PDA

View Full Version : இந்துவில் வந்த தலையங்கம் : காங்கிரசின் விபரீத விளையாட்டு



தங்கவேல்
02-07-2008, 01:14 PM
காங்கிரசின் விபரீத விளையாட்டு
-
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி எவ்வாறு நடந்து கொள்வது என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து அக்கட்சி தோல்வியைத் தழுவி வருகிறது. குறிப் பாக, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், குஜ ராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங் களில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விகளோடு, பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களிலும் சிக்கியுள்ள தால் எங்கு செல்கிறோம் என்பதே தெரி யாமல் அக்கட்சி உள்ளது.

ஏப்ரல்-மே 2009க்கு முன்பு நடந்தாக வேண்டிய தேர்தலை நோக்கிச் செல்லும் பாதை இருண்டு கிடப்பதால், இழப்ப தற்கு ஏதுமில்லை என்ற முடிவில் துணி கரச் செயல்களில் இறங்க காங்கிரஸ் முனைந்துள்ளது. இரட்டை இலக்கத்தை தொட்டிருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை யிலான அரசிடம் எந்த ஆலோசனையும் இல்லை. கடந்த வாரத்தில் பணவீக்கம் 11.42 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

அமர்நாத் கோவிலுக்கான நிலம் தொடர்பான பிரச்சனையை தவறாகக் கையாண்டதால் ஜம்மு-காஷ்மீரில் வெறுப்புணர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தேர்தல் நடைபெற வேண்டிய முக்கியமான கட்டத்தில் இந்த நடவடிக்கை அரசை நிலைகுலையச் செய்துள்ளது. மே 2004ல் தேசிய குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசை உருவாக்கிய கூட்டணிக் கட்சிகள் மற்றும் இணைந்து நின்றவர்கள் தற்போது சிதறிக்கொண்டிருக்கின்றன.

‘செய் அல்லது செத்து மடி’ போன்ற நிலைபாட்டை ஆளும் கட்சி எடுத்துள் ளது. மக்கள் பிரச்சனைகளுடன் தொடர் புடைய எந்தப் பிரச்சனையிலும் இதை எடுக்காமல் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் இத்தகைய நிலை பாட்டை எடுத்துள்ளது. தனது சிறுபான் மை அரசாங்கத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல் ஏற்பாடை குலைக்கும் பணியில், தேர்தலில் பலன ளிக்கக்கூடிய எந்தவித ஆதரவுத்தளத் தையும் கொண்டிராத மற்றும் மாநிலங் களவை உறுப்பினர் என்ற முறையில் பத வியில் அமர்ந்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் இறங்கியுள்ளார்.

பதவியைவிட்டு விலகி விடுவேன் என்று மிரட்டுவதன் மூலம் நவ.16, 2007 ல் இடதுசாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதிமொழியிலிருந்து தனது கட்சியைப் பின்வாங்கச் செய்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் குழு முடிவெடுத்த பிறகே 123 ஒப்பந்தத்தை அரசு நடைமுறைப் படுத்தும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டி ருந்தது. சர்வதேச அணுசக்தி முகமை யுடனான பேச்சுவார்த்தையின் முடிவு கள், வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா குறித்தான பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத் தை குழுவின் முன்பாக அதன் முடிவுக் காக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அது.

சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர்கள் கூட்டத்திற்குச் செல்வது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவிப்பதன் மூலம், இந்த நடை முறையில் குறுக்கு வழியில் செல்ல முயற் சிப்பதேயாகும். வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அறிவித்ததோடு, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தையும் நிறைவேற்றிய அரசாங்கம் தற்போது பூட்டிய கதவுகளுக்குள் முடிவுகளை எடுத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது நேர்வழியில் செல்வதைக் காட்டவில்லை.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் வளர்ச்சியை நோக் கிச் செல்வதற்கான மாற்று என்று கூறிக் கொண்ட கட்சி, தனது குறுகிய பார்வையால் எந்தவித அரசியல் நியாய முமற்ற சிக்கல் களில் சிக்கிக் கொண் டுள்ளது. தனது முன்னாள் எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்டு ஐக்கிய முற் போக்கு கூட்ட ணியை சில காலத்திற்கு காங்கிரஸ் காப்பாற்றலாம். ஆனால் அத்தகைய நிலை எடுப்பதற்கு கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும்


நன்றி : தீக்கதிர்