PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!Pages : 1 2 3 [4] 5 6 7 8

கண்மணி
19-07-2008, 04:26 AM
கவிஞர்களுக்கு வயசாகாது தீபன். உள்ளத்தில அவங்க எப்பவுமே இளைஞராத்தான் இருப்பாய்ங்க..

meera
19-07-2008, 06:21 AM
நான் வழிமொழிகிறேன்.

என்ன பெயர் வைக்க?? ம்ம்ம் கடவுளே மகுடம் சூட்ட மனதில் ஒன்னுமே வர மாட்டேங்கிறதே!! எத்தானையோ பேருக்கு பட்டம் வழங்கிவிட்டேன் ஆனால் இந்த கண்மணியக்காவிற்க்கு ஒரு பட்டமும் என் மனதிற்க்கு புலப்படவில்லையே!!!

யாராவது ஒரு நல்ல பட்டமா சிப்பாரிசு செய்யவும். :)

மன்னிக்க, இப்பவெல்லாம் இங்கே என்னால் எதுவுமே யோசிக்க முடியவதில்லை, ஏதோ ஒன்றை தொலைத்ததுபோலவே உள்ளது. எழுத்தே வரமாட்டேங்கிறது. :traurig001:

நாரதர் அண்ணாவின் எண்ணம் எனக்கும் பிடித்திருக்கிறது. இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

அப்பறம் நம்ம கண்மனி அக்காவுக்கு எனக்கு தெரிஞ்ச பட்டம்னா:icon_hmm::icon_hmm: விமர்சன வித்தகி:huepfen024:. ஓவியாக்கா நல்லாருக்கா பாருங்க.

தீபன்
19-07-2008, 08:24 AM
சேர்ந்தே பயணிக்கும்
சுவடுகள்,
அலை கொள்ளும் போதும்
தொடருமா...?
அல்லது,
தனித்துப்போன
வலம்புரிச் சங்காய்
சுடுமணலில் தகிக்குமா..?

Keelai Naadaan
19-07-2008, 10:06 AM
அப்பறம் நம்ம கண்மனி அக்காவுக்கு எனக்கு தெரிஞ்ச பட்டம்னா:icon_hmm::icon_hmm: விமர்சன வித்தகி:huepfen024:. ஓவியாக்கா நல்லாருக்கா பாருங்க.

நான் வழி மொழிகிறேன்.
விமர்சன வித்தகி - கண்மணி அவர்களுக்கு எற்ற பட்டம் தான்.

சிவா.ஜி
19-07-2008, 10:50 AM
கையைக் குத்திவிட்டதா கண்ணா...?
விட்டெறிந்து விடு..
வலி மறைய வேடிக்கை காட்டுகிறேன் வா
விலை மதிப்பானது உனது வலி..
வலம்புரியைவிட...

ஓவியா
19-07-2008, 11:02 AM
அனைவருக்கும் நன்றி

1. மீரா - விமர்ச்சனக வித்தகி
2. சிவாஜி - நக்கீரப் பெண்மணி


எனது ஓட்டு, விமர்சக வித்தகிதான், வேண்டுமென்றால் அள்ளியக்காவிற்க்கு நக்கீரப் பெண்மனி நன்கு பொருந்தும், அவருக்கு கொடுத்து விடலாம்.


வெறு யாராவது எதேனும் பட்டம் கொடுக்க ஆசைப்பட்டால், சொல்லுங்கள். திரியின் உரிமையாளர் நாரதர் அண்ணா வந்ததும் முடிவு செய்து விடலாம்....:)

Keelai Naadaan
19-07-2008, 11:17 AM
கையைக் குத்திவிட்டதா கண்ணா...?
விட்டெறிந்து விடு..
வலி மறைய வேடிக்கை காட்டுகிறேன் வா
விலை மதிப்பானது உனது வலி..
வலம்புரியைவிட...

பிரமாதம் சிவா.ஜி. நல்ல கற்பனை

சிவா.ஜி
19-07-2008, 11:20 AM
மிக்க நன்றி கீழைநாடன்.

சிவா.ஜி
19-07-2008, 11:22 AM
அனைவருக்கும் நன்றி

1. மீரா - விமர்ச்சனக வித்தகி

எனது ஓட்டு, விமர்சக வித்தகிதான்,


எனது ஓட்டும் விமர்சன வித்தகிக்குத்தான்.

நம்பிகோபாலன்
20-07-2008, 08:05 PM
இருமணம் சேர்ந்து
இருகரங்கள் இணைந்து
நீல வானில்
கடற்கரை அழகை
ரசித்து
கடலோடு கலக்க
இரண்டு இதயங்கள்
காலடி சுவடை
விட்டு செல்கின்றன
இவர்களின் காதலை
விட்டு சென்ற
வலம்புரி
உணர்த்தட்டும் வலியுடன்...

கண்மணி
21-07-2008, 01:41 AM
சேர்ந்தே பயணிக்கும்
சுவடுகள்,
அலை கொள்ளும் போதும்
தொடருமா...?
அல்லது,
தனித்துப்போன
வலம்புரிச் சங்காய்
சுடுமணலில் தகிக்குமா..?

நல்ல கேள்வி.. அலைகளும் சற்று அடங்கித்தான் போகும்.. அன்பினைக் கண்டால்..

தனித்த வலம்புரி.. தன்சுவடும் உடன் பதிக்க விழைந்ததோ!!

கண்மணி
21-07-2008, 01:51 AM
கையைக் குத்திவிட்டதா கண்ணா...?
விட்டெறிந்து விடு..
வலி மறைய வேடிக்கை காட்டுகிறேன் வா
விலை மதிப்பானது உனது வலி..
வலம்புரியைவிட...

விலை மதிப்பானது உனது வலி.. :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::confused::confused:

என்னாச்சு சிவாஜியண்ணா? விலை மதிப்பானது வலின்னா பளார் பளார்னு அங்கேயே கண்ணத்தில் நாலு அடி அடிச்சிருங்களேன்.. ஏன் கடல்ல தள்ளப் பாக்கறீங்க...?

கண்மணி
21-07-2008, 01:55 AM
இருமணம் சேர்ந்து
இருகரங்கள் இணைந்து
நீல வானில்
கடற்கரை அழகை
ரசித்து
கடலோடு கலக்க
இரண்டு இதயங்கள்
காலடி சுவடை
விட்டு செல்கின்றன
இவர்களின் காதலை
விட்டு சென்ற
வலம்புரி
உணர்த்தட்டும் வலியுடன்...

காதல்?? அன்புன்னே வச்சுக்குவோம்..

கொஞ்சம் பெரியவங்களா இருந்தா ஓகே..

அந்த வலம்புரிச் சங்கோட அப்பா அம்மாதான்
அங்க அழுவறதோன்னு
தொலைஞ்சு போனச் சங்கின்
குடும்பத்தைத் தேடக் கூட இருக்கலாமில்லையா?


கட்டி வைத்த மணல் வீட்டைக்
கலைத்துச் சென்ற அலையை
நாக்கை பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்கவும் போகலாம் இல்லையா

ஆதி
21-07-2008, 11:47 AM
வானமும் பூமியும்
முத்தமிட்டு கொள்ளும்
அதிசய கோட்டை நோக்கி
நிகழ்கிறது இந்த பயணம்..

படகோ பாய்மரமோ
பாதையோ இல்லையென்றாலும்
ஏதோ ஒரு நம்பிக்கையின்
உந்தலில் தொடர்கிறது
இந்த பயணம்..

சிலருக்கு
இந்த நம் பயணம்
பேராசையாக தோன்றலாம்
தேவையற்றதாக தெரியலாம்
எனினும்,
எல்லா மனிதனும் தேடும்
தேடலின் விடையாகவும்
இது அமையலாம்..

ஒரு வேளை
இந்த பயணம்
முடியாமலே முற்றினாலும்
வருங்காலத்தின் தேடல்
நம்முடைய
இறுதி பாத சுவடுகளில்
இருந்து துவங்கும்..

சுஜா
21-07-2008, 12:02 PM
நன்றி கண்மணி அக்கா

இதயம்
21-07-2008, 12:03 PM
கண்மணிகளே..
நீங்களும் போகாதீர்கள்
கடலை நோக்கி..!
கண்டவர்களும்
கடலுக்குள்
புகுந்ததில்
கடலுயிரினங்களெல்லாம்
கரையேறுகின்றன.
தனக்கு விதித்ததை மட்டும்
தக்க வைக்கும் குணத்தை
தரங்கெட்ட மனிதன்
எப்போதுணர்வான்...?

நம்பிகோபாலன்
21-07-2008, 12:18 PM
கண்மணி அவர்களுக்கு,
வலம்புரி, காதலின் வலியை உணர்த்துவதாய் குறிப்பிட்டேன்.( காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல )மேலும் சுனாமி கண்ணோட்டத்தில் நான் பார்க்கவில்லை.
தவறு இருப்பின் திருத்திகொள்கிறேன்.

சுஜா
21-07-2008, 12:32 PM
கடலுக்குள் யாரவன் மூடன்


கடலுக்குள் யாரவன் மூடன்,
கடல் கொண்ட சோழபுரத்தின்
கிழட்டு சிற்ப்பியாய் இருப்பானோ?!.
ஏன் ?
இல்லை .......பார் ஒரு பளுங்கி
சிற்ப்பத்தை செதுக்கி கரையில்
எறிந்திருக்கிறான் .

போனமுறை அவன் செதுக்கியபோது ,
சிதறிய துண்டு தான் இந்த கடல் கூத்தாடியதற்கான காரணம் .

வா.......அந்த கிழவனின் உளிகளை
பறித்து வந்துவிடலாம் .

இனிமேலாவது கடல் நிம்மதியாய் ,
உறங்கட்டும்

கண்மணி
21-07-2008, 12:36 PM
கண்மணி அவர்களுக்கு,
வலம்புரி, காதலின் வலியை உணர்த்துவதாய் குறிப்பிட்டேன்.( காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல )மேலும் சுனாமி கண்ணோட்டத்தில் நான் பார்க்கவில்லை.
தவறு இருப்பின் திருத்திகொள்கிறேன்.

அது புரிகிறது நம்பி.. நானும் சுனாமியைக் குறிப்பிடவில்லை.. தவறு என்பதில்லை. படத்திற்குப் பொருந்தா திசையில் கவிதை செல்வதை மட்டுமே குறிப்பிட்டேன்.

குழந்தைகளின் மணல்வீடு - அலைகளினால் கரைக்கப் பட்டிருக்கலாம்.. என்ற ஒரு சாத்தியக்கூறைத்தான் குறிப்பிட்டேன்.

கண்மணி
21-07-2008, 12:41 PM
வானமும் பூமியும்
முத்தமிட்டு கொள்ளும்
அதிசய கோட்டை நோக்கி
நிகழ்கிறது இந்த பயணம்..

படகோ பாய்மரமோ
பாதையோ இல்லையென்றாலும்
ஏதோ ஒரு நம்பிக்கையின்
உந்தலில் தொடர்கிறது
இந்த பயணம்..

சிலருக்கு
இந்த நம் பயணம்
பேராசையாக தோன்றலாம்
தேவையற்றதாக தெரியலாம்
எனினும்,
எல்லா மனிதனும் தேடும்
தேடலின் விடையாகவும்
இது அமையலாம்..

ஒரு வேளை
இந்த பயணம்
முடியாமலே முற்றினாலும்
வருங்காலத்தின் தேடல்
நம்முடைய
இறுதி பாத சுவடுகளில்
இருந்து துவங்கும்..


விட்டுச் செல்வது பாதச் சுவடுகள்
இருக்குமா அழியுமா என்ற கவலையின்றி
பயணம் எங்கு தொடங்கியது?
தெரியாது
பயணம் எங்கு முடியும்?
தெரியாது
ஒற்றைச் சங்குகளாய்
சின்னக் கவனச் சிதறல்கள்
ஆனால்
பயணம் நிறபதில்லை
அதன் இலக்கை நோக்கி
மறுபடியும் பயணம்
பயணம்
பயணத்தின் குறிக்கோள்
பயணம் மட்டுமே!!!நல்ல கவிதை ஆதி..

கண்மணி
21-07-2008, 12:46 PM
கண்மணிகளே..
நீங்களும் போகாதீர்கள்
கடலை நோக்கி..!
கண்டவர்களும்
கடலுக்குள்
புகுந்ததில்
கடலுயிரினங்களெல்லாம்
கரையேறுகின்றன.
தனக்கு விதித்ததை மட்டும்
தக்க வைக்கும் குணத்தை
தரங்கெட்ட மனிதன்
எப்போதுணர்வான்...?

முதலிரு வசனங்கள் குழந்தைகளை நோக்கி
மூன்றாவது வசனம்????

குழந்தைகளுடன் பேசும் பொழுது மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியது வன்மையான வார்த்தைகளை உபயோகித்தல் கூடாது.. கவிதைகளிலும் அதுதான் அழகு.

கண்மணி
21-07-2008, 12:52 PM
கடலுக்குள் யாரவன் மூடன்கடலுக்குள் யாரவன் மூடன்?
கடல் கொண்டச் சோழபுரத்தின்
கிழட்டுச் சிற்பியாய் இருப்பானோ?!.

ஏன் இல்லை .?
பார் ஒரு
பளிங்கு சிற்பத்தைச் செதுக்கி
கரையில் எறிந்திருக்கிறான் .

போனமுறை அவன் செதுக்கியபோது
சிதறிய துண்டுதான்
இந்தக் கடல் கூத்தாடியதற்கான
காரணம் .

வா.......
அந்தக் கிழவனின் உளிகளை
பறித்து வந்துவிடலாம்

இனிமேலாவது கடல்
நிம்மதியாய் உறங்கட்டும்

குழந்தைத்தனமான கவலைதான் சுஜா!
அழகானச் சிந்தனை.. சில பிழைகளைத் திருத்தி, வரியமைப்பைச் சற்று சரி செய்திருக்கிறேன்.

இப்படி இருந்தால் இன்னும் அழகாய் இருக்குமெனத் தோன்றுகிறது!!!
தவறாகப் பட்டால் மன்னிக்கவும்.

அமரன்
21-07-2008, 12:53 PM
தொலைதூரம் நோக்கி
இருவரது பயணம்..
பிரிய மனமின்றி
அருகருகே சுவடுகள்...

இனி
கிடைக்குமோ கிடைக்காதோ..
ஒருகணமாவது திரும்பிப்பாருங்கள்
என்று
தவமிருக்கிறதோ வலம்புரி!

கண்மணி
21-07-2008, 01:00 PM
தொலைதூரம் நோக்கி
இருவரது பயணம்..
பிரிய மனமின்றி
அருகருகே சுவடுகள்...

இனி
கிடைக்குமோ கிடைக்காதோ..
ஒருகணமாவது திரும்பிப்பாருங்கள்
என்று
தவமிருக்கிறதோ வலம்புரி!

வலம்புரியின் தவம்
பலித்து விட்டிருக்கிறதே அமரன் அண்ணா
கால் தடங்களைப் பாருங்கள்
வலம்புரியைத் திரும்பிப் பார்த்து புரியும்..:D:D:D

சுஜா
21-07-2008, 01:01 PM
குழந்தைத்தனமான கவலைதான் சுஜா!
அழகானச் சிந்தனை.. சில பிழைகளைத் திருத்தி, வரியமைப்பைச் சற்று சரி செய்திருக்கிறேன்.

இப்படி இருந்தால் இன்னும் அழகாய் இருக்குமெனத் தோன்றுகிறது!!!
தவறாகப் பட்டால் மன்னிக்கவும்.

நன்றி கண்மணி அக்கா .

திருத்துவதில் தவறேதுமில்லையே .
ஏன் சங்கடம்......................................................?

கண்மணி
22-07-2008, 04:32 AM
இந்தச் சுற்றிற்கானப் பணமுடிப்பு பரிசு பெறுபவர்கள்

அமரன் தவம்
சுஜா கடலுக்குள் யாரவன் மூடன்
இதயம் போகாதீர்கள்
ஆதி பயணம்
நம்பிகோபாலன் நினைவுச் சின்னம்
சிவா.ஜி மதிப்பு
தீபன் தொடருமா?

அடுத்தச் சுற்றிற்கானப் படத்தினைக் கொடுங்கலாமே!!!

இதயம்
22-07-2008, 05:41 AM
முதலிரு வசனங்கள் குழந்தைகளை நோக்கி
மூன்றாவது வசனம்????

குழந்தைகளுடன் பேசும் பொழுது மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியது வன்மையான வார்த்தைகளை உபயோகித்தல் கூடாது.. கவிதைகளிலும் அதுதான் அழகு.
கண்மணி,
கவிதைகளுக்கான எல்லைகள் மிக விசாலமானவை. அந்த அதிகபட்ச விசாலம் கவிதையின் சரியான விலாசமும் கூட.! அதனால் தான் ஒரு காதலனை அவன் காதலியின் முகத்தை கவிதையில் நிலவோடு ஒப்பிடச்சொல்கிறது. கவிதைக்கான இந்தப்படத்தில் குழந்தைகள் இருக்கலாம். ஆனால், நான் சொல்லும் கருத்து குழந்தைகளுக்கானது அல்ல, நான் குறிப்பிட்ட "தரங்கெட்ட" மனிதர்களுக்கானது..! குழந்தையை போல் ஒன்றும் அறியாதவர்களாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு தவறுகளை செய்பவர்கள் பற்றி, ஒன்றுமறியா குழந்தைகளிடம் பேசுவதாக இக்கவிதையை படித்தால் எந்த முரண்பாடும் தெரியாது. எந்த குழந்தையும் இங்கே வந்து இக்கவிதையை படிக்கவோ, இதன் கருத்தை புரியவோ போவதில்லை. "தரங்கெட்ட" என்ற வார்த்தை உங்கள் பார்வையில் வன்மையானது என்றால் அதை விட கேவலமான மனிதப்பிறவிகளை எப்படி விளிக்க..?

கவிதைக்கு அழகு மென்மையான வார்த்தைகள் என்று யார் சொன்னது..? வெகுஜனங்களை புரட்சியாளர்களாக மாற்றும் தீப்பிடித்த வார்த்தைகள் அழகில்லையா..? அவை ஆராதிக்கப்பட்டதில்லையா..?

கண்மணி
22-07-2008, 06:47 AM
கண்மணிகளே..
நீங்களும் போகாதீர்கள்
கடலை நோக்கி..!
கண்டவர்களும்
கடலுக்குள்
புகுந்ததில்
கடலுயிரினங்களெல்லாம்
கரையேறுகின்றன.
தனக்கு விதித்ததை மட்டும்
தக்க வைக்கும் குணத்தை
தரங்கெட்ட மனிதன்
எப்போதுணர்வான்...?

கண்மணிகளே! என்ற விளிச்சொல்.. படத்தில் குழந்தைகள். அப்படியானால் குழந்தைகளிடம் சொல்வதாகத்தானே அர்த்தம். வேறு யாரிடமோ சொல்வது போல இல்லையே! குழந்தைகளை விளித்து விட்டு வேற யாரிடமோ பேசுவதா?

