PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!



Pages : 1 2 [3] 4 5 6 7 8

தீபன்
12-07-2008, 12:26 AM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/Blind-Faith.jpg

உலக வலத்தில் நிலவு ராஜா...
"அடடா... இது அதுவல்லவா...
இரவில் நடமாடினால்
இருக்காது உயிரல்லவா...
பேசாமல் முகம்மூடி
பேய் நாட்டை கடந்திடுவோம்...!"

தீபன்
12-07-2008, 12:33 AM
ஓவியனின் பதில் இப்படியும் இருக்கலாம்!!(இது ஓவியனுக்குப் பொருத்தமான அவதார் மற்றும் கையொப்பம் தான்)

என்னுள் வியாபித்த
பாரதியை நான்
ஏட்டில் வரைந்த பொழுது
என்னைப் படம் பிடித்தது
யார்?
ஓவியனின் குடும்பக்கதயை எல்லாம் மன்றத்துக்க இழுக்கணுமா கண்மணிக்கா..?:sprachlos020:

கண்மணி
12-07-2008, 01:59 AM
அனலுக்கும் புனலுக்கும்
திருமணம்
அப்பன் சூரியன் மனம்
கிரஹணம்!

நல்ல விதமாத்தானே சொல்லி இருக்கேன் தீபன்! வேணாம்னு தோணினா சொல்லுங்க எடுத்திறலாம்.

ஓவியன்
12-07-2008, 02:08 AM
சொல்லியும் இருக்கலாமே!!!

ஊமைக் குத்துக்கள் வாங்கி:lachen001::lachen001:
உடலெல்லாம் உக்கிரம் ஏறிய
உஷ்ண ஓவியனின்:lachen001::lachen001:
தூரிகை வேகத்தில்
காகிதங்கள் எரிகின்றன.:icon_b::icon_b:

ஆமா இங்கே என்ன நடக்குது...??
உடம்பெல்லாம் உக்கிரமேறிய உஸ்ணமென்பது
என்னவோ உண்மைதான் - ஆனால்
ஊமைக்குத்து வாங்கியதென்பதெல்லாம்
கொஞ்சம் ஓவருங்கோ............!!! :D

ஓவியன்
12-07-2008, 02:13 AM
ஓவியனின் பதில் இப்படியும் இருக்கலாம்!!(இது ஓவியனுக்குப் பொருத்தமான அவதார் மற்றும் கையொப்பம் தான்)

என்னுள் வியாபித்த
பாரதியை நான்
ஏட்டில் வரைந்த பொழுது
என்னைப் படம் பிடித்தது
யார்?

பாரதியைப் படித்தேன்
பாரதியை வரைந்தேன்
பாரதியின் பாதையில்
வாழ நினைக்கிறேன்
அது ஒன்றும்
தப்பில்லைத்தானே...!! :D

தீபன்
12-07-2008, 02:20 AM
அனலுக்கும் புனலுக்கும்
திருமணம்
அப்பன் சூரியன் மனம்
கிரஹணம்!

நல்ல விதமாத்தானே சொல்லி இருக்கேன் தீபன்! வேணாம்னு தோணினா சொல்லுங்க எடுத்திறலாம்.

எதுக்கு எத சொல்றிங்கன்னு புரியல...?
சும்மா ஜாலிக்குத்தான் நானும் சொன்னன்... சீரியசாகிட்டிங்களா கண்மணிக்கா...

பூமகள்
12-07-2008, 05:47 AM
நெருப்பு கால்கள்
நீரலை தொடுகையில்..
உருவான
உஷ்ண சலனத்தில்..

சூரியன் கதவடைத்து
காத்துக் கொண்டதோ தன்னை??!!

பூமகள்
12-07-2008, 05:57 AM
நீர்ம பரப்புகளின்
நித்திய சாலையில்
கனன்று கொண்டிருக்கும்..
கரை தொடும் வேட்கை..

நெருப்புப் பிளம்புகாக
உருவெடுக்கின்றனவோ??!!


#########################################

விண்ணில் விழுந்த
வைர மோதிரம்..
எழுந்து எடுக்க
சுனாமியாக முயல்கிறதோ
அலைகடல்??!!


#########################################

கடல்த் தாயை
கருணையின்றி..
வெட்டியெடுக்கும்...
கயவர்கள் மீது
தாய் காட்டும்
எச்சரிக்கை தீப்பந்தமோ??!!

#########################################

ஓவியன்
12-07-2008, 06:04 AM
உன் ரெளத்திரத்தை
புனலிலும் ஏற்றி
நம்மை அழிக்க
வரும் ஆதவனே
கொஞ்சம் நில்...!!

உன்னைத் தேவனாக்கி
உனையே சுற்றிச் சுழலும்
அடிமைகள் தானே நாம்..!!

ஆக்டிக் முதல்
அந்தாட்டிக்கா வரை
ஒன்றாகவே உன்னைச்
சுற்றி வணங்குகிறோம்..!!

பணிவதில் கூட நாம்
பாரபட்சம் காட்டியதில்லை
ஆனால், நீ...!!

சில இடங்களைக்
கருக்கி எரிக்கிறாய்,
சில இடங்களைக்
கவனிக்க மறுக்கிறாய்..!!

ஆதவனே சொல்லு ஏன்
உனக்கிந்த பாரபட்சம்..??

மெளனிக்கிறாய் வழமை போல்
பரவாயில்லை, பாரபட்சம்
காட்டுவனாகவே இருந்து விடு
என்றுதானே இத்தனை நாள்
பொறுத்திருந்தோம்....!!

இன்று பொங்கி வருகிறாய்
நாம் பொங்கி வணங்குவதையும்
மறந்து விட்டு.....!!

சுட்டெரித்தால் தான்
ஆறும் உன் சினமெனின்
பரவாயில்லை சுட்டெரி..!!

ஆனால், சுட்டெரித்த பின்
நமக்காக இரங்கி
ஒரு துளி கண்ணீராவது
விட்டு விடு..!!

அந்தக் கண்ணீர்த்துளியாவது
படைக்கட்டும்
புதியதோர் உலகத்தை..!!

பூமகள்
12-07-2008, 06:27 AM
உன் ரெளத்திரத்தை
புனலிலும் ஏற்றி
நம்மை அழிக்க
வரும் ஆதவனே
கொஞ்சம் நில்...!!

உன்னைத் தேவனாக்கி
உனையே சுற்றிச் சுழலும்
அடிமைகள் தானே நாம்..!!

ஆக்டிக் முதல்
அந்தாட்டிக்கா வரை
ஒன்றாகவே உன்னைச்
சுற்றி வணங்குகிறோம்..!!

பணிவதில் கூட நாம்
பாரபட்சம் காட்டியதில்லை
ஆனால், நீ...!!

சில இடங்களைக்
கருக்கி எரிக்கிறாய்,
சில இடங்களைக்
கவனிக்க மறுக்கிறாய்..!!

ஆதவனே சொல்லு ஏன்
உனக்கிந்த பாரபட்சம்..!!

மெளனிக்கிறாய் வழமை போல்
பரவாயில்லை, பாரபட்சம்
காட்டுவனாகவே இருந்து விடு
என்றுதானே இத்தனை நாள்
பொறுத்திருந்தோம்....!!

இன்று பொங்கி வருகிறாய்
நாம் பொங்கி வணங்குவதையும்
மறந்து விட்டு.....!!

சுட்டெரித்தால் தான்
ஆறும் உன் சினமெனின்
பரவாயில்லை சுட்டெரி..!!

ஆனால், சுட்டெரித்த பின்
நமக்காக இரங்கி
ஒரு துளி கண்ணீராவது
விட்டு விடு..!!

அந்தக் கண்ணீர்த்துளியாவது
படைக்கட்டும்
புதியதோர் உலகத்தை..!!
ஹேட்ஸ் ஆஃப் ஓவியன் அண்ணா...!! :icon_b::icon_b:

இதை மின்னிதழில் வெளியிட எனது இதயப் பூர்வமான பரிந்துரை...!!

ஓவியன் அண்ணா பேக் டு தி ஃபாம் ஆயாச்சு போல இருக்கே...!! :icon_b::icon_rollout:

கலக்குங்க ஓவியண்ணா... கூடவே வருகிறோம்.... திமிங்கிலம் பின்னால் வரும்.. குட்டி மீன்கள் போல...!! ;)

சிவா.ஜி
12-07-2008, 07:21 AM
கறுப்புச்சூரியன்
கற்றுக்கொடுக்கும் பாடம்......
ஜொலிப்பதால் ஜெயித்து விட்டதாய்
குதிக்காதே.....!
உலகையே வென்றவனையும்
ஏதோ ஒரு நிகழ்வு
கிரகணமாய் மறைத்துவிடும்....

சிவா.ஜி
12-07-2008, 07:23 AM
ஆரோக்கியமான விமர்சனங்களால் கவிதைகளின் தரமுயர்த்தும் கண்மணிக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் மற்றும் பாராட்டுகள். பணமுடிப்புகளுக்கு என்னுடைய பங்காய் அவருக்கு ஐந்தாயிரம் காசுகள்.

ஓவியன்
12-07-2008, 07:29 AM
கலக்குங்க ஓவியண்ணா... கூடவே வருகிறோம்.... திமிங்கிலம் பின்னால் வரும்.. குட்டி மீன்கள் போல...!! ;)

திமிங்கலமா..?? :sprachlos020:

தமிழும் ஆங்கிலமாக, தமிங்கலமாக இருக்கும் எனக்கு இப்படி ஒரு வாழ்த்தா...?? :D
நன்றி பூமகள்..!!

கண்மணி
12-07-2008, 07:32 AM
நெருப்பு கால்கள்
நீரலை தொடுகையில்..
உருவான
உஷ்ண சலனத்தில்..

சூரியன் கதவடைத்து
காத்துக் கொண்டதோ தன்னை??!!


சூரியன் கதவடைத்ததா? இல்லை சூரியன் கண்ணில் தூசி விழ சூரியன் கண்ணைக் கசக்குதா பூவக்கா?


சூரியன் கண்மூட
அனல் புனலில்
ஒளிந்து கொள்ள
ஓடிக் கொண்டிருக்கிறது

இயற்கையின் கண்ணாமூச்சி விளையாட்டு
இன்னும் எத்தனையோ!!!...

pkarthi28
12-07-2008, 07:43 AM
எம்மலர் தரும் இம்மனம்,
இப்பிஞ்சு மழலையின் நறுமணம்...,
செந்தமிழில் கவிதைகள் பல்லாயிரம்,
உன் மழலை மொழிதான் அதற்கு மணிமகுடம்..,
வேறெங்கு பெறுவாய் நிம்மதி,
இந்த அன்னை மடியே உன் சந்நிதி..,
அன்னையாக்கினாய் என்னை,
இந்த முதல் முத்தமே என் காணிக்கை..! :)

கண்மணி
12-07-2008, 07:48 AM
நீர்ம பரப்புகளின்
நித்திய சாலையில்
கனன்று கொண்டிருக்கும்..
கரை தொடும் வேட்கை..

நெருப்புப் பிளம்புகாக
உருவெடுக்கின்றனவோ??!!


#########################################

விண்ணில் விழுந்த
வைர மோதிரம்..
எழுந்து எடுக்க
சுனாமியாக முயல்கிறதோ
அலைகடல்??!!


#########################################

கடல்த் தாயை
கருணையின்றி..
வெட்டியெடுக்கும்...
கயவர்கள் மீது
தாய் காட்டும்
எச்சரிக்கை தீப்பந்தமோ??!!

#########################################

1. நெருப்புப் பிளம்புகளாக உருவெடுக்கும் வேட்கை.. நல்ல கற்பனை..
வேட்கை கடலுக்கு. உருகியது பாறைகள்.

அலைகளின் ஓயாத முயற்சி, காதல் கனலை மூட்டி கற்களையும் உருக வைத்து விட்டது என அர்த்தம் ஒளிந்து கொண்டிருக்கிறது..

2. வைரமோதிரம். ஆமாம் சூரிய கிரஹணத்தின் இந்த நிலைய அப்படித்தானே அறிவியலார் சொல்கின்றனர். அலை கை நீட்டி எடுக்க முயற்சிக்கிறது. அப்படியென்றால் அங்கே வெம்பி வெந்து வழிவது கணவன் தான்.

வைர மோதிரம் கேட்டு
அலைக்கை நீட்டும்
கடல் மனைவியின் மீது
எரிந்து விழுகிறானோ
நிலமகன்.

3. கடலை வெட்டுகின்றனரா? சேது சமுத்திரத் திட்டத்தைச் சொல்கின்றீர்களா? என்னவோ சொல்ல வந்திருக்கீங்க.. முழுசா வரலையே அக்கா,,,

கண்மணி
12-07-2008, 08:12 AM
கறுப்புச்சூரியன்
கற்றுக்கொடுக்கும் பாடம்......
ஜொலிப்பதால் ஜெயித்து விட்டதாய்
குதிக்காதே.....!
உலகையே வென்றவனையும்
ஏதோ ஒரு நிகழ்வு
கிரகணமாய் மறைத்துவிடும்....

கிரஹணம் கறையல்ல
நீ சூரியனாய் இருக்கும் வரை..

அனலும் புனலும்
அருகருகில்
ஒளியும் இருளும்
அருகருகில்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டு
மனிதர்கள் நாம்தான்
தனிப்பட்டுப் போய்


இல்லையா சிவாஜி அண்ணா!

கண்மணி
12-07-2008, 09:24 AM
உலக வலத்தில் நிலவு ராஜா...
"அடடா... இது அதுவல்லவா...
இரவில் நடமாடினால்
இருக்காது உயிரல்லவா...
பேசாமல் முகம்மூடி
பேய் நாட்டை கடந்திடுவோம்...!"


இங்கே பகலில் சூரியனே நடமாட முடியாமல் அல்லவா முகம் மூடிக்கொண்டு ஓடுகிறான்.??:confused::confused::confused:

கண்மணி
12-07-2008, 09:28 AM
ஆர்ப்பரிக்கும் கடல்
அனல் பறக்கும் நிலம்
அதனால் ஆடிப்போன சூரியன்


சூரியருக்கே கண் கூசிற்றோ
எரிமலையின் தீப்பிழம்பை பார்த்து
அதனால் தான் கண்மூடிக்கொன்டதோ


இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான் இல்லையா! நாகரீகம் தெரிந்த சூரியன். :D

கண்மணி
12-07-2008, 10:01 AM
ஒளியின் கையில்
இரவின் கழுத்து

ரோக (அறுந்த) விரலில்
ரத்தின (அவிழாத) மோதிரம்

சூரியனுக்கு விழுந்த சொட்டை

உண்மையின் பிந்தலை

நெருப்பு முட்டையின்
கருப்பு கரு
இறும்பு தகட்டின்
பழுத்த நுனி

இருட்டு கிணற்றின்
வெளிச்ச விளிம்பு

இந்த முடியை
யார்வைத்தார்
அந்த ஏசுவின் தலையில் ?

கடல் மகளை பார்த்து
கண்ணடித்து
அந்தப்புறத்துக்கு
அழைக்கிறானோ
சூரிய கயவன்.. ?

எந்த யசோதை
திறக்க சொன்னாளோ
தீ கண்ணன் வாயில்
தெரிகிற இருண்ட உலகம்

பலரது மனதின் அடிபாகம்..

வரிய உழவனுக்கு
வழங்கப்படும் மானியம் போன்று
ஒரத்திம் மட்டும்
ஒளி படிந்த
இருட்டு தட்டு..!


சூரிய கிரஹணத்திற்கு மட்டுமேயான ஒரு கவிதை.. பல சிறிய கவிப்பூக்களைத் தொடுத்து சின்னச் சரமாக...

இந்தச் சூரியனைக் கண்டால் எப்படியெல்லாம் தோன்றுகிறது..

இருட்டின் கழுத்தை நெரிக்கும் ஒளிவட்டம்.. வெறும் கிரகணத்தை மட்டும் பார்க்கும் பொழுது சரி ஆனால் சுற்றிலும் இரூண்ட வானம், சற்றே தெரியத் தொடங்கி இருக்கும் நட்சத்திரம்???? வெளிச்சத்தின் கையில் இருளா, இருட்டின் கையில் வெளிச்சமா?

சூரியனுக்கு விழுந்தச் சொட்டை???
உண்மையின் பின் தலை???

சூரியச் சொட்டையன் மாட்டிக் கொண்ட பொய் முடி, தொப்பி (விக்) என்று வேண்டுமானால் சொல்லலாம்.. ஹி ஹி ஹி..

உண்மை என்று புறங்காட்டி இருக்கிறது ஆதி?

அழகோடுச் சேர்த்து அர்த்தப் பொதிவும் சேர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கண்மணி
12-07-2008, 10:04 AM
கருமேகத்தில்
வெட்க்கத்தில் மறைய
முயல்கிறாய் நீ
உன்னில்
காதலை பார்த்த
சந்தோஷத்தில்
ஆர்ப்பரிகிறேன் கடலாய் நான்....

கடலின் காதல் சூரியனுக்கு வெட்கம். சூரியனின் வெட்கம் கடலின் சந்தோசம்

மாற்பட்டச் சிந்தனை நம்பி!

கண்மணி
12-07-2008, 10:06 AM
அலையின் கொந்தளிப்பு
ஆக்ரோசமான கடலலை
ஆகாரத்தினையே விடமாக்கும் சூரியன்
மத்தியில் பூலோக வாழ்க்கை....



.

நல்ல முயற்சி விராடன். ஆனால் பாவம் சூரியன்.!! அனாவசியமாய்ப் பழி..:confused::D

ஓவியன்
12-07-2008, 10:41 AM
தன் தேகத்தில்
தங்கத்தைப் பூசி,
தன்னைச் சுற்றும்
பூமிக் காதலியைத்
தேடி மோகத்துடன்
வருகிறானா சூரியன்..!!

meera
12-07-2008, 11:06 AM
யாரோடு சங்கமிக்க
இப்படி மதிமயங்கி
நிற்கிறாய்?
எரிமகளோடா? கடல் மகளோடா?

ஓவியன்
12-07-2008, 11:16 AM
யாரோடு சங்கமிக்க
இப்படி மதிமயங்கி
நிற்கிறாய்?
எரிமகளோடா? கடல் மகளோடா?

ஒவ்வாத முனைகள்தானே
கவரும் மீரா..!!

