PDA

View Full Version : ஈழத்து செய்திகள் 25-07-2008தீபன்
30-06-2008, 10:52 PM
மன்றத்தின் செய்திச் சோலையில் பல திரிகள் இருந்தும் ஈழத்து செய்திகளை சரிவர தெரிந்து கொள்ளமுடியாத நிலமை காணப்படுகிறது. ஈழத்தில் என்னதான் நடக்கிறது என மன்ற நண்பரளும் உடனுக்குடன் அறியவேண்டுமென்ற ஆவலில் இத்திரியை ஆரம்பிக்கிறேன். நண்பர் மோகன்காந்தியின் வழியை பின்பற்றி முடியுமானவரை தினசரி இதை புதுப்பிக்க முயல்கிறேன், நண்பர்களின் ஆதரவோடு.

தவறான செய்திகள் இடம்பெற்றால் சுட்டிக்காட்டுங்கள். மேலதிக ஆலோசனைகளை வழங்குங்கள். செய்திகளை விமர்சியுங்கள். -நன்றி.

இன்றைய செய்திகளிற்கு (25.07.2008) இங்கே அழுத்துங்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=369225&posted=1#post369225)

தீபன்
30-06-2008, 11:15 PM
1) இலங்கையில் மனித உரிமை நிலைவரம்: அரசிடம் கேள்வி எழுப்புகிறது பிரான்ஸ்! ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் பீரிஸ்

2) மன்னாரின் நெற்களஞ்சியப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகப் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

3) உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகிலும் இனிமேல் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை! தலைநகரின் பந்தோபஸ்துக்குப் புதிய அவசரகால விதி வருகிறது.

4) கொழும்புக்கு வருவதைத் தவிர்க்குமாறு தமிழர்களை தான் கோரியமை நியாயம் என்கிறார் மனோகணேசன். வெள்ளவத்தை கைதுகள் நிரூபிப்பதாக சுட்டிக்காட்டு.

5) துணுக்காய் உதவி அரச அதிபர் கிளைமோரில் உயிரிழப்பு.

6) பூநகரி வன்னேரியில் இலங்கை இராணுவ ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்தவர் பலி - தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் நியமச்சீருடையை அணிந்திருந்தார்.

7) கண்டியில் கடமையாற்றும் வடக்குகிழுக்கு ஆசிரியர்கள் கண்கானிக்கப்படுகின்றனர்.

8) புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி

9) யேர்மனியில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 8,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு.

10) வவுனியாவில் நேற்று மாலையில் சுமார் 60 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

11) உயர்குழு விதித்த நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி மஹிந்தா இணக்கம் தெரிவித்தார். பாதுகாப்பு ஒப்பந்தம் எதனையும் இந்தியா செய்ய முடியாது.

12) தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லை; அவர்களின் ஜனநாயகத்துக்கு உயிர் மூச்சு வழங்கப்படுகின்றது ஜனாதிபதி மஹிந்த சொல்கிறார் இப்படி!

13) கதிர்காமம் ஆலய உற்சவத்திற்கு நடைபயணமாக வரும் அடியார்களை யால வனப்பிராந்தியத்தில் வைத்து படையினர் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கதிர்காமத்தில் தங்கியிருக்கும் காலத்திலும் கண்காணிக்கப்படுவர் - படைத்தரப்பு

14) இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பாரிய தலையிடியாக அமைந்துள்ளது – கடற்படை உயர் அதிகாரி

15) இலங்கையில் மற்றும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்.

மறத்தமிழன்
01-07-2008, 03:18 AM
நான் நினைத்தேன். நீங்கள் தொடங்கி விட்டீர்கள். செய்திகளை சற்று விரிவாக தந்தால் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். தொடருங்கள்.

Narathar
01-07-2008, 03:46 AM
தங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.......

நானும் ஆரம்பத்தில் இப்படி செய்ய நினைத்தபோதும், அதை தொடரும் சாத்திய கூறுகள் குறைவு என்பதால் விட்டு விட்டேன்....

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

தீபன்
02-07-2008, 02:13 AM
என்னுடைய முயற்சியும் எத்தனை நாளைக்கென்பது எனக்கே உறுதியில்லை. முடியுமானவரை தொடரலாமென எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழர்களே.

தீபன்
02-07-2008, 02:30 AM
1) சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களுக்கு இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவர். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.

2) யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் அரச அலுவலர்கள் அரச அதிபர் ஊடாகவே பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று முதல் புதிய நடைமுறை.

3) மகிந்தவை ஏற்றச்சென்ற உலங்குவானூர்தி மீது கனரகத் தாக்குதல்: புலிகளின் தாக்குதலில் முக்கிய பிரமுகர்களை ஏற்றி செல்லும் பெல்-412 உலங்குவானூர்தி சேதம்: சிறிலங்கா வான்படை

4) பிள்ளையானை அழிப்பதே கருணாவின் இலக்கு: கொழும்பு ஊடகம்.

5) அம்பாந்தோட்டையில் சிறிலங்கா படை முகாம் மீது புலிகள் அதிரடித்தாக்குதல்.

6) வவுனியாவில் வெவ்வேறு தாக்குதல்களில் 5 படையினர் பலி- 8 படையினர் காயம்.

7) "அரச சேவையாளனை அரச படைகளே கொலை செய்யும் செயல் கோழைத்தனமானது" - அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம்.

8) ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதலை இல்லாதொழிக்க நடவடிக்கை - புதிய காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன.

9) ஜேவிபி புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது - வீரவன்ச

10) மாங்குளப் பகுதியில் 8 யுத்த வானூர்திகள் வான்வழித் தாக்குதல்.

11) எனக்கு இங்குள்ளவர்களிடம் உயிராபத்து - சந்திரிகா குமாரதுங்க.

12) ஓய்வு பெற்ற காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா வடமாகாண அளுநராக நியமனம்.

13) எட்டுக் கோடித் தமிழர்களும் குரல் கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் - பா.நடேசன்.

14) தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் - புலவர் புலமைப்பித்தன்.

