PDA

View Full Version : தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!



Pages : 1 [2] 3 4 5 6 7 8

மதி
07-07-2008, 04:32 PM
இரகசியமாய்
புகைப்படமெடுத்து
பத்திரப் படுத்தினான் கடவுள்
நம்மன்றத்தை!
நந்தவனம்.....!

mukilan
07-07-2008, 04:33 PM
விவசாய ஆபீசரே,
படத்தை பார்த்ததும் பாய்ந்து வந்து கவிதை போடறீங்க, எல்லாம் முன் ஜேன்மத்திலே மணிக்கனக்கா உக்காந்து 'கோஸ்-வோர்க்' செய்த நினைவுதானே!! :D:D


அழகிய கவிதை. நன்று.

நான் அதையெல்லாம் மறந்தாச்சுங்கோ. .. இதையெல்லாம் அறிவியல் பூர்வமா பார்க்க ஆரம்பிச்சா கவிதை வராது... அப்புறம் விதை வங்கி (Seed bank dynamics, seed dormancy ) பற்றி படிக்கிறதுதான் எனக்குப் பிடிக்காத பாடமும் கூட. அதையெல்லாம் நான் பரீட்சை முடிஞ்சதும் மறந்திட்டேனே

மதி
07-07-2008, 04:34 PM
நான் அதையெல்லாம் மறந்தாச்சுங்கோ. .. இதையெல்லாம் அறிவியல் பூர்வமா பார்க்க ஆரம்பிச்சா கவிதை வராது... அப்புறம் விதை வங்கி (Seed bank dynamics, seed dormancy ) பற்றி படிக்கிறதுதான் எனக்குப் பிடிக்காத பாடமும் கூட. அதையெல்லாம் நான் பரீட்சை முடிஞ்சதும் மறந்திட்டேனே

இது நம்ம ஆளு.. :D:D:D:D

mukilan
07-07-2008, 04:36 PM
மன்றத்தில பல மக்கள் நம்ம கட்சிதான் மதி.. அப்படியே மனசில இருந்தாலும் அதை வேலைக்குப் பயன் படுத்தவே முடியறதில்லை...

mukilan
07-07-2008, 04:41 PM
போத்தீஸா? ஆரெம்கேவியா?
குமரனா? நல்லியா?
எங்கே எடுத்தாய்
இந்தப் பட்டுப் புடவையை?

பாலகன்
07-07-2008, 04:41 PM
நான் சாவதாய் இருந்தால்
இந்த பூமலையில் தான்
சாவேன்......... ஏனெனில்
மலர்கள் இலவசமாக
கிடைக்கும்

நண்பர்களே இது எனது 200 வது பதிப்பு

அன்புடன்
பில்லா

ஓவியா
07-07-2008, 04:41 PM
கடவுள்
ஓவியனான போது
தூரிகையிலிருந்து
தெரித்து விழுந்த
வண்ணச்சிதறல்களோ

ரொம்ப அழகான சிந்தனை!! எப்படியப்பு??



இரகசியமாய்
புகைப்படமெடுத்து
பத்திரப் படுத்தினான் கடவுள்
நம்மன்றத்தை!


உயர்ந்த சிந்தனை.

நாந்தான் அறிமுக திரியிலே போட்டுவிட்டேனே மன்றம் ஒரு அழகிய பூங்கானு...



மன்றத்தில பல மக்கள் நம்ம கட்சிதான் மதி.. அப்படியே மனசில இருந்தாலும் அதை வேலைக்குப் பயன் படுத்தவே முடியறதில்லை...

:D

கண்மணி
07-07-2008, 04:43 PM
அழகிய இருக்கரந்தனில்
அன்னையும் பிதாவும்
ஏந்திய சேயாய்
நிரந்தரமற்ற வாழ்வெனக்கு
அந்தரத்தில் வாழ்ந்தாலும் - ஆட்டுக்கு
உயிர்பிச்சையளிக்கும் வள்ளல் நான்.

தம் கனவுகளைத் தொலைத்து
உயர்த்திய வாரிசு..
கல்லுக்குள் ஈரம்

ஈன்றபொழுதினும்
பெரிதுவக்கும் பெற்றோர்!!!
:icon_b::icon_b::icon_b:

மதி
07-07-2008, 04:45 PM
ரொம்ப அழகான சிந்தனை!! எப்படியப்பு??


அக்கா..இது உங்ககிட்டேர்ந்து சிதறிய மிச்ச சொச்சங்கள் தான்..:eek::eek:\
நன்றி..நன்றி...நன்றி....

கண்மணி
07-07-2008, 04:49 PM
போத்தீஸா? ஆரெம்கேவியா?
குமரனா? நல்லியா?
எங்கே எடுத்தாய்
இந்தப் பட்டுப் புடவையை?

ஓவியாவைக் கேட்கிறீர்களா?

mukilan
07-07-2008, 04:54 PM
அக்கா..இது உங்ககிட்டேர்ந்து சிதறிய மிச்ச சொச்சங்கள் தான்..:eek::eek:\
நன்றி..நன்றி...நன்றி....

அடடே! மிச்ச சொச்சமும் சொச்ச மிச்சமுமே அழகா இருக்கே

mukilan
07-07-2008, 04:56 PM
ஓவியாவைக் கேட்கிறீர்களா?

இயற்கை வரைந்த அந்த ஓவியத்தைச் சொன்னேன்

நல்லா கேட்குறாய்ங்கய்யா டீட்டெய்லு

கண்மணி
07-07-2008, 04:57 PM
மயிலுக்குப் போர்வையாம்
சிலிர்த்துச் சிரித்தாள்
பேகனைப் பெற்றதற்காய்
கொல்லிமலை!
-----------------------

கண்மணி
07-07-2008, 04:59 PM
நாந்தான் சொன்னேனே
உனக்குக் காதல் வந்துவிட்டதென்று
வேண்டுமானால் அந்த
வறண்ட மலையைப் பார்
வண்ணப் பூக்களாய்த் தெரியும்..

மதி
07-07-2008, 05:35 PM
நாந்தான் சொன்னேனே
உனக்குக் காதல் வந்துவிட்டதென்று
வேண்டுமானால் அந்த
வறண்ட மலையைப் பார்
வண்ணப் பூக்களாய்த் தெரியும்..

உண்மை தான்
வண்ணப்பூக்கள் மட்டுமே
கண்ணுக்குத் தெரிகின்றதே..
அட..எனக்கும் காதலிக்க
தெரிகின்றதா..
இயற்கையை..!

நம்பிகோபாலன்
07-07-2008, 05:36 PM
நீலமா
மஞ்சளா
பச்சையா
சிவப்பா
எந்த சேலை
கட்டினால் என்ன
எனக்கு நீ
எதிலேயும் அழகுதான்.....

பாலகன்
07-07-2008, 05:43 PM
நீலமா
மஞ்சளா
பச்சையா
சிவப்பா
எந்த சேலை
கட்டினால் என்ன
எனக்கு நீ
எதிலேயும் அழகுதான்.....


உங்கள் கவிதை அழகு, வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா

சிவா.ஜி
07-07-2008, 05:52 PM
தேவதைகள் பூமி வந்து
விளையாடிவிட்டுப் போன
ஹோலியின் மிச்சங்களோ

மதி
07-07-2008, 05:54 PM
தேவதைகள் பூமி வந்து
விளையாடிவிட்டுப் போன
ஹோலியின் மிச்சங்களோ

அண்ணா..சூப்பருங்கோ...!!!

mukilan
07-07-2008, 05:59 PM
அட..எனக்கும் காதலிக்க
தெரிகின்றதா..
இயற்கையை..!

இயற்கை எல்லாவற்றையும் உள்ளடக்கியது மதி....

நல்ல விசயம் தான். சீக்கிரமே விவாக ப்ராப்திரஸ்து

பாலகன்
07-07-2008, 06:00 PM
இறைவனுக்கு மலைமகள்
தரும் அன்பு காணிக்கை
வண்ண மலர்கள்


பில்லா

mukilan
07-07-2008, 06:03 PM
பூக்கும் பூவையெல்லம் பூஜைக்குன்னு எண்ணாதே!
பெண்ணுக்கும் பூப்பிடிக்கும் மறந்து விடாதே!

வாலியோ வைரமுத்துவோ...

உங்கள் சிந்தனை மாறுதல் நன்றாயிருக்கிறது பில்லா

சிவா.ஜி
07-07-2008, 06:16 PM
கிடைத்த பூவையெல்லாம்
எடுத்து சூடிக்கொண்ட
பைத்தியக்காரியின்
பரட்டைத் தலை!

பூமகள்
07-07-2008, 06:29 PM
போத்தீஸா? ஆரெம்கேவியா?
குமரனா? நல்லியா?
எங்கே எடுத்தாய்
இந்தப் பட்டுப் புடவையை?
எங்களுக்காக கேட்டு ஒரு டஜன் புடவையும் தங்கைகளுக்கு சீதனமாக வாங்கித் தரவிருக்கும் உங்கள் பெரிய மனம் வாழ்க முகில்ஸ் அண்ணா..!:icon_rollout::rolleyes::cool:

(இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்புல..ஏரோப்ளேன்.. இல்ல இல்ல ராக்கெட் ஓட்டறது...!!:D:D)

நம்பிகோபாலன்
07-07-2008, 06:47 PM
பூக்களின் ஊர்வலத்தில்
வானுக்கும் பூமிக்கும்
கலப்பு திருமணம்.....

விகடன்
07-07-2008, 08:19 PM
மழைகளிலின்றி
மலைகளின் இடையிலும்
வர்ணஜாலம்,
இயற்கை வரைந்த
நாகரீக சித்திரம்.

ஓவியா
07-07-2008, 09:19 PM
இனி வருபவர்கள் படத்தை தேட வேண்டாம் என்று மீண்டும் படத்தை என் பதிவில் இணைத்துள்ளேன்.


அடுத்தப்படம் இதோ

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/iyarkai.jpg

மஞ்சளிட்ட அம்பிகையாய்
நாணிக்கோணி மணமகள் வலதும்
நீலகண்டனுக்குப் புலித்தோல்
போர்த்தியது போல் மணமகன் இடதும்
உலக மேடையில் சங்கமம்!!!
.
.
.
.:)

mukilan
07-07-2008, 09:29 PM
[SIZE="2"][B]மஞ்சளிட்ட அம்பிகையாய்
நாணிக்கோணி மணமகள் வலதும்
நீலகண்டனுக்குப் புலித்தோல்
போர்த்தியது போல் மணமகன் இடதும்
உலக மேடையில் சங்கமம்!!!
.
.
.
.:)

பார்வதியும் சிவனுமா? உக்கார்ந்து யோசிப்பீங்களோ.

சும்மா நச்னு இருக்கு:icon_b:

தீபன்
08-07-2008, 12:48 AM
வரலாறு அறியார்க்கு
வானவில் தேசம்தான்
நம்நாடு...
ஆனால்,
பூக்களின் கீழ்
புதைகுழிகள் இருப்பது
நமக்கல்லவா தெரியும்!

கண்மணி
08-07-2008, 01:23 AM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!

ஒப்பனை முகம் ஒப்பில்லா முகம்.. காரியம் கைவரப் பெற்றவளே காரிகையோ??


கடவுள்
ஓவியனான போது
தூரிகையிலிருந்து
தெரித்து விழுந்த
வண்ணச்சிதறல்களோ

கடவுள் இன்னும் ஒரு மிகச் சிறந்த ஓவியன் தானே!




நிலமெனும் நங்கை
வெட்கத்தில் அணிந்த
நீலவர்ணச் சேலை
========================
குளிரெனும் காதலன் தீண்ட
வெட்கிப் போனாள் மலைமகள்
அதனால் தான் என்னமோ
இந்த போர்வை

அன்புடன்
பில்லா

காதல் பூத்தது.. அருமையான கற்பனை.. ஆனால் போர்வையா அது? வெட்கப் புன்னகை இல்லையா?



போத்தீஸா? ஆரெம்கேவியா?
குமரனா? நல்லியா?
எங்கே எடுத்தாய்
இந்தப் பட்டுப் புடவையை?

எதிர் வீட்டுக் காரியின் பொறாமை கலந்த ஆர்வம்..
கணவனாகவோ காதலானாகவோ இருந்தால்
என்ன விலை அழகே என்றல்லவோ கேட்டிருப்பான்..


நீலமா
மஞ்சளா
பச்சையா
சிவப்பா
எந்த சேலை
கட்டினால் என்ன
எனக்கு நீ
எதிலேயும் அழகுதான்.....

ரொம்ப அழகுதான்.. இப்படியா அடுக்குவது. எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கித்தாருங்கள் என்று சொல்லிவிட்டால் தாங்குவீர்களா?
ஏற்கனவே தங்கைகள் டஜன் கணக்காய் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..


தேவதைகள் பூமி வந்து
விளையாடிவிட்டுப் போன
ஹோலியின் மிச்சங்களோ

வித்தியாசமானக் கற்பனை.. எங்கள் அலுவலகத்தில் ஹோலி விளையாடி தரை விரிப்பு வண்ணமயமானதற்குச் செலவு 2 இலட்சம் ரூபாய்களாம். இங்கு எவ்வளவோ?


இறைவனுக்கு மலைமகள்
தரும் அன்பு காணிக்கை
வண்ண மலர்கள்


பில்லா

மலைமகளின் காணிக்கையா? அடுத்து ஓவியாவைப் பாருங்கள் மலைமகளே காணிக்கை என்கிறார்.


கிடைத்த பூவையெல்லாம்
எடுத்து சூடிக்கொண்ட
பைத்தியக்காரியின்
பரட்டைத் தலை!

காதலும் பைத்தியக்காரத்தனமும் ஒன்றுதானே சிவாஜி..


பூக்களின் ஊர்வலத்தில்
வானுக்கும் பூமிக்கும்
கலப்பு திருமணம்.....

அட, இதை வைத்துதான் வண்ணங்களின் ஆதார வண்ணங்களை கண்டு கொண்டார்களோ.. அப்போ சிவப்பாய் இருப்பது மலையின் மடியில் பிறந்துறங்கும் சூரியக் குழந்தையோ?


மழைகளிலின்றி
மலைகளின் இடையிலும்
வர்ணஜாலம்,
இயற்கை வரைந்த
நாகரீக சித்திரம்.

டாட்டூவா? விராடன், இது உங்களுக்கோ ஓவராத் தெரியலை?




மஞ்சளிட்ட அம்பிகையாய்
நாணிக்கோணி மணமகள் வலதும்
நீலகண்டனுக்குப் புலித்தோல்
போர்த்தியது போல் மணமகன் இடதும்
உலக மேடையில் சங்கமம்!!!

.:)

மாறன் அம்பு விடும் முன் வசந்தம் வந்ததாம். வசந்தம் என்பது இதுதானோ?

சிவசக்தி சங்கமம். அழகான கற்பனை ஓவியா! நான் கூட சாலையண்ணா தான் எழுதிவிட்டாரோ என ஏமாந்துவிட்டேன்.

அரன் தவம் செய்ய, அம்மை சேவை செய்ய, மதன் வாசல் வர, வசந்தத்தின் வர்ணஜாலம் கண்முண் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை,



வரலாறு அறியார்க்கு
வானவில் தேசம்தான்
நம்நாடு...
ஆனால்,
பூக்களின் கீழ்
புதைகுழிகள் இருப்பது
நமக்கல்லவா தெரியும்!

புதைகுழிக்குப் போனதே பூக்கள் பூக்கத்தானே தீபன்.
பூக்கள் இயற்கை அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலிகள்
போரிட்டுக் களைத்தவர்கள்
அன்னை மடியில் இளைப்பாறுகிறார்கள்..
தோட்டாத் தோண்டிப் புதைத்த விதைகள்
பூத்துக் கிடக்கின்றன..

கண்களில் நீர் வரவழைத்து விட்டீர்கள் தீபன். பூச்செடிகளுக்காக..

ஓவியன்
08-07-2008, 01:52 AM
கடவுள்
ஓவியனான போது
தூரிகையிலிருந்து
தெரித்து விழுந்த
வண்ணச்சிதறல்களோ

கடவுள் தான் ஓவியனா...??

வெட்கமாக இருக்கு, ரொம்பப் புகழாதேங்கோ...?? :D:D:D

அக்னி
08-07-2008, 02:18 AM
கடவுள் தான் ஓவியனா...??

வெட்கமாக இருக்கு, ரொம்பப் புகழாதேங்கோ...?? :D:D:D
என்ன கொடுமை மதி இது...
இதைக்கேட்க யாரும் ( கண்மணியக்கா கூட) இல்லையா...

மதி
08-07-2008, 02:36 AM
கடவுள் தான் ஓவியனா...??

வெட்கமாக இருக்கு, ரொம்பப் புகழாதேங்கோ...?? :D:D:D

அட உண்மைதாங்க...நீங்க கடவுள்...அக்னி கடவுள்..
ஏன் நான் கூட கடவுள் தான்...:D:D:D:D:D

இல்லேன்னு யாராச்சும் சொல்ல முடியுமா???

கண்மணி
08-07-2008, 02:39 AM
நான் கடவுள்
கடவுளே நான்

வித்தியாசம் இருக்கு அக்னி...!!!

பாலகன்
08-07-2008, 02:49 AM
நான் வாழும் அலுவலக சுற்றுசூழலில் தமிழ் பேசுபவர்கள் ஒருவரும் இல்லை...... என்னுடைய தங்கும் இடத்திலும் எல்லாரும் மலையாளம் மற்றும் இந்திகாரர்கள் தான்............... அதனால் எனக்கு அன்னை தமிழை அம்மா அப்பா அண்ணா தம்பி என்று வாய்விட்டு கத்தவேன்டும் என்று நெடுநாள் ஆவல்........... ஆனால் நம் மன்றமோ என்னை கவிதை எழுதும் அளவிற்கு உயர்த்தியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்..........

நான் எழுதிய கவிதையை இல்லை இல்லை கிறுக்கியதையும் பாராட்டிய அன்பு சொந்தங்களுக்கு என் நன்றிகள்

அன்புடன்
பில்லா

aren
08-07-2008, 03:32 AM
மழையில்லாமலும்
வெய்யில்லாமலும்
வானவில்லை
வானத்தில் காணாமல்
தரையிலே
கண்டேன்!!!

Narathar
08-07-2008, 03:48 AM
நான் எழுதிய கவிதையை இல்லை இல்லை கிறுக்கியதையும் பாராட்டிய அன்பு சொந்தங்களுக்கு என் நன்றிகள்

அன்புடன்
பில்லா


தலைக்கணமுற்ற பட்டாம் பூச்சிகள்
தலைகுணிந்து நின்றன -எம்
இயற்கையன்னையின்
எழில் அழகின் முன்னே......

( உங்களைப்போலவே நானும் !!!! )

பாலகன்
08-07-2008, 04:00 AM
தலைக்கணமுற்ற பட்டாம் பூச்சிகள்
தலைகுணிந்து நின்றன -எம்
இயற்கையன்னையின்
எழில் அழகின் முன்னே......

( உங்களைப்போலவே நானும் !!!! )

கணம் இல்லாததால் தான் என்னவோ
அவை வானத்தில்
இலகுவாக பறக்க முடிகின்றதோ

அன்புடன்
பில்லா

கண்மணி
08-07-2008, 04:08 AM
பூக்களில் முகம் பார்த்து
மேக்கப் செய்து கொண்டன
வண்ணத்துப் பூச்சிகள்..

சிவா.ஜி
08-07-2008, 04:20 AM
மனிதனுக்கு வியர்த்தால் ஒரே நிறம்
மலைகளுக்கு வியர்த்தால் பலநிறம்
இயற்கையால் இவைகளுக்கு கிடைத்த வரம்!

aren
08-07-2008, 04:22 AM
மலைகளுக்கும்
இன்று ஹோலிப்பண்டிகையா
இப்படி வர்ணத்தை
அப்பிக்கொண்டு
நிற்கிறதே!!!

கண்மணி
08-07-2008, 04:24 AM
மேகக் காதலன்
முகமுரசி இட்டுச் சென்ற
முத்தத்தில்
பூத்துக் கிடக்கிறாள்
மலைக்காதலி..

சிவா.ஜி
08-07-2008, 04:27 AM
வானவில்லுக்கு வர்ணமடிக்க
வளி கொண்டு சென்ற வர்ணங்கள்
வழியில் சிந்தியதா...இங்கே வண்ணக்கோலமாய்!

தாமரை
08-07-2008, 04:44 AM
எத்தனைக் காலம்தான்
வளைந்து கிடப்பது?
முதுகு வலிகொண்ட வானவில்
ஓய்வெடுக்கிறது!!!

கண்மணி
08-07-2008, 06:23 AM
மழையில்லாமலும்
வெய்யில்லாமலும்
வானவில்லை
வானத்தில் காணாமல்
தரையிலே
கண்டேன்!!!


எத்தனைக் காலம்தான்
வளைந்து கிடப்பது?
முதுகு வலிகொண்ட வானவில்
ஓய்வெடுக்கிறது!!!


வானவில்லுக்கு வர்ணமடிக்க
வளி கொண்டு சென்ற வர்ணங்கள்
வழியில் சிந்தியதா...இங்கே வண்ணக்கோலமாய்!

வானவில்லின் வண்ணங்களாய்ச் சிதறி விழுந்தக் கவிதைகள்..
ஒரு வேளை, நம் கண்ணுக்கெட்டாத இந்த வண்ண விளைவுகளைத்தான்
எட்டிப் பார்க்கும் மேகத்தின் முகத்தில் வானவில்லாய்க் காண்கிறோமோ?


தலைக்கணமுற்ற பட்டாம் பூச்சிகள்
தலைகுணிந்து நின்றன -எம்
இயற்கையன்னையின்
எழில் அழகின் முன்னே......

( உங்களைப்போலவே நானும் !!!! )


கணம் இல்லாததால் தான் என்னவோ
அவை வானத்தில்
இலகுவாக பறக்க முடிகின்றதோ

அன்புடன்
பில்லா

இரட்டைக் கவிதைகள். வண்ணம் கண்டவர் தலைகுனிந்து நிற்க,
தலைக்கனம் இறக்க முடிந்த பட்டாம் பூச்சிகள் இலேசாகிப் பறந்தன.
தலைக்கனம் இல்லா மனிதனால் இன்னும் நிமிரவே முடியவில்லை..
பட்டாம் பூச்சிகள் பூக்களின் தேனுண்டு தானும் ஒரு பூவாகிப் பறக்க.. பறிக்கத் துடிக்கும் மானிடன் வர்ணங்களில் துவேஷம் கொண்டு வாடிப் போனான். எவ்வளவோ தோன்றுகிறது இக்கவிதைகளால்.



மனிதனுக்கு வியர்த்தால் ஒரே நிறம்
மலைகளுக்கு வியர்த்தால் பலநிறம்
இயற்கையால் இவைகளுக்கு கிடைத்த வரம்!

மனிதனின் வியர்வையில் பூப்பது உள்ளே!!!
இயற்கையின் வியர்வை பூப்பது வெளியே!!!
மலை வியர்த்ததா? மேகக் குளிரில் சிலிர்க்க அதன் உரோமக் கால்கள் சிலிர்த்ததா?


மலைகளுக்கும்
இன்று ஹோலிப்பண்டிகையா
இப்படி வர்ணத்தை
அப்பிக்கொண்டு
நிற்கிறதே!!!

ஹோலிப் பண்டிகையே வசந்தத்தை வரவேற்கத்தானே
வசந்தம் என்பதே இப்படித்தான் இருக்குமாம்
நினைவு கூர்கிறோம் வண்ணப் பொடிகள் பூசி..
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம்.
அசல் நகலாகி நகல் அசலாகி
ஹையோ ஹையோ!!!

Narathar
08-07-2008, 06:35 AM
படக்கவிதைகளுக்கு பரிசளிப்பதற்காக
கண்மணிக்கு 3000 இபணம் வழங்குகின்றேன்

யவனிகா
08-07-2008, 06:39 AM
தேவதைகள் பூமி வந்து
விளையாடிவிட்டுப் போன
ஹோலியின் மிச்சங்களோ

அட...க்ளாஸ் அண்ணா...

