PDA

View Full Version : 'எக்ஸ்பி' விற்பனையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்!

Narathar
01-07-2008, 03:40 AM
'விஸ்டா'வை ஊக்குவிக்க 'எக்ஸ்பி' விற்பனையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்!திங்கள்கிழமை, ஜூன் 30, 2008

ரெட்மான்ட் (வாஷிங்டன்): மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்ட விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எக்ஸ்பி விற்பனையை நிறுத்துகிறது. திங்கள்கிழமை முதல் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்ட விற்பனை, வியாபார நிறுவனங்களுக்கும், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிறுத்தப்படுகிறது.

எக்ஸ்பி விற்பனை நிறுத்தப்படுவதால் வேறு வழியில்லாமல் விஸ்டா அல்டிமேட் மற்றும் விஸ்டா பிசினஸ் ஆகிய புதிய ஆபரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இருப்பினும் ஜனவரி மாத முடிவு வரை, சிறிய விற்பனை நிலையங்களில் எக்ஸ்பி விற்பனையை தொடர மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது. மேலும் அசஸ் இ (ஆசுச் ஏஏ) உள்ளிட்ட குறைந்த விலை பர்சனல் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து எக்ஸ்பியை பயன்படுத்தவும் மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, 'எக்ஸ்பியை காப்பாற்றுவோம்' என்ற பெயரில், இன்போவேர்ல்ட் என்கிற இணையதளத்தில் ஒரு பிரசாரமே கிளம்பியுள்ளது. எக்ஸ்பி பிரியர்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

விண்டோஸ் 7 வரும் வரை எக்ஸ்பியை தொடர வேண்டும் என இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2009ம் ஆண்டில் விண்டோஸ் 7 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நன்றி : தட்ஸ்டமிழ்.கொம்

ஆதவா
01-07-2008, 04:33 AM
விண்டோஸ் 7

அப்ப விஸ்டாவும் அம்போதானா? இன்னும் முழுசா கூட பார்க்கலை நாரதரே!

ராஜா
01-07-2008, 04:38 AM
விஸ்டா நிறைய இடத்தை அடைச்சுக்குதுன்னு சொல்றாங்களே..!

aren
01-07-2008, 06:51 AM
ஏதோ "வியன்னா" என்ற பெயரில் புதுசா ஏதோ வருதா சொன்னாங்களே.

ஆதி
01-07-2008, 07:04 AM
விஸ்டா நிறைய இடத்தை அடைச்சுக்குதுன்னு சொல்றாங்களே..!

ஆமண்ணா, விஸ்டா நிறுவுவதற்கு மட்டும் 8 GB இடம் தேவைப்படுகிறது.. இதுவே எக்ஸ்பி வெறு 550 MB இடம்தான் எடுத்துக்கொள்ளும்.. Linux-சை நோக்கி பயனர்கள் செல்ல இது நல்ல தருணமாக அமையும் என்று நம்புகிறேன்..

ஆதவா
01-07-2008, 07:13 AM
ஆமண்ணா, விஸ்டா நிறுவுவதற்கு மட்டும் 8 GB இடம் தேவைப்படுகிறது.. இதுவே எக்ஸ்பி வெறு 550 MB இடம்தான் எடுத்துக்கொள்ளும்.. Linux-சை நோக்கி பயனர்கள் செல்ல இது நல்ல தருணமாக அமையும் என்று நம்புகிறேன்..

இதுவே விண்டோஸ் 98 என்றால் நூறு அல்லது நூற்றைம்பது MB தான்...

Win 98 வரும்பொழுது System Configuration அப்பொழுது மிகக்குறைவுதான். அதிகபட்சம் 40 GB Hard Disk வைத்து தருவார்கள்.

இப்பொழுது அப்படியல்ல. குறைந்தபட்சம் 160GB, Core 2 Duo, 2 GB RAM என்று Hardware பெருகிவிட்ட நிலையில் 8 GB என்பது சரியான ஒன்றே!!

நாம் மாறவேண்டும்.. காலத்திற்கு ஏற்றவாறூ...

ஆயிரம் வந்தாலும் 98 போல எதுவும் வருமா? கோரல் அதில் வேலை செய்வதில்லை என்ற ஒரே காரணத்திற்காக XP போட்டிருக்கிறேன்.. இல்லையென்றால் நம்ம சாய்ஸ் எப்பவுமே 98 தான்...

linux இன்னும்கூட User Friendly ஆகவில்லை.. Windows பழக குழந்தைகளுக்குக் கூட பிடிக்கும்.. வித்தியாசம் அதுதான்..