15) ஜேவிபியினால் முன்னெடுக்கப்படும் வேலை உயர்வு கோரும் வேலை நிறுத்தற்திற்கு ஐ.தே.க ஆதரவு.

Narathar
02-07-2008, 03:23 AM
செய்திகளுக்கு மிக்க நன்றி..............
முயற்சி தொடரட்டும்..... வாழ்த்துக்கள் ( மீண்டும் ;) )

தீபன்
03-07-2008, 09:48 AM
1) கச்சதீவுக் கடற்பரப்பில் சுமார் 1000 இந்திய மீனவர்கள் கைது.

2) புலிகள் என்னை இலக்கு வைத்தால் சவாலாக ஏற்றுக்கொள்வேன் ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் தகவல்.

3) திருமலையில் ஒருவர் சுட்டுக்கொலை,

4) இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கக் கோரித் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்.

5) இலங்கை அரசாங்கம் தமிழர் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜோன் மேர்பி அவுஸ்திரேலிய பா.உ

6) வவுனியா முன்னரங்கில் மோதல்கள்: 12 படையினர் பலி: 19 படையினர் காயம்.

7) வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது.

8) உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய.

9) சிறிலங்கா வானூர்திகள் ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் பணியாற்றும் பகுதியில் நேற்று நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலையடுத்து சூனியப்பிரதேசத்தில் பணியாற்றுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் மறுப்பு.

10) அக்ஸன் பெய்ம் தொண்டு நிறுவன பணியாளர் படுகொலையுடன் கருணா குழுவினருக்கும் தொடர்பு.

11) ஆள் கடத்தும் வெள்ளை வான்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாம்! கதை விடுகிறார் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.

12) வவுனியா - மன்னார் வீதியில் தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது 92 பேர் கைது. கொழும்பில் தொடரும் தமிழர்களின் கைதுகள், மோதரையில் தேடுதல் என்ற பெயரில் தமிழர்கள் சித்திரவதை.

13) இலங்கையில் தற்கொலை புரிவோர் வீதம் அதிகரிப்பு.

14) ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டது- பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

15) கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன.

தீபன்
04-07-2008, 12:13 AM
1) இரு தரப்புக்களினதும் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே பாதை திறக்கப்படும் ஓமந்தை போக்குவரத்துக் குறித்து செஞ்சிலுவை அதிகாரி.

2) தென்மராட்சியில் இரவில் வட்டமிட்ட மர்ம விமானம்: மக்கள் மத்தியில் பதற்றம்.

3) சிறிலங்கா சென்ற அமெரிக்க உயரதிகாரி மனித உரிமைகள் பாதுகாப்பை வலியுறுத்தல்.

4) துணை இராணுவக் குழுவின் தலைவர் கருணா என்று அழைக்கப்படும் முரளீதரன் பிரித்தானியாவிலிருந்து சிறீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

5) வன்னியில் ஆழஊடுருவும் அணியினர் சுட்டு பாடசாலை மாணவன் பலி.

6) நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் கொடுமைப்படுத்தப்படும் இடம்பெயர்ந்த மக்கள்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

7) மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் மூன்று மணிநேரம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல்கள் நடத்தப்பட்டது.

8) ஏறாவூரில் கிளைமோர் தாக்குதல் : மூன்று காவல்துறை , இரு பொதுமக்கள் காயம்.

9) கிளிநொச்சியில் கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறப்பு.

10) முன்னாள் கல்வி சிறீலங்கா அமைச்சர் ரிச்சாட் பத்திரன சுகையீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

11) வவுனியாவில் இளைஞன் சுட்டுக்கொலை.

12) சிறீலங்கா அரசுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என பெருமளவான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

13) ஐ.நா சபையைப் பக்கச்சார்பான அமைப்பாக இலங்கை கருதுகிறது - ஐ.நா. அதிகாரி

14) விமல் வீரவன்சவின் தலைமையிலான ஜே. என். பி. கட்சி தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

15) யாழ் குடாநாட்டுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கபடவுள்ளது - அனுர பிரியதர்சன யாப்பா.

தீபன்
05-07-2008, 12:20 AM
1) தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்: பா.நடேசன் வேண்டுகோள்.

2) துணுக்காய், மல்லாவி நோக்கி கடும் ஷெல் வீச்சு! ஆயிரக் கணக்கில் மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்வு!!

3) கருணாவின் மீது போர்க் குற்றம் சுமத்தக்கூடிய வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

4) இலங்கையில் சிறையடைக்கப்பட்டுள்ள 43 இந்தியர்களை நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவராலய அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு விசேட இராணுவப் பயற்சிகளை வழங்கவுள்ளது.

5) மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்- 2 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்பு.

6) பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை (வயது 70) வெள்ளை வான் குழுவினரால் கடத்தல்.

7) மன்னார் குடா பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் எதிர்வரும் 7 ம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.

8) மெய்வன்மைப் போட்டிகள் இன்று கொழும்பில் ஆரம்பம்; யாழ்.வீரர்கள், வீராங்கனைகள் செல்லமுடியாத நிலை.

9) யாழ்ப்பாணப் பல்கலைக்கத்தில் இருந்து மருத்துவத்துறையில் பட்டம்பெற்று வெளியேறும் மருத்துவர்கள் தமது பிராந்தியங்களிலேயே சேவையாற்ற வேண்டும் - சுகாதரத்துறை அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா.

10) ஓமந்தையுடான போக்குவரத்து 4 ஆவது நாளாக தடை: கடும் நெருக்கடியில் வன்னி மக்கள்.

11) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம்.

12) வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை. நான்குபேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

13) கிழக்கில் தீவுச்சேனையை தளமாகக்கொண்ட சுமார் 15 முகாம்களை சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையான் நிர்வகித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

14) புலிகளின் பகுதியிலிருந்து வெளியேறிய 400 தமிழர் கிரிமினல்கள் போல தடுப்பு முகாமில் சிறைவைப்பு! மன்னார், கள்ளிமோட்டை நிலைமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சித் தகவல்.