யவனிகா
08-07-2008, 06:41 AM
எத்தனைக் காலம்தான்
வளைந்து கிடப்பது?
முதுகு வலிகொண்ட வானவில்
ஓய்வெடுக்கிறது!!!

மூவ் போட்டு விடுங்கண்ணா...சரியாப் போகும்.

ஆதி
08-07-2008, 06:44 AM
வைகறையும்
அந்தியும்
மாறி மாறி
களைந்து போட்ட துப்பட்டா!

விண்வில் ஆடையை
மேகம் துவைகையில்
போன சாயங்கள்..

செடியின் காதில்
சிருங்காரமாய் காற்று
பேசயில்
நிறமித்த வெட்கங்கள்..

பூமி மார்ப்பி
மேகம் எழுதிய தொய்யில்..

நிறம் குளித்த
மலை தேவதை

பூமியும் வானும்
கூடிய விளைவாய்
பிறந்து விட்ட
நிற நட்சத்திரங்கள்..

சந்திர நாட்டில்
இந்திரன் தேவியரை
சங்கமிக்கும் வேளையில்
சரிந்த குழல்மலர்கள்..

கற்றை குழலினும்
கருப்பாய் வாழ்வு
நெற்றி பொட்டை
நீங்கிய கைம்பெண்டீர்
குழலை தழுவாததால்
குப்பைதான் இவைகள்..

ஆதி
08-07-2008, 06:57 AM
நகர நங்கையரின்
நாகரீக மோகத்தில்
மலைபெண் வாங்கி
குழல் சரிவுகளில்
இட்டு கொண்ட கலரிங்..

சிவா.ஜி
08-07-2008, 07:02 AM
அடுத்த படம் இடலாம் அல்லவா?

பிறகு இடுகிறேன்.

இளசு
08-07-2008, 07:03 AM
முந்நூறு பதிவுகளா? அபார சாதனை!

மூலவர் நாரதருக்கும்
உற்சவ மூர்த்திகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

தேர் உலா தொடரட்டும்!

அக்னி
08-07-2008, 07:08 AM
#241 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=363729&postcount=241)ம் பதிவிலுள்ள படத்திற்காக...

பூக்கள் மூடிய
மலைக் கொங்கைகளைக்..,
காற்றடிக்கும் நேரத்தில்,
காத்திருந்து,
காட்சிப் படுத்தியவன் யாரோ...
அடடா...
ஆங்காங்கே நிலம் தெரிகின்றதே...
அதுகூட
அழகைக் கூட்டுகின்றதே...

பூமகள்
08-07-2008, 07:10 AM
ஓர் பருக்கை
அரைப் பருக்கையானது..
எறும்புக்கும் உய்கிறான்
கொஞ்சம்..

அரையண்டா..
உணவு..
ஏரியானது..
உண்கிறார்
கொஞ்சம்..!!

கண்மணி
08-07-2008, 07:12 AM
கற்றை குழலினும்
கருப்பாய் வாழ்வு
நெற்றி பொட்டை
நீங்கிய கைம்பெண்டீர்
குழலை தழுவாததால்
குப்பைதான் இவைகள்..


ஆதி வந்ததால் இந்தத் திரி இன்னும் பேறு பெற்றது...
அழகான சிந்தனைகள் ஆதி.. கடைசி பதிகம் தவிர..


மனிதனின் கைகள் தீண்டாததாலே
சிரிக்கும் இயற்கை தெய்வீகம்

பூவின் கழுத்தறுத்து காதலி கூந்தலில் தூக்கு போட்டு விடுவது தான் பூவின் பிறவிப் பயனா?

கார்முகில் தழுவி
கார்குழல் காணததாலன்றோ
இன்னும்
இயற்கையின் சிரிப்பு
இங்கே மிச்சமிருக்கிறது!!!

கண்மணி
08-07-2008, 07:14 AM
அடுத்த படம் இடலாம் அல்லவா?


சிவாஜி அண்ணா, 24 மணிநேர இடைவெளி இருக்கட்டுமே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும்...

அக்னி
08-07-2008, 07:17 AM
ஓர் பருக்கை
அரைப் பருக்கையானது..
எறும்புக்கும் உய்கிறான்
கொஞ்சம்..

அரையண்டா..
உணவு..
ஏரியானது..
உண்கிறார்
கொஞ்சம்..!!
அறை அண்டா என்று வந்திருக்க வேண்டுமோ...
முதல் பத்திக்காக :icon_b::icon_b:
இரண்டாம் பத்திக்காக :icon_b:

*****

கொஞ்சமாக
இருப்பதால் உண்கிறார்கள்
அவர்கள் அப்படி...

இருப்பதால்
கொஞ்சமாக உண்கிறார்கள்
இவர்கள் இப்படி...

சிவா.ஜி
08-07-2008, 07:18 AM
சரி கண்மணி. எடுத்துவிடுகிறேன். மன்னிக்கவும்.

சிவா.ஜி
08-07-2008, 07:21 AM
ஓர் பருக்கை
அரைப் பருக்கையானது..
எறும்புக்கும் உய்கிறான்
கொஞ்சம்..

அரையண்டா..
உணவு..
ஏரியானது..
உண்கிறார்
கொஞ்சம்..!!

மன்னிக்கவும் பூம்மா. நல்லதொரு கவிதை. என்னால் சரியாக கவனிக்கப் படாமல் போய்விடுமோ என வருத்தப்படுகிறேன்.

24 மணி நேரம் அல்லது குறைந்தது மூன்று கவிதைகள் என்று நாரதர் சொல்லியிருந்ததால் அவசரப்பட்டு அந்த படத்தை பதித்துவிட்டேன்.

யவனிகா
08-07-2008, 08:03 AM
வைகறையும்
அந்தியும்
மாறி மாறி
களைந்து போட்ட துப்பட்டா!

விண்வில் ஆடையை
மேகம் துவைகையில்
போன சாயங்கள்..

செடியின் காதில்
சிருங்காரமாய் காற்று
பேசயில்
நிறமித்த வெட்கங்கள்..

பூமி மார்ப்பி
மேகம் எழுதிய தொய்யில்..

நிறம் குளித்த
மலை தேவதை

பூமியும் வானும்
கூடிய விளைவாய்
பிறந்து விட்ட
நிற நட்சத்திரங்கள்..

சந்திர நாட்டில்
இந்திரன் தேவியரை
சங்கமிக்கும் வேளையில்
சரிந்த குழல்மலர்கள்..

கற்றை குழலினும்
கருப்பாய் வாழ்வு
நெற்றி பொட்டை
நீங்கிய கைம்பெண்டீர்
குழலை தழுவாததால்
குப்பைதான் இவைகள்..

அட அட அட...ரொம்ப நாளைக்கப்புறம் ஆதியின் அசத்தல்!

வானவில் சாயம் போகுமா?நல்ல கற்பனை ஆதி...

ஆதி
08-07-2008, 08:15 AM
ஆதி வந்ததால் இந்தத் திரி இன்னும் பேறு பெற்றது...

பிழையோடு பிறக்கும் என் எழுத்துக்களும் பிறவி பயனையடைந்துவிட்டது இந்த வார்த்தைகளால்..

நன்றி கண்மணியக்கா..



அழகான சிந்தனைகள் ஆதி.. கடைசி பதிகம் தவிர..


மனிதனின் கைகள் தீண்டாததாலே
சிரிக்கும் இயற்கை தெய்வீகம்

பூவின் கழுத்தறுத்து காதலி கூந்தலில் தூக்கு போட்டு விடுவது தான் பூவின் பிறவிப் பயனா?

கார்முகில் தழுவி
கார்குழல் காணததாலன்றோ
இன்னும்
இயற்கையின் சிரிப்பு
இங்கே மிச்சமிருக்கிறது!!!

பாதுக்காப்பு துறை குடியிருப்பில் சில ஆண்டுகள் குடி இருந்து பொழுதில் அத்தைகளும் மாமாக்களுமாய் கிடைத்த உறவுகள் பல.. அன்பு தேவதைகளாய் வலம் வந்த அந்த அத்தைகளில் சிலர் எதிர் பாராமல் நடந்த நேர்ச்சியாலோ எல்லையில் நடக்கும் சண்டையாலோ பொட்டை பூவை முகத்தில் புன்னகையை நீக்க நேர்ந்தால்.. சிலர் தன் இல்லவிழாவுக்கு கூட அழைக்க மாட்டார்கள்.. சம்ப்ரதாயங்களை கடந்து பூவோடும் பொட்டோடும் சிலர் உலா வந்தால் அவர்களை தப்பாக கூட பேசுவார்கள்.. இதை எல்லாம் நேரே பார்த்து கேட்டு எனக்கே அவர்கள் செய்வதாய் காயப்பட்டிருக்கிறேன்.. அந்த ரணம் தான் எங்கவது இப்படி ரத்தம் கசித்து வைக்கிறது..

பூக்களுக்கும் நம்மை பிடிக்கும் நாமதை பறிக்காமல் ரசிக்கிற வரை என்பதே என் கருத்தும்..

கண்மணி
08-07-2008, 08:20 AM
இதை எல்லாம் நேரே பார்த்து கேட்டு எனக்கே அவர்கள் செய்வதாய் காயப்பட்டிருக்கிறேன்.. அந்த ரணம் தான் எங்கவது இப்படி ரத்தம் கசித்து வைக்கிறது..

பூக்களுக்கும் நம்மை பிடிக்கும் நாமதை பறிக்காமல் ரசிக்கிற வரை என்பதே என் கருத்தும்..

அனுபவங்களின் வர்ணம் படிந்தே வார்த்தைகள் வெளிவருகின்றன.. இதயத்திலிருந்து வருவதால்..

பாவம் ஒன்றுமறியா அப்பாவிப் பூக்கள், எந்த மனிதர்களின் தவறினாலோ ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்க வேண்டியதாகி விடுகிறது..

ஓவியா
08-07-2008, 08:22 AM
தம் கனவுகளைத் தொலைத்து
உயர்த்திய வாரிசு..
கல்லுக்குள் ஈரம்

ஈன்றபொழுதினும்
பெரிதுவக்கும் பெற்றோர்!!!
:icon_b::icon_b::icon_b:

மிக்க நன்றி. என் கற்ப்பனை அப்படியே பிரதிபலிக்கின்றது உங்கள் விமர்சனத்தில். உங்கள் பாராட்டுத்தான் பலரை மீண்டும் இத்திரிக்கு அழைக்கின்றது. வாழ்க் உம்சேவை தோழி.


அக்கா..இது உங்ககிட்டேர்ந்து சிதறிய மிச்ச சொச்சங்கள் தான்..:eek::eek:\
நன்றி..நன்றி...நன்றி....

:D:D:D





மஞ்சளிட்ட அம்பிகையாய்
நாணிக்கோணி மணமகள் வலதும்
நீலகண்டனுக்குப் புலித்தோல்
போர்த்தியது போல் மணமகன் இடதும்
உலக மேடையில் சங்கமம்!!!
.
.
.
.:)


பார்வதியும் சிவனுமா? உக்கார்ந்து யோசிப்பீங்களோ.

சும்மா நச்னு இருக்கு:icon_b:

நன்றி முகில்ஸ்.
ஆமாம் முகி, உக்காந்து யோசித்தேன் ஏன் ஒரு மலையில் மட்டும் மஞ்சள் பூக்கள் மலந்துல்லன என்று, உடனனே அம்மையின் முகம்தான் தோன்றியது...... பக்கத்தில் நீலகண்டனுக்கு (விஷம் ஏரிய ஊதா உடம்பு சிவருக்கு, புலித்தோல் ஆரஞ்சு வர்ணம்...) அப்படியே உட்டேன் என் ஃபீலிங்கை :D:D:D







மாறன் அம்பு விடும் முன் வசந்தம் வந்ததாம். வசந்தம் என்பது இதுதானோ?

சிவசக்தி சங்கமம். அழகான கற்பனை ஓவியா! நான் கூட சாலையண்ணா தான் எழுதிவிட்டாரோ என ஏமாந்துவிட்டேன்.

அரன் தவம் செய்ய, அம்மை சேவை செய்ய, மதன் வாசல் வர, வசந்தத்தின் வர்ணஜாலம் கண்முண் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை,



..

நன்றி தோழி. உள்ளம் குளிர்ந்தது. :D:D

ஆதி
08-07-2008, 08:25 AM
அட அட அட...ரொம்ப நாளைக்கப்புறம் ஆதியின் அசத்தல்!

வானவில் சாயம் போகுமா?நல்ல கற்பனை ஆதி...

ரொம்ப நன்றிங்க அக்கா.. ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் பதிவுகள் மன்றத்தில் காண மகிழ்ச்சியா இருக்குங்க அக்கா..

கவிதைக்கு பொய்யழகு னு சொல்லிருக்காங்கல்ல.. நம் மூத்த கவிஞர்கள்... அந்த வசதிய பயன்படுத்திக்க வேண்டியதுதான்..

சுகந்தப்ரீதன்
08-07-2008, 08:25 AM
ஹி..ஹி..யாரும் அடிக்காதீங்கோ..!!:icon_rollout:

எனக்கு ஆதியோட கவிதை படிச்சிட்டு படத்தை பார்த்ததும் பட்டுன்னு வந்தது இந்த வரிகள்தான்...!!

இது...
என்னவள் உடுத்திய
வண்ணத்துணியோ..?!

நன்றி: ஆதி:icon_b:

கண்மணி
08-07-2008, 08:26 AM
ஹி..ஹி..யாரும் அடிக்காதீங்கோ..!!

எனக்கு ஆதியோட கவிதை படிச்சிட்டு படத்தை பார்த்ததும் பட்டுன்னு தோணுது இந்த வரிகள்தான்...!!

இது...
என்னவள் உடுத்திய
வண்ணத்துணியோ..?!

நன்றி: ஆதி


ஓ! நீங்க துவைச்சதினால் இப்படி ஆயிடுச்சோ?:confused::D

ஓவியா
08-07-2008, 08:27 AM
எல்லோரும் பிச்சு உதரரீங்களே மக்கா!! யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. வெகு நாட்களிக்கு பின் இன்றுதான் கம்பூட்டரை தொட்டவுடனே மன்றம் வருகிரேன்..

அனைத்து கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என் பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
08-07-2008, 08:28 AM
ஏன் அவங்க மேல வாந்தியெடுத்திட்டீங்களா?:confused::Dகண்மணி இது ஆண்களுக்கு தோன்றும் கற்பனை உங்களுக்கு புரியாது..:smilie_abcfra:

ஆதி
08-07-2008, 08:30 AM
பாவம் ஒன்றுமறியா அப்பாவிப் பூக்கள், எந்த மனிதர்களின் தவறினாலோ ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்க வேண்டியதாகி விடுகிறது..

உண்மை.. உண்மை..

என் மனதினில் இருந்ததை நீங்க சொல்லிட்டீங்க..

அதனால்தான் என்னவோ
பனிதுளிகளை கடன் வாங்கி
இமைகளை நனைத்து
கொள்கின்றனவோ பூக்கள்..

சுகந்தப்ரீதன்
08-07-2008, 08:35 AM
சரி..கண்மணியும் கவிஞரும் கதைக்க ஆரம்பிச்சுட்டாங்க...!!

இனி இங்க நமக்கென்ன வேலை.. ரெடி..ஜூட்..ஆப்பீட்டு..!!

கண்மணி
08-07-2008, 09:11 AM
கண்மணி இது ஆண்களுக்கு தோன்றும் கற்பனை உங்களுக்கு புரியாது..:smilie_abcfra:

கற்பனைகள் விற்பனைக்கு
கவிதைப் புத்தகம்.

ஆதவா
08-07-2008, 09:36 AM
எல்லோரும் பிச்சு உதரரீங்களே மக்கா!! யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. வெகு நாட்களிக்கு பின் இன்றுதான் கம்பூட்டரை தொட்டவுடனே மன்றம் வருகிரேன்..

அனைத்து கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என் பாராட்டுக்கள்.

ஹி ஹி ... அப்போ பல்லு விளக்கலை மேடம்....?????

விகடன்
08-07-2008, 09:38 AM
தேவையற்று வீசப்பட்ட
மங்கையர் நெற்றியினை
அலங்கரிக்கும்
மஞ்சள் குங்குமமும்
ஆடையில் ஜொலிக்கும்
வர்ணங்களும்
இவைதானோ??

விகடன்
08-07-2008, 09:43 AM
வானவில்லை பாட்டை தீட்ட
பயன் படுத்திய
வர்ணத்தட்டு
நீரிருக்கும்வரை நிறம் மங்காமல்...
நிலத்தோடு உறவாடுகிறது

கண்மணி
08-07-2008, 09:59 AM
இப்பவே மூச்சு முட்டுது எனக்கு.. மதிப்பெண்ணை 100 லிருந்து 200 ஆக உயர்த்தணும் போல இருக்கே!!!

ஆனாலும் ஆனாலும்

ஆதவா, யவனிகா.. இதென்ன வெறும் விமர்சனம் மட்டும்.. கவிதை எழுதாவிட்டால் பரிசளிக்க ஐ-கேஷாவது குடுங்க..!

கண்மணி
08-07-2008, 10:16 AM
தேவையற்று வீசப்பட்ட
மங்கையர் நெற்றியினை
அலங்கரிக்கும்
மஞ்சள் குங்குமமும்
ஆடையில் ஜொலிக்கும்
வர்ணங்களும்
இவைதானோ??

பொதுவாக என்று எழுதியதை விட
காதலியின் என எழுதி இருந்தால் விஷேஷமாய் இருந்திருக்குமே விராடரே..

இப்போது..

பெண்கள் வேஸ்ட் செய்த மேக்கப்பே இவ்வளவென்றால் உபயோகித்தது எவ்வளவு என்று கேள்வி எழுந்து விட்டதே!!!

கண்மணி
08-07-2008, 10:22 AM
வானவில்லை பாட்டை தீட்ட
பயன் படுத்திய
வர்ணத்தட்டு
நீரிருக்கும்வரை நிறம் மங்காமல்...
நிலத்தோடு உறவாடுகிறது

மலைமுகடுகளில் ஓவியன் மேகத்தில் சாயம் பூசி வானவில் சமைத்தானோ?

அழகான் கற்பனை.

விகடன்
08-07-2008, 10:31 AM
பொதுவாக என்று எழுதியதை விட
காதலியின் என எழுதி இருந்தால் விஷேஷமாய் இருந்திருக்குமே விராடரே..

பரவாயில்லையே. பல வழிகளில் பார்வையிடப்படுகிறதே...

நான் எமது தேசத்தில் பெண்கள் விரும்பி அணிந்த வந்த மஞ்சள் குங்குமம் போன்ற மங்களகரமான அணிகலங்கள், போர்ச்சூழலினால் அவர்கள் அமங்கலியாக்கப்பட்டாதால் தவிர்க்கப்பட்டதை கருவாக வைத்தேன் இதை கிறுக்கினேன்.

ஆதி
08-07-2008, 10:38 AM
தேனோடு பிறந்த
சிறகசையா வண்ணத்து பூச்சிகள்..

காதலன் விரல்கள்
வருடும் தருணம்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை மூடி சிவக்கும்
பெண்மை போன்று
தென்றலால்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை திறந்து
வெட்கிய பூக்கள்..

தாரகையர் கண்ணடித்ததால்
தரைப்பெண்ணுக்கு
வந்த நாணங்கள்..

செடி சிவன்கள்
திறந்த எரிக்காத
நெற்றி கண்கள்..

உதிர்ந்துதிர்ந்து நிறத்தோடு
உயிர்க்கும் தூரிகைகள்..
வானத்தில் வண்ணம் தோய்க்க
சுரக்கும் நிறக்கிண்ணங்கள்..

மணநடனத்தில் என்னை
வளைத்து இழுக்கும்
கணிகையர் கூட்டம்...

எங்கோ பிறந்திருக்கும்
என்மன மங்கையின்
உறவுக்காரர்கள்..

கண்மணி
08-07-2008, 10:40 AM
விராடன் வர்ணத்தட்டு
விராடன் வீசப்பட்ட மிச்சங்கள்
அக்னி மலராடை மங்கை
ஆதி கலரிங்
ஆதி குப்பைதான் இவைகள்
சிவாஜி சிதறிய வண்ணங்கள்
Narathar பட்டாம்பூச்சியின் தலைகுனிவு
aren தரையில் வானவில்
தீபன் பூக்களின் கீழ் புதைகுழிகள்
ஓவியா அம்மையப்பன்
விராடன் டாட்டூ
சிவாஜி பரட்டைத் தலை
சிவாஜி ஹோலியின் மிச்சம்
நம்பிகோபாலன் வண்ணச் சேலை
mukilan எந்தக் கடை பட்டு
பில்லா வெட்கப் புன்னகை
மதி வண்ணச் சிதறல்கள்
mukilan ஒப்பனைக் காரிகை
ஆதி அவளின் உறவுக்காரர்கள்

இது வரை வந்தக் கவிதைகளுக்கான பணமுடிப்பு..

வாழ்த்துக்கள் கவிமழை பொழிந்த மேகங்களே..:icon_b:




அடுத்த படம் இனிமேல் போடலாம் சிவாஜி அண்ணா.

கண்மணி
08-07-2008, 10:45 AM
பரவாயில்லையே. பல வழிகளில் பார்வையிடப்படுகிறதே...

நான் எமது தேசத்தில் பெண்கள் விரும்பி அணிந்த வந்த மஞ்சள் குங்குமம் போன்ற மங்களகரமான அணிகலங்கள், போர்ச்சூழலினால் அவர்கள் அமங்கலியாக்கப்பட்டாதால் தவிர்க்கப்பட்டதை கருவாக வைத்தேன் இதை கிறுக்கினேன்.

கவிதையில் அந்த தியாகப் பெருமிதம் காட்டவோ
பிரிவு வேதனைக் காட்டவோ தவறிவிட்டதால் அந்த நோக்கு வராமலேயே போய்விட்டது..

தீபனின் புதைகுழிகளைப் பாருங்களேன்..

எங்களின் மஞ்சளும் குங்குமமும்
சூடவியலாத பூக்களும்
அவர்களின் விதைநிலம் மீது

இப்படி ஒரு பெண்ணின் பார்வையில் எழுதி இருந்தால் நெஞ்சில்
சட்டென உறைத்திருக்குமோ?

கண்மணி
08-07-2008, 10:49 AM
தேனோடு பிறந்த
சிறகசையா வண்ணத்து பூச்சிகள்..

காதலன் விரல்கள்
வருடும் தருணம்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை மூடி சிவக்கும்
பெண்மை போன்று
தென்றலால்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை திறந்து
வெட்கிய பூக்கள்..

தாரகையர் கண்ணடித்ததால்
தரைப்பெண்ணுக்கு
வந்த நாணங்கள்..

செடி சிவன்கள்
திறந்த எரிக்காத
நெற்றி கண்கள்..

உதிர்ந்துதிர்ந்து நிறத்தோடு
உயிர்க்கும் தூரிகைகள்..
வானத்தில் வண்ணம் தோய்க்க
சுரக்கும் நிறக்கிண்ணங்கள்..

மணநடத்தில் என்னை
வளைத்து இழுக்கும்
கணிகையர் கூட்டம்...

எங்கோ பிறந்திருக்கும்
என்மன மங்கையின்
உறவுக்காரர்கள்..

அடடா, இது கவிதை.. கண்மூடச் சொல்லி, கை பிடித்துச் சென்று

பார் கண்ணே உனக்காக எனப் பரிசளிக்கும் பேரன்பு..

காதலியின் ஊடலுக்கும் கூடலுக்கும் அவர்களின் உறவினரைப் புகழ்தல் காதலர்களின் வாடிக்கை!!

சபாஷ்.:icon_b: பணமுடிப்பு கனக்கில் இதுவும் சேர்ந்தது..

விகடன்
08-07-2008, 10:51 AM
உண்மைதான்.
இனிமேல் முடிந்தளவு அக்கறை காட்டுகிறேன்.

