் அருமைங்க சார்..

உங்க கவிதையும் அருமைங்க சார்...........

அது சரி...
கவிதை தானே எழுதினீங்க?
நாராயணா!!!

இப்படி எழுதி எழுதி பழகிணா கைதேர்ந்த கவிஞ்சன் ஆயிடலாம்... நம்ம அமர் தரும் கைக்காசையும் வாங்கிக்கலாம்

இன்னும் எழுதுங்க.....


சிறு பறவையா.... சீறும் வல்லூறா...
மென் மலரா... மலர் வடிவில் மரணத் தூதா...
இனங் காண்பதில் இணக்கமின்றி
எதிரி(ல்) நின்(றா/றே)ன் திணறி...!

மலர் வடிவைப்பார்த்தாலும்
மரணத்தூதை நினைக்கும் நிலை நம்ம தீபனுக்கு ( தீபனுக்கு மட்டுமா? நமக்குந்தான்.. )
அது அவர் குற்றமல்ல.....
இந்த உலகம் செய்த குற்றம்

வாழ்த்துக்கள் தீபன்

தீபன்
26-09-2008, 02:53 AM
தென்றலின் வரிகள் இதற்கு முதல் படத்திற்கானதென நினைக்கிறேன். அதற்குத்தான் பொருந்துகிறது.மலர் வடிவைப்பார்த்தாலும்
மரணத்தூதை நினைக்கும் நிலை நம்ம தீபனுக்கு
இறுதிவரியை சற்று ஆழமாக பாருங்கள்....(எதிரி நின்றான் திணறி....) நமக்குமட்டுமா அந்த நிலை...:icon_b:
(எதை சொல்ல வருகிறேனென புரியலையா....)

ஓவியன்
26-09-2008, 03:43 AM
நன்றி, ஏன் இந்தப்பக்கம் அடிக்கடி வருவதில்லை?

இந்தப் பக்கம் மட்டுமில்லை, மன்றத்திற்கே நான் சில நாட்களாக ஒழுங்காக வரவில்லை...

காரணம் - சில பணிகள், சில பிரச்சினைகள்....
இப்போதுதான் அவற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கிறேன்...

தீபா
26-09-2008, 04:34 AM
உங்க கவிதையும் அருமைங்க சார்...........

அது சரி...
கவிதை தானே எழுதினீங்க?
நாராயணா!!!

இப்படி எழுதி எழுதி பழகிணா கைதேர்ந்த கவிஞ்சன் ஆயிடலாம்... நம்ம அமர் தரும் கைக்காசையும் வாங்கிக்கலாம்

இன்னும் எழுதுங்க.....
:D :D :D :D :D:D:D:D:D:D:D

:p நன்றிங்க சார். முத முதலா கவிஜை எழுதியிருக்கேனே, ஏதாச்சும் பணம் கொடுக்கக் கூடாதா? :)

Narathar
26-09-2008, 05:31 AM
:D :D :D :D :D:D:D:D:D:D:D

:p நன்றிங்க சார். முத முதலா கவிஜை எழுதியிருக்கேனே, ஏதாச்சும் பணம் கொடுக்கக் கூடாதா? :)

கொடுத்துட்டேன்...............
ஆனால் அடுத்தடுத்த படங்களுக்கும் கவிதை தரனும்
இல்லைன்னா வாங்கினதை திருப்பித்தரனும்......

ஹா ஹா :lachen001:

Narathar
26-09-2008, 05:33 AM
இறுதிவரியை சற்று ஆழமாக பாருங்கள்....(எதிரி நின்றான் திணறி....) நமக்குமட்டுமா அந்த நிலை...:icon_b:
(எதை சொல்ல வருகிறேனென புரியலையா....)

புரிந்துதான் பதித்தேன் அன்பரே... :icon_b:

இன்னும் எழுதுங்கள் :)

அமரன்
26-09-2008, 06:47 AM
ஒட்டி இருக்கையில்
பறக்க நினைக்கும் பூவை
கட்டிப் பிடிக்கும் காம்பு
உதிரும் போது மட்டும்
விட்டு விலகுகிறது
பாசாங்குக் கண்ணீருடன்..

நம்பிகோபாலன்
26-09-2008, 08:51 AM
சிறகடிக்கும் பறவையாய்
நான்
வானமும் எட்டிவிடும்
தூரம் தான்
முயன்று பார்
வாழ்க்கை உனக்கும் வசப்படும்....

பாபு
26-09-2008, 10:17 AM
சமாதானப் புறாவை
மனிதனே
கொன்று விடும்
கொடுமையால்,
இன்று நான்
சமாதானப் பூவாய்
வானிலே !!

தீபன்
26-09-2008, 03:41 PM
கொடுத்துட்டேன்...............
ஆனால் அடுத்தடுத்த படங்களுக்கும் கவிதை தரனும்
இல்லைன்னா வாங்கினதை திருப்பித்தரனும்......

ஹா ஹா :lachen001:

ஐயையோ... தென்றல்கிட்ட பணம்குடுத்து நீங்களும் ஏமாந்திட்டியளே...:traurig001:
அதுக்க திருப்பி தரணும்னு கோரிக்கைவேற... அதுவும் தென்றல்கிட்ட...:mini023:
நாராயண....:eek:

நான் ஏமாந்த கதையை PHP- தமிழில் என்ற கணினி மன்ற திரியில் போய் பாருங்க....

Narathar
27-09-2008, 02:02 PM
ஒட்டி இருக்கையில்
பறக்க நினைக்கும் பூவை
கட்டிப் பிடிக்கும் காம்பு
உதிரும் போது மட்டும்
விட்டு விலகுகிறது
பாசாங்குக் கண்ணீருடன்..

ஆஹா இதைத்தான் கவித்துவம் என்பார்களோ?

இங்கொருவர் அப்படியென்றால் மற்றதெல்லாம் கவித்துவம் இல்லையா என்பார்.... நாராயணா!!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...


சிறகடிக்கும் பறவையாய்
நான்
வானமும் எட்டிவிடும்
தூரம் தான்
முயன்று பார்
வாழ்க்கை உனக்கும் வசப்படும்....

முயன்று பார்ப்பவன்
என்றுமே தோல்வியை முத்தமிட மாட்டான்.........

வாழ்த்துக்கள்! இ சண்மானம் தேடிவரும்


சமாதானப் புறாவை
மனிதனே
கொன்று விடும்
கொடுமையால்,
இன்று நான்
சமாதானப் பூவாய்
வானிலே !!

வானிலும் வல்லூருகள் உண்டு
கவனம்!

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு
இன்னுமின்னும் எழுதுங்கள்

Narathar
27-09-2008, 05:12 PM
உயிர் தர நிழல் கொடுத்த

ரவுத்திரனுக்கும்.....

நிழலுக்கு உயிர் கொடுத்த

ஓவியன்
அமரன்
தென்றல்
தீபன்
நம்பிகோபாலன்
பாபு ஆகியோருக்கும் இ பணம் பரிசளிக்கப்படுகின்றது........

Narathar
27-09-2008, 05:17 PM
இதோ உங்கள் பார்வைக்கு அடுத்த நிழல்


http://img33.picoodle.com/img/img33/3/9/27/narathar/f_faceDramatim_bd6eb04.jpg

எங்கே உங்கள் கவிதை வரிகளால்
இவளுக்கு உயிர் கொடுங்கள் பார்க்கலாம்

சிவா.ஜி
27-09-2008, 05:42 PM
குழல் மறைத்தது ஒரு கண், குழலின்
நிழல் மறைத்தது மறு கண்
தழல் கக்கும் கண்களின்
அனல் தாங்க முடியாமல்
அடைக்கிறதா இவை.....எனினும்
அடைகாத்த அக்னியை
விடை சொல்லி வெளியனுப்பும்
வேளை வரும், நாங்கள் நெருப்பெனும் செய்தி
நாளை வரும்.....!

mgandhi
27-09-2008, 05:43 PM
கண்கலில் காதலின் ஏக்கம-அவள்
உதட்டினில் அவனின் உச்சரிப்பு

Keelai Naadaan
27-09-2008, 06:33 PM
இதழிலே புன்னகை
விழியிலோ தீவிரம்
காதல் மோகினி
இவளையும் பிடித்தாளோ...!

காதல் நஞ்சு
கண்ணில் புகுந்ததால்
நீலம் பூத்ததோ விழியிலே...!

ஓசையின்றி பேசும் கண்
நெஞ்சில் ஊடுருவும் ஊசியோ..!

poornima
28-09-2008, 06:29 AM
திறந்திருக்கும் ஒரு கண்ணில்
தீவிரத்துடன் தெரிகிறது
இன்னும் கொஞ்சம் கருணை
கூந்தல் மூடிய
இன்னொரு கண்வழியே
இருக்ககூடும்
ஏதேனும் நோக்கத்துடன்
ஒரு குரூரப் பார்வை...

அமரன்
28-09-2008, 07:24 AM
கண்களின் வார்த்தையை
இதழோர மௌனமணலில்
புதைத்து விளையாடும் நீ
பூவா இல்லை
பூ வேடம் தரித்த புயலா?

அமரன்
28-09-2008, 07:30 AM
மானே நீ
இரவுக்காட்டில்
வேட்டைக்கு போறாயா?
போருக்குப் போறாயா?

அமரன்
28-09-2008, 07:36 AM
பெண்ணை அடைத்து வைத்த
தென்னோலை தட்டிகளின்
விரிசலின் வழியே
ஒழுகத் தொடங்கிவிட்டது வெளிச்சம்..

இன்னும் ஏன் தாமதம்..
அவிழ்த்து விட்ட கூந்தலை
அள்ளி முடியடி..
வெளிச்சம் பரவட்டும்..

Narathar
28-09-2008, 11:53 AM
எனது அழைப்பை ஏற்று கவிதை தந்த
சிவா.ஜி , மோஹன் காந்தி,கீழை நாடான், பூர்ணிமா, அமரன் ஆகியோருக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்..........

இன்னும் கவிதைகள் வரட்டும்......

ஓவியன்
28-09-2008, 12:03 PM
இதோ உங்கள் பார்வைக்கு அடுத்த நிழல்


http://img33.picoodle.com/img/img33/3/9/27/narathar/f_faceDramatim_bd6eb04.jpg

எங்கே உங்கள் கவிதை வரிகளால்
இவளுக்கு உயிர் கொடுங்கள் பார்க்கலாம்

கண்ணினால்
கண்ணி வைக்கிறாள்
கணனி தந்த
கன்னி இவள்.....!!

சூரியன்
28-09-2008, 12:19 PM
கண்களில் தெரியும்
அவளின் ஏக்கம்
என்று மறையும்?

அக்னி
28-09-2008, 01:05 PM
கூந்தல் மறைக்கும் பாதிமுகம்,
கொண்ட காதலோ பெண்ணின் வசம்...

கூந்தல் காட்டும் பாதிமுகம்,
கொண்ட காதலோ ஆணின் வசம்...

தவறான காதல் அல்ல,
தவிக்கும் காதல்...

உணர்வுகளை எனக்குள் அடக்கி,
உணர்ச்சிகளை எனக்குள் தேடும்,
திருநங்கை நான்...

