PDA

View Full Version : காதல்........... காதல்.......... காதல்............



"பொத்தனூர்"பிரபு
02-07-2008, 12:26 AM
உன் கால்கொலுசின்
ஒலிகேட்டே
தலையாட்டும் - உன்வீட்டு
காளையைப் போல்
மாற்றிவிட்டாய் என்னை

கழனிக்காகக் காத்திருக்கும்
காளையை கவனிக்கும் நீ...........
காதலுக்காகக் காத்திருக்கும்
என்னை கவனிப்பாயா???

.................................................

மடியிலிருந்து பாலைத் திருடும்
பால்காரனிடம் பணிந்து நிற்க்கும்
பசுவைப் போல
என்னிடமிருந்து இதயத்தைதிருடும்
உன்னிடம் நிற்க்கிறேன் நான்!!...

.............................................

உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
என் இதயம்
அடிக்கடி படித்தும் பார்த்தும்
அலுப்புதட்டாத
கவிதை தொகுப்பைப் போல!!

இதயம்
02-07-2008, 04:54 AM
என்ன பிரபு.. நாம கற்காலத்துக்கு திரும்பிக்கிட்டு இருக்கிறோமா..? யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே..!!:eek::eek:

ஆதவா
02-07-2008, 10:13 AM
என்ன பிரபு.. நாம கற்காலத்துக்கு திரும்பிக்கிட்டு இருக்கிறோமா..? யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே..!!:eek::eek:

மாற்றியிருக்கிறேன்... இப்பொழுது படித்துப்பாருங்கள்..

பாலகன்
02-07-2008, 11:59 AM
காளை பசுவாகி பிறகு அழகிய கவிதையாகிய விதம் மிக மிக அருமை பிரபு,

ஒவ்வொன்றும் அழகிய கவிதை

பாராட்டுக்கள்- பிடியுங்கள் பில்லாவின் பண முடிப்பை, 25 இணைய காசுகள்

அன்புடன்
பில்லா

"பொத்தனூர்"பிரபு
03-07-2008, 01:46 AM
நன்றி
முதலில் யுனிகோட் பிரச்சனை இருந்தது.இப்போது சரியாஅகிவிட்டது

"பொத்தனூர்"பிரபு
04-07-2008, 01:27 AM
நன்றி பில்லா(தல),ஆதவன்,இதயம்