PDA

View Full Version : டெஸ்ட் போட்டிக்கு தனி அணியாகவே இருக்கலாமா?



arun
01-07-2008, 06:43 PM
அனைவருக்கும் வணக்கம்

தற்போது நமது இந்திய அணிக்கு டெஸ்டுக்கு என்று தனியாகவும்,ஒரு நாள் போட்டிக்கு என்று தனியாகவும் கேப்டன்களும் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் என தனியாக சில வீரர்களும் உள்ளனர் அது போலவே உள்ளது நல்லது என நினைக்கிறேன் இது சரி தானே? அன்பர்களின் கருத்துக்களை தெரிவிக்கலாமே

மேலும் இது வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தது போலவும் இருக்கும் என்பது எனது கருத்து

மேலும் அனுபவ வீரர்களான சச்சின்,கங்குலி மற்றும் திராவிட்டை டெஸ்ட் போட்டிக்கு வைத்து விட்டு ஒரு நாள் போட்டியில் மூவரில் ஒருவருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கலாம் என்பது எனது கருத்து

இதில் ஏதேனும் முரண்பாடு உள்ள மாதிரி தெரிகிறதா?

அறிஞர்
01-07-2008, 06:48 PM
தனி அணி இருக்கலாம் என்பது என் கருத்து....

ஒரு 4/5 பேர் இரு அணியிலும் இருக்கலாம்.

இந்தியாவில் நல்ல பவுலர்களுக்கு தான் தட்டுப்பாடு...

பாலகன்
02-07-2008, 01:00 AM
அதிக வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கவேன்டியிருக்கும் என பிசிசிஐ கருதும் என நினைக்கிறேன்,,,, இரு அணிக்கும் கேப்டன் ஒருவராக இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும், வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாதவர்களை போட்டியிலிருந்து நீக்குவது புதியவர்களுக்கான பாதையாக அமையும்

அன்புடன்
பில்லா