கவிதைக்கு விசாலம், விலாசம் எல்லாம் உண்டுதான். என் விமர்சனத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். பண்பாட்டினைக் குழந்தைகள் நம்மிடமிருந்துதான் கற்றுக் கொள்கின்றன.

குழந்தைகளுடன் பேசும் பொழுது வன்சொற்களைத் தவிர்த்தால் அது அவர்களுக்கு பழக்கமாகாது. அடுத்தவரிடம் பேசும் பொழுது அச்சொற்களை உபயோகிக்காது. அன்புடன் பேசக் கற்றுக்கொள்ளும்.

கவிதையே ஆனாலும், குழந்தைகளை நோக்கிப் பாடுவதாக இருந்தாலும் அதுதான் நல்லது.

புரட்சிக் கவிதைகள், தீப்பிடிக்க வைப்பவை பகுதியில் சேர்க்கும் அளவிற்கு எழுதி இருக்கிறீர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தால் மகிழ்ச்சி..

உடைத்தே சொல்கிறேனே! கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் என் குழந்தையிடம், இப்படி ஒருவர் கவிதை சொன்னால் என்ன செய்வேனோ அதைத்தான் இங்குச் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்.
இல்லையில்லை என்ன செய்வனோ அதைவிடக் கம்மியாச் சொல்லி இருக்கேன். இது என்னுடைய உணர்வு..அதனாலதான் கவிதையை விமர்சிக்கவில்லை.

இதயம்
22-07-2008, 07:39 AM
கண்மணிகளே! என்ற விளிச்சொல்.. படத்தில் குழந்தைகள். அப்படியானால் குழந்தைகளிடம் சொல்வதாகத்தானே அர்த்தம். வேறு யாரிடமோ சொல்வது போல இல்லையே! குழந்தைகளை விளித்து விட்டு வேற யாரிடமோ பேசுவதா?

உங்களின் கோணம் தான் உலகின் கோணம் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது (நீங்கள், உங்கள் குழந்தை என்ற சிறு வட்டம்). அதனால் தான் என் கோணத்தை ஏற்க தயங்குகிறீர்கள். மனிதனின் தீய குணத்தை சொல்லும் இடத்தில் குழந்தை வளர்ப்பை கொண்டு வந்து கவிதைக்குள் திணிக்கும் மனப்பாங்கு ஏன் என்று எனக்கு புரியவில்லை. கருத்தை, நீதியை சொல்ல கவிதைக்குள் உயர்திணை, அஃறிணைகள் எந்த வடிவிலும் வரலாம். ஆனால், அநாகரீகம் இல்லாது இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

என் கவிதையின் கருத்து என்னவென்றால் எவரும் தனக்கு சம்பந்தமில்லாதவற்றை துன்புறுத்தி அதன் இயல்பை கெடுக்க கூடாது என்பதும், கெடுப்பதில் ஆர்வம் உள்ள மனிதன் அதை எப்போது உணர்வான் என்பதும் தான். இதை ஓடி விளையாடு பாப்பா பாணியில் குழந்தைகளுக்கு சொன்ன நீதி இது. ஓ.வி.பா பாட்டில் குழந்தைகளை பற்றி மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும் அந்த கருத்துக்கள் குழந்தைகளுக்கு மட்டுமானவையா..? எல்லா வகையான மனிதர்களுக்கும் பொருந்துமே.! கவிதைகளை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. என்னைப்பொருத்தவரை வளர்ந்தவர்களை விட குழந்தைகள் நல்லவர்கள், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது அவர்களிடம் இருக்கிறது. ஒருவேளை உலகில் "தரங்கெட்ட" மனிதர்கள் இல்லாமலோ, அவர்கள் மற்றவர்களை துன்புறுத்தும் நிலை இல்லாமலோ இருந்திருந்தால் என் கவிதையின் கருத்து பொய்யாகி இருக்கும். அப்போது உங்கள் விமர்சனம் ஏற்க கூடியதாக இருந்திருக்கும்.

"என் கவிதைகள் புரட்சிகரமானவை, தீப்பிடித்த கருத்துக்கள் கொண்டவை" என்று நான் பதிவில் குறிப்பிடாத பொழுது ஏன் உங்களிடமிருந்து இந்த முரண்பட்ட கருத்து? கவிதைகள் என்பவை வெறும் சொல் அழகுக்காக மட்டுமல்ல, சமூக அவலங்களுக்காக கூட படைக்கப்படுகின்றன.

செந்தமிழரசி
22-07-2008, 07:53 AM
//எந்த குழந்தையும் இங்கே வந்து இக்கவிதையை படிக்கவோ, இதன் கருத்தை புரியவோ போவதில்லை. "தரங்கெட்ட" என்ற வார்த்தை உங்கள் பார்வையில் வன்மையானது என்றால் அதை விட கேவலமான மனிதப்பிறவிகளை எப்படி விளிக்க..?//

திரு. இதயம் அவர்களே, படைத்தையும் உங்கள் கவிதையையும் அதற்கு எழுந்த விமர்சனத்தையும், விமர்சனத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலையும் படித்தேன்.. குழந்தைகளிடம் பேசும் போது இருக்க வேண்டிய மென்மை கவிதையில் துளியுமில்லை.. அதைவிட வேதனையான ஒன்று நீங்கள் பயன் படுத்தி இருக்கும் சொல் "தரங்கெட்ட".. ஒரு குழந்தைக்கு இப்படிதான் சொல்லி தருவீர்களா ? நல்லதை பார்க்க நல்லதை பேச கற்றதாருங்கள் நல்லவைகள் பூமியில் நிறையும்.. அல்லதையும் அல்லாதவரென்றும் விமர்சிக்கும் முன்பு.. ஏசுவின் வசனங்களை ஞாபகம் வையுங்கள்.. "பாவமே செய்யாத ஒரு முதல் கல் எறியட்டும்"

உங்கள் மனம் நோகும் படி என் கருத்திருந்தால் பொறுத்தருள்க..

இதயம்
22-07-2008, 08:05 AM
திரு. இதயம் அவர்களே, படைத்தையும் உங்கள் கவிதையையும் அதற்கு எழுந்த விமர்சனத்தையும், விமர்சனத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலையும் படித்தேன்.. குழந்தைகளிடம் பேசும் போது இருக்க வேண்டிய மென்மை கவிதையில் துளியுமில்லை..
சகோதரி..!
"தரங்கெட்ட" என்ற வார்த்தை நிச்சயம் மென்மை இல்லை..! அதை நான் கவிதையில் அதுவும் குழந்தைகளிடம் கையாண்டதற்கு உங்களிடமிருந்தும், கண்மணியிடமிருந்தும் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதைக்கும், அதில் வரும் வார்த்தைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று குழம்புகிறேன். குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள் தான். ஆனால், அவர் தவறு செய்தால் கடுமையான வார்த்தைகளை சொல்லி கண்டிக்கிறோம், சில நேரங்களில் அடிக்க கூட செய்கிறோம். அது சரியானதா..? அதை செய்யாத பெற்றோர்கள் உண்டா..? அப்படி செய்தோமானால் அந்த கடுமையும், கண்டிப்பும் அக்குழந்தையை நிந்திக்கவா..? நல்வழி படுத்தவா..? இந்த வார்த்தையையும் அவ்வழியில் எடுத்துக்கொண்டால் என்ன..? அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தீமையை பற்றி சொல்லித்தந்தால் தானே நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான வித்தியாசம் தெரியும்..?

என்னுடைய விரல் சுட்டிக்காட்டுவது என்னைத்தவிர மற்றவர்களை அல்ல, தவறு செய்யும் எல்லா மனிதர்களையும்..!! அந்த வகையில் இங்கே கல்லை எறிய ஆள் இல்லை தான், ஆனால் கருத்தை சொல்லலாம் தானே..?

தீபன்
22-07-2008, 08:15 AM
ஏசுவின் வசனங்களை ஞாபகம் வையுங்கள்.. "பாவமே செய்யாத ஒரு முதல் கல் எறியட்டும்"
அப்படியானால் நாட்டில் நீதித்துறையே இயங்க முடியாதே அரசியாரே...

இங்கு தேவையற்ற சர்ச்சை நடப்பதாகவே எனக்கு படுகிறது. இதயத்தின் கவிதையை அவரின் கோணத்திலிருந்து பார்த்டால் சரியாகத்தான் எனக்கும் தெரிகிறது. கண்மணியின் பார்வையில் பார்த்தால் அதுவும் சரியாகத்தான் இருக்கிறது. கண்மணி, குழந்தைகளை விழித்து கூறுவதால் வன்மையான சொல் கையாளப்பட கூடாதென்கிறார்.
இதயம், குழந்தைகளை விழித்து அதன்மூலம் பெரியவர்களுக்கே கருத்து சொல்லப்படுவதால் வன்மையான சொல்கையளப்படலாமென்கிறார். ஆக, இருவரின் பார்வைக் கோணமும் வேறு. பிறகேன் சர்ச்சை...?
அடுத்த படத்த போடுங்கப்பா...

ஓவியா
22-07-2008, 08:17 AM
//எந்த குழந்தையும் இங்கே வந்து இக்கவிதையை படிக்கவோ, இதன் கருத்தை புரியவோ போவதில்லை. "தரங்கெட்ட" என்ற வார்த்தை உங்கள் பார்வையில் வன்மையானது என்றால் அதை விட கேவலமான மனிதப்பிறவிகளை எப்படி விளிக்க..?//

திரு. இதயம் அவர்களே, படைத்தையும் உங்கள் கவிதையையும் அதற்கு எழுந்த விமர்சனத்தையும், விமர்சனத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலையும் படித்தேன்.. குழந்தைகளிடம் பேசும் போது இருக்க வேண்டிய மென்மை கவிதையில் துளியுமில்லை.. அதைவிட வேதனையான ஒன்று நீங்கள் பயன் படுத்தி இருக்கும் சொல் "தரங்கெட்ட".. ஒரு குழந்தைக்கு இப்படிதான் சொல்லி தருவீர்களா ? நல்லதை பார்க்க நல்லதை பேச கற்றதாருங்கள் நல்லவைகள் பூமியில் நிறையும்.. அல்லதையும் அல்லாதவரென்றும் விமர்சிக்கும் முன்பு.. ஏசுவின் வசனங்களை ஞாபகம் வையுங்கள்.. "பாவமே செய்யாத ஒரு முதல் கல் எறியட்டும்"

உங்கள் மனம் நோகும் படி என் கருத்திருந்தால் பொறுத்தருள்க..


வணக்கம்.

வாருங்கள் செந்தமிழரசி,

இந்த திரிக்கு தாங்கள் போடும் முதல் பின்னுட்டம் இது, வந்ததுமே விமர்சனம் எழுதுகின்றீர்கள்....;)

அப்படியே திரியின் கருவையும் கொஞ்சம் கவனித்தால் நலம்.

உங்கள் கவிதைகளை மன்றத்து மக்கள் வாசித்து மகிழ்ச்சியடைவார்கள்.

நன்றி.

ஓவியா
22-07-2008, 08:21 AM
http://www.fotosearch.com/comp/BDX/BDX375/interracial-couple-holding_~bxp68039.jpg

அடுத்த படம் போட்டாச்சு எல்லோரும் காதலை ஆரம்பிக்கவும் இல்லை இல்லை கவிதையை ஆரம்பிக்கவும்.

இதயம்
22-07-2008, 08:25 AM
அடுத்த படம் போட்டாச்சு எல்லோரும் காதலை ஆரம்பிக்கவும் இல்லை இல்லை கவிதையை ஆரம்பிக்கவும்.
உடனடி நடவடிக்கைக்கு நன்றி தங்கையே..!
(காதல்) கவிதை-னு சொல்றீங்க.. ஆனா படத்தை பார்த்தா இரண்டும் பெண்கள் போல் தெரியுதே..! மக்கள் அப்புறம் நட்பு கவிதை எழுத ஆரம்பிச்சிடுவாங்க..!!!!

ஓவியா
22-07-2008, 08:32 AM
உடனடி நடவடிக்கைக்கு நன்றி தங்கையே..!
(காதல்) கவிதை-னு சொல்றீங்க.. ஆனா படத்தை பார்த்தா இரண்டும் பெண்கள் போல் தெரியுதே..! மக்கள் அப்புறம் நட்பு கவிதை எழுத ஆரம்பிச்சிடுவாங்க..!!!!

சரி. புது படம் போட்டுவிட்டேன்.

இனி
காதல், அன்பு, பாசம், நட்புனு ஆரம்பிக்கலாம்.

இதயம்
22-07-2008, 08:38 AM
சரி. புது படம் போட்டுவிட்டேன்.

இனி
காதல் வாழ்க
காதலர்கள் வாழ்க

ரொம்ப நன்றி ஓவியா.!!

காதல் வாழ்க...
காதலர்கள் வாழ்க..!! (ஹி..ஹி..!!!)

செந்தமிழரசி
22-07-2008, 10:44 AM
சகோதரர் இதயம் அவர்களே, நான் உங்கள் கவிதையையோ அது தாங்கும் கருத்தையோ விமர்சிக்கவில்லை.. நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைதான் விமர்சித்தேன்.. அடிப்பதாலோ திட்டுவதாலோ குழந்தைகள் தவறுகளை திருத்திக்கொள்வதில்லை அறிவியல் சொல்கிறது.. எதை செய்யாதே என்கிறோமோ அதை தான் செய்ய மனம் ஆசைப்படும் ஆன்மீகம் சொல்கிறது.. நல்லைவைகளை பார்க்க குழந்தைகளின் மனதை பழக்கபடுத்துங்கள் என்பதே என் வாதம்..

திரு.தீபன் அவர்களே, 5 க்கும் மேலான வரிகள் பின்னூட்டம் போட்டால் இறுதி வரியை மட்டும் வெட்டி எடுத்து என் பின்னூட்டத்தை நோக்கத்தையே திசை திருப்பிவிட்டது ஞாயமோ ? கண்மணி அவர்களின் கோணம் சரி என்று சொல்லும் உங்களுக்கு கண்மணியின் கோணத்தில் இருந்து என் எண்ணத்தையும் தோய்த்து எழுதிய என் பின்னூட்டம் புரியாமல் போனது எப்படி என்று புரியவில்லை..

தோழி ஓவியா, உங்கள் வரவேற்புக்கு நன்றி.. திரு.நாரதர் முன்பே அழைப்பு விடுத்திருந்தார்.. பணி பளுக்காரணமாக என்னால்தான் திரியில் பங்குகொள்ள முடியவில்லை..

பதிக்கப்படும் கவிதைகளை அகல்ந்து ஆழா ஆராய்ந்து பின்னூட்டம் இட்டு கவிஞர்களை உற்சாகப்படுத்துவதற்கு சகோதரி கண்மணிக்கு என் பாராட்டுக்கள்..

கண்மணி
22-07-2008, 12:04 PM
இதில் பேசுவதில் அர்த்தம் இல்லை

அவர் என்ன எழுதி இருப்பதாய் எண்ணி இருப்பதாய்ச் சொல்கிறாரோ அது வெளிப்படவில்லை. விபரீதமாய் வெளிப்பட்டு விட்டது, அவ்வளவுதான்.

எளியத் தமிழில் விளக்குகிறேன்.

அங்கே போகாதே ராமா!
அவர்களுக்குத் தொல்லை
அடுத்தவர்களுக்குத் தொல்லைதரும் மனிதர்கள் எப்போ திருந்துவாங்களோ!!

இப்போ ராமனையும் சேர்த்து திட்டினாரா? சாதாரணத் தமிழ்படி ஆமாம் திட்டினார். இப்பொழுது கவிதையைப் படித்துப் பார்த்தால் விபரீதம் புரியும்.

கண்மணிகளே..
நீங்களும் போகாதீர்கள்
கடலை நோக்கி..!

அங்கே போகாதே ராமா!

கண்டவர்களும்
கடலுக்குள்
புகுந்ததில்
கடலுயிரினங்களெல்லாம்
கரையேறுகின்றன.

அவர்களுக்குத் தொல்லை!

தனக்கு விதித்ததை மட்டும்
தக்க வைக்கும் குணத்தை
தரங்கெட்ட மனிதன்
எப்போதுணர்வான்...?

அடுத்தவர்களுக்குத் தொல்லைதரும் தரங்கெட்ட மனிதர்கள் எப்போ திருந்துவாங்களோ!!

இதை எழுத நினைத்த என் கைகளைச் சுருக்கிக்கொண்டது தவறோ என்றுப் படுகிறது. எழுத்துக்களில் இருப்பதை மட்டுமே என்னால் புரிந்து கொண்டு விமர்சிக்க முடியும். எண்ணங்களில் இருப்பதை அறிந்து கொள்ளும் அளவிற்கு நான் வளரவில்லை.

கவிதைகளில் வார்த்தைகள் தான் எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றன. ஒரு கேள்விக் குறி, ஒரு புள்ளி இவை கூட அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றன.

என் வட்டம் குறுகியதாக இருக்கலாம், ஆனால் தெளிவானது. கவிதைகளை இன்னார் எழுதியதால் இப்படி இருக்கும் என்றுத் தோராயமாக மதிப்பிட விரும்புவதில்லை.

குழந்தைகளுக்கு எது தீமை என்று சொல்வது பிரச்சனையல்ல..
அதை எப்படிச் சொல்வது என்பது தான் பிரச்சனை.. உங்கள் கோணம் இதுவாக இருக்கும் என்று எண்ணியதால் தான் குழந்தைகளுக்குச் சொல்லும் பொழுது வன்சொல் வேண்டாம் என்றேன்

இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வள்ளுவன் சொன்னதை எண்ணிப் பாருங்கள்.

நான் நமது கவிஞர்கள் செய்யும் சில பிழைகளைக் கண்டால் அவர்களை மேம்படுத்தும் எண்ணத்தோடுதான், என்னப் பிழை ஏன் பிழை என எடுத்துச் சொல்கிறேன். அதே போல் நான் எழுதுவதில் மற்றவர் சொல்லும் பிழைகளையும் ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன்.

உங்களுக்கு இதை ஏற்கும் இதயம் இல்லை என்று தெரிகிறது, இனி என் விமர்சனமும் இருக்காது உங்கள் படைப்புகளுக்கு, கவலை வேண்டாம்,

சுஜா
22-07-2008, 12:13 PM
ரோம் தெருக்கள்


காதல் சொல்லி
கை பிடித்துவிட்டோம்.

காதலில்
ஒருவர் சுயநினைவோடும்
ஒருவர் சுயநினைவற்றும் கிடக்கிறோம்
ஒருவர் மாற்றி ஒருவராய் .

தேவதை கதை சொல்லி
தெருவழியே நடக்கிறேன் தேவதையுடன்.

தேவதை சிரிகிறாள் ,
என்னை எனக்கே அறிமுகபடுத்துகிறான் ,
என்ற தோரணையுடன் .

இந்த தெரு எங்கு செல்கிறது
என்கிறாள் தேவதை .

முடிவிலி என்கிறேன் .

