PDA

View Full Version : வாசி யோகம்



நாகரா
02-07-2008, 12:33 PM
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்
பூண நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்
திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளிரும்

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்
திருந்த உடம்பு ஒளியும்

தீபா
02-07-2008, 04:56 PM
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!

இளசு
02-07-2008, 06:59 PM
யோகம் = ஏகம் = ஒன்றே கவனம் = ஒரு புள்ளியில் குவி..

அது சுவாசமானாலும், செய்யும் பணியானாலும்
இப்படி ஏகக் கவனம் குவிமுனையாய்
அமைந்தவர்கள் பாக்கியவான்கள்.. வேறேன்ன சொல்ல?

பாராட்டுகள் நாகரா அவர்களே!

நாகரா
03-07-2008, 04:13 AM
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!

வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி

நன்றி தென்றலாரே!

தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்
என்றைக்கும் வாழலாம் நிசம்

முச்சந்தி வீதியில் போய்வரும் தென்றலை
இச்சித்து போதியில் வாழ்

மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

சுத்த வெளியில் மெய்யைக் கரைக்கும்
புத்த விளக்கம் வளி

நாசிக்குள் வழியும் தென்றலை நேசித்து
வாசிக்கும் வழியைப் பிடி

மடியும் மடத்தனம் மாய்க்கும் வாசியோகம்
முடியும் உன்னால் விளங்கு

தென்றல் தீண்டி எழுந்த நாகம்
மன்றில் ஆடும் படம்

விரயமாகும் கவனம் இதெந்த மடத்தனம்
சரயோகம் மேல்வை கவனம்

விழிநாசி செவிமுச் சந்திவீதி வழிவாசி
வழிந்தோட வாய்க்கும் மெய்

நிறுத்துவீண் பேச்சை கவனம் மூச்சில்
இறுத்திவாழ் திறக்குமுன் நெற்றி

எங்கெங்கோ ஓடும் கவனத்தை வாசியில்
தங்கென்றால் கேளாக் குரங்கு

வளிமேல் கவனம் நிறுத்தச் சொன்னால்
சுளிக்கும் முகத்தைக் குரங்கு

ஓடுமனக் குரங்கை வாசியால் கட்டக்
கூடுமுனக் கென்றான் குருபரன்

விளக்கு மாறாய் சுத்தஞ்செய் வாசியால்
விளங்கு வீரே உம்மெய்

தாவிச் செல்நீ மரணம் உந்தன்
ஆவிப் பாகை உண்டு

பாவிச் சடலத்தை மெய்யாய் மாற்றும்
ஆவி அமுதத்தைக் குடி

கூவிச் செல்வேன் வாசியின் பெருமைநான்
தாவிச் செல்வேன் மரணம்

வாசிதானே சிவாவென்னும் அன்பின் ஊற்று
வாசித்தால் வராதென்றுங் கூற்று

நாகரா
03-07-2008, 04:14 AM
உம் தெளிவான பின்னூட்ட விளக்கத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி இளசு

தீபா
03-07-2008, 01:14 PM
அய்யா! நாகரா!


தெளிவாக ஒரு கேள்விகேட்டால்
தெளிவாக குழப்பிவிடுகிறீர்கள்


வாசி வாசி என்று
வாசிக்க வைப்பதில்லை நீங்கள்
சற்று
யோசிக்கவும் வைப்பதில்லை.

யோகம், ஞானம், தியானம்,
இவையெல்லாவற்றையும் தாண்டி உலகம் இருக்கிறது.

ஒரு சுற்றுக்குள் சுற்றுதல் " நான் யார் " என்று தேடிக்கொண்டிருப்பவருக்கு அழகல்ல.

கருத்துக்களைக்
கனக்கச்சிதமாய்
கருவுக்குள் அடக்கி

கொடுங்களேன் உங்கள் பதிவுகள்.

இப்படி குழப்பிவிட்டால் யாரும் படிக்கமாட்டார்கள்
உங்கள் ஞானம் எங்களோடு பகிரவேண்டும்.
அல்லது இப்படி குழப்பத்தோடு கடிக்காதீர்கள்.

சரி சொல்வது சொல்லிவீட்டன். இதற்கான உங்கள் பதிலில்தான் இருக்கிறது நான் எதிர்பாப்பது.

விடுங்க. நான் கேட்டது?

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வளி - காற்று

காற்றின் மேல் கவனம் நிறுத்தி வெந்து சாகும் பழக்கத்தைக் கழித்துவிடு என்பது உங்கள் அர்த்தம்..

மூச்சுக்காற்று இல்லாமல் மனிதன் ஏது?
அதன் மீதுண்டான கவனம் இல்லாத நிலை...

நாம் விடும் மூச்சு குறைபாடானது...

மூச்சுவிடும் முறைகளை, அதன் மீதுண்டான கவனத்தை பல நவீன முனிவர்கள் சொல்லுகிறார்கள்.. அது அவர்களின் மடம்...

கவனம் இல்லாம கழி என்று சொல்வது எந்த மடம்?

நாகரா
03-07-2008, 02:10 PM
தென்றலாரே!

என்னையும் மீறிப் பொழியும்
சொல்லாடல்களே இவை

நான் எந்த மடத்தையுஞ் சேர்ந்தவனில்லை

மூச்சின் மேல் கவனம் வைத்தால், உயிர் நிலை கூடும் உண்மையை அனுபவித்ததால், "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற அடிப்படையில் பகிரப்பட்டவையே இக்குறட்பாக்கள்.

உண்மையில் எனக்கென்று என் மூலம் உரைக்கப்பட்ட ஞானமே இது. இதை நீவிர் ஏற்பதும் மறுப்பதும் உமக்கான உரிமை.

குழப்பமாய் உமக்குத் தெரிவது, எனக்குத் தெளிவாகவே தெரிகிறது. நம் பார்வையின் கோணங்கள் வேறுபட்டிருப்பதால் அவ்வாறு இருக்கலாம்.

யாரும் படிக்காவிட்டால் பரவாயில்லை, இப்பாடம் எனக்குத் தேவைப்படுகிறது, எனவே நான் படிக்கிறேன். அதைப் படிப்பது எனக்கான உரிமை. இப்பாடம் எனக்குத் தேவையில்லை என்று மறுப்பது உமக்கான உரிமை. இரண்டையும் நான் சமமாகவே மதிக்கிறேன்.

எந்த மடத்தையுஞ் சேர்ந்து இந்த வாசி யோகத்தைக் கற்றுக் கொள்ளத் தேவையில்லை.

உமது மெய்யுடம்பாலயமாம் மடத்தில் வாசி யோகப் பாடம் நடந்து கொண்டே இருக்கிறது, விருப்பம் இருந்தால் யாருங் கற்கலாம்,

எனக்குக் கற்க இருக்கும் பெருவிருப்பமே இக்குறட்பாக்களாய் வெளிப்பட்டிருக்கிறது, இன்னும் கூட வெளிப்படலாம்

கருத்துகளைக்
கனக்கச்சிதமாய்க்
கருவுக்குள் அடக்கிக்
கொடுப்பதே
என் முயற்சி

அது நனி மிகக் கடினம் என்றாலும் முயல்கிறேன்

சொற்களின் மீது ஒரு நேச போதை எப்போதுமே எனக்கு உண்டு

தென்றலென்னும் உமது இனிய பெயரின் மீதும்.

தென்றலை நான் வாசியாகவே காண்கிறேன், எனவே உம் கேள்வியாம் வாசியில் மூழ்கி நான் எடுத்த நல்முத்துகளே இக்குறுங்கவிகள்(உம் கேள்விக்குப் பின் மளமளவென வழிந்தவை)

உம்முள்ளேயே எல்லா விடைகளும் இருக்கின்றன, இன்னும் இன்னும் ஆழுங்கள், உமக்கு வெளியே எந்தக் கொம்பனும் உமக்கு ஞானத்தை வழங்க முடியாது. அவ்வளவே என்னால் சொல்ல முடிந்தது(உண்மையிலேயே மூளையின் மறை கழன்றவனால் வேறென்ன சொல்ல முடியும்)

தேடாதீர்

எப்போதும் உம்மருகிலேயே இருக்கும்

நான்(மூளையின் மறை முழுவதுமாய்க் கழன்ற மிகவும் அபாயகரமான பயங்கரவாதி)

தென்றலாரே! வீசுங்கள், தீண்டுங்கள், நம் அடிப்படை இயல்பாம் நேசத்தைக் கண நேரமும் மறக்காமல்.

நன்றி பல உமக்கே, வாசியின் பெருமையை இன்னும் ஆழ அறிய உதவியதற்கு உமது கேள்வியின் மூலம்

நிபந்தனைகள் ஏதுமின்றி உம்மை நேசிக்கும் எளியன்

உமதன்பன்

நாகரா
03-07-2008, 04:46 PM
தெளிவாக ஒரு கேள்வி கேட்டால்
தெளிவாக குழப்பிவிடுகிறீர்கள்

உணர்வே உலகம்
உணர்வு காரணம்
உலகு காரியம்
உணர்வில் குழப்பம் இருந்தால் உலகில் குழப்பம் இருக்கும்
உணர்வில் தெளிவு இருந்தால் உலகில் தெளிவு இருக்கும்
உணர்வே நீவிர்
உணர்வே உலகாதலால் அவ்வுலகும் நீவிர்
உமது உலகத்தின் குழப்பத்துக்கும் தெளிவுக்கும் நீவிரே பொறுப்பு
முழுமையாக
உமது உலகம் சொற்களால் கட்டப்பட்டாலும்



வாசி வாசி என்று
வாசிக்க வைப்பதில்லை நீங்கள்
சற்று
யோசிக்கவும் வைப்பதில்லை.

வாசியை வாசிக்க வேண்டியவரும்
வாசியைப் பற்றி யோசிக்க வேண்டியவரும்
நீவிரே!
வாசி பற்றி
வாய் கிழிய நான் பேசினாலும்
உமக்குப் பயன்
வாசியின் வாசிப்பில்
யோசிப்பில்
மட்டுமே!



யோகம், ஞானம், தியானம்,
இவையெல்லாவற்றையும் தாண்டி உலகம் இருக்கிறது.

இது உமது பார்வை.
எனது பார்வை
உணர்வே ஆதி
உலகம் ஆதியாம் உணர்வின் படைப்பு.
உலகைத் தாண்டி உணர்வு இருக்கிறது.
யோகம், ஞானம், தியானம் உலகைத் தாண்டிய உணர்வை அறியும் வழிமுறைகள்.



ஒரு சுற்றுக்குள் சுற்றுதல் " நான் யார் " என்று தேடிக்கொண்டிருப்பவருக்கு அழகல்ல.

நான் யார் கேள்வி எனக்கு அனர்த்தம்
என்னைப் பற்றி ஐயமில்லாமல் நானறிந்த
நனி மிக எளிய ஞானம் "நானே"
அதாவது "நான் நானே தான்"
எனக்குத் தெரிந்த இரண்டு நல்ல வார்த்தைகள்
1. நானே, 2. நான்
எனவே எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர்
நானே. நான். நாகரா
நீவிர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உமக்கு நான் சூட்டும் பெயர்
நானே. நான். தென்றல்



கருத்துக்களைக்
கனக்கச்சிதமாய்
கருவுக்குள் அடக்கி

கொடுங்களேன் உங்கள் பதிவுகள்.

அதுவே என் முயற்சி



இப்படி குழப்பிவிட்டால் யாரும் படிக்கமாட்டார்கள்
உங்கள் ஞானம் எங்களோடு பகிரவேண்டும்.
அல்லது இப்படி குழப்பத்தோடு கடிக்காதீர்கள்.

முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்.
குழம்புவதும்
தெளிவாய் இருப்பதும்
உம் கையில்.
அதாவது உம் உணர்வில்.



சரி சொல்வது சொல்லிவீட்டன். இதற்கான உங்கள் பதிலில்தான் இருக்கிறது நான் எதிர்பாப்பது.

நானும் சொல்வதைச் சொல்லி விட்டேன். உங்கள் எதிர்பார்ர்ப்பு உம் உணர்வைச் சார்ந்தது. எனது பதில் எனது உணர்வைச் சார்ந்தது.
எல்லா உலகும் உணர்வைக் குறித்தனவே



விடுங்க. நான் கேட்டது?

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி
வெந்துசாகும் பழக்கம் கழி

வளி - காற்று

காற்றின் மேல் கவனம் நிறுத்தி வெந்து சாகும் பழக்கத்தைக் கழித்துவிடு என்பது உங்கள் அர்த்தம்..

மூச்சுக்காற்று இல்லாமல் மனிதன் ஏது?
அதன் மீதுண்டான கவனம் இல்லாத நிலை...

நாம் விடும் மூச்சு குறைபாடானது...

மூச்சுவிடும் முறைகளை, அதன் மீதுண்டான கவனத்தை பல நவீன முனிவர்கள் சொல்லுகிறார்கள்.. அது அவர்களின் மடம்...

கவனம் இல்லாம கழி என்று சொல்வது எந்த மடம்?

மடங்களென்னும் மடத்தனத்தை மொத்தமாக விட்டு விட்டு உமக்குள் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வான வாசியாம் உயிர்ப்பின் மூச்சின் மீது கவனம் வைத்தால் பெருவாழ்வெனும் பெருநிலை வாய்க்கும். நான் எந்த மடத்தையும் சார்ந்தவனுமல்ல, எந்தவொரு புது மடத்தின் ஸ்தாபகனும் அல்ல. சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நான் சங்கம் என்ற ஏற்கனவே இருக்கும் எல்லாந் தழுவிய அமைப்பில் ஆன்ம நேய ஒருமையில் நான் இருக்கிறேன், எல்லோரும் அவ்வமைப்பில் இருப்பதை எந்தவொரு ஐயமுமின்றி அறிகிறேன், அவ்வளவே

தென்றலாரே! என் பதிலில் இதுவும் ஒரு விதம். உமது பார்வையின் கோணத்தை என்னால் தீர்மானிக்க முடியாது. எனது பார்வையின் கோணத்தை உம்மால் தீர்மானிக்க முடியாது. இரண்டுமே அவ்வவ்விடங்களில் நன்று, இரண்டையும் நான் மதிக்கிறேன்.
எனது படைப்புகளின் முதல் ரசிகன் நான், முதல் விமர்சகனும்
நான். முதல் ரசிகனே எல்லா ரசிகர்களுக்கும் முன்னோடி, முதல் விமர்சகனே எல்லா
விமர்சகர்களுக்கும் முன்னோடி. இதுவே இப்போதைக்கு என் பார்வை.
உமது பார்வைக்கு என் முதல் மரியாதை அது எதுவாயினும்
நன்றி பல உமக்கே, தென்றலாரே, என்னை எனக்குத் தெளிவு படுத்த
நீவிர் எனக்கு அளித்த நல்ல வாய்ப்புக்கு!

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
என்ற தொல்காப்பிய சூத்திரத்தை மறவாமல்
சொற்களைத் தாண்டி அவை சுட்டும் பொருளில்
கவனம் வைப்பீர், குழப்பம் தீரும், தெளிவு பிறக்கும்
இது நான் கையாளும் எளிய யோகம்
கையாண்டால் இய்யோகம் உமக்கும் உதவும் நிச்சயம்.
மீண்டும் நன்றி பல உமக்கே

உமதன்பன்

இளசு
03-07-2008, 04:52 PM
தென்றலுக்கு ஒரு கோரிக்கை..

கடிக்காதீர்கள், மடத்தனம் போன்ற சொற்களை பயன்படுத்துவது அவ்வளவு சரியாகப் படவில்லை எனக்கு..

உங்களுக்கும் சம்மதமெனில் அவற்றை நீக்குங்கள்..

மற்றபடி உங்கள் சிந்தனைக் குழப்பத்துக்கும் கேள்விகளுக்கும்
நாகரா அவர்களிடம் கேள்விகள் தாராளமாய்க் கேளுங்கள்..

புரிதலுக்கு நன்றி..

நாகரா
04-07-2008, 03:39 AM
உயிர்ப்பின் உணர்வை உனக்குத் தருகின்ற
உயர்வான வாசியைப் போற்று

வளிமொண் டுண்டால் நெற்றி வெளுக்கும்
ஒளியுண் டாகுமே அறி.

வாசி பற்றி கவனம் நிற்க
ஆசி யாய்விழும் அளி

அன்பே சிவமாம் வாசி யூற்றை
உண்டே உவந்தால் போதி

போதி வெளியின் வாசி நிழலில்
போத ஒளியைக் காண்

அளிதரும் வளியை அள்ளி உண்டு
ஒளிவரும் வழியைக் காண்

காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால்
கூற்றுன்னை அண்டா தொழியும்

காலி வெளியுள் நிரம்பிய வளியே
வாலை ஒளிக்கு மூலம்

தீபா
04-07-2008, 08:52 AM
நன்றி நாகரா அவர்கள்.

பதிவிலக்கம் 7 தெளிவாகவும் அழகாகவும்
இருக்க எழுதியமை
என் கேள்விக்கான விளக்கம்.
தெளிவான பதில்.

வாசி'க்கான விளக்கம்.. இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை

பின்,

உணர்வே உலகம்.
உணர்வைத் திரித்து
மரத்துப் போய் வாழவும் விருப்பமில்லை.

உணர்வைப் புரிந்திருக்கிறோம்.
குழப்பத்தால் அல்ல.
உணர்வில் தெளிவில்லையெனில்
காரியமுக்தி கூடுவதில்லை.
எமது உலகம் கட்டப்படவில்லை
அது எழுப்பப்பட்டது.

இருவருக்குண்டான கோணம்.
அது வேறு.
இருவருக்கு மட்டுமா?
இல்லை
இவ்விருண்ட உலகத்தினர் அனைவருக்குமே

யாம் விரும்பியது என்ன?

உமது ஞானம், உமது தெளிவு,
எமக்களித்தால்
எமக்கும் ஞானம் எமக்கும் தெளிவாகும்.

உமது நோக்கம்,
அடுத்தவரைச் சேருதல்.

ஆனால் பாதை?

உமது கருத்து,
அடர்ந்த காட்டினுள் நுழைவதுபோல...

அதற்கான விளக்கம்
அடர்ந்த மத்திய காட்டினுள் வழிதெரியாமை..

இது நான் சொல்ல வேண்டுவது.

மிகச்சரியான உமது புரிதலுக்கு நன்றி... ஏனெனில் புரிதலுண்டோரே எவ்வகை ஞானமும் அறியக்கண்டோர்.

நன்றி நாகரா அவர்கள்.

இது இளசு அவர்களுக்கு.

முதலில் மன்னிக்கவும்...

மடத்தனம் என்பது திரு.நாகரா அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது. அதில் தவறிருந்தால் அதை அவர் சுட்டவேண்டும்.. ஏனெனில் அது தவறாகப்படைக்கப்படவில்லை.
கடிக்காதீர்கள் என்பது எனது விளங்காமையின் வெளிப்பாடு.

மீண்டும் மன்னிக்கவும். இது முதலாம் மன்னிப்பைத் திரும்பப்பெறும் மன்னிப்பு..

புரிதலுடன்
தென்றல்

நாகரா
04-07-2008, 01:27 PM
நன்றி நாகரா அவர்கள்.
பதிவிலக்கம் 7 தெளிவாகவும் அழகாகவும்
இருக்க எழுதியமை
என் கேள்விக்கான விளக்கம்.
தெளிவான பதில்.

உம் புரிந்துணர்வுகளுக்கு நன்றி பல தென்றலாரே!
பட்டதை
ஒளிவு மறைவின்றிப்
பட்டென்று சொல்லும் நேர்மையில்
நீவீரும்
என்னைப் போன்றே இருக்கிறீர்.
நம் சமுகத்தில்
இந்த நேர்மை பலருக்குப்
பிடிக்காது.
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவதே
உலக வழக்கம்.
உமது இந்த நேர்மைக்கு
நான் தலை வணங்குகிறேன்.
அது எனக்கும் நான் செய்து கொள்ளும்
மரியாதை



வாசி'க்கான விளக்கம்.. இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை

அன்பெனுந்திருத் தென்றலை உள்ளிழுத்து வெளிவிட்டு
அன்புருவாய் நிற்பதே யோகம்

வாசியின் விளக்கம் சிவாவெனும் அன்பேநீ
வாசிக்க வாசிக்க விளங்கும்

இன்னும் இன்னும் உள்ளே ஆழ்ந்திருக்க
அன்பின் வன்மை விளங்கும்

அன்பா இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை
தென்றலின் இன்பமே அது

வாசிநீர் தென்றலாய்த் தீண்டுவீர் என்றுமும
தாசியால் உள்ளவன் நான்

தென்றலேஇரு தயவாய் இவ்வுலகில் என்றும்நீர்
வள்ளலேவரு வாருமைத் தழுவ

வெளிமடம் நாடிப் போகாதீர் உள்மடமாம்
ஒளிக்கடத் துள்ளே பராபரன்

காவி உடுத்து ஆவி வெளுக்காத
பாவி யவரோ சித்தர்

சித்தரே நீவிரென்று உண்மையே உரைத்தாலும்
பித்தனே நானென்பார் மாந்தர்

(மளமளவென விழுந்ததைப் பகிர்கிறேன், என் நோக்கம் இன்னும் இன்னும் உம்மைக் குழப்ப அல்ல, உண்மையிது நம்புவீர், தென்றலாரே!



பின்,

உணர்வே உலகம்.
உணர்வைத் திரித்து
மரத்துப் போய் வாழவும் விருப்பமில்லை.

உணர்வைப் புரிந்திருக்கிறோம்.
குழப்பத்தால் அல்ல.
உணர்வில் தெளிவில்லையெனில்
காரியமுக்தி கூடுவதில்லை.
எமது உலகம் கட்டப்படவில்லை
அது எழுப்பப்பட்டது.

உணர்வின் திரிதலால் தான்
உலகம் திரிகிறது
உலகைத் திருத்த
உணர்வு திருந்த வேண்டும்
"மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது"
குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் நனி மிக எளிய ஞானம்
உலகத்தோர்க்குப் பிடிப்பதில்லை.
எனவே தான் உலகம் திரிந்தே கிடக்கிறது
குற்றம் உலகில் அல்ல, உணர்விலேயே
மரத்துப் போய் இருதயமின்றி வாழ்வது தீர்வல்ல.
திரிந்த உணர்வை, அதனால் திரிந்த உலகை மன்னித்து, மறந்து, மனந்திரும்பி வாழ்வதே தீர்வு.

உணர்வு குழம்புவது
பழக்க தோஷம்.
உணர்வின் தெளிவே
நம் இயல்பு நிலை.
குழப்பத்திலும்
நம் இயல்பு நிலையை
ஞாபகங் கொள்வதே
பழக்க தோஷத்தின்
நிவர்த்திக்கு எளிய உத்தி.
காரண உணர்வின் சித்தி
காரிய உலகின் முத்தி.

கட்டப்பட்டதாயினும்
எழுப்பப்பட்டதாயினும்
உமது உலகத்துக்கு
நீவிரே முழு பொறுப்பு.
இந்த நேர்மையை
உமது மனம் ஏற்றலே
மனந்திரும்புதலின் முதற்படி.
உலகந்திருந்தவும்
இந்த நேர்மை
நனி மிக எளிய வழி.



இருவருக்குண்டான கோணம்.
அது வேறு.
இருவருக்கு மட்டுமா?
இல்லை
இவ்விருண்ட உலகத்தினர் அனைவருக்குமே

நம் ஒவ்வொருவரின் அனுபவங்கள் வேறு வேறு, எனவே கோணங்களும் வேறு வேறு, அடிப்படை ஒருமையாம் அன்பில், பல்வேறு கோணங்களும் அழகிய வண்ணக் கோலங்களே.
இருண்ட உணர்வு ஒளி நோக்கித் திரும்ப
இருண்ட உலகம் தெளியும்



யாம் விரும்பியது என்ன?

உமது ஞானம், உமது தெளிவு,
எமக்களித்தால்
எமக்கும் ஞானம் எமக்கும் தெளிவாகும்.

உமது நோக்கம்,
அடுத்தவரைச் சேருதல்.

ஆனால் பாதை?

உமது கருத்து,
அடர்ந்த காட்டினுள் நுழைவதுபோல...

அதற்கான விளக்கம்
அடர்ந்த மத்திய காட்டினுள் வழிதெரியாமை..

ஞானமும் தெளிவும்
உமக்கு வெளியே தேடாதீர்.
உம் உள்ளுறையும் உட்போதகராம்
சற்குருவை, கிறிஸ்துவை, நபிகளை, புத்தரை, சித்தரை, பாபாவை
இருதய பூர்வமாக முழு மனதுடன் நாட
உமக்கு ஞானமும் தெளிவும்
அங்கையில் நெல்லிக்கனியாய்
சிக்கென வாய்க்கும்.
இதுவே எம் மூல உபதேசம்.

அடுத்தவரையும்
(அவர் எதிரியாய்
என் திரிந்த உணர்வுக்குத் தெரிந்தாலும்)
என்னைப் போல் நேசிக்கச் சொன்ன
இயேசு பிரானின் பேருபதேசமே
என் தலையாய கடமை
இதைச் செய்ய
முழு மூச்சுடன் முயற்சி செய்கிறேன்
நம் உட்குருவாம் கிறிஸ்துவின்
நற்றுணையின் பேருதவியால்

எல்லா சுவர்களையும் தாண்டிய
அன்பின் பாதை
நம்மை வீடு நோக்கி இழுத்துச் செல்லும்
உண்மை புரியாததால்
நமக்குக் காட்டுப்பாதையோ இது
என்ற மனப்பிரமை உருவாகிறது.
பொய் வீடு விட்டு
மெய் வீடு செல்லும்
நம் மனத்திடம்
மனப்பிரமை விலக்கி
நம் வழியை விளக்கும்



இது நான் சொல்ல வேண்டுவது.

மிகச்சரியான உமது புரிதலுக்கு நன்றி... ஏனெனில் புரிதலுண்டோரே எவ்வகை ஞானமும் அறியக்கண்டோர்.

நன்றி நாகரா அவர்கள்.

உம் புரிதலுக்கும் நன்றி பல தென்றலாரே!

அனுராகவன்
04-07-2008, 03:01 PM
நாகராவின் கவி அருமை..
தொடரட்டும் உங்கள் பணி..

நாகரா
04-07-2008, 05:33 PM
உம் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி அனு.

இளசு
04-07-2008, 05:38 PM
தென்றலுக்கு நன்றி..
புரிதலுடன் அளவளாவும் நாகரா அவர்களுக்கு அன்பு..

சொற்கள் வலிமையானவை - வலி தரும் வல்லமை கொண்டவை.
நேரில் உரையாடா நிலை..முகபாவம்/ உடன் கேட்டுத்தெளிதல் இயலா நிலை..

எழுதும் சொற்கள் எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டும் என்ற
முழுப்பொறுப்பும் எழுதுபவருக்கே , இல்லையா நண்பர்களே?

நாகரா
04-07-2008, 06:04 PM
உத்தமன் ஒருவனை உள்ளே காணத்
தொற்றியே வாசியில் நில்.

காணாக் காற்றே காணும் உடம்பைப்
பேணும் ஊற்றாந் திடம்

வெளிவிடும் உள்வரும் மூச்சில் கவனத்தால்
ஒளிர்ந்திடும் உன்னுடல் மெய்

துளித்துளி யாய்வீழும் அளியமுதை யுண்ண
அளிக்குமே தாய்போன்ற வளி

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுன்தலைப் பாக'ஐ' ஒளிரும்

ஆணவத்தலைப் பாகை கழற்றிவிட்டு வாசியோகங்
காணவுண்ணலாம் உன்தலைப் பாகை

தலைப்பாக 'ஐ'யனைக் காண வாசியில்நில்
அலைபாயும் பேய்மன மடங்கி

தலைப்பாகை எதற்குனக்கு தலைப்பாக 'ஐ'யனேவுன்
தலைப்பாகை கவனிப்பாய் வாசி

உட்குருவாசி உனில்இருக்க வேறெவரோ குருமார்
நல்லருளாசி தருவார்உட் போதகர்

உத்தமன் உன்னுள்ளே வாசியாய் நிற்கபரி
சுத்தமே உன்மெய்யென் றுணர்

குண்டலி எழுப்பும் அமுத வாசியைக்
கண்டுளே இருதய வாய்

கருத்த மனத்தை வெளுக்கும் வாசியைக்
கருத்தில் குருவாய்ப் போற்று

வந்துபோகும் உருக்களோ குருமார் வாசியாய்
வந்துபோகும் அருவமே குருபரன்

உள்ளதிட மூச்சை உள்ளமன மின்றி
உள்ளாரி வரோ மாந்தர்

வெள்ளங்கி ஒளியை உள்ளுள்ளே காணஅருள்
வெள்ளத்திரு வளியை உண்

தம்படிக்கு உதவுமா வளிமேல் கவனமென்பாய்
தம்படிக்கு உதவுமா சவம்

வாசியா திருந்தால் வாசியை உள்ளுலக
வாசியாம் சிவாசிக் கார்

பேசா திருமனமே கவனக் காசை
வீசா திருவீணே நீ

சச்சி தானந்தச் சுடராம் வாசியால்
உச்சித் தாமரை மலரும்

நாகரா
05-07-2008, 03:32 PM
எழுதும் சொற்கள் எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டும் என்ற
முழுப்பொறுப்பும் எழுதுபவருக்கே , இல்லையா நண்பர்களே?

சொல்லென்ற திறந்த பெட்டிக்குள்
அடைபடாது பொங்கும் பொருளைப் புரிந்து கொள்ள
எழுதுபவரும் கேட்பவரும்
முழுப்பொறுப்புடன் ஒருங்கே பொருளைப் போல்
பொங்க வேண்டுமல்லவா!

மெய்யென்ற திறந்த பெட்டிக்குள்
அடைபடாது பொங்கும் வாசியைப் புரிந்து கொள்ள
உள்ளிழுத்தும் வெளிவிட்டும்
முழுகவனத்துடன் ஒருங்கே வாசியைப் போல்
பொங்க வேண்டுமல்லவா!

இரண்டு வலிய வரிகளில் என்னை தீர்க்கமாக யோசிக்க வைத்தீர், நன்றி இளசு.

நாகரா
15-07-2008, 11:32 PM
ஹஸனீ
ஹ...ஸ...நீ
ஹம்
ஸம்
நீ
உள்ளும்
வெளியும்
ஓடும் வாசியில்
வாசி நீ
அல்லாவின் அருட்தொனி
அதுவே அஜபா காயத்ரி

பி.கு: மன்றத்து அன்பர் "ஹஸனீ" அவர்களின் பெயரில் "ஹம்ஸ: ஸோஹம்" என்ற அஜபா காயத்ரி மந்திர பீஜங்கள்(ஜபிக்காமலே உள் வெளி மூச்சுகளில் கேட்கும் சூக்கும ஒலிகள்) கண்டு வியந்து எழுதியது.

நாகரா
10-07-2009, 03:33 AM
வாசி = வ் + ஆசி

வ் = நிராதார எழுநிலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18623)யின் முதல் நிலையான "பரஞான போதம்"(மாயாத் தமிழின் படி, விவரமாய் அறிய மாயா நிலையம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20579) என்ற திரியைப் படியுங்கள்)

ஆக வாசி = பரஞான போதத்தின் ஆசி

மூச்சினூடே ஆசியாய்ப் பொழியும் பரஞான
போதமதை நேசித்தே உண்
(இலவசமாய் அல்லாதரும் அருளமுதை உண்ண
சிவமயமாய் நிற்பாயிது உண்மை)

வாசி = வாஸ் + இ = வ் + ஆ + ஸ் + இ = ஆ+வ்+இ+ஸ் = ஆவி + ஸ்

ஸ் = நிராதார எழுநிலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18623)யின் ஆறாம் நிலையான "அதிசயப் பரிமாற்றம்"(ஸ், ஹ் அசபை மெய்கள், அட்சரங்கள், ஹம்ஸ: ஸோஹம் என்பது அஜபா காயத்ரி, ஜெபியாமலே வாசி மூச்சு நம்மில் ஓதும் மந்திரங்கள், உள் மூச்சு = ஸ், வெளி மூச்சு = ஹ்)

ஆக வாசி = அதிசயமாய்ப் பரிமாற்றும் ஆவி, பரிசுத்த ஆவி, மூச்சை உள்ளிழுக்க அதிசயப் பரிமாற்றம்(ஸ்), மூச்சை வெளிவிட ஜோதி ஸ்வருபம்(ஹ்), "ஸ்" மற்றும் "ஹ்" இணை பிரியாக் காதலர்கள், எனவே தான் இரண்டு அன்னப் பறவைகள்(ஹம்ஸ என்றால் சமஸ்கிருதத்தில் அன்னம், மெய்ஞ்ஞானக் குறியீடு) அசபை மெய்களின் குறியீடுகள்.

அதிசயமாய்ப் பரிமாற்றும் பரிசுத்த ஆவியை
இலவசமாய்ப் பரிமாறும் அல்லா
(இலவசமாய் அல்லாதரும் அருளமுதை உண்ண
நபிகுருவாய் நிற்பாயிது உண்மை)

இவ்வளவு தூரம் வாய் கிழியப் பேசினோம், ஆனாலும் இப்படிப்பட்ட உன்னதமான மூச்சைக் கவனிப்பதற்கு நமக்கு நேரம் அறவே கிடையாது, உறங்கும் முன் பத்து நிமிடங்கள், விழித்த உடனே பத்து நிமிடங்கள், மூச்சைப் போற்ற, மனத்தை வாசியில் லயிக்க, முழு கவனமுடன் ஆவி ஓட்டத்தை மெய்யில் உணர, நம்மை உயிர்த்திருக்க வைக்கும் அல்லாவின் அருட்தாரைக்கு நன்றி சொல்ல இன்றிலிருந்து முடிவெடுப்போமா?!