15) இலங்கைக்கு எதிரான மின் அஞ்சல்களால் பிரஸல்ஸ் நாட்டின் அதிகாரிகள் அதிர்ச்சி! அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தகவல்.

தீபன்
06-07-2008, 12:51 AM
1) மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்பு. மெல்பேர்ண் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

2) ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டவுண்ஸ்வியூ வெளியரங்க மைதானத்தில் குழுமியிருப்பதாக நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

3) சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் சனிக்கிழமை பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு. பேர்ண் வாங்க்டோர்வ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 4,000இற்கும் மேற்பட்ட மக்கள் பேரெழுச்சி.

4) கிழக்கில் கேணல் ராம் தலைமையில் 200 புலிகள்: கொழும்பு ஊடகம்.

5) கரும்புலி மாவீரர்களை, தமிழீழ தேசம் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளது.

6) மன்னார் பகுதியில் தோல்வியில் முடிந்த சிறிலங்காப் படையினரின் கொமோண்டோத் தாக்குதல்: "லக்பிம" வார ஏடு.

7) பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் -அமெரிக்கா.

8) ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்.

9) ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளைத் தொடர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடகவியல் துறை செயற்பாட்டாளர்கள் முயற்சி.

10) 80 லட்சம் பேர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் 1000 ரூபாவிற்கு மேல் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – தி.மு. ஜயரத்ன

11) கண்டியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணியுள்ளார் - பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்.

12) எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை - தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி.

13) அரியாலை கிழக்குப் பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொள்ள 12 வருடங்களின் பின் அனுமதி.

14) சட்டவிரோதமாக ஒருவரை நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது - கொழும்பு மேலதிக நீதிவான்.

15) மன்னார் விடத்தல்தீவுப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் 9 பிரதான முன்னரங்கப் பதுங்கு குழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உதயசூரியன்
06-07-2008, 03:38 AM
எனக்கு.. கலைஞரின் அறிக்கைகள்.. கடிதம் மற்றும்.. திராவிட முன்னேற்ற கழகத்தின்.. தலைவர்களின் விஷயங்களை தினம் எப்படியாவது அறிய துடிப்பேன்..

அதற்கு இணையாக.. நான் அறிய துடிக்கும் செய்தி.. விடுதலை போரட்ட.. மண்ணின் மைந்தர்களின்.. ஈழத்து தமிழ் புலிகளின்.. செய்திகளை அறிய துடிப்பேன்..

தீபன் அவர்களுக்கு.. நன்றி..
வாழ்த்துக்கள்..
உங்கள் சேவையை தொடருங்கள்.. வெளியில் இருந்து கண்டுவிட்டு செல்வேன்..
வாழ்க தமிழ்

தீபன்
07-07-2008, 11:27 PM
நன்றி நண்பரே. முடியுமானவரை நானும் விரிவான செய்திகளை காலப்போக்கில் தர முயல்கிறேன்.

தீபன்
07-07-2008, 11:28 PM
1) வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை.

2) கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு "சார்க்' வேளை முற்றாக இந்தியாவிடம்! மன்மோகனின் பாதுகாப்புக்கு 100க்கும் குறைவானவரே வருவர்.

3) தென்பகுதிகளுக்கு 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் ஊடுருவல் - புலனாய்வுப்பிரிவு.

4) ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறப்பு, சோதனைச் சாவடிக் கடமைகளுக்குச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திரும்பியுள்ளது.

5) வவுனியாவில் எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்பு, வாகனச்சாரதி கடத்தல். திருகோணமலையில் சிறுவன் கடத்தல், ஒருவர் சுட்டுக் கொலை.

6) மன்னார் கடலில் எரிபொருள் அகழ்வாராய்ச்சிக்காக இந்திய நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு.

7) அரசாங்கம் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளார்

8) "மிக்27' ஜெற் குண்டுவீச்சு விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்து! விமானி தப்பினார்; கட்டுநாயக்காவில் சம்பவம்.

9) வட்டக்கச்சி வான் தாக்குதல் முதியவர் படுகாயம்; வீடுகள்சேதம்.

10) மொனறாகலவில் புலிகள் தாக்குதல்: 2 காவல்துறையினர் பலி. அம்பாறையில் 2 சிறிலங்கா அதிரடிப்படையினர் பலி.

11) சிறிலங்காவின் தென்பகுதியில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக கூறி எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன அறிவித்துள்ளார்.

12) மிகின் லங்கா விமானசேவைக்கு எதிராக பணியாளர்கள் சட்ட நடவடிக்கை.

13) ஓட்டோச் சாரதியான இளைஞன் வீட்டுக்குச் சமீபமாக சுட்டுக் கொலை! அரியாலையில் நேற்று நண்பகல் சம்பவம்.

14) இன்னும் 20 வருடங்களுக்கும் அதிகமாக விடுதலைப் புலிகள் செயல்படுவார்கள் இராணுவத் தளபதி கூறியதாக "சண்டேலீடர்' விமர்சனம். இராணுவம் கருதுவது போன்று புலிகளை விரைவில் தோற்கடித்து விட முடியாது சொல்பவர் கருணா.

15) மன்னார் நளவன் வாடி, மூர்வீதி, கட்டுப்பள்ளி வாசல் ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான சிறிலங்காப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தளத்தில் தேடுதல் : 54 தமிழர்கள் கைது.

அகத்தியன்
08-07-2008, 07:11 AM
1) வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை.

14) இன்னும் 20 வருடங்களுக்கும் அதிகமாக விடுதலைப் புலிகள் செயல்படுவார்கள் இராணுவத் தளபதி கூறியதாக "சண்டேலீடர்' விமர்சனம். இராணுவம் கருதுவது போன்று புலிகளை விரைவில் தோற்கடித்து விட முடியாது சொல்பவர் கருணா.