அதனால் நிச்சயமாக
கடல்மகளோடுதான்..!! :)

Narathar
12-07-2008, 11:22 AM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/Blind-Faith.jpg

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நீரின் மேலுள்ள
நெருப்பின் காதலுக்கு
வான் கொண்டுவந்த
திரும(ர)ண மோதிரம்

ஓவியன்
12-07-2008, 11:44 AM
நீரின் மேலுள்ள
நெருப்பின் காதலுக்கு
வான் கொண்டுவந்த
திருமண மோதிரம்

அது பலருக்கு திரு மரண மோதிரம்...!! :frown:

Narathar
12-07-2008, 12:04 PM
அது பலருக்கு திரு மரண மோதிரம்...!! :frown:

இயற்கையின் சீற்றம்
இயற்கையின் பிரிவு
இயற்கையின் சேர்வு
இயற்கையின் இன்பம்
இயற்கையின் துன்பம்
இயற்கையின் சூடு
இயற்கையின் குளுமை

எல்லாம் அளவுக்கு மிஞ்ஞினால் "திரு மரணம்" :angel-smiley-026: தான் நமக்கு!~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நன்றி ஓவியரே எடுத்துக்கொடுத்தற்கு

மன்மதன்
12-07-2008, 01:36 PM
அழகான படம் நாரதரே..

சந்திரன்
புதுசா மோதிரம்
வாங்கியிருக்கிறதாம்..
மேகக்கூட்டங்கள்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கின்றதே..

(இது கவிதை இல்லை..!)

பாலகன்
12-07-2008, 02:06 PM
பஞ்ச பூதங்களின்
கோரத்தாண்டவம்
பகலும் இரவும்
சேர்ந்த கலவை
சூரியக் கதிர்கள்
மறைக்கப்பட்டதால் தானோ
மேகங்கள் அந்த பணியை
எடுத்துக்கொன்டன
இதுவல்லவோ குருபக்தி

கண்மணி
12-07-2008, 02:18 PM
தன் தேகத்தில்
தங்கத்தைப் பூசி,
தன்னைச் சுற்றும்
பூமிக் காதலியைத்
தேடி மோகத்துடன்
வருகிறானா சூரியன்..!!

எல்லாம் சரி ஓவியன் வருவது பூமியா சூரியனா?

கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு
ஸ்டைலாய் சூரியன்
கொதித்தும் குளிர்ந்தும் பூமிக்காதலி
ஊடலும் கூடலும்
அழகுதான்

கண்மணி
12-07-2008, 02:20 PM
யாரோடு சங்கமிக்க
இப்படி மதிமயங்கி
நிற்கிறாய்?
எரிமகளோடா? கடல் மகளோடா?

மதிமயக்கம் தான்.. :icon_b:
அழகானக் கற்பனை மீரா

கண்மணி
12-07-2008, 02:24 PM
எம்மலர் தரும் இம்மனம்,
இப்பிஞ்சு மழலையின் நறுமணம்...,
செந்தமிழில் கவிதைகள் பல்லாயிரம்,
உன் மழலை மொழிதான் அதற்கு மணிமகுடம்..,
வேறெங்கு பெறுவாய் நிம்மதி,
இந்த அன்னை மடியே உன் சந்நிதி..,
அன்னையாக்கினாய் என்னை,
இந்த முதல் முத்தமே என் காணிக்கை..! :)

தாமதமானக் கவிதை என்றாலும் மிக அழகானக் கவிதை.
மழலையும் மணமும் அதன் கொஞ்சலும் ஒப்பில்லாதவை..

ஆனால் அன்னையே அன்னை மடியே உன் சந்நிதி எனச் சொல்வதுதான் கொஞ்சம் இடிக்கிறது கார்த்தி..!

உங்களின் சிந்தனைக் கோணம் அழகாய் இருக்கிறது. நிறைய எழுதுங்கள்.

கண்மணி
12-07-2008, 02:43 PM
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நீரின் மேலுள்ள
நெருப்பின் காதலுக்கு
வான் கொண்டுவந்த
திரும(ர)ண மோதிரம்

ஒற்றை மோதிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதன்னா?:aetsch013:
அதனால் தான் நெருப்புக் குழம்பாய் நிலம்
இன்னொரு மோதிரம் வடிக்கிறதோ?

கண்மணி
12-07-2008, 02:44 PM
அழகான படம் நாரதரே..

சந்திரன்
புதுசா மோதிரம்
வாங்கியிருக்கிறதாம்..
மேகக்கூட்டங்கள்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கின்றதே..

(இது கவிதை இல்லை..!)

சூரியனல்லவோ அது?

இது விமர்சனம் இல்லை!

கண்மணி
12-07-2008, 02:47 PM
பஞ்ச பூதங்களின்
கோரத்தாண்டவம்
பகலும் இரவும்
சேர்ந்த கலவை
சூரியக் கதிர்கள்
மறைக்கப்பட்டதால் தானோ
மேகங்கள் அந்த பணியை
எடுத்துக்கொன்டன
இதுவல்லவோ குருபக்தி

அழகிய மணவாளன்..

போனப் படத்திற்கு பில்லாவாக இருந்தீர்கள்.. சரி

உச்சிப் பொட்டுத் தெறிக்க
உள்ளே வெடி வெடிக்க

அப்படின்னு பாட்டுப் பாடுவீங்கன்னு நினைச்சா பேரையே மாத்திகிட்டு ஆளே மாறி வந்து நிக்கிறீங்க...

ஒரே ஒரு சந்தேகம்.. மேகங்கள் எடுத்துகிட்ட அந்தச் சூரியப் பணி என்னங்க?
:confused::confused::confused:

கண்மணி
12-07-2008, 02:47 PM
இனி யாராவது அடுத்தப் படம் கொடுக்கலாமே!!!

பூமகள்
12-07-2008, 03:06 PM
நான் பதிக்கலாமா கண்மணி அக்கா??!!

http://img32.picoodle.com/img/img32/4/7/12/poomagal/f_fu263877m86m_fba28f2.jpg

mukilan
12-07-2008, 03:34 PM
நான் பதிக்கலாமா கண்மணி அக்கா??!!

கேரட் உண்ணும் முயலா? முன்னர் ஒரு தேவதை படம் இங்கு பார்த்தேனே?

பூமகள்
12-07-2008, 03:42 PM
கேரட் உண்ணும் முயலா? முன்னர் ஒரு தேவதை படம் இங்கு பார்த்தேனே?
தேவதைப் படம் பெரிதாக இருந்ததால் அதே தேவதையை மறுபடி சிறியதாக்கி பதித்திருக்கிறேன் முகில்ஸ் அண்ணா..!!:icon_rollout:

பாலகன்
12-07-2008, 04:24 PM
அழகிய மணவாளன்..



ஒரே ஒரு சந்தேகம்.. மேகங்கள் எடுத்துகிட்ட அந்தச் சூரியப் பணி என்னங்க?
:confused::confused::confused:

சூரிய கதிர்கள் போல மேகங்கள் இருப்பதால் அப்படி சொன்னேன்.............

அழகி

யவனிகா
12-07-2008, 04:53 PM
பறக்கும் தேவதைகள்
நடந்து பார்த்ததில்லை...
கால்பாவாத தேவதைபோல
வான் வெளி தாண்டியும்
அலையும் கவிதைகள்...

என்றேனும்,
ஒற்றை நட்சத்திரம் மட்டும்
ஒளிரும் ராத்திரியின் நிசப்சத்தில்
மொட்டைமாடி தரைக்குளுமை
முதுகுணரும் அந்த வேளை
தென்னைமர நிழல்
இருட்டின் நிறத்தில்
என் மீது கவிந்திருக்கும் கவின்பொழுது
பறந்து செல்லும் என் கவிதை
படித்து விட்டு...
நின்று ஒருநிமிடம் பார்த்துவிட்டு
புன்னகை வீசிச்செல்லுமொரு தேவதை,
கண்ணில் ஆதங்கத்துடன்...
பாவம் தேவதைகள்...!!!
பறந்து கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது!

கண்மணி
12-07-2008, 04:59 PM
அழகிய மணவாளன் குருபக்தி
Narathar ம(ர)ணமோதிரம்
meera மதிமயக்கம்
ஓவியன் தேடல்
சிவா.ஜி குதிக்காதே
ஓவியன் ஏன் பாரபட்சம்
பூமகள் முக்கூடல்
பூமகள் சூரியக்கதவு
தீபன் பேய்பூமி
விராடன் வாழ்க்கை
நம்பிகோபாலன் உன்னில் காதல்
ஆதி சூரிய கிரஹணம்
அழகிய மணவாளன்ஆடிப்போன சூரியன்
aren மரியாதை நிமித்தம்


போனச் சுற்றுக்கான பணமுடிப்பு இதோ....

கலக்குங்க மக்கா!!!

தீபன்
13-07-2008, 12:22 AM
உனக்காய்த்தான் காத்திருக்கிறோம்
இங்கு...!
அங்கே இன்னும்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
உன் வரவுக்காய்
காத்திருந்த கணங்களிலெல்லாம்,
வந்துபோனது
அக்னி உமிழும் அரக்கர்கள்தான்...!
நீ எப்போ வருவாய்
சமாதான தேவதையே...?

பாலகன்
13-07-2008, 03:07 AM
[B]
கலக்குங்க மக்கா!!!

என்னாது? மக்கா? நாங்க மக்கு இல்ல சமத்து

அன்புடன்
அ.மணவாளன்

Narathar
13-07-2008, 03:55 AM
அழகான படம் நாரதரே..


ஆமாம்! அழகான படம்தான்...
ஆனால் அது நான் போட்டதில்லை.... ஹீ ஹீ

பார்ப்பதற்கு வசதியாக இந்தப்பக்கதுதுக்கு கொண்டுவந்தேன்

பூமகள்
13-07-2008, 03:59 AM
என்னங்க.. இன்னும் கவிதை அருவி கொட்டவே இல்லையா?? :sprachlos020::sprachlos020: :redface::redface:நனையலாமென்று வந்த என்னை ஏமாற்றிவிடாதீர்கள் செல்வங்களே..!:frown::icon_ush:

விரைந்து வந்து கவியருவி பொழியுங்கள்..!!:icon_b::icon_b::)

Narathar
13-07-2008, 05:21 AM
என்னங்க.. இன்னும் கவிதை அருவி கொட்டவே இல்லையா?? :sprachlos020::sprachlos020: :redface::redface:நனையலாமென்று வந்த என்னை ஏமாற்றிவிடாதீர்கள் செல்வங்களே..!:frown::icon_ush:

விரைந்து வந்து கவியருவி பொழியுங்கள்..!!:icon_b::icon_b::)


நேற்று சனிக்கிழமை.....
இன்று ஞாயிறு... நாளை பாருங்கள்
உங்கள் படத்துக்கு கவிதையருவி கொட்டும்.
கொஞ்சம் காத்திருங்கள்............

இந்த அழாகான படத்துக்கு
கவிதை போடனும்னா
கவிதையும் இந்த அளவு
அழகாக இருக்க வேணாமா????

கண்மணி
13-07-2008, 08:37 AM
கார்ட்டூன் சேனல்களிடம்
தோற்றுப் போய்
கமர்ஷியல் விளம்பரங்களிடம்
மந்திரக் கோலை அடகு வைத்து
நினைவுகளில் இருந்து
பிரிந்து
ஆழ் இருளில்
அமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
தேவதைகள்..
கதைகளோடு.!

சிவா.ஜி
13-07-2008, 09:10 AM
எனக்கும் உன்னைப்போல்
சிறகு விரித்து பறக்க ஆசைதான்
சுமைகளும் சோகங்களும்
பாரமாய் அழுத்தி....
பாதி உடைந்துவிட்ட சிறகோடு...
பறப்பதெங்கே....அதை விரிப்பதெங்கே...
எப்போதாவது நீ இறங்கி வந்தால்...
என் சிறகை செப்பனிட்டுத் தருவாயா தேவதையே?

கண்மணி
13-07-2008, 09:55 AM
http://img32.picoodle.com/img/img32/4/7/12/poomagal/f_fu263877m86m_fba28f2.jpg


பறக்கும் தேவதைகள்
நடந்து பார்த்ததில்லை...
கால்பாவாத தேவதைபோல
வான் வெளி தாண்டியும்
அலையும் கவிதைகள்...

என்றேனும்,
ஒற்றை நட்சத்திரம் மட்டும்
ஒளிரும் ராத்திரியின் நிசப்சத்தில்
மொட்டைமாடி தரைக்குளுமை
முதுகுணரும் அந்த வேளை
தென்னைமர நிழல்
இருட்டின் நிறத்தில்
என் மீது கவிந்திருக்கும் கவின்பொழுது
பறந்து செல்லும் என் கவிதை
படித்து விட்டு...
நின்று ஒருநிமிடம் பார்த்துவிட்டு
புன்னகை வீசிச்செல்லுமொரு தேவதை,
கண்ணில் ஆதங்கத்துடன்...
பாவம் தேவதைகள்...!!!
பறந்து கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது!


என்னக்கா, உங்கக் கவிதையை படிச்சிட்டு நம்ம மன்றத்தில் பல கவிஞர்கள் மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு புன்னகை வீசிச் செல்லும் அந்தத் தேவதைக்காக காத்திருக்க ஆரம்பிச்சிட்டாங்களாமே!!!

தேவதைகள் நடந்து பார்த்ததில்லையா? உங்க தம்பி மதி வேற மாதிரி சொல்றாரே!

கண்மணி
13-07-2008, 09:58 AM
உனக்காய்த்தான் காத்திருக்கிறோம்
இங்கு...!
அங்கே இன்னும்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
உன் வரவுக்காய்
காத்திருந்த கணங்களிலெல்லாம்,
வந்துபோனது
அக்னி உமிழும் அரக்கர்கள்தான்...!
நீ எப்போ வருவாய்
சமாதான தேவதையே...?

சமாதான தேவதை இங்கேச் சோகமாய் இருக்கே தீபன்.. ஒருவேளை பறந்து வரமுடியாமல் ஏதோ ஒர் சக்தி அதை பின்னுக்குத் தள்ளுதோ என்னவோ!

ஓவியன்
13-07-2008, 11:17 AM
என் வாழ்வின் தேவதை என்று
உன்னைப் நான் புகழுகையிலெல்லாம்
உன் வாழ்வின் தேய்பிறை எனச்
சபிப்பவன் என் நண்பன்..!!

உன் பரிச்சயத்தில்
நான் இறக்கையின்றி
வானில் பறக்கையிலெல்லாம்
பரிதாபப் படுபவனவன்..!!

என் கனவுகள் உன்னால்
நிறைந்த போதும்,
என் நினைவுகள் உன்னால்
மலர்ந்த போதும்,
என் நண்பனின் வார்த்தைகள்
என் செவியின் வீச்சினருகில்
இருக்கவேயில்லை...!!

வீடு, சுற்றம், நட்பு
எல்லாம் தொலைத்து
சிறுக, சிறுகக் கட்டிய
தேவதை(!) உன் நட்பு,
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை மோகினியாக
நிஜம் காட்டிய போது
சில்லு, சில்லாக தகர்ந்துதான் போனது
என் வாழ்க்கையைப் போலவே...!!

ஓவியன்
13-07-2008, 11:24 AM
நன்றி ஓவியரே எடுத்துக்கொடுத்தற்கு

எடுத்துக் கொடுப்பதும்
போட்டுக் கொடுப்பதும் தானே
நம்ம வேலையே..!!! :icon_rollout:

நாராயணா..!!! :D

ஓவியன்
13-07-2008, 11:32 AM
பாட்டி சொன்ன கதைகள்,
என்றோ படித்த அம்புலிமாமா புத்தகங்கள்
அடிக்கடி வந்த அழகான கனவுகள்
இவற்றுக்கு பிறகு இன்றுதான் மீண்டும்
உனைக் கண்டேன்
மன்றத்தின் கவிதைக் கருத் தேவதையாக...!!

ஓவியன்
13-07-2008, 11:38 AM
இறக்கை வைத்த தேவதையே
கொஞ்சம் நில்லு
உன்னை எங்கேயோ
நான் பார்த்த நினைவு...!!

அட, என்னிடம்
கோவித்துக் கொண்டு
என்னை விட்டுப் போன
நான் வளர்த்த
சிட்டுக் குருவிதானே நீ..!!

Narathar
13-07-2008, 11:49 AM
இறக்கை வைத்த தேவதையே
கொஞ்சம் நில்லு
உன்னை எங்கேயோ
நான் பார்த்த நினைவு...!!

அட, என்னிடம்
கோவித்துக் கொண்டு
என்னை விட்டுப் போன
நான் வளர்த்த
சிட்டுக் குருவிதானே நீ..!!

இருந்தா புடிச்சு லேகியமாக்கிவிடுவீங்கன்னு பயந்திருச்சோ??? நாராயணா!!! :D

ஓவியன்
13-07-2008, 11:50 AM
இருந்தா புடிச்சு லேகியமாக்கிவிடுவீங்கன்னு பயந்திருச்சோ??? நாராயணா!!! :D

சே, சே...!!

உங்க வேலையெல்லாம் எனக்குத் தெரியாதே..!! :D

கண்மணி
13-07-2008, 11:51 AM
என் வாழ்வின் தேவதை என்று
உன்னைப் நான் புகழுகையிலெல்லாம்
உன் வாழ்வின் தேய்பிறை எனச்
சபிப்பவன் என் நண்பன்..!!

உன் பரிச்சயத்தில்
நான் இறக்கையின்றி
வானில் பறக்கையிலெல்லாம்
பரிதாபப் படுபவனவன்..!!

என் கனவுகள் உன்னால்
நிறைந்த போதும்,
என் நினைவுகள் உன்னால்
மலர்ந்த போதும்,
என் நண்பனின் வார்த்தைகள்
என் செவியின் வீச்சினருகில்
இருக்கவேயில்லை...!!

வீடு, சுற்றம், நட்பு
எல்லாம் தொலைத்து
சிறுக, சிறுகக் கட்டிய
தேவதை(!) உன் நட்பு,
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை மோகினியாக
நிஜம் காட்டிய போது
சில்லு, சில்லாக தகர்ந்துதான் போனது
என் வாழ்க்கையைப் போலவே...!!

முகம் காட்டும் கண்ணாடி பிம்பம் தான் காட்டும்.. அதுவும் ஒரு பக்கம் தான்.. இங்கு அது ஒரு தேவதை ரூபத்தில் இருக்கும் மோகினியைக் காட்டிக் கொடுத்திருக்கிறது... [மோகினி - சுயநலவாதி]

அப்படின்னா, அந்தத் தேவதையால் உன் முகத்திற்கு அதாவது உனது இமேஜிற்கு என்ன ஆயிற்று என அந்த முகம் பார்க்கும் கண்ணாடி..

முகம் பார்த்த கண்ணாடியே நொறுங்கிப் போனது. வழக்கமா காமெடிக்கு சொல்ற உதாரணம்..

நண்பன் முகம் காட்டும் கண்ணாடியாய் இருந்தும் உங்களுக்குத் தெரியாமல் போனது பாவம்தான்,,

ஒரே ஒரு சந்தேகம் ஓவியன்.. படத்துல இருக்கிற தேவதை சோகமா நல்லவ மாதிரி இருக்கே!!!

இதயம்
13-07-2008, 11:54 AM
இருந்தா புடிச்சு லேகியமாக்கிவிடுவீங்கன்னு பயந்திருச்சோ??? நாராயணா!!! :D
ஓ... அதான் பட்சி(!) ப(ய)றந்திடிச்சோ..?!!