அக்னி
28-09-2008, 01:14 PM
கண்கலில் காதலின் ஏக்கம-அவள்
உதட்டினில் அவனின் உச்சரிப்பு
நீண்ட காலத்தின் பின்னர், மோகன் காந்தி அண்ணாவின் கவிவரிகள்.
இருவரிக் காதற் கு(ரல்)(றள்) மிக அழகு...

தொடர்ந்தும் எழுதுங்கள் அண்ணா...

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 02:50 PM
அப்படி பார்க்காதே
உன் பார்வையை விட
கொடிய ஆயுதம்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
கொலையுண்டவனே விரும்பும்
ஆயுதம் அது,,

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 02:52 PM
கண்களில் கத்தியை
வைத்துக்கொண்டு
"கறப்பான் பூச்சிக்கு
பயப்படுவேன்"
என்று நீ சொன்னால்
எப்படி நம்புவது???????

தீபன்
28-09-2008, 03:19 PM
இலக்கு நோக்க ஒரு பார்வை
இளகிய மனம் மறைக்க கூந்தல் போர்வை...
பார்க்கும் விழியில் பரவசப்படாதே...
அவள்-
மூடிய விழிக்குள்
உன் முடிவு எழுதப்பட்டுள்ளது!
புரிந்துகொள் எதிரியே...

சுவேதா
28-09-2008, 07:27 PM
இதோ உங்கள் பார்வைக்கு அடுத்த நிழல்


http://img33.picoodle.com/img/img33/3/9/27/narathar/f_faceDramatim_bd6eb04.jpg

எங்கே உங்கள் கவிதை வரிகளால்
இவளுக்கு உயிர் கொடுங்கள் பார்க்கலாம்

கண்களில் காதலை
வைத்து உதட்டில் மறைக்காதே!
என் விழி உன்னை உன்
காதலை கண்டு கொள்ளும்...

உன் அன்பிற்காக ஏங்கும் என்னிடம்
ஏன் மறைக்கின்றாய்?
என் காதலை என் விழி உனக்கு
சொல்லவில்லையா இல்லை
தெரிந்தும் தெரியாததுபோல் என்னை
தவிக்க வைக்கின்றாயா???

Narathar
28-09-2008, 07:43 PM
நிழலுக்கு உயிரூட்டிய சொந்தங்களான ஓவியன், சூரியன், அக்னி, "பொத்தனூர்"பிரபு, தீபன் , சுவேதா ஆகியோருக்கு நரதரின் அன்பு கலந்த நன்ரிகள்

அமரன்
28-09-2008, 07:51 PM
நிழலுக்கு உயிர் கொடுத்த எல்லாருக்கும் ஊக்கம் கொடுத்தாயிற்று..
அந்த ஊக்கத்துடன் இந்த நிழலுக்கு உயிர் கொடுங்கள்.


http://i373.photobucket.com/albums/oo179/amaran2008/rarebreed.jpg

ஓவியன்
29-09-2008, 05:19 AM
கணினி யுகத்தில்
கண் திறனைத்
தொலைத்து அல்லலுறுவது
மனிதன் மட்டுமல்ல,
வெட்டுக் கிளிகளும்தான்..!!

ஓவியன்
29-09-2008, 05:31 AM
வெட்டி ஒட்டும்
கணனி வரைகலை
விட்டு வைக்கவில்லை
வெட்டுக்கிளிகளையும்...!!

சிவா.ஜி
29-09-2008, 06:38 AM
எத்தனைபேர் வாழ்க்கையில்
வெட்டி விளையாடியிருப்பானோ...
இந்த ஜென்மத்தில்
இப்படி பிறந்திருக்கிறான்....!
அப்படியும் திருந்தாமல்
அடுத்த இலக்கை தேடி
அலையும் கண்கள் காட்டுகிறது...
இவன் பட்டாலும் திருந்தாத
வெட்டும் மனிதனென்று!

நம்பிகோபாலன்
29-09-2008, 09:17 AM
கண்ணில் வலி தெரிய
நடக்கும்
இந்த வெட்டுகிளிக்குமா
காதல் தோல்வி
தாடியுடனும் அலைகிறதே

தீபன்
29-09-2008, 09:51 AM
வளக்குறைச்சலுடன் வானேற
தன்னையே தலையாக்கி
தகரங்கள் உடம்பாக்கி...
இன்று-
வேட்டையை முடித்துகொண்டு
வெற்றிகரமாய் தரையிறங்கும்
நம் ’வெட்டுக்கிளி’ இது!

பிச்சி
29-09-2008, 12:22 PM
இது
பொழுதைக் கடித்த காலம்
மனதை முறித்த நேரம்
தேடல் தேடும் பயணம்
முரணாய் முளைக்கும் தருணம்

பிச்சி
29-09-2008, 12:23 PM
பூச்சிகளாய் மனிதர்கள்
புதியதோர் உலகம்
வாழ்முறை தலைகீழாய்
வாழட்டுமே ஒருமுறை.

பிச்சி
29-09-2008, 12:30 PM
இரவில் சூரியன் உதிக்கும்
பனிகள் அனலாய் கொதிக்கும்
பூக்கள் நிறங்களை இழக்கும்
பூச்சிகள் மனிதனாய் விளங்கும்.
இது முரண்பாட்டுக்காலம்

பிச்சி
29-09-2008, 02:27 PM
ஏ பூச்சி மனிதனே!
எங்கே செல்கிறாய்?
என்ன செய்வதாக உத்தேசம்?

ஒரு திவளை திரவியம் காணவா?
திரை அவிழ்ந்த யுகம் தேடவா?

முறை மீறிய மெய்யுடன்
திக்கில்லா பயணமா?

மொழியின் மூலம் தேடி
கவி புனைகிறாயா?

ஒருமுறை நின்றுசெல்

கூர்முனைகளின் விளிம்பில்
பூக்கள் நிறுவுவதெப்படி எனச்
சொல்லிவிட்டு செல்

அக்னியின் விழுதுகளில்
முத்தக் கனல் பொழிவதெப்படியெனப்
பாடம் நடத்திச் செல்

மனிதர்களின் உள்ளே
புறாக்களின் கருவறையை
நிறுவிவிட்டுச் செல்

ஹே! பூச்சி மனிதா!
இவையெதுவும் ஆகாதெனில்
குறைவயதின் நிறைமனதை
நீட்டிப்பதன் வழியேனும்
சொல்லிவிட்டுச் செல்.

அன்புடன்-----
பிச்சி

Narathar
29-09-2008, 03:15 PM
ஆஹா!!!! பிச்சி
பிச்சு உதருறீங்க............
இன்னும் எழுதுங்க...........
வாழ்த்துக்கள்

Narathar
30-09-2008, 12:38 AM
நிழலுக்கு உயிர் கொடுத்த எல்லாருக்கும் ஊக்கம் கொடுத்தாயிற்று..
அந்த ஊக்கத்துடன் இந்த நிழலுக்கு உயிர் கொடுங்கள்.


http://i373.photobucket.com/albums/oo179/amaran2008/rarebreed.jpg

இந்தப்பக்கத்துக்கு வரும் அன்பர்களின் வசதிக்காக படத்தை இங்கு மீண்டும் வரும்படி செய்துள்ளேன்.............

ஷீ-நிசி
30-09-2008, 01:19 AM
மனிதர்களின் உள்ளே
புறாக்களின் கருவறையை
நிறுவிவிட்டுச் செல்

வர்ணிக்க வார்த்தையில்லை...

வாழ்த்துக்கள் பிச்சி!

பிச்சி
30-09-2008, 05:51 AM
மிக்க நன்றி நாரதர் அண்ணா,. ஷிநீசி அண்ணா.

அன்புடன்
பிச்சி

Narathar
30-09-2008, 12:32 PM
வர்ணிக்க வார்த்தையில்லை...

வாழ்த்துக்கள் பிச்சி!

பாராட்டெல்லாம் சரி உங்கள் கவிதை எங்கே? :D

வெற்றி
30-09-2008, 12:39 PM
போன படத்தின் நிழலுக்கு உயிர்

http://img33.picoodle.com/img/img33/3/9/27/narathar/f_faceDramatim_bd6eb04.jpg
சன்னலோர கனவுகள்

அட அழகாய் இருக்கிறாரே....!
மெல்லிய மீசை..கூரிய பார்வை..
சிரிக்கும் போது கன்னத்தில் குழி...
ஆணழகன் தான்..
அட அது யார் கூட ஒரு சுட்டிப்பெண்
அவரின் பக்கத்துக்கு வீட்டு குழந்தையோ?
என்ன இது அப்பா என அவரை சொல்லுதே?
அடச்சே...இந்த ஆளு சரிப்படாது போல
சன்னலை சாத்தி விட வேண்டியது தான்
இது இந்த பக்க நிழலுக்கு உயிர்

வெட்டியாய் பிறந்து
வெட்டித்தனமாக சுற்றி
வெட்டி வேலை பார்த்த
என்னை வெட்டித்தனமாக
வெட்டுக்கிளியின் உடலில் முகம் அதை
ஒட்ட வைத்த வெட்டிப்பயல் மட்டும்
சிக்கினால் வெட்டி விடுவேன் ..வெட்டி

Narathar
30-09-2008, 01:07 PM
அன்பு வேண்டுகோளுக்கிணங்கி.....
சன்னலோரக்கனவுகள் படைத்து...
வெட்டுக்கிளி முகம் மாற்றியவரை
வம்புக்கிழுத்ததுவரை அழகோ அழகு!!!!

வாழ்த்துக்கள்!!

அமரன்
30-09-2008, 01:09 PM
நாரா...
அடுத்த நிழலைப் படர விடுறது..

Narathar
30-09-2008, 01:14 PM
நம்ம கவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாயிற்றா? :D

அமரன்
30-09-2008, 01:19 PM
நம்ம கவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாயிற்றா? :D
அனுப்பியாச்சு... அவர்கள் கணக்கில் விரைவில் சேரும்..:)

Narathar
30-09-2008, 01:24 PM
இதோ அடுத்த நிழல் கொடுத்தாயிற்று!

http://img37.picoodle.com/img/img37/3/9/30/narathar/f_untitledm_19d5a07.png

எங்கே எமது அன்பு சொந்தங்களின் கவித்திறணைப்பார்ப்போம்.......

சுவேதா
30-09-2008, 11:26 PM
எம்மை மதம்,ஜாதி,பாஷை,இனம்
வேறு படுத்தினாலும்...
எம் அன்பு,காதல் என்றும் வேறு படாது அன்பே..

தீபன்
01-10-2008, 02:58 AM
சோர்ந்த கரம் துவண்டுவிடாது
துணைக்கு வந்தீர்கள்...
இன்று-
மரண விளிம்பில் மனிதம் மரத்து
எம்மை
துறந்து போனீர்கள்...!

Narathar
01-10-2008, 04:06 PM
எம்மை மதம்,ஜாதி,பாஷை,இனம்
வேறு படுத்தினாலும்...
எம் அன்பு,காதல் என்றும் வேறு படாது அன்பே..