நன்றி

கண்மணி
08-07-2008, 10:57 AM
இமயமலைச் சாரலில் பூப்பள்ளத்தாக்கு (Valley of Flowers) என்ற புகழ்பெற்ற இடம் இருக்கிறதாம். அதைப் பற்றியப் பல கதைகள் உண்டு.

கூகிளாண்டவரைப் பிரார்தித்து படங்களைப் பாருங்கள்!!!:icon_b::icon_b:

ஆதி
08-07-2008, 11:00 AM
அடடா, இது கவிதை.. மெல்லக் கைபிடித்து, கண்மூடச் சொல்லி, கை பிடித்துச் சென்று

பார் கண்ணே உனக்காக எனப் பரிசளிக்கும் பேரன்பு..

காதலியின் ஊடலுக்கும் கூடலுக்கும் அவர்களின் உறவினரைப் புகழ்தல் காதலர்களின் வாடிக்கை!!

சபாஷ்.:icon_b:

இந்த பின்னூட்டம் கடைசியாய் சொன்ன வார்த்தையும் போதுமெனக்கு.. கவிதையோடு கட்டிப்புறல்கிறேன் உள்ள களிப்பில்..

நன்றி கண்மணியக்கா..

ஆதவா
08-07-2008, 11:13 AM
தூரிகை இல்லாமல்
ஒப்பனை செய்து கொண்ட
காரிகை இவளோ!

வாவ்.. அழ்கு முகி அண்னா. மிகச் சிக்கனமாக அதே சமயம் லாவகமாக எழுத்தைப் பிடித்திருக்கிறீர்கள்.. சிம்பிளி சூப்பர்ப்... என்னுடைய முதல் மார்க் உங்களுக்கே!!!


கடவுள்
ஓவியனான போது
தூரிகையிலிருந்து
தெரித்து விழுந்த
வண்ணச்சிதறல்களோ

முகியின் கவியிலிருந்து சற்று மாறுதல். என்றாலும் வெகு அழகு. அந்தக் கற்பனை அழகாக அமைந்திருக்கிறது.




நிலமெனும் நங்கை
வெட்கத்தில் அணிந்த
நீலவர்ணச் சேலை


========================

குளிரெனும் காதலன் தீண்ட
வெட்கிப் போனாள் மலைமகள்
அதனால் தான் என்னமோ
இந்த போர்வை

அன்புடன்
பில்லா

எத்தனை கற்பனைகள் வருகிறது பாருங்கள். நிலம் எனும் மங்கைக்குப் பதில் மலையெனும் மங்கை என்று சொல்லியிர்க்கலாம்.. இப்பொழுதுதான் நிலமங்கையை மானபங்கப்படுத்துகிறார்களே! கலக்கல் பில்லா..

தீண்டலில் போர்வையா? வெட்கப்போர்வை என்று மாத்தியிருக்கலாம். என்றாலும் கற்பனை அபாரம்.


வியாபார உலகில்
மலைத்தொடருக்கும்
மேக்கப்

ஓவருங்ணா !! மேக்கப் கலைஞ்சிடுமே... இது கலையாதே!!


இரகசியமாய்
புகைப்படமெடுத்து
பத்திரப் படுத்தினான் கடவுள்
நம்மன்றத்தை!

மன்றம் ஒரு நந்தவனம் அதை இப்படத்தோடு பொருத்தி எழுதியமை ரசிக்க வைக்கிறது.


போத்தீஸா? ஆரெம்கேவியா?
குமரனா? நல்லியா?
எங்கே எடுத்தாய்
இந்தப் பட்டுப் புடவையை?

ஹி ஹி.... இதுவும் நல்ல கற்பனை என்றாலும் உங்களுடைய முதற்கவிதை அளவுக்கு வரமுடியவில்லை. இதன்மூலம் நீங்கள் இந்த மலையழகுக்கும் போத்தீஸ் புடவைக்கும் சமானம் என்று சொல்லவருவதாக இருக்கிறது..


நான் சாவதாய் இருந்தால்
இந்த பூமலையில் தான்
சாவேன்......... ஏனெனில்
மலர்கள் இலவசமாக
கிடைக்கும்

நண்பர்களே இது எனது 200 வது பதிப்பு

அன்புடன்
பில்லா

அதற்காக ஊட்டி கொடைக்கானல் என்று போய்விடாதீர்கள்.. ஸ்லிப்பாகி பூமாலை நாங்கள் போடவேண்டி வரும் :D :D

உங்களது இருநூறாவது பதிப்புக்கு வாழ்த்துகள் பில்லா..


மயிலுக்குப் போர்வையாம்
சிலிர்த்துச் சிரித்தாள்
பேகனைப் பெற்றதற்காய்
கொல்லிமலை!
-----------------------

நல்ல ஒப்பீடு. அவளும் அப்படி இருந்ததால்தான் பேகன் அங்கே பிறந்தானோ?



நாந்தான் சொன்னேனே
உனக்குக் காதல் வந்துவிட்டதென்று
வேண்டுமானால் அந்த
வறண்ட மலையைப் பார்
வண்ணப் பூக்களாய்த் தெரியும்..

ஹி ஹி... அப்படியென்றால் காதல் வரவில்லையென்றால் வறண்டமலை பாலைவனமாய் தெரியுமோ?


உண்மை தான்
வண்ணப்பூக்கள் மட்டுமே
கண்ணுக்குத் தெரிகின்றதே..
அட..எனக்கும் காதலிக்க
தெரிகின்றதா..
இயற்கையை..!

மதி என்னங்க அப்படியே உல்டாவா? பதில் கவிதை பிரமாதம்..


நீலமா
மஞ்சளா
பச்சையா
சிவப்பா
எந்த சேலை
கட்டினால் என்ன
எனக்கு நீ
எதிலேயும் அழகுதான்.....

உங்க காதலிய சொல்றீங்களா? அழகு கவிதை...


தேவதைகள் பூமி வந்து
விளையாடிவிட்டுப் போன
ஹோலியின் மிச்சங்களோ

வித்தியாசமான சிந்தனை. ஹோலியின் மிச்சங்கள் என்று அழகாக முடித்துவிட்டீர்கள்.. அபாரம்..


இறைவனுக்கு மலைமகள்
தரும் அன்பு காணிக்கை
வண்ண மலர்கள்


பில்லா

அழகு.... வெகு சாதாரணமாகத் தெரியும் இக்கவி உண்மையிலேயே மேற்படி எழுதிய கவிதைகளுக்கு ஒப்பிட்டால் வித்தியாசம்தான்.. இறைவன் அளித்த கொடை என்று மற்றவர்கள் சொல்ல, அதை காணிக்கையாக்கி திருப்பித்தருகிறார் பில்லா.. அபாரம்.


கிடைத்த பூவையெல்லாம்
எடுத்து சூடிக்கொண்ட
பைத்தியக்காரியின்
பரட்டைத் தலை!

ரொம்ப கடுமையான சிந்தனைதான்.. ஆனால் மிகவும் ரசிக்க வைக்கிறது. "கிடைத்த பூக்கள்" மிகக் குறிப்பிடத்தக்கவையில் இருக்கின்றன. அருமை...


பூக்களின் ஊர்வலத்தில்
வானுக்கும் பூமிக்கும்
கலப்பு திருமணம்.....

கொஞ்சம் படத்திலிருந்து நழுவிவிட்டது... என்றாலும் உங்கள் கற்பனை சூப்பர்..


மழைகளிலின்றி
மலைகளின் இடையிலும்
வர்ணஜாலம்,
இயற்கை வரைந்த
நாகரீக சித்திரம்.

இதே கருத்து முகி அண்ணா பதித்திருக்கிறார். அதன் நீட்சியாக இது இருக்கிறது.. மேலும் முயல்க விராடன்.




[SIZE="2"][B]மஞ்சளிட்ட அம்பிகையாய்
நாணிக்கோணி மணமகள் வலதும்
நீலகண்டனுக்குப் புலித்தோல்
போர்த்தியது போல் மணமகன் இடதும்
உலக மேடையில் சங்கமம்!!!


கொஞ்சம் ஓவராத்தான் சிந்திக்கிறீங்க... இந்தப் படக்கவிதைகள் மூலம் உங்கள் கவிதை வரவழைத்த நாரதருக்கு நன்றி.. கற்பனைக்கு அடங்காமல் திமிரும் சிந்தனை.. உங்களுக்கு மட்டுமே வாய்க்கும் வாழ்த்துகள்....


வரலாறு அறியார்க்கு
வானவில் தேசம்தான்
நம்நாடு...
ஆனால்,
பூக்களின் கீழ்
புதைகுழிகள் இருப்பது
நமக்கல்லவா தெரியும்!

சற்றே சீரிய சிந்தனை. கொஞ்சம் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். வாழ்த்துகள் தீபன்


மழையில்லாமலும்
வெய்யில்லாமலும்
வானவில்லை
வானத்தில் காணாமல்
தரையிலே
கண்டேன்!!!

அபாரம்.. வானவில் வானத்தை விட்டு தரையில் இருப்பதாக புதிய சிந்தனை.. அபாரம்.


தலைக்கணமுற்ற பட்டாம் பூச்சிகள்
தலைகுணிந்து நின்றன -எம்
இயற்கையன்னையின்
எழில் அழகின் முன்னே......

( உங்களைப்போலவே நானும் !!!! )

வாவ் நாரதரே! அழகு கவிதை... இப்படி டாப் கியரைப் போட்டுத் தொடங்குங்கள்..


கணம் இல்லாததால் தான் என்னவோ
அவை வானத்தில்
இலகுவாக பறக்க முடிகின்றதோ

அன்புடன்
பில்லா

எனக்குப் புரியவில்லை... நீங்கள் நாரதரின் கவிதைக்குப் பதில் கவிதை கொடுத்திருக்கிறீர்களா?


பூக்களில் முகம் பார்த்து
மேக்கப் செய்து கொண்டன
வண்ணத்துப் பூச்சிகள்..

கண்மணி.. உங்க சிந்தனை ஓகே! ஆனால் படத்திற்கும் இந்தக் கவிதைக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.. என்றாலும் அந்தக் கற்பனையில் ஒளிந்திருக்கும் அழகு அருமையாக் இருக்கிறது.


மனிதனுக்கு வியர்த்தால் ஒரே நிறம்
மலைகளுக்கு வியர்த்தால் பலநிறம்
இயற்கையால் இவைகளுக்கு கிடைத்த வரம்!

மீண்டும்... இது உங்களுக்கு மூன்றாவது சரவெடி.. மலைகளுக்கு வியர்த்தால்.... ஏன் வியர்க்கிறது. பகல் எனும் பகலவனின் நீண்ட கைகளின் அரவணைப்பினால்.. இல்லையா சிவா ண்ணா?


மலைகளுக்கும்
இன்று ஹோலிப்பண்டிகையா
இப்படி வர்ணத்தை
அப்பிக்கொண்டு
நிற்கிறதே!!!

அண்னா... சிவா அண்னா முந்தியே பதித்துவிட்டார்.. கொஞ்சம் லேட்டாக வந்துவிட்டீர்கள்.


மேகக் காதலன்
முகமுரசி இட்டுச் சென்ற
முத்தத்தில்
பூத்துக் கிடக்கிறாள்
மலைக்காதலி..

அருமை... நல்ல கற்பனை..


வானவில்லுக்கு வர்ணமடிக்க
வளி கொண்டு சென்ற வர்ணங்கள்
வழியில் சிந்தியதா...இங்கே வண்ணக்கோலமாய்!

இது சற்றே மாறுபட்டதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தைத் தருகிறது,... தொடர்ந்து கலக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்./


எத்தனைக் காலம்தான்
வளைந்து கிடப்பது?
முதுகு வலிகொண்ட வானவில்
ஓய்வெடுக்கிறது!!!

முற்றிலும் புதுமையாக.. வானவில் வளைந்திருப்பதால் வலிக்கும் என்பது ஆழ்ந்த கற்பனை.. அதை மலைத்தொடரோடு ஒப்பிட்டது இன்னும் அழகாக மிளிர்கிறது.


வைகறையும்
அந்தியும்
மாறி மாறி
களைந்து போட்ட துப்பட்டா!

விண்வில் ஆடையை
மேகம் துவைகையில்
போன சாயங்கள்..

செடியின் காதில்
சிருங்காரமாய் காற்று
பேசயில்
நிறமித்த வெட்கங்கள்..

பூமி மார்ப்பி
மேகம் எழுதிய தொய்யில்..

நிறம் குளித்த
மலை தேவதை

பூமியும் வானும்
கூடிய விளைவாய்
பிறந்து விட்ட
நிற நட்சத்திரங்கள்..

சந்திர நாட்டில்
இந்திரன் தேவியரை
சங்கமிக்கும் வேளையில்
சரிந்த குழல்மலர்கள்..

கற்றை குழலினும்
கருப்பாய் வாழ்வு
நெற்றி பொட்டை
நீங்கிய கைம்பெண்டீர்
குழலை தழுவாததால்
குப்பைதான் இவைகள்..

இறுதி பத்தி தவிர்த்து.... மற்றவரை அனைத்தும் அழகான கற்பனைகள் ஆதி. ஒவ்வொன்றும் மிக அருமையாக புனைந்திருக்கிறீர்கள். குறிப்பாக பூமி மார்ப்பில் மேகம் எழுதிய தொய்யில் என்ற வரிகள் மிகக் கவர்ந்திழுக்கின்றன. அபாரம்..


நகர நங்கையரின்
நாகரீக மோகத்தில்
மலைபெண் வாங்கி
குழல் சரிவுகளில்
இட்டு கொண்ட கலரிங்..

அழகு... உங்களின் முதல்கவிதை அளவுக்கு வரமுடியவில்லை.


#241 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=363729&postcount=241)ம் பதிவிலுள்ள படத்திற்காக...

பூக்கள் மூடிய
மலைக் கொங்கைகளைக்..,
காற்றடிக்கும் நேரத்தில்,
காத்திருந்து,
காட்சிப் படுத்தியவன் யாரோ...
அடடா...
ஆங்காங்கே நிலம் தெரிகின்றதே...
அதுகூட
அழகைக் கூட்டுகின்றதே...

மலைக்கொங்கை.. அழகு உவமை. நல்லதொரு காட்சிப்பா.....

--------------

மொத்தத்தில் எடுக்க எடுக்க குறையா வண்ணம் வழிந்தோடிக்கொண்டிருக்கும் மன்றத்தினரின் கற்பனைகளும் புதுமை சிந்தனைகளும் ஏகமாக மேவியிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அள்ப்பதாக உள்ளது.. தொடர்க மன்றமே!

ஆதவா
08-07-2008, 11:19 AM
தேவையற்று வீசப்பட்ட
மங்கையர் நெற்றியினை
அலங்கரிக்கும்
மஞ்சள் குங்குமமும்
ஆடையில் ஜொலிக்கும்
வர்ணங்களும்
இவைதானோ??

தேவையற்று என்ற வார்த்தை தவிர மற்ற அனைத்தும் அருமை...



வானவில்லை பாட்டை தீட்ட
பயன் படுத்திய
வர்ணத்தட்டு
நீரிருக்கும்வரை நிறம் மங்காமல்...
நிலத்தோடு உறவாடுகிறது

எந்தப் பாட்டை தீட்ட?

ஓவியங்கள் தூரிகைகள் வர்ணங்கள் என்று அனைவரும் சொல்ல, நீங்கள் வர்ணத்தட்டு என்று கலக்குகிறீர்கள்... வாழ்த்துகள்.



தேனோடு பிறந்த
சிறகசையா வண்ணத்து பூச்சிகள்..

காதலன் விரல்கள்
வருடும் தருணம்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை மூடி சிவக்கும்
பெண்மை போன்று
தென்றலால்
சிலிர்த்து தலைசாய்த்து
இமை திறந்து
வெட்கிய பூக்கள்..

தாரகையர் கண்ணடித்ததால்
தரைப்பெண்ணுக்கு
வந்த நாணங்கள்..

செடி சிவன்கள்
திறந்த எரிக்காத
நெற்றி கண்கள்..

உதிர்ந்துதிர்ந்து நிறத்தோடு
உயிர்க்கும் தூரிகைகள்..
வானத்தில் வண்ணம் தோய்க்க
சுரக்கும் நிறக்கிண்ணங்கள்..

மணநடனத்தில் என்னை
வளைத்து இழுக்கும்
கணிகையர் கூட்டம்...

எங்கோ பிறந்திருக்கும்
என்மன மங்கையின்
உறவுக்காரர்கள்..

அபாரம் அபாரம்.. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. ஒப்பீட்டில் இழுவை இருக்கிறது. சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி மிகச்சிறந்த கவிதையாக அமைந்திருக்கிறது...

ஓவியா
08-07-2008, 11:22 AM
ஆதி, கவிதை பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள்.

ஆதவா
08-07-2008, 11:39 AM
இப்பவே மூச்சு முட்டுது எனக்கு.. மதிப்பெண்ணை 100 லிருந்து 200 ஆக உயர்த்தணும் போல இருக்கே!!!

ஆனாலும் ஆனாலும்

ஆதவா, யவனிகா.. இதென்ன வெறும் விமர்சனம் மட்டும்.. கவிதை எழுதாவிட்டால் பரிசளிக்க ஐ-கேஷாவது குடுங்க..!

iCash Credits: 9,882.2

ஏன் கண்ணூ... இவ்ளோஓஓஓ பத்தாதா? எங்க கிட்டு இருந்து வேற கொள்ளை அடிக்கணுமா?

இந்தப் படத்திற்கும் எனக்கும் ராசியில்லை.. மதியம் வரை வேலை இருந்தது. மதியத்திற்குப்பின் வந்து பார்த்தால் எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டார்கள். சரி நீங்கள் கேட்கிறீர்களே என்று ஒன்றும் மட்டும் சிறியதாக எழுதிவிடுகிறேனே.

----------------
மலையழகின் (உன்) மந்தாரத்தில்
கவியெழுத வந்த என்
சிந்தனைகள் சிதறிவிட்டன
வளையல்களின் தெறிப்புகளாக


கற்பனை வெறியேற்றி
உன்னுள் புரண்டதில்
ஆங்காங்கே உனக்குக் காயம்
சற்று காதல் அதிகமெனக்கு
பொறுத்துக்கொள்


நீண்டு கிடக்கும் உன்னில்
என்னைப் பொருத்தி எழுதிடத்தான்
துடித்து வருகிறேன்
கவிதை காகிதத்தில்
உன் வர்ணம் பூசி
மெல்லச் சிரிக்கிறாய்

ஏனென்று தெரியாத மயக்கத்தில்
கவிதை படைத்தேன்...
(அதுதாங்க இது...) :D

ஆதி
08-07-2008, 11:45 AM
இறுதி பத்தி தவிர்த்து.... மற்றவரை அனைத்தும் அழகான கற்பனைகள் ஆதி. ஒவ்வொன்றும் மிக அருமையாக புனைந்திருக்கிறீர்கள். குறிப்பாக பூமி மார்ப்பில் மேகம் எழுதிய தொய்யில் என்ற வரிகள் மிகக் கவர்ந்திழுக்கின்றன. அபாரம்..

அழகு... உங்களின் முதல்கவிதை அளவுக்கு வரமுடியவில்லை.


நன்றி ஆதவா.. கண்மணியக்காவின் பின்னூட்டத்திற்கு தந்த பதில்தான் உங்களுக்கும் http://www.tamilmantram.com/vb/showpost.php?p=364022&postcount=311


அபாரம் அபாரம்.. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. ஒப்பீட்டில் இழுவை இருக்கிறது. சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி மிகச்சிறந்த கவிதையாக அமைந்திருக்கிறது...

இரண்டாம் பத்தியைதானே சொல்குறீர்கள்.. இழுவை இருப்பதாகவே எனக்கும் பட்டது.. செத்த செதுக்க முயல்கிறேன்...


ஆதி, கவிதை பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள்.

நன்றி ஓவியா அக்கா..

கண்மணி
08-07-2008, 11:49 AM
ஆதவா தம்பி! ஒரு நாளைக்கு 500 ஐகேஷ் குடுத்தாலும்,, 20 நாளைக்குத்தான் இந்த ஐகேஷ் வரும்..

ஏன் தம்பி, இதில எதாவது ஒரு படமும் சில கவிதைகளும் ஆடி மின்னிதழில் இடம் பிடிக்குமா?

(இதுக்குப் பேரு கேப்பில கெடா வெட்றதுங்கோ!)

ஆதவா
08-07-2008, 12:14 PM
ஆதவா தம்பி! ஒரு நாளைக்கு 500 ஐகேஷ் குடுத்தாலும்,, 20 நாளைக்குத்தான் இந்த ஐகேஷ் வரும்..

ஏன் தம்பி, இதில எதாவது ஒரு படமும் சில கவிதைகளும் ஆடி மின்னிதழில் இடம் பிடிக்குமா?

(இதுக்குப் பேரு கேப்பில கெடா வெட்றதுங்கோ!)

கவலைப்ப படாதீங்க கண்ணு. உங்கள் கோரிக்கை மன்றத்தில் சொல்லி நிறைவேற்றப்படும். (என் கணக்குல கை வைக்கப் பார்க்கிறீங்கலா? ஆங்.. அதுதான் முடியாது..)


அது என் கையில் இல்லையே! இப்போ பாரதி அண்ணா தானே ஆசிரியர்.. அவர் சொன்னா சரி..

(இதுக்குப் பேர்தான் குழி வெட்டியும் விழாம இருக்கீறது..)

சிவா.ஜி
08-07-2008, 12:29 PM
கண்மணி, தற்சமயம் என்னால் படங்கள் பதிவிட முடியாத நிலை. எனவே வேறு யாராவது பதியலாமே....

கண்மணி
08-07-2008, 12:42 PM
அதேபடம் போடுங்க

பூமகள்
08-07-2008, 12:57 PM
உங்க அளவுக்கெல்லாம் கவிதை வராதுங்க.. அதனால நம்மால முடிஞ்சது...

கை தட்டுவதும்.. அடுத்த படம் இடுவதும்..!!

எல்லாரும் தயாரா??!!

இதோ அடுத்த படம்...!!

http://www.adelaideinstitute.org/images/photos2/Zionist_Tzunami.jpg

சுனாமியில் மிஞ்சிய இவன் வீட்டின் ஒரு கல்...

கண்மணி
08-07-2008, 01:05 PM
சென்ற கவிதைக்கான படத்தைப் பற்றிய ஒரு செய்தி.

பலரும் அது ஒரு வரைகலை உத்தி என எண்ணி இருக்கலாம்..

ஆனால் அந்த இடம், அமெரிக்க நாட்டில், கலிஃபோர்னியாவில், பேக்கர்ஸ் ஃபீல்ட் என்னும் இடத்திற்கு மேற்கில் 50 மைல் தூரத்தில் காரிஸோ பீடபூமியின் கிழக்குப் புறத்தில் டெம்ப்ளர் மலைத்தொடரில் இருப்பதாக தகவல். ஃபோட்டோ எடுக்கப்பட்ட நாள்..

மே 14,2005 என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தைப் பாருங்களேன்.


http://www.certainsight.com/blog/

அல்லது கூகிளாண்டவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்தனை செய்யவும்.:icon_b:

+"Bakersfield" +"Temblor range"

aren
08-07-2008, 02:14 PM
கடல்தாயே
எங்களுக்கு இதுநாள் வாழ்வளித்த நீ
இன்று கூண்டோடு
என் குடும்பத்தை
கொண்டு சென்று விட்டாயே!!!

aren
08-07-2008, 02:16 PM
கடல் பேரலையில் நீந்தி
தப்பித்துவந்தேன்
வரவேற்க
குடும்பம் இல்லாமல்
நடுக்கடலில் தவிக்கும் நிலையில்
கரையில் நான்!!!

mukilan
08-07-2008, 03:25 PM
ஆதியிலே
மனிதற்கு கல்லே
ஆயுதமாம்!
ஆழிப் பேரலையால்
ஆரம்ப இடத்தில் நான்!

சில கற்களும்
இரு கரங்களும்
முன்னேறும் முனைப்பும்
முட்டித்தள்ளும்
என் தடைக்கற்களை.