சிட்டுக்குருவி லேகியம் சில்லறை விற்பனையா.. மொத்த விற்பனையா..? ஓவி.. சொன்னா நான் சவுதியில் ஒரு கிளை திறந்திடுவேன்..!! அப்புறம் பெட்ரோலை விட அதான் விற்பனையில் தூள் கிளப்பும்..!!!!

ஓவியன்
13-07-2008, 11:57 AM
முகம் காட்டும் கண்ணாடி பிம்பம் தான் காட்டும்.. அதுவும் ஒரு பக்கம் தான்.. இங்கு அது ஒரு தேவதை ரூபத்தில் இருக்கும் மோகினியைக் காட்டிக் கொடுத்திருக்கிறது... [மோகினி - சுயநலவாதி]

அப்படின்னா, அந்தத் தேவதையால் உன் முகத்திற்கு அதாவது உனது இமேஜிற்கு என்ன ஆயிற்று என அந்த முகம் பார்க்கும் கண்ணாடி..

முகம் பார்த்த கண்ணாடியே நொறுங்கிப் போனது. வழக்கமா காமெடிக்கு சொல்ற உதாரணம்..

நண்பன் முகம் காட்டும் கண்ணாடியாய் இருந்தும் உங்களுக்குத் தெரியாமல் போனது பாவம்தான்,,

ஒரே ஒரு சந்தேகம் ஓவியன்.. படத்துல இருக்கிற தேவதை சோகமா நல்லவ மாதிரி இருக்கே!!!

நான் பதிந்த கவிதையில் கண்ணாடியென்பது ஒரு உருவகம் அவ்வளவே..

தேவதைகள் எல்லாம் சோகமா நல்லவ மாதிரித்தான் இருக்கும் போல..!! :icon_rollout:

ஓவியன்
13-07-2008, 11:59 AM
ஓவி.. சொன்னா நான் சவுதியில் ஒரு கிளை திறந்திடுவேன்..!! அப்புறம் பெட்ரோலை விட அதான் விற்பனையில் தூள் கிளப்பும்..!!!!

ஹீ, ஹீ..!!

நீங்க சவூதியில் வேலை தேடிட்டு, சும்மாவா இருக்கீங்க..!! :D

கண்மணி
13-07-2008, 12:05 PM
பாட்டி சொன்ன கதைகள்,
என்றோ படித்த அம்புலிமாமா புத்தகங்கள்
அடிக்கடி வந்த அழகான கனவுகள்
இவற்றுக்கு பிறகு இன்றுதான் மீண்டும்
உனைக் கண்டேன்
மன்றத்தின் கவிதைக் கருத் தேவதையாக...!!

இன்று தேவதைகளைப் பவர் ரேஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் சூப்பர்மேன் பேட் மேன் என்று பலர் வந்து டூட்டியில இருந்து தூக்கிட்டாங்க இல்லையா?

ஒரு வேளை இந்தத் தேவதை இப்பொ பாரதி ராஜா படமெடுப்பதில்லை என்ற சோகத்தில் இருக்கிறதோ? இல்லை சம்பளபாக்கிக்காக கோபித்துக் கொண்டுச் சென்றதை யாரும் கண்டுக்கலையோ?

இன்னும் பாக்கி இருப்பது கனவில் வரும் தேவதைகள் மட்டும் தானே?
தேவதைகள் வதைகள் ஆவது எப்படி ஓவியன்?

கண்மணி
13-07-2008, 02:29 PM
சென்ற சுற்றிற்கான பணமுடிப்பு!

ஓவியன் சிட்டுக் குருவி(புறான்னு சொல்லி இருக்கலாமோ)
ஓவியன் பார்த்து நாளாச்சு
ஓவியன் மோகினித் தேவதை
சிவா.ஜி ரிப்பேர் பிளீஸ்
தீபன் சமாதானத் தேவதை
யவனிகா பாவம் தேவதைகள்

தேவதை மன்றத்தில் அதிகக் கவிதை வரலியேன்னுதான் சோகமா இருக்கறதாப் படுது.. சரி சரி.. அடுத்த படம் போடுவமா?

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/dive.jpg

பாலகன்
13-07-2008, 04:02 PM
உலகத்திலேயே அதிக சந்தோசம்
எதுன்னு கடவுளை ஒருத்தன் கேட்டானாம்
உடனே அதை பார்த்த நான் சொன்னேன்
நாளை பற்றி கவலையில்லாத இந்த
சிறுவனது வாழ்க்கை என்று

கண்மணி
13-07-2008, 04:10 PM
பிழைக்கத் தெரியாதவன்
குதிப்பதைப் பார்த்து
பிழைக்கத் தெரிந்தவன்
செத்துப் பிழைக்கிறான்

கண்மணி
13-07-2008, 04:12 PM
உலகத்திலேயே அதிக சந்தோசம்
எதுன்னு கடவுளை ஒருத்தன் கேட்டானாம்
உடனே அதை பார்த்த நான் சொன்னேன்
நாளை பற்றி கவலையில்லாத இந்த
சிறுவனது வாழ்க்கை என்று

நல்ல கருத்து அழகரே!

பாலகன்
13-07-2008, 04:20 PM
ஒட்டிய வயிறு
கட்டிய அரைஞான் கயிறு
அந்தரத்திலும் காக்குது
அவன் மானத்தை

பாலகன்
13-07-2008, 04:22 PM
அட பயப்புள்ள
நீயி பாயிறது
குளம்? சகதியா?
அதலெல்லாம் தெரிஞ்சா
இளசுகள் பாயும்
பாஞ்ச பின்னாடி
தானே தெரியும்

பூமகள்
13-07-2008, 04:29 PM
மூன்று கவிதை கூட வரலை.. அதுக்குள்ளே ஏன் அடுத்த படம் தந்தீங்க??!! அந்த தேவதை அழப் போறாள் பாருங்க..!! :(

பாலகன்
13-07-2008, 04:34 PM
மூன்று கவிதை கூட வரலை.. அதுக்குள்ளே ஏன் அடுத்த படம் தந்தீங்க??!! அந்த தேவதை அழப் போறாள் பாருங்க..!! :(

நானும் மண்டையை போட்டு உடச்சிக்கிட்டேன், தேவதையை பார்த்து எழுத வரவேயில்ல பூ,,,,

பாருங்க அடுத்த படம் சூப்பர்,,,

அன்புடன்

கண்மணி
13-07-2008, 04:44 PM
மூன்று கவிதை கூட வரலை.. அதுக்குள்ளே ஏன் அடுத்த படம் தந்தீங்க??!! அந்த தேவதை அழப் போறாள் பாருங்க..!! :(

அந்த தேவதை ஏற்கனவே சோகமாத்தானே அக்கா இருக்க...


7 கவிதை வந்திருக்கு அக்கா!

கண்மணி
14-07-2008, 12:36 AM
உயரங்களும் ஆழங்களும்
அம்பாய்ச் சீறி இறங்கும்
வேகங்களும்
சிலீரென பூக்கும்
சின்னச் சந்தோஷங்களும்
காதலுக்கு மட்டும்
சொந்தமில்லை
இவர்களுக்கும்தான்!

கண்மணி
14-07-2008, 03:21 AM
முதுகுத் தண்டில் சிலீர்
காரணம்
அட்ரினலா
ஆற்றுப் புனலா?

சிவா.ஜி
14-07-2008, 04:26 AM
யாரோ தலையில் வைத்து முழுகிய
ஒற்றைரூபாய் ஆழம்போகுமுன் எடுக்க வேண்டும்
வெகுநாள் ஆசையான குச்சி ஐஸ் வாங்கவேண்டும்!

Narathar
14-07-2008, 04:34 AM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/dive.jpg


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அப்பாவின் நெல் வயலை
வெள்ளம் கொண்டு போனதம்மா
இழப்பின் சோகத்தில்
அப்பாவே போனாரம்மா
நானும் தேம்பி நின்றால்
அடுத்தவேளைக்காகதம்மா
குதிக்கின்றேன் நான்
வெள்ளத்தில் அம்மா.......
அடுத்த வேளை கஞ்சில்லைன்னாலும்
மீனாவது கிட்டுமம்மா
தம்பி தங்கையிடம்
சொல்லிவை அம்மா
அண்ணா சீக்கிரம் வருவேனென்று

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ஓவியன்
14-07-2008, 04:55 AM
ஆறே,
நீ என் ஊருக்கு வர
அரசியல் தடுக்கிறது..!!

ஆதலால்
உனைத் தேடி
நானே வந்து விட்டேன்
ஆசை தீரக் குளிக்க....!!

பாலகன்
14-07-2008, 05:03 AM
யாரோ தலையில் வைத்து முழுகிய
ஒற்றைரூபாய் ஆழம்போகுமுன் எடுக்க வேண்டும்
வெகுநாள் ஆசையான குச்சி ஐஸ் வாங்கவேண்டும்!

எதார்த்தம் ஜொலிக்கிறது நண்பரே

வாழ்த்துக்கள்

கண்மணி
14-07-2008, 05:08 AM
கவிதைத் திரியில்
மூழ்கி முத்தெடுக்க வந்த
மன்ற உறுப்பினர்!

ஓவியன்
14-07-2008, 05:15 AM
துரத்துகிறது விலைவாசி
பஞ்சம் தீர்க்கவென
தஞ்சம் நாடிக் குதிக்கிறேன்
ஏமாற்றி விடாதே.....!!

ஓவியன்
14-07-2008, 05:26 AM
கவிதைத் திரியில்
மூழ்கி முத்தெடுக்க வந்த
மன்ற உறுப்பினர்!

நம் மன்றில் முத்து என்றொரு மூத்த உறுப்பினர் இருக்கிறாரே...!! :)

aren
14-07-2008, 05:43 AM
தேனைக் கண்ட வண்டுபோல்
தண்ணீரைக் கண்ட வாண்டுகள்
குதூகூலத்துடன் குதித்தாடும்
காட்சியைக் கண்டவுடன்
பிரச்சனைகளை பறந்தோடுகின்றன
என் மனக்கண்ணிலிருந்து!!!!

ஓவியன்
14-07-2008, 05:44 AM
சொந்தம் என்னைத்
தலை முழுகினாலும்
உன்னில் நான்
தலை முழுகினாலும்
என்றும் என்னைத்
தலை முழுகாத
ஆறே, நீ வாழி..!!

ஓவியன்
14-07-2008, 05:48 AM
ஆறாமல்
ஓடி வரும்
நீயா ஆறு...??

பசி ஆறாமல்
பாய்கிறேன்
என்னைத் தின்று
நீ ஆறு...!!

சிவா.ஜி
14-07-2008, 06:02 AM
ஆறோ, குளமோ, கடலோ...
அக்னி வெயிலுக்கு ஆசுவாசமாய்
தண்ணீர் கண்டதும் குதித்துவிட்டேன்...
அரணாக்கயிறு அறுந்துவிடக்கூடாதே.....

aren
14-07-2008, 06:13 AM
ஆறோ, குளமோ, கடலோ...
அக்னி வெயிலுக்கு ஆசுவாசமாய்
தண்ணீர் கண்டதும் குதித்துவிட்டேன்...
அரணாக்கயிறு அறுந்துவிடக்கூடாதே.....

போனால் போகிறது. இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம்.

கண்மணி
14-07-2008, 06:45 AM
ஆழமறியா இடங்களில்
அனாவசியமாய் குதிக்கும் சிறுவன்
அப்படியே இருந்திருக்கலாம்
உருவிலும் அறிவிலும்
வளர்ந்ததால்
பயமாயிருக்கிறது
இப்பொழுதெல்லாம்...

ஆதி
14-07-2008, 06:59 AM
அத்தை மகளோடு
விளையாடுகளையில்
தவறவிட்ட இருபது பைசா

கிணற்றின் விளிம்பேறி
பறிகையில் கை நழுவிய
சப்போட்டா பழம்..

கால் கழுவ
இறங்கையில்
சரசரத்து என்னையும்
பயமுறுத்தி பாயும் பாம்புகள்..

பாசி பாரிக்காமலிருக்க
விட்ட கெண்டைகள் பொறித்த
முட்டைகள்

என்று
இன்னும் பல

கடபாரையிட்டு
தொட்டு வந்த அடிமண்ணில்
பதுங்கி இருக்கலாம்..

அனைத்தையும் முடிந்தால்
எடுத்துவா வரும் போது...

பாலகன்
14-07-2008, 07:23 AM
அத்தை மகளோடு
விளையாடுகளையில்
தவறவிட்ட இருபது பைசா

கிணற்றின் விளிம்பேறி
பறிகையில் கை நழுவிய
சப்போட்டா பழம்..

கால் கழுவ
இறங்கையில்
சரசரத்து என்னையும்
பயமுறுத்தி பாயும் பாம்புகள்..

பாசி பாரிக்காமலிருக்க
விட்ட கெண்டைகள் பொறித்த
முட்டிகளோடு இருக்கலாம்..

என்று
இன்னும் பல

கடபாரையிட்டு
தொட்டு வந்த அடிமண்ணில்
பதுங்கி இருக்கலாம்..

அனைத்தையும் முடிந்தால்
எடுத்துவா வரும் போது...

தாங்கள் வழியனுப்பிய விதம் அருமை
என்னெல்லாம் தொலைச்சியிருக்கான் அந்த சின்னப்பயல்

அன்புடன்

பாலகன்
14-07-2008, 07:25 AM
ஆழமறியா இடங்களில்
அனாவசியமாய் குதிக்கும் சிறுவன்
அப்படியே இருந்திருக்கலாம்
உருவிலும் அறிவிலும்
வளர்ந்ததால்
பயமாயிருக்கிறது
இப்பொழுதெல்லாம்...

இளங்கன்று பயமறியாதுன்னு சும்மாவா சொன்னார்கள்

அற்புதமான எதார்த்தம்,,, உங்கள் வரிகளில்

அன்புடன்

பாலகன்
14-07-2008, 07:27 AM
ஆறோ, குளமோ, கடலோ...
அக்னி வெயிலுக்கு ஆசுவாசமாய்
தண்ணீர் கண்டதும் குதித்துவிட்டேன்...
அரணாக்கயிறு அறுந்துவிடக்கூடாதே.....

இது சூப்பர்,, இளம்பிராயத்தை நினைவுபடுத்தி கொன்டீர்கள் போல
ஆனாலும் காரியத்தில் உசாராய் இருக்கீங்க. அந்த அரைஞான் கயிறை தான் சொன்னேன்,,

வாழ்த்துக்கள்

அன்புடன்

பாலகன்
14-07-2008, 07:31 AM
ஆறாமல்
ஓடி வரும்
நீயா ஆறு...??

பசி ஆறாமல்
பாய்கிறேன்
என்னைத் தின்று
நீ ஆறு...!!

அய்யோ இது விபரீதம்....... ஏன் இப்படி........ பையனை பார்த்தால் சந்தோசமாக குதிப்பதைபோல அல்லவா இருக்குது........... அது பார்த்தால் குட்டை போல் தெரிகிறதே

வாழ்த்துக்கள்

அன்புடன்

பாலகன்
14-07-2008, 07:32 AM
சொந்தம் என்னைத்
தலை முழுகினாலும்
உன்னில் நான்
தலை முழுகினாலும்
என்றும் என்னைத்
தலை முழுகாத
ஆறே, நீ வாழி..!!

அப்போ அது முட்டிக்கால் அளவுதானே

அருமையான வாழ்த்துப்பா ஆறுக்கு

வாழ்த்துக்கள்

கண்மணி
14-07-2008, 08:13 AM
அத்தை மகளோடு
விளையாடுகளையில்
தவறவிட்ட இருபது பைசா

கிணற்றின் விளிம்பேறி
பறிகையில் கை நழுவிய
சப்போட்டா பழம்..

கால் கழுவ
இறங்கையில்
சரசரத்து என்னையும்
பயமுறுத்தி பாயும் பாம்புகள்..

பாசி பாரிக்காமலிருக்க
விட்ட கெண்டைகள் பொறித்த
முட்டைகள்

என்று
இன்னும் பல

கடபாரையிட்டு
தொட்டு வந்த அடிமண்ணில்
பதுங்கி இருக்கலாம்..

அனைத்தையும் முடிந்தால்
எடுத்துவா வரும் போது...


எல்லாம் சரி ஆதி பாம்பை எதுக்கு எடுத்துகிட்டு வரச் சொல்றீங்க..


1. அத்தை மகளோடு விளையாடுகையில் தவறி விழுந்த இருபது பைசாவை அடுத்தவர் எடுத்துத் தருவதா? என்ன ஆதி நீங்க!!

2. சப்போட்டாப் பழம் முழுகுமா? மிதக்குமா?

இதையே அத்தைமகள் சொல்வதாக எழுதி இருந்திருந்தால் சப்போட்டாக் கனியாய் இனித்திருக்கும். இல்லையா ஆதி..!!!:icon_rollout:

அமரன்
14-07-2008, 08:15 AM
பிழைத்தவன் குதித்தான்
பிழைக்கவில்லை.
பிழைப்பவன் குதித்தான்
பிழைத்துவிட்டான்.

பாலகன்
14-07-2008, 08:34 AM
பிழைத்தவன் குதித்தான்
பிழைக்கவில்லை.
பிழைப்பவன் குதித்தான்
பிழைத்துவிட்டான்.

பிழைத்தவன் / பிழைப்பவன்
வயிற்றுக்காக என்று எடுத்துக்கொள்ளலாமா? அமரன்

அன்புடன்

பூமகள்
14-07-2008, 08:37 AM
தலைகீழாய் வீழ்வது...
வீழ்ச்சியல்ல.. - என்
தைரியத்தின் வெற்றி...!!

ஆதி
14-07-2008, 08:50 AM
http://img32.picoodle.com/img/img32/4/7/12/poomagal/f_fu263877m86m_fba28f2.jpg

மிக மெல்லிய
இறகு போல
பறந்து வரும்
என் தேவதையின் விமானம்
காற்றால் ஆனவை..

பறக்கும் பூ மேனியில்
பாயும் ஒளியை
வண்ணங்களாய் பரிணமிக்கும்
வடிவெழிலின் நிழல்
புவி தொடாதவை..

இவளின் இந்த
உலக பிரவேசம்
நட்சத்திரங்கள் உதிரும்
இரவில் நிகழ்ந்தது..

மரங்களின் வேரும்
நடுக்கும் குளிரில்
மனதில் மிதமான கனப்பை
எழுப்பி விட்டு
என்னை மகிழ்ச்சியின் அரன்மனைக்கு
அழைத்து சென்றாள்...

கண்மூடி களித்திருந்த
என்றன்
கன்னி தேகத்தை
பெண்மூடி இட்டு
பேரின்பத்தில் ஆழ்த்தினாள்..

