PDA

View Full Version : *மரியாதையின் மதிப்பு*



pkarthi28
02-07-2008, 01:07 AM
*மரியாதையின் மதிப்பு*

காலில் பட்ட புத்தகத்தை
தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
அட்டையில் அரை நிர்வாணப்படம்...! :)

பாலகன்
02-07-2008, 02:22 AM
நீங்கள் தொட்டு கும்பிட்டது புத்தகம் என்னும் கூட்டுப் பெயரச்சத்திற்கு,,,, அதில் இருந்த கூத்துக்கு அல்லவே,,,,,, மரியாதை புத்தகத்திற்கே

கவலைவேன்டாம்

பாராட்டுக்கள்

அன்புடன்
பில்லா

Narathar
02-07-2008, 03:16 AM
சில நேரங்களில் உள்ளே வேதாந்தம் பேசியிருந்தால்???
கவலையை விடுங்கள்

இளசு
05-07-2008, 02:12 PM
சில ஆசிரியர்கள் தவறானவர்கள் என்பதால்
அந்தச் சொல்லுக்கான மன ஆசனம் சாய்ந்துவிடுவதில்லை!



பாராட்டுகள் கார்த்தி அவர்களே!

பூமகள்
05-07-2008, 03:13 PM
புத்தகத்தின் மரியாதை..
மறைவதில்லை...

புத்தக வித்தகம் மாறினும்..!!

எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும் தானே??!!

களிமண் வெற்றுத் தாள்கள்..
கிடைப்பவர் கைக்கேற்றாற்போல்
உருப்பெறுகிறது...

பதிப்பால் மதிப்பிழக்கிறது..

ஆதார காகிதத்துக்கு மதிப்பில்லாமல் போகுமா என்ன??!!

பாராட்டுகள் சகோதரர் கார்த்தி. :)

ஆதவா
06-07-2008, 01:39 AM
*மரியாதையின் மதிப்பு*

காலில் பட்ட புத்தகத்தை
தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
அட்டையில் அரை நிர்வாணப்படம்...! :)

கலக்கல்....

நல்ல முரண். தேன்பா

தெய்வமென வணங்கப்படும் புத்தகங்கள்
ஆனால் அதிலும் உள்ளது அரைச் சித்திரங்கள்

உண்மையைச் சொல்லப் போனால் இந்த காலில் விழுந்து தொடும் கலையே தமிழர்களிடம் அதிகம் போலும் :D பகுத்தறிவு வந்துவிட்டாலும் இன்னும் என்னால் புத்தகங்களை காலால் தொட்டால் கும்பிடாமல் இருக்க முடிவதில்லை. அது பழக்க தோசம்,.