இப்பகுதியில் சுவேதாவின் முதல் பங்களிப்பா இது?
வாழ்த்துக்கள்!!!

இன்னும் எழுதுங்கள்.............. :)

அக்னி
01-10-2008, 04:37 PM
இப்பகுதியில் சுவேதாவின் முதல் பங்களிப்பா இது?

இல்லீங்க... ஏற்கனவே இங்கே...

கண்களில் காதலை
வைத்து உதட்டில் மறைக்காதே!
என் விழி உன்னை உன்
காதலை கண்டு கொள்ளும்...

உன் அன்பிற்காக ஏங்கும் என்னிடம்
ஏன் மறைக்கின்றாய்?
என் காதலை என் விழி உனக்கு
சொல்லவில்லையா இல்லை
தெரிந்தும் தெரியாததுபோல் என்னை
தவிக்க வைக்கின்றாயா???

Keelai Naadaan
01-10-2008, 06:27 PM
கார்மேனி கண்ணன் கரமும்
செம்மேனி இராமன் கரமும்
சேர்ந்து வணங்குவது யாரையோ..?
..........................................................................................................

புறத்திலே கரத்தின் நிறம் மாறினாலும்
அகத்திலே குருதி நிறம் மாறாது
............................................................................................................
கருப்புக்கும் சிவப்புக்கும் என்ன வித்தியாசம்
கடவுளின் படைப்பிலே சின்ன வித்தியாசம்
..................................................................................................
நீ தாயின் நிறம்
நான் தந்தை நிறம்
நிறம் மாறலாம்
மனம் ஒன்றுதான்.

சுவேதா
02-10-2008, 02:02 AM
இப்பகுதியில் சுவேதாவின் முதல் பங்களிப்பா இது?
வாழ்த்துக்கள்!!!

இன்னும் எழுதுங்கள்.............. :)

நன்றி அண்ணா:):)

Narathar
02-10-2008, 06:48 AM
சோர்ந்த கரம் துவண்டுவிடாது
துணைக்கு வந்தீர்கள்...
இன்று-
மரண விளிம்பில் மனிதம் மரத்து
எம்மை
துறந்து போனீர்கள்...!

உயிருக்கு உயிரூட்ட வந்த
வெள்ளை உள்ளங்கள் ஒதுங்க
அல்லது ஒதுக்கப்பட!
இன்று தனிக்கையாய் நாங்கள்
தணிக்கைக்கு அப்பால்..........

மனதை உருக்கும் கவிதை....
நன்றி தீபன்!!

அமரன்
02-10-2008, 06:49 AM
எம்மை மதம்,ஜாதி,பாஷை,இனம்
வேறு படுத்தினாலும்...
எம் அன்பு,காதல் என்றும் வேறு படாது அன்பே..

வேர் படர்த்திய காதலை
வேர்கள் படுத்தினாலும்
வேறு படுத்துவது இயலாது.

நல்லாயிருக்கு.. கவிதை.:icon_b:


உயிருக்கு உயிரூட்ட வந்த
வெள்ளை உள்ளங்கள் ஒதுங்க
அல்லது ஒதுக்கப்பட!
இன்று தனிக்கையாய் நாங்கள்
தணிக்கைக்கு அப்பால்..........

மனதை உருக்கும் கவிதை....
நன்றி தீபன்!!

சோர்ந்த கரம் துவண்டுவிடாது
துணைக்கு வந்தீர்கள்...
இன்று-
மரண விளிம்பில் மனிதம் மரத்து
எம்மை
துறந்து போனீர்கள்...!

அன்பு நாராவைப் பாட வைத்து பெருமையடைந்தது தீபனின் கவிதை.. இரண்டுமே அருமை.. என்னதான் அரசசார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களானாலும் சமயங்களில் ஆட்டுச் சார்ப்பாகவே நடந்துகொள்ள நேரிடுகிறது. அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்கள் அப்படி. இக்கவிகள் சொல்லும் சேதியின் பின்னணி விரைவில் வெளிவரக்கூடும்-"வெல்லம் தின்ற்றவன் எவனோ...." பழமொழிக்கு உதாரணமாக..

அமரன்
02-10-2008, 07:13 AM
கார்மேனி கண்ணன் கரமும்
செம்மேனி இராமன் கரமும்
சேர்ந்து வணங்குவது யாரையோ..?
..........................................................................................................

புறத்திலே கரத்தின் நிறம் மாறினாலும்
அகத்திலே குருதி நிறம் மாறாது
............................................................................................................
கருப்புக்கும் சிவப்புக்கும் என்ன வித்தியாசம்
கடவுளின் படைப்பிலே சின்ன வித்தியாசம்
..................................................................................................
நீ தாயின் நிறம்
நான் தந்தை நிறம்
நிறம் மாறலாம்
மனம் ஒன்றுதான்.
வருண பேதத்துக்கு எதிராக
வாளெடுக்கின்றன கவிதைகள்..
இந்த வாளிருந்து சொட்டும்
இரத்த துளிகலினால்
தழைத்து செழிக்கட்டும் மனிதம்..
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.

வசீகரன்
03-10-2008, 04:28 AM
கூர்முனைகளின் விளிம்பில்
பூக்கள் நிறுவுவதெப்படி எனச்
சொல்லிவிட்டு செல்

அக்னியின் விழுதுகளில்
முத்தக் கனல் பொழிவதெப்படியெனப்
பாடம் நடத்திச் செல்செந்தனல் வரிகள்..!!!

சிவா.ஜி
03-10-2008, 09:10 AM
வணங்கும் கரங்களில்
வெள்ளையொன்று, கறுப்பொன்று
உணர்த்தும் உண்மையோ....
உலகில் ஜாதி ஒன்று....மனிதம்!

பாபு
04-10-2008, 03:41 AM
காக்கைக்கும் தன் குஞ்சு
"பொன்குஞ்சு"
என்று சொல்லி
நம்மை நாமே
தாழ்த்திக்கொண்டது போதும் !

நம் கண்களில் கூட
கருப்பும் வெள்ளையும்
சேர்ந்து தான் இருக்கிறது
என்பதை
உணர்ந்தாலே போதும் !!

அமரன்
04-10-2008, 08:14 AM
காக்கைக்கும் தன் குஞ்சு
"பொன்குஞ்சு"
என்று சொல்லி
நம்மை நாமே
தாழ்த்திக்கொண்டது போதும் !

நம் கண்களில் கூட
கருப்பும் வெள்ளையும்
சேர்ந்து தான் இருக்கிறது
என்பதை
உணர்ந்தாலே போதும் !!

நான் எதிர்பார்த்த கற்பனை வளமை உங்களிடத்திலிருந்து வெளிப்பட்டிருக்கு..

கறுப்பும் வெள்ளையும் கலந்த
கண்களால் பார்
அழகான உலகம் சிரிக்கிறது.

வெற்றி
04-10-2008, 12:02 PM
இந்தியர் என்பதில் பெருமிதம்
கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை
புரிவோம்..

Narathar
05-10-2008, 11:17 AM
வணங்கும் கரங்களில்
வெள்ளையொன்று, கறுப்பொன்று
உணர்த்தும் உண்மையோ....
உலகில் ஜாதி ஒன்று....மனிதம்!

மனிதம் மறந்து, புனிதம் துறந்து வாழும் இந்த மானிடர்கள் எப்போதறிவர் இவ்வுண்மையைஇந்தியர் என்பதில் பெருமிதம்
கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை
புரிவோம்..

வடக்கும் தெற்கும் இணைந்து சாதணைகள் படைத்திட வாழ்த்துகின்றேன்

தீபா
07-10-2008, 02:35 PM
காதலுக்கு நிறமில்லை,
மணமில்லை, குணமில்லை,
அட
நமக்கு விரலிலும்
வித்தியாசமில்லை :D

Keelai Naadaan
07-10-2008, 05:25 PM
வருண பேதத்துக்கு எதிராக
வாளெடுக்கின்றன கவிதைகள்..
இந்த வாளிருந்து சொட்டும்
இரத்த துளிகலினால்
தழைத்து செழிக்கட்டும் மனிதம்..
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.

நன்றிகள் அமரன்.

அடுத்த நிழலை தரலாமே நண்பர்களே...

Narathar
08-10-2008, 05:58 AM
கடந்த நிழலுக்கு தங்கள் கவிதைகளால் உயிரூட்டிய
சுவேதா,
தீபன்,
கீழைநாடான்,
அமரன்,
வசீகரன்,
சிவா.ஜி,
பாபு,
மொக்கச்சாமி,
தென்றல்
ஆகியோருக்கு நாரதரின் அன்பு கலந்த நன்றிகள். உங்களுக்கு இ பணம் சீக்கிரமே வந்து சேரும்...........

அமரரே... நாமும் கவிதை மாதிரி ஒன்று எழுதியிருக்கோமில்ல?? கவனிப்பீர்களா?? நாராயணா!!!! :Dஅடுத்த நிழலை தரலாமே நண்பர்களே...

கொடுத்தாயிற்று.........
இனி உங்கள் கவிதையை தாருங்கள்.
ஆனால் இனி அடுத்த படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை, நீங்களே ஒரு பொறுத்தமான படத்தை இங்கு கொடுத்து விடுங்கள்!

மன்றத்திலுள்ள அனைவருக்கும் அந்த உரிமை இருக்கின்றது......
கொடுக்கும் படம் கொஞ்சம் கவிதைகளை தூண்டும் படமாக அமைய வேண்டும் அவ்வளவே!!!!

Narathar
08-10-2008, 06:06 AM
அன்பு சொந்தங்களே......
இதோ அடுத்த நிழல் கொடுத்தாயிற்று,

http://img37.picoodle.com/img/img37/3/9/18/f_1729m_6c6b5ff.jpg

எங்கே உங்கள் கவிதைக்கரங்கள் கொஞ்சம் விளையாடட்டும்.....
தவிக்கும் இந்தக்கரத்திற்கு தயை காட்டட்டும்.....

Narathar
09-10-2008, 02:22 AM
உலகையே வென்றாலும்
போகும் போது
எதையும் எடுத்து
செல்லவில்லை என்பதற்காக
தன் கைகளை வெளியே
வைத்து புதைக்கச்சொன்னான்
அலக்சாண்டர் என்ற மாவீரன்..

நானும் அதை
பின்பற்றியதால்
நீ
எந்த உலகத்தை வென்றாய்
என்று கேட்கிறார்கள்..

நான்
மட்டுமல்ல..
வெளியே தெரியும்
அனைத்து கரங்களுக்கும்
உரியவர் சொல்வர்..

”நான் என்னவளின்
மனதை வென்றிருக்கிறேன்..
ஆம்..
அவள்தானே என்
உலகம்..!!!”

இந்த நிழலுக்காக வார்க்கப்பட்ட ஒரு அழகிய கவிதை........

(ஏனோ இங்கு பதியப்படாமல் என் தனிமடலில்??? ஒரு வேளை அவர் பெயர் இங்கு வருவதை விரும்பவில்லையோ????? - நாராயணா!!!! )

அனுமதி கோரியிருக்கின்றேன், பெய்ரை வெளியிட.......... அனுமதித்தால் பெயர் தருகின்றேன்.......