ஒரு கவிஞரின் கவிதை நினைவுக்கு வருகிறது

"என்ன பிடிக்கிறாய் அந்தோணி?
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே!
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
புகுந்து கொண்டோடுதுடா சிஞ்ஞோரே"

தீபன்
09-07-2008, 12:07 AM
ஒரு கவிஞரின் கவிதை நினைவுக்கு வருகிறது

"என்ன பிடிக்கிறாய் அந்தோணி?
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே!
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
புகுந்து கொண்டோடுதுடா சிஞ்ஞோரே"

அதேதான்... ஆனா அங்க எலி... இங்க புலி...!

தீபன்
09-07-2008, 12:07 AM
1) ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றால் மட்டுமே புலிகளுடன் பேச்சு: மைத்திரிபால சிறிசேன. பேச்சுவார்த்தைக்கான அரசின் நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரிப்பு,

2) உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் கோரியவர்களை யாழ். சிறையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை.

3) சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இனிமேல் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அழைக்கப்படும் அரச சமாதான செயலகப் பணிப்பாளர் சொல்கிறார்.

4) பிள்ளையானுக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

5) சரத் பொன்சேகாவின் குழுவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்: ஜோசப் மைக்கல் பெரேரா.

6) குஞ்சுப் பரந்தனில் வான்வழித் தாக்குதல்கள்: பொதுமகன் ஒருவர் காயம்.

7) இலங்கை மோதல்களில் இதுவரை 338,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

8) கடந்த ஒரு மாதத்தில் 112 படையினர் பலி: 793 பேர் படுகாயம்

9) படைத்துறை வெற்றிகள் பேச்சுக்களுக்கு மாற்றீடாகாது: முன்னாள் ஐஆர்ஏ போராளி.

10) வேவ்வேறு மோதல்களில் சிப்பாய் பலி, 14 படையினர் காயம்

11) காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் தலைமறைவு.

12) திருமலையில் தமிழ் வர்த்தகர் நேற்றுச் சுட்டுக் கொலை.

13) சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

14) புத்தளம் அநுராதபுரம் வீதியில் சிராம்பிட்டியக் காட்டில் மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

15) இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் தொடரும் இராணுவ நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்படுகின்ற எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓவியன்
09-07-2008, 01:25 AM
6) குஞ்சுப் பரந்தனில் வான்வழித் தாக்குதல்கள்: பொதுமகன் ஒருவர் காயம்.

நான், பிறந்து வளர்ந்த பகுதி தீபன்....!! :frown:

தீபன்
09-07-2008, 02:09 AM
நான், பிறந்து வளர்ந்த பகுதி தீபன்....!! :frown:

அங்கேயே இருந்திருந்தால் வசனம்பூர்த்தியாகியிருக்குமோ...
(படுகாயமடைந்த பொதுமகனும் ஒரு இளைஞர்தான்...!)

ஓவியன்
09-07-2008, 02:16 AM
ஆமாம், தெரிந்தவரென நம்புகிறேன் - அவரது ஒரு காலினை அகற்றவேண்டி வருமென வைத்தியர்கள் கூறியுள்ளனர்

அன்புரசிகன்
09-07-2008, 02:37 PM
அண்மையில் நடந்த ஆசியக்கோப்பை துடுப்பாட்ட போட்டியின் தொடர் மற்றும் இறுதியாட்ட நாயகனாக விளங்கிய மென்டிஸ் ஒரு இராணுவ வீரர் என்றும் அவரை கௌரவிக்கும் வகையில் மகிந்த அவருக்கு 2ம் லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு கொடுத்துள்ளார். மென்டிஸ் ஆட்லறி எறிகணைப்படைப்பிரிவைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...

மேலதிக தகவலுக்கு இங்கே (http://www.puthinam.com/full.php?2b34OOo4b33A6DVe4d45Vo6ca0bc4AO24d3oImA2e0dU0MtHce03f1eW0cc3mcYAde)...

தீபன்
09-07-2008, 03:58 PM
அண்மையில் நடந்த ஆசியக்கோப்பை துடுப்பாட்ட போட்டியின் தொடர் மற்றும் இறுதியாட்ட நாயகனாக விளங்கிய மென்டிஸ் ஒரு இராணுவ வீரர் என்றும் அவரை கௌரவிக்கும் வகையில் மகிந்த அவருக்கு 2ம் லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு கொடுத்துள்ளார். மென்டிஸ் ஆட்லறி எறிகணைப்படைப்பிரிவைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...

மேலதிக தகவலுக்கு இங்கே (http://www.puthinam.com/full.php?2b34OOo4b33A6DVe4d45Vo6ca0bc4AO24d3oImA2e0dU0MtHce03f1eW0cc3mcYAde)...
ஆட்லறி வீசி தமிழ் மக்களை அலைய விடுபவர் இன்று பந்து வீசி இந்திய வீரர்களையும் அச்சுறுத்துகிறார்...!
விளையாட்டென்று பாராட்டுவதா...? விளையாட்டால் வந்த பதவி உயர்வு, அரசியல் என்பதால் எதிர்ப்பதா...?

தீபன்
10-07-2008, 04:30 AM
1) யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியை சேர்ந்த இரண்டு பொதுமக்கள்,
சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

2) மணலாறு; வவுனியாக் களமுனைகளில் 12 படையினர் பலி - 32 பேர் படுகாயம்

3) முல்லைத்தீவு கரையோரப் பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இருதடவை குண்டுத்தாக்குதலில் 8 படகுகளும் 5 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

4) முல்லைத்தீவில் தொடர் எறிகணை வீச்சு: 18 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு சீர்குலைவு. மாந்தை கிழக்குப் பகுதிகளை நோக்கி தொடர் எறிகணை வீச்சு.

5) சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வோருக்குப் பயண அனுமதி வழங்குவதைப் படையினர் மட்டுப்படுத்தியுள்ளனர்.

6) வெள்ளைவான் கடத்தல்களுக்கு அரசும் படையினருமே பின்னணி! ஆதாரங்களுடன் விவரங்களை ஐ.தே.க. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும்.

7) யாழ்ப்பாணம் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகளால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் சிக்கி இரு சிப்பாய்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

8) இராணுவத் தளபதி, கோத்தபாய ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு.