மலரும் காற்றுமாய் அளாவி
மணந்த எம்மை
கண்டு வெண்ணிலவும்
கனன்று வியர்த்தது
வெட்கம் குளிர்ந்தது
வெண்பனியானது..

ஓவியன்
14-07-2008, 09:14 AM
பிழைத்தவன் குதித்தான்
பிழைக்கவில்லை.
பிழைப்பவன் குதித்தான்
பிழைத்துவிட்டான்.

இரண்டுக்கும் காரணம்
அனுபவமே, இல்லையா அமரா..??

நிரம்பவும் வியக்க வைத்த வரிகள் பாராட்டுக்கள் நண்பா..!! :)

ஆதி
14-07-2008, 09:34 AM
எல்லாம் சரி ஆதி பாம்பை எதுக்கு எடுத்துகிட்டு வரச் சொல்றீங்க..


1. அத்தை மகளோடு விளையாடுகையில் தவறி விழுந்த இருபது பைசாவை அடுத்தவர் எடுத்துத் தருவதா? என்ன ஆதி நீங்க!!

2. சப்போட்டாப் பழம் முழுகுமா? மிதக்குமா?

இதையே அத்தைமகள் சொல்வதாக எழுதி இருந்திருந்தால் சப்போட்டாக் கனியாய் இனித்திருக்கும். இல்லையா ஆதி..!!!:icon_rollout:

அனைத்தையும் முடிந்தால்
எடுத்துவா வரும் போது...

என்பதற்கு மாறாக..


என் நினைவுகளை
அவைகளுக்கு சொல்லிவிடு..

என முடித்திருந்தால்..

முதல் கேள்வியும்.. அதற்கு முந்தைய வரிக்கும் வாய்ப்பிருந்திருக்காது என்று நினைக்கிறேன் அக்கா.. முடிவை கொஞ்சம் சொதப்பிதான் விட்டேன்..

நழுவியப் பழம் அழுகி தண்ணீரில் தூள்களாகி தூர்ந்திருக்கும் என்றெண்ணியே எழுதினேன் அக்கா.. இருந்தாலும் அந்த வரி நெறுடத்தான் செய்கிறது..

அத்தை மகள் இதனை பாடுவது போல் எழுதி இருந்தால் இன்னும் சுவையாகத்தான் இருந்திருக்கும்.. அவ்வாறும் ஒரு கவிதை எழுதி பதிக்கிறேன் அக்கா..

கண்மணி
14-07-2008, 09:44 AM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/dive.jpg

ஆயிரம் முறை முங்கியாவது
எடுத்து வருவேன்
அத்தை மகளின்
ஒத்தைக் கொலுசு!

பூமகள்
14-07-2008, 09:52 AM

http://img32.picoodle.com/img/img32/4/7/12/poomagal/f_fu263877m86m_fba28f2.jpg
பனிப் பிரதேச
விளிம்புகள்
தாண்டி பயணிக்கின்றன
என் கால்கள்..!!

சிறகுகள் அடித்து
காற்றில் விதைக்கிறேன்..
என் இறகுகளை...!!

கைகளின் ஒளியில்
உருவாகின்றன..
வெள்ளி விதைகள்..!

வான் வயலில்
விதையிட..
நட்சத்திர
நெல்மணிகளோடு
நீர் தெளிக்கிறேன்..!!

ஓராயிரம் போர்வீரர்களில்
ஒருவர் மட்டும் வெல்லும்
கருப்பை போல்..

ஓராயிரம் நட்சத்திரங்களில்
முழு நிலவு
விளையும் நாள்
எதிர்நோக்கியபடி..

ஓவியன்
14-07-2008, 10:27 AM
ஆயிரம் முறை முங்கியாவது
எடுத்து வருவேன்
அத்தை மகளின்
ஒத்தைக் கொலுசு!

ஆற்றில் போட்டதைக்
குளத்தில் தேடுகிறேன்
வித்தை பல தெரிந்தவளின்
கொலுசென்பதனால்...!! :aetsch013:

கண்மணி
14-07-2008, 11:04 AM
தன் வீழ்ச்சியில் சந்தோஷம்
எவ்வளவு பெரிய
கர்மயோகி இவன்!!!

ஆதி
14-07-2008, 11:10 AM
தன் வீழ்ச்சியில் சந்தோஷம்
எவ்வளவு பெரிய
கர்மயோகி இவன்!!!

மிக பெரிய விடயத்தை மிக சாதார்னமாய் சொல்லிவிட்டீங்க அக்கா..

அசத்தலான ஞான கவிதைக்கு நன்றிகள் அக்கா..

ஓவியன்
14-07-2008, 11:12 AM
குளத்தை நோக்கிய-என்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
வானினை நோக்கிய-என்
குடும்பத்தின் எழுச்சிக்காகவே..!!

மன்மதன்
14-07-2008, 01:07 PM
தலைகீழ் பயணம்
வாழ்க்கையில்
உயர..!!

கண்மணி
14-07-2008, 01:10 PM
ஒட்டிய வயிறு
கட்டிய அரைஞான் கயிறு
அந்தரத்திலும் காக்குது
அவன் மானத்தை

சின்னக் கவிதை சின்ன விஷயம்... நுணுக்குப் பார்வை!

கண்மணி
14-07-2008, 01:15 PM
அட பயப்புள்ள
நீயி பாயிறது
குளம்? சகதியா?
அதலெல்லாம் தெரிஞ்சா
இளசுகள் பாயும்
பாஞ்ச பின்னாடி
தானே தெரியும்

இளங்கன்று பயமறியாது!!!
விடலைகளின் வேகம்
இந்த வயசுப் பையனுக்கு
ஒத்து வராவிட்டாலும்
வயசுப் பையன்களுக்கு சரிதான்..

கண்மணி
14-07-2008, 01:17 PM
யாரோ தலையில் வைத்து முழுகிய
ஒற்றைரூபாய் ஆழம்போகுமுன் எடுக்க வேண்டும்
வெகுநாள் ஆசையான குச்சி ஐஸ் வாங்கவேண்டும்!

அப்புறம் இதுக்குன்னு காண்ட்ராக்ட் எடுத்தவங்க சும்மா விடுவாங்களா சிவாஜியண்ணா???

சொல்லப் போனால் சின்ன ஆசை.. பெரிய முயற்சி... அழகான கருத்து..

கண்மணி
14-07-2008, 01:21 PM
அப்பாவின் நெல் வயலை
வெள்ளம் கொண்டு போனதம்மா
இழப்பின் சோகத்தில்
அப்பாவே போனாரம்மா
நானும் தேம்பி நின்றால்
அடுத்தவேளைக்காகதம்மா
குதிக்கின்றேன் நான்
வெள்ளத்தில் அம்மா.......
அடுத்த வேளை கஞ்சில்லைன்னாலும்
மீனாவது கிட்டுமம்மா
தம்பி தங்கையிடம்
சொல்லிவை அம்மா
அண்ணா சீக்கிரம் வருவேனென
[/CENTER]

சில வரிகள் மட்டும் போதுமே.

அடுத்தவேளைக்காக
குதிக்கின்றேன்
தம்பி தங்கையிடம்
சொல்லிவை அம்மா
அண்ணா சீக்கிரம் வருவேனென!

இதன் வலிமை போதுமே..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-07-2008, 01:23 PM
எவ்வேகத்தில் முக்குளித்தாலும்
அதே வேகத்தில்
துரத்தியடிக்கப்படுகிறாய்

வெகு தூர வேறுபாடில்லை
நீரில் மூழ்கியவனுக்கும்
உலகில் மூழ்கியவனுக்கும்..

கண்மணி
14-07-2008, 01:23 PM
பனிப் பிரதேச
விளிம்புகள்
தாண்டி பயணிக்கின்றன
என் கால்கள்..!!

சிறகுகள் அடித்து
காற்றில் விதைக்கிறேன்..
என் இறகுகளை...!!

கைகளின் ஒளியில்
உருவாகின்றன..
வெள்ளி விதைகள்..!

வான் வயலில்
விதையிட..
நட்சத்திர
நெல்மணிகளோடு
நீர் தெளிக்கிறேன்..!!

ஓராயிரம் போர்வீரர்களில்
ஒருவர் மட்டும் வெல்லும்
கருப்பை போல்..

ஓராயிரம் நட்சத்திரங்களில்
முழு நிலவு
விளையும் நாள்
எதிர்நோக்கியபடி..


லேட்டா வந்தாலும் அந்தத் தேவதைப் படத்துக்கு வந்த சில நல்லக் கவிதைகளில் ஒன்று.. ஆனால் தேவதையின் சோகம் இன்னும் ஆழமானதா இருக்கே பூவக்கா!

கண்மணி
14-07-2008, 01:28 PM
ஆற்றில் போட்டதைக்
குளத்தில் தேடுகிறேன்
வித்தை பல தெரிந்தவளின்
கொலுசென்பதனால்...!! :aetsch013:

நல்லவேளை தண்ணீரில் போட்டதை ஆகாயத்தில் தேடலியே!! அது வரைக்கும் சரி.. இதையே கொஞ்சம் மாற்றினால்

உன் பாத அழுக்குகள்
தின்ற மீன்களில் ஒன்றுதான்
பொறாமையில்
திருடி இருக்க வேண்டும்
நீ தொலைத்த கொலுசை
ஒவ்வொரு குளத்திலும் தேடுகிறேன்!
.

கண்மணி
14-07-2008, 01:31 PM
ஆறே,
நீ என் ஊருக்கு வர
அரசியல் தடுக்கிறது..!!

ஆதலால்
உனைத் தேடி
நானே வந்து விட்டேன்
ஆசை தீரக் குளிக்க....!!

தேங்கிக் கிடக்கும் ஆறு,,
தேம்பிக் கிடக்கும் மனங்கள்
சோம்பல் விடுத்த சிறுவன்
சின்னக் கவிதை.. ஆனால் எதுவோ இல்லை.. அதனால் சிறிது வெறுமை!

கண்மணி
14-07-2008, 01:33 PM
துரத்துகிறது விலைவாசி
பஞ்சம் தீர்க்கவென
தஞ்சம் நாடிக் குதிக்கிறேன்
ஏமாற்றி விடாதே.....!!

ஏறுகின்ற விலைவாசி
இறங்குகின்ற நீர்மட்டங்கள்..
இரண்டையும் காட்டியிருக்கலாமே ஓவியன் அண்ணா!

கண்மணி
14-07-2008, 01:34 PM
தேனைக் கண்ட வண்டுபோல்
தண்ணீரைக் கண்ட வாண்டுகள்
குதூகூலத்துடன் குதித்தாடும்
காட்சியைக் கண்டவுடன்
பிரச்சனைகளை பறந்தோடுகின்றன
என் மனக்கண்ணிலிருந்து!!!!

சந்தோஷம்
ஓவிய நாயகன்
உங்கள் மனக்குளத்தில்
குதித்ததால்!

கண்மணி
14-07-2008, 01:42 PM
ஆறாமல்
ஓடி வரும்
நீயா ஆறு...??

பசி ஆறாமல்
பாய்கிறேன்
என்னைத் தின்று
நீ ஆறு...!!

ஆறு தரும் ஆறு
மீன்
விவசாயம்
குடிநீர்
போக்குவரத்து
மணல்
மகிழ்ச்சி(பொழுது போக்கு)

இவையெல்லாம் நீ பசியாற...
இன்னும் நிறைய இருக்கிறது பரிமாற
தலைமுழுகு சோம்பேறித்தனத்தை
மூழ்கி எடு தன்னம்பிக்கையை!!!

கண்மணி
14-07-2008, 01:43 PM
சொந்தம் என்னைத்
தலை முழுகினாலும்
உன்னில் நான்
தலை முழுகினாலும்
என்றும் என்னைத்
தலை முழுகாத
ஆறே, நீ வாழி..!!

ஓ! இது மூழ்கி உன் அழுக்கைத் தொலைத்தபோதோ!!!

கண்மணி
14-07-2008, 01:45 PM
ஆறோ, குளமோ, கடலோ...
அக்னி வெயிலுக்கு ஆசுவாசமாய்
தண்ணீர் கண்டதும் குதித்துவிட்டேன்...
அரணாக்கயிறு அறுந்துவிடக்கூடாதே.....

நியாயமானக் கவலைதான் ஆனால் அரைஞாண் கயிற்றை முதல்லியே யாரோ சொல்லிட்டாங்களே அண்ணா!

கண்மணி
14-07-2008, 01:48 PM
பிழைத்தவன் குதித்தான்
பிழைக்கவில்லை.
பிழைப்பவன் குதித்தான்
பிழைத்துவிட்டான்.



தற்கொலை செய்து கொள்பவர்களின் உடல்களைத் தேடித் தருவோர் ஒருவரைச் சந்தித்திருக்கிறேன்..!!!

பிழைக்கத் தெரியாதவர்கள்
பிழை
பிழைக்கிறார்கள் சிலர்
இதில் எது பிழை?

அறிஞர்
14-07-2008, 01:48 PM
ஜாம்பவான்களின் கவிதை மழை வெகு அருமையாக உள்ளது...

நிழலுக்கு உயிர் மட்டுமல்ல.. மன்றத்திற்கு உயிராக இப்பதிவு செல்கிறது...

அனைத்து கவியுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

கண்மணி
14-07-2008, 01:49 PM
தலைகீழாய் வீழ்வது...
வீழ்ச்சியல்ல.. - என்
தைரியத்தின் வெற்றி...!!

அது எங்கே விழுகிறோம் என்பதையும் பொறுத்தது அல்லவா அக்கா?

தலைக் கனம் பிடித்தவர் கூட
நிலை கொள்ளாமல்
தலை கீழாய்த்தான்
விழுவார்களாம்.

கண்மணி
14-07-2008, 01:52 PM
மிக மெல்லிய
இறகு போல
பறந்து வரும்
என் தேவதையின் விமானம்
காற்றால் ஆனவை..

பறக்கும் பூ மேனியில்
பாயும் ஒளியை
வண்ணங்களாய் பரிணமிக்கும்
வடிவெழிலின் நிழல்
புவி தொடாதவை..

இவளின் இந்த
உலக பிரவேசம்
நட்சத்திரங்கள் உதிரும்
இரவில் நிகழ்ந்தது..

மரங்களின் வேரும்
நடுக்கும் குளிரில்
மனதில் மிதமான கனப்பை
எழுப்பி விட்டு
என்னை மகிழ்ச்சியின் அரன்மனைக்கு
அழைத்து சென்றாள்...

கண்மூடி களித்திருந்த
என்றன்
கன்னி தேகத்தை
பெண்மூடி இட்டு
பேரின்பத்தில் ஆழ்த்தினாள்..

மலரும் காற்றுமாய் அளாவி
மணந்த எம்மை
கண்டு வெண்ணிலவும்
கனன்று வியர்த்தது
வெட்கம் குளிர்ந்தது
வெண்பனியானது..


கடைசி மூன்று பத்திகள் படத்திலிருந்து விலகி நிற்கிறதே ஆதி!!!

சோக தேவதை!!! வார்த்தைகள் தனித்தனியாய் அழகு.. மாலைக் கதம்பத்தில் இன்னும் சிறிது பொறுமையாய் அழகு பார்த்துக் கட்டலாமே!!!

Narathar
14-07-2008, 01:53 PM
ஜாம்பவான்களின் கவிதை மழை வெகு அருமையாக உள்ளது...

நிழலுக்கு உயிர் மட்டுமல்ல.. மன்றத்திற்கு உயிராக இப்பதிவு செல்கிறது...

அனைத்து கவியுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.


நன்றி அறிஞ்சரே தங்கல் பாராட்டுக்கு..
அப்படீன்னா (கிறுக்கல்) கவிதை எழுதும் நானும் ஜாம்பவானா? நாராயணா

கண்மணி
14-07-2008, 01:54 PM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/dive.jpg


குளத்தை நோக்கிய-என்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
வானினை நோக்கிய-என்
குடும்பத்தின் எழுச்சிக்காகவே..!!

நான் விழும் பொழுதெல்லாம்
எழுந்தது
என் xxxxxxxxxx

எதைப் போட்டாலும் பொருந்துமே அண்ணா, எதை நோக்கிய எதை நோக்கி போன்றவை இல்லாது போனால் அழகு...

கண்மணி
14-07-2008, 01:57 PM
தலைகீழ் பயணம்
வாழ்க்கையில்
உயர..!!

ம்ம்ம் சின்னக் கவிதை அழகு!

கண்மணி
14-07-2008, 02:06 PM
அடுத்தப் படம் தருவோர் தரலாமே!!!

Narathar
14-07-2008, 02:17 PM
http://img27.picoodle.com/img/img27/4/7/14/f_sadyounggirm_6d7bbb7.jpg

எங்கே கவிதைமழை பொழியட்டும்.........

கண்மணி
14-07-2008, 02:23 PM
எவ்வேகத்தில் முக்குளித்தாலும்
அதே வேகத்தில்
துரத்தியடிக்கப்படுகிறாய்

வெகு தூர வேறுபாடில்லை
நீரில் மூழ்கியவனுக்கும்
உலகில் மூழ்கியவனுக்கும்..

மூழ்கியவன் துரத்தியடிக்கப் படுதல்
மூச்சடக்க முடியாதவனைத்தானே!!

கண்மணி
14-07-2008, 02:30 PM
சென்ற சுற்றிற்கான கவிதை படைத்து பணமுடிப்புப் பெற்றவர்கள்...
பாராட்டுக்கள் கவிப்பிதாமகர்களே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ வேறுபாடில்லை!
மன்மதன் பயணம்
ஓவியன் வீழ்ச்சி - எழுச்சி
ஓவியன் அவளின் கொலுசை
பூமகள் வெற்றி!
அமரன் பிழைப்பு!
ஆதி எடுத்துவா
சிவா.ஜி அரைஞாண்
ஓவியன் ஆறு ஆறே
ஓவியன் முழுகினாலும் முழுகாத
ஓவியன் முழுகினாலும் முழுகாத
aren உன்னைக் கண்டு
ஓவியன் ஏமாற்றாதே
ஓவியன் ஆற்றைத் தேடி
Narathar சொல்லி வை அம்மா
சிவா.ஜி சின்ன ஆசை
அழகிய மணவாளன் இளமைப் பாய்ச்சல்
அழகிய மணவாளன் மானம் காக்கும் கயிறு
அழகிய மணவாளன் கவலையில்லா மனசு

கண்மணி
14-07-2008, 02:33 PM
படித்த பள்ளியைக்
கடக்கும் பொழுதெல்லாம்
தீக்குச்சிகள் குத்திய
வலிமறைந்து
வந்து போகும்
நண்பர்கள்
மனதில்..

சிவா.ஜி
14-07-2008, 02:49 PM
படித்த பள்ளியைக்
கடக்கும் பொழுதெல்லாம்
தீக்குச்சிகள் குத்திய
வலிமறைந்து
வந்து போகும்
நண்பர்கள்
மனதில்..