முடிவிலியா .....................
எல்லா தெருக்களும்
ரோமை நோக்கியல்லவா செல்லும் ?!

காதல் கிடைத்தல் ,
ரோமும் தெருத்தெருவாய் செல்லும் .

இதயம்
22-07-2008, 12:15 PM
உங்களுக்கு இதை ஏற்கும் இதயம் இல்லை என்று தெரிகிறது, இனி என் விமர்சனமும் இருக்காது உங்கள் படைப்புகளுக்கு, கவலை வேண்டாம்,
நடுநிலையான விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் எப்பொழுதும் எனக்கு உண்டு கண்மணி.! இறுதியாக, உங்களுடைய நல்ல முடிவுக்கு என் நன்றிகள்.! இந்த முடிவு யாருக்கும் பயனற்ற விவாதத்தை நிறுத்தும்..!!

கண்மணி
22-07-2008, 12:36 PM
ரோம் தெருக்கள்


காதல் சொல்லி
கை பிடித்துவிட்டோம்.

காதலில்
ஒருவர் சுயநினைவோடும்
ஒருவர் சுயநினைவற்றும் கிடக்கிறோம்
ஒருவர் மாற்றி ஒருவராய் .

தேவதை கதை சொல்லி
தெருவழியே நடக்கிறேன் தேவதையுடன்.

தேவதை சிரிகிறாள் ,
என்னை எனக்கே அறிமுகபடுத்துகிறான் ,
என்ற தோரணையுடன் .

இந்த தெரு எங்கு செல்கிறது
என்கிறாள் தேவதை .

முடிவிலி என்கிறேன் .

முடிவிலியா .....................
எல்லா தெருக்களும்
ரோமை நோக்கியல்லவா செல்லும் ?!

காதல் கிடைத்தல் ,
ரோமும் தெருத்தெருவாய் செல்லும் .

முதல் கவிதையே அழகாய் வந்திருக்கிறது...

இருவர் மட்டுமே இருக்கும் காதல் முடிவிலா தெருக்களில் கைகோர்த்துச் செல்லும் கனவழகு.

அழகான கனவு! ஏறத்தாழ ஓவ்வொரு காதலரும் ஒரு முறையாவது இப்படி ஒரு கனவைக் காணாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

கனவு நனவாகும் போதுதான்...

ஒவ்வொரு தெருவிலும் துணிக்கடையும், நகைக்கடையும் இருப்பது தெரியவருகிறது, :D:D:D:D

சிவா.ஜி
22-07-2008, 12:44 PM
இரு கைகளில்
இரு(று)க்கும் நம்பிக்கை
காதலின் ஆணிவேரு
த(க)ளர்ந்தால் வேறு வேறு!

நதி
22-07-2008, 01:01 PM
http://www.fotosearch.com/comp/BDX/BDX375/interracial-couple-holding_~bxp68039.jpg

அடுத்த படம் போட்டாச்சு எல்லோரும் காதலை ஆரம்பிக்கவும் இல்லை இல்லை கவிதையை ஆரம்பிக்கவும்.

அவன்கையில் அவள்கை
அவள்கையில் அவன்கை.
கட்டைவிரல்பிடி
அவளின் பிடியில்..
நிச்சயமாய் இவர்கள்
காதலின் பிடியில்..

சுஜா
22-07-2008, 01:13 PM
முதல் கவிதையே அழகாய் வந்திருக்கிறது...

இருவர் மட்டுமே இருக்கும் காதல் முடிவிலா தெருக்களில் கைகோர்த்துச் செல்லும் கனவழகு.

அழகான கனவு! ஏறத்தாழ ஓவ்வொரு காதலரும் ஒரு முறையாவது இப்படி ஒரு கனவைக் காணாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

கனவு நனவாகும் போதுதான்...

ஒவ்வொரு தெருவிலும் துணிக்கடையும், நகைக்கடையும் இருப்பது தெரியவருகிறது, :D:D:D:D

நன்றி கண்மணி அக்கா
நிங்கள் சொல்வது போல், கனவு நனவாகும் பொழுது ,
துணிக்கடைகளும் நகை கடைகளும் வருகிறது .

ஒரு சில மாந்தர்களுக்கு சலித்துவிடுகிறது .
என்ன செய்ய .......?.

என் நண்பன் சொல்வான் "காதலில் எனக்கு சலிப்பு ஏற்படுவதில்லை" என்று.
(அவன் ஒரே சமயத்தில் பல பேரிடம் விண்ணப்பித்து கொண்டிருக்கிறான் )

தாமரை
22-07-2008, 01:34 PM
கறுப்பும் சிவப்பும்
கைபற்றி
தம்மை இழந்து ஈன்றெடுக்கும்
நிறமறியாக்
காதல் குழந்தை

கண்மணி
22-07-2008, 01:46 PM
இரு கைகளில்
இரு(று)க்கும் நம்பிக்கை
காதலின் ஆணிவேரு
த(க)ளர்ந்தால் வேறு வேறு!

நம்பிக்கை தான் காதலின் ஆணிவேர். சரியாச் சொன்னீங்க சிவாஜியண்ணா.
ஆனல் நம்பிக்கை காதலுக்கு மட்டுமா ஆணிவேர்!!! வாழ்க்கைக்கே அதுதான் ஆணிவேர்...

கண்மணி
22-07-2008, 01:57 PM
அவன்கையில் அவள்கை
அவள்கையில் அவன்கை.
கட்டைவிரல்பிடி
அவளின் பிடியில்..
நிச்சயமாய் இவர்கள்
காதலின் பிடியில்..

வாதங்கள் துரத்தின
பிடி இறுகியது
பிடிவாதங்கள் தளர்ந்தன

காதலில் கட்டுண்டோர்
கைப்பிடியில் உலகம்

சிக்கனமான கவிதை ரவுத்திரன்!

shaktii
22-07-2008, 01:59 PM
உள்ளங்கை சூட்டில்
உருகியது -
உள்ளமும்... ,
உள்ளதும்.

கண்மணி
22-07-2008, 02:13 PM
உள்ளங்கை சூட்டில்
உருகியது -
உள்ளமும்... ,
உள்ளதும்.

இரண்டு அர்த்தங்கள்

உள்ளது என்பது என்ன என்பதைப் பொறுத்து...

உள்ளது உருகியது

- தன்னையிழத்தல் என்றும் கொள்ளலாம்
- கையில் இருந்த காசு கரைந்த்து என்றும் கொள்ளலாம்..

தம்பி என்னச் சொன்னீங்க???:D:D:D

தீபன்
23-07-2008, 12:59 AM
கண்மணிகள் வழியே உருவான காதல்
கரம் வழியே பாய்ந்து
இதயம்கள் இடம்மாறுகின்றனவோ...:lachen001::lachen001::lachen001:

நம்பிகோபாலன்
23-07-2008, 05:18 AM
உன் கை
என் கையுடன்
சேர்ந்ததும் என்
வாழ்வில் பிறக்குது
நம்பிக்கை....
புரியவைத்தாய்
வாழ்க்கை வாழ்வதர்க்கே...

மறத்தமிழன்
23-07-2008, 06:06 AM
கறுப்பு கரம்-
ஈழத்தமிழன்!
வெள்ளைக் கரம்-
நோர்வே மனிதன்!

(எனக்கு கவிதையெல்லாம் வராதுங்க... படத்த பாத்ததும் என் மனதில் உதித்தத சொன்னேன்.)

கண்மணி
23-07-2008, 06:12 AM
கறுப்பு கரம்-
ஈழத்தமிழன்!
வெள்ளைக் கரம்-
நோர்வே மனிதன்!

(எனக்கு கவிதையெல்லாம் வராதுங்க... படத்த பாத்ததும் என் மனதில் உதித்தத சொன்னேன்.)

சமாதானப் பாதையில் நார்வே ஈழத்தை அழைத்துச் செல்வதைத் தானே சொல்ல வருகிறீர்கள். நம்ம தீபன் அழகாச் சொல்வாரே அதை!!!

இதை இரண்டு கோணத்திலும் எழுதலாம்.. நார்வே கண்களில் எப்படித் தெரியும், ஈழத்தமிழன் கண்களில் எப்படித் தெரியும்..

மறத்தமிழன் அழகான கருவைக் கொடுத்திருக்கிறார். மக்கள் எழுதுவாங்க..

meera
23-07-2008, 06:35 AM
இணைந்தது இதயம்-ஆதலால்
கலந்தது கைகள்
இறுதிவரை இப்படியே
இருக்குமென்ற நம்பிக்கையில்....

யவனிகா
24-07-2008, 05:00 AM
உள்ளங்கை ரேகைகளும்
உள்ளங்களின் ரேகைகளும்
ஒன்றாய்ச் சங்கமிக்க...
துணைக்கு வலிக்குமே என்று
துவளப்பற்றிய கரங்களுக்குள்
பத்திரமாய்க் காதல்...

யவனிகா
24-07-2008, 05:03 AM
ரோம் தெருக்கள்


காதல் சொல்லி
கை பிடித்துவிட்டோம்.

காதலில்
ஒருவர் சுயநினைவோடும்
ஒருவர் சுயநினைவற்றும் கிடக்கிறோம்
ஒருவர் மாற்றி ஒருவராய் .

தேவதை கதை சொல்லி
தெருவழியே நடக்கிறேன் தேவதையுடன்.

தேவதை சிரிகிறாள் ,
என்னை எனக்கே அறிமுகபடுத்துகிறான் ,
என்ற தோரணையுடன் .

இந்த தெரு எங்கு செல்கிறது
என்கிறாள் தேவதை .

முடிவிலி என்கிறேன் .

முடிவிலியா .....................
எல்லா தெருக்களும்
ரோமை நோக்கியல்லவா செல்லும் ?!

காதல் கிடைத்தல் ,
ரோமும் தெருத்தெருவாய் செல்லும் .

அட...நல்லாருக்கே.

poornima
24-07-2008, 07:38 AM
கடைசி இரண்டு வரிகளில் தான் இருக்கிறது இந்தக் கவிதையின் மொத்த கனமும்..

பாராட்டுகள்

சுஜா
24-07-2008, 11:23 AM
அட...நல்லாருக்கே.

யவனிகா அக்காவிற்கு எனது நன்றிகள்

சுஜா
24-07-2008, 11:24 AM
கடைசி இரண்டு வரிகளில் தான் இருக்கிறது இந்தக் கவிதையின் மொத்த கனமும்..

பாராட்டுகள்

பூர்ணிமா அக்காவிற்கு எனது நன்றிகள்

meera
24-07-2008, 02:11 PM
ஓவியாக்கா, இந்த படம் போட்டு 2 நாளாச்சே.

அடுத்த படம் போடுங்கப்பா. புள்ள ஆர்வமா இருக்குல்ல.

கண்மணி
25-07-2008, 01:06 AM
இணைந்தது இதயம்-ஆதலால்
கலந்தது கைகள்
இறுதிவரை இப்படியே
இருக்குமென்ற நம்பிக்கையில்....

நம்பிக்கைதான். ஆனால் இப்படியே என்பது யோசிக்க வைக்குது மீரா.. இன்னொரு கை அதிகம் சேரலாம்,, இன்னும் நெருங்கலாம்..

ஆனால் நாளையைப் பற்றிய நினைவுகள் போய் இப்பொழுதைய கணம் மட்டுமே நினைவிருக்கையில்

இப்படியே இருந்திட மாட்டோமாங்கற ஆசையா இல்லை இப்படியே இருப்போம் என்ற நம்பிக்கையா எது மனதில் இருக்கும்?

கண்மணி
25-07-2008, 01:08 AM
உள்ளங்கை ரேகைகளும்
உள்ளங்களின் ரேகைகளும்
ஒன்றாய்ச் சங்கமிக்க...
துணைக்கு வலிக்குமே என்று
துவளப்பற்றிய கரங்களுக்குள்
பத்திரமாய்க் காதல்...

உள்ளங்கை கொண்ட
பற்றுதலில் மென்மை
உள்ளம் கை கொண்ட
பற்றுதலில் உறுதி

நல்லா இருக்கு யவனிகா!

கண்மணி
25-07-2008, 01:25 AM
இந்தச் சுற்றில் பணமுடிப்பு பரிசு பெறுபவர்கள்

யவனிகா பத்திரமாய்
meera நம்பிக்கையில்
மறத்தமிழன் கை வண்ணங்கள்
நம்பிகோபாலன் பிறப்பது இன்னொருகை
தீபன் இதய வழி
shaktii உருகியவை
சுஜா ரோம் ரோம் ரோமியோ!!!:D
ரவுத்திரன் காதலின் பிடி
சிவா.ஜி ஆணிவேரு

இனி அடுத்தப் படம் தரலாமே!!!

தீபன்
25-07-2008, 05:06 AM
சமாதானப் பாதையில் நார்வே ஈழத்தை அழைத்துச் செல்வதைத் தானே சொல்ல வருகிறீர்கள். நம்ம தீபன் அழகாச் சொல்வாரே அதை!!!

இதை இரண்டு கோணத்திலும் எழுதலாம்.. நார்வே கண்களில் எப்படித் தெரியும், ஈழத்தமிழன் கண்களில் எப்படித் தெரியும்..

மறத்தமிழன் அழகான கருவைக் கொடுத்திருக்கிறார். மக்கள் எழுதுவாங்க..
நீங்க பாட்டுக்கு ஏத்தி விட்டுட்டிங்க... நான் அதை எப்படி அழகா சொல்றதென முழிச்சுகிட்டிருக்கன். அடுத்த படத்த போட்டு காப்பாத்துங்கப்பா...
என்றாலும் கண்மணி அகாவின் எதிர்பார்ப்பிற்காய் சிறு முயற்சி...

சமராடும் கரம் கோர்த்த
சமாதான கரம்...
பிடியின் பின்னணியில் இருப்பது
மனிதாபிமானமா...?
அல்லது
முதலாளித்துவமா...?

Narathar
25-07-2008, 12:44 PM
சமராடும் கரம் கோர்த்த
சமாதான கரம்...
பிடியின் பின்னணியில் இருப்பது
மனிதாபிமானமா...?
அல்லது
முதலாளித்துவமா...?

எனக்கிருக்கும் சந்தேகத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது உங்கள் கவிதை......

வாழ்த்துக்கள் தீபன்!

Narathar
25-07-2008, 12:55 PM
இதோ அடுத்த படம் போட்டாயிற்று!
உங்கள் கற்பனை குதிரையின் கடிவாளங்களை தட்டி விடுங்கள்


http://img32.picoodle.com/img/img32/4/7/26/narathar/f_haircut1m_e66bef2.jpg
.

Narathar
26-07-2008, 08:23 AM
நான் நேற்று போட்ட படம் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமா இருந்துதோ என்னவோ? நம்ம மக்கள் யாரும் கவிதை தரலை......
அதனால் இதோ இன்று படத்தை மாற்றி விட்டேன்...

Narathar
29-07-2008, 06:47 AM
என்ன ஆச்சு?
நம்ம நிழலுக்கு உயிர் கொடுக்கும் கவிகளுக்கு?
ஒரு வேளை அடுத்த "மாட்ச்" வரைக்கும் காத்திருக்கின்றார்களா கவி எழுத?

நாராயணா!!!!!!

சிவா.ஜி
29-07-2008, 07:10 AM
இந்திய வீரர்கள்(?) இலங்கை அணியினரிடம் தர்ம அடி வாங்கிய சோகத்தில் கவி எழுத முடியவில்லையோ என்னவோ?

சிவா.ஜி
29-07-2008, 07:12 AM
மட்டை வீரர்கள் நிச்சயம்
மட்டையாவார்கள் என
முன்னரே யூகித்து
மொட்டையடித்த ரசிகர்
விட்டு வைத்திருந்தால்
முடியாவது வளர்ந்திருக்கும்....
வீரர்கள் வளருவார்களா?

பூமகள்
29-07-2008, 07:42 AM
தலைமுடியில் வீரர்..
புகழ்வா?!!
இகழ்வா?!!

Narathar
29-07-2008, 07:48 AM
நிழலுக்கு உயிர்(கவி)தந்து உயிர்ப்பித்த சிவா மற்றும் பூமகளுக்கு நாரதரின் அன்பு நன்றிகள்....

Narathar
29-07-2008, 07:51 AM
இந்திய வீரர்கள்(?) இலங்கை அணியினரிடம் தர்ம அடி வாங்கிய சோகத்தில் கவி எழுத முடியவில்லையோ என்னவோ?

அந்த ஆட்டாம் முடிந்ததும் தான் இந்தப்படத்தை தேடிப்போட்டேன்.... :D
நம்மவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கவியாய் கொட்டிவிடுவார்களென்று... :)

ஆனால் அவர்கள் மௌனம் காப்பதைப்பார்த்தால் நாரதரின் வம்பில் நாம் மாட்டிக்கொள்ளகூடாது என்று நினைக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. ;)

நாராயணா!!!! :icon_b:

பூமகள்
29-07-2008, 07:53 AM
மைதான ஆட்டம்..
மறந்து போய்..
விளம்பர ஆட்டம்
அலைவரிசையில் மட்டுமல்ல - இவர்கள்
சிகை வரிசையிலும்..

விகடன்
29-07-2008, 08:13 AM
மைதானத்தில் விளையாட்டு
மை தானத்தில் மறைகழன்றோர்

Narathar
29-07-2008, 08:25 AM
இதோ இந்தப்பக்கத்திற்காக மீண்டும் உங்கள் கவிதைக்கான படம்.

உங்கள் கற்பனை குதிரையின் கடிவாளங்களை தட்டி விடுங்கள்


http://img32.picoodle.com/img/img32/4/7/26/narathar/f_haircut1m_e66bef2.jpg

ஓவியன்
29-07-2008, 08:53 AM
வெற்றிக்காக பாதி மொட்டை
ஸ்டைலாக,
வெற்றியின்றி முழு மொட்டை
விதியாக....!!

ஆதி
29-07-2008, 09:00 AM
அடித்தாடினாலும்
அடிக்காமலாடினாலும்
பணம் நிச்சயம் அவர்களுக்கு..

அடித்தாடினாலும்
அடிக்காமலாடினாலும்
மொட்டை நிச்சயம் நமக்கு..

நம்பிகோபாலன்
29-07-2008, 10:14 AM
வெட்டுபட்ட சிகையில்
சிதறிய இந்திய அணி..

நம்பிகோபாலன்
29-07-2008, 10:16 AM
உன் தேச பற்று
உன் தலையில்
தெரிகிறது
அவர்களிடத்திலோ
பணத்தில்
மட்டுமே தெரிகிறது....

நம்பிகோபாலன்
29-07-2008, 10:19 AM
இந்திய அணிக்காக
சிகையில்
பல வண்ணங்கள்
கடைசியில்
முகத்தில் பத்திந்ததோ
கருப்பு மட்டுமே
( முகத்தில் கரி பூசிட்டாங்கப்பா)

அமரன்
29-07-2008, 12:37 PM
வெண்மை.. செம்மை.. பசுமை..
மூன்றையும்
அ(வ)ங்கக்கடலில் தேடியவன்
தலையில் மொட்டை..
ஆடியவன் கணக்கில் ரொக்கம்..
திருந்துவார்களா அப்பாவிகள்!