9) இலங்கை பத்திரிகை நிறுவன அதிகாரி தாக்கப்பட்டமை குறித்து சுவிடிஸ் அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு

10) புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வி: "டெய்லி நியூஸ்".

11) யாழ். மக்களுக்குச் சொல்லொணாத் துயரங்கள்; அந்த அவலங்களை நேரில் வந்து பார்த்து எழுதுங்கள்- முன்னாள் பேராயர்.

12) எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும்.

13) ஊடகவியலாளர்களைத் தாக்குபவர்களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பிடிக்கமுடியுமா?-ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

14) ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார்.

15) தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி.

மறத்தமிழன்
10-07-2008, 08:55 AM
14) ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார்.


இப்பிடி ஏதாவது பண்ணி பதவி உயர்வு பெற்றால்தான் உண்டு! களத்திலென்றால் ஒரேயடியாய் உயர்வுதான்.

தீபன்
11-07-2008, 03:29 AM
1) கல்முனையில் மூன்று சிங்களவர்கள் சுட்டுக் கொலை.

2) தொழிற்சங்கப் போராட்டத்தைக் குழப்புவதற்கு அரசாங்கம் படையினரின் உதவியை நாடியது. பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் படுதோல்வி – போக்குவரத்து அமைச்சர்; போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது - லால்காந்த

3) சிலாபம், முந்தல், கரிக்கட்டு வீதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்தின்பேரில் ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

4) சுமார் 30 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்.நகரில் இரண்டு திரை அரங்குகளில் ஒரே திரைப்படம் சமகாலத்தில் திரையிடப்பட்டது. கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் என்னும் திரைப்படமே கடந்த இரண்டு வார காலமாக இரண்டு திரை அரங்குகளில் திரையிடப்பட்டது.

5) வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் வியாழக்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் மற்றொரு உடலம் மீட்கப்பட்டுள்ளது.

6) லேக்கவுஸ் உறுப்பினர்களின் போராட்டத்தின் மீது அழுகிய முட்டைகளால் தாக்குதல்.

7) மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் ரவூப் ஹக்கீம். எம்.பி.பதவியை ஏற்கிறார்.

8) இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுமார் 9.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுலாச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

9) ஆகஸ்ட் திருவிழாவிற்கு முன்னர் மடுமாதா திருச்சொரூபம் கொண்டு வரப்படும் - மன்னார் ஆயர்.

10) உலகத்திலேயே ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக உலக பத்திரிகைகளின் அமைப்புத் தெரிவித்துள்ளது.

11) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12) தமிழக மீனவர்கள் புலிகளுக்கு உதவுவதாகக் கடற்படை தெரிவிப்பு.

13) புலிகளின் தாக்குதலையடுத்து புத்தல – கதிர்காமம் பிரதான வீதியருகேயுள்ள காடுகள் அழிக்கப்பட்டு சுமார் 10 இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 40 கிலோ மீற்றர் தூர வீதி இருமருங்கிலுமுள்ள காடுகள் 100 மீற்றர் அகலத்திற்கு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

14) வவுனியா ரயில் நிலையம் முற்றாகச் செயலிழக்கும் நிலை: அங்கிருந்த சரக்கு மற்றும் எண்ணெய் ரயில் பெட்டிகள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

15) கிளிநொச்சியில் தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீபன்
12-07-2008, 12:07 AM
1) புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

2) சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள கலகேவில் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

3) யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் அங்குள்ள இளம் பெண்ணகளை அச்சுறுத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி வருவதாக, குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

4) இலங்கையின் வடபகுதியில் தீவிரமடையும் மோதல் காரணமாக இந்த வருடத்தின் இனி வரும் அரை ஆண்டுகாலப்பகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இடம் பெயரலாம் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

5) சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு கடந்த மாதம் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிராயச்சித்தமாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை தமிழர் தரப்பு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக "சுடரொளி" வார ஏடு தெரிவித்துள்ளது.

6) யாழ்குடாநாட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வடமராட்ச்சி உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டித்துறை ஆகியபகுதிகளில் பெருமளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

7) மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் டாங்கி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

8) யாழ். குடாநாட்டில் தென்மராட்சி கரையோரங்களில் நேற்று நள்ளிரவு மர்ம உலங்குவானூர்தி ஒன்று சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிகவும் தாழ்வாக வட்டமடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

9) பம்பலப்பிட்டி கடற்பரப்பில் ஏற்பட்ட ஒருவிதமான திடீர் மாற்றத்தினால் கடல் நீர் மேலெழுந்து, சில நிமிடங்கள் வரை மரம்போல் காட்சியளித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துக்குள்ளானதுடன் பிரதேசத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

10) கெப்பிற்றிக்கொல்லாவ வவுனியா வீதியில் அமைந்திருந்த சிறிலங்கா பொலிசாரின் காவலரண் மீது துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னி மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல்களிலும் மிதிவெடிகளிலும் சிக்கி இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர்.

11) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

12) மோதரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு திராய்மடுவில் ஒருவர் கடத்தல்.

13) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பில் சீனா அதிருப்தி அடைந்திருப்பதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14) கொழும்பில் பணத்திற்காகப் பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட முன்னாள் வான்படை அதிகாரி நிசாந்த கஜநாயக்கவைப் பிணையில் செல்ல இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

15) துணை இராணுவக் குழுக்ககளின் தலைவர்களான தலைவர் கருணா, டக்ளஸ் தேவானந்த ஆகிய இவரும் விரைவில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தீபன்
13-07-2008, 12:04 AM
1) பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.

2) இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி 2 தமிழக மீனவர்கள் பலி: மேலும் ஒருவர் காயம்.

3) விடுதலைப் புலிகளுடன் பேச தயார் - முதலில் ஆயுதங்களை கீழே போட வேண்டும்: ராஜபக்ஸ.

4) மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார்.

5) ஒட்டுக்குழுக்கள் இடையே நிழல்யுத்தம்: கருணா பிள்ளையான் சந்திப்பு.

6) ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

7) வன்னிக்களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.

8) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காயில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

9) இலங்கையின் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப் படுத்தும் ஆணைக்குழு, கையடக்க மற்றும் சீ டி எம் ஏ தொலைபேசிகளுக்கென புதிய சட்ட ஒழுங்குகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

10) வவுனியா மாவட்டத்தில் உள்ள சேமமடுப்பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

11) சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் துணுக்காய் கல்வி வலயத்தில் 26 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

12) ஒரு வருட காலத்திற்குள் இலங்கையில் காணி விலை 10 மடங்காக அதிகரித்துள்ளது: அமைச்சர் ஜீவன் குமாரதுங்க.

13) கொழும்பில் தமிழ் இளைஞன் காணமல் போயுள்ளார்.

14) சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மன்னார் மாவட்டத்திலிருந்து 1,615 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரச செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

15) வன்னியில் பெற்றோல் 1000 ரூபா: சீமெந்து 2 ஆயிரம் ரூபா: அரிசி 150 ரூபா: - சிவாஜிலிங்கம் எம்.பி.

தீபன்
15-07-2008, 08:30 AM
1) தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலைக் கண்டித்துச் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

2) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தொன்றில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3) வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு - 3 இராணுவத்தினர் பலி 10 க்கும் மேற்பட்டோர் காயம்.

4) சிறீலங்காவிற்கு நன்கொடையாகவும் சிறிய வட்டி வீதத்தில் கடனாகவும் வழங்கும் நாடுகளின் வரிசையில் ஈரான் ஜப்பானையும் முந்திக்கொண்டு முதன்மை பங்கு வகித்துள்ளது.

5) அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப்.

6) சிங்கள தேசத்தின் பெரும்போருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்ளை அழைக்கிறார் வைகோ.

7) அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

8) களனி பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர், ஆர் ராஜேஸ்வரன், கடந்த ஜூலை 4 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.காலையில் பணிக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9) வவுனியாவில் முன்நகர்வுத் தாக்குதல் முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் படுகாயம்

10) யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

11) இந்திய அரசாங்கம், 1984 ஆம் ஆண்டில் சுமார் 29 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

12) தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் பொருட்டு இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

13) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்தவர் மரணமானார்

14) அக்கரைப்பற்று வட்டமடுவில் இரு தமிழ்க் குடும்பஸ்தினரைக் காணவில்லை.

15) கொழும்பு, முகத்துவாரம் (மோதர) பகுதித் தமிழர்களை விடிகாலை நித்திரைப் பாயில் இருந்து எழுப்பி, அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி, ஒவ்வொருவராகத் தனித்தனியாக வீடியோப் படம் எடுத்து, மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸார் நடத்தியது தொடர்பாக அரசின் சார்பில் சட்டமா அதிபரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தருமாறு உயர் நீதிமன்றம் நேற்று காட்டமான உத்தரவு.

தீபன்
17-07-2008, 12:05 AM
1) மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனிதப் புதைகுழியில் 16 உடலங்களுக்குரிய 32 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

2) காங்கேசன்துறையை இந்தியாவிடம் தாரைவார்ப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் முற்படுவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. சிமெந்து ஆலையைப் பார்வையிடுவதற்காக இந்தியாவின் "ஆதித் திய பிர்லா' என்ற நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள் கின்றனர்.

3) கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் எழுதிய "உடையாத விலங்குகள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

4) வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். மன்னார் களமுனைகளில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலி- 22 பேர் காயம். அம்பாறையில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: மூவர் பலி.

5) அளவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை. தெகிவளையில் பொலிஸ் பதிவுகளுடன் தங்கியிருந்த இளைஞர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வெள்ளை வானில் கடத்தல்.

6) தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்காத இந்திய மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

7) சார்க் மாநாட்டையடுத்து 48 சிறிய வர்த்தக நிலையங்கள் செயலிழப்பு: கடந்த 16ம் திகதியில் இருந்து ராஜகிரிய கொற்றி வீதியில் அமைந்தள்ள 48 சிறியவியாபார நிறுவனங்கள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு அடுத்த மாதம் மூன்று தினங்கள் அரச விடுமுறை நாள்களாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது.

8) கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள்: குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் கொட்டும் மழையிலும், மரத்தின்கீழ் தஞ்சம்

9) யாழ்.மக்களுக்கு பயணப் "பாஸ்'' வழங்கும் விதிமுறையை வாபஸ் பெறவும் பெரும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டி மாவை சேனாதிராஜா ஜனாதிபதிக்குக் கடிதம்.

10) "எமது அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களை அரசு படையில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்' இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவித்திருக்கிறார்.

11) கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

12) இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவியளிக்கத் தயார் என தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

13) வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

14) இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் சபை தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

15) இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், ஜனாதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்றுத் தள்ளுபடி செய்துள்ளது.

தீபன்
18-07-2008, 12:03 AM
1) அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் விடயத்தில் ஐரோப்பிய நீதிமன்றம் திருப்புமுனைத் தீர்ப்பு. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் அனைத்துத் தமிழர்களும், அபாயத்தை எதிர்நோக்ககூடும் - ஐரோப்பிய நீதிமன்றம்.

2) வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. சுமார் 3000 பேர் வரை அவலநிலைக்கு உள்ளாயுள்ளனர். 5 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

3) சார்க் மாநாட்டுக்காக இலங்கை வருகை தரும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக இந்தியக் கடற்படை மூன்று கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

5) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற் றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

6) நான்கு பிள்ளைகளின் தந்தையை யாழ்ப்பாணத்தில் காணவில்லை. ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்.

7) தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சிறீலங்கா ஜனாதிபதியுடன் பேசப்படும் - மன்மோகன்சிங். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தமிழக அரசு அழைப்பு

8) ஐநா நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறீலங்காவுக்கு தொண்டாற்ற வருவதற்கு புதிய நடைமுறைகளை சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

9) கோத்தபாய ராஜபக்ஸவை, சிறீலங்கா பாதுகாப்புத்துறை துணை அமைச்சராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளில், மகிந்த இறங்கியுள்ளார்.