மிக வித்தியாசமான, சமூகப் பார்வை. அருமைக் கண்மணி. அசத்துங்க.

கண்மணி
14-07-2008, 03:21 PM
ஓடித் திரிந்த சோளக்காடு
ஒளிந்து விளையாடிய
கரும்புக் கொல்லை
பறித்து தின்ற கிழங்குகள்
பஸ்ஸே வராத
நிறுத்தத்தின் சிமெண்டு பெஞ்ச்
ஆழத் தெரியும்
கிணற்று நீர்ப் பிம்பம்
மின்சாரக் கம்பி மேல் கத்தும்
மூக்கு நீண்ட ஒற்றைப் பறவை
நள்ளிரவில் மினுமினுக்கும்
பூனைக்கண்கள்
கொல்லையில் நட்டு வைத்த
பூசணிக் கொடி
வீதியோரம் பூத்துச் சிரிக்கும்
தும்பைப் பூக்கள்..
ஏரிக்கரை யோரம்
பறக்கும் பட்டாம் பூச்சிகள்
எதையுமே
எதையுமே எடுத்துப் போக முடியாதா
அம்மா!

mukilan
14-07-2008, 03:44 PM
நானும் நீங்கள் சொல்ல வந்த கருத்தைதான் சொல்ல விளைந்தேன் என்றாலும் இப்படி அழகாக அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் ஏக்கத்தை என்னால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. உங்கள் கவிதை அருமை கண்மணி.

பாலகன்
14-07-2008, 04:52 PM
ஓடித் திரிந்த சோளக்காடு
ஒளிந்து விளையாடிய
கரும்புக் கொல்லை
பறித்து தின்ற கிழங்குகள்
பஸ்ஸே வராத
நிறுத்தத்தின் சிமெண்டு பெஞ்ச்
ஆழத் தெரியும்
கிணற்று நீர்ப் பிம்பம்
மின்சாரக் கம்பி மெல் கத்தும்
மூக்கு நீண்ட ஒற்றைப் பறவை
நள்ளிரவில் மினுமினுக்கும்
பூனைக்கண்கள்
கொல்லையில் நட்டு வைத்த
பூசணிக் கொடி
வீதியோரம் பூத்துச் சிரிக்கும்
தும்பைப் பூக்கள்..
ஏரிக்கரை யோரம்
பறக்கும் பட்டாம் பூச்சிகள்
எதையுமே
எதையுமே எடுத்துப் போக முடியாதா
அம்மா!

முடியும் டா கண்ணா உன் மனசில்,.........................

அன்புடன்

பாலகன்
14-07-2008, 04:53 PM
கால் காசு பெறாத
நானா காரில் போகிறேன்
அய்யகோ அங்கே வேலை
எப்படி இருக்குமோ
ஈவு இரக்கமில்லாமல் அடித்த
இவளா என்னை ஆறுதலாய்
அணைக்கிறாள்

கண்மணி
15-07-2008, 12:56 AM
டவுனுக்குப் போறேன்
வாரீகளா?
ஒரு தம்பிப் பாப்பா
இருக்காம்
பாத்துக்கணும்
வீட்டைத் தொடச்சி
கழுவி விடணும்
துணியைச் தொவச்சி
இஸ்திரி போடணும்
வெளிய நிக்கற காரையெல்லாம்
சுத்தமாக் கழுவி விடணும்
தோட்டத்துச் செடிகளுக்கு
தினம் தினம் தண்ணி விடணும்
அக்கம் பக்கத்துக் கடைகளுக்கு
அவசரத்துக்குப் போய்வரணும்
அண்ணன் ரூமை
அடுக்கி வைக்கணும்
அம்மா காலைப் பிடிச்சு விடணும்
சின்னச் சின்ன வேலைகள்தானாம்
நல்லச் சாப்பாடாம்
அம்மா சொன்னாங்க..
எப்படியாவது தம்பியை
நல்லாப் படிக்க வெக்கோணும்
டவுனுக்குப் போறேன்
நீங்களும் வாரீகளா?

கண்மணி
15-07-2008, 02:16 AM
ஓலைக் கீத்துச் சந்தில்
ஒளிச்சு வச்சிருந்த கொய்யாப் பழம்
அணில் திங்குமா?
எலி திங்குமா?
வீட்டுப் பின் பக்கம்
புதைச்சு வச்ச மாங்கொட்டை
முளைச்சிருக்குமா?
இரண்டாம் வகுப்பு
தமிழ் புத்தகத்தில்
ஒளிச்சு வச்ச மயிலிறகு
குட்டி போட்டிருக்குமா?
குறுக்குச் சந்து
கோணப்புளியங்காய் மரம்
காய்த்திருக்குமா?
பின்னாடியே வரும்
செவத்த குஷ்பூ நாய்
குட்டி போட்டிருக்குமா?
அடுத்த முறையாவது
பார்த்துவந்து சொல்லேன்
அம்மா!

aren
15-07-2008, 02:19 AM
வண்டியில் அழைத்துச்சென்றாலும்
நண்பர்கள் இல்லாமல்
உறவினர்கள் இல்லாமல்
என்ன பயணம்
எதற்கு பயணம்
மனது வீட்டிலேயே
அங்கேயே என்னையும் விட்டுவிடுங்களேன்!!!

கண்மணி
15-07-2008, 02:22 AM
வண்டியில் அழைத்துச்சென்றாலும்
நண்பர்கள் இல்லாமல்
உறவினர்கள் இல்லாமல்
என்ன பயணம்
எதற்கு பயணம்
மனது வீட்டிலேயே
அங்கேயே என்னையும் விட்டுவிடுங்களேன்!!!

சொகுசுகள் பழக்கமாகவில்லை
சொந்தங்களைப் போல


அழகான வரிகள் ஆரென்!:icon_b:

ஆதி
15-07-2008, 03:46 AM
இத்தடவை
இடம் பெயரும் போது
விட்டு வந்த
வேப்ப மரத்து ஊஞ்சலில்
வர மறுத்து
ஆடி கொண்டிருக்கிறது
இவளின் மனசு..

--------------------------------------------------

ஏறி விட்டாலும்
ஏற மறுத்து
பக்கது வீட்டு
ரவி சீனு கார்த்திக்
நிர்மலா வனித்தா சுல்தானாவோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது மனது
"கண்ணாமூச்சியும்"
"தாத்தா தாத்தா மணி என்னவும்"

கண்மணி
15-07-2008, 03:54 AM
இத்தடவை
இடம் பெயரும் போது
விட்டு வந்த
வேப்ப மரத்து ஊஞ்சலில்
வர மறுத்து
ஆடி கொண்டிருக்கிறது
இவளின் மனசு..

--------------------------------------------------

ஏறி விட்டாலும்
ஏற மறுத்து
பக்கது வீட்டு
ரவி சீனு கார்த்திக்
நிர்மலா வனித்தா சுல்தானாவோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது மனது
"கண்ணாமூச்சியும்"
"தாத்தா தாத்தா மணி என்னவும்"

வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டிருக்க
மனமும்
ஊஞ்சலில் ஆடிக் கொண்டு

காலக் கண்ணாமூச்சி
இவள் மனதிலும் கண்ணாமூச்சி
தாத்தா தாத்தா மணி என்ன

வாழ்க்கை கேள்விக்குறி
இவள் மனதின் நினைவுகள்
ஆச்சர்யக் குறி,,,

நாளைக்காக
இன்று பலியாக்கப் பட்டு
நேற்றைய நினைவுகளுடன்
இவள்!:icon_b:

சிவா.ஜி
15-07-2008, 04:18 AM
அடுத்தவீட்டு அத்தை ஆறுதல் சொன்னாலும்
அம்புட்டு தூரம் எப்படிப் போக?
இப்ப போறவ எப்ப வருவனோ?
சொப்பு விளையாட்டு மறந்தபின்னதானோ?
வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொன்னா
உன் முந்தியில முகம் தொடச்சி
ஆத்தா வாசனையை எடுத்துக்கிட்டு போவேன்!

கண்மணி
15-07-2008, 04:44 AM
அடுத்தவீட்டு அத்தை ஆறுதல் சொன்னாலும்
அம்புட்டு தூரம் எப்படிப் போக?
இப்ப போறவ எப்ப வருவனோ?
சொப்பு விளையாட்டு மறந்தபின்னதானோ?
வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொன்னா
உன் முந்தியில முகம் தொடச்சி
ஆத்தா வாசனையை எடுத்துக்கிட்டு போவேன்!

ஆத்தா சேலை ஒண்ணு
பத்திரமா இருக்குதடி மூட்டையில
பைத்தியக்காரப் புள்ளே!
தூக்கம் வரலியின்னா
போத்திக்கடி..
வலிக்கிற உடம்பை
அப்படியாவது
ஆத்தா பிடிச்சு விடறேன்:icon_b::icon_b::icon_b:

இதயம்
15-07-2008, 04:57 AM
கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!
அப்பனாத்தா ஆசை நிறைவேத்த
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே அங்க போறேன்..!
பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

aren
15-07-2008, 05:01 AM
கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!
அப்பனாத்தா ஆசை நிறைவேத்த
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே அங்க போறேன்..!
பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

வாவ்!!! அருமை!!!

கண்மணி
15-07-2008, 05:21 AM
அப்பாவுக்கு
நிறையக் காசு தருவாங்களாம்
சேப்புக் கலர் ரிப்பனும்
பச்சை வளையலும்
வாங்கித் தரச் சொல்லணும்
தம்பிப் பாப்பாவுக்குக்
கார் பொம்மை
அம்மாவுக்கு
நீலக் கலர்ச் சேலை..
அப்பாக்கு கறுப்புக் கண்ணாடி
அப்பா மட்டும்
ஆஸ்பத்திரியில் இருந்து வரட்டும்

meera
15-07-2008, 05:51 AM
கண்களில் இல்லை
கல்பனா சாவ்லா பற்றிய
கனவுகள்...

மனதில் இல்லை
மதர் தெரசா பற்றிய
ஆசைகள்.......

என்
பெயர் கூட
படிக்க தெரியாமால்
ஏழ்மை துரத்த
ஏங்குகிறது மனம்
பள்ளிகளை கண்டால்.......

பாலகன்
15-07-2008, 05:53 AM
கண்களில் இல்லை
கல்பனா சாவ்லா பற்றிய
கனவுகள்...

மனதில் இல்லை
மதர் தெரசா பற்றிய
ஆசைகள்.......

என்
பெயர் கூட
படிக்க தெரியாமால்
ஏழ்மை துரத்த
ஏங்குகிறது மனம்
பள்ளிகளை கண்டால்.......

விரக்தியின் எல்லையில் இருப்பாள் போல அந்த சிறுமி......................... ஏழ்மையில் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிபோனவள் பாவம்

அருமையான கவிதை மீரா / வாழ்த்துக்கள்

அன்புடன்

பாலகன்
15-07-2008, 05:54 AM
கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!
அப்பனாத்தா ஆசை நிறைவேத்த
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே அங்க போறேன்..!
பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

ஒரு குட்டிக்கதையே உங்கள் கவிதையில் உள்ளது இதயம்................. அதற்கு தனித்திறமையே வேன்டும்...... வாழ்த்துக்கள்

அன்புடன்

கண்மணி
15-07-2008, 07:16 AM
கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!
அப்பனாத்தா ஆசை நிறைவேத்த
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே அங்க போறேன்..!
பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?


][CENTER]http://img27.picoodle.com/img/img27/4/7/14/f_sadyounggirm_6d7bbb7.jpg

அத்தை வீட்டில் பாலும் பழமும்..

அப்புறம் அன்பிற்குக் குறையுமுண்டோ? மூணு நாட்கள் சேர்ந்தாப்புல இருந்து விட்டால் முனகும் உறவுகளிடையே இப்படி ஒரு அத்தை கிடைப்பது கொடுப்பினைதான்..

சின்னப்பிள்ளை புரியாம அழுவுது,, ஆத்தாப் பாசம் அப்படித்தான், :D

கண்மணி
15-07-2008, 07:19 AM
கண்களில் இல்லை
கல்பனா சாவ்லா பற்றிய
கனவுகள்...

மனதில் இல்லை
மதர் தெரசா பற்றிய
ஆசைகள்.......

என்
பெயர் கூட
படிக்க தெரியாமால்
ஏழ்மை துரத்த
ஏங்குகிறது மனம்
பள்ளிகளை கண்டால்.......

கருத்து அழகு.. படர்க்கையில் சொல்லி இருந்தால் சிக்கென்றுப் பொருந்தி இருக்கும் மீரா! தன்மையில், ஊறுகாயில் விழுந்த குலோப் ஜாமூன்.

aren
15-07-2008, 07:23 AM
கண்களில் இல்லை
கல்பனா சாவ்லா பற்றிய
கனவுகள்...

மனதில் இல்லை
மதர் தெரசா பற்றிய
ஆசைகள்.......

என்
பெயர் கூட
படிக்க தெரியாமால்
ஏழ்மை துரத்த
ஏங்குகிறது மனம்
பள்ளிகளை கண்டால்.......

வீட்டில் உட்கார்ந்துகொண்டு ரொம்பவும் யோசிக்கிறீங்க போலிருக்கு.

கவிதைவரிகள் அருமை. இன்னும் எழுதுங்கள்.

தீபன்
15-07-2008, 08:08 AM
ஊருக்குள்ள நானும் ராணிதான்
ஊரவிட்டு கலைச்சது ஆமிதான்!
ஏழ்மையில் வந்ததில்லை இந்தக் கோலம்
இது-
ஊர இழந்து வாறதால வந்த சோகம்!

நம்பிகோபாலன்
15-07-2008, 08:12 AM
என் ஏழ்மைக்கு கிடைக்கல
பள்ளியில சீட்டு
நின்று கொண்டாலும்
பரவாயில்லை
கிடைத்தது
ஜன்னலோர சீட்டு.....

ஆதி
15-07-2008, 08:13 AM
கேணியில் குதித்து மகிழும்
சிறுவர்கள்..

தூரத்து குளத்தில்
குவிந்திருக்கும் கமல மலர்கள்..

சுருங்கிய கண்களும்
வயிறுமாய்
ஆடு மேய்க்கும் முதியவன்..

சாக்கில் பரப்பி
வெற்றிலை செவ்வாயோடு பழம்
விற்கும் கிளவி

அறுவடை நிகழும் வயல்..

கரும்பு சுமந்து செல்லும் லாரி..

பின்னோக்கி ஓடும் மரங்கள்..

சேற்றில் ஜீவனம்
தேடிக்கொண்டிருக்கும்
செங்கால் நாரைகள்

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட பலவற்றையும்
சுமந்து செல்கிறாள்
ஊர் பிரியும் வலிகளோடு..

---------------------------------
(இறுதி பத்தி இப்படி இருந்தால்)

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட எவற்றக்கும்
தெரிய போவதில்லை
ஊர் பிரியுமிவளின்
மனசின் வலிகளை..

--------------------------

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட எவ்வற்றுக்கும்
கேட்க போவதில்லை
ரப்பர் வளையல் போன்று
சப்திக்காத
மனசின் அழுகைகளை..

meera
15-07-2008, 08:17 AM
வீட்டில் உட்கார்ந்துகொண்டு ரொம்பவும் யோசிக்கிறீங்க போலிருக்கு.

கவிதைவரிகள் அருமை. இன்னும் எழுதுங்கள்.

அண்ணா, உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு ம்ம்ம்ம்ம்ம்.:smilie_abcfra::mini023:

நாங்க இன்னும் வேலைய விடலையில்ல. வீட்டுல இருந்தா எப்படி மன்றம் வாரது????
நன்றி அண்ணா.

meera
15-07-2008, 08:22 AM
கருத்து அழகு.. படர்க்கையில் சொல்லி இருந்தால் சிக்கென்றுப் பொருந்தி இருக்கும் மீரா! தன்மையில், ஊறுகாயில் விழுந்த குலோப் ஜாமூன்.

என் தவறை உணர்ந்தேன் கண்மனியக்கா.

இனி வரும் கவிதைகளை கவனமாய் தர முயல்கிறேன்.

வெளிப்படையான பின்னூட்டத்திற்க்கு நன்றிகள் பல.

கண்மணி
15-07-2008, 10:04 AM
ஊருக்குள்ள நானும் ராணிதான்
ஊரவிட்டு கலைச்சது ஆமிதான்!
ஏழ்மையில் வந்ததில்லை இந்தக் கோலம்
இது-
ஊர இழந்து வாறதால வந்த சோகம்!

சிக்கனமானக் கவிதை.. ஆர்மியினால் ஊரை விட்டோடும் குடும்ப உறுப்பினள்.. இன்னும் கொஞ்சம் அவள் மனசில் இருந்ததையும் சொல்லி இருந்தால் மிகவிம் உள்ளத்தில் பதிவதாக இருந்திருக்குமே தீபன்.

கண்மணி
15-07-2008, 10:07 AM
என் ஏழ்மைக்கு கிடைக்கல
பள்ளியில சீட்டு
நின்று கொண்டாலும்
பரவாயில்லை
கிடைத்தது
ஜன்னலோர சீட்டு.....

சீட்டுக் கிடைத்த சந்தோஷத்தை மிஞ்சி கண்ணில் தெரியும் சோகம்..
படம் பார்க்காமல் கவிதையை மட்டும் பார்த்தால் அழகு,

அம்மா மடியில்
தம்பிப் பாப்பா
இங்கும் நான் நின்றுகொண்டு..
பதில் தெரியாமல்
பள்ளியில் நிற்பதைப் போல

கண்மணி
15-07-2008, 10:19 AM
கேணியில் குதித்து மகிழும்
சிறுவர்கள்..

தூரத்து குளத்தில்
குவிந்திருக்கும் கமல மலர்கள்..

சுருங்கிய கண்களும்
வயிறுமாய்
ஆடு மேய்க்கும் முதியவன்..

சாக்கில் பரப்பி
வெற்றிலை செவ்வாயோடு பழம்
விற்கும் கிளவி

அறுவடை நிகழும் வயல்..

கரும்பு சுமந்து செல்லும் லாரி..

பின்னோக்கி ஓடும் மரங்கள்..

சேற்றில் ஜீவனம்
தேடிக்கொண்டிருக்கும்
செங்கால் நாரைகள்

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட பலவற்றையும்
சுமந்து செல்கிறாள்
ஊர் பிரியும் வலிகளோடு..

ஜன்னலோரப் பயணத்தின் சுகங்கள்
ஊர் பிரிந்ததால் வந்தச் சோகம்
சோகங்களையும் காட்சிகளையும் மனதில் சுமக்கிறாள்..
சோகங்கள் சுகங்களால் மாறினவா இல்லையா?

சோகங்கள் சுகங்களை மறைத்தனவா இல்லையா?
அவளுடைய மனதுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அல்லவா?