இதயம்
29-07-2008, 12:46 PM
இந்திய தேச பக்தியை
தன் மட்டை கொண்டு
"அடி"யில் காட்டாத
"அவர்களை" காட்டிலும்
"முடி"யில் காட்டிய
முகம் காட்டாத(இ)வருக்கு
கிடைக்கட்டும் கோப்பை..!

அமரன்
29-07-2008, 12:49 PM
இந்திய தேச பக்தியை
தன் மட்டை கொண்டு
"அடி"யில் காட்டாத
"அவர்களை" காட்டிலும்
"முடி"யில் காட்டிய
முகம் காட்டாத(இ)வருக்கு
கிடைக்கட்டும் கோப்பை..!

ஹஹ்ஹ்ஹா..:icon_b:
கோப்பை கிடைப்பது இருக்கட்டும்
கேப்பையாவது கிடைக்குமா இவர்களுக்கு..

Narathar
29-07-2008, 02:55 PM
மைதானத்தில் விளையாட்டு
மை தானத்தில் மறைகழன்றோர்

:lachen001: :) :lachen001:
நன்றி விராடா தங்களின் இரண்டுவரிக்கவிதைக்கு!வெற்றிக்காக பாதி மொட்டை
ஸ்டைலாக,
வெற்றியின்றி முழு மொட்டை
விதியாக....!!

:D :D அடுத்த போட்டியில் மொட்டை யாருக்கு விழப்போகின்றதோ????
நன்றி ஓவியரே

Narathar
30-07-2008, 07:59 AM
அடித்தாடினாலும்
அடிக்காமலாடினாலும்
பணம் நிச்சயம் அவர்களுக்கு..

அடித்தாடினாலும்
அடிக்காமலாடினாலும்
மொட்டை நிச்சயம் நமக்கு..

சரியாகச்சொன்னீர்கள் ஆதி!
தொற்றாலும் வெற்றிபெற்றாலும்
அவர்களுக்கு இல்லை கவலை.........
ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது
கிடைத்து விடுகின்றது!!!!!வெட்டுபட்ட சிகையில்
சிதறிய இந்திய அணி..

சிதறியது சிகை மட்டுமல்ல.......
நம்மவர்களின் நம்பிக்கையும் தான்!


இந்திய அணிக்காக
சிகையில்
பல வண்ணங்கள்
கடைசியில்
முகத்தில் பத்திந்ததோ
கருப்பு மட்டுமே
( முகத்தில் கரி பூசிட்டாங்கப்பா)

பொட்டிலரைந்தால் போல், சரியாகச்சொன்னீர்கள் சபாஷ்!!!!!

அமரன்
30-07-2008, 10:33 AM
யாராவது அடுத்த படத்தை போடுங்களேன்.

அகத்தியன்
30-07-2008, 11:31 AM
எல்லோரும் தாயன்பினைத்தான் பிரதானப்படுத்துவார்கள். ஒரு மாறுதலுக்காக தந்தை பாசம் பற்றி............

http://i5.photobucket.com/albums/y195/penny242/Dad.jpg

அமரன்
30-07-2008, 11:34 AM
படத்துக்கு நன்றி அகத்தியன்.
படத்தினளவை கொஞ்சம் சிறிதாக்கலாமே..

நம்பிகோபாலன்
30-07-2008, 11:39 AM
என் பேர் சொல்ல
பிறந்தவனே
நீ வளர வளர
உனக்கும்
பொறுப்புக்கள் அதிகமாகும்
அதற்க்காகவே
இப்பொழுதே நிம்மதியாக
நீ கண்ணுறங்கு.....

Narathar
30-07-2008, 01:50 PM
நன்றி அகத்தியரே உங்கள் "தந்தை" படத்துக்கு...
எங்கே எமது கவிஞ்சர்கள் எப்படி எழுதுவார்கள் பார்ப்போம்.........

Narathar
30-07-2008, 01:55 PM
வெண்மை.. செம்மை.. பசுமை..
மூன்றையும்
அ(வ)ங்கக்கடலில் தேடியவன்
தலையில் மொட்டை..
ஆடியவன் கணக்கில் ரொக்கம்..
திருந்துவார்களா அப்பாவிகள்!

அப்பாவிகள் திருந்தினாலும் இல்லையென்றாலும்,
பாவிகள் பைகள் என்னவோ நிரம்பி வழிகின்றது!!!!!

நன்றி உங்கள் கவிதைக்கு!


இந்திய தேச பக்தியை
தன் மட்டை கொண்டு
"அடி"யில் காட்டாத
"அவர்களை" காட்டிலும்
"முடி"யில் காட்டிய
முகம் காட்டாத(இ)வருக்கு
கிடைக்கட்டும் கோப்பை..!


ஹஹ்ஹ்ஹா..:icon_b:
கோப்பை கிடைப்பது இருக்கட்டும்
கேப்பையாவது கிடைக்குமா இவர்களுக்கு..

நான் சொல்ல என்ன இருக்கிறது?
நம்ம அமரே நன்றாக சொல்லிவிட்டார்!
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்கள் கவிதைக்கு.........

==========================================================================

கடந்த "மொட்டைத்தலை கிரிக்கட் ரசிகர்" படத்துக்கான கவிதைகளுக்கு
பண முடிப்பு பெறுபவர்கள்.............

சிவாவின் "மட்டை வீரர்கள்" கவிதை,
பூமகளின் "புகழா? இகழா?" மற்றும் "சிகைவரிசை" கவிதைகள்,
விராடனின் "மை தான" கவிதை,
ஓவியரின் "விதியா? ஸ்டைலா? கவிதை,
ஆதியின் "மொட்டை நிச்சயம்" கவிதை,
நம்பியின் " சிதறிய அணி, தேச பற்று, கருப்பு முகம்" கவிதைகள்
அமரரின் "ரொக்கம்" கவிதை
இதயத்தின் "தேசபக்தி" கவிதை

கவிதை எழுதிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!
இனி அகத்தியரின் படத்துக்கான கவிதையை தாருங்கள்......

http://img28.picoodle.com/img/img28/4/7/30/f_Dadm_f2d97d0.jpg

தீபா
01-08-2008, 06:55 AM
எல்லோரும் தாயன்பினைத்தான் பிரதானப்படுத்துவார்கள். ஒரு மாறுதலுக்காக தந்தை பாசம் பற்றி............

http://i5.photobucket.com/albums/y195/penny242/Dad.jpg

யாராச்சும் கவிதை ஆரம்பிங்களேன்.... அப்பறம் நான் அழுது கொட்டிடுவேன்,,

நம்பிகோபாலன்
01-08-2008, 07:06 AM
தந்தை பொறுப்பு
தந்தவனே
முகத்தில்
எந்தை அல்லவா
ஞயாபகபடுத்துகிறாய்..
வாங்கிகொள் என் முத்தங்களை....

யவனிகா
01-08-2008, 07:20 AM
உமையொருபாகன்
உண்மை அர்த்தம் இவனோ...
விமர்சன வேதனைகளுடன்
வித்தியாச பிரசவம்...

சிவா.ஜி
01-08-2008, 07:22 AM
கண்ணே நீ விழித்தெழுந்து பார்க்கும்
முதல் தோழனின் முகம்
என்னுடையதாயிருக்கட்டும்...
என்னைப்போலவே நீயும்
உன் மகனுக்கு முகம் காட்டு...
தோழமையாய்!

தீபா
01-08-2008, 07:35 AM
தந்தை பொறுப்பு
தந்தவனே
முகத்தில்
எந்தை அல்லவா
ஞயாபகபடுத்துகிறாய்..
வாங்கிகொள் என் முத்தங்களை....

அப்பாக்கள் சொல்லும் வசனம், நீ அப்பா ஆகிப்பார். அப்பறம் தெரியும் வலியும் வேதனையும்... என்று. ஆனால் ஆனந்தம் தெரியும் என்று சொல்லுவதில்லை...

ஞாபகம் என்ற வார்த்தை நம்பிக்கு ஞாபகம் இல்லை போலும்... :D

நல்ல சிறப்பான கவிதை நம்பி...

தீபா
01-08-2008, 07:40 AM
உமையொருபாகன்
உண்மை அர்த்தம் இவனோ...
விமர்சன வேதனைகளுடன்
வித்தியாச பிரசவம்...

உண்மைதான் சகோதரி. எல்லா பிறப்பும் இப்படியா என்ன?

தீபா
01-08-2008, 07:44 AM
கண்ணே நீ விழித்தெழுந்து பார்க்கும்
முதல் தோழனின் முகம்
என்னுடையதாயிருக்கட்டும்...
என்னைப்போலவே நீயும்
உன் மகனுக்கு முகம் காட்டு...
தோழமையாய்!

அப்பாதான் ஒரு மனிதனின் முதல் தோழன் அல்லவா!!

இது வழி வழியா தொடர்ந்து வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்,....

நட்பின் முதல் பிரசவம்
தந்தையிடமிருந்தே ஆரம்பிக்கிறது.

அப்ப தாய்?

அவளுக்கு அன்பு அரவணைப்பு அப்படீன்னு பல வேலைகள் இருக்கே!! :redface:

meera
01-08-2008, 07:44 AM
இதழ் விரித்த சிறு மொட்டு
கண் விழிக்க காத்திருக்கிறேன்
எதிர் கால கனவுகளோடு.....

ஆதி
01-08-2008, 07:44 AM
அப்பா
இப்பா உனக்கு
ஒப்பா உன்றனுக்கு
இப்பால் யாரும்
இல்லையப்பா

தீபா
01-08-2008, 08:36 AM
இதழ் விரித்த சிறு மொட்டு
கண் விழிக்க காத்திருக்கிறேன்
எதிர் கால கனவுகளோடு.....

எளிமை.... அழகு..

நம்மால் இயலாத கனவுகளை நம் குழந்தைகள் மூலம் இயலவைப்போம் என்று கங்கணம் கட்டித் திரியும் பெற்றோர்கள் உண்டு....

அப்பாவால் முடியாத கனவு
மகனால் முடித்து வைக்கப்படவேண்டும்.. முடிந்தவரை..

அழகிய கவிதை சகோதரி..

தீபா
01-08-2008, 08:38 AM
அப்பா
இப்பா உனக்கு
ஒப்பா உன்றனுக்கு
இப்பால் யாரும்
இல்லையப்பா

அப்படீன்னா இன்னொரு மகன் பிறந்தா என்ன சொல்லுவீங்க? :)

ஆதி
01-08-2008, 08:43 AM
அப்படீன்னா இன்னொரு மகன் பிறந்தா என்ன சொல்லுவீங்க? :)

உண்மையை சொல்ல போனால் இந்த கவிதை படத்தில் இருந்து விலகி நிற்கிற கவிதைங்க.. எழுதனும் தோணுச்சி எழுதிட்டேன் அவ்வளவுதான்..

மகன் தந்தைக்கு எழுதின கவிதை.. தந்தை மகனுக்கு எழுதினது இல்ல..

இப்ப எத்தன மகன் பொறந்தாலும் பிரச்சன இல்லீல.. :)

தீபா
01-08-2008, 08:49 AM
உண்மையை சொல்ல போனால் இந்த கவிதை படத்தில் இருந்து விலகி நிற்கிற கவிதைங்க.. எழுதனும் தோணுச்சி எழுதிட்டேன் அவ்வளவுதான்..

மகன் தந்தைக்கு எழுதின கவிதை.. தந்தை மகனுக்கு எழுதினது இல்ல..

இப்ப எத்தன புள்ள பொறந்தாலும் பிரச்சன இல்லீல.. :)


மகன் - தந்தை... இந்த இரண்டு பேரில் யார் சொன்னாலும் இப்படத்திற்கு ஒத்துவருமே!!!

கவிதை தள்ளி நிற்கவில்லை
படத்தை நீங்கள் நன்கு கற்கவில்லை.

ஆதி
01-08-2008, 08:54 AM
மகன் - தந்தை... இந்த இரண்டு பேரில் யார் சொன்னாலும் இப்படத்திற்கு ஒத்துவருமே!!!

கவிதை தள்ளி நிற்கவில்லை
படத்தை நீங்கள் நன்கு கற்கவில்லை.

தூங்கும் மகனை போது அவன் தகப்பம் பக்கத்தில் நின்று ஸ்பரிசிக்கிறான் மழலை தந்தை அருகிருப்பது அறியாதே அதான் சொன்னேன் பாட்டு படத்தின்று நிற்கிறது தள்ளியென்று..

நம்பிகோபாலன்
01-08-2008, 09:05 AM
என் பேர் சொல்ல
பிறந்தவனே
நீ வளர வளர
உனக்கும்
பொறுப்புக்கள் அதிகமாகும்
அதற்க்காகவே
இப்பொழுதே நிம்மதியாக
நீ கண்ணுறங்கு.....

தென்றல் இதற்கு பின்னூட்டம் ஏன் எழுதவில்லை.

தீபா
01-08-2008, 09:17 AM
தென்றல் இதற்கு பின்னூட்டம் ஏன் எழுதவில்லை.

அடடே கோபாலன்.. கவனிக்க வில்லை மன்னியுங்கள்.

என் பேர் சொல்ல
பிறந்தவனே
நீ வளர வளர
உனக்கும்
பொறுப்புக்கள் அதிகமாகும்
அதற்க்காகவே
இப்பொழுதே நிம்மதியாக
நீ கண்ணுறங்கு.....

இப்பொழுது ஓய்வெடுத்து பின் பொறுப்புகள் நிரம்ப வளரச் செய்கிறீர்களோ? ஒரு அப்பாவின் கடமைதான் அது. அவனை வளரச் செய்து பெரிய ஆளாக்குவது.

இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் முயன்றிருந்தால் அழகான கவிதை நம்பி....

அமரன்
03-08-2008, 01:06 PM
தனயன் தந்தை இடையில் நிகழ்ந்த அகவாய் அசைவுக்கு வரிவடிவம் கொடுத்த அன்பர்களுக்கு நன்றி. ஊக்கத்தொகை தொடர்ந்து வரும்.

உயிர் கொடுப்பதுக்காய் அடுத்த நிழல்.
http://www.tamilmantram.com/photogal/images/2560/medium/1_876kids.jpg

யவனிகா
03-08-2008, 05:22 PM
அப்பா
இப்பா உனக்கு
ஒப்பா உன்றனுக்கு
இப்பால் யாரும்
இல்லையப்பா

க்ளாஸ் ஆதி...

படத்தின் முக்கியத்துவத்தை யாரும் புரிந்து கொள்ளவே இல்லையோ என்று நினைத்தேன்...சாதாரண தந்தை அல்ல...சுமந்து பெற்ற தந்தை...இப்பால் இல்லை தான் யாரும்...!!!

பாலகன்
03-08-2008, 06:00 PM
எப்படி என்னினாலும் ஆறு தான் வருது
இதை எப்படி தான் என்னுறாங்களோ
வருட கணக்கில்... ஒன்னுமே புரியல இந்த
மரமண்டைக்கு, அது புரியான சிரிக்குறான்
என் தம்பி அவன் தங்க கம்பி
இப்போ அணைப்பதோ இரும்பு கம்பி

அன்புடன்

பூமகள்
03-08-2008, 06:21 PM
எங்களின் தினம்
கம்பிகளோடே ஆரம்பித்து
கம்பிகளோடே முடிகிறது..!

தினமும் தடவித் தடவியே
கம்பிகள் மட்டுமே எங்களோடு
கை கொடுத்து உறவாகிவிட்டது..!

சிரித்த படி வேடிக்கை பார்த்து
கையசைத்தாலும்..
எங்களின் பின் சிலந்திக் கூடுகளே..
வலை பின்னியிருக்கின்றன..

சாலையில் பயணிக்கும்
முகங்களே எங்களின்
உலகத்தின் கதவுகள்..!

சில நொடி கவனிப்பில்..
சில பூட்சுகளின் நடையில்
நாங்களே கேலிகள்
சொல்லிச் சிரிக்கிறோம்..!

அடைப்பட்ட கதவுகளுக்குள்
தடைபடாத உள்ளத்தோடு
நடையிடுகிறோம்..!

இரக்கமில்லாமல் இடும்
செல்லடிகளுக்கு பயந்து
ஈராக் மண் தொடாமல்
நாங்கள் கையாலாகாதவர்களாய்
இன்னும் எத்தனை நாள்
வீட்டுச்சிறையிலே காத்திருப்பது??

சிவா.ஜி
04-08-2008, 04:13 AM
ஹய்யோ...ஹய்யோ
உங்கள் பார்வையில் நாங்கள் சிறையில்....
எங்கள் பார்வையிலோ நீங்கள்......
சிரிக்காமல் என்ன செய்வது?

நம்பிகோபாலன்
04-08-2008, 11:36 AM
வெளியே நடக்கும்
தீவிரவாதத்தை
பார்த்து
சகோதர நாடுகள்
மகிழலாம்
என்னருகில் இருப்பவனைபோல
இன்று
நாங்கள் அன்னை நாட்டின்
அன்பு சிறைக்குள்
நாளைய எதிர்காலம்
எங்கள் கையில்........

Narathar
04-08-2008, 12:18 PM
தனயன் தந்தை இடையில் நிகழ்ந்த அகவாய் அசைவுக்கு வரிவடிவம் கொடுத்த அன்பர்களுக்கு நன்றி. ஊக்கத்தொகை தொடர்ந்து வரும்.


உங்கள் பணிக்கு நன்றி அன்பு அமரனே! :icon_b: தொடர்ந்தும் இதுபோல் இப்பகுதியை பார்த்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.............

கவிதை எழுதியவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாயிற்றா இல்லை இனி மேல் தானா? நான் கொடுக்கட்டுமா?

பாலகன்
04-08-2008, 01:27 PM
ஹய்யோ...ஹய்யோ
உங்கள் பார்வையில் நாங்கள் சிறையில்....
எங்கள் பார்வையிலோ நீங்கள்......
சிரிக்காமல் என்ன செய்வது?

மிகவும் எதார்த்தமான கவிதை, வாழ்த்துக்கள் சிவா அண்ணா

அன்புடன்

அமரன்
05-08-2008, 09:47 AM
உங்கள் பணிக்கு நன்றி அன்பு அமரனே! :icon_b: தொடர்ந்தும் இதுபோல் இப்பகுதியை பார்த்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.............

கவிதை எழுதியவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாயிற்றா இல்லை இனி மேல் தானா? நான் கொடுக்கட்டுமா?

ஊக்கத்தொகை கொடுத்து விட்டேன் நாரதரே.
உயிர் போகாமல் இருக்க இயன்றவரை முயல்கிறேன்.

Narathar
05-08-2008, 04:59 PM
எப்படி என்னினாலும் ஆறு தான் வருது
இதை எப்படி தான் என்னுறாங்களோ
வருட கணக்கில்... ஒன்னுமே புரியல இந்த
மரமண்டைக்கு, அது புரியான சிரிக்குறான்
என் தம்பி அவன் தங்க கம்பி
இப்போ அணைப்பதோ இரும்பு கம்பி

அன்புடன்

நன்றி நின் ஆரம்ப கவிதைக்கு.........
இலகுவான வரிகளில் சொல்லவந்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள். எழுத்துப்பிழைகளிலும் சொல்லாடலிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செழுத்தினால் தலைசிறந்த கவிஞ்சனாவீர்கள்.....