10) ஈழத்தீவில், வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் செயற்படுவதாக, அமெரிக்க நாளேடு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

11) தமிழ் மொழில் இருந்து தான் ஜப்பான் மொழி உருப்பெற்றது என தனது ஆராச்சி மூலம் கருத்து தெரிவித்த ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ கடந்த திங்கட்கிழமை தனது 89 வது வயதில் காலமானார்.

12) சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டு வரும் குழுவுடன் வெளிநாட்டிலிருந்து சிறிலங்கா திரும்பிய துணைப்படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான சுமன் என்பவரும் இணைந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13) பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் மலோக் பிறவுண் பிரபு அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானியத் தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

14) தற்போதைய நிலையில் சிறிலங்காவில் தமிழர்கள் என்றும் இல்லாதவாறான பலத்த இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் அவரது வலது கரமாக இருந்து செயற்படடு வந்தவரும், பிரபல அரசியல்வாதியுமான சிறிசேனக்கூரே தெரிவித்துள்ளார்.

15) கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

தீபன்
19-07-2008, 02:22 AM
1) கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்- ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி :சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

2) வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்குப் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

3) மட்டக்களப்பில் துணைக் குழுக்கள் சந்தித்துப் பேசுவதில் தடை- ஏறாவூர் புதைகுழியின் எதிரொலி: ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

4) இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிரம் தாழ்த்தி நிறைவேற்றி வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

5) தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

6) தென்னாபிரிக்காவில் நீதிபதியாகவும் 2003 ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் பணியாற்றியவருமான நவநீதம்பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைவர் பதவி வகிப்பதற்கு பான் கீ மூன் அவர்களிடம் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவருகிறது.

7) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடு புதைகுழி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, இந்த புதைகுழிக்கு சிறிலங்காப் படையினரும் துணைப் படைக்குழுவினருமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

8) மன்னாரில் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் உள்ள தமது உடைமைகளை எடுப்பதற்காகவும் வயலில் நீர்பாய்ச்சுவதற்காகவும் சென்றவர்களில் ஒருவர், சிறிலங்காப் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

9) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு படகுகள் சேதமடைந்துள்ளன.

10) முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட ஓயாத அலை - 1 இன் 12 ஆம் ஆண்டு நிறைவு வெற்றி விழா நடைபெற்றது.

11) கறுப்பு ஜூலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பா முழுவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்குத் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புலி முத்திரை நீக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

12) உரிய பாதுகாப்பு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தாம் நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் ஜானக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

13) இலங்கையில் தற்போது காணப்படும் தேர்தல் முறைமை அடக்குமுறைகளின் மூலம் ஜெயிக்கக் கூடியதொன்றென தேர்தல் ஆiணாயளர் தயானந்த திஸநாயக்கவை மேற்கோள்காட்டி லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

14) இலங்கையில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு பட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

15) சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழக உயர் நிலை உறுப்பினர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி, ’கச்சதீவை மீட்பதற்கான காலம் வந்துவிட்டதாக’ தெரிவித்துள்ளார்.

தீபன்
20-07-2008, 12:07 AM
1) மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் 17 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் துணுக்காய் பிரதேசத்தில் கோட்டைகட்டிய குளம் தவிர்ந்த 19 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்தவர்களுமாக சுமார் 7000 வரையிலான குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன.

2) கொழும்பு கொம்பனித்தெரு வீடுடைப்புச் சம்பவத்தின் போது செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

3) இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

4) சிறீலங்காவின் அமைந்துள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த வருட இறுதிக்குள் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது. பிரித்தானியத் தூதரகம்

5) திருமுறிகண்டி பாடசாலையில் இடம்பெயர்ந்த மாணவர்கள் அதிகரித்துள்ளதால் இடநெருக்கடியால் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

6) சமுராய் கத்தியைப் பயன்படுத்தி நபர் ஒருவரின் தலைப் பகுதியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த தமிழ் இளைஞர் குழுவொன்றுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

7) அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக அடிக்கடி சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன.

8) "சார்க்' மாநாட்டை முன்னிட்டு யாழ். குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துகள் சுமார் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

9) வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தென்பகுதிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளாவதாகப் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா தெரிவித்துள்ளார்.

10) தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதல்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார்.

11) கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள மொன்றியல் நகரில் பொங்கு தமிழ் நிகழ்வு.

12) யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

13) சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

14) நாளை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

15) புலிகளைச் சர்வதேச ரீதியில் முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்த ஜே.வி.பி.க்கு அரசாங்கம் புலி முத்திரை குத்தியுள்ளமை நியாயமற்ற செயல் என அக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மறத்தமிழன்
21-07-2008, 05:49 AM
1) மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் 17 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் துணுக்காய் பிரதேசத்தில் கோட்டைகட்டிய குளம் தவிர்ந்த 19 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்தவர்களுமாக சுமார் 7000 வரையிலான குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன.


மீண்டும் ஓர் இடப்பெயர்வு அவலம் வன்னியில். இதை கேட்க எந்த நாடும் இல்லை. கொழும்பில் குண்டு வெடித்தால் மட்டும் அது பயங்கரவாதம்.

உதயசூரியன்
21-07-2008, 10:44 AM
மீண்டும் ஓர் இடப்பெயர்வு அவலம் வன்னியில். இதை கேட்க எந்த நாடும் இல்லை. கொழும்பில் குண்டு வெடித்தால் மட்டும் அது பயங்கரவாதம்.


அவன் செய்வான் இவன் செய்வான் என்று எதிர் பார்க்க கூடாது.. தமிழர்களுக்குள் தமிழர்களாக.. கிண்டலிடித்தாலும் பரவாயில்லை.... அனைவருக்கும் அனைத்து நாட்டில் உள்ள தமிழர்கள் இதை ஒரு பிரச்சாரமாக செய்ய் வேண்டும்..

