PDA

View Full Version : கதை சொல்லப்போறேன்(பிறந்தநாள் வாழ்த்துக்கள்)



"பொத்தனூர்"பிரபு
01-07-2008, 11:54 PM
அமைதியான இரவு
ஆழ்ந்த உறக்கம் கலைந்தப்பின்
உறங்க மனமின்றி
மொட்டைமாடிக்குச் சென்றேன்

வறுமையில் வாடியவன்
வயிறு போல – வானம்
வெறுமையாய் இருந்தது

கடையடைப்பு செய்யப்பட்ட
கடைவீதி போல – வானம்
கலகலப்பின்றி இருந்தது

தெருமுனையில் ஏதோ
சப்தம் கேட்க
தேடிப்போனேன்

என்ன ஆச்சர்யம்!!!
வானில் காணாததை
வழியில் கண்டேன்!

நிலவதன் தலைமையில்
நட்சத்திரங்கள் பேரணியாய்
வந்தன......

எங்கே செல்கின்றன???
தொலைந்த நட்சத்திரங்களை
மீட்ககோரி - மனுகொடுக்க
மாவட்ட அலுவலகம் செல்கிறதோ??

ஓசோன்படல ஓட்டையை
அடைக்கக்கோரி - மனுகொடுக்க
தலைமைச் செயலகம் செல்கிறதோ??

எங்குதான் செல்கின்றன??
பின்தொடர்ந்தேன்
ஒரு வீட்டினருகில்
பேரணி நிறுத்தப்பட்டது!
கதவு தட்டப்பட்டது!!
நீ வந்து கதவு திறந்தாய்!!!
நிலவும் நட்சத்திரங்களும்
ஒருசேர பாடின

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலகன்
02-07-2008, 12:53 AM
நண்பரே,,,, யுனிகோட் பிரச்சனை என நினைக்கிறேன்

நிர்வாகத்திடம் கேட்டு உதவிபெறவும்

அன்புடன்
பில்லா

"பொத்தனூர்"பிரபு
02-07-2008, 01:06 AM
இதற்க்கு முன்பு நேரடியாக இங்கேயே தட்டச்சு செய்தேன்
அவைகள் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் இவற்றை இதற்க்கு முன்பே word pad-ல்-தனியாக தட்டச்சு செய்து copy & paste செய்தேன்
இப்போது என்ன செய்ய?????
மீண்டும் புதிதாக தட்டச்சு செய்ய வேண்டுமா?
இல்லை இதை மாற்ற முடியுமா???
மேலும் சிலவற்றை இதேபோல் wordpad-ல் தட்டச்சு செய்துவைத்துள்ளேன் அவற்றை என்ன செய்ய????
பதில் கிடைக்குமா??

பாலகன்
02-07-2008, 02:11 AM
ஆனால் இவற்றை இதற்க்கு முன்பே word pad-ல்-தனியாக தட்டச்சு செய்து copy & paste செய்தேன்
இப்போது என்ன செய்ய?????

நண்பரே word pad-ல்-தனியாக தட்டச்சு செய்து copy & paste செய்தால் அதை தளத்தின் கீழே உள்ள யுனிக்கோட் ல் மாற்றி தான் இங்கு பதிக்க வேன்டும்,,,, அப்படியே இங்கு பதித்தால் இம்மாதிரி வரும்,,,,

////////////////////////////////////////
பின்பு பதித்தது

பிரபு உங்கள் பிறந்தநாள் கதை மிகவும் அருமை,,,, பாராட்டுக்கள்

அன்புடன்

ஓவியன்
02-07-2008, 02:15 AM
திஸ்கி எழுத்துருவில் இருந்த கவிதையை ஒருங்குறியாக (யுனி கோட்) மாற்றியுள்ளேன்....

பிரபு, திஸ்கியில் உள்ளவற்றை ஒருங்குறியாக்க மன்றத்தின் முகப்பின் அடிப் பகுதியிலுள்ள Unicode Converter ஐப் பாவிக்கலாம்....

ஏற்கனவே திஸ்கி எழுத்துருவிலுள்ள உங்கள் கவிதைகளை Unicode Converter இன் இடது பகுதியில் பேஸ்ட் செய்து விட்டு TSCII என்பதைக் கிளிக் செய்யுங்கள்....

உங்கள் பதிவு வலது பகுதியில் ஒருங்குறியாக மாறி இருக்கும், அதனை மன்றத்தில் நீங்கள் தாராளமாகப் பதிவிடலாம்....

பதிவினை பதிவிடுகையில் ப்ரிவியூ பார்த்து, உங்களது பதிவு சரியாக உள்ளதாவென பரிட்சித்துப் பார்த்த பின் பதிவிடுங்கள்.....

நன்றி..!!

Narathar
02-07-2008, 02:24 AM
பிரபுவுக்கு "சிறந்தநாள் வாழ்த்துக்கள்"
ஒரு மாதிரியாக யுனிக்கொட் பிரச்சனைக்கு தீர்வு கண்டதற்கும், நல்ல ஒரு கவிதையை தந்ததற்கும்.......

இன்னும் எழுதுங்கள்! பதிவுப்பிரச்சனைகள் இருந்தால் தயங்காது பொறுப்பாளர்கள், உதவியாளர்களை நாடுங்கள்...............

"பொத்தனூர்"பிரபு
03-07-2008, 01:26 AM
அனைவருக்கும் நன்றி
ஒவ்வொரு தவறிலும் ஒரு பாடம் கற்க்கலாம்.யுனிக்கொட் பிரச்சனைக்கு தீர்வு சொன்னதற்க்கு சிறப்பு நன்றி