ஆதி
01-07-2008, 07:30 AM

MS-OS-ல் எனக்கு மிக பிடித்தது 98-தான், எத்தனை வைரஸ் வந்தாலும் கொஞ்சமும் அச்சாத மாவிரன் போல் தாங்கும்.. millennium-த்திற்கு பிறகு MS desktop OS என்று எதையும் தனியாக தயாரிக்கவில்லை..

2000,xp, 2003, vista எல்லாம் networking OS தான்.. அதனால்தான் தேவைக்கு அதிகமான இடத்தை அது அடைத்துக்கொள்கிறது.. மிக sensitive வாகவுமிருக்கிறது..

UBUNTU Linux பயன்படுத்திப்பாருங்கள் ஆதவா பிறகு புரியும்... MS OS-ன் குறைபாடே அது User Friendly-யாக மட்டுமல்லாமல் வைரஸ் Friendly-யாகவும் இருப்பதுதான்.. ஆனால் லினஸ் அப்படியல்ல.. மிக secure-ரான OS.. வைரஸ்கள் அதை எளிதில் நெருங்க முடியாது..

Indian Users தான் இன்னும் அதிகமாய் windows பயன்படுத்துகிறார்கள் மற்ற நாட்டவர்கள் linux மாறி பலகாலமாகிறது.. linux இந்தியாவும் மாறும் காலம் தொலைவிலில்லை..

ஆதவா
01-07-2008, 07:38 AM

98 இல் பிரச்ச்னைகள் இல்லாமல் இல்லை.. எவ்வளவோ பட்டியலிடலாம் ஆதி.. ஆனால் வேகம் அதில் அதிவேகம். அதற்கடுத்தாற்போல் XP மட்டுமே! விஸ்டா மாற்றவேண்டுமென்றால் எனது கணிணியின் தரம் உயர்த்தவேண்டிய கட்டாயம்.. விஸ்டா வருவதற்கு முன்னர் அதனை Demo வாக உபயோகப்படுத்தினேன். சகிக்கமுடியவில்லை..

உபுண்டு என்னிடம் உண்டு. ஆனால் இதுவரை install செய்ததில்லை. இத்தனைக்கும் அது Format செய்யாமலே உபயோகப்படுத்திப் பார்த்துக்கொள்ளலாம்... (எல்லாம் முடை தான்)

இன்னும் பல Software கள் Linux கு தயாரிக்கப்படவில்லை.. அது மிகப்பெரிய ட்ராபேக். மற்றபடி Securiy என்று வந்தால் Linux தான் பெஸ்ட்...

ஆதி
01-07-2008, 07:51 AM

ஆதவா உறழ்வே இல்லாத ஓ.எஸ் என்று ஏதுமில்லை.. எல்லாவற்றிலும் குறைபாடுகள் இருக்கதான் செய்யும்.. அதை அடுத்தடுத்த வர்ஷனில் சரி செய்யவே முயல்கிறார்கள்..

UBUNTU பயன்படுத்துங்கள் என்று நான் சொன்னதின் காரணமே இதுதான் விண்டோஸில் நிறுவ இயல்கிற அத்தனை சாப்டுவேர்களையும் நீங்கள் லினக்ஸில் நிறுவ வசதி இருக்கிறது.. அதாவது MS-OFFICE-ஐ நீங்கள் லினக்ஸில் நிறுவி பயன்படுத்தலாம்.. (இந்த வசதி லினக்ஸ்லி Wine என்று முன்பே இருந்தாலும் UBUNTU-வில் இந்த வசதி மிக எளிமையாக்கப்பட்டுள்ளது)

அதுமட்டுமில்லை 3D-யில் உங்கள் DESKTOP-பை சுழற்ற முடிகிற அளவுக்கு சமீபத்தில் வெளியான 8யான வெர்ஷனில் ஏகப்பட்ட வசதிகள் வந்துள்ளன.. போக போக UBANTU MS Destop Market-ல் இருந்து துரத்திவிடுவான்..

ஆதவா
01-07-2008, 08:05 AM

இன்று உபயோகப்படுத்திவிட்டு பயனைச் சொல்கிறேன் ஆதி..

விகடன்
01-07-2008, 10:27 AM
அடிச்சுட்டாங்களா ஆப்பு?????
எக்ஸ்.பி இல் வேலை செய்யும் சில மென்பொருட்கள் விஸ்டாவில் வேலை செய்வதில்லையே.... அப்படியிருக்க இது சாத்தியமாகுமா?

அன்புரசிகன்
01-07-2008, 02:28 PM
எல்லாம் பழக பழக நன்றாகிடும். இந்த விஸ்டா கூடத்தான். ஆனால் அதற்கு RAM அதிகமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. 2GB RAM என்றால் மிகவேகமாகவே வேலைசெய்கிறது. எனக்கு இப்போது ஓரளவு பரீச்சியமாகிவிட்டது...

தீபன்
02-07-2008, 03:10 AM
எங்கூர்ல இப்பகூட விண்டோஸ் 95 பயன்படுத்திறமாக்கும்!

இதயம்
02-07-2008, 05:03 AM
விண்டோஸ் 98-க்கு பிறகு என்னோட செல்லம் இன்றும் எக்ஸ்பி தான்..!! விஸ்டா அதன் பயனாளர்களுக்கு பெரும் தொந்தரவாகவும், கடினமாகவும் இருந்ததால் தான் வியாபார ரீதியில் பெரும் தோல்வியை அடைந்தது. அதை சரி கட்டத்தான் எக்ஸ்பியின் விற்பனை நிறுத்தப்படுகிறது என நினைக்கின்றேன். ஆனால், இந்த முடிவு நிச்சயம் சரியானதல்ல..!! விற்பனையாளர்கள் தனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமையை பயனாளர்களிடமே விட்டுவிடவேண்டும். எதையும் திணிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. அப்படி விஸ்டாவை திணிப்பாளர்களேயானால் கள்ளச்சந்தையில் எக்ஸ்பி விற்பனை பெருகுவதை அவர்களால் தடுக்க முடியாது...!!

அன்புரசிகன்
02-07-2008, 05:47 AM
இதயமே.... அவர்களது வியாபார தந்திரோபாயங்களை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உங்களுக்கு அவர்கள் XP தரவேண்டும் என்ற ஒரு கடப்பாடு microsoft ற்கு இல்லவே இல்லை....

தவிர விஸ்டா ஒன்றும் வியாபாரரீதியில் தோல்வியடையவில்லை. சிறுவர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளதாக பிபிஸியின் ஆய்வறிக்கை ஒன்றில் உண்டு. பெரியவர்கள் உங்களுக்கு தேவையானவை எதுவோ அவற்றை பயன்படுத்தலாம். உங்களிடம் XP இருக்கும் என்றால் நீங்கள் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக வரவிருக்குமு் மென்பொருட்கள் XP ற்கு லாவகமாகத்தான் வரும் என எதிர்பார்க்க முடியாதே.... வளர்ச்சிகளையும் புதியவற்றையும் நல்லவையாக இருக்கும் பட்சத்தில் வரவேற்பது நலமே....

praveen
02-07-2008, 06:41 AM
மைக்ரோசாப்ட் விற்பனையைத் தானே நிறுத்த சொல்கிறது. அதை உபயோகிப்பதை அல்லவே. மேலும் முந்தைய விண்டோஸ் பதிப்புகள் விற்பதை நிறுத்தி பல வருடங்களாகியும் இன்னும் அது பல இடங்களில் (பழைய கணினிகளில்) பயன்பாட்டில் உள்ளது. இன்னும் சில வருடங்களில் அந்தந்த பழைய கணினிகள் பழுதுபட்டு, புதுப்பிக்க உதிரிப்பொருள் கிடைக்காது என்ற நிலை வரும் போது அதுவும் தானே ஒழிந்து போகும்.

புதுப்புது தொழில்நுட்பம், அநேக டிரைவர் மென்பொருட்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஒருங்கே உள்ளமைத்து தருவதால் அடுத்தடுத்த ஓ.எஸ் களின் கொள்ளளவு அதிகப்படுகிறது. இது தவிர்க்க முடியாததே.

இன்னும் 10 வருடத்திற்கு மேல் எக்ஸ்.பி பொது பயனீட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ராஜா
03-07-2008, 07:23 AM
ஆமண்ணா, விஸ்டா நிறுவுவதற்கு மட்டும் 8 GB இடம் தேவைப்படுகிறது.. இதுவே எக்ஸ்பி வெறு 550 MB இடம்தான் எடுத்துக்கொள்ளும்.. Linux-சை நோக்கி பயனர்கள் செல்ல இது நல்ல தருணமாக அமையும் என்று நம்புகிறேன்..

லினக்ஸ் பற்றி எழுத்தாளர் சுஜாதாவும் சிலாகித்து கூறுவார்.

நாம் இன்னும் லினக்ஸ் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலேயே அதைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

நோக்கியா, நேஷனல் பானாசோனிக், போன்றவை சராசரி இந்தியர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவை என்பதால் மற்ற நேர்த்தியான பிராண்டுகளை உபயோகிக்காமலே நாம் உதாசீனம் செய்வதைப்போல..!

இதுபற்றி நன்கு அறிந்தவர்கள் விரிவாக ஒரு திரி துவக்கினால் நன்று.