PDA

View Full Version : LAN ல் பயன்படுத்த அவுட் லுக் எக்ஸ்பிரஸ் போல ஒரு மென்பொருள் கிடைக்குமா?

ஸ்ரீதர்
01-07-2008, 05:10 AM
அன்பு நண்பர்களே ,

LAN ல் உள்ள மற்ற கணிணிகளுக்கு தகவல் , மின்னஞ்சல்,கோப்புகள் அனுப்ப அவுட் லுக் எக்ஸ்பிரஸ் போல இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் இருந்தால் அதைப்பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

mukilan
01-07-2008, 05:17 AM
LANல் Pop mail இல்லாமல் Outlook Express பயன்படுத்த முடியுமா? முடியுமெனில் விளக்கம் தர முடியுமா? Mozilla Firefox நிறுவனத்தினரின் Thunderbird ஒரு இலவச மென்பொருள். நான் POP கணக்கிற்குப் பயன் படுத்துகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

ஆதி
01-07-2008, 06:57 AM
Mozilla நிறுவனத்தின் Thunderbird மிக சிறந்த mail client பயன் படுத்துவது மிக எளிதே..

mail server SMTP என்றொரு Protocol பயன்படுத்தி mail-ஐ send&receive செய்யும்.. ஆனால் இந்த சூழல் எல்லா நெட் ஒர்க்கிலும் அமைவதில்லை.. சில நெட் ஒர்க்கில் mail server ஒரு ஊரில் இருக்கும் user-கள் வேறு ஊரில் இருப்பார்கள் அந்த சூழலுக்கு pop3 protocol இயங்கும் pop mail server தேவைப்படும்..

அதாவது mail server local network-கிலேயே இருந்தால் pop mail தேவையில்லை.. mail server வேறு georaphic region-ல் இருந்தால் pop mail தேவை..

ஸ்ரீதர்
01-07-2008, 10:16 AM

நன்றி ஆதி அவர்களே. ஆனால் எனக்கு தேவைப்படுவது LAN (Local Area Network) உள்ள மற்ற கணிணிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள். mozilla thnderbird என் தேவையை பூர்த்தி செய்யுமா?

ஆதி
01-07-2008, 10:24 AM
நன்றி ஆதி அவர்களே. ஆனால் எனக்கு தேவைப்படுவது LAN (Local Area Network) உள்ள மற்ற கணிணிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள். mozilla thnderbird என் தேவையை பூர்த்தி செய்யுமா?

உங்கள் கேள்வியை கொஞ்சம் விளக்கமாய் கேட்டால் புரிந்து பதிலளிக்க ஏதுவாயிருக்கும் ஸ்ரீதர்..

ஸ்ரீதர்
02-07-2008, 05:43 AM
மன்னிக்கவும் ஆதி அவர்களே.

என்னுடைய அலுவலகத்தில் LAN ல் உள்ள மூன்று கணிணிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் தேவை. இது மெசன்ஞர் போல இல்லாமல் ஈ மெயில் கிலைண்ட் போல இருந்தால் நல்லது. இதற்கான மென்பொருள் இருந்தால் ஆலோசனை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கம்

selvamurali
28-07-2008, 10:24 AM
அப்படியாயின் நீங்கள் எஸ்எம்டிபி வழியே முயற்சியுங்கள். நண்பரே!

praveen
28-07-2008, 12:28 PM
http://www.outlookmessenger.com/OM/Screen_shot_windows.asp

மேலே கண்ட சுட்டி சென்று இந்த மென்பொருள் தான் உங்கள் தேவையா? என்று சொல்லுங்கள். பின்னர் புரிந்து தருகிறேன்.

இராசகுமாரன்
22-09-2008, 09:43 PM
நண்பர் ஸ்ரீதர் கேட்பது எனக்கு புரிகிறது.

அதாவது அவரது அலுவலகத்தில் உள்ள 3-4 கணிணிகளுக்குள் தகவல் பறிமாற்றம்/மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் கேட்கிறார்.

இதற்கு நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரசையே உபயோகிக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு கணிணியில் "மெயில் சர்வர்" மென்பொருளை நிறுவுதல் அவசியம். அது தான் ஒரு "போஸ்ட் ஆபீஸ்" போல, உங்கள் மெயில்களை வாங்கிக் கொண்டு சரியான முகவரிக்கு கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும்.

இதற்கு Microsoft Exchange போல பல கட்டண மென்பொருட்கள் உள்ளன. நாங்கள் முன்பு MDaemon என்ற மென்பொருளை உபயோகித்தோம் மிக நன்றாக வேலை செய்தது.

இலவசமாக வேண்டுமென்றால், கீழே உள்ள மென்பொருட்களை இறக்கி உபயோகித்து பாருங்களேன்.
http://www.mailenable.com/
http://www.hmailserver.com/
http://www.altn.com/Products/Free-Windows-Mail-Server/

ஸ்ரீதர்
24-09-2008, 05:01 AM
நன்றி நண்பர் இராசகுமாரன் அவர்களே!

நீங்கள் கூறியவற்றை முயற்சித்துப்பார்க்கிறேன்.

வணக்கம்.

poornima
24-09-2008, 07:20 AM
vpop3 என்ற இலவச புரவன் (Free Server) இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது.அதை பிணையத்தில் (Network) ஓரிடத்தில் நிறுவ சிறப்பாக செயல்பட்டு மற்ற கணிணிகளுக்கு மின்மடலை பங்கிட்டுத் தருவதில் அனுப்புவதில் / பெறுவதில் சிறந்த பங்காற்றுகிறது.முயற்சித்துப் பாருங்கள்

ஸ்ரீதர்
24-09-2008, 08:10 AM
நன்றி சகோதரி பூர்ணிமா அவர்களுக்கு.

இந்த இணையதள சுட்டியை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புரசிகன்
24-09-2008, 08:20 AM
பூர்ணிமா சொன்னதற்கு இங்கே (http://www.brothersoft.com/vpop3-5557.html) செல்லுங்கள் ஸ்ரீதர்...

poornima
25-09-2008, 06:43 AM
பூர்ணிமா சொன்னதற்கு இங்கே (http://www.brothersoft.com/vpop3-5557.html) செல்லுங்கள் ஸ்ரீதர்...

நன்றி அன்புரசிகன்.. அவசரத்தில் இணைப்பை கொடுக்க மறந்து போனேன்.

anna
07-11-2008, 04:57 PM
நண்பர் கேட்கும் கேள்வி கிட்டதட்ட ஒண்ணும் புரியலை.இ மெயில் அனுப்புவதற்கானால் அவுட்லுக் எக்ஸ்பிரசை பயன்படுத்தலாமே.லேனில் தகவல் பரிமாற்றி கொள்ள hmail server ச்சரியாக இருக்கும் பயன்படுத்தி பாருங்கள்