ஆதி
15-07-2008, 10:39 AM
ஜன்னலோரப் பயணத்தின் சுகங்கள்
ஊர் பிரிந்ததால் வந்தச் சோகம்
சோகங்களையும் காட்சிகளையும் மனதில் சுமக்கிறாள்..
சோகங்கள் சுகங்களால் மாறினவா இல்லையா?

சோகங்கள் சுகங்களை மறைத்தனவா இல்லையா?
அவளுடைய மனதுக்கு மட்டுமே புரிந்த ஒன்று அல்லவா?

உண்மையே அக்கா..

(இறுதி பத்தி இப்படி இருந்தால்)

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட எவற்றக்கும்
தெரிய போவதில்லை
ஊர் பிரியுமிவளின்
மனசின் வலிகளை..

--------------------------

என்று ஜின்னலுக்கு
வெளியே கண்ட எவ்வற்றுக்கும்
கேட்க போவதில்லை
ரப்பர் வளையல் போன்று
சப்திக்காத
மனசின் அழுகைகளை..

கவிதையை இப்படியும் முடித்து பார்த்தேன்..

இவைகளும் சாத்தியம் தானே அக்கா.. ?

விகடன்
15-07-2008, 10:46 AM
தெருவெங்கிலும் தோதனைச் சாவடி
தினந்தோறும் வீதியில் காவடி
நெடுதூரப் பயணமேயானாலும்
நமக்கில்லை வாகனத் தூக்கமே...

பாலகன்
15-07-2008, 11:36 AM
தெருவெங்கிலும் தோதனைச் சாவடி
தினந்தோறும் வீதியில் காவடி
நெடுதூரப் பயணமேயானாலும்
நமக்கில்லை வாகனத் தூக்கமே...

சிறுமி சொல்வதை போலவே
இருந்தது நண்பரே விராடன்

வாழ்த்துக்கள்

அன்புடன்

விகடன்
15-07-2008, 11:52 AM
சிறுமியெந்தன் உளறலில்லை - ஈழத்
தமிழரெங்களின் உறுமல்
பயந்து வாழும் எம்மை - ஒருநாள்
பதுங்கி ஆள தூண்டுகின்றனர்

விகடன்
15-07-2008, 12:02 PM
குழிகளே வடிவான வீதியடி - அதிலே
குமுறிக்கொண்டோடுது வண்டியடி
கரை நெடுகெங்கிலும் எச்சரிக்கை - மீறின்
கால் கை போய்விடும் பத்திரமாம்.

பூமகள்
15-07-2008, 12:13 PM
அந்த தெரு ஓரத்துல
ரோசாப் பூவா
செவத்த பொண்ணு..
மினுக்குது அவகண்ணு..

அம்மா வாங்கித் தார
ஐஸ்கிரீம் வழிய
என்னைப் பார்த்து
கொக்கானி காட்டுது...

முந்தானேத்து
அம்மா கொடுத்துவிட்ட
கடலமிட்டாயி..
காக்காகடியில்
மிஞ்சி இருக்கு..

தீப்பெட்டி அடுக்கிய
கையி முழுக்க
மருந்து நாத்தம் கூடிரிச்சி..

பையிலிருந்தும்
எடுக்க முடியல
உருகிப் போன
கடல மிட்டாயி
மாதிரியே..
வெந்து போச்சு
மனசும்..!

ஆதி
15-07-2008, 12:33 PM
அவளின் அந்த
கூரிய பார்வை..

கால் தூக்கி
தலைக் கோதி கொள்ளும்
கிளி மீதோ

இரை பொறிக்கி கொண்டிருக்கும்
மைனா மீதோ

பிடி நெடியடிக்கும்
வார்த்தைகளோடு
பலுனும் வண்ணக் கண்ணாடியும்
விற்றுக் கொண்டிருக்கும் கிழவன்
மீதோ

படர்ந்திருக்கலாம்..

நம்பிகோபாலன்
15-07-2008, 12:35 PM
அரசு தொட்டில்ல போட்டிருக்கலாம்
குப்பை தொட்டில்ல போட்டிருக்கலாம்
கள்ளி பாலு கொடுத்திருக்கலாம்
பிறக்கும் முன்னே கலைச்சிருக்கலாம்
அதனை விட்டு
ஏன் என்னை பிச்சை
எடுக்க அனுப்பினாய்
என்னை
பத்து மாதம் சுமந்தவளே......

கண்மணி
15-07-2008, 12:36 PM
தெருவெங்கிலும் சோதனைச் சாவடி
தினந்தோறும் வீதியில் காவடி
நெடுதூரப் பயணமேயானாலும்
நமக்கில்லை வாகனத் தூக்கமே...

வா கனத் தூக்கமே!
பிய்த்துக் கொண்டு போகும் மனதை
சற்று ஆறுதலாக்க.. :D:D:D

தூக்கம் சிறுமியின் பெருங் கவலையாயிருக்காதுதான்..
ஆனாலும் சில காட்சிகள் காணும் பொழுது
உறங்க முடியாத மனதின் மேல்
கோபம் வரத்தான் செய்கிறது.. :icon_b:

கண்மணி
15-07-2008, 12:38 PM
:icon_b:
சிறுமியெந்தன் உளறலில்லை - ஈழத்
தமிழரெங்களின் உறுமல்
பயந்து வாழும் எம்மை - ஒருநாள்
பதுங்கி ஆள தூண்டுகின்றனர்

கண்ணில் செறியும் சின்னக் கோபம்
வெடிக்கும் சிந்தனை மனதில்..
நல்ல கவிதை!:icon_b:

கண்மணி
15-07-2008, 12:39 PM
குழிகளே வடிவான வீதியடி - அதிலே
குமுறிக்கொண்டோடுது வண்டியடி
கரை நெடுகெங்கிலும் எச்சரிக்கை - மீறின்
கால் கை போய்விடும் பத்திரமாம்.

என்ன விராடன் கலக்கறீங்க.. காரில் கூடவே போன மாதிரி இருக்கு!:icon_b:

கண்மணி
15-07-2008, 12:42 PM
அந்த தெரு ஓரத்துல
ரோசாப் பூவா
செவத்த பொண்ணு..
மினுக்குது அவகண்ணு..

அம்மா வாங்கித் தார
ஐஸ்கிரீம் வழிய
என்னைப் பார்த்து
கொக்கானி காட்டுது...

முந்தானேத்து
அம்மா கொடுத்துவிட்ட
கடலமிட்டாயி..
காக்காகடியில்
மிஞ்சி இருக்கு..

தீப்பெட்டி அடுக்கிய
கையி முழுக்க
மருந்து நாத்தம் கூடிரிச்சி..

பையிலிருந்தும்
எடுக்க முடியல
உருகிப் போன
கடல மிட்டாயி
மாதிரியே..
வெந்து போச்சு
மனசும்..!

அட்டா, கடலை மிட்டாயைக் காலையில் பல்விளக்கறதுக்கு முன்னாலையே சாப்பிட்டு முடிக்கிறதில்லையா? என்ன பொண்ணு நீ? பூவக்காவைப் பாரு அப்படித்தான் செய்வா!

சின்னச் சிந்தனை அழகு,, ஆனா வார்த்தைகள் கொஞ்சம் அதிகம்..

கண்மணி
15-07-2008, 12:48 PM
அவளின் அந்த
கூரிய பார்வை..

கால் தூக்கி
தலைக் கோதி கொள்ளும்
கிளி மீதோ

இரை பொறிக்கி கொண்டிருக்கும்
மைனா மீதோ

பீடி நெடியடிக்கும்
வார்த்தைகளோடு
பலுனும் வண்ணக் கண்ணாடியும்
விற்றுக் கொண்டிருக்கும் கிழவன்
மீதோ

படர்ந்திருக்கலாம்..

சின்னக் கவி வண்ணக் கவி.. ஒரு கவிஞனின் பார்வை இப்படித்தான்,, அவள் மனதில் நுழையாமல் அவளை மட்டுமே பார்த்து எழுதுவது! அவளைத் தொடாமலேயே அவளைப் பற்றி ஒரு கவிஞனின் பார்வை.
புதுப் பார்வை!

பீடி நெடியடிக்கும்
வார்த்தைகளோடு - தவிர்த்து விட்டு வேறு கொடுத்திருக்கலாம்..:D

கண்மணி
15-07-2008, 12:52 PM
அரசு தொட்டில்ல போட்டிருக்கலாம்
குப்பை தொட்டில்ல போட்டிருக்கலாம்
கள்ளி பாலு கொடுத்திருக்கலாம்
பிறக்கும் முன்னே கலைச்சிருக்கலாம்
அதனை விட்டு
ஏன் என்னை பிச்சை
எடுக்க அனுப்பினாய்
என்னை
பத்து மாதம் சுமந்தவளே......

கடைசி நாலுவரி மனசை ஒரு அடி அடிச்சு படத்தை விட்டுத் தூரத் தூக்கிட்டுப் போய் போட்டுருச்சி நம்பி.. படத்தைப் பார்க்காமல் கவிதையைப் பார்க்கிறேன்..

பதில் தெரியலை.. அம்மா கிட்டதான் கேட்கணும் .. எப்ப இருந்து நீ பிச்சைக்காரி என்று!

விகடன்
15-07-2008, 01:04 PM
எரிந்து கிடக்கும் நூலகம்
இடிந்து கிடக்கும் இல்லங்கள்
கருகிய பயந்தரு விருட்சங்கள்
கலைந்தே கிடக்கும் தெருக்கடைகள்
முள்வேலிபோட்டிருக்கும் வீதியோரங்கள்
முடிந்தவரை தொங்கும் அபாய வாசகங்கள்
புனரமைக்கப்படா நீர்த்தேக்கங்கள்
விஷச் சன்னம் விதைக்கப்பட்ட வேளாண்மை நிலங்கள்
இவகளின் மத்தியில் தேடுகிறேன்
பதவியிலிருப்போர் கூவிய
எந்தேச வளர்ச்சிதனை!!!

விகடன்
15-07-2008, 01:12 PM
என்ன விராடன் கலக்கறீங்க.. காரில் கூடவே போன மாதிரி இருக்கு!:icon_b:

ஈழத்தில் வடபகுதியை நோக்கி செல்லும்போது வீதி வழியெங்கிலும் அபாய எச்சரிக்கை போடப்பட்டிருக்கும். மேலும், மீறிக் கால் வைத்தால் உங்கள் கால் கை உயிர்ச் சேதங்களுக்கு நீங்களே பொறுப்பாளிகள் என்ற கருத்திலமையும் வாசகங்கள் மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.
இன்னும் அகற்றப்படாது இருப்பதை இட்டு சந்தோஷப்படுவதா? இல்லை, அறிவித்தல் தந்து பலர் ஊனத்திலிருந்து தப்ப வழிசெய்ததை பாராட்டுவதா? என்று தெரியாது.
பயணத்தின்போது ஏதாவது தேவைக்கு வீதியிலிருந்து ஒரு அடியேனும் வெளியே வைக்க முடியாது. இப்படியான ஒரு பயணத்தைத்தான் தமிழர் நாங்கள் பயணித்திருந்தோம். இன்றும் அந்த எச்சரிக்கை வசனங்கள் பசுமரத்தாணிபோல என் எண்ணங்களிலிருந்து விலகாமல்.....
அதன் வெளிப்பாடே இந்த கவிதை.

கண்மணி
15-07-2008, 03:17 PM
இன்னும் இரண்டு நாட்கள் மன்றம் வருவது குறையும் தோழர்களே! யாராவது படம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்!

கண்மணி
15-07-2008, 03:48 PM
எரிந்து கிடக்கும் நூலகம்
இடிந்து கிடக்கும் இல்லங்கள்
கருகிய பயந்தரு விருட்சங்கள்
கலைந்தே கிடக்கும் தெருக்கடைகள்
முள்வேலிபோட்டிருக்கும் வீதியோரங்கள்
முடிந்தவரை தொங்கும் அபாய வாசகங்கள்
புனரமைக்கப்படா நீர்த்தேக்கங்கள்
விஷச் சன்னம் விதைக்கப்பட்ட வேளாண்மை நிலங்கள்
இவகளின் மத்தியில் தேடுகிறேன்
பதவியிலிருப்போர் கூவிய
எந்தேச வளர்ச்சிதனை!!!

கடைசி இருவரிகள் என்னைச் சிறுமியிடம் இருந்து விலக்கி ஒரு பெரியவனிடம் அழைத்துச் செல்கின்றன விராடன் அண்ணா!!

போராடப் போய்விட்ட அண்ணனை, அப்பாவைத் தேடியிருந்தால் மனம் கனத்து போயிருக்குமே!

கண்மணி
15-07-2008, 03:56 PM
இந்தச் சுற்றில் பணமுடிப்புப் பெறுபவர்கள்:

விராடன் தேடுகிறேன்
நம்பிகோபாலன் பதில் சொல் அம்மா
ஆதி அவள் பார்வை
பூமகள் கடலை மிட்டாய் மனசு
விராடன் பத்திரம்
விராடன் வாழ்வும் ஆள்வும்
விராடன் தொலைந்தத் தூக்கம்
ஆதி உள்ளே வெளியே
நம்பிகோபாலன் ஜன்னலோரச் சீட்டு
தீபன் என்சோகம்
meera ஆசைகள்!
இதயம் கிடைக்குமா?
சிவா.ஜி ஆத்தா வாசனை
ஆதி இவள் மனசு
aren விட்டு விடுங்கள்
அழகிய மணவாளன் சந்தேக மனசு

பாலகன்
15-07-2008, 04:39 PM
இதோ அடுத்த படம்.............

கண்மணிக்காக....

http://i342.photobucket.com/albums/o412/clotyjohn/abc.jpg


அன்புடன்

சிவா.ஜி
15-07-2008, 05:53 PM
நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியலையே...................... இருந்தாலும் அவங்களா நினைச்சுக்கிட்டு எழுதிடுவோம்.

ரொம்ப நன்றி சார்......
சவுக்காரம் வாங்க
காசு கொடுத்ததுக்கு....
டவுசர் தொவைச்சு நாளாச்சு
இருந்தாலும் வேணாம்.....
அந்நியக்காசை வாங்கி...
அம்மணம் மறைக்க விரும்பல்ல!

நம்பிகோபாலன்
15-07-2008, 06:54 PM
காசு பணம் வேண்டாம்
இப்போதைய நிலைமைக்கு
சோறு கூட வேண்டாம்
பசிய கூட தாங்கிப்பேன்
கல்வி அறிவு தந்திடுங்க
நாளைய உலகம்
கையேந்தும் என் கையில்.....

விகடன்
15-07-2008, 09:28 PM
முடி செழிக்க உரமில்லை
உடல் மறைக்க துணியுமில்லை
இனாமாக இருந்தாலும்
எனக்கு வேண்டாம் பிச்சை

உதவுங் கரங்களாம் உங்களை
உதாசீனப் படுத்தவில்லை
சரிப்படுத்த மனமிருந்தால்
குரல் கொடுங்கள் சமாதானத்திற்கு

சிகப்புச் சட்டையுடன் செழிப்பாக சிரித்திருக்கும் ஒருவனும், சிரிப்பை மட்டும் காண்பிக்கும் (வெய்யிலால்) சிவந்த தேகத்தில் ஒருவனும்...
படம் எனக்கு எதையெதையோ சொல்லிநிற்கின்றது :D

கண்மணி
16-07-2008, 02:57 AM
வேண்டாம் உங்கள்
செயற்கைப் பயிர்கள்
வாழட்டும் சில நாள்
எங்கள் உயிர்கள்!

மறத்தமிழன்
16-07-2008, 03:03 AM
சிகப்புச் சட்டையுடன் சழிப்பாக சிரித்திருக்கும் ஒருவனும், சிரிப்பை மட்டும் காண்பிக்கும் (வெய்யிலால்) சிவந்த தேகத்தில் ஒருவனும்...
படம் எனக்கு எதையெதையோ சொல்லிநிற்கின்றது :D

அந்த எதையெதையோவைத்தானே இங்க சொல்லனும்னு சொல்றாங்க. அதையும் கவிதையிலேயே சொல்லிட வேண்டியதுதானே?

பாலகன்
16-07-2008, 11:19 AM
காசு பணம் வேண்டாம்
இப்போதைய நிலைமைக்கு
சோறு கூட வேண்டாம்
பசிய கூட தாங்கிப்பேன்
கல்வி அறிவு தந்திடுங்க
நாளைய உலகம்
கையேந்தும் என் கையில்.....

உண்மையிலேயே பாராட்டுக்குரிய கவிதையிது நண்பரே நம்பி


நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியலையே...................... இருந்தாலும் அவங்களா நினைச்சுக்கிட்டு எழுதிடுவோம்.

ரொம்ப நன்றி சார்......
சவுக்காரம் வாங்க
காசு கொடுத்ததுக்கு....
டவுசர் தொவைச்சு நாளாச்சு
இருந்தாலும் வேணாம்.....
அந்நியக்காசை வாங்கி...
அம்மணம் மறைக்க விரும்பல்ல!

கவிதை சுடுதே நண்பரே......... அருமை.............

அன்புடன்

பாலகன்
16-07-2008, 11:20 AM
முடி செழிக்க உரமில்லை
உடல் மறைக்க துணியுமில்லை
இனாமாக இருந்தாலும்
எனக்கு வேண்டாம் பிச்சை

உதவுங் கரங்களாம் உங்களை
உதாசீனப் படுத்தவில்லை
சரிப்படுத்த மனமிருந்தால்
குரல் கொடுங்கள் சமாதானத்திற்கு

சிகப்புச் சட்டையுடன் செழிப்பாக சிரித்திருக்கும் ஒருவனும், சிரிப்பை மட்டும் காண்பிக்கும் (வெய்யிலால்) சிவந்த தேகத்தில் ஒருவனும்...
படம் எனக்கு எதையெதையோ சொல்லிநிற்கின்றது :D

அதானே இவனுங்களே அடிச்சிப்புட்டு பின்னாடி வந்து அணைக்கவும் செய்யறானுங்க

அன்புடன்

பாலகன்
16-07-2008, 11:24 AM
வேண்டாம் உங்கள்
செயற்கைப் பயிர்கள்
வாழட்டும் சில நாள்
எங்கள் உயிர்கள்!

நாலே வரியில நறுக்குன்னு சொல்லிப்புட்டீங்க கண்மணி,,, விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இவர்கள்ன்னு நினைக்கிறேன்

அன்புடன்

சிவா.ஜி
16-07-2008, 11:37 AM
யாரோ ஒருவன் கொடுக்கும் எதையோ..
என்னதென்று அறியாது,
வெள்ளைச் சிரிப்புடன் வாங்கும் சின்னப்பையன்!
விதையா விஷமா?
பணமா? நோயா?
நட்பா? நயவஞ்சகமா?
நல்லதா? கெட்டதா?
எதுவுமே தெரியாமல்....
எத்தனை பூரிப்பு சின்னஞ்சிறு முகத்தில்?
கைகூப்பும் கண்ணியம்....!
ஏழை நாடுகளின்
இயலாக் குடிமகனை
பிரதிபலிக்கும் பாலகர்கள்!

