PDA

View Full Version : பழைய பாடம் - சிறுகதை

தீபா
01-07-2008, 04:19 AM
பழைய பாடம்

"என்னங்க"

"என்ன"

"பணம் காணாமப் போச்சுன்னு சொன்னீங்களே, இதோ, உங்க புத்திரந்தான் எடுத்திருக்கான் இந்த வயசிலயே திருட்டுத்தனம் பாருங்க,, அவன என்னன்னு கேளுங்க"

அவருக்கு அப்போதுதான் உரைத்தது... பழைய பாடம் திருப்பிப் படிக்கப்பட்டது.

தீபா
02-07-2008, 05:03 PM
யாருக்குமே பிடிக்கலையா?

இளசு
02-07-2008, 06:19 PM
என்னங்க தென்றல்?

ஒரு பக்கக் கதைகள் வந்தன..
இப்போ ஒரு பத்தி கதையா?

அப்பனுக்குப் பிள்ளை தப்பா(க)ம பொறந்ததைச் சொல்ல வந்த நீங்க..

இப்படி அப்படியே நிப்பாட்டிட்டு, எங்களை யோசிக்க வச்சா எப்படி?

எனக்கு யோசிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம்.. அதெல்லாம் மூளைக்காரங்க செய்ற வேலை!

arun
02-07-2008, 06:35 PM
கவிதையை போல கதையை கொடுத்து உள்ளீர்கள் அருமை

தீபா
03-07-2008, 01:41 PM
என்னங்க தென்றல்?

ஒரு பக்கக் கதைகள் வந்தன..
இப்போ ஒரு பத்தி கதையா?

அப்பனுக்குப் பிள்ளை தப்பா(க)ம பொறந்ததைச் சொல்ல வந்த நீங்க..

இப்படி அப்படியே நிப்பாட்டிட்டு, எங்களை யோசிக்க வச்சா எப்படி?

எனக்கு யோசிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம்.. அதெல்லாம் மூளைக்காரங்க செய்ற வேலை!

இது ஒரு சின்னமுயற்சி.

அவசர வாழ்க்கை
நிதானமின்மை
குறித்த நொடிக்குள் தன்னை இருத்தி
தன்னையே உள்வாங்கும் நிலைமை.

உலகமும் அதன் மனிதனின் மனமும் சிறுத்துக்கொண்டே வருவதால்
கதையும் சிறுத்திருக்கவேண்டும் என்று நினைத்தேனோ

ஆனால்? ஒரு மூளைக்காரனே(ரே) இப்படி சொன்னால்?

நன்றி இளசு அவர்களே

மற்றும் இக்கதை படித்து பதிவிட்ட அருண், உடன் படித்த அனைத்துள்ளங்களுக்கும் நன்றி.

யவனிகா
05-07-2008, 08:22 AM
"பணம் காணாமப் போச்சுன்னு சொன்னீங்களே, இதோ, உங்க புத்திரந்தான் எடுத்திருக்கான் இந்த வயசிலயே திருட்டுத்தனம் பாருங்க,, அவன என்னன்னு கேளுங்க"

அவருக்கு அப்போதுதான் உரைத்தது... பழைய பாடம் திருப்பிப் படிக்கப்பட்டது.

எங்கிருந்திருந்து வந்ததுடா இந்தப் புது பழக்கம்...???

அவருக்கு மட்டும் தான் தெரியும் எங்கிருந்துன்னு???

இப்படி மாற்றினால் சுவாரசியம் கூடாதோ...?? என்ன தென்றலாரே...???