இனியொரு பிள்ளை
எனைப்போலாக
இனி விடமாட்டேன்!
இரு கடலே!-உன்
செருக்கடக்க
எழுவேன் நானே!

mukilan
08-07-2008, 03:39 PM
இ-பணமுடிப்பளித்த கண்மணிக்கு நன்றி

Narathar
08-07-2008, 03:40 PM
உன்னை தட்டிப்பார்க்கின்றேன்.....
கல்லறைக்கு என் சொந்தங்களை
கொண்டு சென்ற உன் இதயம்
இப்படித்தானிருக்குமோ என்று

பாலகன்
08-07-2008, 03:46 PM
இவன் தனி ஆள் அல்ல
அழிந்து போனவர்களுக்கான
அத்தாட்சி பத்திரம்
=========================================


இவன் கையில் இருக்கும் சிறு கல்லே
இவன் பின்னாளில் கட்டப்போகும்
நினைவு ஆலயத்தில் முதல் கல்லோ

அன்புடன்
பில்லா

சிவா.ஜி
08-07-2008, 03:57 PM
சொந்தங்களை தின்றாய்
சுற்றங்களைத் தின்றாய்
எனக்கான எல்லாமும் தின்றதாய்
எக்காளமிடாதே சுனாமியே....
என்னில் ஒரு சுனாமியை நாளைக் கான்பாய்
உன்னிலும் உயர்ந்தவனாய் அதில்
நான் எழக் காண்பாய்.....

யவனிகா
08-07-2008, 04:05 PM
மலரின் இதழை
பறிப்பதால் விண்மீண் ஒன்று
உதிர்ந்து போகலாம்...
இது தானே கேயாஸ் தியரி..!!!

வெறும் கல்லும் உன் விழித்துயரும்
பூகம்பம் ஒன்றை மெல்ல கிளப்புகின்றன
என் மன வெளியில்....
இதற்கு என்ன பெயரிட?

பாலகன்
08-07-2008, 04:06 PM
சொந்தங்களை தின்றாய்
சுற்றங்களைத் தின்றாய்
எனக்கான எல்லாமும் தின்றதாய்
எக்காளமிடாதே சுனாமியே....
என்னில் ஒரு சுனாமியை நாளைக் கான்பாய்
உன்னிலும் உயர்ந்தவனாய் அதில்
நான் எழக் காண்பாய்.....

அற்புதமான கவிதை சிவா

வீழ்வது தவறில்லை வீழ்ந்துகிடப்பது தான் தவறு

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
08-07-2008, 04:36 PM
இந்த ஒற்றைக் கல்லை எனக்கு
விட்டுக்கொடுத்ததற்கு நன்றி ஆழிப்பேரலையே
இதில் நான் கட்டப்போகும் கரை
உன்னைக் கடலில் வைக்கும் சிறை
உனக்கினி கிடைக்காது இரை!

கண்மணி
08-07-2008, 05:01 PM
என்ன தாகத்தில்
எந்தக் காக்கா
எத்தனைக் கல்போட்டதோ
இந்தப் பானை
இப்படி வழிந்ததே!!!

தண்ணீரிலும் கண்ணீரிலுமாய்
தம்மையழுத்திச் சுமந்தவர்கள்
தண்ணீரில் போக
இடிந்து போனவைகளுக்கு மத்தியில்
இடிந்த இவன்

போன நான்கு கைகளுக்கு பதில்
நான்காயிரம் கைகள் அணைக்க
வந்தப் பேரலைக்கெதிராய்
அன்புப் பேரலை

கடலே உனக்கு
ஆறுகளில் தண்ணீர் வற்றிப் போனதால்
எங்கள் கண்ணீர் தேடி வந்தாயோ

கடலே இன்றுனக்கு
கண்ணீர் உப்பிட்டோம்
உன்
உயிர் உள்ள வரை
மறக்காதிரு..

விகடன்
08-07-2008, 05:03 PM
இரவோ பகலோ
காலையோ மாலையோ
இடைவிடாது
களித்திருந்தோம்
உன்னருகில்

உணவும் உன்மடியில்,
விளையாட்டும் உன்னருகில்
உறக்கம் கூட அலை
உன் தாலாட்டில்..

புத்தாண்டின் மறுநாள்
முதலாவது அந்தி பொழுது
பள்ளிவிட்டு வந்த நான்
பாதி வயிறும் ஆறவில்லை

சிறுவன் நான்
விளையாட விரைந்துவிட்டென்.
தறிகெட்டு ஓடியந்தோர்
தகவல் சொல்ல நாடிவந்தேன்

சிதறிக்கிடந்த என்வீடு
சிதைந்து விட்ட மரம் செடிகள்
உறைவைத்தேடி நான் அலைந்தேன்
சுனையுன் வயிற்றில் என்றறிந்தேன்

ஏனிந்த கொடூர எண்ணம்
என்னை மட்டும் விட்டு விட்டாய்
வெட்ட வெளியில் என்னை மட்டும்
நிர்க்கதியாய் ஆக்கிவிட்டாய்

கண்மணி
08-07-2008, 05:23 PM
அத்தனை நீரிருந்தும்
ஈரமில்லாக் கடல்
தாயின் இதயத் துடிப்பைத்
தட்டிப் பார்த்து தேடுகிறேன்
அன்பிற்கான தாகத்துடன்..

கண்மணி
08-07-2008, 05:26 PM
நிழலுக்கு உயிர்கொடுப்பதாம்
நாரதரே
சக்தியில்லை எங்களுக்கு

இருந்திருந்தால்
உயிர்கொடுத்திருப்போம்

நிழலுக்கில்லை
நிழல் கொடுக்கும்
சிலத் தாய்களுக்கு..

ஆதி
08-07-2008, 05:48 PM
வண்ண கனவுகளில் வாழ்ந்திருந்த வீடையெந்தன்
சின்ன விழிகள் மண்ணுக்குள் தேடுகிறது
கல்லைமட்டும் விட்டுசென்ற காட்டலை நினைவில்
முள்ளைதைக்கிறது நெஞ்சில் மூட்டிவிடுகிறது வலி!
கரசேவகர் இல்லை கடப்பாரைகள் இல்லை
தரைமட்டமானது யாவும் பாபர் மசூதியாய்
சொந்தம் தின்றது சுகபோகங்களை எல்லாம்
மந்திரம் போன்று மறைய வைத்தது
வந்த ஆறு வறண்டது போல
இந்த மண்ணை ஆக்கி விட்டது
ஓலம் இட்டு ஓடிவந்து யாவையும்
ஆழம் கொண்டு அடக்கி விட்டது
சில்லு சில்லாய் சிதைத்து வீட்டை
கல்லு கல்லாய் சிதற விட்டது
பந்துபேட் என்றன் பக்கத்து வீட்டு
பந்தங்கள் என்று அனைத்தையும் தின்ற
இந்த சூனாமி என்னைமட்டும் எப்படி
சிந்தி விட்டு சென்றது உண்ணாமல் ?
சிறுவன் இவனென சிந்தித்தி ருந்தால்
இருவயது பிள்ளைகளின் இதயமும் அசைதிருக்கும்
தன்னை கண்டதை தரணிக்கு சாட்சிசொல்ல
என்னை மிச்சம்வைத்து சென்றதோ பேயலை ?

நம்பிகோபாலன்
08-07-2008, 06:34 PM
என்னை போல
எத்தனை குடும்ப
கனவு கண்ணாடியை
உடைத்துவிட்டாய்
சிதறியதில்
என்குடும்பமும் உண்டு
காத்திரு
கல்லை உளியாய்
என்னை செதுக்குகிறேன்
நீ தயாராக இரு.........

ஓவியா
08-07-2008, 09:33 PM
http://www.adelaideinstitute.org/images/photos2/Zionist_Tzunami.jpg

[COLOR=Magenta][B]சுனாமியில் மிஞ்சிய இவன் வீட்டின் ஒரு கல்...



இந்தப்படம் பூகம்பம் நடந்தது போல் அல்லவா உள்ளது!! இருப்பினும் சுனாமியும் காரணமாக இருக்கலாம்.

பூ செல்லம், (இனி படமிடப்போகும் அனைவருக்கும் தான்)
ஒரு அன்பு வேண்டுகோள் படத்தினை மட்டும் தாருங்கள் அந்த படம் எதை சித்தரிக்கென்றது என்பதனை கவிஞர்களின் கர்பனைக்கு விட்டு விடலாமே!!

நீங்கள் அச்சிருவன் சுனாமியில் மிஞ்சிய அவன் வீட்டின் ஒரு கல்லை பார்க்கிறான் என்று தலைப்பு கொடுத்ததினால் கவிஞர்கள் அலை, கடல், சுனாமி, தண்ணீர், என தலைப்பினை சம்பந்தப்படுத்தியே கவிதையை வடிக்கின்றனர். (இல்லனா மன்னிக்கவும்).

தலைப்பே இல்லாமல் படத்தினை மட்டும் வெருனே தந்தால் கவிஞர்களின் கர்ப்பனை எங்கோ செல்லும்.

தவறாயின் மன்னிக்க. நன்றி.

இனி வரும் படங்கள் தலைப்பில்லாமலே வரவேண்டும் என்பது என் ஆசை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



ஆதவா உன் விமர்சனத்திற்க்கு நன்றி. அசந்துப்போனேன்.

உன் கவிதையும் அழகு. :)

கண்மணி
09-07-2008, 12:53 AM
கடல்தாயே
எங்களுக்கு இதுநாள் வாழ்வளித்த நீ
இன்று கூண்டோடு
என் குடும்பத்தை
கொண்டு சென்று விட்டாயே!!!

கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி - மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி

எதுவுமே செய்ய இயலாத கையறுந்த நிலை.

கண்மணி
09-07-2008, 12:56 AM
கடல் பேரலையில் நீந்தி
தப்பித்துவந்தேன்
வரவேற்க
குடும்பம் இல்லாமல்
நடுக்கடலில் தவிக்கும் நிலையில்
கரையில் நான்!!!

கரை சேர்ந்த நான் (கண்ணீர்க்) கடலில்
கடல் சேர்ந்த அவர்கள் உடல்
எந்தக் கரையில்?

சிலிர்த்த பூமியே
குத்திக் குத்திக் கொல்லுவேன்
இன்னுமொருமுறை சிலிர்த்து
என்னையும் சேர்த்துக் கொல்(ள்)!

ஆழ்கடலில் இருந்தோரெல்லாம் பிழைக்க, கரையோரம் இருந்தோரெல்லாம் போக..

சுனாமியில் அதுதானே நடந்தது!

கண்மணி
09-07-2008, 01:00 AM
ஆதியிலே
மனிதற்கு கல்லே
ஆயுதமாம்!
ஆழிப் பேரலையால்
ஆரம்ப இடத்தில் நான்!

சில கற்களும்
இரு கரங்களும்
முன்னேறும் முனைப்பும்
முட்டித்தள்ளும்
என் தடைக்கற்களை.


இனியொரு பிள்ளை
எனைப்போலாக
இனி விடமாட்டேன்!
இரு கடலே!-உன்
செருக்கடக்க
எழுவேன் நானே!

ஆழிப் பேரலையால்
ஆரம்ப இடத்தில் நான்!

சில கற்களும்
இரு கரங்களும்
முன்னேறும் முனைப்பும்
முட்டித்தள்ளும்
என் தடைக்கற்களை.


அழகான அழுத்தமான வரிகள்.. கடலடக்க என்பது உணர்வுப் பூர்வமாய் இருக்கிறது..

கண்மணி
09-07-2008, 01:08 AM
உன்னை தட்டிப்பார்க்கின்றேன்.....
கல்லறைக்கு என் சொந்தங்களை
கொண்டு சென்ற உன் இதயம்
இப்படித்தானிருக்குமோ என்று

இதயம் கல்லா என்று கேட்பது புரிகிறது.. ஆனால் "உன்னை" இடிக்கிறது..

நல்ல முன்னேற்றம் நாரதரே!

கண்மணி
09-07-2008, 01:11 AM
இவன் தனி ஆள் அல்ல
அழிந்து போனவர்களுக்கான
அத்தாட்சி பத்திரம்
=========================================


இவன் கையில் இருக்கும் சிறு கல்லே
இவன் பின்னாளில் கட்டப்போகும்
நினைவு ஆலயத்தில் முதல் கல்லோ

அன்புடன்
பில்லா

இந்த நினைவுகளை
இங்கேயே குழி தோண்டிப் புதைத்து விட்டு
இன்னொரு புதுயுகம் சமைக்க
இதோ அஸ்திவாரம்...

நினைவாலயமாக இல்லாமல்
இன்னொரு தலைமுறைக்கான அஸ்திவாரமாக இருந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமோ..

ஏன்,

சுனாமியால்
உறவிழந்தோர் வாழ
இன்னொரு அன்பில்லம் கட்ட
இது அஸ்திவாரக் கல்

ஆகக் கூட இருக்கலாம் அல்லவா!!

கண்மணி
09-07-2008, 01:13 AM
சொந்தங்களை தின்றாய்
சுற்றங்களைத் தின்றாய்
எனக்கான எல்லாமும் தின்றதாய்
எக்காளமிடாதே சுனாமியே....
என்னில் ஒரு சுனாமியை நாளைக் கான்பாய்
உன்னிலும் உயர்ந்தவனாய் அதில்
நான் எழக் காண்பாய்.....

பொங்கி அடங்கிய கடல்
பொங்கி எழுகிற மனம்
அது அழித்தது
இது ஆக்கட்டும்..

:icon_b:

கண்மணி
09-07-2008, 01:15 AM
மலரின் இதழை
பறிப்பதால் விண்மீண் ஒன்று
உதிர்ந்து போகலாம்...
இது தானே கேயாஸ் தியரி..!!!

வெறும் கல்லும் உன் விழித்துயரும்
பூகம்பம் ஒன்றை மெல்ல கிளப்புகின்றன
என் மன வெளியில்....
இதற்கு என்ன பெயரிட?

தியரி எல்லாம் இருக்கட்டும் யவனிகா
பிராக்டிகலுக்கு வாங்க..

பூகம்பங்கள் அடங்கி இருந்தால் மிகப் பெரிதாக வெளிப்படுமாம்..

அவ்வப்போது ஆடி விடுவது நல்லது

கண்மணி
09-07-2008, 01:18 AM
இந்த ஒற்றைக் கல்லை எனக்கு
விட்டுக்கொடுத்ததற்கு நன்றி ஆழிப்பேரலையே
இதில் நான் கட்டப்போகும் கரை
உன்னைக் கடலில் வைக்கும் சிறை
உனக்கினி கிடைக்காது இரை!

ஒற்றைக் கல்லா?
மிச்சம் இருப்பதே
கற்களும் மணலும் தானே!

அளவுகடந்த சோகம் பல சமயங்களில் வைராக்யமாக இறுகி விடுகிறது
அதையே கவிதைகளாய் இங்கேக் காண்கிறேன்

கண்மணி
09-07-2008, 01:25 AM
இரவோ பகலோ
காலையோ மாலையோ
இடைவிடாது
களித்திருந்தோம்
உன்னருகில்

உணவும் உன்மடியில்,
விளையாட்டும் உன்னருகில்
உறக்கம் கூட அலை
உன் தாலாட்டில்..

புத்தாண்டின் மறுநாள்
முதலாவது அந்தி பொழுது
பள்ளிவிட்டு வந்த நான்
பாதி வயிறும் ஆறவில்லை

சிறுவன் நான்
விளையாட விரைந்துவிட்டென்.
தறிகெட்டு ஓடியந்தோர்
தகவல் சொல்ல நாடிவந்தேன்

சிதறிக்கிடந்த என்வீடு
சிதைந்து விட்ட மரம் செடிகள்
உறைவைத்தேடி நான் அலைந்தேன்
சுனையுன் வயிற்றில் என்றறிந்தேன்

ஏனிந்த கொடூர எண்ணம்
என்னை மட்டும் விட்டு விட்டாய்
வெட்ட வெளியில் என்னை மட்டும்
நிர்க்கதியாய் ஆக்கிவிட்டாய்


இத்தனை நாள் என்னருகில் இருந்த நீ
இன்று மட்டும் ஏன் போனாய்?
கடல் திரும்பக் கேட்டால?

என்ன இருந்தது
எதை நான் இழந்தது
அன்று அனாதை,
இன்று சுனாமிக் குழந்தை
ஒற்றை வேலைச் சோறில்லை அன்று
தத்தெடுக்க ஆயிரம் பேர் இன்று
இருந்தாலும்
இது நல்லதா கெட்டதா
புரியாமல் நான்.

உறவில்லாமல் கிடந்த அனாதைச் சிறுவன் சுனாமியினால் உள்ளம் இளகிய பலபேரினால் உறவுகள் கிடைக்கப் பெற்றான் என மாறுபாடாகவும் சிந்திக்கத் தூண்டியது உங்கள் கவிதை!

கண்மணி
09-07-2008, 01:28 AM
வண்ண கனவுகளில் வாழ்ந்திருந்த வீடையெந்தன்
சின்ன விழிகள் மண்ணுக்குள் தேடுகிறது
கல்லைமட்டும் விட்டுசென்ற காட்டலை நினைவில்
முள்ளைதைக்கிறது நெஞ்சில் மூட்டிவிடுகிறது வலி!
கரசேவகர் இல்லை கடப்பாரைகள் இல்லை
தரைமட்டமானது யாவும் பாபர் மசூதியாய்
சொந்தம் தின்றது சுகபோகங்களை எல்லாம்
மந்திரம் போன்று மறைய வைத்தது
வந்த ஆறு வறண்டது போல
இந்த மண்ணை ஆக்கி விட்டது
ஓலம் இட்டு ஓடிவந்து யாவையும்
ஆழம் கொண்டு அடக்கி விட்டது
சில்லு சில்லாய் சிதைத்து வீட்டை
கல்லு கல்லாய் சிதற விட்டது
பந்துஃபட் என்றன் பக்கத்து வீட்டு
பந்தங்கள் என்று அனைத்தையும் தின்ற
இந்த சூனாமி என்னைமட்டும் எப்படி
சிந்தி விட்டு சென்றது உண்ணாமல் ?
சிறுவன் இவனென சிந்தித்தி ருந்தால்
இருவயது பிள்ளைகளின் இதயமும் அசைதிருக்கும்
தன்னை கண்டதை தரணிக்கு சாட்சிசொல்ல
என்னை மிச்சம்வைத்து சென்றதோ பேயலை ?

உங்களால் இன்னும் ஆழமாய் எழுத முடியுமே ஆதி..

அது என்ன பந்துஃபட்? சுனாமி இடும்பன் சிந்தியப் பருக்கை. யோசிக்க வைக்கிறது.

கண்மணி
09-07-2008, 01:31 AM
என்னை போல
எத்தனை குடும்ப
கனவு கண்ணாடியை
உடைத்துவிட்டாய்
சிதறியதில்
என்குடும்பமும் உண்டு
காத்திரு
கல்லை உளியாய்
என்னை செதுக்குகிறேன்
நீ தயாராக இரு.........

குடும்பங்கள் சிதறின
கனவுகள் சிதைந்தன
ஊரே மயானம்
என்னால் முடிந்த தண்டனை
இந்தப் பூமிக்கு!

ஒருவேளை அந்த்ச் சிறுவன் நீதிபதியாகித் தீர்ப்பெழுதுகிறானோ?

Narathar
09-07-2008, 03:53 AM
பூ செல்லம், (இனி படமிடப்போகும் அனைவருக்கும் தான்)
ஒரு அன்பு வேண்டுகோள் படத்தினை மட்டும் தாருங்கள் அந்த படம் எதை சித்தரிக்கென்றது என்பதனை கவிஞர்களின் கர்பனைக்கு விட்டு விடலாமே!!

தலைப்பே இல்லாமல் படத்தினை மட்டும் வெருனே தந்தால் கவிஞர்களின் கர்ப்பனை எங்கோ செல்லும்.

தவறாயின் மன்னிக்க. நன்றி.

இனி வரும் படங்கள் தலைப்பில்லாமலே வரவேண்டும் என்பது என் ஆசை.

பூவின் பட தலைப்பை கண்டதும் நானும் அப்படியே நினைத்தேன்.......

என்றாலும் இதற்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அறிய வாளாவிருந்தேன்....

இப்போது படத்துக்கு தலைப்பில்லாமல் தருவது தான் சிறந்தது என்று தோன்றுகின்றது....

மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை கூறினால் இதையும் ஒரு விதியாக வைத்துவிடலாம்......

இன்னும் ஆலோசணைகளும் வரவேற்கப்படுகின்றன....

சிறப்பான பின்னூட்டங்கள் தரும் நம்ம கண்மணிக்கு இத்திரியில் ஒரு சிறப்பு பதவி வழங்கலாம் என்று ஆசைப்படுகின்றேன்......

அன்பர்கள் பிரேரிக்கலாமே???

mukilan
09-07-2008, 04:03 AM
நான் நாரதரின் கருத்தை வழிமொழிகிறேன். இ-பணம் அளித்து புலவர்களை (நாமதாங்க)ப் பாராட்டும் புரவலராய் மட்டுமில்லாமல் அவரும் கவிதாயினியாய், விமர்சகராய் இத்திரியின் ஓட்டத்தைத் தொடர்வதில் பெரும்பங்கு வகிக்கிறார். ஏற்கன்வே பின்னூட்டப் புயல் என பூமகளுக்குப் பட்டம் இருப்பதால் வேறொன்றைப் பரிந்துரைக்க நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

விகடன்
09-07-2008, 04:06 AM
ஆமாம் நாரதரா...
படத்திற்கு தலைப்பில்லாவிட்டால் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட கோணங்களில் சிந்திக்க ஏதுவாக இருக்கும்....

உதாரணத்திற்கு மேற்படி படத்தை
1. சுனாமியின் பிறகானதாகவோ அல்லது,
2. சூறாவளியின் பின்னதானதாகவோ அல்லது,
3. நில நடுக்கத்தின் பின்னதனதாகவோ அல்லது,
4. காட்டுமிராண்டிக் காடையர்களில் அழிவிற்குப் பின்னதானதாகவோ ...

என்று பல தரப்பட்ட கோணங்களில் சிந்திக்க வாய்ப்புண்டு.


இன்னொரு விதமாக சிந்தித்தால்...

தலைப்பை இட்டால், அனைவரையும் ஒரே வழியில் சிந்தித்து கவி படைக்க ஊன்றுகோலாகவும் அமையும்....

தலைப்பை இட்டு 20 கவிதைகள் வரை அடுத்த படத்தை பிரசுரிக்காமல் பொறுமை காத்தால், தலைப்பை இடாத பட்சத்தில் இன்னும் அதிக அவகாசம் (பதிவுகளின் எண்ணிக்கை) கொடுக்க வேண்டும்.

இதில் எது அதிக நன்மை பயக்கும்?
அதை செய்தல் வேண்டும்.

கண்மணி
09-07-2008, 04:41 AM
தற்பொழுது 24 மணி நேரத்திற்கு ஒரு படம் என்ற வேகத்திலேயேதரப்படுகின்றன.. ஓய்வு நாட்கள் உறுப்பினர் வ்ருகை எண்ணிக்கை குறையும் நாட்களில் புது படம் கொடுக்க வேண்டாம். இதனால் ஆர்வமுள்ள எல்லோருக்கும் ஒரு கவிதையாவது எழுத வாய்ப்புக் கிடைக்கும்.

படம் பிரசுரிக்கும் நேரத்தை குறிப்பிடுவதின் மூலம் எது கடைசிப்படம் என எளிதில் அறியலாம். ஒவ்வொரு பக்கத்திலும் முதல் பதிவு படத்துடன் இணைந்து இருக்கட்டும். இதனால் அனைவருக்கும் சம வாய்ப்பும் அதே சமயம் தெளிவும், அவசரப்படாமல் நிதானமாய் யோசிக்கவும் நேரம் கிடைக்கும்.

தீபன்
09-07-2008, 05:04 AM
குறிவைத்த இலக்கு
பின்னணியில் இன்னும்
பலமாய்த்தான் இருக்கு...
சிதைந்ததென்னவோ
சண்டைக்குள் சங்கமிக்காத
சிட்டுக்குருவிதான்!