இல்லைன்னா நம்ம கணக்குல வச்சுக்கோங்க..... இ-பணம் கிடைக்குமில்லையா? ஹா ஹா :D

சிவா.ஜி
09-10-2008, 07:14 AM
புதைத்துவிட்ட பிறகும்
முளைத்து வரும் விதையாய்
முட்டிக்கொண்டு வர
முயற்சி செய்கிறேன்.....

மறுமுறை வரும்போது பாருங்கள்
மனிதனாய் வளர்ந்திருப்பேன்...
ஓரறிவு விதைக்கிருக்கும் வீரியம்
ஆறறிவு மனிதனுக்கிருக்காதா...?

முட்டிக்கொண்டே இருந்தால்
மணலும் இளகும், மலையும் விலகும்....!

நம்பிகோபாலன்
09-10-2008, 09:55 AM
நீ வந்து தொட்ட
பிறகு தான்
நான் முழுமையாக
மண்ணில் மறைவேன்
எங்கே
உன் கைகள்
என் கரத்தில் படட்டும்
அதுவரை காத்திருப்பேன்
மண்ணில் புதையாமல்....

தீபன்
10-10-2008, 05:58 AM
அன்னை நிலம் காக்கும்
அணைகள் நாமானோம்...
அணையான பின்பும் நாம்
விடியலுக்கு கரமசைப்போம்!

தீபா
10-10-2008, 08:10 AM
மெய் புதைந்து போனாலும்
கை தூக்கி நிற்பேன்.
கனவே வா!

சஹாராவில் வேகும் என்னை
விகார மனம் விலக்கி
அணைக்க வா கனவே

:sprachlos020: :D:sprachlos020:

நம்பிகோபாலன்
10-10-2008, 09:14 AM
உன் கரங்களில்
எனது கை பட்டிருக்கும்
என நினைக்கிறேன்
அதனால்தான்
மண்ணோடு புதைய
மறுக்கிறதோ.........

Keelai Naadaan
10-10-2008, 02:01 PM
கொடுத்தாயிற்று.........
இனி உங்கள் கவிதையை தாருங்கள்.
ஆனால் இனி அடுத்த படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை, நீங்களே ஒரு பொறுத்தமான படத்தை இங்கு கொடுத்து விடுங்கள்!

மன்றத்திலுள்ள அனைவருக்கும் அந்த உரிமை இருக்கின்றது......
கொடுக்கும் படம் கொஞ்சம் கவிதைகளை தூண்டும் படமாக அமைய வேண்டும் அவ்வளவே!!!!
நன்றி நாரதரே. முயற்சிக்கிறேன்.
............................................................................

கை உயிர்ப்போடுள்ளதே..!!!
யார் இது..? மணலில் அமிழ்ந்தது.
இப்போது தான் புதைந்தானா?
கையில் சோர்வில்லையே..!

எந்த மதம்..?
எந்த சாதி..?
எந்த கட்சி..?
எந்த நாடு..?
நல்லவனா...?
கெட்டவனா..?
கவனமாய் வரக்கூடாதா?
பொறுப்பில்லாதவன்..!!

உயிர் இருக்குமா..?
அடடா..! யோசனையில்
ஒரு மணி நேரம் ஓடிவிட்டதே..!!!
இந்நேரம் மூர்ச்சையாகியிருப்பான்
..........................................
..........................................
ஐயோ பாவம்..!

மன்மதன்
10-10-2008, 02:56 PM
உலகையே வென்றாலும்
போகும் போது
எதையும் எடுத்து
செல்லவில்லை என்பதற்காக
தன் கைகளை வெளியே
வைத்து புதைக்கச்சொன்னான்
அலக்சாண்டர் என்ற மாவீரன்..

நானும் அதை
பின்பற்றியதால்
நீ
எந்த உலகத்தை வென்றாய்
என்று கேட்கிறார்கள்..

நான்
மட்டுமல்ல..
வெளியே தெரியும்
அனைத்து கரங்களுக்கும்
உரியவர் சொல்வர்..

”நான் என்னவளின்
மனதை வென்றிருக்கிறேன்..
ஆம்..
அவள்தானே என்
உலகம்..!!!”

இந்த நிழலுக்காக வார்க்கப்பட்ட ஒரு அழகிய கவிதை........

(ஏனோ இங்கு பதியப்படாமல் என் தனிமடலில்??? ஒரு வேளை அவர் பெயர் இங்கு வருவதை விரும்பவில்லையோ????? - நாராயணா!!!! )

அனுமதி கோரியிருக்கின்றேன், பெய்ரை வெளியிட.......... அனுமதித்தால் பெயர் தருகின்றேன்.......

இல்லைன்னா நம்ம கணக்குல வச்சுக்கோங்க..... இ-பணம் கிடைக்குமில்லையா? ஹா ஹா :D

நேற்று பதியும் போது பிரச்சனை வந்தது. தனிமடலில் அனுப்பினேன்.;) எழுதியவரை கண்டுபிடிப்பவர்களுக்கு இ-பணம் அன்பளிப்பு என்று அறிவித்திருக்கலாம்..:rolleyes: ஆமா. எனக்கு எவ்வளவு இ-பணம்.. பேங்க் அக்கவுண்ட் நம்பர் அனுப்பட்டுமா??:D:rolleyes:

Narathar
11-10-2008, 02:43 AM
நேற்று பதியும் போது பிரச்சனை வந்தது. தனிமடலில் அனுப்பினேன்.;) எழுதியவரை கண்டுபிடிப்பவர்களுக்கு இ-பணம் அன்பளிப்பு என்று அறிவித்திருக்கலாம்..:rolleyes: ஆமா. எனக்கு எவ்வளவு இ-பணம்.. பேங்க் அக்கவுண்ட் நம்பர் அனுப்பட்டுமா??:D:rolleyes:


அக்கவுன்ட் எங்கெ சுவிஸ் பாங்கிலா இருக்கிறது????
அந்த அக்கவுன்ட் களுக்கு மட்டும்தான் பணப்பரிமாற்றம் செய்வோம்.... ;)

பாபு
11-10-2008, 02:55 AM
கால் தடங்களே
இல்லாத பாலைவனத்தில்
ஒரு கை மட்டும் தெரியும் !

பூமியும் வானமும்
நான் சொன்னால்
கை கொடுத்துக் கொள்ளும் !

அழகை அழுக்காகவும்
கருப்பை வெள்ளையாகவும்
நான் நினைத்தால் மாற்றிவிடுவேன் !

என் சாதனையில் இதுவும்
ஒன்று !
என் பெயர்"கிராபிக்ஸ்" !!

மன்மதன்
11-10-2008, 11:52 AM
அக்கவுன்ட் எங்கெ சுவிஸ் பாங்கிலா இருக்கிறது????
அந்த அக்கவுன்ட் களுக்கு மட்டும்தான் பணப்பரிமாற்றம் செய்வோம்.... ;)

சுவிட்ச் பாங்கில..:rolleyes::rolleyes: உங்க லாக்கர் இருக்கிற அறையின் சுவிட்சை இன்று இரவு ஆஃப் செய்து வைக்கவும்..நானே எடுத்துக்கொள்கிறேன்..:D:D

Narathar
12-10-2008, 12:44 AM
சுவிட்ச் பாங்கில..:rolleyes::rolleyes: உங்க லாக்கர் இருக்கிற அறையின் சுவிட்சை இன்று இரவு ஆஃப் செய்து வைக்கவும்..நானே எடுத்துக்கொள்கிறேன்..:D:D

கொடுத்து கொடுத்து
தேய்ந்துவிட்டேன்....
இனியிருப்பது என் கை மட்டும்
நிழலை விட குள்ளமாய்

Narathar
13-10-2008, 01:52 PM
”நான் என்னவளின்
மனதை வென்றிருக்கிறேன்..
ஆம்..
அவள்தானே என்
உலகம்..!!!”

என்ற கவிதை தந்த மன்மதனுக்கும்முட்டிக்கொண்டே இருந்தால்
மணலும் இளகும், மலையும் விலகும்....!

என்ற கவிதை தந்த சிவா.ஜி க்கும்அதுவரை காத்திருப்பேன்
மண்ணில் புதையாமல்....

என்ற கவிதை தந்த நம்பிகோபாலனுக்கும்விடியலுக்கு கரமசைப்போம்!

என்ற கவிதை தந்த தீபனுக்கும்


கை தூக்கி நிற்பேன்.
கனவே வா!


என்ற கவிதை தந்த தென்றலுக்கும்மண்ணோடு புதைய
மறுக்கிறதோ.........

என்ற கவிதை தந்த நம்பிகோபாலனுக்கும்எந்த மதம்..?
எந்த சாதி..?என்ற கவிதை தந்த கீழைநாடானுக்கும்


என் பெயர்"கிராபிக்ஸ்" !!


என்ற கவிதை தந்த பாபுவுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்...... உங்களுக்கான சன்மானம் வந்து சேறும்.

அடுத்த படத்தை மன்ற சொந்தங்களிலொன்றிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்

அமரன்
13-10-2008, 02:00 PM
பிரான்சில் நடைபெறும் உலகக் கார் கண்காட்சியில் எடுக்கப்பட்ட படம்.
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=52
கற்பனைக் காரில் ஏறிக் கவிதைகளை கொண்டுவாருங்கள் நண்பர்களே

நம்பிகோபாலன்
14-10-2008, 10:22 AM
உன்னில் பாதியாக நான்
என்னில் பாதியாக
நீ வந்து
முழுமையானால்
இல்வாழ்கையை பயணம்
இனிமையாக இனிதே
தொடரும்.....வருவாயா

Narathar
14-10-2008, 12:09 PM
இந்தப்பக்கத்தில் நிழல் தெரிய.........பிரான்சில் நடைபெறும் உலகக் கார் கண்காட்சியில் எடுக்கப்பட்ட படம்.
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=52
கற்பனைக் காரில் ஏறிக் கவிதைகளை கொண்டுவாருங்கள் நண்பர்களே

Narathar
15-10-2008, 04:02 AM
உன்னில் பாதியாக நான்
என்னில் பாதியாக
நீ வந்து
முழுமையானால்
இல்வாழ்கையை பயணம்
இனிமையாக இனிதே
தொடரும்.....வருவாயா

என்னில் பாதி நீ என்றாய்
நம்பி வந்தேன் உன்னோடு
நடுத்தெருவில் நிற்கிறேன்
எண்ணெய் இன்றி இப்போது

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

தீபன்
16-10-2008, 03:30 AM
கவசம் இளந்து
துடிக்கும் இதயம் பிளந்து
குற்றுயிரோடு நான்...
காட்சிப்பொருளாக்கி
களியாட்டம் போடுபவனாய்
சர்வதேசமே நீ...!

Narathar
19-10-2008, 05:44 PM
கவசம் இளந்து
துடிக்கும் இதயம் பிளந்து
குற்றுயிரோடு நான்...
காட்சிப்பொருளாக்கி
களியாட்டம் போடுபவனாய்
சர்வதேசமே நீ...!

