PDA

View Full Version : திசைகளின் வாசல்களில் தடுப்புக்கள்



shibly591
01-07-2008, 08:01 AM
அழுது கொண்டிருக்கிறாள்
அவள்

எதற்கு
ஏன்
எப்படி
என்றில்லாமல்
அழுது கொண்டிருக்கிறாள்
அவள்

இழந்து விட்ட
அல்லது
பெறத்தவறிய
ஏதோ ஒன்றுக்காக

மனசாலோ
கண்களாலோ
அழுது கொண்டிருக்கிறாள்
அவள்

எப்படியும்
அவள்
அழுதாக வேண்டும்
என்பது
எழுதப்படாத விதி

வலிக்க
வலிக்க
அழுது கொண்டிருக்கும்
அவள் கண்களை
நோக்கி
எந்தக்கருணை
விரல்களும் நீள்வதாயில்லை

ஆதிக்கமும்
அடக்குமுறையும்
அவள்
புன்னகைகளை
களவாடி விட்டன

அவளது
ஒவ்வொரு
கண்ணீர்த் துளிக்கும்
பின்னால்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
வெகுண்டெழும்
நம்பிக்கையின்
வரட்டு முகங்கள்

அவளுக் கென்று
ஆயிரம்
திசைகள்
அத்தனையும்
ஆண்டாண்டு காலமாய்
பூட்டப்பட்டுள்ளன

என்றோ
ஒரு நாளில்
அவளுக்கான
திசைகளின்
வாசல் கதவுகள்
உடைத்தெறியப்படலாம்

அப்படி
நேர்ந்தபின்
எதற்கு
ஏன்
எப்படி
என்றில்லாமல்
அழுது கொண்டிருப்பான்
அவன்….!

ஆதவா
01-07-2008, 08:31 AM
நல்ல கரு..

வாழ்த்துகள் ஷிப்லி

shibly591
01-07-2008, 08:32 AM
நன்றிகள் நண்பரே....

shibly591
03-07-2008, 03:44 AM
இந்தப்பெண்ணியம் சார் கவிதை பெண் விடுதலை பற்றி போதியளவு விளக்ககிறதா?காரணம் ஆண்கள் பெண்ணியம் சார் கவிதைகளை வரைவதில் சில இடர்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதை தெளிவாக்கவே இக்கேள்வி.......

ஆதவா
03-07-2008, 10:43 AM
பெண்ணாதிக்கம் ஆகிவிட்டால்/????

இளசு
05-07-2008, 11:05 AM
ஆபிரகாம் லிங்க்கன் ஒரு வெள்ளையர்
காங்கிரஸ் விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது ஆங்கிலேயரால்

பெண்ணிய விடுதலை முனைப்பு தொடங்க வேண்டியது
ஆணிடத்திடமிருந்தே..

காலம் மீண்டும் மீண்டும் கற்றுத்தரும் முரண்பாடம் இது!

முரசறைந்த ஷிப்லிக்கு பாராட்டுகள்!

shibly591
27-07-2008, 08:05 PM
நன்றிகள் இளசு..நல்ல கருத்தொன்றை முன்மொழிந்தீர்கள்