ஆதி
09-07-2008, 09:06 AM
என்னோடு அன்று
விளையாடிய அலைகள்
விண்ணூடு நுழைந்துவிட
வேகமாய் எழுந்துவர
தொன்னூறு விழுக்காடு
தொலைந்தன நீருள்
கண்ணூறு பட்டதுபோல்
காய்ந்தன யாவும்..

காதலர்கள் கூடி
கலந்திருந்த வெட்கத்தை
பாதங்கள் வருடி
படர்ந்த வெப்பத்தை
ஆதரவாய் தோள்சாய்ந்து
அழுத சுவடுகளை
சீதளமாய் எப்போதும்
சிந்திருந்த அலைகள்

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்
வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ
காரிகை என்றோ
கருத வில்லையணல்
ஆறிய அடுப்பாக
ஆக்கின உடல்களை..

உனக்கு உவமையில்லை
உந்தாள் சேர்ந்து
மனகவலை இன்றி
மகிழ்ந்த மைக்கும்
கணக்கு இல்லை
காட்டலையே உன்கொடுங்
குணத்தாலான அழிவுக்கும்
கணக்கு இல்லை

இந்த வெறுமையை
இந்த தனிமையை
தந்து சென்ற
தண்ணீர் மலையே
உந்தன் செருக்கை
ஒருநாள் அடக்குவேன்பார்
உந்தன் விரிவை
ஒருநாள் முடக்குவேன்காண்!

தீபா
09-07-2008, 09:48 AM
குறிவைத்த இலக்கு
பின்னணியில் இன்னும்
பலமாய்த்தான் இருக்கு...
சிதைந்ததென்னவோ
சண்டைக்குள் சங்கமிக்காத
சிட்டுக்குருவிதான்!


க*ல*க்க*ல்... க*ல*க்க*ல்..... வ*லியை வ*லியாக*வே கொன்டு வ*ந்த*துக்கு வாழ்த்துக்க*ள் தீப*ன்..

meera
09-07-2008, 10:59 AM
நான் உன்னோடு
உறவாடவில்லை-என்
உறவுகளை உன்னில்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

ஆதி
09-07-2008, 11:02 AM
உங்களால் இன்னும் ஆழமாய் எழுத முடியுமே ஆதி..

அது என்ன பந்துஃபட்? சுனாமி இடும்பன் சிந்தியப் பருக்கை. யோசிக்க வைக்கிறது.

நிச்சயம் இன்னொரு சிறப்பான கவிதையை எழுதிப் பதிக்கிறேன் அக்கா..

பந்து பேட் என்று இருந்திருக்க வேண்டும்.. fat என்று அடித்துவிட்டேன் மன்னிக்கவும்..

சுஜா
09-07-2008, 11:11 AM
பொங்கி வந்த பாசம் ,
மொத்தமாய்,
முத்தமாய் சிந்திவிட்டது .
_________________________________
அன்புடன் சுஜா

தீபா
09-07-2008, 01:21 PM
பொங்கி வந்த பாசம் ,
மொத்தமாய்,
முத்தமாய் சிந்திவிட்டது .
_________________________________
அன்புடன் சுஜா


நீங்க எதைச் சொல்றீங்க? கடலுக்கு வந்த பாசமா? சுனாமி என்பது முத்தமா? ஒண்ணும் புரியலையே!

சிவா.ஜி
09-07-2008, 01:26 PM
இவர் முதலில் பதித்த படத்துக்கு எழுதியிருக்கிறாரென்று நினைக்கிறேன் தென்றல்.

தாமரை
09-07-2008, 01:35 PM
அடுத்த படம் தரலாமா?

சிவா.ஜி
09-07-2008, 01:44 PM
தரலாமே...போதுமான அளவு கவிதைகள் வந்துவிட்டன என் நினைக்கிறேன்.

கண்மணி
09-07-2008, 02:00 PM
குறிவைத்த இலக்கு
பின்னணியில் இன்னும்
பலமாய்த்தான் இருக்கு...
சிதைந்ததென்னவோ
சண்டைக்குள் சங்கமிக்காத
சிட்டுக்குருவிதான்!

முதல் மூன்று வரிகள் வேறு உணர்ச்சி
இரண்டாவது மூன்று வரிகள் வேறு உணர்ச்சி
உணர்வு மாறுபாடுகளினால்
தாக்கம் கொஞ்சம் குறைச்சலா இருக்கு தீபன்..
கருத்து:icon_b:



என்னோடு அன்று
விளையாடிய அலைகள்
விண்ணூடு நுழைந்துவிட
வேகமாய் எழுந்துவர
தொன்னூறு விழுக்காடு
தொலைந்தன நீருள்
கண்ணூறு பட்டதுபோல்
காய்ந்தன யாவும்..

காதலர்கள் கூடி
கலந்திருந்த வெட்கத்தை
பாதங்கள் வருடி
படர்ந்த வெப்பத்தை
ஆதரவாய் தோள்சாய்ந்து
அழுத சுவடுகளை
சீதளமாய் எப்போதும்
சிந்திருந்த அலைகள்

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்
வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ
காரிகை என்றோ
கருத வில்லையணல்
ஆறிய அடுப்பாக
ஆக்கின உடல்களை..

உனக்கு உவமையில்லை
உந்தாள் சேர்ந்து
மனகவலை இன்றி
மகிழ்ந்த மைக்கும்
கணக்கு இல்லை
காட்டலையே உன்கொடுங்
குணத்தாலான அழிவுக்கும்
கணக்கு இல்லை

இந்த வெறுமையை
இந்த தனிமையை
தந்து சென்ற
தண்ணீர் மலையே
உந்தன் செருக்கை
ஒருநாள் அடக்குவேன்பார்
உந்தன் விரிவை
ஒருநாள் முடக்குவேன்காண்!

உணர்வுகள் கண்ணீரை வரவழைக்க வேண்டுமா, அடுத்து உள்ள நான்கு வரிகளை கவனியுங்கள் ஆதி..

சிறு பிஞ்சுக் குழந்தை.. அதனால் டூ விடத்தான் முடியும்.. டூ விட்டுக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறது.

ஆக உணர்வா அழகா என முதலில் முடிவு செய்து கொள்வோம். கவியழகு எனப் பார்ப்போம்..

என்னோடு அன்று
விளையாடிய அலைகள்
விண்ணூடு நுழைந்துவிட
வேகமாய் எழுந்துவர
தொன்னூறு விழுக்காடு
தொலைந்தன நீருள்
கண்ணூறு பட்டதுபோல்
காய்ந்தன யாவும்..

அபாரமானத் தொடக்கம் ஒரே ஒரு வார்த்தை அதிகம் செலவிட்டிருக்கிறீர்கள், விண்ணூடு நுழைந்து வேகமாய் எழுந்து வர.. அது ஒரே செயலாய் காட்டுதல் ஆவேசத்தைக் கூட்டி இருக்கும்.. நுழைந்துவிட எனச் சொல்லும் பொழுது நிறுத்தி அடுத்தவரி ஆரம்பிக்க வேண்டி இருக்கிறதல்லவா?

காதலர்கள் கூடி
கலந்திருந்த வெட்கத்தை
பாதங்கள் வருடி
படர்ந்த வெப்பத்தை
ஆதரவாய் தோள்சாய்ந்து
அழுத சுவடுகளை
சீதளமாய் எப்போதும்
சிந்திருந்த அலைகள்

பிண்ணனியில் இருப்பது சிறுவனன்றோ ஆதி. அப்படி இருக்க காதலை விட துப்பாக்கி பலூனும், இன்னும் விளையாட்டுப் பொருள்களும் வந்திருக்கலாமே, படத்திற்கு சற்று விலகி இதுப் பொதுக்கவிதை ஆகிறது.

கடற்கரையில் காதலின் ஆரம்பம், ஆனந்தம், அந்திமம் மூன்றுமே நிகழ்கிறதல்லவா.. மூன்றையுமே ஒரு பத்தியில் காட்டியிருக்கலாம்..


உங்கள் கவிதை படித்துக் கேட்க அழகாய் இருக்கவென எதுகையைச் சீரமைத்து எழுதியிருக்கிறீர்கள் ஆதி. வார்த்தைகள் கருத்துகள் சற்று பின்னப்படாமல் எழுதிவிட்டீர்களானால் இன்னும் மிகச் சிறப்பாகும்..

உதாரணமாக

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்
வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ
காரிகை என்றோ
கருத வில்லையணல்
ஆறிய அடுப்பாக
ஆக்கின உடல்களை..

இரண்டிரண்டு வரிகளாக குதித்து வரும் சந்தம்..

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்

வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ

வாலிபர் என்றோ என்று நிறுத்தும் பொழுது மிகச் சிறிய சொல்லாகப் போய் அந்த சப்த இன்பம் குறைவதைக் கவனியுங்கள்

அடுத்து வரும் வரிகளில் அசைகுறைந்து, அந்த ஆவேசக் குரல் மடங்குவதைக் கவனியுங்கள்..

கவியழகு கருதியே விளக்கமாய் சொல்லுகிறேன். எல்லோரும் கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம் ஆதி..





நான் உன்னோடு
உறவாடவில்லை-என்
உறவுகளை உன்னில்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

என்ன தங்கையே அந்தக் கவிதையிலேயே சொல்லிவிட்டேனே, தனியாகச் சொல்லணுமா?

சிறு பிஞ்சுக் குழந்தை.. அதனால் டூ விடத்தான் முடியும்.. டூ விட்டுக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறது.

உணர்வின் புகைப்படம்.

Narathar
09-07-2008, 02:08 PM
பொங்கி வந்த பாசம் ,
மொத்தமாய்,
முத்தமாய் சிந்திவிட்டது .
_________________________________
அன்புடன் சுஜா

ஆரம்பத்தில் வந்த படத்துக்கு கவிதை எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.......

பரவாயில்லை.... திரியின் அனைத்து பக்கங்களையும் நோட்டம் விட்டு கடைசியாக வரும் படத்துக்கு உங்கள் அடுத்த கவிதையை தாருங்கள்

ஓவியா
09-07-2008, 02:19 PM
தரலாமே...போதுமான அளவு கவிதைகள் வந்துவிட்டன என் நினைக்கிறேன்.

சரி. போடலாமே. வழிமொழிகிறேன்.

கண்மணி
09-07-2008, 02:19 PM
meera டூ
ஆதி காட்டலையே கருணை காட்டலையே
தீபன் இலக்கு
நம்பிகோபாலன் தயாராக இரு
ஆதி என்னை மிச்சம் வைத்ததேன்
விராடன் ஏனிந்தக் கொடூரம்
சிவா.ஜி ஒற்றைக் கல்லுக்கு நன்றி
யவனிகா இது என்ன தியரி
சிவா.ஜி என்னில் சுனாமி
பில்லா முதல்கல்
Narathar உன் இதயம்
mukilan ஆதிமனிதனாய்
aren கரையில் நான்

இந்தச் சுற்றில் பணமுடிப்பு பெற்றக் கவிஞர்கள்,,

:icon_b::icon_b::icon_b:

கண்மணி
09-07-2008, 02:22 PM
அடுத்த படம்..

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/DSC00492.jpg

Narathar
09-07-2008, 02:27 PM
அடுத்த படம்.. ப்டம் மிகப் பெரிதாய் இருப்பதால் இப்போதைக்கு முகவரி மட்டும். நாளைச் சிறிதாக்கிப் பதிக்கிறேன்



இதை அடுத்த படமாகக்கொடுங்கள்....
ஓவியா உங்கள் பதிவுக்கு முன்னரே அடுத்த படத்தை கொடுத்துவிட்டாரே...

கவனிக்கவில்லையா????

கண்மணி
09-07-2008, 02:33 PM
அவர் எடுத்து விட்டார் நாரதரே!!!


அந்தப் படம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..

மக்கள் கவிமழை பொழியவேண்டாமா அதனால்தான் இந்தப் படம்.

பாலகன்
09-07-2008, 02:38 PM
இலை பரப்பில் விழுந்த நீர்துளிகள்
சொல்லும் ஒட்டு உறவில்லை என்று
என் கன்னத்தில் விழுந்த நீர்துளிகள்
சொல்லும் ஒட்டு உறக்கமில்லை என்று

/////////////////////////////////////////////////////////////////////////

பில்லா

ஓவியா
09-07-2008, 02:39 PM
அவர் எடுத்து விட்டார் நாரதரே!!!

அந்தப் படம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..

மக்கள் கவிமழை பொழியவேண்டாமா அதனால்தான் இந்தப் படம்.


ஏன் அக்கா கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்கின்றீர்கள். அந்தப்படத்திற்க்கு கவிதை வராதா!!! :cool:

விட்டுகொடுப்பது நல்லது. :) சரி உங்கள் விருப்பபடியே ஆகட்டும்.

ஓவியா
09-07-2008, 02:40 PM
இதை அடுத்த படமாகக்கொடுங்கள்....
ஓவியா உங்கள் பதிவுக்கு முன்னரே அடுத்த படத்தை கொடுத்துவிட்டாரே...

கவனிக்கவில்லையா????

நன்றி அண்ணா.

விட்டுக்கொடுப்போம். :)

கண்மணியக்கா யூ கெரியோன்.

mukilan
09-07-2008, 03:19 PM
காலை இலையின்
பனித் துளியா?

உன் கன்னம் வழியும்
வியர்வைத் துளியா?

எதனை எடுக்க?
எதனை விடுக்க?

மதி
09-07-2008, 03:23 PM
உன் கண்கள் காட்டும் சோகத்தில்
அட இலைகளும்
கண்ணீர் வடிக்கிறது..!

மதி
09-07-2008, 03:26 PM
http://i330.photobucket.com/albums/l426/kanmanai/DSC00492.jpg

இலை நீர்திவலைகள் காரணம்
சர்ஃபேஸ் டென்ஷன்
அவள் கண்ணீர்த் திவலை காரணம்
ஃபேஸ் டென்ஷன்..

(மன்னிக்கவும்..மொக்கையா..எழுதலாம்னு ஆங்கிலம் பயன்படுத்திட்டேன்)

ஆதி
09-07-2008, 03:40 PM
உணர்வுகள் கண்ணீரை வரவழைக்க வேண்டுமா, அடுத்து உள்ள நான்கு வரிகளை கவனியுங்கள் ஆதி..

சிறு பிஞ்சுக் குழந்தை.. அதனால் டூ விடத்தான் முடியும்.. டூ விட்டுக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறது.

ஆக உணர்வா அழகா என முதலில் முடிவு செய்து கொள்வோம். கவியழகு எனப் பார்ப்போம்..

என்னோடு அன்று
விளையாடிய அலைகள்
விண்ணூடு நுழைந்துவிட
வேகமாய் எழுந்துவர
தொன்னூறு விழுக்காடு
தொலைந்தன நீருள்
கண்ணூறு பட்டதுபோல்
காய்ந்தன யாவும்..

அபாரமானத் தொடக்கம் ஒரே ஒரு வார்த்தை அதிகம் செலவிட்டிருக்கிறீர்கள், விண்ணூடு நுழைந்து வேகமாய் எழுந்து வர.. அது ஒரே செயலாய் காட்டுதல் ஆவேசத்தைக் கூட்டி இருக்கும்.. நுழைந்துவிட எனச் சொல்லும் பொழுது நிறுத்தி அடுத்தவரி ஆரம்பிக்க வேண்டி இருக்கிறதல்லவா?

காதலர்கள் கூடி
கலந்திருந்த வெட்கத்தை
பாதங்கள் வருடி
படர்ந்த வெப்பத்தை
ஆதரவாய் தோள்சாய்ந்து
அழுத சுவடுகளை
சீதளமாய் எப்போதும்
சிந்திருந்த அலைகள்

பிண்ணனியில் இருப்பது சிறுவனன்றோ ஆதி. அப்படி இருக்க காதலை விட துப்பாக்கி பலூனும், இன்னும் விளையாட்டுப் பொருள்களும் வந்திருக்கலாமே, படத்திற்கு சற்று விலகி இதுப் பொதுக்கவிதை ஆகிறது.

கடற்கரையில் காதலின் ஆரம்பம், ஆனந்தம், அந்திமம் மூன்றுமே நிகழ்கிறதல்லவா.. மூன்றையுமே ஒரு பத்தியில் காட்டியிருக்கலாம்..


உங்கள் கவிதை படித்துக் கேட்க அழகாய் இருக்கவென எதுகையைச் சீரமைத்து எழுதியிருக்கிறீர்கள் ஆதி. வார்த்தைகள் கருத்துகள் சற்று பின்னப்படாமல் எழுதிவிட்டீர்களானால் இன்னும் மிகச் சிறப்பாகும்..

உதாரணமாக

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்
வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ
காரிகை என்றோ
கருத வில்லையணல்
ஆறிய அடுப்பாக
ஆக்கின உடல்களை..

இரண்டிரண்டு வரிகளாக குதித்து வரும் சந்தம்..

சீறித்தான் வந்தனவே
சிறுபொழுதில் அத்தனையையும்

வாரித்தான் சென்றனவே
வாலிபர் என்றோ

வாலிபர் என்றோ என்று நிறுத்தும் பொழுது மிகச் சிறிய சொல்லாகப் போய் அந்த சப்த இன்பம் குறைவதைக் கவனியுங்கள்

அடுத்து வரும் வரிகளில் அசைகுறைந்து, அந்த ஆவேசக் குரல் மடங்குவதைக் கவனியுங்கள்..

கவியழகு கருதியே விளக்கமாய் சொல்லுகிறேன். எல்லோரும் கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம் ஆதி..




சுட்டிக்காட்டிய அத்தனையையும் மனத்தில் ஏற்றிக்கொண்டேன் அக்கா.. உங்கள் பின்னூட்டம் சிறந்தப் படிப்பினையாக இருக்கிறது என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பல இடங்களை அறிய வைத்திருக்கிறது..
வரும் கவிதைகளில் வார்த்தைகளின் அளவிலும் கருத்து செறிவிலும் சம விழுக்காடு கவனம் செலுத்துகிறேன்.. என்னை செதுக்கும் வகையில் அமைந்த பின்னூட்டத்திற்கு நன்றிகள் அக்கா...

சிவா.ஜி
09-07-2008, 03:44 PM
இலை வியர்ப்பு கால நிலையாலென்றால்
இவள் வியர்ப்பு கவலையினால்...
இலைக்கு இவள் ஆறுதல்
இவளுக்கு இலை ஆறுதல்
இப்படித்தானே இங்கு
எத்தனையோ உள்ளங்கள்
புழுக்கத்துக்குள் வாழ
பழகிக் கொண்டுள்ளது!

தீபன்
09-07-2008, 03:50 PM
பனித்துளி விலகாத அதிகாலை நேரம்
இலைமறைவில்-
இரவிரவாய் இருந்த வியர்வை ஈரம்.
இன்னும் எவ்வளவு நேரம்...
நாசம் செய்ய வந்த
நீசர்கள்
உரைவிட்டுப் போக!?

பாலகன்
09-07-2008, 03:52 PM
காலையில் தினமும் கண்விழித்தால்
நான் கை தொடும் பனித்துளியம்மா
உன்னை கை தொடும் போது என்
கண்ணீர் துளி மறைந்திடுதம்மா

////////////////////////////////////////////////////////////////
இருவரும் ஒருவரை ஒருவர் தேற்றுகின்ற பாடல்

முத்து முத்தாய் நீர் எதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு


பில்லா

mukilan
09-07-2008, 03:55 PM
இலை நீர்திவலைகள் காரணம்
சர்ஃபேஸ் டென்ஷன்
அவள் கண்ணீர்த் திவலை காரணம்
ஃபேஸ் டென்ஷன்..

(மன்னிக்கவும்..மொக்கையா..எழுதலாம்னு ஆங்கிலம் பயன்படுத்திட்டேன்)

மொக்கையாய் இருந்தாலும் டக்கராய் இருக்கிறது மதி!:icon_b:

நம்பிகோபாலன்
09-07-2008, 04:11 PM
இலையின் கண்ணீரா
என்னவளின் கண்ணீரா
தெரியவில்லை
இலையின் நீர் உதிர்ந்து
நிலம் தாங்கும்
உன் விழியோர நீரை
பார்த்தால்
என் இதயம் தங்குமா !!!!!

Narathar
09-07-2008, 04:15 PM
ஏன் அக்கா கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்கின்றீர்கள். அந்தப்படத்திற்க்கு கவிதை வராதா!!! :cool:
.

கவிதையே நீங்கள் போட்ட படத்தால்தானே வருகின்றது!!!

அடுத்த படமாக நிச்சயம் கொடுங்கள்

நிறையக்கவிதைகள் வரும்!

Narathar
09-07-2008, 04:26 PM
பனிக்கட்டியாய் இருந்து
பனித்துளியாய் மாறி
நீர்திவளையாக நான்
உபயம் - உலக உஷ்ணம்

பூமகள்
09-07-2008, 06:14 PM
கண்ணாடியில் முகம்
பார்த்து
அலுத்துவிட்டது..!!

உன் வைர நகை
மினுமினுப்பில்
முகம் பார்க்கட்டுமா
இலையே...!!

ஆதி
09-07-2008, 06:27 PM
கருவளை திரண்டு கண்மலர் வாட
விருந்தினை படைக்கும் விடலையும் போக
கார்முகில் நனைத்த இலையாய்
மார்களில் வியர்வை விரவ
தோள்களை தழுவ தோழி தலைவன் இலையே!

பி.கு:- சங்கப்பாடல் வடிவில் வடித்திருக்கிறேன்

பூமகள்
09-07-2008, 06:28 PM
உன்னில் என்ன சோகம்??
ஏனிந்த
அழுமூஞ்சி கோலம்?

வரதட்சனையெனும்
வெந்து போன
சொல்லால் எனை
வேக வைத்துப்போன
வரன் போல்..

உனையும்
வெட்டிப் போட்டு
வேண்டாமென
விட்டுப் போயினவோ
விரும்பிய கிளிகள்??

அல்லது

உன் பச்சைமேனி
குறைநிறமென்று
விட்டுப் போனதோ
வண்ணத்துப் பூச்சிகள்??

வாயிருந்தும் பூச்சியாக
பேசாமல் நீயிருக்க
கர்வமென தம்பட்டமிட்டு
கடந்து போனதோ
சிற்றெறும்புகள்??

என்மேல் விழும்
கல்லடி..
உன்னையும்
தாக்கியதில்
வியப்பேதுமில்லை..

நீ மட்டுமல்ல..
உன்னோடு நானும்..
இன்னும் பலரும்
அழுது கொண்டுதான்
இருக்கிறோம்..

காரணம்..

நாம்
பெண்கள்..!

நம்பிகோபாலன்
09-07-2008, 07:36 PM
இலையே
பனிதுளிகள் மேல்
காதல் கொள்ளாதே
பனிதுளிகள் மறைந்துவிட்டால்
அழுவதற்க்கு கூட
நீரில்லாமல் வாடிபோவாய்
என்னைபோல.....

ஓவியா
09-07-2008, 08:20 PM
பால்வடியும் முகத்தில்
பல கண்ணீர் துளிகளோ?
பாவையின் சோகத்தை
பச்சைக்காரி பார்த்தாளோ?
பாவப்பட்டாள் பசுமையாக்காரி
பனியினை கடன்வாங்கி
பாவைக்காக அழுதாளே!!!

mukilan
10-07-2008, 12:09 AM
நீ சுவாசித்தனுப்பிய
காற்றின் வெப்பம்
தாளாமல்
வியர்த்துப் போகிறேன்
நான்!
சற்று விலகி
நில்லேன்
விடலைப் பெண்ணே!

meera
10-07-2008, 02:13 AM
உன் கண்கள் காட்டும் சோகத்தில்
அட இலைகளும்
கண்ணீர் வடிக்கிறது..!

ஆஹா ஆஹா மதி கலக்கல் கவிதை.

கண்மணி
10-07-2008, 02:32 AM
என்ன, எப்ப கண்மணி டீச்சர் வருவாங்க எப்ப மார்க் போடுவாங்கன்னு துடிக்கிறீங்களா மக்களே!

என்ன கொடுமை இது சரவணன்.. ஆளாளுக்கு விமர்சனம் பண்ணிக்காம இப்படியாச் செய்யறது..?