தீபனின் உணர்ச்சி பூர்வமான கவிதை!!!!
வாழ்த்துக்கள் தீபன்.
அடிக்கடி மன்றப்பக்கம் காணக்கிடைக்காததையிட்டு
வருந்துகின்றேன்

நதி
22-10-2008, 09:36 AM
எந்திரலோகத்தில்
பாதியை காணாவிட்டாலும்
மீதியை வைத்து
காலம் கடத்தும் காரைச்சுற்றி
எத்தனை கண்கள் விரிந்தபடி.

காருக்குப் பக்கத்தில்
கண்களால் சிரித்தபடி
உருவாக்கிய கைம்பெண்.

Narathar
23-10-2008, 03:11 AM
காருக்குப் பக்கத்தில்
கண்களால் சிரித்தபடி
உருவாக்கிய கைம்பெண்.

கார் கண்காட்சியென்றாலே பாதியுடை அழகியில்லாமல்
பார்க்க சகிக்குமா?

இங்கு பாதிக்காரைப்போட்டு நம்ம அமரு கவிதை எழுதச்சொல்லிப்புட்டாரு!
நாராயணா!!!! :D

இருந்தாலும் கவிதை தந்த ரவுத்திரருக்கு வாழ்த்துக்கள்

Narathar
23-10-2008, 03:15 AM
உன்னில் பாதியாக நான்....என்னில் பாதி நீ என்றாய்......


:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


கவசம் இளந்து
துடிக்கும்


எந்திரலோகத்தில்
பாதியை

பாதி இயந்திரத்துக்கு கவிதையாத்தவர்களுக்கான இ சன்மானம் வந்து கிடைக்கும்.... சீக்கிரமே.

Narathar
23-10-2008, 03:19 AM
இதோ உங்கள் கவிதைகளால் உயிர் கொடுப்பதற்கான அடுத்த நிழல்

http://img26.picoodle.com/img/img26/3/9/18/f_1533m_787b8ce.jpg

அனாமிகா
23-10-2008, 05:50 AM
உன் ஸ்பரிசம் இன்றி
பாறையாய் நான்...
கூடயிருந்த பொழுதுகள் மட்டும்
இன்னும் நினைவறையில்
பசுஞ் தளிராய்,
அவையும் சருகாகுமுன்...
விரல் தொடு
விழித்தெழுவேன்...

Narathar
24-10-2008, 03:47 AM
விரல் தொடு
விழித்தெழுவேன்...

மிகவும் அழகான கவிதை!
அதுவும் உங்கள் இரண்டாவது பதிவாக!
வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும்..

இன்னும் நிறையவே எழுத வேண்டி நிற்கின்றேன்

http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020121.gif

தீபன்
24-10-2008, 08:25 AM
புதைக்கப்பட்ட மனிதன்
மக்கி மண்ணாகி
மரமும் முளைத்துவிட்டது...
ஆனாலும் இன்னும்
இளைப்பீடுகள் கிடைத்தபாடில்லை...!

தீபா
25-10-2008, 02:40 AM
சிதறிய கற்கள்
உருவங்களாய்
சிதறிய மனங்கள்?

Narathar
25-10-2008, 10:14 AM
புதைக்கப்பட்ட மனிதன்
மக்கி மண்ணாகி
மரமும் முளைத்துவிட்டது...
ஆனாலும் இன்னும்
இளைப்பீடுகள் கிடைத்தபாடில்லை...!

தீபனின் மற்றுமொறு ஈழநோக்குக்கவிதை...
தொடருங்கள் தீபன்
வாழ்த்துக்கள்

சாம்பவி
25-10-2008, 11:36 AM
உன் ஸ்பரிசம் இன்றி
பாறையாய் நான்...
கூடயிருந்த பொழுதுகள் மட்டும்
இன்னும் நினைவறையில்
பசுஞ் தளிராய்,
அவையும் சருகாகுமுன்...
விரல் தொடு
விழித்தெழுவேன்...

பசுந் தளிராய்..... !!!!

சாம்பவி
25-10-2008, 01:24 PM
தாசி என்று ஏசி விட்டு
யோசிக்காது பேசி விட்டு...
ஆசிரமம் ஏகி விட்ட சன்னாசி....
அந்த*
ராசியில்லா பரதேசியின் கால்
தூசி மட்டுமே ஆசியென*
பூசி மெழுகலாகுமோ
நீ யோசி... !

இப்படிக்கு.,
அகலிகை..

பாரதி
25-10-2008, 06:34 PM
வாழ்கிறேன் இன்னும் கல்லாய்
தலையெங்கும் பச்சையம் பூத்தும்
வீசி விடும் காற்றின்றி
தூசி படும் நாளையெண்ணி....
இதுவே நன்றாகத்தான் இருக்கிறது.
வந்து விடாதே ராமா...

தீபா
26-10-2008, 02:11 AM
தாசி என்று ஏசி விட்டு
யோசிக்காது பேசி விட்டு...
ஆசிரமம் ஏகி விட்ட சன்னாசி....
அந்த*
ராசியில்லா பரதேசியின் கால்
தூசி மட்டுமே ஆசியென*
பூசி மெழுகலாகுமோ
நீ யோசி... !

இப்படிக்கு.,
அகலிகை..

அருமை அருமை...

இதைப் பார்த்ததும் என் அப்பா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

யாரோ ஒரு எழுத்தாளர், (புதுமைப் பித்தன் அல்ல) அகலிகையை வைத்து எழுதினாராம்.. கதையில் அகலிகை உயிர்பெற்ற பின்னர் எங்கு சென்றாலும் அவளை தாசி என்று ஏசுவார்களாம். அதன் பின் அவள் கல்லாகவே இருந்திருக்கலாம் என்று நொந்து போவாளாம்.... அது யார் எழுதியது என்று தெரியுமா?

Narathar
27-10-2008, 04:22 PM
சிதறிய கற்கள்
உருவங்களாய்
சிதறிய மனங்கள்?

கொடுத்த இ பணத்துக்கு இவ்வளவு எழுதினா போதும்னு நினைச்சீங்களோ? :lachen001:

நாராயணா!!!! ;)

பாபு
28-10-2008, 03:03 AM
பெண்ணே !
உன் மனம் மட்டுமே
கல்
என்று நினைத்திருந்தேன் !
நீயே கல்லென்று
இப்போதுதான்
உணர்ந்தேன் !!

Narathar
28-10-2008, 06:07 AM
நீ யோசி... !

இப்படிக்கு.,
அகலிகை..

யோசிக்க வைத்துவிட்டீர்கள்,
வாழ்த்துக்கள் உங்களின் கவிதைக்கு

Narathar
28-10-2008, 12:54 PM
இதுவே நன்றாகத்தான் இருக்கிறது.
வந்து விடாதே ராமா...

நன்றாகைருக்கின்றது பாரதி
உங்கள் கவிப்பார்வை
வாழ்த்துக்கள்

Narathar
29-10-2008, 03:08 AM
நீயே கல்லென்று
இப்போதுதான்
உணர்ந்தேன் !!

பாபு ஏன் ஏன் இப்படி?
ஹா ஹா :lachen001:
நன்றி உங்கள் கவிதைக்கு
தொடர்ந்து எழுதுங்கள்

Narathar
29-10-2008, 02:39 PM
கடந்த நிழலுக்கு உயிர்தந்த


அனாமிகா
தீபன்
தென்றல்
சாம்பவி
பாரதி
பாபு


ஆகியோருக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்..........

உங்களைத்தேடி இ-பணம் சீக்கிரமே வந்து சேரும்,

தொடர்ந்து உங்கள் ஆதரவை இந்தத்திரிக்கு வேண்டி நிற்கின்றேன்...


அடுத்த நிழலை யரவது மன்ற சொந்தங்கள் தரலாமே?
யாரும் கொடுக்காத பட்சத்தில் நாளை நான் தருவேன்..............

அமரன்
30-10-2008, 08:37 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=66
மன்றக்கவிகளே
தட்டி விடுங்கள் உங்கள் கற்பனைக் குதிரைகளை.

Narathar
31-10-2008, 05:01 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=66
மன்றக்கவிகளே
தட்டி விடுங்கள் உங்கள் கற்பனைக் குதிரைகளை.

வேற்கையோடு வரும்
வேடனை பயந்து
வேண்டுமென்றெ நீ இட்ட
வேலி இதுவோ உனக்கு?

நாங்களும் கவிதை எழுதுவோமில்ல? :D

அமரன்
31-10-2008, 07:35 AM
வேடனுக்குப் பயந்து வலையில் ஒளித்த மான்.
நாராவின் பார்வை பிரமாதம்.:icon_b: மற்றோர் எங்கே?

ஆதி
31-10-2008, 07:53 AM
சணல் சணலாய் பிரிந்து
கண்களின் முன் விரிந்திருக்கும்
வாழ்க்கையின் மாயவலையில்
சிறையுண்டு தவிக்கிறது
சிறுபறவையாய் மனது..
வேறொரு வலையில்
வேறெங்கோ மீண்டு சிறையுற..

அமரன்
31-10-2008, 08:04 AM
வலைக்குத் தப்பிய மீன் இன்னொரு மீனுக்கு இரையாக.
பெரியதொரு விடயத்தை சிறிய கவிதையில் நறுக்கென்று சொல்லியுள்ளீர்களாதி.:icon_b:

ஆதி
31-10-2008, 12:57 PM
வலைக்குத் தப்பிய மீன் இன்னொரு மீனுக்கு இரையாக.
பெரியதொரு விடயத்தை சிறிய கவிதையில் நறுக்கென்று சொல்லியுள்ளீர்களாதி.:icon_b:

நான் சொல்ல நினைத்ததை உங்கள் பாணியில் இன்னும் அழகாக சொல்லிவிட்டீர்கள் அமரன்.. வாழ்த்துக்கள் அமரன்

தமிழ்தாசன்
31-10-2008, 02:10 PM
விழியின் வலையில்
வீழ்த்தியே சாக்கொண்டு போட்டாய்!
மொழி தேடி நானும் அலைகின்றேனே
உயிர்த்தீயில் ஏண்டி விழித்தீயைப் போட்டாய்!

Narathar
31-10-2008, 06:02 PM
சிறையுண்டு தவிக்கிறது
சிறுபறவையாய் மனது..
வேறொரு வலையில்
வேறெங்கோ மீண்டு சிறையுற..

வரிகளை ரசித்தேன்............
உண்மையில் யதார்த்தமும் அதுதானே?
வாழ்த்துக்கள்,
தொடர்ந்து எழுதுங்கள்

Narathar
31-10-2008, 06:04 PM
விழியின் வலையில்
வீழ்த்தியே சாக்கொண்டு போட்டாய்!
மொழி தேடி நானும் அலைகின்றேனே
உயிர்த்தீயில் ஏண்டி விழித்தீயைப் போட்டாய்!

தமிழ்தாசரே........
உங்கள் கவிதையில் ஈழத்தமிழ்மனம் அதிகமாகவே வீசுகின்றது!

தொடர்ந்து இத்திரிக்குவந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

நன்றி உங்கள் கவிதைக்கு...

பாபு
01-11-2008, 03:11 AM
மெடல் டிடெக்டரிடம்
ஜாக்கிரதையாக
இருந்துகொள் !