நதி
16-07-2008, 12:41 PM
காந்தள் விரல்களும்
சூம்பித்தான் போகின்றன
யாசகம் தரும் உனக்காக
கூப்பும் பொழுதுகளில்.

பாலகன்
16-07-2008, 12:45 PM
யாரோ ஒருவன் கொடுக்கும் எதையோ..
என்னதென்று அறியாது,
வெள்ளைச் சிரிப்புடன் வாங்கும் சின்னப்பையன்!
விதையா விஷமா?
பணமா? நோயா?
நட்பா? நயவஞ்சகமா?
நல்லதா? கெட்டதா?
எதுவுமே தெரியாமல்....
எத்தனை பூரிப்பு சின்னஞ்சிறு முகத்தில்?
கைகூப்பும் கண்ணியம்....!
ஏழை நாடுகளின்
இயலாக் குடிமகனை
பிரதிபலிக்கும் பாலகர்கள்!

அப்பப்பா எத்தை கேள்விகள் எழுகின்றது


காந்தள் விரல்களும்
சூம்பித்தான் போகின்றன
யாசகம் தரும் உனக்காக
கூப்பும் பொழுதுகளில்.

ரவுத்திரா மனசை தொட்டிருச்சிப்பா உங்க கவிதை, அருமை

இதயம்
16-07-2008, 01:36 PM
இங்கே நிற்பது..
சட்டை போட்ட சைனா..
வதைக்கும் வறுமையில் இந்தியா..!
வெற்று கை கொடுத்து
வேதனை துடைப்பதாய்
நடிக்கும் நயவஞ்சக அமெரிக்கா..!

சட்டையணிந்தவனுக்கும்,
வறுமையின் உரிமையாளனுக்கும்
வித்தியாசம் தோற்றத்தில் மட்டுமே..!
யார் முதலில் முன்னேறுவதென்ற
அவர்களின் ஓட்டத்தில் அல்ல..!

காலம் மாறும்,
சட்டையும் இடம் மாறும்..!
அன்று...
கொடுப்பவன் இருக்கும் இடத்தில்
உயர்ந்து நிற்கும் இந்தியா..!
அப்பொழுது அதன் கையில்
அழியா செல்வம் குவிந்து கிடக்கும்.!
அமெரிக்கா அன்று வளைந்து கிடக்கும்..!!

Keelai Naadaan
16-07-2008, 01:44 PM
தருகின்ற உனக்கு
திருப்பி தர
என்னிடம் ஏதுமில்லை
நன்றியை தவிர...

பாலகன்
16-07-2008, 01:59 PM
தருகின்ற உனக்கு
திருப்பி தர
என்னிடம் ஏதுமில்லை
நன்றியை தவிர...

தருகின்ற உனக்கு
திருப்பி தர
என்னிடம் ஏதுமில்லை
சிரிப்பை தவிர

இப்படி சொன்னால் நல்லாயிருக்குமா?

பாலகன்
16-07-2008, 02:00 PM
இங்கே நிற்பது..
சட்டை போட்ட சைனா..
வதைக்கும் வறுமையில் இந்தியா..!
வெற்று கை கொடுத்து
வேதனை துடைப்பதாய்
நடிக்கும் நயவஞ்சக அமெரிக்கா..!

சட்டையணிந்தவனுக்கும்,
வறுமையின் உரிமையாளனுக்கும்
வித்தியாசம் தோற்றத்தில் மட்டுமே..!
யார் முதலில் முன்னேறுவதென்ற
அவர்களின் ஓட்டத்தில் அல்ல..!

காலம் மாறும்,
சட்டையும் இடம் மாறும்..!
அன்று...
கொடுப்பவன் இருக்கும் இடத்தில்
உயர்ந்து நிற்கும் இந்தியா..!
அப்பொழுது அதன் கையில்
அழியா செல்வம் குவிந்து கிடக்கும்.!
அமெரிக்கா அன்று வளைந்து கிடக்கும்..!!

அப்பப்பா என்ன ஒரு தேசபக்தி, உங்க வாக்கு பலிக்கட்டும்

கண்மணி
17-07-2008, 12:43 AM
நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியலையே...................... இருந்தாலும் அவங்களா நினைச்சுக்கிட்டு எழுதிடுவோம்.

ரொம்ப நன்றி சார்......
சவுக்காரம் வாங்க
காசு கொடுத்ததுக்கு....
டவுசர் தொவைச்சு நாளாச்சு
இருந்தாலும் வேணாம்.....
அந்நியக்காசை வாங்கி...
அம்மணம் மறைக்க விரும்பல்ல!

தன் மானம் காக்க
தன்மானம் தடுக்குதா?
பலே!

கண்மணி
17-07-2008, 12:58 AM
காசு பணம் வேண்டாம்
இப்போதைய நிலைமைக்கு
சோறு கூட வேண்டாம்
பசிய கூட தாங்கிப்பேன்
கல்வி அறிவு தந்திடுங்க
நாளைய உலகம்
கையேந்தும் என் கையில்.....

அறிவுப் பிச்சை கேட்பது
அறிந்தவனா அறியாதவனா?
இன்னொரு சிறுவன்
தனியாப் போயிட்டானே!

கண்மணி
17-07-2008, 01:05 AM
முடி செழிக்க உரமில்லை
உடல் மறைக்க துணியுமில்லை
இனாமாக இருந்தாலும்
எனக்கு வேண்டாம் பிச்சை

உதவுங் கரங்களாம் உங்களை
உதாசீனப் படுத்தவில்லை
சரிப்படுத்த மனமிருந்தால்
குரல் கொடுங்கள் சமாதானத்திற்கு

சிகப்புச் சட்டையுடன் செழிப்பாக சிரித்திருக்கும் ஒருவனும், சிரிப்பை மட்டும் காண்பிக்கும் (வெய்யிலால்) சிவந்த தேகத்தில் ஒருவனும்...
படம் எனக்கு எதையெதையோ சொல்லிநிற்கின்றது :D

போதும்யா! போதும்யா
உணவுப் பொட்டலங்களும்
குழிப் பதுங்கு எலி வாழ்க்கைகளும்
குண்டுகளே ஆட்சி செய்தால்
கும்பிடும் கைகளும் ஊனம்தான்
தானம் வேணாம்
சமாதானம் வேணாம்
சமஸ்தானம் வேணாம்
சம ஸ்தானம்தான் வேணும்.

கண்மணி
17-07-2008, 01:08 AM
யாரோ ஒருவன் கொடுக்கும் எதையோ..
என்னதென்று அறியாது,
வெள்ளைச் சிரிப்புடன் வாங்கும் சின்னப்பையன்!
விதையா விஷமா?
பணமா? நோயா?
நட்பா? நயவஞ்சகமா?
நல்லதா? கெட்டதா?
எதுவுமே தெரியாமல்....
எத்தனை பூரிப்பு சின்னஞ்சிறு முகத்தில்?
கைகூப்பும் கண்ணியம்....!
ஏழை நாடுகளின்
இயலாக் குடிமகனை
பிரதிபலிக்கும் பாலகர்கள்!

ம்ம் கவிதையில் வார்த்தைகள் அதிகம் சிவாஜியண்ணா...

விதையா விஷமா?
பணமா? நோயா?
நட்பா? நயவஞ்சகமா?
நல்லதா? கெட்டதா?
எதுவுமே தெரியாமல்....
கைகூப்பும் கண்ணியம்....!
ஏழை நாடுகளின்
இயலாக் குடிமகன்கள்

இவ்வளவு போதுமே!

கண்மணி
17-07-2008, 01:12 AM
காந்தள் விரல்களும்
சூம்பித்தான் போகின்றன
யாசகம் தரும் உனக்காக
கூப்பும் பொழுதுகளில்.

ஆமாம் ரவுத்திரன்.. வாங்க வாங்க..

ஏன் எல்லோருமே அந்தச் சிறுவன் பிச்சை வாங்கறான்னே நினைக்கிறோம்?

என்னிடம் பத்திரமா இருக்கு
சந்தோஷத்தின் ரகசியம்
பிரித்துப் பார்க்க முடிந்தால்
எடுத்துக் கொள்!

இப்படின்னு அன்னியனுக்கு ஏன் நாம கொடுக்கக் கூடாது?

கண்மணி
17-07-2008, 01:14 AM
இங்கே நிற்பது..
சட்டை போட்ட சைனா..
வதைக்கும் வறுமையில் இந்தியா..!
வெற்று கை கொடுத்து
வேதனை துடைப்பதாய்
நடிக்கும் நயவஞ்சக அமெரிக்கா..!

சட்டையணிந்தவனுக்கும்,
வறுமையின் உரிமையாளனுக்கும்
வித்தியாசம் தோற்றத்தில் மட்டுமே..!
யார் முதலில் முன்னேறுவதென்ற
அவர்களின் ஓட்டத்தில் அல்ல..!

காலம் மாறும்,
சட்டையும் இடம் மாறும்..!
அன்று...
கொடுப்பவன் இருக்கும் இடத்தில்
உயர்ந்து நிற்கும் இந்தியா..!
அப்பொழுது அதன் கையில்
அழியா செல்வம் குவிந்து கிடக்கும்.!
அமெரிக்கா அன்று வளைந்து கிடக்கும்..!!


அன்னிக்கு இல்லை இதயம், இன்னிக்கே சைனாகிட்ட அமெரிக்கா குனிந்தாகியாச்சு! கூட இருக்கிற இந்தியன் மட்டும்தான் இன்னும் பாக்கி!

ரொம்ப உரைநடையா இருக்கு,, நிறைய எழுதினா வார்த்தைகள் மிளகு மாதிரி சுருங்கிக் காரமா கவிதையா மாறும்.

கண்மணி
17-07-2008, 01:16 AM
தருகின்ற உனக்கு
திருப்பி தர
என்னிடம் ஏதுமில்லை
நன்றியை தவிர...


மணவாளன் சொன்னது கரீட்டு.

எதுமில்லாதவனிடம்
சிரிப்பு
இருக்கிறது
திருப்பிக் கொடுக்க!

கண்மணி
17-07-2008, 01:26 AM
இந்தச் சுற்றிற்காக பனமுடிப்பு பெறுபவர்கள் இதோ..

இனி அடுத்தச் சுற்றிற்கான படத்தைத் தரலாமே!


Keelai Naadaan என்னிடம் இருப்பது
இதயம் இந்தியா சைனா அமெரிக்கா
ரவுத்திரன் சூம்பிய மனம்
சிவா.ஜி இயலாக் குடிமகன்கள்
விராடன் சமாதானம் பேசுங்க
நம்பிகோபாலன் கல்வி வேண்டும்
சிவா.ஜி மானம் தன் மானம்

பாலகன்
17-07-2008, 02:20 AM
இதோ பூலோக விந்தை...........

http://i342.photobucket.com/albums/o412/clotyjohn/_42768571_volacno1.jpg


அன்புடன்

பாலகன்
17-07-2008, 02:24 AM
இந்தச் சுற்றிற்காக பனமுடிப்பு பெறுபவர்கள் இதோ..

இனி அடுத்தச் சுற்றிற்கான படத்தைத் தரலாமே!


Keelai Naadaan என்னிடம் இருப்பது
இதயம் இந்தியா சைனா அமெரிக்கா
ரவுத்திரன் சூம்பிய மனம்
சிவா.ஜி இயலாக் குடிமகன்கள்
விராடன் சமாதானம் பேசுங்க
நம்பிகோபாலன் கல்வி வேண்டும்
சிவா.ஜி மானம் தன் மானம்

அம்மா தாயே, படம் போட்டவனுக்கும் ஏதாவது பார்த்து போடுங்கம்மா, உங்களுக்கு புண்ணியமா போவும்

அன்புடன்

கண்மணி
17-07-2008, 02:40 AM
அம்மா தாயே, படம் போட்டவனுக்கும் ஏதாவது பார்த்து போடுங்கம்மா, உங்களுக்கு புண்ணியமா போவும்

அன்புடன்

புண்ணியமா போவுமா? அப்ப நான் பாவி ஆயிடுவேனே!!!:confused::confused::confused:

பாலகன்
17-07-2008, 02:47 AM
புண்ணியமா போவுமா? அப்ப நான் பாவி ஆயிடுவேனே!!!:confused::confused::confused:

நீங்க ஏற்கெனவே நிறைய புண்ணியம் சேர்த்து வச்சிருக்கிறதால,

உங்க கிட்ட இருக்கிற புண்ணியம் என்ன கரைஞ்சா போவும்னு சொன்னேன் கண்மணி(அப்பாடா எப்படியெல்லாம் சமாளிக்கவேன்டியிருக்குது, ஸ்சொப்பா இப்பவே கண்ணை கட்டுதே)

அன்புடன்

கண்மணி
17-07-2008, 02:58 AM
நீங்க ஏற்கெனவே நிறைய புண்ணியம் சேர்த்து வச்சிருக்கிறதால,

உங்க கிட்ட இருக்கிற புண்ணியம் என்ன கரைஞ்சா போவும்னு சொன்னேன் கண்மணி(அப்பாடா எப்படியெல்லாம் சமாளிக்கவேன்டியிருக்குது, ஸ்சொப்பா இப்பவே கண்ணை கட்டுதே)

அன்புடன்

புண்ணியம் என்ன கரைஞ்சா போகுமா?

நல்ல எண்ணத்தில் விஷம் கரைஞ்சா போகும்
நல்ல செயலில் அரசியல் கரைஞ்சா போகும்
நல்ல திரியில் இது மாதிரி அரட்டை கரைஞ்சா போகும். :lachen001::lachen001::lachen001:

ஓகே எத்தனை நல்ல கவிதைகள் (25+ பரிசு பெறும் கவிதைகள்) அதுக்குத் தகுந்த மாதிரி தருகிறேன்.

பாலகன்
17-07-2008, 03:07 AM
நல்ல திரியில் இது மாதிரி அரட்டை கரைஞ்சா போகும். :lachen001::lachen001::lachen001:

மன்னிக்கவும், தவறுக்கு வருந்துகிறேன்

கவிதை
கடவுள் பாதி மிருகம் பாதி
தண்ணீர் பாதி நெருப்பு பாதி
பாரபட்சமற்ற கடவுளின் வானவில்
நீந்த முடியாத ஆறு கடக்குது கரையை

அன்புடன்

நம்பிகோபாலன்
17-07-2008, 05:42 AM
நீராய் நான்
மலர்ச்செடியாக நீ
தொட முயலும் பொழுது
காதலில்
மலர்ந்தது வானவில்லாய்
உன் வெட்கம்.....

நம்பிகோபாலன்
17-07-2008, 09:43 AM
பெண்ணே
உன்வளைவுகள் அழகு
அதில்
ஒட்டியானமாய் வானவில்
அழகோ அழகு...

சிவா.ஜி
17-07-2008, 10:47 AM
அணையுடைத்த வெள்ளத்துக்கு
இளைப்பாறவே இன்னுமோர் அணையா?
வானவில் வடிவத்தில்....

சிவா.ஜி
17-07-2008, 10:50 AM
என் கிராமத்துக் காதலிக்கு
சந்தையில் வாங்கிய
கொஞ்ச விலை சேலை
இத்தனை அழகாய் சாயம் போகுமா?

கண்மணி
17-07-2008, 12:21 PM
அன்னை மடியில்
உள்ளக் கொதிப்புகளைக் கொட்டி
ஆறித் திடமானேன்
அவள் கண்ணில்
நிறப்பிரிகை!!!

கண்மணி
17-07-2008, 01:16 PM
மன்னிக்கவும், தவறுக்கு வருந்துகிறேன்

கவிதை
கடவுள் பாதி மிருகம் பாதி
தண்ணீர் பாதி நெருப்பு பாதி
பாரபட்சமற்ற கடவுளின் வானவில்
நீந்த முடியாத ஆறு கடக்குது கரையை

அன்புடன்



கடைசி வரி, தெளிவினைத் தர மறந்ததே மணவாளரே
நீந்த முடியாத ஆறு
அலையில் கால் நனைத்து
கரையாய் அல்லவா மாறிக்கொண்டிருக்கிறது..
எங்கே கடக்கிறது?

கண்மணி
17-07-2008, 01:17 PM
நீராய் நான்
மலர்ச்செடியாக நீ
தொட முயலும் பொழுது
காதலில்
மலர்ந்தது வானவில்லாய்
உன் வெட்கம்.....

நெருப்பு மலரோ?:confused::confused::confused:

கண்மணி
17-07-2008, 02:37 PM
பெண்ணே
உன்வளைவுகள் அழகு
அதில்
ஒட்டியானமாய் வானவில்
அழகோ அழகு...
ஆமாம் இதில் பெண் யார்?
மலையா?
ஆறா?
வானமா?
ம்ம்ம்ம்ம்....

கண்மணி
17-07-2008, 02:54 PM
:eek:
அணையுடைத்த வெள்ளத்துக்கு
இளைப்பாறவே இன்னுமோர் அணையா?
வானவில் வடிவத்தில்....

வானவில் அணையா?
ஓடிவந்த ஆறு
இளைப்பாறலாம்
ஓட நினைக்கும்
-----------------------

நெருப்பாற்றிற்கு நீர் வைத்த
வரவேற்புத் தோரணம்
வானவில்!

கண்மணி
17-07-2008, 03:02 PM
என் கிராமத்துக் காதலிக்கு
சந்தையில் வாங்கிய
கொஞ்ச விலை சேலை
இத்தனை அழகாய் சாயம் போகுமா?

சந்தையில் சேலை வாங்கிய
நீங்கள் மட்டும்
பட்டிணமோ?
சாயம் போனது
சேலை மட்டுமா?

ஆதி
17-07-2008, 03:07 PM
காற்றின் கீழ் உதடா
அல்லது வண்ண புருவமா ?

பச்சை சேலைக்
கட்டிய மலை பெண்ணின்
சரியும் குழலில் இருந்து
கழலும் கதம்பமா ?


தென்றலும் தேவதைகளும் நடக்க
இயற்கை அமைத்த
தண்ணீர் சாலையா ?


எவனோ துச்சாதனன்
இழுத்து கொண்டிருக்கிற
மலையின் சேலையா ?

கடல் பேரெல்லையை
அடைய தண்ணீர் தழுவிய
ஆறு மாற்கமா ?

பாவம் தேவம்
நடுவில் ஓடும் வாழ்வின்
உவமையோ ?

Keelai Naadaan
17-07-2008, 03:54 PM
பச்ச மல காட்டுக்குள்ள
வெள்ளி அருவி மேலாக
ஏழு நெறத்தை கொழச்சு
மேகம் மேல மோதாம
மேம்பாலம் யாரு போட்டாக..?

கண்மணி
17-07-2008, 04:28 PM
காற்றின் கீழ் உதடா
அல்லது வண்ண புருவமா ?