நிழலுக்கு உயிர் பகுதியில் முதல் கவிதை எழுதியவர் என்பதால் இதை சொல்கின்றேன்.....

இன்னும் இன்னும் வளர வேண்டும் தங்கள் திறமை. வாழ்த்துக்கள்

பாலகன்
05-08-2008, 05:43 PM
நன்றி நின் ஆரம்ப கவிதைக்கு.........
இலகுவான வரிகளில் சொல்லவந்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள். எழுத்துப்பிழைகளிலும் சொல்லாடலிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செழுத்தினால் தலைசிறந்த கவிஞ்சனாவீர்கள்.....

இனி கவனமாக இருக்கிறேன் நாரதரே

அன்புக்கு நன்றி

அன்பின்

அக்னி
08-08-2008, 11:27 AM
கற்பனைப்புரவியேறிக்,
கவிபுனைய வாருங்கள்...
கூடி வாருங்கள் வானேறிக் குதூகலிப்போம்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/DSCN0048.jpg

அக்னி
08-08-2008, 11:52 PM
என்ன இந்தப்பக்கம் யாரையுமே காணோம்...
ஒருவேளை படம் பிடிக்கலையோ... :icon_hmm:

அது நான் பிடித்த படம்.
யாராச்சும் ஏதாச்சும் எழுதுங்கப்பா...
எனக்குப் பிடித்தமான கவிதைகளுக்குப் பார்த்துப் போட்டுக் கொடுக்கிறேன்... இ-பணம்தாங்க...

சிவா.ஜி
09-08-2008, 04:27 AM
விமானத்திலிருந்து பிடித்த படமா அக்னி? அழகாக இருக்கிறது. கவிதை பின்னால் வருகிறது.(இ-பணம் ரெடிதானே?)

சிவா.ஜி
09-08-2008, 04:30 AM
ஒவ்வொரு கோணத்திலும்
ஒவ்வொரு வடிவம் காட்டும்
மேகக்குவியலே.....
இறைவன் வரைந்த
புது யுக ஓவியமா நீ?

அக்னி
09-08-2008, 02:33 PM
விமானத்திலிருந்து பிடித்த படமா அக்னி? அழகாக இருக்கிறது. கவிதை பின்னால் வருகிறது.(இ-பணம் ரெடிதானே?)
ஆமாங்க...
ரொம்ப அழகாயிருந்திச்சா... கதவை திறந்துபோட்டு கொஞ்சப் படங்கள் சுட்டேங்க... :cool:


ஒவ்வொரு கோணத்திலும்
ஒவ்வொரு வடிவம் காட்டும்
மேகக்குவியலே.....
இறைவன் வரைந்த
புது யுக ஓவியமா நீ?
உருவமில்லாமலே
வடிவம் காட்டும்
இயற்கையின் அற்புதம்...

அழகான கவிதை சிவா.ஜி...

இதப் பாக்க வேறு யாரும் இல்லையா... :frown:
:icon_clap::icon_clap::icon_clap:
யாருக்காச்சும் கேட்குதா... கேட்குதா... கேட்குதா...

பூமகள்
09-08-2008, 02:50 PM
கற்பனைப்புரவியேறிக்,
கவிபுனைய வாருங்கள்...
கூடி வாருங்கள் வானேறிக் குதூகலிப்போம்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/DSCN0048.jpg
வான் போட்ட
வெண்பஞ்சு படுக்கை
யாருக்காக..

ஓஹ்...
நிலவுப் பெண்
உலவ வருவாளோ
இரவு??!!

_________$$!!!!!!!!!$$__________
படம் அற்புதம்... இந்த இடத்தையெல்லாம் எப்போ கிட்ட இருந்து பார்க்கப் போறேன்...

ஹூம்.... காலம் கைகூடட்டும்..!!

அக்னி
09-08-2008, 03:01 PM
வான் போட்ட
வெண்பஞ்சு படுக்கை
யாருக்காக..

ஓஹ்...
நிலவுப் பெண்
உலவ வருவாளோ
இரவு??!!

தூக்கக் கலக்கத்திற்
கண்சிமிட்டும் விண்மீன்கள்
காத்திருக்க,
இன்னமும்
உலா வராத நிலாவுக்காகக்
காத்திருக்கும் பஞ்சணை...

பி.கு:
படத்தை உங்கள் கவிதையின்மேல் மேற்கோளிடுங்களேன்...

அமரன்
09-08-2008, 04:44 PM
வானத்தில் பறக்கிறேன்..

திரைபறவைகள் புண்ணியத்தில்
கண்ட காட்சி கண்முன்னே
ஒன்று மட்டும் இல்லாமல்..

எப்படி இருக்கும்..
பூமியில்தானே
அத்தனை தெய்வங்களும்..

அக்னி
09-08-2008, 05:06 PM
வானத்தில் பறக்கிறேன்..

திரைபறவைகள் புண்ணியத்தில்
கண்ட காட்சி கண்முன்னே
ஒன்று மட்டும் இல்லாமல்..

எப்படி இருக்கும்..
பூமியில்தானே
அத்தனை தெய்வங்களும்..
பூமியில் இல்லாமற்போனது சொர்க்கமா...
பூமியில் இல்லாமற்போனால் சொர்க்கமா...

யவனிகா
09-08-2008, 05:13 PM
என்னிலிருந்து
நான் பிரிந்து
என்னைப் பார்க்க...
எனக்கு நானே அதிசயமாய்...!!!
நமக்கு நாமே பரவசமாய்..!!!

புரியலன்னா...திரு.நாகாரா அவர்களிடம் விளக்கம் கேட்டுக்கோங்க அக்னி!!!

தீபன்
09-08-2008, 05:25 PM
மேகம் பொழிந்து கடலாவது
வழமை....
கடலின் கீழ் மேகம் ஆடுவது
புதுமை..!

அக்னி
10-08-2008, 01:34 PM
என்னிலிருந்து
நான் பிரிந்து
என்னைப் பார்க்க...
எனக்கு நானே அதிசயமாய்...!!!
நமக்கு நாமே பரவசமாய்..!!!

புரியலன்னா...திரு.நாகாரா அவர்களிடம் விளக்கம் கேட்டுக்கோங்க அக்னி!!!
நாகரா அண்ணாச்சி...
யவனிகா+அக்கா என்ன சொல்லுறாங்கன்னு கொஞ்சம் புரியவையுங்களேன்... :rolleyes:

கடலும் அழகு.. மேகமும் அழகு...
இரண்டையும் இரண்டிலிருந்தும்
பார்ப்பதுவோ கொள்ளை அழகு...


மேகம் பொழிந்து கடலாவது
வழமை....
கடலின் கீழ் மேகம் ஆடுவது
புதுமை..!
வான் கடலிற் பொதிந்த மேகம்,
பவனிவருதோ
மன வானிலும் மெல்ல அசைந்து...

தீபன்
12-08-2008, 10:24 AM
4 நாளாச்சு.... அடுத்த படத்த போடுங்கப்பா... தத்துவார்த்தமா இல்லாம கொமர்சியலா போடுங்கப்பா... (பாருங்க, யவனி அக்கால்லாம் ஒரு மாதிரியாயிட்டா.... கொஞ்ச நாள்ள சம்சார பந்தம் வேண்டாம், சந்நியாசினியாயிடுவம்னு சொல்லப்போறாங்க...)

நம்பிகோபாலன்
12-08-2008, 10:47 AM
வானும் மேகமும்
காதலை
கற்றுகொண்டதாம்
உன்னையும் என்னையும்
பார்த்து......

யவனிகா
12-08-2008, 11:01 AM
4 நாளாச்சு.... அடுத்த படத்த போடுங்கப்பா... தத்துவார்த்தமா இல்லாம கொமர்சியலா போடுங்கப்பா... (பாருங்க, யவனி அக்கால்லாம் ஒரு மாதிரியாயிட்டா.... கொஞ்ச நாள்ள சம்சார பந்தம் வேண்டாம், சந்நியாசினியாயிடுவம்னு சொல்லப்போறாங்க...)

அடடா...இந்தப்புள்ளைக்கு என்ன ஒரு நுண்ணறிவு...

இப்பவே மன்றத்தம்பிமார்ல இரண்டுபேர்...ஒருத்தர் அக்கா..வெள்ளிங்கிரி மலைக்குப் போலாம்ன்னு...இன்னொருத்தர் அக்கா..திருவண்ணாமலைக்கு போலான்னு ஆளுக்கொரு பக்கம் இழுக்கறாங்க....ஒரு அண்ணாத்த வேற பழைய மலைக்கெல்லாம் போகாத தங்காச்சி...உங்கூட்டுப்பக்கத்தில இருக்கிற மலையிலயே ஏறி உக்காந்துக்கோன்னு அட்வைஸ்....

இப்படி படம் போட்டா...அக்னி நான் பேசாம இமயமலைக்கு எஸ்சாயிருவேன்....

ஆதி
12-08-2008, 04:37 PM
அடடா...இந்தப்புள்ளைக்கு என்ன ஒரு நுண்ணறிவு...

இப்பவே மன்றத்தம்பிமார்ல இரண்டுபேர்...ஒருத்தர் அக்கா..வெள்ளிங்கிரி மலைக்குப் போலாம்ன்னு...இன்னொருத்தர் அக்கா..திருவண்ணாமலைக்கு போலான்னு ஆளுக்கொரு பக்கம் இழுக்கறாங்க....ஒரு அண்ணாத்த வேற பழைய மலைக்கெல்லாம் போகாத தங்காச்சி...உங்கூட்டுப்பக்கத்தில இருக்கிற மலையிலயே ஏறி உக்காந்துக்கோன்னு அட்வைஸ்....

இப்படி படம் போட்டா...அக்னி நான் பேசாம இமயமலைக்கு எஸ்சாயிருவேன்....

:D :D :D

பாலகன்
12-08-2008, 06:05 PM
வான் போட்ட
வெண்பஞ்சு படுக்கை
யாருக்காக..

ஓஹ்...
நிலவுப் பெண்
உலவ வருவாளோ
இரவு??!!அற்புதம், ஆனால் நிலவுக்கு தனிமையே

இதோ என்னுடைய பார்வையில்

வான் போட்ட
வெண்பஞ்சு படுக்கை
யாரு எடுத்தது
சன்னலருகில் இருந்து
வானுர்தி கோளாரால்
விட்ட புகையோ

அமரன்
12-08-2008, 06:14 PM
துள்ளும் வெள்ளலை
படர் நீலக் கடல்..
சரியாகத்தான் பெயரிட்டார்கள்
விண்மீன்களென்று....

பூமகள்
12-08-2008, 06:21 PM
துள்ளும் வெள்ளலை
படர் நீலக் கடல்..
சரியாகத்தான் பெயரிட்டார்கள்
விண்மீன்களென்று....
அற்புதம்...! :icon_b::icon_b:

வான் கடலின்
விண்மீன்களைப் பிடிக்க
பஞ்சு வலையினை
யார் விரித்தது..??!! :icon_rollout::rolleyes: (ஏதோ நம்மால முடிஞ்ச கவிதை..!!:icon_ush:)

பாலகன்
12-08-2008, 06:28 PM
சொர்கத்துக்கு வானுர்தி சேவை
முதல் ஆளா சீட்டு வாங்கி
சன்னலோரமா அமர்ந்து
வழிநெடுக பார்த்தா
எங்க பார்த்தாலும் ஒரே வெள்ளை
எழுந்திரிச்சி பார்த்தா ஒரே கருப்பு
எல்லாமே கனவு

பாலகன்
12-08-2008, 06:30 PM
அற்புதம்...! :icon_b::icon_b:

வான் கடலின்
விண்மீன்களைப் பிடிக்க
பஞ்சு வலையினை
யார் விரித்தது..??!! :[/COLOR]

அலையில்லை, படகில்லை அழகான மீன்பிடி வலை
அருமை அருமை

அமரன்
12-08-2008, 06:37 PM
யாராச்சும் பிலிம் காட்டுங்களேன்..

பாலகன்
12-08-2008, 06:48 PM
யாராச்சும் பிலிம் காட்டுங்களேன்..

காட்டிட்டோம்ல்ல

http://i513.photobucket.com/albums/t336/savalraja/1151.jpg


உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
இந்த மலர்களுக்கு
அந்த மரங்கள் காவல்

சுடரவன்
12-08-2008, 08:05 PM
மரங்களே.......
என்னவளைத் தேடுகிறேன்
உங்கள் அழகினை
அவள் குழலில் சூட்டுவதற்காய்........

தீபன்
13-08-2008, 03:24 AM
மலர்கூட்ட மக்களிற்கு
மரங்களாய் மறவர் காவல்....
அழகான வீதி
அளைத்துப்போகும் இலக்கு,
தனிநாடென்ற நம்பிக்கையுடன்
நாங்கள்...!

யவனிகா
13-08-2008, 04:53 AM
படக்கவிதை இன்னும்
பூர்த்தியாகவே இல்லை...
என் இடைவளைத்தபடி
இடையில் நடைபயிலும்
நம்மை வரைய மறந்ததால்!!

சிவா.ஜி
13-08-2008, 04:58 AM
எந்த இளவரசியின்
காலை உலாவைக்காண
காத்திருக்கின்றன இந்த
மரங்களும், மலர்களும்?

நம்பிகோபாலன்
13-08-2008, 05:01 AM
பூங்கொத்துகளோடு
தயாராக இருக்கும்
இவர்களிடம் யார்
சொன்னது
நீ வருகிறாய் என்று.....

நம்பிகோபாலன்
13-08-2008, 05:16 AM
என்னவளே
நீ தேசிய கொடியை
ஏற்றுவதாய்
யாரோ
அறிவித்துவிட்டார்கள் போல
மரங்களும் மலர்களும்
அணிவகுத்து நிற்க
ஆரம்பித்திருக்கிறது பார்....