உன் கண்களை
ஆயுதம் என்று
காட்டிக்கொடுத்து
விடப்போகிறது !!

ரங்கராஜன்
01-11-2008, 04:22 AM
மெடல் டிடெக்டரிடம்
ஜாக்கிரதையாக
இருந்துகொள் !

உன் கண்களை
ஆயுதம் என்று
காட்டிக்கொடுத்து
விடப்போகிறது !!

நன்றாக இருக்கு

Narathar
01-11-2008, 11:09 AM
உன் கண்களை
ஆயுதம் என்று
காட்டிக்கொடுத்து
விடப்போகிறது !!

ஹாங்காங் அழகிகளின் கண்களைப்பார்த்து வந்த கவிதையோ????

நாராயணா!!!!!


:D :D :D


நன்றாக இருக்கு

அப்படியே ஒரு கவிதையையும் எடுத்து விடுறது....
பாருங்க நானெல்லாம் கவிதை எழுதியிருக்கேன்,
உங்களால முடியாததா? :)

அனாமிகா
01-11-2008, 02:11 PM
பயப்போர்வையில்
பதறும் பட்டாம்பூச்சிகளாய்
இருவிழி காட்டமட்டுமாவது
இன்றைக்கு அனுமதி...
உதறி ஓடிவிடத்தான் ஆசை
உலகம் விடவா போகிறது?
ஒளித்துறைத்து வாழ்கிறோம்...
உடலை சிலநேரமும்
உணர்ச்சிகளை பலநேரமும்!

Narathar
01-11-2008, 07:24 PM
ஒளித்துறைத்து வாழ்கிறோம்...
உடலை சிலநேரமும்
உணர்ச்சிகளை பலநேரமும்!

உங்கள் கவிதையின் கடைசி வரிகள்
வீரியம் மிக்கவை.......

பெண்ணியத்தை உரக்கச்சொல்கின்றது
இந்த வரிகள்

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்

தீபன்
02-11-2008, 02:19 PM
உருமறைத்து பதுங்க வில்லை
அன்பான எதிரியே-
வாருங்கள்,
விழிவிரித்து காத்திருக்கிறோம்
விடியல் படைக்கவென...!

Narathar
03-11-2008, 02:12 AM
உருமறைத்து பதுங்க வில்லை
அன்பான எதிரியே-
வாருங்கள்,
விழிவிரித்து காத்திருக்கிறோம்
விடியல் படைக்கவென...!

தீபனின் "அக்மார்" கவிதை என்று மீண்டும் சொல்லலாமோ
என்று பார்த்தால்.....
அன்பான எதிரியே என்கிறார்...........
ஆனால் அந்த கடைசிவரி "விடியல் படைக்கவென"
என்பதன் மூலம் மீண்டும் என்னை சந்தேகிக்க வைக்கின்றார்...........

நாராயணா!!!!

தீபன்
03-11-2008, 03:04 AM
என்ன சந்தேகம்... உங்களுக்குமா புரியவில்லை...
எதிரிகளையும் எப்படி அன்பாக வீட்டுக்குள் அளைத்து எப்படியெல்லாம் உபசரணை செய்வோமென கடந்த காலங்கள் புரியவைக்குமே...!

மதுரை மைந்தன்
03-11-2008, 05:05 AM
கண்களினால் வீசினாய் வலை
கால்கள் பின்ன ஆனேன் சிலை

Narathar
03-11-2008, 12:49 PM
கண்களினால் வீசினாய் வலை
கால்கள் பின்ன ஆனேன் சிலை
அழகே உனக்கேது விலை
சமமாகுமோ தங்க மலை

Narathar
04-11-2008, 03:30 AM
அமரனவர்கள் இட்ட படத்துக்கு.......
நான் கவிதைபோல ஒன்றை எழுதி ஆரம்பித்துவைத்தேன்.
தொடர்ந்து ஆதி, தமிழ்தாஸன், பாபு, அனாமிகா, தீபன், மதுரை வீரன்
போன்றோர் நிழலுக்கு உயிரூட்டினார்கள்..........

நிழலுக்கு உயிர் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
உங்களுக்குரிய சன்மானம் சீக்கிரமே உங்களை நாடி வருமென்று
தெரிவித்துக்கொண்டு அடுத்த நிழலை பார்க்க ஆயத்தமாவோமா?

அடுத்த நிழலை தரப்போவது யார்?

மன்ற சொந்தங்களில் விரும்பியவர்கள் கவிதையை தூண்டக்கூடிய
நிழலொன்றை இங்கு பதிக்கலாம்.........

யாரும் பதிக்காத பட்சத்தில் நாளை நான் ஒரு நிழல்தருவேன்.......
உங்கள் கவிதை உயிரூட்டலுக்கா.........

Narathar
05-11-2008, 05:48 AM
இதோ மன்ற அன்பு சொந்தங்களே.....
உங்கள் அடுத்த உயிர்ப்பிப்புக்கான நிழல் கொடுத்தாயிற்று....

இனி உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விடுங்கள்!!!!!

http://img33.picoodle.com/img/img33/3/11/4/narathar/f_Nizalukkuuym_d2fe5f0.jpg

அடிமைத்துவத்திலிருந்து தலைமைத்துவத்துக்கு.....

பாபு
05-11-2008, 06:57 AM
வாவ்.....மிகச்சரியாக ஒரு போட்டோவைத் தேர்வு செய்து கொடுத்த நாரதருக்கு ஒரு சபாஷ் !!

நம்பிகோபாலன்
05-11-2008, 07:48 AM
விழுந்தவர்கள்
என்றும்
கீழயே இருக்கமாட்டார்கள்
முயற்சித்தால்
அரியனையும் அடைவார்கள்
வீழ்ந்தால்
பெருமை கொள்
மனிதா
உன்னால் முடியும் !!!

poornima
05-11-2008, 09:28 AM
கருமேகம் விலகி
வெண் சிறகு விரித்து
விண்ணுயரப் பறக்க..

வெள்ளை மகுடத்தில்
வெற்றியின் அடையாளமாய்
கருப்புக்கல்..

அடிமைச்சங்கிலி
வம்சத்தில் ஒன்று
இன்று அமெரிக்காவின்
அடையாள சங்கிலியாய்

கருவானத்தில் உதித்த
மின்னல் நீ
காத்திருக்கும் உன் இனத்திற்கு
இன்னல் தீர் இனி..

Narathar
05-11-2008, 10:31 AM
வாவ்.....மிகச்சரியாக ஒரு போட்டோவைத் தேர்வு செய்து கொடுத்த நாரதருக்கு ஒரு சபாஷ் !!

அப்படியே ஒரு கவிதையும் கொடுத்திருந்தா
உங்களுக்கும் சபாஷ்!! சொல்லியிருப்போமில்ல?

Narathar
05-11-2008, 10:33 AM
விழுந்தவர்கள்
என்றும்
கீழயே இருக்கமாட்டார்கள்
முயற்சித்தால்
அரியனையும் அடைவார்கள்
வீழ்ந்தால்
பெருமை கொள்
மனிதா
உன்னால் முடியும் !!!

நம்பிக்கை தரும் கவிதை நம்பியவர்களே.....
தொடரட்டும் தங்களின் பங்களிப்பு

Narathar
05-11-2008, 10:35 AM
வெள்ளை மகுடத்தில்
வெற்றியின் அடையாளமாய்
கருப்புக்கல்..

..

மிக அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்!
நன்றி தங்களின் கவிதைக்கு...
தொடர்ந்து வாருங்கள்

ஆதி
05-11-2008, 10:42 AM
//வெள்ளை மகுடத்தில்
வெற்றியின் அடையாளமாய்
கருப்புக்கல்..

அடிமைச்சங்கிலி
வம்சத்தில் ஒன்று
இன்று அமெரிக்காவின்
அடையாள சங்கிலியாய்
//

இரு பத்தியும் அழகென்றாலும்.. நான் மிக ரசித்தது இரண்டாம் பத்தியைத்தான்..

பாராட்டுக்கள் பூர்ணிமா..

மதுரை மைந்தன்
05-11-2008, 11:07 AM
ஒளியிழந்து வரும உலகத்திற்கு
ஒரு விடி வெள்ளி
நிற பேதங்களுக்கு இல்லை இனி
விதி விலக்கு
நம்பிக்கை நட்சத்திரமாய் வந்த
ஒளி விளக்கு

Narathar
05-11-2008, 11:58 AM
இந்தப்பக்க பார்வைக்காக......


இதோ மன்ற அன்பு சொந்தங்களே.....
உங்கள் அடுத்த உயிர்ப்பிப்புக்கான நிழல் கொடுத்தாயிற்று....

இனி உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விடுங்கள்!!!!!

http://img33.picoodle.com/img/img33/3/11/4/narathar/f_Nizalukkuuym_d2fe5f0.jpg

அடிமைத்துவத்திலிருந்து தலைமைத்துவத்துக்கு.....

தீபன்
05-11-2008, 04:58 PM
அடிமைச் சங்கிலி
காலச் சுழலில்
ஆளும் சக்தியாகும் -
அமெரிக்காவில் மட்டுமல்ல..!

Narathar
06-11-2008, 02:27 AM
ஒளியிழந்து வரும உலகத்திற்கு
ஒரு விடி வெள்ளி
நிற பேதங்களுக்கு இல்லை இனி
விதி விலக்கு
நம்பிக்கை நட்சத்திரமாய் வந்த
ஒளி விளக்கு

நன்றி மதுரை வீரரே உங்கள் பங்களிப்புக்கு!

பொறுத்திருந்து பார்ப்போம்....
விடி வெள்ளி வழி காட்டுமா என்று????

ஜெயாஸ்தா
06-11-2008, 03:29 AM
பொம்மலாட்டத்தில்
பொம்மைகள் எத்தனையிருந்தாலும்
ஆட்டுவிப்பவனின்....
விரலியக்கப்படியே ஆடும்...!
உலகத் தீவிரவாதிக்கு...
இன்னுமோர் முகமூடி... ஓபாமா.

பாபு
06-11-2008, 06:35 AM
அப்படியே ஒரு கவிதையும் கொடுத்திருந்தா
உங்களுக்கும் சபாஷ்!! சொல்லியிருப்போமில்ல?

சொல்லிட்டாப் போச்சு....

மாளிகை வெள்ளையாகவே
இருக்கட்டும் !
இனி
ஆள்பவர்கள்
நாமாயிருக்கட்டும் !!

வெற்றி
கொடி கட்டிப்
பறக்கட்டும் !
நம் வெள்ளை மனம்போல்
எங்கும் அமைதி
நிலவட்டும் !!

ஜெயாஸ்தா
06-11-2008, 06:44 AM
நாரதரின் சார்பாக நான் உங்களுக்கு 'சபாஷ்' சொல்லிவிடுகிறேன். 'சபாஷ் பாபு சபாஷ்'..! எளிய தமிழில் அருமையான கவிதை.

shibly591
06-11-2008, 08:15 AM
பராக் ஒபாமா..
பராக் பராக்

கறுப்புச்சூரியனின் புதிய விடியலில்
வெள்ளை வானம் வெளுக்கிறது
வெள்ளைத்தோலின் ஆணவச்சவால்கள்
மாலை நிழலாய் கறுக்கிறது

கனவு கண்டான் மாட்டின் லூதர்
கறுப்பன் ஆட்சி விரைவில் என்று..
கண்ட கனவு பலிக்கும் நாளில்
நீதி தழைக்கும் கோசம் இன்று..