கருத்துக்களை சரியா தப்பா ன்னு பார்க்காம வெளிப்படையா பரிமாறிக்கணும். அதுதானே மக்கா ஆரோக்யமானத் திரி..

சரி விமர்சனம் பார்ப்போமா?


இலை பரப்பில் விழுந்த நீர்துளிகள்
சொல்லும் ஒட்டு உறவில்லை என்று
என் கன்னத்தில் விழுந்த நீர்துளிகள்
சொல்லும் ஒட்டு உறக்கமில்லை என்று

/////////////////////////////////////////////////////////////////////////

பில்லா

முதல் பதிவே முத்து. அழகான பார்வை பில்லா. உறங்காத கண்கள்….
உறக்கமில்லாதது ஒரு மாற்றுவிளைவு தானே. சில கண்கள் உறங்காவிட்டாலும் வெகு சந்தோஷமாய் இருக்குமல்லவா? ஒட்டு உறக்கமில்லை..என்பது ஒட்டுமில்லை உறக்கமும் இல்லை என இரண்டாய் பிரிந்திருந்தால் இன்னும் அதிகம் சொல்லி இருக்குமோ எனத் தோன்றுகிறது.


காலை இலையின்
பனித் துளியா?

உன் கன்னம் வழியும்
வியர்வைத் துளியா?

எதனை எடுக்க?
எதனை விடுக்க?

வியர்வைத் துளி, ஆமாம் படத்தைக் கூர்ந்து கவனித்தால் அவள் கன்னங்களில் சில கண்ணீர்த் துளிகள் மற்றவை?

மடி சேர்ந்த நெடுமரம்
கண்ணீர் சிந்திப் பட்ட தடமோ
வடிவழகி வெம்பியதால்
கொடி பூத்த வியர்வைத் தடமோ

எதுவோ ஒன்று அதிகமாய்.. அது வியர்வையாய் இருக்கலாம். அவள் சாய்ந்திருந்த மரம் அவளுக்காய் அழுதிருக்கலாம்.. அல்லது அவள் கண்ணீரை மறைக்க முகம் கழுவ முயற்சித்தும் இருக்கலாம். பெண்ணின் வியர்வைத் துளி கோடானு கோடி பெறும். கவிதையாய்க் காண்கையில் அழகு. படத்துடன் ஒட்டிப் பார்க்கையில் உணர்வுப் பிறழ்வு!



உன் கண்கள் காட்டும் சோகத்தில்
அட இலைகளும்
கண்ணீர் வடிக்கிறது..!
இலைகள் அழுகின்றன. வெகு எளிதான உருவகம். உங்க கிட்ட இன்னும் நிறைய இருக்கு மதி!




இலை நீர்திவலைகள் காரணம்
சர்ஃபேஸ் டென்ஷன்
அவள் கண்ணீர்த் திவலை காரணம்
ஃபேஸ் டென்ஷன்..

(மன்னிக்கவும்..மொக்கையா..எழுதலாம்னு ஆங்கிலம் பயன்படுத்திட்டேன்)

டென்சனை ஃபேஸ் பண்ணி விட்டால் கண்ணீர் வருமா மதி? (மொக்கையாத்தான் கேட்கிறேன்.) ஃபேஸ் பண்ண முடியாததால் தானே டென்சனே!

வித்தியாசமாய்ச் சிந்திக்க முயற்சி.. மொக்கையானது..


இலை வியர்ப்பு கால நிலையாலென்றால்
இவள் வியர்ப்பு கவலையினாலா?
இலைக்கு இவள் ஆறுதல்
இவளுக்கு இலை ஆறுதல்
இப்படித்தானே இங்கு
எத்தனையோ உள்ளங்கள்
புழுக்கத்துக்குள் வாழ
பழக்கிக் கொண்டுள்ளது!

பழகிக் கொண்டுள்ளன.. என முடிக்கணும் சிவாஜி. எத்தனை உள்ளங்கள் பன்மை எனவே கொண்டுள்ளன, பழக்கி என்பது மற்றவரால் பழக்கப்படுவது, பழக்கி என்பதை சுயமுயற்சியாகக் காட்ட, தம்மையே என உரிபொருள் வேண்டும். யாரைப் பழக்குகின்றனர் எனச் சொல்லப்படல் வேண்டும் . ஏனெனில் பழகி –தானே செய்வது பழக்கி – இன்னொருவரைச் செய்வது. அந்த இன்னொருவர் தாமேதான் என்பதைக் காட்டவேண்டும்..
பழக்கிக் கொண்டன தம்மையே – என்பது சரியான பிரயோகம்..

கவலை கண்களில் தெரிகின்றதல்லவா? கவலையினாலா? என்ற கேள்வி அவசியமா?

இலைக்கு இவள் ஆறுதல் இவளுக்கு இலை ஆறுதல் – இளைப்பாறுதல்.. இலைகள் புழுக்கத்தில் வியர்க்கின்றன என்ற கோட்பாடு சரியா என்ற கேள்வியைத் தவிர வெறும் கவிதையாய்க் காண்பதில் இது அழகு.
(என்னது இது இவள் நக்கீரியா? இப்படிக் கீறுகிறாளே, (அதுவும் நக்கலாய் கீசறாளே ) என்று பயப்படாதீங்க சிவாஜி அண்ணா. பொதுவாகவே கவிதை எழுதிய பின் நம்முடைய கவிதைகளில் இருக்கும் சில சின்னப் பிழைகளை எப்படி பூதக்கண்ணாடி வச்சுப் பார்ப்பது என்று சொல்லிக்கொடுக்கத்தான் இது.




பனித்துளி விலகாத அதிகாலை நேரம்
இலைமறைவில்-
இரவிரவாய் இருந்த வியர்வை ஈரம்.
இன்னும் எவ்வளவு நேரம்...
நாசம் செய்ய வந்த
நீசர்கள்
உரைவிட்டுப் போக!?

பயம் பதட்டம் காணாவிழிகள்.. விரக்தி மட்டுமே வெளிப்பாடாய்.. அந்த விரக்தியைச் சொல்லில் கொண்டுவர முயற்சித்திருக்கிறீர்கள். வந்து விடுவார்களோ என்பது பயம்.. போய்த் தொலையுங்களேன் என்பது வெறுப்பு. இரண்டுமில்லை. இரவுகளானால் இவ்வேட்டை நாய்களின் தொல்லை.. இருப்பதா இருந்து என்ன செய்வது என்ற விரக்தி..
மாறுபட்ட உணர்வுகள் தீபன். நன்றி!


காலையில் தினமும் கண்விழித்தால்
நான் கை தொடும் பனித்துளியம்மா
உன்னை கை தொடும் போது என்
கண்ணீர் துளி மறைந்திடுதம்மா

////////////////////////////////////////////////////////////////
இருவரும் ஒருவரை ஒருவர் தேற்றுகின்ற பாடல்

முத்து முத்தாய் நீர் எதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு


பில்லா

சினிமா பாடல்களில் பொருத்த முயற்சி . அழகாய் இருக்கிறது.. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.


இலையின் கண்ணீரா
என்னவளின் கண்ணீரா
தெரியவில்லை
இலையின் நீர் உதிர்ந்து
நிலம் தாங்கும்
உன் விழியோர நீரை
பார்த்தால்
என் இதயம் தங்குமா !!!!!

தங்குமா என்ற கேள்வி எதற்கு? தங்கியதால் தானே இந்தக் கவிதையே வந்தது.. கோவிச்சுக்காதீங்க இப்ப சீரியஸா பார்ப்போம்.

உன்
விழிநீர் தாங்கி
விம்முகிறதே இலைகள்..
தலைசாய்க்கத் தாயின்றி
செடித்தாயிடம்
வெடித்தாயோ!
பொறுத்துக் கொள் கண்மணியே!
தாய்நாட்டுக் கடமை
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது!

இப்படி எல்லாம் ஆறுதல் சொல்லுங்க நம்பி!



பனிக்கட்டியாய் இருந்து
பனித்துளியாய் மாறி
நீர்திவளையாக நான்
உபயம் - உலக உஷ்ணம்

உலக உஷ்ணம், உள்ள உஷ்ணம் ஒப்பிட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் அழகாய் இருந்திருக்குமே நாரதரே!


கண்ணாடியில் முகம்
பார்த்து
அழுத்துவிட்டது..!!

உன் வைர நகை
மினுமினுப்பில்
முகம் பார்க்கட்டுமா
இலையே...!!

முகம் பார்க்கவா? அதுவும் வைரத்திலா? கவிதை வெகு அழகு. படத்தின் உணர்வுகளுக்கு பொருந்தா விட்டால் என்ன?
(உங்களைக் கட்டிக்கப் போறவர்தான் பாவம், வைரத்தில முகம் பார்க்கிற கண்ணாடியா? யம்மாடி!)



கருவளை திரண்டு கண்மலர் வாட
விருந்தினை படைக்கும் விடலையும் போக
கார்முகில் நனைத்த இலையாய்
மார்களில் வியர்வை விரவ
தோள்களை தழுவ தோழி தலைவன் இலையே!

பி.கு:- சங்கப்பாடல் வடிவில் வடித்திருக்கிறேன்

விருந்தினைப் படைக்கும் விடலை – அது யார்? இரவாட்சி செய்த சந்திரனா? தலைவனின்றி விருந்து ருசித்ததா? சங்க அகப் பாடல், இதில் காதலி காதலனுக்காக காத்திருத்தல் என்பது முல்லைத்திணை அல்லவா? தலைவன் இலையே என்பது இருதிணையாய் சிலேடிக்கிறது. லதா அம்மாவின் திணைகளைக் கொண்டுப் பொருத்திப் பார்த்து அப்புறமாய் தனிப் பதிவிடுகிறேன் தம்பி!


உன்னில் என்ன சோகம்??
ஏனிந்த
அழுமூஞ்சி கோலம்?

வரதட்சனையெனும்
வெந்து போன
சொல்லால் எனை
வேக வைத்துப்போன
வரன் போல்..

உனையும்
வெட்டிப் போட்டு
வேண்டாமென
விட்டுப் போயினவோ
விரும்பிய கிளிகள்??

அல்லது

உன் பச்சைமேனி
குறைநிறமென்று
விட்டுப் போனதோ
வண்ணத்துப் பூச்சிகள்??

வாயிருந்தும் பூச்சியாக
பேசாமல் நீயிருக்க
கர்வமென தம்பட்டமிட்டு
கடந்து போனதோ
சிற்றெறும்புகள்??

என்மேல் விழும்
கல்லடி..
உன்னையும்
தாக்கியதில்
வியப்பேதுமில்லை..

நீ மட்டுமல்ல..
உன்னோடு நானும்..
இன்னும் பலரும்
அழுது கொண்டுதான்
இருக்கிறோம்..

காரணம்..

நாம்
பெண்கள்..!


நிராகரிக்கப் படும் பெண்கள். பெண் கறுப்பு, பெண்ணிற்குப் பல்தூக்கல், மூக்கு மொக்கை, பெண் வேலைக்குப் போகலை, பெண் உயரம் குறைவு இப்படிக் குத்திப் பேசும் நிராகரிப்புகள். கரிப்புகள் கருக்கிய உள்ளங்கள்.

காதலில் ஆண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள். கல்யாணத்தில் பெண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள். பெண்கள் கூட்டம் செடிகளுக்குப் பின். ஆண்கள் கூட்டம் தாடிகளுக்குப் பின்.

அழகான கவிதை பூமகளே! படத்திற்குப் பொருத்தமானக் கவிதை.

இலைகள் பெண்கள்தான். அன்னை அன்புகூட்டிச் சமைப்பதுபோல், செடிகளுக்கு உணவாம் ஸ்டார்ச் தயாரிப்பது இலைகள் தானே
பனித்துளிகள் இலையின் வியர்வையோ, கண்ணீரோ, இதழ் வடிக்கும் எச்சிலோ அல்ல.

பனித்துளிகள் சிறுவாடு. செடிகளுக்கு தேவையான நீரை உறிஞ்சித் தருவது தந்தையான வேர்களின் வேலையாம். ஆனால் மழை இல்லாக் காலங்களில் நிலம் மறந்த நீரை எங்கிருந்து தான் பெறும்?

இலைகல் காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் குளிர்வித்துத் துளித்துளியாய் நீராக்கி வேரில் வார்க்க, வேர் அதை உறிஞ்சி செடிகளுக்குப் பாய்ச்ச, அடுத்த மழைக்காலம் வரை இலை இப்பணியைச் செய்து கொண்டே இருக்கும்.


இலையே
பனிதுளிகள் மேல்
காதல் கொள்ளாதே
பனிதுளிகள் மறைந்துவிட்டால்
அழுவதற்க்கு கூட
நீரில்லாமல் வாடிபோவாய்
என்னைபோல.....

காதலில் ஏமாந்தவளின் அறிவுரை. ஒட்டாப் பனித்துளி மேல் இலைகளுக்குக் காதலிருப்பதாய்க் கருதி…
நல்ல கற்பனை.


பால்வடியும் முகத்தில்
பல கண்ணீர் துளிகளோ?
பாவையின் சோகத்தை
பச்சைக்காரி பார்த்தாளோ?
பாவப்பட்டா பசுமையாக்காரி
பனியினை கடன்வாங்கி
பாவைக்காக அழுதாளே!!!

அவளுக்காக அழுதச் செடி
அந்தக் கண்கள் காட்டும் சோகம் செடியையும் கலங்க வைக்கும்தான்..
பச்சை உடம்பையும், பச்சை இலையையும் இணைத்து ஒரு கவிதை போடுங்களேன் ஓவியா!


நீ சுவாசித்தனுப்பிய
காற்றின் வெப்பம்
தாளாமல்
வியர்த்துப் போகிறேன்
நான்!
சற்று விலகி
நில்லேன்
விடலைப் பெண்ணே!

அவளின் இதயவெப்பம் சுவாசத்தில் வெளிப்படுகிறதாம். செடி ஒரு தோழியால் கிண்டல் செய்து சோகமாற்றப் பார்க்கிறது. பல சமயங்களில் கிண்டல்கள் சோகத்தை ஆற்றும் மருந்தாக தோழிகளால் பயன்படுத்தப் படுவதுண்டு. சோகத்தை விரக்தியாக்கி, விரக்தியை உதறவிட்டு மீட்டு எடுத்துக் கொண்டு வரும் சக்தி அந்த சின்னச் சீண்டல்களுக்கு உண்டு.
உங்களுக்கு எப்படித் தெரிந்தது முகிலனண்ணா?

aren
10-07-2008, 02:48 AM
கண்ணீர்த்துளிகளையே
பார்த்து பழகிவிட்ட*
என் கண்களுக்கு
இன்று விருந்து
உன் நீர்த்துளிகள்!!!!

சிவா.ஜி
10-07-2008, 04:40 AM
இலையில் தண்ணீர் தெளித்தாகிவிட்டது...
பழைய சோற்றுக்கே பாக்கியப்பட்டவள்
பறிமாறப்படும் என்ற எதிர்பார்ப்பில்
ஏக்கத்துடன் சுடு சோற்றுக்காக காத்திருக்கிறாள்.

ஆதி
10-07-2008, 08:07 AM
நடு வகிடெடுத்த இலைகள்
பச்சை தரையில்
பனி சில்லுகள்

சிவந்த பிறைகளாய்
திறந்த இதழ்கள்..

இலை விளிம்பை மீறி வழிந்து
கன்ன கரை கடக்கும் துளிகள்

என எத்தனையோ இருந்தாலும்


ஓவிய மங்கையின்
முக வெறுமையிலேயே
நிரம்புகிறது மனம்..

ஆதி
10-07-2008, 08:20 AM
தவறவிட்ட மழையை
சொட்டுக்களாய்
சொல்லிக் கொண்டிருக்கிற
செடியின் நினைவுகளில்
நனைகிறாள் அவள்..

ஆதி
10-07-2008, 08:23 AM
தான் பிரசவித்திருக்க வேண்டிய
பூ அல்லோ இவள் ?
எனும் செடியின் ஆற்றாமை
இலைகளில் கண்ணீர் திவலைகள்

பாலகன்
10-07-2008, 08:36 AM
தான் பிரசவித்திருக்க வேண்டிய
பூ அல்லோ இவள் ?
எனும் செடியின் ஆற்றாமை
இலைகளில் கண்ணீர் திவலைகள்

நண்பரே ஆதி இரண்டு கவிதைகளும் அருமை..................

அவளையும் பூவாக வர்ணித்துவிட்டீர்கள்...... பாராட்டுக்கள்
அன்புடன்
பில்லா

ஆதி
10-07-2008, 08:42 AM
நண்பரே ஆதி இரண்டு கவிதைகளும் அருமை..................

அவளையும் பூவாக வர்ணித்துவிட்டீர்கள்...... பாராட்டுக்கள்
அன்புடன்
பில்லா

பாராட்டுக்கு நன்றிகள் பல நண்பரே..

பாலகன்
10-07-2008, 08:49 AM
நடு வகிடெடுத்த இலைகள்
பச்சை தரையில்
பனி சில்லுகள்

சிவந்த பிறைகளாய்
திறந்த இதழ்கள்.. இலையயும் பெண்ணையும் வர்ணிச்சாச்சி

இலை விளிம்பை மீறி வழிந்து
கன்ன கரை கடக்கும் துளிகள்
ஒரே நேரத்தில் இரு கன்னங்களையும் தொட்டுபார்த்தாச்சி

என எத்தனையோ இருந்தாலும்

ஓவிய மங்கையின்
முக வெறுமையிலேயே
நிறம்புகிறது மனம்..

அய்யோ இதை நான் பார்க்கலையே, இது ரொம்ப சூப்பருபா- வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா

கண்மணி
10-07-2008, 08:58 AM
கண்ணீர்த்துளிகளையே
பார்த்து பழகிவிட்ட*
என் கண்களுக்கு
இன்று விருந்து
உன் நீர்த்துளிகள்!!!!

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/DSC00492.jpg

விருந்து என்ற ஒரு வார்த்தை சாதத்தில் கல்லாய் இடறுகிறதே அண்ணா!

தாய்மடியில்
தலைசாய்த்தார் போல்
இலை மடியில்
தலைசாய்த்த பூமகள்

பனித்த கண்களுடன்
தலைகோதி ஆதராவாய்
தாய்ச்செடி!

இதுவே செடியை மகளாகக் கொண்டால்

பட்ட வலிகளெல்லாம்
உன் இலை நெஞ்சில்
பதிந்த
பனித்துளிப் பதக்கங்களில்
காணாமல் போகிறதே

என ஆறுதல் பெறலாம்..

கண்மணி
10-07-2008, 09:05 AM
இலையில் தண்ணீர் தெளித்தாகிவிட்டது...
பழைய சோற்றுக்கே பாக்கியப்பட்டவள்
பறிமாறப்படும் என்ற எதிர்பார்ப்பில்
ஏக்கத்துடன் சுடு சோற்றுக்காக காத்திருக்கிறாள்.

சுடு சொல் பட்டவள் போலத் தெரிகிறதே அண்ணா

சுடுசோறு வேண்டாம்
பட்ட சூடு போதுமம்மா

தெளித்த இலைகண்டு கல்யாண முறிந்து விட்ட கல்யாண விருந்து ஞாபகம் வரவில்லையா அண்ணா?

தலைவாழை இலையில்
நீர் தெளித்து
நடந்தது திருமண விருந்து
விழாவுடன் எல்லாம் முடிந்தது
எச்சில் இலையாய்
இன்னுமொரு இலையிலுமா
நீர்தெளித்து?

இன்னுமோர் திருமணமா
இவளாவது வாழ்வாளா?

மறத்தமிழன்
10-07-2008, 09:10 AM
அருமையா போகுதுங்கோ திரி. திரியை திரிக்கும் கண்மணியக்காவும் நல்லாத்தான் திரிக்கிறாங்க.
சின்ன சந்தேகம், படத்துக்கு பொருத்தமா கவித போடனும்னு கண்மணிக்கா கண்டிப்பா சொல்றாங்க. அவரின் விமர்சனங்களை படிக்கையில் எனக்கு அப்பிடித்தான் படுகுதுங்கோ. ஆனால், படத்திற்கு கவிதை என்பதிலும் பார்க்க படம் சொல்லும் கவிதை என்பது இன்னும் பல மாறுபட்ட பார்வைகளை எமக்கு தருமென்று நினைக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையிலும் அந்த படத்தை பார்த்ததும் என்ன சம்பவங்கள், அல்லது நினைவுகள் எழுகின்றதோ அதை கவிதையாக தருவதுதான் சிறந்த அனுபவங்களாக இருக்கும். என்ன சொல்றிங்க கண்மணிக்கா?

கண்மணி
10-07-2008, 09:15 AM
நடு வகிடெடுத்த இலைகள்
பச்சை தரையில்
பனி சில்லுகள்

சிவந்த பிறைகளாய்
திறந்த இதழ்கள்..

இலை விளிம்பை மீறி வழிந்து
கன்ன கரை கடக்கும் துளிகள்

என எத்தனையோ இருந்தாலும்


ஓவிய மங்கையின்
முக வெறுமையிலேயே
நிரம்புகிறது மனம்..

அழகான சூழல். அதனை ரசிக்க முடியாமல் வெறுமை படிந்த முகம் அருகில்.

இயற்கையே, நீ கொடுமைக்காரியா? ஒரு வெள்ளைமனம் அழுகையில் நீ சிரிக்கிறாயே?

வெற்றிடத்தில் இலயித்த மனம் வேற்றிடத்தை ரசிக்க முடியவில்லை..

வெறுமையான முகம் கண்டு நிரம்பியது மனம்... மனம் நிரம்பியது என்றால், திருப்தி, சந்தோஷம் என்று அர்த்தம் ஆகிவிடுகிறதே ஆதி. அவள் அழுவதுதான் உனக்குச் சந்தோஷமா.. உள்ளம் நிறைத்த சோகம் என்று புழக்கத்தில் உள்ளதால் அந்தச் சோக முகம் என் மனம் முழுதும் ஆட்கொண்டது என எழுத எண்ணி இருக்கிறாய்.

வெறுமையான முகம்
மனம் நிறைய
வெறுமையாய் (மனதை வெறுமையாக்கியது)

எனச் சொல்ல நினைத்தாயோ?

கண்மணி
10-07-2008, 09:19 AM
தவறவிட்ட மழையை
சொட்டுக்களாய்
சொல்லிக் கொண்டிருக்கிற
செடியின் நினைவுகளில்
நனைகிறாள் அவள்..

பொய்த்த பருவம்
செடிக்கும் அவளுக்கும்
ஆற்றாமையில் இருவரும்

அல்லது

பருவம்
அவளுக்குப் பொய்த்தது
அதற்காவது பொய்க்கவில்லையே
கனத்த மனதிலும்
தோழிக்கு வாழ்த்து!

தீண்டித் தூண்டுகிற கோணம் ஆதி..

ஆதி
10-07-2008, 09:46 AM
வெறுமையான முகம் கண்டு நிரம்பியது மனம்... மனம் நிரம்பியது என்றால், திருப்தி, சந்தோஷம் என்று அர்த்தம் ஆகிவிடுகிறதே ஆதி. அவள் அழுவதுதான் உனக்குச் சந்தோஷமா.. உள்ளம் நிறைத்த சோகம் என்று புழக்கத்தில் உள்ளதால் அந்தச் சோக முகம் என் மனம் முழுதும் ஆட்கொண்டது என எழுத எண்ணி இருக்கிறாய்.

வெறுமையான முகம்
மனம் நிறைய
வெறுமையாய் (மனதை வெறுமையாக்கியது)

எனச் சொல்ல நினைத்தாயோ?

ரசிப்பதற்கு பல இருந்தாலும் அவள் முகத்தில் விரிந்திருக்கும் வெறுமை எனக்குள்ளும் விரிந்து என்னை வெறுமையின் தவிப்பில் ஆழ்த்துகிறது என்று சொல்ல எண்ணினேன் அக்கா..

இன்னும் இரண்டு மூன்று சொற்கள் செலவளித்திருக்கலாம் போலும் சொல்ல வந்தது தெளிவாக இருந்திருக்கும்..