பூமகள்
13-08-2008, 06:11 AM
ஒருபுறம் மரங்கள்..
மறுபுறம் மலர்ச்சரங்கள்..
கனவுகளில் நிதம் வரும்
சாலையில்..
எனக்கு மட்டும்
புலப்படும் உன்னோடு
கை பிணைத்து
பயணப்படுகிறது மனம்..!!
```````````````````````````````````````````````````````````````
இரவு பனி துடைத்து விட்ட
தலையோடு..
காத்திருக்கிறது மண்..

விதையாக உன் கால்த்தடம்
விழுந்தால்..
பூச்செடியாக காத்திருக்கிறது..

பூக்கள் தூவ தவமிருக்கிறது
உன்னால்
முன்னர் முளைத்த
மூத்த பூ புதல்விகள்...

எப்போது வரம் தருவாய்..
வரவு தருவாய்....??!!

ஆதி
13-08-2008, 02:17 PM
அணிவகுத்து நிற்கும் மரங்கள்
அழகழகாய் பூத்திருக்கும் செடிகள்
பச்சை புல் பரப்பு
வெளிச்சம் விரிந்த துண்டு வானம்
என்று
யாவற்றையும் ரசித்த மனம்
யாருமற்ற பாதையின் வெறுமையையே
நாடுகிறது..

அக்னி
15-08-2008, 11:27 PM
வானும் மேகமும்
காதலை
கற்றுகொண்டதாம்
உன்னையும் என்னையும்
பார்த்து......
பொழிகையில்
வெறுமையானது
வானமா? மேகமா?

பிரிந்திருக்கையிலேயே
புரிகிறது..,
இவற்றின் முன்மாதிரி
மனிதக்காதல் என்று...


வான் போட்ட
வெண்பஞ்சு படுக்கை
யாரு எடுத்தது
சன்னலருகில் இருந்து
வானுர்தி கோளாரால்
விட்ட புகையோ
வானூர்தியிலிருந்து புகையல்ல,
புகைப்படம்...


துள்ளும் வெள்ளலை
படர் நீலக் கடல்..
சரியாகத்தான் பெயரிட்டார்கள்
விண்மீன்களென்று....
கடலின் கீழ் அலைகள்...
எங்கே விண்மீன்கள்..?


வான் கடலின்
விண்மீன்களைப் பிடிக்க
பஞ்சு வலையினை
யார் விரித்தது..??!!
விரித்த வலையின்
பொத்தல்களில் தப்பித்து,
விண்மீன்கள்
கண்சிமிட்டிச் சிரிக்கின்றனவே...
ஓசோன் வரைக்கும்
பொத்தல் போட்டது யார்..?


சொர்கத்துக்கு வானுர்தி சேவை
முதல் ஆளா சீட்டு வாங்கி
சன்னலோரமா அமர்ந்து
வழிநெடுக பார்த்தா
எங்க பார்த்தாலும் ஒரே வெள்ளை
எழுந்திரிச்சி பார்த்தா ஒரே கருப்பு
எல்லாமே கனவு
கனவு
கண்டது பயணி
என்பதால்
கனவு
கவிதையானது...
விமானி என்றால்,
தலைப்புச் சரிதான்...
இரங்கற் கவிதையாகியிருக்கும்...

அக்னி
15-08-2008, 11:37 PM
கற்பனைப்புரவியேறிக்,
கவிபுனைய வாருங்கள்...
கூடி வாருங்கள் வானேறிக் குதூகலிப்போம்...
புரவியேறியவர்கள்:

சிவா.ஜி
பூமகள் (2)
அமரன் (2)
யவனிகா
தீபன்
நம்பிகோபாலன்
அழகிய மணவாளன் (2)
அழகுக் கவிதைகளைத் தந்த அனைவருக்கும்,
ஒவ்வொரு கவிதைக்கும் தலா 25 இ-பணங்கள் வழங்கப்படும்.

என் மனதை அதிகம் தொட்ட,

என்னிலிருந்து
நான் பிரிந்து
என்னைப் பார்க்க...
எனக்கு நானே அதிசயமாய்...!!!
நமக்கு நாமே பரவசமாய்..!!!வானும் மேகமும்
காதலை
கற்றுகொண்டதாம்
உன்னையும் என்னையும்
பார்த்து......
இவ்விரு கவிதைகளுக்கும் தலா 50 இ-பணங்கள் மேலதிகமாக வழங்கப்படும்.

இ-பணம் வழங்க முடிகையில், இவை அனைத்தும் அனுப்பிவைக்கபடும்.
(தாமதத்திற்கு வட்டி வழங்கப்படமாட்டாது...)

தீபன்
16-08-2008, 02:37 AM
இ-பணம் வழங்க முடிகையில், இவை அனைத்தும் அனுப்பிவைக்கபடும்.
(தாமதத்திற்கு வட்டி வழங்கப்படமாட்டாது...)
இருந்த பணத்திற்கே உத்தரவாதமில்ல... இதுக்க, அரசியல் வாதிகள் மாதிரி வாக்குறுதி தாறாங்கப்பா...

அக்னி
16-08-2008, 12:50 PM
அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதி தர, நாம் என்ன அரசியலா நடத்துகின்றோம்?

தவிர,
பணம் தருவதாகக் கூறிய அரசியல்வாதிகளுக்காக நன்றாக உழைத்து ஏமாந்திருக்கின்றீர்கள் போலிருக்கின்றதே.
அந்த விரக்தி நன்றாகவே தெரிகின்றாது... :lachen001:

அக்னி
16-08-2008, 01:00 PM
சரி...
அடுத்த படம் பாருங்கள்... கவி தாருங்கள்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/DSCN0226.jpg

சிவா.ஜி
17-08-2008, 04:44 AM
மூச்சுமுட்டி நானிறப்பினும் பாதகமில்லை
கவிழ்த்துவைத்தக் கோப்பையை
நிமிர்த்து வைத்து நிரப்பி
உன்னுயிரை இழக்காதே குடிமகனே!!

தீபன்
17-08-2008, 04:06 PM
அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதி தர, நாம் என்ன அரசியலா நடத்துகின்றோம்?

தவிர,
பணம் தருவதாகக் கூறிய அரசியல்வாதிகளுக்காக நன்றாக உழைத்து ஏமாந்திருக்கின்றீர்கள் போலிருக்கின்றதே.
அந்த விரக்தி நன்றாகவே தெரிகின்றாது... :lachen001:
நம்ம நாட்டில எங்கேயையா அரசியல் நடக்குது நாங்க யாராவது அரசியல்வாதிக்கு உளைத்து ஏமாற....? பணத்தையும் தொண்டர்களையும் நம்பி நடக்கும் அரசியல் இந்தியாவில்தான்... எங்கள் நாட்டில் துவக்கையும் குண்டர்களையும் நம்பித்தானே நடக்கிறது... இதிலெல்லம் சம்பத்தப்படும் அளவுக்கு எனக்கு துணிவில்லை அக்னி....!:eek:
நல்லா கிளப்புறாங்க பீதிய....!:sprachlos020:

தீபன்
17-08-2008, 04:21 PM
மதுவுண்ண துடித்த வண்டு
மதுக் குவளையுள் மாட்டியது கண்டு,
கவிழ்(ந்/த்)தவன் எழுந்து வந்து - காக்கவைப்பாளா
காரணமாயமைந்த காதல் செண்டு..!

Narathar
17-08-2008, 06:28 PM
மூச்சுமுட்டி நானிறப்பினும் பாதகமில்லை
கவிழ்த்துவைத்தக் கோப்பையை
நிமிர்த்து வைத்து நிரப்பி
உன்னுயிரை இழக்காதே குடிமகனே!!
குடிமக்கள் கவனிப்பார்களா?
இல்லை அதிக போதை கிடைக்குமென்று
இதையும் சேர்த்து குடிப்பார்களா???

Narathar
17-08-2008, 06:36 PM
மதுவுண்ண துடித்த வண்டு
மதுக் குவளையுள் மாட்டியது கண்டு,
கவிழ்(ந்/த்)தவன் எழுந்து வந்து - காக்கவைப்பாளா
காரணமாயமைந்த காதல் செண்டு..!
உங்கள் கவிதை எனக்கு ஒரு பழையபாடலை ஞாபகப்படுத்துகின்றது

தீபன்
17-08-2008, 06:47 PM
உங்கள் கவிதை எனக்கு ஒரு பழையபாடலை ஞாபகப்படுத்துகின்றது
இப்பிடி மொட்டயா சொன்னா எப்பிடி...?
நாங்க சின்னப் பசங்க...:icon_rollout: நீங்கதான் அது என்னான்னும் சொல்லணும்....!:aetsch013:

அமரன்
17-08-2008, 06:48 PM
குவளையில் வண்டு..
கெட்டது குடி.
கோபத்தில்குடிமகன்.
கவலையில் சேவகன்.

ஆதி
18-08-2008, 05:43 AM
மது ததும்பி வழியும்
கிண்ணத்தில் என்
மூச்சிளைத்து நலிகிறது..

மூடப்பட்டதால்
முட்டப்படும் என் மூச்சு
முடியத்துடிக்கிறது..

வாடத்துவங்கிய உயிரை
வந்து வருட முனைகிறது
மரணம்..

நீர் பஞ்சத்தில்
கலநீர் கண்ட மாடாய்
மது வண்டுகள்..

நம்பிகோபாலன்
18-08-2008, 07:03 AM
காதலில் தோற்று
மதுவை தேடி
நான்
குவளையில் அகபட்ட
பூச்சி சொல்கிறது
விடியலை தேடு
வாழ்க்கை உனக்கென்று…

poornima
18-08-2008, 07:31 AM
உள்ளே இருக்கும் உயிர்
பாதை தவறி
மாட்டிக் கொண்டுவிட்டது..
வெளியே இருக்கும் உயிர்
போதையேற்றிக் கொண்டு
பாதை தவறிக் கொண்டிருக்கிறது

Narathar
18-08-2008, 07:52 AM
இப்பிடி மொட்டயா சொன்னா எப்பிடி...?
நாங்க சின்னப் பசங்க...:icon_rollout: நீங்கதான் அது என்னான்னும் சொல்லணும்....!:aetsch013:


மதுவுண்ண துடித்த வண்டு
மதுக் குவளையுள் மாட்டியது கண்டு,
கவிழ்(ந்/த்)தவன் எழுந்து வந்து - காக்கவைப்பாளா
காரணமாயமைந்த காதல் செண்டு..!


தேனுண்ணும் வண்டு
மாமலரை கண்டு
திரிந்தலைந்து பாடுய்வதேன்
ரீங்காரம் கொண்டு...........

என்ற பாடலப்பூ

சிவா.ஜி
18-08-2008, 12:30 PM
இன்னொரு பாட்டும் இதேபோல இருக்கிறது நாரதர். வரிகள் நினைவில்லை....

மாம்பழத்து வண்டு...என்று தொடங்கும்பாடல்...

சிவா.ஜி
18-08-2008, 12:34 PM
கட்டிங்குக்கே வழியில்லாம
ஒட்டிக்கிட்டுவந்து ஊத்திக்கிறேன்
தொட்டுக்க எதுவுமில்ல சாக்கனாவுக்கு
மாட்டிக்கிட்ட நீயும் வந்து, வறுவலாக...!!

Narathar
19-08-2008, 08:01 AM
மாட்டிக்கிட்ட நீயும் வந்து, வறுவலாக...!!


இதெல்லாம் "உவ்வெ" ஆனாலும் படித்ததன் விளைவு!!!! :lachen001:

ஓவியன்
19-08-2008, 08:06 AM
இதெல்லாம் "உவ்வெ" ஆனாலும் படித்ததன் விளைவு!!!! :lachen001:

இந்த திரியில் என்னை மறைமுகமாகத் திட்டும் நாரதரை...!!

துரத்தி :violent-smiley-010: , துரத்திக் :violent-smiley-010: கொத்தினாலும் கோபம் அடங்குதில்லையே..!! :D

Narathar
19-08-2008, 08:14 AM
இந்த திரியில் என்னை மறைமுகமாகத் திட்டும் நாரதரை...!!

துரத்தி :violent-smiley-010: , துரத்திக் :violent-smiley-010: கொத்தினாலும் கோபம் அடங்குதில்லையே..!! :D


என்னை நீங்கள் எவ்வளவுதான் துரத்தி :violent-smiley-010: , துரத்திக் :violent-smiley-010: கொத்தினாலும் நான் உங்களுக்கு தருவதென்னவோ :icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose: தான்!

ஓவியன்
19-08-2008, 08:18 AM
நான் உங்களுக்கு தருவதென்னவோ :icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_give_rose: தான்!

காதில வைக்க பூவா...???
எனக்கு வேண்டாம், நீங்களே அழகாக உங்க காதிலை வைச்சுக்குங்க..!! :rolleyes:

Narathar
19-08-2008, 08:27 AM
காதில வைக்க பூவா...???
எனக்கு வேண்டாம், நீங்களே அழகாக உங்க காதிலை வைச்சுக்குங்க..!! :rolleyes:

சமாதானமய்யா சமாதானம்!!!

அக்னி
19-08-2008, 01:26 PM
தேனின் போதை
போதுமென்றிருந்தால்,
தேனீக்கு
ஏன் இந்த வாதை?

வதைவிட்டு வந்து,
பாதை மூடிய
வதையில் தேனீ...

நம்பிகோபாலன்
22-08-2008, 08:45 AM
குடிப்பதை நீ
மறக்க முயற்சிசெய்
இல்லையேல்
என்னை போன்று
மரணத்தின் வாயிலில்
நீ நிற்கும்
நாள் வெகுதொலைவில்
இல்லை.....................

அக்னி
22-08-2008, 10:10 AM
இ-பணம் வழங்க முடிகையில், இவை அனைத்தும் அனுப்பிவைக்கபடும்.(தாமதத்திற்கு வட்டி வழங்கப்படமாட்டாது...)
அனைவருக்கும் இ-பண முடிச்சுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இ-பணத்தைச் சரிபார்க்க முடிகையில், சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
யாருக்கேனும் கிடைக்கவில்லை என்றால், தெரிவிக்க வேண்டுகின்றேன்.

அமரன்
22-08-2008, 10:34 AM
அக்னி..
கடைசிப்படக் கவிதைகளை அலசிக் காயப்போட்டு விட்டு அடுத்த நிழலைக் கொடுங்களேன்.

Narathar
06-09-2008, 04:04 PM
கொஞ்ச நாளாக இந்தப்பக்கம் வரக்கிடைக்கவில்லை.... நம்ம நிழலுக்கு உயிர் கவிதைப்பகுதியை யாரும் கண்டுக்கலை போல தெரிகின்றது.......


http://img26.picoodle.com/img/img26/4/6/6/hindrita/f_friendsm_cdb695d.jpgஇதோ ஒரு புதுப்படம் கொடுத்திருக்கின்றேன்...

எங்கே உங்கள் கற்பனை குதிரைகளின் கடிவாளங்களை தட்டிவிடுங்கள்....

கவிதை காதல் , நட்பு , பாசம் , கடல் அலைகள், கடல் ,அந்திமாலைப்பொழுது, பறவைகள், என்று எந்தத்தலைப்பிலும் இருக்கலாம்!!!!

தீபன்
07-09-2008, 05:04 PM
கதிரவன் கடல் சாய
காதலி தோழ் சாய
ஏகாந்தம் துய்க்க
எனக்கும் ஆசைதான் கண்ணே...!
அதற்குமுன்,
எல்லைதாண்டிய எதிரியை
விரட்ட வேண்டும்...
காத்திரு பெண்ணே
கடமை முடித்து வருகிறேன்...!

சிவா.ஜி
07-09-2008, 05:59 PM
கவலைப்படாதே கண்ணே
கைதவறி விழுந்த அந்தப் பந்தை
கையோடு கொண்டுவரத்தான்
கடல்பறவைகள் செல்கின்றன..
வந்ததும் விளையாடலாம்...
அதுவரை என் தோள்சாய்ந்து கதை கேள்...
கதை முடிந்து, வரும் பந்தில் விளையாடி
களைத்ததும் கண்ணுறங்கு...
நாளையாவது இந்த அண்ணன் உனது
அரைவயிற்றுக்கு ஆவணச் செய்கிறேன்...!!

Narathar
07-09-2008, 06:01 PM
கதிரவன் கடல் சாய
காதலி தோழ் சாய
ஏகாந்தம் துய்க்க
எனக்கும் ஆசைதான் கண்ணே...!
அதற்குமுன்,
எல்லைதாண்டிய எதிரியை
விரட்ட வேண்டும்...
காத்திரு பெண்ணே
கடமை முடித்து வருகிறேன்...!


நீண்ட நாட்களுக்கு பின்னர் நிழலுக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள், நன்றி.

கடமை நிறைவேறி காதல் கைகூட வாழ்த்துகின்றேன்

Narathar
08-09-2008, 07:55 AM
கவலைப்படாதே கண்ணே
கைதவறி விழுந்த அந்தப் பந்தை
கையோடு கொண்டுவரத்தான்
கடல்பறவைகள் செல்கின்றன..
வந்ததும் விளையாடலாம்...
அதுவரை என் தோள்சாய்ந்து கதை கேள்...
கதை முடிந்து, வரும் பந்தில் விளையாடி
களைத்ததும் கண்ணுறங்கு...
நாளையாவது இந்த அண்ணன் உனது
அரைவயிற்றுக்கு ஆவணச் செய்கிறேன்...!!

வித்தியாசமான சிந்தனை........
கடைசிவரியில் வைத்திருக்கின்றீர்கள், கவிதையின் முத்தாய்ப்பை.. வாழ்த்துக்கள்

அமரன்
08-09-2008, 08:39 AM
ஆரம்ப ஜோர் காணாமல் போவது வாடிக்கை என்றாலும் வருத்தம்தான். இங்கே வருபவர்கள் குறைவு கவலைக்கிடமானது. அணையாவிளக்கில் இதுவும் ஒன்று. கவனிக்காது விட்டாலும் சுடர்ந்து கொண்டே இருக்கும்.

கவலைகொல் கண்ணே!
பறவைகள் தூது போகின்றன.

எதிர் கால ஏட்டை நிரப்பி
இறந்த காலத்துக்கு
உயிர் கொடுத்து உலவவிடுவான்
ஆதவக் கவிஞன்.

மீண்டும் எழுவோம்
அவனைப்போலவே!

அமரன்
08-09-2008, 08:46 AM
கதிரவன் கடல் சாய
காதலி தோழ் சாய
ஏகாந்தம் துய்க்க
எனக்கும் ஆசைதான் கண்ணே...!
அதற்குமுன்,
எல்லைதாண்டிய எதிரியை
விரட்ட வேண்டும்...
காத்திரு பெண்ணே
கடமை முடித்து வருகிறேன்...!


பிஞ்சிலே பழுக்க வைத்து விட்டீர்களே தீபன்.

தாயகத்தில் இருந்த காலத்தில்
மனதில் பதிந்த தெருக்கூத்து பாடல்.

"அச்சம் இங்கே அகன்ற பின்னே அன்பே வாரேன்டி
என்.. ஆசைக் கிளியே உனக்கு மாலை தாரேன்டி."

அமரன்
08-09-2008, 08:58 AM
கவலைப்படாதே கண்ணே
கைதவறி விழுந்த அந்தப் பந்தை
கையோடு கொண்டுவரத்தான்
கடல்பறவைகள் செல்கின்றன..
வந்ததும் விளையாடலாம்...
அதுவரை என் தோள்சாய்ந்து கதை கேள்...
கதை முடிந்து, வரும் பந்தில் விளையாடி
களைத்ததும் கண்ணுறங்கு...
நாளையாவது இந்த அண்ணன் உனது
அரைவயிற்றுக்கு ஆவணச் செய்கிறேன்...!!

பசி வந்தால் பத்தும் பறக்கும்
பறவைகள் மட்டும் எம்மாத்திரம்.

இரை இருக்கும் கடலின்
கரை இருந்தும்
அரை வயிறு இரைக்கு-அக்
கரை செல்கின்றன
அந்தப் பறவைகள் மட்டுமன்று
இந்தப் பாசப்பறவைகளும் சேர்ந்து.

நம்பிகோபாலன்
08-09-2008, 09:00 AM
கண்ணே
ஆர்ப்பரித்த கடல்
கொண்டுசென்றது
நம் நிழலை மட்டும்தான்
நிஜத்தை அல்ல
சுட்டெறிக்கும் சூரியன்
உதிக்க தொடங்கிவிட்டான்
பறவைகளும் கிளம்பிவிட்டன
தங்கள் ஆகாரத்திற்க்கு
இன்னும் என்ன கவலை
வா எழுந்திரு