பராக் ஒபாமா..
பராக் பராக்

சிவா.ஜி
06-11-2008, 09:31 AM
கவிதை மிக அருமை ஷிப்லி. வார்த்தைகள் என்னை வசப்படுத்திவிட்டது. வாழ்த்துகள்.

தீபா
06-11-2008, 09:41 AM
ஒரு கருப்பு
வெள்ளையில் அமர்ந்து
நிறங்களை ஆளப்போகிறது.

சிவப்பைக் கண்ட பச்சை
இனி
வெள்ளை மட்டுமே காணட்டும்
இந்த கருப்பால்..

நிறங்கள் குழைந்து
ஒன்றாகட்டும்

நிறங்களற்ற நிறமொன்று
நிரந்தரமாய் உருவாகட்டும்..

பிகு :
சிவப்பு = இரத்தம்
பச்சை = உலகம்

சாம்பவி
06-11-2008, 09:43 AM
கனவு கண்டான் மாட்டின் லூதர்
கறுப்பன் ஆட்சி விரைவில் என்று..
கண்ட கனவு பலிக்கும் நாளில்
நீதி தழைக்கும் கோசம் இன்று..


அப்படி என்ன தான் கோபம்
கனவு கண்டது ஒரு தப்பா...
அதற்காக இப்படியா....
பாவம் பிழைத்துப் போகட்டும்..... !!!!

சிவா.ஜி
06-11-2008, 09:44 AM
அபாரம்...!!!!! கலக்கிட்டீங்க தென்றல். மனமார்ந்த பாராட்டுக்கள்.

தீபா
06-11-2008, 09:49 AM
அபாரம்...!!!!! கலக்கிட்டீங்க தென்றல். மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி திரு.சிவா.ஜி.

இந்த பாராட்டு கலகக்காரருக்கே சொந்தம்... :)

ஆதி
06-11-2008, 10:29 AM
இனத்தோலுக்கு உணவு போடும்
பணத்தோல் போர்த்தியவர்களின்
மனத்தோல் உரித்து
மனிதம் மலர்ந்திருக்கிறது..

விலங்கிடப்பட்டவர்கள்
விழிகள் கலங்கிட - இனி
வாழ்க்கை துலங்கிடும்
எனும் நம்பிகையில்
கொண்டாடி களிக்கிறார்கள்
உனது வெற்றியை ..

கென்னியா பெற்ற
புன்னிய பிள்ளையே..
உன் உதயத்தால்
அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல
ஆப்ரிக்க காடுகளிலும்
பொருளாதார இருள் விடியட்டும்..

எல்லைகள் தாண்டி எல்லைகளில்
பிள்ளைகள் தாண்டி பிள்ளைகளால்
பேசப்பட்ட பிரச்சனைகள்
யாவும் முடியட்டும்..

கறுத்த உதடுகள்
இருத்தி கொள்ளட்டும்
நிரந்தர முறுவலை..

சுகந்தப்ரீதன்
06-11-2008, 11:54 AM
எல்லைகள் தாண்டி எல்லைகளில்
பிள்ளைகள் தாண்டி பிள்ளைகளால்
பேசப்பட்ட பிரச்சனைகள்
யாவும் முடியட்டும்.... சாதாரண மனிதமனங்களின் எதிர்பார்ப்புகளை இதைவிட எளிதாய் சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை..!! வாழ்த்துக்கள் ஆதி..!!

ஓவியா
06-11-2008, 04:24 PM
ரொம்ப நாள் கழித்து இந்தே ஏரியா பக்கம் காற்றடிக்க வந்தேன், வாசித்தேன், மகிழ்ந்தேன், மாண்புமிகு அதிபர் ஒபாமாவிற்க்கு வரைந்த கவிதை கோடுகள் அனைத்தும் பிரமாதம்.

பாராட்டுக்கள் மக்களே.....

shibly591
07-11-2008, 10:24 AM
கவிதை மிக அருமை ஷிப்லி. வார்த்தைகள் என்னை வசப்படுத்திவிட்டது. வாழ்த்துகள்.

நன்றி சிவா.ஜி

shibly591
07-11-2008, 10:25 AM
அப்படி என்ன தான் கோபம்
கனவு கண்டது ஒரு தப்பா...
அதற்காக இப்படியா....
பாவம் பிழைத்துப் போகட்டும்..... !!!!

கண்ட கனவு பலித்துவிட்ட ஆனந்தம்...அவ்வளவே..

நன்றி சாம்பவி

சாம்பவி
07-11-2008, 10:29 AM
கண்ட கனவு பலித்துவிட்ட ஆனந்தம்...அவ்வளவே..

நன்றி சாம்பவி

அதே ஆனந்தத்தில் பிழையையும் திருத்திவிடலாமே.....!!!!!

அமரன்
07-11-2008, 10:39 AM
ஆங்கிலத்தின் நடுவில் தனியார் வந்தால் அதைக் கொன்று விடுவது இலங்கையர் வழக்குங்கோ.

சாம்பவி
07-11-2008, 10:42 AM
ஆங்கிலத்தின் நடுவில் ஆர் வந்தால் அதைக் கொன்று விடுவது இலங்கையர் வழக்குங்கோ.


அதற்காக இப்படியா...
இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ.... !!!!!


நல்ல வேளை... என் பெயரில் ஆர் இல்லை.... !!!!!

ஓவியா
07-11-2008, 11:35 AM
அதிபர் ஒபாமாவின் புராணம் போதும் மக்கா :D, இனி ஒரு புதிய படம் நான் போடவா!!!


இதோ, அடுத்த கவிதைகளுக்குண்டான படம்.

http://blogs.seattleweekly.com/buzzerbeater/sumo.jpg

தீபா
07-11-2008, 12:13 PM
அய்யோ
அம்மா
பாவம்!!! :aetsch013:

அக்னி
07-11-2008, 12:43 PM
புதிய பக்கத்திற்காக...


http://blogs.seattleweekly.com/buzzerbeater/sumo.jpg


அய்யோ
அம்மா
பாவம்!!! :aetsch013:
:eek::eek::eek:
ஆஹா...
ஓஹோ...
சூப்பர்...

என்னங்க தென்றல் நம்ம நிலை இப்படியாயிட்டுதே... :aetsch013:

தீபா
07-11-2008, 01:07 PM
புதிய பக்கத்திற்காக...:eek::eek::eek:
ஆஹா...
ஓஹோ...
சூப்பர்...

என்னங்க தென்றல் நம்ம நிலை இப்படியாயிட்டுதே... :aetsch013:

உங்க நிலைன்னா,,,??????

அந்த போட்டாவுல இருக்கிறது நீங்களா?

வாழ்த்துக்கள்!!!!

அமரன்
07-11-2008, 03:33 PM
தீபனின் பதிவையும் அதை ஒட்டி வந்த தென்றலின் பதிவையும் அகற்றியுள்ளேன்.

ஓவியா
07-11-2008, 03:53 PM
துணிந்தவனுக்கு
சுமோ மேடை
ஒரு
பஞ்சு மிட்டாய்...

ஹி ஹி ஹி...

தீபன்
08-11-2008, 02:13 AM
தீபனின் பதிவையும் அதை ஒட்டி வந்த தென்றலின் பதிவையும் அகற்றியுள்ளேன்.
நன்றி.

பாபு
08-11-2008, 03:45 AM
பலம் நம்பிக்கையில் !
தைரியம் மனதில் !
வெற்றி உன் கையில் !!

Narathar
09-11-2008, 04:25 AM
ஆளும் சக்தியாகும் -
அமெரிக்காவில் மட்டுமல்ல..!

நான் உங்களிடமிருந்து
இந்த அர்த்தத்தில் தான் கவிதை
வருமென்பதை எதிர்பார்த்தேன்.......

என் எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை நீங்கள்

வாழ்த்துக்கள்


உலகத் தீவிரவாதிக்கு...
இன்னுமோர் முகமூடி... ஓபாமா.

அப்படி இருக்க கூடாது என்பது தான்
எம்மைப்போன்றவர்களின் ஆதங்கம்!
பொறுத்திருந்துதான் பார்ப்போமெ...
இதுவும் மற்றொரு முகமூடியாவென்று

நன்றி தங்களின் உயிரூட்டலுக்கு


சொல்லிட்டாப் போச்சு....

மாளிகை வெள்ளையாகவே
இருக்கட்டும் !
இனி
ஆள்பவர்கள்
நாமாயிருக்கட்டும் !!


தீபனின் வரிகள் போல
உங்கள் உயிரூட்டத்திலும்
ஒரு உரிமை போராட்டத்தை
கண்டேன்..........

வாழ்த்துக்கள்

இதோ என் சார்பில் ஒரு ஷபாஷ்!!!!
பராக் ஒபாமா..
பராக் பராக்

கறுப்புச்சூரியனின் புதிய விடியலில்
வெள்ளை வானம் வெளுக்கிறது


நன்றி ஷிப்லி உங்கள் கவிதைக்கு......
நிழலுக்கு உயிர் பகுதியில் உங்கள்
கவிதை கண்டு மகிழ்கின்றேன்...

வாழ்த்துக்கள்!


ஒரு கருப்பு
வெள்ளையில் அமர்ந்து
நிறங்களை ஆளப்போகிறது.

இந்த கருப்பால்..

நிறங்கள் குழைந்து
ஒன்றாகட்டும்


நன்றி தென்றலே உங்கள் கவிதைக்கு..
உங்கள் உயிரூட்டலைப்போல அனைவரது
எதிர்பார்ப்பும் அதுதான்....
வழக்கம் போல எதிர்பார்ப்பு
ஏமாற்றத்தில்தான் முடியுமா???

நன்றி உங்கள் கவிதைக்குகென்னியா பெற்ற
புன்னிய பிள்ளையே..
உன் உதயத்தால்
அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல
ஆப்ரிக்க காடுகளிலும்
பொருளாதார இருள் விடியட்டும்..

எல்லைகள் தாண்டி எல்லைகளில்
பிள்ளைகள் தாண்டி பிள்ளைகளால்
பேசப்பட்ட பிரச்சனைகள்
யாவும் முடியட்டும்..
..


ஆதியவர்களே!

தங்கள் உயிரூட்டலில் பொது நலத்துடன்
தாங்கள் எழுதிய இந்த வரிகள்
என்னை மிகவும் சிந்திக்க வைத்தன...

கனவுகள் நனவாகட்டும்.....
எப்போதும் நல்லதையே நினைப்போம்
நல்லது நடக்கட்டும்

நன்றி

Narathar
10-11-2008, 04:10 AM
ஒபாமாவின் நிழலுக்கு உயிரூட்டிய மன்றக்கவிகள்
நம்பிகோபாலன்,
பூர்ணிமா
மதுரை வீரன்
தீபன்,
ஜெயஸ்த்தா,
பாபு,
ஷிப்லி,
தென்றல்,
ஆதி


ஆகியோருக்கு நாரதரின் மனம்கனிந்த பாராட்டுக்கள். உங்களுக்கான இ சன்மானம் கூடிய சீக்கிரமே வந்து சேரும்.........