பூமகள்
10-07-2008, 09:56 AM
தாய்மடியில்
தலைசாய்த்தார் போல்
இலை மடியில்
தலைசாய்த்த பூமகள்

பனித்த கண்களுடன்
தலைகோதி ஆதராவாய்
தாய்ச்செடி!
அசத்தல் அக்கா..!:icon_rollout:
கலக்கிட்டீங்க...!!:icon_b: (என் பேரு இருக்கே..!!:rolleyes:)

பட்ட வலிகளெல்லாம்
உன் இலை நெஞ்சில்
பதிந்த
பனித்துளிப் பதக்கங்களில்
காணாமல் போகிறதே கொஞ்சம் மாற்றி...

என் வாழ்வின்
வலியெல்லாம்
உன் பட்டுமடி
பச்சை முந்தானையில்
பனித்துளிகளாக
பதித்துவிடுகிறேன்..!

சூரிய புன்னகையின்
கதகதப்பில்
காணாமல் போகும்
பனித்துளி போல்
என் கவலைத் திவளைகளும்
காணாமல் போகச்
செய்வாயா
செடியன்னையே??!!:rolleyes::icon_rollout:

aren
10-07-2008, 10:00 AM
அசத்தல் அக்கா..!:icon_rollout:
கலக்கிட்டீங்க...!!:icon_b: (என் பேரு இருக்கே..!!:rolleyes:)



உங்கள் பேர் இருந்தும் கவிதை நன்றாக இருக்கிறதே என்ற வியப்பா உங்களுக்கு

பூமகள்
10-07-2008, 10:10 AM
உங்கள் பேர் இருந்தும் கவிதை நன்றாக இருக்கிறதே என்ற வியப்பா உங்களுக்கு
நற நற நற....!! :sauer028::eek::eek:
பூவு பாப்பா பேரு வந்துருக்குன்னு சொல்லி குதிச்சிட்டு இருந்தா.. இப்படி வந்து ப்ளேட்டையே மாத்துறீங்களே ஆரென் அண்ணா...??!!:traurig001::traurig001:

அந்த கவிதையில் என் பேரு இருக்கறதால இன்னும் அழகா பொருந்துதுங்கோவ்...!! ;) :mini023: :rolleyes::p:cool: :D:D

aren
10-07-2008, 10:15 AM
நற நற நற....!! :sauer028::eek::eek:
பூவு பாப்பா பேரு வந்துருக்குன்னு சொல்லி குதிச்சிட்டு இருந்தா.. இப்படி வந்து ப்ளேட்டையே மாத்துறீங்களே ஆரென் அண்ணா...??!!:traurig001::traurig001:

அந்த கவிதையில் என் பேரு இருக்கறதால இன்னும் அழகா பொருந்துதுங்கோவ்...!! ;) :mini023: :rolleyes::p:cool: :D:D

அழகான கவிதையில் உங்கள் பேர் வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். உங்கள் பெயரால் கவிதை இன்னும் மெருகேறியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பூமகள்
10-07-2008, 10:18 AM
உங்கள் பெயரால் கவிதை இன்னும் மெருகேறியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சரி ஒப்புக் கொள்ளாதீங்க..!! :cool:
ஏனெனில் நானும் ஒப்புக் கொள்ளவில்லை...!! :icon_p: :lachen001::lachen001:

தீபா
10-07-2008, 10:21 AM
அட ஒரே மூச்சில எல்லாமே படிச்சேன் பின்னிறீங்க மக்கா.

மன்றத்து கவிஞர்கள் திறமை எல்லாம், இங்கே வந்து தெரிஞ்சிக்கலாம் போல இருக்கே.. ஜூப்பருங்க.

aren
10-07-2008, 10:24 AM
சரி ஒப்புக் கொள்ளாதீங்க..!! :cool:
ஏனெனில் நானும் ஒப்புக் கொள்ளவில்லை...!! :icon_p: :lachen001::lachen001:

அப்படிவாங்க!!!

ஆதி
10-07-2008, 12:40 PM
முன்னோர் பருவத்தில்
இதே போல
மழையில் நனைந்த
மரத்தடியில்
நின்றிருந்தோம் நாம்..

இலையில் இருந்து
இறங்கும் துளி போல்
என்
இமையில் இருந்து
இறங்கிய துளிகளை
நீ துடைத்தாய்

அப்போது
நம்மை பார்த்து மழை
இன்னும் சத்தமாய் அழுதது

ஒரு தோளை நானும்
மறு தோளை மழையும்
நனைக்க
நீ மௌனத்தை
உடுத்தி கொண்டு
மரத்தை வெறித்திருந்தாய்..

அந்த மௌனத்தில்
இந்த நம் பிரிவைத்தான்
குறிப்பறிவித்தாயோ ?

mukilan
10-07-2008, 12:46 PM
ஒரு தோளை நானும்
மறு தோளை மழையும்
நனைக்க
நீ மௌனத்தை
உடுத்தி கொண்டு
மரத்தை வெறித்திருந்தாய்..


எதை விட எதை எடுக்க என்றே தெரியவில்லை. இருந்தாலும் என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை.. அருமை ஆதி! சொல்ல வந்த விடயத்தை எவ்வளவு அழகாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கையாண்டு சொல்லி இருக்கிறீர்கள். :icon_b:

கண்மணி
10-07-2008, 12:51 PM
முன்னோர் பருவத்தில்
இதே போல
மழையில் நனைந்த
மரத்தடியில்
நின்றிருந்தோம் நாம்..

இலையில் இருந்து
இறங்கும் துளி போல்
என்
இமையில் இருந்து
இறங்கிய துளிகளை
நீ துடைத்தாய்

அப்போது
நம்மை பார்த்து மழை
இன்னும் சத்தமாய் அழுதது

ஒரு தோளை நானும்
மறு தோளை மழையும்
நனைக்க
நீ மௌனத்தை
உடுத்தி கொண்டு
மரத்தை வெறித்திருந்தாய்..

அந்த மௌனத்தில்
இந்த நம் பிரிவைத்தான்
குறிப்பறிவித்தாயோ ?

ஆதி, நீரோட்டமாய் வந்த கவிதையில் கடைசி மூன்று வரிகளைப் படத்துடன் பொருத்துவதில் சற்று இடிக்கிறதே..

விளக்க இயலுமா?

ஆதி
10-07-2008, 01:26 PM
ஆதி, நீரோட்டமாய் வந்த கவிதையில் கடைசி மூன்று வரிகளைப் படத்துடன் பொருத்துவதில் சற்று இடிக்கிறதே..

விளக்க இயலுமா?

அக்கா, அவனுக்கு வேறு பெண் பார்க்கிறார்கள் என்றறிந்து அவள் அழுகிறாள் பெற்றோருக்கும் காதலுக்கும் நடுவில் சிக்கி கொண்டவன் செய்தவறியாது அமைதியாய் நிற்கிறான்.. இறுதியில் பெற்றோர் பேச்சை மீற முடியாமல் வேறு பெண்ணை மணந்துவிடுகிறான்..

இவையாவையும் இன்றைய மழை நாளில் அசை போடுகிறாள்..

கண்மணி
10-07-2008, 01:59 PM
அக்கா, அவனுக்கு வேறு பெண் பார்க்கிறார்கள் என்றறிந்து அவள் அழுகிறாள் பெற்றோருக்கும் காதலுக்கும் நடுவில் சிக்கி கொண்டவன் செய்தவறியாது அமைதியாய் நிற்கிறான்.. இறுதியில் பெற்றோர் பேச்சை மீற முடியாமல் வேறு பெண்ணை மணந்துவிடுகிறான்..

இவையாவையும் இன்றைய மழை நாளில் அசை போடுகிறாள்..

அந்தப் படமில்லாமல் இந்தக் கவிதை புரிகிறது. படத்துடன் இணைக்கத்தான் ஆதி பலமான பிணைப்பு தேவைப்படுகிறது. இதே போல் ஒரு மழை நாள் மட்டுமே ஒரு சின்ன நூலாய் இருக்கிறதல்லவா?

மழையும் நிறுவிட்டது
என்னுடைய கண்ணீரும் வற்றிவிட்டது
காதல் காய்ந்து போன
உன் தோள்களில்
ஒட்டாமல் கிடந்தத் கண்ணீர்த் துளிகள் போல்
இந்தத் துளிகளும் தான் ஒட்டாமல் நிற்கின்றன
முகிலே முகிலே
நானொருத்தி போதும்
அழுவதற்கு

என இன்றைய நிகழ்வை இழுத்திருக்கலாமே ஆதி.. அதைச் சொன்னேன்,,

அடுத்தப் படம் போடலாமே!!! இம்முறை நான் தரப் போவதில்லை.

கண்மணி
10-07-2008, 02:34 PM
அருமையா போகுதுங்கோ திரி. திரியை திரிக்கும் கண்மணியக்காவும் நல்லாத்தான் திரிக்கிறாங்க.
சின்ன சந்தேகம், படத்துக்கு பொருத்தமா கவித போடனும்னு கண்மணிக்கா கண்டிப்பா சொல்றாங்க. அவரின் விமர்சனங்களை படிக்கையில் எனக்கு அப்பிடித்தான் படுகுதுங்கோ. ஆனால், படத்திற்கு கவிதை என்பதிலும் பார்க்க படம் சொல்லும் கவிதை என்பது இன்னும் பல மாறுபட்ட பார்வைகளை எமக்கு தருமென்று நினைக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையிலும் அந்த படத்தை பார்த்ததும் என்ன சம்பவங்கள், அல்லது நினைவுகள் எழுகின்றதோ அதை கவிதையாக தருவதுதான் சிறந்த அனுபவங்களாக இருக்கும். என்ன சொல்றிங்க கண்மணிக்கா?

நல்லா கவனிச்சீங்கன்னா படத்தைப் பார்த்து எழுதும் பொழுது கதை படத்துடன் பொருந்துதா என்றும் பார்க்கவேண்டியதா இருக்கு மறத்தமிழன். மற்றப் படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்றால் இந்தப் படத்தில் உணர்வு என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக எடுத்துக்கணும். தாயில்லாத ஏக்கம், காதல் தோல்வி, கல்யாண எதிர்பார்ப்பு, பசி, இப்படிப் பொருத்தமான ஒண்ணை எடுத்துக்கலாம். படத்துக்குச் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்றால் படம் போட வேண்டிய அவசியம் இல்லையே!!!

எல்லாக் கவிதைகளும் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால் படத்திற்கும் கருவிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தால் இது இன்னொரு கவிச்சமராய் மாறக் கூடிய வாய்ப்பு இருக்கு இல்லையா?

நான் எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா? முதல்ல கவிதையைப் படிக்கிறேன். அப்புறம் படத்தைப் பார்க்கிறேன். அந்தப் படம் அந்தக் கவிதைக்கு ஏற்றதாய் இருக்குதான்னு பார்க்கிறேன். நெருடலா இருந்தா அதைக் காட்டுகிறேன்.. அழகா இருந்தா பாராட்டுகிறேன்,

என்னோட அவ்தாரைப் பற்றியே ஒரு திரி இருக்கும். கத்தாழைக் கண்ணு சொல்வதென்ன அப்படின்னு. இந்த இரண்டுக் கண்களில் என்ன உணர்ச்சி இருக்கு என்று.. பல கோணங்களில் பல உணர்ச்சிகள் தெரியும். அப்போ பல் உணர்வுகளையும் காட்டி எழுதலாம்..


இது என்னுடைய ஆலோசனை. இதைச் செயலாக்கலாமான்னுச் சொல்லுங்க..


இந்தத் திரியில் படத்தினால் தூண்டப்பட்டக் கவிதைகளை பதிக்க இன்னொரு திரி ஆரம்பிக்கலாம். அங்கேயும் இதே படங்களை இதே நேரங்களில் போடலாம்.. இரண்டு திரிகளுக்கும் படத்தின் மூலமா சுட்டியையும் இணைத்து விட்டால் எங்கு பதிக்கணுமோ அங்கு மக்கள் பதிக்கட்டும். அங்கு கவிதையை மட்டுமே பார்க்கலாம். படம் ஒரு பக்கம் இருக்கட்டும்.


ஆனால் விமர்சனம் பல பக்கத்திலிருந்து வரணும். இந்தத் திரியை நான் தலைமை தாங்கி நடத்தலை அண்ணா.. எனக்கு கவிதைகள் பிடிச்சிருக்கு,, விமர்சனம் பண்ணி, கொஞ்சம் என் ஆலோசனைகளையும் சொல்லி ஊக்குவிச்சுகிட்டு இருக்கேன்.

உங்க ஆலோசனை நல்லா இருக்கு.. அதை இப்படிச் செய்யலாம்னு எனக்குத் தோணுது.. இன்னும் வேற வழி இருந்தாலும் சொல்லுங்க..:icon_b:

mukilan
10-07-2008, 02:45 PM
அடுத்தப் படம் போடலாமே!!! இம்முறை நான் தரப் போவதில்லை.

செயற்கையான படங்களையும் கொடுக்கலாமா?

கண்மணி
10-07-2008, 02:46 PM
கொடுங்கள் முகிலன். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Narathar
10-07-2008, 02:53 PM
செயற்கையான படங்களையும் கொடுக்கலாமா?


உங்கள் படம் கவியுணர்வை தூண்டுமென்றால் "ஆம்! நிச்சயமாக"

கண்மணி
10-07-2008, 02:53 PM
ஆதி அந்த மௌனம்
பூமகள் செடியன்னையே
ஆதி பருவம் தவறியதால்
ஆதி வெறுமையில் நிரம்பும் மனம்
சிவா.ஜி சுடுசோறு
aren விருந்து
mukilan விலகி நில்லேன்
ஓவியா பச்சையம்மா
நம்பிகோபாலன் வாடிப்போகாதே
பூமகள் நாம் பெண்கள்
ஆதி தலைவனிலையே!
பூமகள் முகம் பார்க்கவா!
Narathar உலக வெட்பம்
நம்பிகோபாலன் தாங்குமா இதயம்
பில்லா பாடல்கள்
தீபன் இன்னும் எவ்வளவு நேரம்
சிவா.ஜி ஒருவருக்கொருவர் ஆறுதல்
மதி டென்சன்
மதி உன்சோகம்
mukilan எதையெடுக்க
பில்லா ஒட்டுறவில்லை

இந்தச் சுற்றுக்கான பணமுடிப்பு அவங்கவங்க கணக்கில் சேர்த்தாகி விட்டது.

இன்னும் நிறைய பேர் எழுதணுமே! என்ன செய்யலாம்?

ஓவியா
10-07-2008, 02:59 PM
கேள்வி,

ஓருவர் ஒருகவிதை மட்டுமா இல்லை எத்தனை வேண்டுமென்றாலும் கொடுக்கலாமா??


கண்மணியக்கா நீங்க ஒருவர் 5 கவிதை எழுதினால் அனைத்து கவிதைக்கும் பரிசு வளங்குவீர்களா???

நன்றி

mukilan
10-07-2008, 03:02 PM
உங்கள் படம் கவியுணர்வை தூண்டுமென்றால் "ஆம்! நிச்சயமாக"

கவியுணர்வைத்தூண்ட வேண்டுமா?:eek::eek: அப்படியென்றால் சற்று தாமதிக்கிறேன்.:icon_rollout::icon_rollout:

கண்மணி
10-07-2008, 03:05 PM
கேள்வி,

ஓருவர் ஒருகவிதை மட்டுமா இல்லை எத்தனை வேண்டுமென்றாலும் கொடுக்கலாமா??


கண்மணியக்கா நீங்க ஒருவர் 5 கவிதை எழுதினால் அனைத்து கவிதைக்கும் பரிசு வளங்குவீர்களா???

நன்றி


இதுப் போட்டி இல்லை ஓவியாக்கா. நான் கொடுப்பதுப் பரிசும் அல்ல. ஏறத்தாழ எல்லாக் கவிதைக்குமேச் சிறு தொகை உண்டு.. கவிதைமாதிரியே இல்லை என்பவை மட்டுமே விடுபடலாம்...

என் அக்கா எத்தனை கவிதை குவித்தாள் என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது, அவை ஒரு கோடி இருக்கும் போ கொண்டுபோய் ........
மக்களுக்குக் காட்டு எனச் சொல்லி நான் மகிழ வேண்டும்.

:D:D:D:D:D:D

கோடிக்கோடியாய் கவிதைகளைக் கொண்டுவந்துக் குவியுங்கள்

ஓவியா
10-07-2008, 03:08 PM
நன்றி கண்மணியக்கா


இதோ அடுத்தப்படம்.

http://www.bbc.co.uk/london/content/images/2007/01/26/painting_300x420.jpg

ஆதி
10-07-2008, 03:18 PM
அந்தப் படமில்லாமல் இந்தக் கவிதை புரிகிறது. படத்துடன் இணைக்கத்தான் ஆதி பலமான பிணைப்பு தேவைப்படுகிறது. இதே போல் ஒரு மழை நாள் மட்டுமே ஒரு சின்ன நூலாய் இருக்கிறதல்லவா?

மழையும் நிறுவிட்டது
என்னுடைய கண்ணீரும் வற்றிவிட்டது
காதல் காய்ந்து போன
உன் தோள்களில்
ஒட்டாமல் கிடந்தத் கண்ணீர்த் துளிகள் போல்
இந்தத் துளிகளும் தான் ஒட்டாமல் நிற்கின்றன
முகிலே முகிலே
நானொருத்தி போதும்
அழுவதற்கு

என இன்றைய நிகழ்வை இழுத்திருக்கலாமே ஆதி.. அதைச் சொன்னேன்,,



உங்களுக்கு புரியவில்லை என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேனே அக்கா..

நீங்கள் கேட்டது எனக்கு புரிந்தது அக்கா.. நீங்கள் சொல்வது போல் இன்றைய மழைத்துளியில் அன்றைய அவன் தோள் வெப்பத்தை தேடுவது போல் முடிக்கலாம் என்றுதான் எண்ணினேன்.. நிரந்தரப் பிரிவை வைத்து கவிதையை முடித்தால் கவிதை தாக்கம் இன்னும் கனமாகும் என்று தோன்ற முடிவை மாற்றிவிட்டேன்..

ஆதி
10-07-2008, 05:48 PM
http://www.bbc.co.uk/london/content/images/2007/01/26/painting_300x420.jpg


நிறங்களால்
நிர்மாணிக்கப் பட்டவன் நீ

உன் வண்ணங்கள்
வானத்துக்கு மகுடமாகும்
வானவில் போன்றது

உன் ஒவ்வொரு
உணர்ச்சிக்கும்
ஒவ்வொரு நிறமுண்டு
ஒவ்வொரு ஒளியுண்டு

அவற்றை
அந்தியிலும்
இருட்டிலும் இரைத்துவிடாதே..

ஞானத்தின் சிறப்பு மறந்து
நாணத்தின் சிவப்பில் ஆழ்பவனே
கட உள் நீ
கடவுள்..

கண்மணி
11-07-2008, 02:36 AM
கவிஞனாகிப் பார் தோழா!

கவிஞனாகிப் பார்
உன்னுள்
கதிர்கள் முளைக்கும்
புவியும் ஒளிரும் பார்
அதனால்
புலன்கள் விழிக்கும்

மூளையால் பார்
கண்ணால் பார்
இதயத்தால் பார்
இன்னும்
அத்தனைப் புலன்களாலும் பார்

உச்சியில் கருக்கொண்டதை
உடலின்
அத்தனைச் செல்களுக்கும்
நரம்புகளில் அனுப்பி
அனுபவம் பெறு

வர்மப்புள்ளிகள்
ஞானேந்திரியங்கள்
கர்மேந்திரியங்கள்
உன்னுள் இருக்கும்
அத்தனைப் பொறிகளும்
ஒளிபெற்றிட

சின்னக் கலத்தின் நுனியில்
சிந்தனைகள் பாயட்டும்

எங்கு தொடங்கும்
எங்கு பரவும்
உணர்வு
எங்கு குவிந்து
எங்கு எரியும்

வேடிக்கை மனிதர்கள்
வண்ணமிழக்க
நரம்புகளின் சுருதியில்
கரங்கள்
வண்ணமிழைக்கும்

மொட்டு மலரும்
சிற்றோசையிலும்
சில்லெனப் பரவும் வாச வீச்சுக்ளிலும்
பட்டின் மெனமையிலும்
வண்ண வெடிப்புகளிலும்
உன்னுள் விழும் ஒருபொறி

உனக்குள் பரவி
உணர்வுகளை ஒளியேற்றி
ஒளிச்சிதறல்களை
உன்னுள் கருவாகி
ஒளிரும் சிந்தனையில்
ஒளிரும் மானுடம்
உன்னுள்
கவிபிறக்கின்ற வினாடி!

கண்மணி
11-07-2008, 03:29 AM
நிறங்களால்
நிர்மாணிக்கப் பட்டவன் நீ

உன் வண்ணங்கள்
வானத்துக்கு மகுடமாகும்
வானவில் போன்றது

உன் ஒவ்வொரு
உணர்ச்சிக்கும்
ஒவ்வொரு நிறமுண்டு
ஒவ்வொரு ஒளியுண்டு

அவற்றை
அந்தியிலும்
இருட்டிலும் இரைத்துவிடாதே..

ஞானத்தின் சிறப்பு மறந்து
நாணத்தின் சிவப்பில் ஆழ்பவனே
கட உள் நீ
கடவுள்..

உணர்வுகளுக்கு ஒளியேற்றி
உன்னுள்
சிந்தனைக் கடலில் மூழ்கு
நீ கடவுள்

சிந்தனை அழகு ஆதி!

மறத்தமிழன்
11-07-2008, 04:05 AM
நல்லா கவனிச்சீங்கன்னா படத்தைப் பார்த்து எழுதும் பொழுது கதை படத்துடன் பொருந்துதா என்றும் பார்க்கவேண்டியதா இருக்கு மறத்தமிழன். மற்றப் படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்றால் இந்தப் படத்தில் உணர்வு என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக எடுத்துக்கணும். தாயில்லாத ஏக்கம், காதல் தோல்வி, கல்யாண எதிர்பார்ப்பு, பசி, இப்படிப் பொருத்தமான ஒண்ணை எடுத்துக்கலாம். படத்துக்குச் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்றால் படம் போட வேண்டிய அவசியம் இல்லையே!!!

எல்லாக் கவிதைகளும் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால் படத்திற்கும் கருவிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தால் இது இன்னொரு கவிச்சமராய் மாறக் கூடிய வாய்ப்பு இருக்கு இல்லையா?

நான் எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா? முதல்ல கவிதையைப் படிக்கிறேன். அப்புறம் படத்தைப் பார்க்கிறேன். அந்தப் படம் அந்தக் கவிதைக்கு ஏற்றதாய் இருக்குதான்னு பார்க்கிறேன். நெருடலா இருந்தா அதைக் காட்டுகிறேன்.. அழகா இருந்தா பாராட்டுகிறேன்,

என்னோட அவ்தாரைப் பற்றியே ஒரு திரி இருக்கும். கத்தாழைக் கண்ணு சொல்வதென்ன அப்படின்னு. இந்த இரண்டுக் கண்களில் என்ன உணர்ச்சி இருக்கு என்று.. பல கோணங்களில் பல உணர்ச்சிகள் தெரியும். அப்போ பல் உணர்வுகளையும் காட்டி எழுதலாம்..


இது என்னுடைய ஆலோசனை. இதைச் செயலாக்கலாமான்னுச் சொல்லுங்க..


இந்தத் திரியில் படத்தினால் தூண்டப்பட்டக் கவிதைகளை பதிக்க இன்னொரு திரி ஆரம்பிக்கலாம். அங்கேயும் இதே படங்களை இதே நேரங்களில் போடலாம்.. இரண்டு திரிகளுக்கும் படத்தின் மூலமா சுட்டியையும் இணைத்து விட்டால் எங்கு பதிக்கணுமோ அங்கு மக்கள் பதிக்கட்டும். அங்கு கவிதையை மட்டுமே பார்க்கலாம். படம் ஒரு பக்கம் இருக்கட்டும்.