இந்த விடியல் நமக்காக
வாழலாம் வா.....

தீபன்
08-09-2008, 09:49 AM
பிஞ்சிலே பழுக்க வைத்து விட்டீர்களே தீபன்.


இல்லை... அவன் கடமை முடித்து வருகையில் பிஞ்சு காயாகி கனியாகி சிலவேளை மீண்டும் விதையாகியும் இருக்கலாம்...!

நதி
08-09-2008, 11:53 AM
கதிரவன் கடல் சாய
காதலி தோழ் சாய
ஏகாந்தம் துய்க்க
எனக்கும் ஆசைதான் கண்ணே...!
அதற்குமுன்,
எல்லைதாண்டிய எதிரியை
விரட்ட வேண்டும்...
காத்திரு பெண்ணே
கடமை முடித்து வருகிறேன்...!

பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களை ஆயுதப்படையில் சேர்க்கக்கூடாது என்பது உலக விதி. எமது தேவைகளை நிறைவேற்ற விதிகளை உடைக்காதிருப்போம்.

நதி
08-09-2008, 12:02 PM
http://img26.picoodle.com/img/img26/4/6/6/hindrita/f_friendsm_cdb695d.jpg


வறுமையின் நிறத்தை
கண்களால் விழுங்கிய படி
பாதி ஆடையில்
செழுமையைக் காட்டும்
மனிதர்கள் வாழுமுலகில்
வசிக்கப் படிக்காமல்
பறந்து செல்கின்றனவோ
பறவைகள்
ஆதி பகவனிடத்தில்
புதிய உலகம் கோர.

Narathar
08-09-2008, 01:22 PM
ஆரம்ப ஜோர் காணாமல் போவது வாடிக்கை என்றாலும் வருத்தம்தான். இங்கே வருபவர்கள் குறைவு கவலைக்கிடமானது. அணையாவிளக்கில் இதுவும் ஒன்று. கவனிக்காது விட்டாலும் சுடர்ந்து கொண்டே இருக்கும்.

இங்கு கவிதை எழுத பலர் இருந்தாலும் அதை நடத்திச்செல்ல யாராவது ஒருவர் வேண்டும்.... என்பது நன்றாக புரிகின்றது. நான் மன்றம் வரும் இலட்சணத்தில் அது சாத்தியமில்லை... என்னோடு நீங்கள் தோள் கொடுப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.....மீண்டும் எழுவோம்
அவனைப்போலவே!

ஆதவனைப்போல நாமும் மீண்டும் எழுவோம்!!!

அமரன்
08-09-2008, 01:23 PM
இங்கு கவிதை எழுத பலர் இருந்தாலும் அதை நடத்திச்செல்ல யாராவது ஒருவர் வேண்டும்.... என்பது நன்றாக புரிகின்றது. நான் மன்றம் வரும் இலட்சணத்தில் அது சாத்தியமில்லை... என்னோடு நீங்கள் தோள் கொடுப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.....

ஆதவனைப்போல நாமும் மீண்டும் எழுவோம்!!!

அந்தக்கவிதை உங்களுக்காகவும்தான் நாரதரே.

தீபன்
08-09-2008, 04:36 PM
பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களை ஆயுதப்படையில் சேர்க்கக்கூடாது என்பது உலக விதி. எமது தேவைகளை நிறைவேற்ற விதிகளை உடைக்காதிருப்போம்.

ஓவியத்தில் எங்கும் வயது குறிப்பிடப்படவில்லை... அப்படியே குறிப்பிட்டாலும் சம்பந்தபட்ட சிறுவனின் நிஜமான உணர்வுதான் அது... அதிலென்ன தப்பு...
உங்கள் உலகவிதி உலகமெல்லா அலையும் தலைவிதிக்குள்ளானவர்களுக்கு பொருந்தாது...! ஏனெனில், இங்கு விதிகள் மீறப்படுவது தேவைக்கல்ல... இருப்பை உறுதிப்படுத்துவதற்கு. (நல்லா சொல்றாங்க விதி.... விதிப்படி நடப்பவற்றில்தான் விதிகளை பேணலாம்...)

பாலகன்
08-09-2008, 05:25 PM
நேர்க்கோட்டில் ஒரு விந்தை
ஆம் ஒரே கோட்டில் பார்ப்பதால்
சூரியனும் பறவைகளும்
அளவில் சமமாக இருக்குதே
கண்ணே அதுபோல நமக்கிடையே
உள்ள ஏற்ற இறக்கங்களும் காதல்
எனும் நேர்க்கோட்டில் சமன் ஆகிடுதே

அன்புடன்

சுஜா
08-09-2008, 06:22 PM
சார்பியல்

பூமி கோப்பையில்,
நீலத்தேநீரில் ,
சூரிய ரொட்டிகள் நனைக்கபட,
சார்பியல் தத்துவம் நிருபிக்கப்படுகிறது!

Narathar
09-09-2008, 02:28 AM
அரை வயிறு இரைக்கு-அக்
கரை செல்கின்றன
அந்தப் பறவைகள் மட்டுமன்று
இந்தப் பாசப்பறவைகளும் சேர்ந்து.

மிகவும் யதார்த்தமான வரிகள்..
பாராட்டுக்கள் அமரன்

Narathar
09-09-2008, 02:31 AM
இன்னும் என்ன கவலை
வா எழுந்திரு
இந்த விடியல் நமக்காக
வாழலாம் வா.....

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்........

என்ற பாடல் வரிகளை நினைவூட்டியது தங்கள் கவிதை, வாழ்த்துக்கள்

Narathar
09-09-2008, 02:38 AM
பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களை ஆயுதப்படையில் சேர்க்கக்கூடாது என்பது உலக விதி. எமது தேவைகளை நிறைவேற்ற விதிகளை உடைக்காதிருப்போம்.

உலக விதிகளை விதிப்பவர்களே அதை உடைக்கும் உபாயத்தை திரை மறைவில் செய்துகொண்டிருக்கும் போது......

தங்கள் தலைவிதியை நொந்துகொண்டு விதிகளை மீறுவோர் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

என்ன செய்வது இதுதான் உலகின் பொதுவிதியாகிப்போனதில் கவலைப்பட்டு தீபன் அப்படி எழுதிய்டிருப்பார்...

கண்டுகொள்ளாதீர்கள்


வறுமையின் நிறத்தை
கண்களால் விழுங்கிய படி
பாதி ஆடையில்
செழுமையைக் காட்டும்
மனிதர்கள் வாழுமுலகில்
வசிக்கப் படிக்காமல்
பறந்து செல்கின்றனவோ
பறவைகள்
ஆதி பகவனிடத்தில்
புதிய உலகம் கோர.

அந்தப்பறவைகளாவது விதியால் விதிகளைமீறாதவர்கள் வாழும் ஒரு புதிய உலகை பெற்றுத்தரட்டும் நமக்கு!

அதுதான் நமது அவா!!!

Narathar
09-09-2008, 02:44 AM
அந்தக்கவிதை உங்களுக்காகவும்தான் நாரதரே.

அப்படியே ஆகட்டும் அமரரே!!


ஓவியத்தில் எங்கும் வயது குறிப்பிடப்படவில்லை... அப்படியே குறிப்பிட்டாலும் சம்பந்தபட்ட சிறுவனின் நிஜமான உணர்வுதான் அது... அதிலென்ன தப்பு...


நமது பார்வைக்கு சரியெனப்படுவது இன்னொருவரது பார்வைக்கு தவறாக படலாம் அது அவரவர் சூழ்நிலைகளைப்பொறுத்தது..

உலக பொது விதியைப்பற்றி ரவுத்திரன் கூறியுள்ளார்... ஒரு வேளை அவர் நம்மூரில் பிறந்திருந்தால் அவர் பார்வையும் நோக்கும் வேறாக இருந்திருக்கும்.....

அவரவரை அவர்களது சுய விருப்பு வெறுப்புக்களோடு இருக்க அனுமதிப்போம்........ " இனி ஒரு புது விதி செய்வோம் "

Narathar
09-09-2008, 02:47 AM
நேர்க்கோட்டில் ஒரு விந்தை
ஆம் ஒரே கோட்டில் பார்ப்பதால்
சூரியனும் பறவைகளும்
அளவில் சமமாக இருக்குதே
கண்ணே அதுபோல நமக்கிடையே
உள்ள ஏற்ற இறக்கங்களும் காதல்
எனும் நேர்க்கோட்டில் சமன் ஆகிடுதே

அன்புடன்


காதல் பறவையையும் சூரியனையும் மட்டுமல்ல......
கருப்பன் சிவந்தவன்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
ஏழை பணக்காரன் என்று எல்லாவற்றையும் தான் சமப்படுத்திக்காட்டும்........

கல்யாணம் வரை !!! நாராயணா!!!! :)

வாழ்த்துக்கள் அழகிய மணவாளனுக்கு!!!

Narathar
09-09-2008, 02:49 AM
சார்பியல்

பூமி கோப்பையில்,
நீலத்தேநீரில் ,
சூரிய ரொட்டிகள் நனைக்கபட,
சார்பியல் தத்துவம் நிருபிக்கப்படுகிறது!

சார்பியலுக்கு இதோ ஒரு புது விதி.....
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Narathar
09-09-2008, 02:58 AM
நிழலுக்கு உயிர்கொடுத்த......

தீபன்
சிவா.ஜி
அமரன்
நம்பிகோபாலன்
ரவுத்திரன்
அழகிய மணவாளன்
சுஜா ஆகியவர்களுக்கு இ சன்மானம் வழங்கப்பட்டுள்ளது....... :)

இனி யாராவது இன்றைய படத்தை இடலாம்...........

(யாரும் கொடுக்காத பட்சத்தில் அடுத்த படத்தை இன்று மாலைக்குள் தருகின்றேன்.)

அமரன்
09-09-2008, 07:10 AM
http://i373.photobucket.com/albums/oo179/amaran2008/544804899_f1a7af3669_m.jpg

நீங்களும் சொட்டுங்கள்
கவிதைத் துளிகளை..

ஆதி
09-09-2008, 07:46 AM
துளி மணிகளால்
ஊசி இலைகளில்
வானம் கோர்த்த
அபாஸ்கஸ்..

மேக வண்டிட்ட
நீர் முட்டைகள்..

தாக பூமியின்
தகிப்பை தணிக்க உகுந்த
சரச துளிகள்..

சாம்பல் முகிலின்
தேம்பலில் பிறந்து
காம்புகளை தழுவி
கூம்பிய முகைகள்..

வெளிச்சத்தை சுமக்கும்
வெள்ளி சிதறல்கள்..

நீரும் செம்புல
சேரும் குழைவது போலே
மேல்கீழ் பாராமல்
மேவி வாழ
நீள்வானின் போதனைகள்..

நதி
09-09-2008, 08:09 AM
என்னங்க ஆதி.. அத்தனையையும் ஒத்தைக் கவிதையில் கோர்த்துவிட்டீர்கள். மற்றவர்களுக்கு மிச்சம் வெச்சது ரொம்பக் குறைச்சல். ம்.. கலக்கல்.

நம்பிகோபாலன்
09-09-2008, 08:26 AM
இன்று கீழே
விழும் ஒவ்வொரு துளியும்
நாளை உரமாகும்,
வீழ்வதும் எழுவதும்
சூரியனக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் பொருந்தும்
என்று உணர்த்துகிறது
நீர்துளிகள்...

அக்னி
09-09-2008, 08:36 AM
கற்றைக் கூந்தல்
சாரலில் நனைகையில்
உன் பின்
ஒளி(ர்)ந்தேன் நான்...

அத்தனை துளிகளும்
என் விம்பத்தைச்
சிறைப்படுத்திவிட்டன...

நீ சிலிர்க்கும்வரை,
உன் கூந்தலில்
என் முகத் துளிகள்...
நீ சிலிர்த்ததும்,
என் முகத்தில்
சில்லிப்பாய்த் துளிகள்...

என் விம்பச் சிறைகள்
சிதறியன என் முகத்தில்...
இன்பத் துளிகள்
சிந்தியன என் மனதில்...

உன் கூந்தல் நனைத்த சாரல்
என்னை நனைக்க,
நாணினாய் நீ...

எனக்குள் பெருகிய இன்பம்,
நாணமாய்ச் சொட்டியது
உன்னில்...

ஈரத்திற்குள்
தவிக்க வைக்கிறது தகிப்பு...

அக்னி
09-09-2008, 08:50 AM
இவை பன்னீர்த் துளிகளானால்,
அழகு...
இவை வியர்வைத் துளிகளானால்,
மதிப்பு...

நதி
09-09-2008, 09:12 AM
மரத்தைக் கழுவி
நிலத்தை தழுவி
பூக்களைப் பூப்பிக்கும்
இந்தத் துளிகளை
சிந்திய ஆகாயப் பூவே..

உன்னை பறிக்கவா
துடிக்கின்றன மரங்கள்
உன்னை நோக்கி
கைகளை நீட்டி
மனிதனைப் மாதிரி...

poornima
09-09-2008, 11:10 AM
ஊசியிலை நுனியில்
பூத்திருக்கும் கண்ணாடிப்
பூக்கள்..

முகம்பார்த்துக் கொள்ளும்
பூமி..

மலர்வது சாத்தியம் இல்லை
எனினும்
ஒவ்வொரு
சொட்டாய் உருண்டு உருண்டு
தரைக்குச் சென்று
தற்கொலை செய்துகொள்ளும்
அபலை மழைத்துளிகள்

நம்பிகோபாலன்
09-09-2008, 12:00 PM
உன் மீது படாத
அத்தனை
மழைத்துளிகளும்
தற்கொலை செய்து
கொள்ள போகிறதாம்
தயவு செய்து
உன் கைகளை கொடு
கொஞ்சம் சொர்க்கம்
கிடைக்கட்டும்
இந்த மழைத்துளிகளுக்கு....

தீபன்
09-09-2008, 04:29 PM
சிந்திய இரத்த துளிகளுக்காக
சிந்தப்படும்
கண்ணீர் துளிகள்!

Narathar
09-09-2008, 11:59 PM
நீங்களும் சொட்டுங்கள்
கவிதைத் துளிகளை...........

ஒரு அழகிய படத்தை கொடுத்து நம்மவர்களின் கவிதைத்திறமையை தட்டியெழுப்பிய அமரனுக்கு நன்றிகள் கோடி...........

படம் போட்டுட்டு... கவிதை கொடுக்காமல் இருந்தா எப்படி? உங்க பாட்டுக்கு ஒரு கவிதையயியும் எடுத்துவிடுங்க..............

நம்பிகோபாலன்
10-09-2008, 05:13 AM
மேகச்சிரிப்பில்
உதிர்ந்த முத்துக்களில்
உதிராத பூக்களாய்
மழைத்துளிகள்...

ஆதி
10-09-2008, 07:12 AM
தரைமீது தேவதையாய்
நடந்து வந்தவள்
தலைமீது விழ
சிலிர்த்தவள் சிரித்து பார்த்தாள்
துளிகளை..
சொக்கி உதிர்ந்தன
சொட்டாத சொட்டுக்கள்..

அந்த நினைவின் முடுச்சாய்
இந்த ஒல்லிய இலையில்
மெல்லிய மீதி துளிகள்..

அமரன்
10-09-2008, 08:06 AM
படம் போட்டுட்டு... கவிதை கொடுக்காமல் இருந்தா எப்படி? உங்க பாட்டுக்கு ஒரு கவிதையயியும் எடுத்துவிடுங்க..............
நமது மன்றக்கவிகள் அள்ளித்தந்த கவிதைகளுக்கு மத்தியில் நானும் ஒருகவித மாதிரியை கிள்ளித்தருகின்றேன்.தயவு செய்து
என்னைத் தீண்டாதே
காற்றுக் காதலனே..!!

இரவில் பாடிய மழை
மண் சேர மனமின்றி..
என் கைகளில் வாழ்கிறது
திவலைகளாய்..

இன்னும் சில
விரல்களின் நுனிகளில்
மரணத்தின் விளிம்பில்
துளித்துளியாய்..


ஆம்..

குமிழி வாழ்க்கையில்
யாருடைய வரவுக்காகவோ
காத்திருக்கின்றது
ஆகாயம் அழுத கண்ணீர்..
ஆகட்டும் அவை பன்னீர்.

தென்றலே தூது செல்
சுழழாய் நீ வேடம் கொள்.
காதலரையோ மழலயரையோ
விரைந்து வரச் சொல்..

என்னிலூஞ்சல் ஆட வை
மழையின் இறுதி ஆசையை
நிறைவேறச் செய்.

Narathar
10-09-2008, 04:26 PM
துளி மணிகளால்
ஊசி இலைகளில்
வானம் கோர்த்த
அபாஸ்கஸ்..

மேக வண்டிட்ட
நீர் முட்டைகள்..

தாக பூமியின்
தகிப்பை தணிக்க உகுந்த
சரச துளிகள்..

சாம்பல் முகிலின்
தேம்பலில் பிறந்து
காம்புகளை தழுவி
கூம்பிய முகைகள்..

வெளிச்சத்தை சுமக்கும்
வெள்ளி சிதறல்கள்..

நீரும் செம்புல
சேரும் குழைவது போலே
மேல்கீழ் பாராமல்
மேவி வாழ
நீள்வானின் போதனைகள்..

நம்ம ரவுத்திரன் சொன்னதுபோல......
எத்தனை எத்தனை உவமானங்கள்
உங்கள் கவிதையில் அப்பாடா!!!
கலக்கலோ கலக்கல் உங்கள் கவிதை..

வாழ்த்துக்கள்!


தரைமீது தேவதையாய்
நடந்து வந்தவள்
தலைமீது விழ
சிலிர்த்தவள் சிரித்து பார்த்தாள்
துளிகளை..
சொக்கி உதிர்ந்தன
சொட்டாத சொட்டுக்கள்..

அந்த நினைவின் முடுச்சாய்
இந்த ஒல்லிய இலையில்
மெல்லிய மீதி துளிகள்..

ஆஹா அதீத கற்பனை
அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

இன்னும் எழுதுங்கள்


இன்று கீழே
விழும் ஒவ்வொரு துளியும்
நாளை உரமாகும்,
வீழ்வதும் எழுவதும்
சூரியனக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் பொருந்தும்
என்று உணர்த்துகிறது
நீர்துளிகள்...

ஆஹா! உங்கள் கவிதை சிறிதானாலும்
அதன் அர்த்தம் இருக்கின்றதே......
தத்துவ முத்துக்கள்

வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்


உன் மீது படாத
அத்தனை
மழைத்துளிகளும்
தற்கொலை செய்து
கொள்ள போகிறதாம்
தயவு செய்து
உன் கைகளை கொடு
கொஞ்சம் சொர்க்கம்
கிடைக்கட்டும்
இந்த மழைத்துளிகளுக்கு....


மழைத்துளிகளுக்கு மோட்சம் தேடும்
உங்கள் கவிதை அழகு..............


மேகச்சிரிப்பில்
உதிர்ந்த முத்துக்களில்
உதிராத பூக்களாய்
மழைத்துளிகள்...

ஆஹா நம்பியின் மூன்றாவது கவிதை......... அதற்கு முதல் வாழ்த்து.

வாழ்த்துக்கள் நம்பிகோபாலன் இன்னும் நிறைய எழுதுங்கள்

Narathar
10-09-2008, 04:33 PM
கற்றைக் கூந்தல்
சாரலில் நனைகையில்
உன் பின்
ஒளி(ர்)ந்தேன் நான்...

அத்தனை துளிகளும்
என் விம்பத்தைச்
சிறைப்படுத்திவிட்டன...

நீ சிலிர்க்கும்வரை,
உன் கூந்தலில்
என் முகத் துளிகள்...
நீ சிலிர்த்ததும்,
என் முகத்தில்
சில்லிப்பாய்த் துளிகள்...

என் விம்பச் சிறைகள்
சிதறியன என் முகத்தில்...
இன்பத் துளிகள்
சிந்தியன என் மனதில்...

உன் கூந்தல் நனைத்த சாரல்
என்னை நனைக்க,
நாணினாய் நீ...

எனக்குள் பெருகிய இன்பம்,
நாணமாய்ச் சொட்டியது
உன்னில்...

ஈரத்திற்குள்
தவிக்க வைக்கிறது தகிப்பு...


இவை பன்னீர்த் துளிகளானால்,