முதல் பின்னூட்டத்திலேயே திரியை கலப்பாக்கியபாபு, மற்றும்
ஆதி,
ஜெயஸ்த்தா,
சிவா.ஜி,
சாம்பவி,
தென்றல்,
சுகந்தப்ப்ரீதன்,
அமரன்
ஆகியோருக்கும் தொடர் நிழல்தந்த ஓவியாவுக்கும் எனது மனம்கனிந்த நன்றிகள்................

தொடர்ந்து உங்களனைவரது ஆதரவும் இத்திரிக்கு தேவை!!!

Narathar
11-11-2008, 03:50 AM
எங்கே மன்றக்கவிகளே.........
ஓவியா தந்த நிழலுக்கு
உயிரூட்ட யாருமில்லையா?

கவிகளின் பங்களிப்பை எதிர்பார்த்து......

ஓவியன்
11-11-2008, 04:00 AM
ச்சூம்மா
கவிதைக்காகத்தான்
கோவிக்காம
சிரிங்கோ பார்ப்போம்..!!

ஓவியன்
11-11-2008, 04:04 AM
அடி மேல் அடியை
அசராமல் அடித்து
அம்மி(!) நகர்த்தும்
நவ யுக தாவீது..!!

shibly591
11-11-2008, 05:09 AM
மலையை அசைக்கும் துரும்பு
மலையில் ஊரும் எறும்பு
மலையின உடலோ இரும்பு
படத்தில் தெரியுது குறும்பு

Narathar
12-11-2008, 02:32 AM
ஓவியா இட்ட சுமோ நிழலுக்கு
உயிரூட்டலென்னவோ
சுமாராகத்தான் இருக்கின்றது.....
இன்று இரவுவ்ரை பார்த்துவிட்டு
அடுத்த நிழல் தருகின்றேன்....
அதற்குள் சுமோ வீரரை ஒரு கை பாருங்கள்.........

Narathar
14-11-2008, 02:27 AM
அய்யோ
அம்மா
பாவம்!!! :aetsch013::eek::eek::eek:
ஆஹா...
ஓஹோ...
சூப்பர்...இது புதுவகை ஹைக்கூவோ?
நானறியேன்................
நாராயணா!!!!
துணிந்தவனுக்கு
சுமோ மேடை
ஒரு
பஞ்சு மிட்டாய்...

ஹி ஹி ஹி...

ஹா ஹா ஹா..........
இப்படித்தான் எழுதிப்பழக வேணும்!
அதுதான் இந்ததிரியின் நோக்கமே...
அடுத்த படத்துக்கும் கவித தரனும்


பலம் நம்பிக்கையில் !
தைரியம் மனதில் !
வெற்றி உன் கையில் !!

பிடியுங்கள் பாராட்டை
உங்கள் கையில்


ச்சூம்மா
கவிதைக்காகத்தான்
கோவிக்காம
சிரிங்கோ பார்ப்போம்..!!

[COLOR="DarkRed"]அடி மேல் அடியை
அசராமல் அடித்து
அம்மி(!) நகர்த்தும்
நவ யுக தாவீது..!!

சிரிக்க என்ன இருக்கு
சிந்திக்கவல்லவா
விஷயமிருக்கு உங்க*
ச்சூம்மா..... கவிதையில்


மலையை அசைக்கும் துரும்பு
மலையில் ஊரும் எறும்பு
மலையின உடலோ இரும்பு
படத்தில் தெரியுது குறும்பு

உங்கள் வரிகளோ கரும்பு
தினமும் இத்திரியை விரும்பு
வருது புன்னகை அரும்பு

ஹா ஹா..........
எப்பிடி?
நாங்களும் எழுதுவோமில்ல!!

நாராயணா!!!!


கவி????!!!!! :lachen001: எழுதிய அனைவருக்கும் நன்றி
உங்களுக்கான இ பணம் சீக்கிரமே வந்து சேரும்!
இனி அடுத்த நிழலுக்கு போவோமா?

Narathar
14-11-2008, 05:42 AM
இதோ அன்பு சொந்தங்களே..........
உங்கள் கவிதை உயிரூட்டலுக்காக*
அடுத்த நிழல் தயாராகிவிட்டது!!!!

http://img.photobucket.com/albums/v432/narathar/NU.jpg

எங்கே இந்த நிழலை பார்த்தவுடன்
உங்கள் மனதில் நிழலாடும் வார்த்தைகளுக்கு
உயிர்கொடுங்கள்............
அது கவிதையாக உருவெடுக்கட்டும்.....!

தீபா
14-11-2008, 08:03 AM
எங்கேங்கோ சென்று நின்றது
வார்த்தைகளால் கட்டப்பட்ட கவிதை

திறமையானவர்களிடம்,
பணக்காரர்களிடம்
ஏழைகளிடம்,
நண்பர்களிடம்

ஒவ்வொருவரும்
ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்
அனைவரும்
ஒதுக்கவே பார்த்தார்கள்.

பசியால் வாடியது கவிதை

பின் துவண்டு கிடந்த ஓர்நாளில்
மன்றத் தாய் அள்ளியெடுத்தாள்.

கவிதை பிழைத்துக் கொண்டது.

Narathar
15-11-2008, 02:14 AM
நன்றி தென்றல் உங்கள் கவிதை உயிரூட்டலுக்கு!

ஆதவா
17-11-2008, 12:00 PM
என்ன இது?

இரண்டு நாட்களாக இப்பகுதி
வரண்டு போய் நிற்கிறதே!
திரண்டு வாருங்கள் கவிஞர்களே

சுருண்டு கிடக்கும் இப்பகுதிக்கு
விருந்து தாருங்கள்

Narathar
18-11-2008, 03:08 AM
சுருண்டு கிடக்கும் இப்பகுதிக்கு
விருந்து தாருங்கள்

முதலில் உங்கள் கவிதையால் இப்பகுதியில் ஒரு விருந்து வையுங்கள்

அமரன்
18-11-2008, 07:40 AM
வீதியில் விழுந்து கிடந்தவன் மீதேறி
மெதுவாகச் சென்றன
வீதி விடங்கர்கள் வாய்ச்சங்கரங்கள்.

நெஞ்சத்தராசில் வைத்து
அவர்கள் அளந்த ஞாயங்களால்
பாறையாகிப் போயின
மனங்களும் மனிதாபிமானங்களும்.

பாறைகளோ உயிர் பெற்றன..

சிவா.ஜி
18-11-2008, 10:13 AM
எவனோவின் எச்சத்தில்
எவளோ விட்டுச் சென்ற மிச்சத்தை
அள்ளி அரவணைக்கும்
தாய்மையின் உச்சத்தை
எண்ணி நெகிழ்கிறேன்
மெய் நேசமின்னும் மிச்சமிருப்பதை
கண்டு மகிழ்கிறேன்...!!!

Narathar
18-11-2008, 03:27 PM
பாறையாகிப் போயின
மனங்களும் மனிதாபிமானங்களும்.

பாறைகளோ உயிர் பெற்றன..

பாறையாய்ப்போன மனிதாபிமானத்தையும்
உயி பெற்ற பாறைகளும்.............

மிக்க அழகாக வடித்திருக்கின்றீர்கள்

நன்றி....... நீண்டநாட்களுக்கு பிறகு இங்கு கவிதை தந்ததற்கு


தாய்மையின் உச்சத்தை
எண்ணி நெகிழ்கிறேன்
மெய் நேசமின்னும் மிச்சமிருப்பதை
கண்டு மகிழ்கிறேன்...!!!


தங்களின் தாயுணர்வுக்கவிதையை கண்டு
நானும் நெகிழ்கின்ரேன் சிவா.ஜி இன்னுமின்னும்
எழுதுங்கள்

நன்றி உங்கள் கவிதைக்கு..........

அக்னி
18-11-2008, 07:48 PM
தொப்புள் கொடியறுத்த
உதிரத்தின் ஈரம்கூட
இன்னமும் காயவில்லை.
இதுவரை சுமந்தது
அதற்குள் சுமையானதோ?

உற்றுப்பார்...
அவை ஏந்தும் கரங்களல்ல,
ஏந்திய உன் கரங்களின் நிழல்.
இதுவரை உயிர்கொடுத்தது,
இதற்குள் புதைக்கத்தானோ?

அமைதியான இந்த அதரங்கள்
கதறும்போது,
கட்டும் கொங்கைகள்
உனக்கும் வலியுணர்த்தும்...
தாய்மை நெறியுணர்த்தும்...

வசீகரன்
19-11-2008, 09:50 AM
நீண்ட நித்திரை கொண்டனையோ...
நெடிய துயில் கண்டனையோ...
நினைவுகள் அறுந்து செல்ல
நித்தியமாக நிறைந்தனையோ...

கொடியோர் கோலோச்சும் உலகமிது
எனவெண்ணியே..
இருள் உலகினை மீண்டும் சென்றனையோ...

குண்டுகளும் யுத்தங்களும் நிகழ்ந்தேறும்..
நிலம் காண பிடிக்காமல் கண் மூடி கவிந்தனையோ...

குருதியும்.. கோரமும் கொண்டு விளங்கிய
கொடுங்கோல் உலகின் வாசம் பிடிக்காமல்
மெய் துறந்து சரிந்தனையோ...

புன்னகைக்க பூக்கள் இங்கில்லை என கண்டு
பூவுலகம் கொண்டனையோ...
பூமழையில் நனைந்து விளையாடிடா
நயம்கொண்டு...
அமிலமழை வருஷிப்பதை காணபிடிக்காமல்
காற்றோடு கலந்தனையோ...

பயிர் செய்யும் நிலமெல்லாம் வறண்டு
வெகுண்டு பிளந்து வனப்பிழந்து
குருதியுறைந்து கிடப்பது கண்டு மடிந்தனையோ...

மானே... தேனே... மயிலே.. என் தனையே...

தாலாட்டிடா கைஏந்தி நிற்கின்றேன்
தாய் இவள்.. உயிரறுத்து உறங்குகிறாயே என் கண்ணே...

ஈன்றேடுத்த தாய்ப்பாசம் கண்ணீருடன்
கரைந்து வழிகிறதடா..
எழுந்து என்னை ஆரவணைக்க மாட்டாயா...

இந்த வேதனைத்தாயின் கண்ணீரை
கைகொண்டு துடைக்கமாட்டாயா..
என் செல்வமே ஏனடா இந்த நீண்ட உறக்கம்...!

மதுரை மைந்தன்
19-11-2008, 10:13 AM
பிள்ளைக்கு அன்னை நிழல்
அன்னைக்கு பிள்ளை நிஜம்
பிள்ளைக்கு அன்னை மடி மஞ்சம்
அன்னைக்கு பிள்ளையுடன் தஞசம்
தன்னுடலிலிருந்து பிரிந்த பிள்ளை
உயிருடன் ஒன்றிடும் அன்னை