PDA

View Full Version : முதல் முயற்சி.... பிழைதிருத்த வாங்கோ...செல்வா
01-07-2008, 01:24 AM
ரொம்ப நாளாவே மரபுக்கவிதைகள் எழுதணும்னு ஆசை. வெண்பா எழுதுவது எப்படிண்ணு மன்றம் வந்தப்புறம் நிறைய திரிகள் வாசிச்சன் அதிலருந்து எப்படியாவது எழுதிப்பழகணும்னு ஆசை அதிகமாயிடுச்சு. மன்றத்தை விட்டால் எழுதிப்பழக வேறு எந்த இடமிருக்கிறது... அதனால துணிந்து களத்திலறிங்கிட்டேன்.

என்ன ஆனாலும் சரி உருப்படியா ஒரு வெண்பாவாவது எழுதாம இந்த இடத்த விட்டு போறதா இல்ல.... உங்கள விடுறமாதிரியும் இல்ல.. பிழைதிருத்தி என்ன எழுதவைக்கிறது உங்க கைல தான் இருக்கு...தனைமறந்த தந்தை வினைமறந்த தம்பி
எனைமறந்த காதல் விலைமறந்த வேலை
இவைநிறைந்த உள்ளம் துயில்மறந்த வேளை
கவிநிறைந்து வந்தமுதல் பா

***********************************************************************

நான்செய்த தீங்கென்ன நல்மனம் இல்லா
வான்செய்த தீங்காலே வெந்தெரியும் மண்பாலை
தான்செய்த தீப்பிழம்பு தந்ததிந்த கொப்பளங்கள்
நன்செய்ய ஏது மருந்து

***************************************************************************

உடல்வலி என்றே உருகிடும் மாந்தர்
குடல்வலி என்றே மருகிடும் மாந்தர்
உடல்நிலை எண்ணாது போவர் தமக்கு
மனவலி வந்தால் மறந்து

"பொத்தனூர்"பிரபு
01-07-2008, 01:53 AM
நீங்களாவது முயர்ச்சித்து எழுதி விட்டீர்கள்
நான் இப்போதுதான் முயற்சியிலே இருக்கேன்
இருந்தாலும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

தீபன்
01-07-2008, 02:09 AM
பிழை பிடிக்கிறது தானே றொம்ப சுலபம்னு இந்தபக்கம் வந்தா இப்பிடி பண்ணிப்புட்டியே நண்பா... சரி தெரிந்தால்தானே பிழை சொல்ல... ஏன் நண்பா, நல்லாத்தானே இருந்தாய்...
இம்ம்ம்... மன்றத்தை ஒரு வழிப்பண்றதுன்னு முடிவு செய்தப்புறம் நான் என்ன சொல்ல...
வாழ்த்துக்கள்... தொடரட்டும் ஊர்வலம்...
அனுபவஸ்தர்கள் வருவார்கள் பட்டைதீட்ட...

ராஜா
01-07-2008, 04:28 AM
எனக்கு கவிதைபற்றி ஒன்றும் தெரியாது செல்வா.

வெண்பாவுக்கு இரண்டாம் அடியின் இறுதி வார்த்தையில் மோனை இருக்குமோ..?

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும். வாழ்த்துகள்.

அல்லிராணி
01-07-2008, 05:09 AM
இவைநிறைந்த உள்ளம் துயில்மறந்த வேளை
கவிநிறைந்து வந்தமுதல் பா

கவி-நிறைந்து - அழகு நிறைந்து,,,

அனைத்து துன்பமும் உள்ளத்தில் நிறைந்து தூக்கம் இன்றி உழல்கையில் அழகு மிகுந்து வந்த முதல்பாட்டு!

அழகு நிறையக் காரணம் என்னவோ? இல்லை அந்தப் பாட்டு யாரோ? யாரைப் பற்றியோ?

1. ஒற்றுகள் - காணவில்லை

தனைமறந்தத் தந்தை வினைமறந்தத் தம்பி
எனைமறந்தக் காதல் விலைமறந்த வேலை
இவைநிறைந்த உள்ளம் துயில்மறந்த வேளை
கவிநிறைந்து வந்தமுதல் பா


2, மோனை - மிகக் குறைவாக உள்ளது, மோனை ஒரே அடியிலும் வரலாம் அல்லது ஒவ்வொரு அடியில் முதலெழுத்தாகவும் வரலாம். மோனைக்கென்று ஒரு இலக்கணமுண்டு. கவனிக்கவும். இவை - கவி எதுகைகள் அல்ல என எண்ணுகிறேன். வ - கரத்தின் உடனிணைந்த ஒற்றும் இலக்கணப்படி இணைய வேண்டும்.

3. விலைமறந்த வேலை - விலைமறந்த வேலை துக்கம் தரும் விஷயமா? சந்தோஷம் தரும் விஷயமா? பயன் கருதாத உழைப்பு எனப் பொருள்படுகிறதே. அது மன உழைச்சலை உருவாக்குமா?

4. எனை மறந்த காதல் - காதல் உங்கள் நினைவில் இருப்பதே காதல் உங்களை மறக்காததால்தான். அன்பு செய்ய ஆருளர் என்ற அர்த்தம் தொணிக்க எழுத முயற்சித்து உள்ளது புரிகிறது, பிரிந்த காதலர்கள் தான் உண்டு. காதல் இல்லையல்லைவா?

5. எனைமறந்த காதல் - கவிநிறைந்து வந்த முதல் பா
காதலால் மறக்கப்பட்ட ஒரு இதயத்தில் இருந்து அழகுமிகுந்த பா வருவது சாத்தியமா?


இரண்டாவது பா இலக்கணத்தில் மிகப் பொருந்துகிறது. முதல் பாவில் மோனைச் சிறப்பு குறைவு.

இங்கும் ஒற்றுக் குறைபாடுகள் விரவியுள்ளன,

இங்கும் பொருளைக் காண்க..

வான் பொய்த்த காரணத்தில் பூமி பாழாகி மண் சூடாகி நடக்கையில் காலில் கொப்புளங்கள் வந்தன என வானின் மீது பழியைப் போட்டாயிற்று..

காலணி என்னாயிற்று என்று வானம் திருப்பிக் கேட்காது என்ற தைரியம். உன் கைகள் வெட்டிய மரங்கள் வினா எழுப்பாது என்ற தெம்பு தெரிகிறதே!!!

அவ்வப்போது வானம் பொய்ப்பது மனிதனே ஏரிகளை, குளங்களை தூர் எடுத்து நதியின் கரைகளை பலப்படுத்து எனக் கொடுக்கும் பழுது பார்க்கும் நேரமல்லவா?? வெம்மைக் கொப்புளங்கள் குணமாக மருந்து என்ன தெரியாதா மனிதனுக்கு?


மூன்றாவது பாடலிலும் கடைசி அடி எதுகை இணையாததால் இனிமை குறைகிறது. குடல் உடலில் சேர்த்தியா இல்லையா? உடல் தனி குடல் தனியோ?

இயற்கைக்கு முரணான கருத்துகள் தான் இவையும்..

மனவலி - மனதின் வலிமை, மனதின் துன்பம்

மனத் துன்பம் வந்தால் அனைத்து நோய்களும் கூடவே வரும். மனவலிமை வந்தால் எல்லாத் துன்பங்களும் ஓடிவிடும்.

மனவலி வந்தார் தமக்கு என்பதை மனவலி கொண்டார் தமக்கு என மாற்ற, மனவலிமை உள்ளவர்க்கு அனைத்து வலிகளும் மறந்து போகும்.. என்று நேர் அர்த்தம் கொடுக்கும்.

எழுத எழுத இலக்கணம் வசப்படும். இலக்கணத்தின் கட்டுக்குள் அடங்கியதே ஆயினும் கருத்துச் சிறப்பு மிக முக்கியம்.

இல்பொருள் - உவமைக்கு மட்டுமே

அணியழகு தரவும் முயற்சிக்கலாமே!!!

ஆதவா
01-07-2008, 05:22 AM
கைகொடுங்க செல்வா... பாராட்டுகள்.

பிழையைப் பொறுத்தமட்டில் அல்லிராணி சொன்னதைவிட நமக்கு ஒன்றும் தோணவில்லை. சரி இருந்தாலும் ஒன்று சொல்கிறேன்..

நல்மனம் இல்லா வான்செய்த -

இல்லா -தேமா, மாமுன் நிரை வரவேண்டும். ஆனால் வந்ததோ நேர் (வான்) அதை நிவர்த்தி செய்திடுங்கள்

மற்றபடி கருத்து சற்று ஒட்டாதமாதிரிதான் எனக்கும் தெரிகிறது.. ஆனால் முதல் முயற்சி.... அபாரம்... தொடர்ந்து எழுதுங்க.. நாங்க இருக்கோம்.

இளசு
05-07-2008, 12:12 PM
முதல் முயற்சிகளில் வெற்றியே செல்வா..

மனவலி வந்தால் - கவிதை பொருளும் அழகு!

வெம்பாலை - காட்சியழகு!

மன்றம் ஒரு பலகை!
வெண்பாவும் விரல்பழக்கம்..

தொடர்க.. மெருகின்னும் ஏறி மிளிர்க!
வாழ்த்துகள் செல்வா!