பச்சை சேலைக்
கட்டிய மலை பெண்ணின்
சரியும் குழலில் இருந்து
கழலும் கதம்பமா ?


தென்றலும் தேவதைகளும் நடக்க
இயற்கை அமைத்த
தண்ணீர் சாலையா ?


எவனோ துச்சாதனன்
இழுத்து கொண்டிருக்கிற
மலையின் சேலையா ?

கடல் பேரெல்லையை
அடைய தண்ணீர் தழுவிய
ஆறு மாற்கமா ?

பாவம் தேவம்
நடுவில் ஓடும் வாழ்வின்
உவமையோ ?

கீழ் உதடு கீழ்நோக்கி வளைந்தால் - வருத்தமல்லவா?
வண்ணபுருவமாகவே இருக்கட்டுமே!

பச்சைப் பெண்ணின் கனகாம்பரம் வழியும் கற்றைக் கூந்தலையும்,

தண்ணீர்ச் சாலையில் மெல்ல நடக்கும் காற்றின் வண்ணப்புருவம் உயர்கிறது.

இதுவரை ஒரு காட்சிப் பொலிவு...

துச்சாதனன் உரி(றி)யும் துகிலாறு (குளிர்பானக் கம்பெனிகள் - துச்சாதனனாக காட்ட உதவுமே)

கைநீட்டி கடல் நோக்கிச் செல்லும் நீர்க்காதலி

பாவம் (அசுரம்) தேவம் (புண்ணியம்) இவற்றிற்கு மத்தியில் ஓடும்
வாழ்வினை குறிக்கிறதோ படம்.

நீராறு - நெறுப்பாறு.. நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது.. இதனாலேயே இயற்கையும் செழிக்குது...

மூணு துண்டுக் கவிதை!!!

இன்னும் கொஞ்சம் தைத்திருக்கலாமே ஆதி!

கண்மணி
17-07-2008, 04:30 PM
பச்ச மல காட்டுக்குள்ள
வெள்ளி அருவி மேலாக
ஏழு நெறத்தை கொழச்சு
மேகம் மேல மோதாம
மேம்பாலம் யாரு போட்டாக..?

சபாஷ் கீழைநாடான். நெருப்புக் குழம்பு இல்லாட்டியும் வித்தியாசமானச் சிந்தனை.

:icon_b:

ஆதி
17-07-2008, 06:23 PM
வெளிச்சம் வாங்கி
வண்ணம் விற்கும் தண்ணீர்..

காற்றின் மீசை..
வெளியின் வர்ண மேடு..

தண்ணீர் மயிலின்
வண்ண தோகை..

வண்ண மையிட்ட
வெளிச்சத்தின் மேலிமை..

தண்ணீர் புடவையை
காய போட
மலை பெண் கட்டிய
பொடி கயிறு..

நீரும் ஒளியும்
நெய்த ஆடையின்
ஓர சரிகை..

தென்றல் உறங்க
தயாரித்த படுக்கை..

காற்று காதலன்
அழுத்தி பிடித்ததில்
பாதி உடைந்த நீரின்
வளையல்..

எதோ ஒரு
திருவிழாவிற்கான
வரவேற்பு வளையம்..

ஓவியா
17-07-2008, 11:01 PM
பூவின் பட தலைப்பை கண்டதும் நானும் அப்படியே நினைத்தேன்.......

என்றாலும் இதற்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அறிய வாளாவிருந்தேன்....

இப்போது படத்துக்கு தலைப்பில்லாமல் தருவது தான் சிறந்தது என்று தோன்றுகின்றது....

மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை கூறினால் இதையும் ஒரு விதியாக வைத்துவிடலாம்......

இன்னும் ஆலோசணைகளும் வரவேற்கப்படுகின்றன....

சிறப்பான பின்னூட்டங்கள் தரும் நம்ம கண்மணிக்கு இத்திரியில் ஒரு சிறப்பு பதவி வழங்கலாம் என்று ஆசைப்படுகின்றேன்......

அன்பர்கள் பிரேரிக்கலாமே???


நான் வழிமொழிகிறேன்.

என்ன பெயர் வைக்க?? ம்ம்ம் கடவுளே மகுடம் சூட்ட மனதில் ஒன்னுமே வர மாட்டேங்கிறதே!! எத்தானையோ பேருக்கு பட்டம் வழங்கிவிட்டேன் ஆனால் இந்த கண்மணியக்காவிற்க்கு ஒரு பட்டமும் என் மனதிற்க்கு புலப்படவில்லையே!!!

யாராவது ஒரு நல்ல பட்டமா சிப்பாரிசு செய்யவும். :)

மன்னிக்க, இப்பவெல்லாம் இங்கே என்னால் எதுவுமே யோசிக்க முடியவதில்லை, ஏதோ ஒன்றை தொலைத்ததுபோலவே உள்ளது. எழுத்தே வரமாட்டேங்கிறது. :traurig001:

கண்மணி
18-07-2008, 12:26 AM
வெளிச்சம் வாங்கி
வண்ணம் விற்கும் தண்ணீர்..

காற்றின் மீசை..
வெளியின் வர்ண மேடு..

தண்ணீர் மயிலின்
வண்ண தோகை..

வண்ண மையிட்ட
வெளிச்சத்தின் மேலிமை..

தண்ணீர் புடவையை
காய போட
மலை பெண் கட்டிய
பொடி கயிறு..

நீரும் ஒளியும்
நெய்த ஆடையின்
ஓர சரிகை..

தென்றல் உறங்க
தயாரித்த படுக்கை..

காற்று காதலன்
அழுத்தி பிடித்ததில்
பாதி உடைந்த நீரின்
வளையல்..

எதோ ஒரு
திருவிழாவிற்கான
வரவேற்பு வளையம்..


ம்ம்ம்
இன்னும் சொல்லுங்க

மேகத் தெரசாவிற்கு
சூரியப் பிரதமர் அளித்த
பாரத ரத்னா

வண்ணக் குளிர்கண்ணாடி அணிந்த
வானம்

வானமகள்
மேகக்குழலின்
வண்ண ஹேர்பேண்ட்

அண்டப் பேரழகி எனப்
பூமிக்கு
ஆகாயம் சூட்டிய
வெற்றி வளையம்


:D:D:D:D:D:D:D:D:D

கண்மணி
18-07-2008, 12:46 AM
இந்தச் சுற்றில் பணமுடிப்பு பெற்றவர்கள்

ஆதி வானவில் பலவண்ணம்
Keelai Naadaan போட்டதாரு?
ஆதி காட்சியின்பம்
சிவா.ஜி அணை
நம்பிகோபாலன் அழகு
நம்பிகோபாலன் வெட்கம்
அழகிய மணவாளன் பாதிப் பாதி
அழகிய மணவாளன் படம் கொடுத்ததற்கு

அடுத்தச் சுற்றுக்கான படம் விரைவில்....

கண்மணி
18-07-2008, 12:57 AM
அடுத்தச் சுற்றுக்கானப் படம் இதோ!

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/laugh-big.jpg

தீபன்
18-07-2008, 02:13 AM
அழகே கவிதை...
அழகுப் பெண்கள் அம்சமான கவிதை...!
நகைக்கும் அழகணங்கினர்
வார்த்தையில்லா கவிதை...!
வாய்விட்டு சிரிகும் பூவையர்
கற்பனைக்கெட்டா கனவுக் கவிதை...!
பிறகெதற்கு இதற்கு கவிதை...?

தீபன்
18-07-2008, 02:16 AM
இப்பவெல்லாம் இங்கே என்னால் எதுவுமே யோசிக்க முடியவதில்லை, ஏதோ ஒன்றை தொலைத்ததுபோலவே உள்ளது. எழுத்தே வரமாட்டேங்கிறது. :traurig001:
சொல்லவே இல்ல..:D வாழ்த்துக்கள் அம்மணி!:lachen001::lachen001:

கண்மணி
18-07-2008, 02:16 AM
அழகே கவிதை...
அழகுப் பெண்கள் அம்சமான கவிதை...!
நகைக்கும் அழகணங்கினர்
வார்த்தையில்லா கவிதை...!
வாய்விட்டு சிரிகும் பூவையர்
கற்பனைக்கெட்டா கனவுக் கவிதை...!
பிறகெதற்கு இதற்கு கவிதை...?

கவிதைக்கேக் கவிதையா
நல்ல கேள்விதான் தீபன்...:D:D:D:D

சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு ஆட்டோவுக்குப் பின்னால் எழுதுற உலகத்தில இதைக் கேட்கச் சந்தோஷமா இருக்கு!:D:rolleyes::cool::p;)

கண்மணி
18-07-2008, 07:10 AM
வாய்விட்டச் சிரிப்பு
மனம் நிறைய மகிழ்ச்சி
சுயமாய் ஒரு தொழில்
சுதந்திரம் வந்தது
உண்மையாய்!

கண்மணி
18-07-2008, 07:22 AM
என்ன இது மதுரைக்கு வந்தச் சோதனை!!!

மூன்றாம் பிறையாய் கீறலாய்ப்
புன்முறுவல் கண்டால்
காதல் கவிதைகளைக்
கரைபுரண்டு ஓட விடும்
காளையர்க் கூட்டம்

மனம் விட்டச் சிரிப்பைக் கண்டதும்
மௌனம் ஆகியதே!!!...

தீபன்
18-07-2008, 07:52 AM
என்னா எகத்தாளம்...
கைப்புள்ள கணக்கா இந்த
கன்னிப்பெண்களிடம்
எவன் சிக்கினானோ...!
எண்ணி எண்ணி சிரிக்கின்றாள்கள்
எதிர்கால வலி தெரியாது!
சிரிக்கட்டும்...
இந்தப் பூக்களின்
அந்திம காலம் இதுதான்...
மணவாழ்வின்பின்
முடியவா போகிறது..!?

தீபன்
18-07-2008, 07:55 AM
மனம் விட்டச் சிரிப்பைக் கண்டதும்
மௌனம் ஆகியதே!!!...
பொறாமைதான்...!

ஆதி
18-07-2008, 09:50 AM
ஓர பார்வையில்
ஒரு கண்ணடித்து
ஆர நெஞ்சை
அடிவரை தகர்த்து
நேரம் முழுக்க
நிரம்பி நின்று
வேறு படுத்தி
ஏதும் நிழாதது போல்
மீண்டும் என்னை
ஆழப் பார்த்து
அண்ணாந்து சிரிக்கும்
அத்தை மகளை
இரட்டை ஜடையை
ஞாபகமூட்டும்
வெள்ளை சிரிப்புக்காரிகள்..

நம்பிகோபாலன்
18-07-2008, 10:41 AM
நான் விழுந்ததற்க்கா
வீழ்ந்ததற்க்கா
நீங்கள் சிரிப்பது
தெரியவில்லை
ஆனால் நீங்கள்
சிரிப்பதர்க்காகவே
எதையும் தாங்கிகொள்வேன்
சகோதரனாய்...

ஆதி
18-07-2008, 10:53 AM
நான் விழுந்ததற்க்கா
வீழ்ந்ததற்க்கா
நீங்கள் சிரிப்பது
தெரியவில்லை
ஆனால் நீங்கள்
சிரிப்பதர்க்காகவே
எதையும் தாங்கிகொள்வேன்
சகோதரனாய்...

விழுந்ததற்கு சிரித்ததனால்தான் மகாபாரதம்.

சிரிப்புக்கு விழுந்ததனால்தான் சிலப்பதிகாரம்

(அல்லது
மற்றொருத்தியை பார்த்து
சிரித்ததனால் சிலப்பதிகாரம்..)

சுஜா
18-07-2008, 01:01 PM
திண்ணை சுகங்கள்


முழுமையாய் சிரித்துகொள் ,
இதுதான் சரியான சந்தர்பம் .

வெண்பனியில் ,
மார்கழி கோலம் போட்ட கதை.

கிழவிகள் பல்பொடியை ,
முகப்பவுடறாய் பூசிகொண்ட கூத்து.

கருப்பாயி ரெட்டபுள்ள ,
பெத்த கதை.

முந்தினநாள் கறி சமைத்தகதை .

காமாச்சி பேத்தி சமைந்த கதை .

நன்றாய் பேசி சிரித்துகொளுங்கள் ,
தாவணி பூக்களே ;இதுதான் சரியான சந்தர்பம் .

சேலைகட்டி போனபின்பு ,
கிட்டுமோ கிட்டாதோ திண்ணை சுகங்கள் .

பின்னொருநாள் ,
உன் கனவுகளை கதவுகள் தின்றுகொண்டிருக்கலாம்.
உன் பெருமூச்சு வென்புகையில் கரைந்து கொண்டிருக்கலாம் .

ஆதலால் இப்பொழுதே சிரித்துகொள் .

கண்மணி
19-07-2008, 02:41 AM
என்னா எகத்தாளம்...
கைப்புள்ள கணக்கா இந்த
கன்னிப்பெண்களிடம்
எவன் சிக்கினானோ...!
எண்ணி எண்ணி சிரிக்கின்றாள்கள்
எதிர்கால வலி தெரியாது!
சிரிக்கட்டும்...
இந்தப் பூக்களின்
அந்திம காலம் இதுதான்...
மணவாழ்வின்பின்
முடியவா போகிறது..!?

யதார்த்த வெளிப்பாடுகள்

ஆனால்
முடியவா என்பது இயலவா எனக் கேள்வியா
இல்லை
முடியவா என்பது இந்தச் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இறுதிக்கு வராது என்றும் இன்னொரு பக்கம் காட்டுகிறது பார்த்தீங்களா?

:icon_b:

கண்மணி
19-07-2008, 02:47 AM
ஓர பார்வையில்
ஒரு கண்ணடித்து
ஆர நெஞ்சை
அடிவரை தகர்த்து
நேரம் முழுக்க
நிரம்பி நின்று
வேறு படுத்தி
ஏதும் நிழாதது போல்
மீண்டும் என்னை
ஆழப் பார்த்து
அண்ணாந்து சிரிக்கும்
அத்தை மகளை
இரட்டை ஜடையை
ஞாபகமூட்டும்
வெள்ளை சிரிப்புக்காரிகள்..

ஓ அத்தை மகளை நினைவு படுத்திக் கொண்டு திரு திரு என விழிப்பதைப் பார்த்துதான் சிரிக்கிறார்களே!
அத்தை மகளை என ஒன்றை மட்டும் சொல்லி இருக்கலாம், இல்லைன்னா இரட்டை ஜடையை, இன்னும் கொஞ்சம் அதிகமாவும் சொல்லி இருக்கலாம்..(ஏன்னா ஒரு பொண்ணு மாத்திரமே இரட்டை ஜடை போட்டிருக்கு:D:D:D)

கண்மணி
19-07-2008, 02:50 AM
நான் விழுந்ததற்க்கா
வீழ்ந்ததற்க்கா
நீங்கள் சிரிப்பது
தெரியவில்லை
ஆனால் நீங்கள்
சிரிப்பதர்க்காகவே
எதையும் தாங்கிகொள்வேன்
சகோதரனாய்...

சிரித்து விழுந்து
விழுந்து சிரிக்க வைக்கும்
கோமாளி அண்ணன்

ம்ம் ஆனா சொன்ன விதம் கொஞ்சம் மாற்றி இருக்கலாம்

கண்மணி
19-07-2008, 02:54 AM
திண்ணை சுகங்கள்


முழுமையாய் சிரித்துகொள் ,
இதுதான் சரியான சந்தர்பம் .

வெண்பனியில் ,
மார்கழி கோலம் போட்ட கதை.

கிழவிகள் பல்பொடியை ,
முகப்பவுடறாய் பூசிகொண்ட கூத்து.

கருப்பாயி ரெட்டபுள்ள ,
பெத்த கதை.

முந்தினநாள் கறி சமைத்தகதை .

காமாச்சி பேத்தி சமைந்த கதை .

நன்றாய் பேசி சிரித்துகொளுங்கள் ,
தாவணி பூக்களே ;இதுதான் சரியான சந்தர்பம் .

சேலைகட்டி போனபின்பு ,
கிட்டுமோ கிட்டாதோ திண்ணை சுகங்கள் .

பின்னொருநாள் ,
உன் கனவுகளை கதவுகள் தின்றுகொண்டிருக்கலாம்.
உன் பெருமூச்சு வென்புகையில் கரைந்து கொண்டிருக்கலாம் .

ஆதலால் இப்பொழுதே சிரித்துகொள் .

தீபன் சொன்ன அதே கருத்தை கவிதையாய் சொல்லி இருக்கீங்க சுஜா

திண்ணைச் சுகங்கள்! நல்ல கவிதை! ஆனால் இந்தச் சந்தோஷங்கள் இறுதிக் காலம் வரைப் பெண்களுக்கு நிலைக்க வேண்டும் என்பது என் ஆசை!

கண்மணி
19-07-2008, 03:08 AM
இந்தச் சுற்றிற்கானப் பணமுடிப்பு பரிசு பெறுபவர்கள்


சுஜா திண்ணைச் சுகங்கள்
நம்பிகோபாலன் சகோதரன்
ஆதி அத்தை மகள் நினைவு
தீபன் சிரிக்கட்டும் சிரிக்கட்டும்
தீபன் எதற்குக் கவிதை

அடுத்த படம் :

இந்தப் படம் 48 மணி நேரம் இருக்கட்டும்..

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/RelationshipKids.jpg

தீபன்
19-07-2008, 03:26 AM
தீபன் சொன்ன அதே கருத்தை கவிதையாய் சொல்லி இருக்கீங்க சுஜா

அப்ப நா சொன்னது கருத்துதானா டீச்சர்...:frown::frown::frown:
கவிதை இல்லையா...?:traurig001::traurig001::traurig001:

அல்லிராணி
19-07-2008, 03:44 AM
நல்ல திரி.. இளங்கவிஞர்கள் பட்டை தீட்டிக் கொள்ள உதவும் திரி.

தொடருங்கள்,

கண்மணி
19-07-2008, 03:51 AM
அப்ப நா சொன்னது கருத்துதானா டீச்சர்...:frown::frown::frown:
கவிதை இல்லையா...?:traurig001::traurig001::traurig001:

கருத்து என்பது கவிதையின் உயிர் தீபன்

அழகியல் கொஞ்சம் இணைத்தால் கருத்து வைரத்தைப் பட்டை தீட்டினால் பளீர்னு அழகா இருக்குமில்லையா?

அழாதீங்க.. சரியா!!!

தீபன்
19-07-2008, 04:02 AM
நல்ல திரி.. இளங்கவிஞர்கள் பட்டை தீட்டிக் கொள்ள உதவும் திரி.

தொடருங்கள்,

இப்பத்தான் கண்மணி டீச்சர் அழ வைச்சாங்க... அதுக்கிடைய்ல நீங்க... அப்ப, இங்க எழுதிறவங்க எல்லாம் இளம் கவிஞர்களா...?:traurig001::traurig001::traurig001: