PDA

View Full Version : கடவுளுக்குக் கூட காசேதான் கடவுளப்பா!



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-07-2008, 05:49 AM
கொட்டும் மழையில்
கவிதை தெறிக்கிறது
கொளுத்தும் வெயிலில்
கவிதை கொப்பளிக்கிறது
அதிகாலைக் கதிரவனில்
கவிதை உதிக்கிறது
தூரத்தெரியும் விண்மீன்களில்
கவிதை ஜொலிக்கிறது
சுழலும் மின் விசிறியில்
கவிதை வீசுகிறது
எரியும் தெருவிளக்கில்
கவிதை பிரகாசிக்கிறது
வீட்டு ரோஜாச்செடியில்
கவிதை மலர்கிறது
பழுத்த மாங்கனியில்
கவிதை இனிக்கிறது
சுளிக்கும் தாய் முகத்தில்
கவிதை புன்னகைக்கிறது
சுற்றியுள்ள செடி கொடிகளில்
கவிதை மணக்கிறது
ரூபாய் நோட்டுகளில் மட்டும்
காந்திதான் சிரிக்கிறார்.
கவிதையும் சிரிக்க வில்லை
கவிஞனும் சிரிக்கவில்லை.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

ஓவியன்
02-07-2008, 06:26 AM
ஏனோ தெரியவில்லை, பல கலைஞர்களின் நிலை இதுதான்...

ஏற்கனவே இதே கருவினைக் கொண்டு நம்ம ஆதவன் வடித்த சில கவிதைகள் இந்த மன்றில் உண்டு...
அவற்றையும் தேடிப் படித்துப் பாருங்கள்........

___________________________________________________________________________________________________

அழகான கவிதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.......

இளசு
05-07-2008, 12:32 PM
சரஸ்வதி இருக்கும் இடத்தில் லட்சுமி இருக்கமாட்டார்களாம்...
இது ஒரு தொன்ம வகை நம்பிக்கை!

இரும்புப்பெட்டிக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?
இது சிவப்பு வகை சிந்தனை!


பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது -

இது இன்றைய கவிஞர் குரலாய்
கவி வைரமுத்து சொன்னது!

-------------------------

உங்கள் கவிதைக்கு 500 இ-பணம் அளித்து
புதுப்பாதை அமைக்கிறேன்..

வாழ்த்துகள் ஜூனைத்!

சிவா.ஜி
05-07-2008, 01:11 PM
காந்திச் சிரிப்பை கண்ணில் காட்டிவிட்டு
கவிதை எழுதச் சொல்வார்...
எழுதி முடித்ததும் எடுத்துக்கொள்வார்...
காந்திச் சிரிப்பையும், கவிதையையும்!
கவிஞன் தன் அடுத்த கவிதையை
அழுகைக்கு எழுதுவான்...
தன் அழுகைக்கு தானே எழுதுவான்!

பெரும்பாலான கவிஞர்களின் பரிதாப நிலை உங்கள் கவி வரிகளில் தெரிகிறது ஜுனைத். பாராட்டுகள்.

ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமோ...?

அதாவது...கவிதையில் அடிக்கடி கவிதை என்ற சொல் வராமல்
இப்படி இருந்தால்....

கவிதை.......
கொட்டும் மழையில் தெறிக்கிறது
கொளுத்தும் வெயிலில் கொப்பளிக்கிறது
அதிகாலைக் கதிரவனில் உதிக்கிறது
தூரத்தெரியும் விண்மீன்களில் ஜொலிக்கிறது
சுழலும் மின் விசிறியில் வீசுகிறது....


எப்படி இருக்கும்?

வாழ்த்துகள் ஜுனைத்.