ஆனால் விமர்சனம் பல பக்கத்திலிருந்து வரணும். இந்தத் திரியை நான் தலைமை தாங்கி நடத்தலை அண்ணா.. எனக்கு கவிதைகள் பிடிச்சிருக்கு,, விமர்சனம் பண்ணி, கொஞ்சம் என் ஆலோசனைகளையும் சொல்லி ஊக்குவிச்சுகிட்டு இருக்கேன்.

உங்க ஆலோசனை நல்லா இருக்கு.. அதை இப்படிச் செய்யலாம்னு எனக்குத் தோணுது.. இன்னும் வேற வழி இருந்தாலும் சொல்லுங்க..:icon_b:
நன்றிக்கா. நான் எனக்குப்பட்டத சொன்னன். உங்க பதிலும் நியாயமாத்தான் கிடக்கு. பார்க்கலாம், மன்ற நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு.



கண்மணியக்கா நீங்க ஒருவர் 5 கவிதை எழுதினால் அனைத்து கவிதைக்கும் பரிசு வளங்குவீர்களா???

நன்றி


இதுப் போட்டி இல்லை ஓவியாக்கா


நன்றி கண்மணியக்கா



ரெண்டுபேருமே விட்டுக்குடுக்கிறதா இல்லயா:aetsch013::aetsch013::aetsch013:

Narathar
11-07-2008, 04:31 AM
கடவுளாகிப்போனாய்
கலைஞனே - நீயும்
படைப்பாளியானபோது

கண்மணி
11-07-2008, 04:32 AM
இந்தப் படத்திலிருப்பவன்
ஒரு ஓவியனாக இருக்கலாம்
ஒரு ஞானகுருவாய் இருக்கலாம்
உலகைப் படைக்கும் இறைவனாக இருக்கலாம்
ஒரு புத்துலக பிரம்மன் (கவிஞன் 3000)
இப்படி எத்தனையோ வடிவங்கள் கொடுக்கலாம் நண்பர்களே!!

வாருங்கள்

Narathar
11-07-2008, 04:36 AM
நன்றிக்கா.

ரெண்டுபேருமே விட்டுக்குடுக்கிறதா இல்லயா:aetsch013::aetsch013::aetsch013:


நாரயணா!!!! :lachen001: :lachen001:

aren
11-07-2008, 04:55 AM
இந்தப் படத்திலிருப்பவன்
ஓவியனாக இருக்கலாம்

வாருங்கள்

நம்ம மன்றத்து பொறுப்பாளர் ஓவியன் அவர்களைச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

aren
11-07-2008, 04:57 AM
நானும் இந்தப் படம் என்னவாக இருக்கும் எப்படி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அதை புரிந்துகொண்டுதான் கண்மணி அவர்கள் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மக்களே வாருங்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். கவிதைகளை அள்ளிவிடுங்கள்.

கண்மணி
11-07-2008, 05:05 AM
நம்ம மன்றத்து பொறுப்பாளர் ஓவியன் அவர்களைச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.


சொல்லியும் இருக்கலாமே!!!


ஊமைக் குத்துக்கள் வாங்கி:lachen001::lachen001:
உடலெல்லாம் உக்கிரம் ஏறிய
உஷ்ண ஓவியனின்:lachen001::lachen001:
தூரிகை வேகத்தில்
காகிதங்கள் எரிகின்றன.:icon_b::icon_b:

aren
11-07-2008, 05:13 AM
சொல்லியும் இருக்கலாமே!!!


ஊமைக் குத்துக்கள் வாங்கி:lachen001::lachen001:
உடலெல்லாம் உக்கிரம் ஏறிய
உஷ்ண ஓவியனின்:lachen001::lachen001:
தூரிகை வேகத்தில்
காகிதங்கள் எரிகின்றன.:icon_b::icon_b:

வாவ்!!! அருமை.

கண்மணி
11-07-2008, 05:18 AM
சூரியன் தன்னைச்
சில்லுகளாய் உதிர்த்து
காகிதத்தில் பதிக்கின்றான்
கவிதையாக!

கண்மணி
11-07-2008, 05:40 AM
ஓவியனின் பதில் இப்படியும் இருக்கலாம்!!(இது ஓவியனுக்குப் பொருத்தமான அவதார் மற்றும் கையொப்பம் தான்)

என்னுள் வியாபித்த
பாரதியை நான்
ஏட்டில் வரைந்த பொழுது
என்னைப் படம் பிடித்தது
யார்?

கண்மணி
11-07-2008, 05:53 AM
இரூந்து போன
பழைய உலகங்கள்
இருண்டு போயின
சின்னப் பிரம்மனின் தூரிகையால்
புதிய
சூரிய மண்டலப் படைப்பு

பூமகள்
11-07-2008, 06:37 AM
வெளிச்சத்தின் நாயகன்..
வெள்ளைத் தாள்களில்..
வண்ணமிட்டு
மின்னச் செய்கிறான்..!!

ஓவியம்
உலகமாக
உருவெடுக்கிறது...!!

ஆதி
11-07-2008, 06:49 AM
ஒவ்வொருவரும்(ஒவ்வொரு முறையும்)
வந்து வந்து
எட்டிப்பார்த்து
ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்(திரும்புகிறேன்)
எழுதுவது இன்னதென்று
கட்புலனாகததால்..

தீபா
11-07-2008, 07:01 AM
ஒவ்வொருவரும்(ஒவ்வொரு முறையும்)
வந்து வந்து
எட்டிப்பார்த்து
ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்(திரும்புகிறேன்)
எழுதுவது இன்னதென்று
கட்புலனாகததால்..

ஹா ஹா... ஆதி... நீங்கள் படத்தைத்தானே சொல்கிறீர்கள்?

என்ன மக்களே! இப்படியாயிட்டுது.. எழுத வாருங்கள் ஏதாவது.

உருவம் அவனை ஆணென்று சொல்கிறது, செயல் அவனை ஓவியனாக்குகிறது. தான் எப்படி ஓவியம் வரைகிறோம் என்பதை கட்புலனாகாதவைகளுக்கு உருவமிட்டிருக்கிறான் இந்த ஓவியம் வரைந்தவன். கண்களின் ஒளிக்கீற்றுகள் மனக் கற்றைகளோடு பிணைந்து வரைகிறது, நரம்புகள் கம்பிகளைச்சுற்றிய மின்கயிறுகளாக ஒரு கணிணி வரைகலையாகவும் இருக்கிறது. பின்புலத்தில் அவனது எண்ணம் உதிக்கப்பட்டு முகங்கள் தெளிவாகத் தெரிகிறது.. இம்மின்புலமனிதன் வரைவது முன்னோர்களாக இருக்குமல்லவா? அவனது இடது கை ஏதாவது விசையைத் தொட்டிருக்கிறது, ஓவியத்திற்கான ஆரம்பப்புள்ளியாகக் கருதுங்கள்.

என்ன மக்களே! சரிதானே!??

meera
11-07-2008, 07:20 AM
புதிதாய் முயலுகிறாயோ
உன் கைகளால் வரைந்து
கதிர்களால் வண்ணமிட....

பூமகள்
11-07-2008, 07:54 AM
செயல் சிரத்தையில்
ஆன்மா உருவாக்கும்
உள்ளொளி..

விரல்களின் வழியே
தூவும் நிறமாலையில்..
மனம் புனைகிறது..
காவிய ஓவியம்..!!

கண்மணி
11-07-2008, 08:05 AM
என் ஆதாரப் புள்ளிகள்
உன் மின்சாரப் பார்வை பட்டு
விழித்துக் கொண்டன

என்னை ஒளிர வைத்த
உன் கண்களை
எழுத
சிந்தையையும்
சொற்களையும்
கண்களையும்
குவித்துப் பிரயாசிக்கிறேன்

உன்னை எழுத!

கண்மணி
11-07-2008, 08:16 AM
வெளிச்சத்தின் நாயகன்..
வெள்ளைத் தாள்களில்..
வண்ணமிட்டு
மின்னச் செய்கிறான்..!!

ஓவியம்
உலகமாக
உருவெடுக்கிறது...!!

புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லும் அண்ணனைச் சொல்லலையே நீங்க?:D:D:D

கண்மணி
11-07-2008, 08:19 AM
ஒவ்வொருவரும்(ஒவ்வொரு முறையும்)
வந்து வந்து
எட்டிப்பார்த்து
ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்(திரும்புகிறேன்)
எழுதுவது இன்னதென்று
கட்புலனாகததால்..

ஒரே கவிதையில் இரு கவிதைகள்
இரு கவிதையில் நான்கு பொருள்கள்

கலக்கறீங்க ஆதி!:icon_b:

கண்மணி
11-07-2008, 08:21 AM
http://www.bbc.co.uk/london/content/images/2007/01/26/painting_300x420.jpg


புதிதாய் முயலுகிறாயோ
உன் கைகளால் வரைந்து
கதிர்களால் வண்ணமிட....

நல்ல முயற்சி மீரா!

கண்மணி
11-07-2008, 08:28 AM
செயல் சிரத்தையில்
ஆன்மா உருவாக்கும்
உள்ளொளி..

விரல்களின் வழியே
தூவும் நிறமாலையில்..
மனம் புனைகிறது..
காவிய ஓவியம்..!!

காரிய சிரத்தை உன்னை ஒளியூட்டும்
காவியச் சிரத்தை உலகை ஒளியூட்டும்
சட்டியில் இருந்தது அகப்பையில்
அகப்பையில் இருந்தது பிறக்கையில்
படைப்புடன் சேர்த்து
ஒளிர்வது நீயும்தான்

நல்ல கவிதை பூவக்கா!

பூமகள்
11-07-2008, 08:43 AM
புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லும் அண்ணனைச் சொல்லலையே நீங்க?:D:D:D
அவரே தான்.. தாமரை அண்ணாவைத் தான் சொன்னேங்க கண்மணி அக்கா..!! :p:cool::icon_b:
எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க??!! :eek::eek: :icon_rollout:

அசத்துங்க..!!:icon_b::icon_b:

பூமகள்
11-07-2008, 08:44 AM
காரிய சிரத்தை உன்னை ஒளியூட்டும்
காவியச் சிரத்தை உலகை ஒளியூட்டும்

'நச்' கண்மணி அக்கா..!! :)

ஆதி
11-07-2008, 09:57 AM
விழிகளால் நிறமும்
இதயத்தால் வெளிச்சமும்
ஆன்மாவால் உயிரும்
கொடுத்து
நீ தீட்டும்
வண்ணவொளி கவிதைகள்
வருங்காலத்தின் தலையெழுதா ?
வரும் காலத்தின் தலை எழுத்தா ?

பூமகள்
11-07-2008, 10:04 AM
கண்மணியக்கா..
இங்கே கவிதை ஏன் இந்தப் படத்துக்கு அதிகம் வரலைன்னு புரிஞ்சிட்டது... :icon_ush::icon_rollout:
இன்னிக்கி வெள்ளிக்கிழமையாச்சே...:rolleyes: சவுதி.. துபாய் மக்களுக்கு.. விடுமுறை..
அதனால எல்லாரும் வீட்டில் குறட்டை விடுறாங்களோ??!! :icon_ush: :aetsch013: :D:D

பூமகள்
11-07-2008, 10:05 AM
நல்ல கவிதை பூவக்கா!
இதில் ஏதும் உள்கூத்தில்லையே..!! :icon_ush: :eek::eek:

aren
11-07-2008, 10:32 AM
இதில் ஏதும் உள்கூத்தில்லையே..!! :icon_ush: :eek::eek:

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். உங்களுக்கு ஏதோ தெரிகிறது என்று நினைக்கிறேன்.

aren
11-07-2008, 10:34 AM
புதிதாய் முயலுகிறாயோ
உன் கைகளால் வரைந்து
கதிர்களால் வண்ணமிட....

கலக்கல் மீரா. தொடருங்கள்.

ஆதி
11-07-2008, 11:01 AM
நிலவைவிட
வெளிச்சமானவளோ
உன் காதலி
ஓவியத்திலும் ஒளிர்கிறாளே !!

உன்னையே துளியாக்கி
உனக்குள் ஒளிந்திருப்பவள்
வெளிச்சமாகிற போது
நீ நிறமிக்கிற வண்ணங்கள்
விண்வில்லாய்
விழிகளையாக்குகின்றன..

வண்ண நரம்பு நார்களில்
எண்ண பூவின்
நினைவு கதம்பம் கட்டி
உன் சுவாசம்
அவள் வா(வ)சமாக்கினாயோ ?

உன்னவள் நினைப்பு
இதயத்தில் தண்டெழுப்பி
உச்சியில் தாமரையாகிறதோ ?

நிலவை நீ ஏந்துவதால்
வானவண்ணம் உன்னை
வட்டமிடுகிறதோ ?

ஏ! கலைஞனே
உன்னை பார்த்து நான்
உணர்ந்தேன் ஒன்று

காதலும் ஞானமும்
வரும் பொழுது
மனிதன் வெளிச்சமாகிறான்..

கண்மணி
11-07-2008, 11:53 AM
விழிகளால் நிறமும்
இதயத்தால் வெளிச்சமும்
ஆன்மாவால் உயிரும்
கொடுத்து
நீ தீட்டும்
வண்ணவொளி கவிதைகள்
வருங்காலத்தின் தலையெழுத்தா ?
வரும் காலத்தின் தலை எழுத்தா ?

நல்ல கேள்வி, கவிஞர்கள் பலமுறை வருங்காலத்தின் தலையெழுத்தை எழுதிச் சென்றதுண்டு. எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வரும் இந்தக்காலத்தில் (பின்ன என்ன ஆதி எதுக்கெடுத்தாலும் செல்ஃபோன் தானே, 10 வரி சொந்தமா எழுத முடியாதவங்க அதிகமாயிட்டே வர்ராங்களே) எழுத்துக்களை மீண்டும் உச்சியில் வைக்கணும் என்றால் அதற்கு ஒரு அவதார புருஷன் இப்படித் தீட்டித்தான் ஆகணும்..:icon_b:

கண்மணி
11-07-2008, 12:06 PM
நிலவைவிட
வெளிச்சமானவளோ
உன் காதலி
ஓவியத்திலும் ஒளிர்கிறாளே !!

உன்னையே துளியாக்கி
உனக்குள் ஒளிந்திருப்பவள்
வெளிச்சமாகிற போது
நீ நிறமிக்கிற வண்ணங்கள்
விண்வில்லாய்
விழிகளையாக்குகின்றன..

வண்ண நரம்பு நார்களில்
எண்ண பூவின்
நினைவு கதம்பம் கட்டி
உன் சுவாசம்
அவள் வா(வ)சமாக்கினாயோ ?

உன்னவள் நினைப்பு
இதயத்தில் தண்டெழுப்பி
உச்சியில் தாமரையாகிறதோ ?

நிலவை நீ ஏந்துவதால்
வானவண்ணம் உன்னை
வட்டமிடுகிறதோ ?

ஏ! கலைஞனே
உன்னை பார்த்து நான்
உணர்ந்தேன் ஒன்று

காதலும் ஞானமும்
வரும் பொழுது
மனிதன் வெளிச்சமாகிறான்..

நிலவு - கண்களுக்கு குளுமையானது. கண் கொண்டு காண முடிவது.
சூரியன் - காணக் கண்கள் கூசும் அளவு சக்தி நிறைந்த ஒளி,,


நிலவின் ஒளியில் நிறங்களைப் பிரித்தரிய முடியுமா? பொருளே ஒளிர்ந்தால் அழகாகப் பிரியும். நிலவின் ஒளியில் உள்ளதும் வெள்ளை வண்ணம் தான் ஆனால் அதில் இருக்கும் ஒளி அளவுகள் வண்ணங்களாக பிரியும் பொழுது இருண்டு விடுகின்றன..

இவள் நிலவை விட ஒளியானவள்.. சூரியனல்ல.. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் ஆதி..


காதலோ ஞானமோ காதலால் வந்த ஞானமோ ஞானத்தால் வந்தக் காதலோ எதுவோ ஒன்று அவனுக்குள்..

என்று கவிதைக்குள் ஆரம்பத்திலிருந்து இரு பொருள் வைத்திருந்தால் மெருகேறி இருக்கும் ஆதி. கடைசி வரிகளில் மட்டும் எட்டிப் பார்க்கும் ஞானம் அனாதையாய் நிற்கிறது.

அந்த ஞானத்தின்/காதலின் சிறுபுள்ளி வெளிச்சங்கள் உன் நரம்புகள் வழி ஓடும் பொழுது நிறப்பிரிகைகளில் வர்ண ஜாலங்கள்...

படத்தில் உள்ள அத்தனையும் கவிதைக்குள் கொண்டு வந்து அதன் பொருள் சொல்லி இருக்கிறீர்கள்.. அந்த இருண்ட சில முகங்கள் தவிர..

மிகவும் ரசித்தேன்..

---------------------------------------------------------
இதே படம் இருக்கட்டுமா? இல்லை புதுப்படம் போடலாமா இன்று?

ஆதி
11-07-2008, 12:59 PM
காதலோ ஞானமோ காதலால் வந்த ஞானமோ ஞானத்தால் வந்தக் காதலோ எதுவோ ஒன்று அவனுக்குள்..

என்று கவிதைக்குள் ஆரம்பத்திலிருந்து இரு பொருள் வைத்திருந்தால் மெருகேறி இருக்கும் ஆதி. கடைசி வரிகளில் மட்டும் எட்டிப் பார்க்கும் ஞானம் அனாதையாய் நிற்கிறது.

அந்த ஞானத்தின்/காதலின் சிறுபுள்ளி வெளிச்சங்கள் உன் நரம்புகள் வழி ஓடும் பொழுது நிறப்பிரிகைகளில் வர்ண ஜாலங்கள்...

படத்தில் உள்ள அத்தனையும் கவிதைக்குள் கொண்டு வந்து அதன் பொருள் சொல்லி இருக்கிறீர்கள்.. அந்த இருண்ட சில முகங்கள் தவிர..

மிகவும் ரசித்தேன்..

---------------------------------------------------------
இதே படம் இருக்கட்டுமா? இல்லை புதுப்படம் போடலாமா இன்று?

ஞானத்தின் கோட்டைவிட்டுவிட்டேன்.. கோட்டை விட்டுவிட்டேன்..

நீங்கள் சொன்னப்பிந்தான் தோன்றுகிறது.. ஞானம் துண்டாகி கிடப்பது..

இனி வரும் கவிதைகளில் இந்த தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் அக்கா..

--------------------------------------------------

படத்தை மாற்றலாம் அக்கா.. எதாவது இயற்கை சம்மந்தமான படம் போடலாமே.. நம்ம மக்கள் அதற்குதான் அதிக ஆதரவு தராங்கா.. பலரும் வந்து படைக்கிற திரியாக மாறும் வரை மனதை சுண்டியிழுக்கிற படங்களை போடலாமே அக்கா..

தாமரை
11-07-2008, 01:27 PM
அடுத்த படம் நாளைக் கொடுக்கலாமே! மத்தியக் கிழக்கு நண்பர்கள் கவிதைகளும் வரட்டுமே!

aren
11-07-2008, 01:34 PM
இரு பெருங்கடல்கள்
ஒன்றாக சங்கமிக்கும் வேளையில்
ஆதவன் மரியாதை நிமித்தம்
தன் கண்களை மூடிவிட்டானா?

aren
11-07-2008, 01:35 PM
அடுத்த படம் நாளைக் கொடுக்கலாமே! மத்தியக் கிழக்கு நண்பர்கள் கவிதைகளும் வரட்டுமே!

நான் அதற்குள் எழுதிவிட்டேனே

பாலகன்
11-07-2008, 04:00 PM
காத்திருக்கிறேன் படத்திற்காக

கண்மணி
11-07-2008, 04:09 PM
சரி அண்ணன் குடுத்த படம் இதோ!

http://i330.photobucket.com/albums/l426/kanmanai/Blind-Faith.jpg

பாலகன்
11-07-2008, 04:25 PM
சூரியருக்கே கண் கூசிற்றோ
எரிமலையின் தீப்பிழம்பை பார்த்து
அதனால் தான் கண்மூடிக்கொன்டதோ

பாலகன்
11-07-2008, 04:26 PM
ஆர்ப்பரிக்கும் கடல்
அனல் பறக்கும் நிலம்
அதனால் ஆடிப்போன சூரியன்

ஆதி
11-07-2008, 04:39 PM
ஒளியின் கையில்
இரவின் கழுத்து

ரோக (அறுந்த) விரலில்
ரத்தின (அவிழாத) மோதிரம்

சூரியனுக்கு விழுந்த சொட்டை

உண்மையின் பிந்தலை

நெருப்பு முட்டையின்
கருப்பு கரு
இறும்பு தகட்டின்
பழுத்த நுனி

இருட்டு கிணற்றின்
வெளிச்ச விளிம்பு

இந்த முடியை
யார்வைத்தார்
அந்த ஏசுவின் தலையில் ?

கடல் மகளை பார்த்து
கண்ணடித்து
அந்தப்புறத்துக்கு
அழைக்கிறானோ
சூரிய கயவன்.. ?

எந்த யசோதை
திறக்க சொன்னாளோ
தீ கண்ணன் வாயில்
தெரிகிற இருண்ட உலகம்

பலரது மனதின் அடிபாகம்..

வரிய உழவனுக்கு
வழங்கப்படும் மானியம் போன்று
ஒரத்திம் மட்டும்
ஒளி படிந்த
இருட்டு தட்டு..!

கண்மணி
11-07-2008, 04:51 PM
எரிமலையின் வேஷத்தில்
ஆதவனா?
வேஷப் பொருத்தம் கண்டு
கைதட்டி ஆர்ப்பரித்தன அலைகள்

என்னடா சப்தம் என
எட்டிப் பார்த்தன
சில மீன்கள்
மேலிருந்தும் கீழிருந்தும்

நம்பிகோபாலன்
11-07-2008, 04:56 PM
கருமேகத்தில்
வெட்க்கத்தில் மறைய
முயல்கிறாய் நீ
உன்னில்
காதலை பார்த்த
சந்தோஷத்தில்
ஆர்ப்பரிகிறேன் கடலாய் நான்....

கண்மணி
11-07-2008, 05:05 PM
சென்ற சுற்றிற்கான பண முடிப்பு இதோ!

ஆதி காதலும் ஞானமும்
ஆதி தலை எழுத்து!
பூமகள் காவிய ஓவியம்
meera கதிர்க்கலை
ஆதி கட்புலனாகாத படம்
பூமகள் புதிய உலகம்
Narathar கலைக் கடவுள்
ஆதி கடவுள் நீ

விகடன்
11-07-2008, 09:40 PM
அலையின் கொந்தளிப்பு
ஆக்ரோசமான கடலலை
ஆகாரத்தினையே விடமாக்கும் சூரியன்
மத்தியில் பூலோக வாழ்க்கை....


கண்மணியக்கா..
இங்கே கவிதை ஏன் இந்தப் படத்துக்கு அதிகம் வரலைன்னு புரிஞ்சிட்டது... :icon_ush::icon_rollout:
இன்னிக்கி வெள்ளிக்கிழமையாச்சே...:rolleyes: சவுதி.. துபாய் மக்களுக்கு.. விடுமுறை..
அதனால எல்லாரும் வீட்டில் குறட்டை விடுறாங்களோ??!! :icon_ush: :aetsch013: :D:D


உண்மைதான் பூமகள்,
இன்று மட்டுந்தான் எமக்கு விடுமுறை. மற்றய நாட்களில் சூரியோதயத்திற்கு முதல் விழித்து அஸ்த்தமனத்திற்கு பின்னர் வீடு திரும்பும் அந்த ஆறு நாட்களும் விடுபட்ட அரைகுறையான நித்திரையனைத்துமே இன்று செய்தால்த்தான் இனிவரும் அடுத்த ஆறு நாட்களும் வேலை செய்ய முடியும். பொதுவாக காலை மதிய உணவெல்லாம் மறந்தே நித்திரை செய்வோம். பிற்பகலில்த்தான் மதிய உணவையே நினைத்து பார்ப்போம். பல மாதத்திற்கு ஒருதடவை காலை உணவை சந்திப்போம் :D .
இது வழக்கம்.