அழகு...
இவை வியர்வைத் துளிகளானால்,
மதிப்பு...

அக்னி! இந்த வயசில் உங்களுக்கு எதைப்பார்த்தாலும் இப்படித்தான் தோணும்...... நாராயணா!!!

அருமையான கற்பனை வாழ்த்துக்கள்


மரத்தைக் கழுவி
நிலத்தை தழுவி
பூக்களைப் பூப்பிக்கும்
இந்தத் துளிகளை
சிந்திய ஆகாயப் பூவே..

உன்னை பறிக்கவா
துடிக்கின்றன மரங்கள்
உன்னை நோக்கி
கைகளை நீட்டி
மனிதனைப் மாதிரி...

மனிதனின் குணத்தை
இந்த நீர்த்துளில் பார்த்த உங்கள் கவிப்பார்வை பாராட்டத்தக்கது...

வாழ்த்துக்கள்...

உங்கள் கவிதைகள் வர வர மிக மெருகேறிவருவதை காண்கின்றேன்..... தொடர்ந்து எழுதுங்கள்


ஊசியிலை நுனியில்
பூத்திருக்கும் கண்ணாடிப்
பூக்கள்..

முகம்பார்த்துக் கொள்ளும்
பூமி..

மலர்வது சாத்தியம் இல்லை
எனினும்
ஒவ்வொரு
சொட்டாய் உருண்டு உருண்டு
தரைக்குச் சென்று
தற்கொலை செய்துகொள்ளும்
அபலை மழைத்துளிகள்

ரசிக்கவைத்தன உங்கள் வார்த்தை ஜாலங்கள்......

உங்கள் பார்வை வித்தியாசமானது!

வாழ்த்துக்கள்.. இன்னும் எழுதுங்கள்


சிந்திய இரத்த துளிகளுக்காக
சிந்தப்படும்
கண்ணீர் துளிகள்!

தீபனின் அதே அக்மார்க் பார்வை
பெயரைப்பார்க்காமல் சொல்லலாம்
இது தீபன் கவிதை என்று

இன்னும் எழுதுங்கள்.........
வாழ்த்துக்கள் தீபன் - உங்கள் கவிதைக்கு


நமது மன்றக்கவிகள் அள்ளித்தந்த கவிதைகளுக்கு மத்தியில் நானும் ஒருகவித மாதிரியை கிள்ளித்தருகின்றேன்.தயவு செய்து
என்னைத் தீண்டாதே
காற்றுக் காதலனே..!!

இரவில் பாடிய மழை
மண் சேர மனமின்றி..
என் கைகளில் வாழ்கிறது
திவலைகளாய்..

இன்னும் சில
விரல்களின் நுனிகளில்
மரணத்தின் விளிம்பில்
துளித்துளியாய்..


ஆம்..

குமிழி வாழ்க்கையில்
யாருடைய வரவுக்காகவோ
காத்திருக்கின்றது
ஆகாயம் அழுத கண்ணீர்..
ஆகட்டும் அவை பன்னீர்.

தென்றலே தூது செல்
சுழழாய் நீ வேடம் கொள்.
காதலரையோ மழலயரையோ
விரைந்து வரச் சொல்..

என்னிலூஞ்சல் ஆட வை
மழையின் இறுதி ஆசையை
நிறைவேறச் செய்.

அடடா என்ன வரிகள்
என்ன வரிகள்.....
இதில் கவிதை மாதிரி என்று "பிகு" வெறு.....

அழகிய ஓவியம் போல் வடித்துள்ளீர்கள் உங்கள் கவிதையை வாழ்த்துக்கள்

Narathar
10-09-2008, 05:27 PM
சொட்டிய கவிதைத்துளிகளுக்காக அன்புள்ளங்கள

ஆதி
நம்பிகோபாலன்
அக்னி
ரவுத்திரன்
poornima
தீபன்
அமரன்

ஆகியோருக்கு இ-பணம் கொடுத்தாயிற்று.
இனி அடுத்த படத்துக்கு போவோமா?

Narathar
10-09-2008, 05:42 PM
http://img34.picoodle.com/data/img34/3/9/10/f_backboneofim_84ee59d.jpg

இதோ அடுத்த படம்!
எங்கே உங்கள் கவிதைகள்
களமிரங்கட்டும்

தீபன்
11-09-2008, 02:00 AM
போர்க் காளை பூட்டி
கால வெள்ளம் பிளந்து
எல்லை நிலம் வரையும்
பிரம்மன் இவன் -
போராளி!

Narathar
11-09-2008, 07:15 AM
ஆஹா! அதே அக்மார்க் முத்திரைக்கவிதை.....
உங்களது கவிதைகள் எனக்கு ஒரு புது ஐடியாவை தந்துள்ளது
சீக்கிரமே அதை செயல்படுத்துவேன்....

நன்றி முதல் கவிதை தந்தமைக்கு!

அமரன்
11-09-2008, 07:51 AM
வெள்ளம் மேவிய வயலில்
நீரடிக்கும் பலகையினால்
பக்கத்து வயலுக்கு
பறக்கின்றன விதைகள்!!!

ஏரோட்டம்
விழலுக்கிறைத்த நீரோ!

poornima
11-09-2008, 07:57 AM
தேரோட்டம் போல்
நடக்கும் ஏரோட்டத்தில்
அச்சாணியாய் மூன்று
விலங்குகள்..

ஓரறிவு கூடப்பெற்ற
ஒரு விலங்கின்
ஆளுமையில்
திக்கித் திணறி
தேடலுடன் காளைகள்..

மூன்றின் முயற்சிகளுமே
வாழ்வின் ஜீவிதத்துக்கு..

நம்பிகோபாலன்
11-09-2008, 09:42 AM
என் அத்தை மகள்
காத்திருக்க
சீறி பாயும் காளைகளும்
தெரித்து விழுந்து வழிவிடும்
நீர் சொல்லும்
என் காதலை...

ஓவியன்
12-09-2008, 04:41 AM
http://img34.picoodle.com/data/img34/3/9/10/f_backboneofim_84ee59d.jpg

இதோ அடுத்த படம்!
எங்கே உங்கள் கவிதைகள்
களமிரங்கட்டும்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை,
சமூதாய வயலில்
ஆழக் கோடு கிழிக்கின்றன
காளை, பசுமாடு கூட்டணி...!!

(ஏரிழுக்கும் மாடுகளில் கறுப்பு வர்ண மாடு, பசு மாடுங்கோ....!! :icon_rollout: , அதுதான் அதற்கு மூக்கணாங் கயிறு மூக்கினுள்ளே குத்தவில்லை)

தீபன்
12-09-2008, 05:30 AM
ஆஹா! அதே அக்மார்க் முத்திரைக்கவிதை.....
உங்களது கவிதைகள் எனக்கு ஒரு புது ஐடியாவை தந்துள்ளது
சீக்கிரமே அதை செயல்படுத்துவேன்....

நன்றி முதல் கவிதை தந்தமைக்கு!

நன்றி நாரதரே...
(இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காம விடமாட்டியள்போல...:eek:)

அதென்ன ஐடியா... சஸ்பென்ஸ் வச்சிட்டு போயிட்டியள்...:sprachlos020:

நம்பிகோபாலன்
12-09-2008, 07:17 AM
காவியும் கருப்பும்
சேர்ந்த போட்டியில்
ஓட்டுபவன் (ஓட்டு போட்டவன்)
நிலமை
காய்ந்தே போனது
அவன் மேனி போல்...

நதி
12-09-2008, 06:18 PM
காவியும் கருப்பும்
சேர்ந்த போட்டியில்
ஓட்டுபவன் (ஓட்டு போட்டவன்)
நிலமை
காய்ந்தே போனது
அவன் மேனி போல்...

சபாஷ்..
பல உலக நாடுகளில்
இருகட்சிகள் மாறி மாறி ஆட்சி..
மக்கள் அடைந்ததோ அதிக வறட்சி.
ஆனாலும்
கடிவாளம் அவர்கள் கையில்..

Narathar
15-09-2008, 10:29 AM
ஒறே படம் பல பார்வைகள்! அதுதான் இந்த நிழலுக்கு உயிர் பகுதியின் உயிர்நாடி........


வெள்ளம் மேவிய வயலில்
நீரடிக்கும் பலகையினால்
பக்கத்து வயலுக்கு
பறக்கின்றன விதைகள்!!!

ஏரோட்டம்
விழலுக்கிறைத்த நீரோ!

அமரனின் கவிதையைப்பாருங்கள்....
அவர் பார்வை ஒரு கோணத்தில் பார்க்கிறதென்றால்...


தேரோட்டம் போல்
நடக்கும் ஏரோட்டத்தில்
அச்சாணியாய் மூன்று
விலங்குகள்..

ஓரறிவு கூடப்பெற்ற
ஒரு விலங்கின்
ஆளுமையில்
திக்கித் திணறி
தேடலுடன் காளைகள்..

மூன்றின் முயற்சிகளுமே
வாழ்வின் ஜீவிதத்துக்கு..


பூர்ணிமாவின் பார்வை இன்னொறு கோணத்தில் பார்க்கின்றது...
"மூன்றின் முயற்சிகளுமே
வாழ்வின் ஜீவிதத்துக்கு.."
என்று அழகாக சொல்லியிருக்கின்றார்...


என் அத்தை மகள்
காத்திருக்க
சீறி பாயும் காளைகளும்
தெரித்து விழுந்து வழிவிடும்
நீர் சொல்லும்
என் காதலை...

நம்ம நம்பிகோபாலனுக்கு இந்தப்படத்தைப்பார்த்து காதல் உணர்வு வந்திருக்கின்றது!!!

காத்திருக்கும் அத்தை மகளை தேடிச்செல்கிறது அவர் கவிதை....

கவிதை எழுதிய,.. எழுதப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Narathar
15-09-2008, 10:48 AM
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை,
சமூதாய வயலில்
ஆழக் கோடு கிழிக்கின்றன
காளை, பசுமாடு கூட்டணி...!!

(ஏரிழுக்கும் மாடுகளில் கறுப்பு வர்ண மாடு, பசு மாடுங்கோ....!! :icon_rollout: , அதுதான் அதற்கு மூக்கணாங் கயிறு மூக்கினுள்ளே குத்தவில்லை)

அடடா!!!!
எத்தனை விதமான ஆட்டோக்களை அனுப்பி நம்ம ஓவியனிடம் இந்த கவிதையை கறக்க வேண்டி வந்தது :eek: !!! நாராயணா!!!! :D

நம்ம ஓவியனுக்குத்தான் எத்தனை நுணுக்கமான பார்வை? காளை மாடு எது பசு மாடு எதுன்னு மூக்கணாங்கயிறை வச்சே கண்டு பிடிச்சுட்டார்!!! ( அட! அப்படியா??? ) வாழ்த்துக்கள்


நன்றி நாரதரே...
(இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காம விடமாட்டியள்போல...:eek:)

அதென்ன ஐடியா... சஸ்பென்ஸ் வச்சிட்டு போயிட்டியள்...:sprachlos020:


உசுப்பேத்தவில்லை!!
உண்மையைத்தான் சொன்னேனப்பு...... :D

சஸ்பென்ஸ் என்றால் அதுதான் சஸ்பென்ஸ் கொஞம் பொறுங்கள்

Narathar
15-09-2008, 12:00 PM
சபாஷ்..
பல உலக நாடுகளில்
இருகட்சிகள் மாறி மாறி ஆட்சி..
மக்கள் அடைந்ததோ அதிக வறட்சி.
ஆனாலும்
கடிவாளம் அவர்கள் கையில்..


ரவுத்திரன் கருத்தை வழிமொழிகின்றேன்..........

முதல் கவிதையில் காதல் என்றால்
இதில் அரசியல்

கலக்கல் , வாழ்த்துக்கள்

நதி
15-09-2008, 12:34 PM
நிழலுக்கு உயிர் உயிருடன் இருக்க அணிலாக ஒரு படம்..

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=15&pictureid=25

நிதர்சனம்
15-09-2008, 10:51 PM
வெட்டப்பட்ட சிறகுகள்
வளரவென
வெட்டியவரே நீர்
வார்த்தனர்.

உலகம் முன்னே பார்த்து
அமைதி என்று அமைதியானது.

பின்னிருக்கும் எமக்குத்தான்
தெரிகின்றது
சீழ் பிடித்து அழுகும் சிறகுகள்.

சமாதானத்திற்கான யுத்தம்
மெல்ல மெல்லக் கொல்லுது
சமாதான தேவதையை.

சிவா.ஜி
16-09-2008, 07:16 AM
முறிந்த சிறகுகளால்
முடங்கிவிட்ட தேவதை...
முன் ஜென்மத்தில்
முந்தைய இந்தியப்பெண்ணாய்
இருந்திருப்பாளோ....
மீண்டும் இன்று பிறந்தால்
வலிமையான சிறகுகளுடன்
வானத்தில் பறக்கலாம்....
இன்றைய இந்தியப்பெண்ணைப்போல....

poornima
16-09-2008, 07:17 AM
கொட்டும் மழைத்துளிகள்
கண்ணீருடன் கலந்து வழிய
சிறகுகள் சிலுவைகளாய்
கால் மடக்கி அமர்ந்திருக்கிறாள்
கண்ணீருடன் இந்த
சமாதான தேவதை...
........
........
ஏதேனும் காரணமிருக்கும்

தீபன்
16-09-2008, 07:37 AM
மூர்க்கமுடன் புறப்பட்ட
போர் (தே)வதை-
மறவர்களின் குருதி மழையில்
முடங்கிப்போய் இருக்கின்றாள்!

தீபன்
16-09-2008, 07:41 AM
வெள்ளுடை சாயம் கலைத்து
சமாதானம் பேசும் சாத்தானின்
நிஜம் காட்டியது-
தொண்டுத் தூறல்களின் வெளியேற்றம்!

அமரன்
16-09-2008, 08:15 AM
விளிம்பு நிலை மங்கையிவள்
விழுந்து மரிக்க நினைக்கிறாள்
இறக்கைகள் இருப்பது தெரியாமல்...

அக்னி
16-09-2008, 10:25 AM
சுதந்திரச் சிறகுகள் இருந்தும்
சிறகடிக்க முடியாமல்,
கட்டப்பட்ட கரங்கள்...

ஈரம் பட்ட சிறகுகளை
மட்டும்தான்
மெல்ல அசைத்து
உலர்த்த முடிகின்றது...

ஈரம் பட்ட கன்னங்களைத்
துடைக்கக்
கரங்களை அசைக்கவும்
முடியவில்லை...

தூறல்களில்
துடைக்கப்படாத கண்ணீர்
மறைக்கப்படுகின்றது...

நதி
16-09-2008, 12:00 PM
வெட்டப்பட்ட சிறகுகள்
வளரவென
வெட்டியவரே நீர்
வார்த்தனர்.

உலகம் முன்னே பார்த்து
அமைதி என்று அமைதியானது.

பின்னிருக்கும் எமக்குத்தான்
தெரிகின்றது
சீழ் பிடித்து அழுகும் சிறகுகள்.

சமாதானத்திற்கான யுத்தம்
மெல்ல மெல்லக் கொல்லுது
சமாதான தேவதையை.

பின்னிருக்கிறோம் என்று
நீங்களே சொன்ன பிறகு
என்னத்தை சொல்ல நான்..
முன்னுக்கு வரும் வரை
தொடரத்தான் செய்யுமிது.

விளிப்புகள் மாறினாலும்
வடிவங்கள் மாறினாலும்
மாறா பயங்கர யுத்தம்
ஆறா வடுவாக எங்கும்.

ஆறுதலடைய
சமாதானக் காதலியை தழுவுகிறார்கள்.
தழுவிய பிறகு;தம்
திருப்தி ஏப்பத்துடன் நழுவுகிறார்கள்.

சிதைக்கப்பட்ட பெண்ணோ
புதையுண்டு போகத் நினைக்க
அதைக்கண்ட நீங்களோ
பதை பதைக்க
காதைக் கொடுப்பார் எவருமில்லை.

ஒருவேளை;அவள்
புதைந்தாலும் விதையாக
புதைபவளெனும் உண்மை
அறிந்தனரோ யாவரும்.

கவிதைக்கு 25 இ~காசு ;உங்கள்
திறமைக்கு பரிசு இக்காசு.

நதி
16-09-2008, 12:08 PM
முறிந்த சிறகுகளால்
முடங்கிவிட்ட தேவதை...
முன் ஜென்மத்தில்
முந்தைய இந்தியப்பெண்ணாய்
இருந்திருப்பாளோ....
மீண்டும் இன்று பிறந்தால்
வலிமையான சிறகுகளுடன்
வானத்தில் பறக்கலாம்....
இன்றைய இந்தியப்பெண்ணைப்போல....

அந்தரத்தில் பறக்கும் பட்டம்
வாலறுந்தாலும் நூலறுந்தாலும்
தரைதட்டும்; சில குழந்தைகளோ
கைதட்டும்;உங்கள் கவிதையோ
கைகொட்டுகிறது;அந்த
மழலைக*ளைப் பார்த்து;அடை
மழைதனைப் போன்று..

விண்ணடைந்த இக்காலப்பெண்டிர்
சொன்னாரோ சேதி இவளுக்கு
மாறிவிட்டது காலமென்று..

மாரி காலத்தில் இங்குவந்து
பூரிப்படைகிறாளோ தேவதை.
இனி அவள் புதிதாய்
பிறந்தாலும் பிறப்பாள்.

Narathar
16-09-2008, 01:07 PM
நிழலுக்கு உயிர் உயிருடன் இருக்க அணிலாக ஒரு படம்..அணிலாகவல்ல! திரியின் நாயகனாக ஆகியிருக்கின்றீர்கள், வாழ்த்துக்கள்

Narathar
16-09-2008, 06:38 PM
சமாதானத்திற்கான யுத்தம்
மெல்ல மெல்லக் கொல்லுது
சமாதான தேவதையை.

அருமையான கவிதை வாழ்த்துக்கள்!!!!
நிழலுக்கு உயிர் பகுதிக்கு இன்னொரு கவிஞர் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...........

தொடர்ந்து எழுதுங்கள்!

அமரன்
16-09-2008, 07:10 PM
http://i373.photobucket.com/albums/oo179/amaran2008/Gallagher_Steve_onisland.jpg
கறுப்பும் வெள்ளையும்
கலந்த நிழலுக்கு
எண்ண வண்ணங்களை பூசுங்கள்

தீபன்
17-09-2008, 01:27 AM
உலகம் முன்னேறுகிறதா...
யார் சொன்னது..?
44 ஆண்டுகளுக்குமுன்
வியட்னாமில்...
இன்றும் அதே நிலை
நம் தேசத்தில்!

நமக்கில்லை என ஒதுங்கியிருப்போரே
கவனம்....
நாளை இது
உங்களுக்காயுமிருக்கலாம்...!

பாபு
17-09-2008, 04:53 AM
எதுவுமே அறியாத
உலகமே புரியாத
வயதில்
ஏழ்மையை
உணர்ந்து விட்டான் !

உணர்த்தி விட்டான் ??

சிவா.ஜி
17-09-2008, 05:20 AM
இதோ இங்குதான் என் அன்னை
என்னைப் பெற்றெடுத்தாள்
இங்குதான் என்னைக் கண்ணே மணியே என
கொஞ்சி வளர்த்தாள்....
இங்குதான் என் அன்னையும், பிதாவும்
இல்லறத்தில் இன்புற்று இணைந்திருந்தார்கள்
இங்குதான் என் எல்லா சந்தோஷமும் இருந்தது
எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது...
விதி என்னை விளையாட வெளியேற்றிவிட்டு...
என் எல்லாவற்றையும் எடுத்துக்கொன்டது...
அதோ நிற்கும் அவர்களும் நானும்
இப்போது வலியுணர்ந்த வலிமையாளர்கள்
அடுத்து ஒரு அழிவுக்கரம்
எங்களை அணைக்காதிருந்தால்
வாழ முயல்கிறோம்....
வளர்ந்து பெரிதாகி போரில்லா உலகை
ஆள முயல்கிறோம்....

நம்பிகோபாலன்
17-09-2008, 07:03 AM
கலைந்த கேசத்தில்
வகிடை தேடுவதை போல
சிதைந்த தேசத்தில்
வாழ்கையை தேடுகிறேன்
வலியுடன்
களவு போன கனவில்
எஞ்சியிருப்பது என் கண்முன்னே
ஒரு குவழை மட்டுமே
என்று தனியும்
இந்த தீவிரவாத தாகம்....(கண்ணீருடன்)

தீபன்
17-09-2008, 07:26 AM
நாட்டுக்குள் நரிகள் புகுந்ததால்
காட்டுக்குள் எங்கள் வாழ்க்கை...
வேட்டுக்கள் புலியை விரட்ட
வீட்டுக்குள் எலிகள் விருந்து...
பதுங்கியவை பாய்கையில்-காட்டுள்
ஒதுங்கியவர்கு விடிவு வரும்...
விடியல் வர விலையாய்
இளையவனும் காவலிருப்பான்!

ஆயிரமாவது பதிவாய் என் பதிவு....!:icon_b: