PDA

View Full Version : கிராமமே வா வா



"பொத்தனூர்"பிரபு
02-07-2008, 12:02 AM
கிராமமே வா வா


பஞ்சு மெத்தையில்
படுத்துறங்க மனமில்லை-என்
பச்சை புல்வெளி
கிராமமே வா வா

குளிரூட்ட சாதனம்
வேண்டாம்-என்
கீற்று கொட்டகை
கிராமமே வா வா

புகைகக்கும் வாகனம்
வேண்டாம்-என்
காளைகள் பூட்டிய
கிராமமே வா வா

பவுடர் பால்
வேண்டாம்-என்
காறாம் பசுகொண்ட
கிராமமே வா வா

ஸவர்பாத்
வேண்டாம்-என்
வற்றாத வாய்க்கால்
கிராமமே வா வா

செயற்க்கை ஊஞ்சல்
வேண்டாம்-என்
ஆலமர விழுதுள்ள
கிராமமே வா வா

கட்டவிழ்ந்த கூந்தல்
வேண்டாம்-என்
இரட்டை ஜடை
கிராமமே வா வா

ஓவியன்
02-07-2008, 08:15 AM
கீற்றுக் கொட்டகையிலும்
மண் சுவரிலும் வாழ்க்கை
நடத்தும் சுகமே அலாதிதானே....

இன்று நம்மால் முடியாத
சில விடயங்களைக்
கவிதையாய்ப் படித்து
இன்புறுவதும் அலாதிதான்....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பிரபு..!!

meera
02-07-2008, 09:57 AM
ஆஹா கிராமத்தின் அழகே தனிதான்.

என்ன தான் பல வசதிவாய்ப்புக்களுடன் சிங்கார நகரங்களில் வாழ்ந்தாலும் கிராமத்தின் மண்வாசனை நுகராமல் வாழ்க்கை வெறுமையாய் இருப்பதாய் ஓர் உணர்வு நம் அனைவருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கிராமத்தில் கூட காராம்பசுவின் பாலும்,வற்றாத நதியும் கானல் நீர் தான்.

கிராமத்திற்க்கு அழைத்து சென்ற அழகிய கவிதை

வாழ்த்துகள் சகோதரா.

"பொத்தனூர்"பிரபு
03-07-2008, 01:55 AM
நானும் கிராமத்தில் பிறந்தவந்தான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன்.அதேசமயம் கிராமங்களும் அதிகம் மாறிவிட்டன.என்ன செய்ய? காலட்த்தின் கட்டயம்..

பாலகன்
03-07-2008, 02:22 AM
கிராமங்களின் சிறப்பே, இயற்கை காற்று மற்றும் நல்ல நீர், புல்வெளி..........

வாழ்த்துக்கள் போத்தனுர் பிரபு

அன்புடன்
பில்லா

Narathar
03-07-2008, 06:05 AM
உங்கள் கவிதை பாரதிராஜா படத்தின் ஆரம்ப காட்சியொன்றை பார்த்ததைப்போன்ற உணர்வை எனக்களித்தது.. நன்றி

ராஜா
03-07-2008, 07:06 AM
ம்ம்ம்ம்

அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே... நண்பனே..!

இளசு
03-07-2008, 07:29 AM
கவிதை நன்று... பாராட்டுகள் பிரபு அவர்களே..

மீரா சொன்னதுபோல் எல்லாமே மாறிவருகின்றன..
ஆவணப்படங்களாய் சேமித்து வைத்தால் மட்டுமே
அடுத்த தலைமுறைக்கு இவற்றைக் காட்ட முடியும்!

தீபா
03-07-2008, 01:47 PM
இப்பொழுதும் எனக்கு
கிராம வாசனை தான்
பிரபு.

கிராமம் வா என்று
நகரத்தில் இருந்து
சொல்கிறீர்களா? :D

நகர வாழ்வை லைட்டா சாடுவது தெரிகிறது.

நல்ல சமூக நோட்டமுள்ள கவிதை.. நிறைய எழுதுங்கள்.

"பொத்தனூர்"பிரபு
04-07-2008, 03:11 AM
அனைவருக்கும் நன்றி