முடிந்தால் உலக நாட்டு மக்களின் பிரதினிதிகளிடம் கொண்டு செல்லும் முயற்சியை கையாளுங்கள்..
அல்லது உங்களால் இயன்ற சிறு ஆதர்வையாவது தெரிவியுங்கள்..

என்னுடைய்ய வேலை செய்யுமிடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் பிலிப்பினோக்களிடம்.. சொன்ன போது தான்
தமிழர்களின் விடுதலை போரட்டத்தினை உணர்ந்தனர்..

ஆனால் என் கூட இருக்கும் தமிழர்கள்.. பிழைக்க வந்த இடத்தில் எதற்கு என்று கேட்க மட்டும் தான் முடிந்தது..

ஆனாலும் என்னுடைய சிறு பங்களிப்பை ஒரு மூலையில் இருந்து செய்து கொண்டு தானிருப்பேன்..

இன்று அதிர்ச்சியான செய்தியும் ஈழத்தில் நடந்துள்ளது...

பொது மக்களை குறி வைத்து மிக பெரிய வான் மற்றும் கடல் வழி தாக்குதலை நடத்தியது.. சிங்கள ராணுவம்..

வாழ்க தமிழ்

தீபன்
21-07-2008, 12:34 PM
ஆமாம் தோழரே... மற்ற இனத்தவரை விடுவோம், மற்ற நாட்டிலிருக்கும் பல தமிழர்களுக்கேகூட ஈழப் போராட்டத்தினப்பற்றி தெளிவில்லை. தெரிந்து கொள்ளும் விருப்புமில்லை. நீங்கள் சொன்னதுபோல் நம்மாலான சில பங்களிப்புக்களையாவது செய்யவென எண்ணியதின் ஒரு முயற்சிதான் இந்த திரி.
ஆனா. இந்தப்பக்கம் யார் வாராங்க.... மாளவிகா படத்தில் நடிக்க மறுத்ததை தலைப்புச் செய்தியாக சொல்லும் சண் தொலைக்காட்சி ஈழத்தில் குறைந்தது 50க்குமேற்பட்ட உயிர்கள் இழக்கப்ப்ட்டால்தான் ஒருவரிச் செய்தியாகவாவது சேர்த்துக் கொள்கிறது... இது அதன் தவறல்ல... அப்படி செய்தால்தான் மக்களை சென்றடையுமென்ற வகையில் மக்களின் மனப்பாங்கை தான் காட்டுகிறது.
ஆனாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி தோழரே.

தீபன்
21-07-2008, 12:35 PM
1) இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்படப் பல முக்கிய யோசனைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க கங்கிரஸின் பிரேரணைகள் தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரேரணை தொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

2) கடந்த சில தினங்களுக்கு முன்னர், மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவுப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் ஓரிரு நாள்களில் விடத்தல்தீவிலிருந்து வடக்கே 12 கிலோ மீற்றர் தூரம் சடுதியாக முன்னேறி நேற்று இலுப்பைக்கடவையையும் இராணுவம் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

3) ஒரு நாடு எப்பொழுதும் பெரும்பான்மை இனத்தவராலேயே ஆளப்பட வேண்டும். அதனை விடுத்து சிறுபான்மை இனத்தவரால் ஆளப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். இந்த வகையில் 79 சதவீதத்தினரைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள இனத்தவராலேயே எப்பொழுதும் ஆளப்படும் என கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

4) பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன்.

5) மன்னார் பள்ளமடுப்பகுதியில் வீடுகளில் பொருட்களை ஏற்றச்சென்ற போது காணாமல் போன நால்வரில் மூவர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

6) முழங்காவில் அன்புபுரம் கரையோரக் கிராமம் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் மற்றும் கடற்படையினரின் படகுகள் நடத்திய குண்டுத்தாக்குதல்களில் சிறுவர்கள் உட்ட 9 பேர் காயமடைந்துள்ளனர். கடற்றொழிலாளர்களின் 15 படகுகளும் சேதமடைந்துள்ளன.

7) யாழ். கொழும்பு விமான சேவை 27 ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தம் கப்பல் சேவையில் இப்போதைக்கு மாற்றமில்லை.

8) கனடா கியூபெக் தமிழ்ச் சமூகத்தினால் நேற்று முன்நாள் நடத்தப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

9) வலிந்த தாக்குதலை புலிகள் ஆரம்பிக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்: முகமாலை இராணுவ அணி கட்டளை அதிகாரி

10) அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வவுனியா பாலம்பிட்டி பாதுகாப்பு முன்னரங்கப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

11) சார்க் மாநாட்டை குழப்ப மாட்டோம்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு.

12) அம்பாறை காரைதீவில் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காரைதீவு ஏழாம் பிரிவில் நேற்று முன் தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

13) ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் மஸாகிக்கோ கொமுரா சிறிலங்காவிற்கு விஜயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14) இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரத்தை தக்கவைக்கத் திட்டமிடுகின்றார் மஹிந்த அது ஒருபோதும் நடவாது என்கிறது ஜே.வி.பி.

15) இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய வகையிலான புகைப்படக் கண்காட்சியொன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தீபன்
22-07-2008, 07:01 AM
1) சார்க் மாநாட்டை முன்னிட்டு ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் - விடுதலைப்புலிகள். சார்க்மாநாடு நடைபெறுவதையிட்டு ஒருநல்லெண்ண நடவடிக்கையாக யூலை 26 முதல் ஒகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நேற்று நள்ளிரவு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆலோசிப்பதற்கு கால அவகாசம்தேவை என அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ராஜீவ் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

3) கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் துயர நினைவு சுமந்து, புதன்கிழமை இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

4) சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கிருலப்பன பகுதியில் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட உந்துருளி மற்றும் அதனுடன் இணைந்த வெடிமருந்து தொகுதி குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5) கரவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை. இளவாலையில் இளைஞன் சுட்டுக்கொலை. தென்மராட்சியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் இருசிறீலங்கா படையினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

6) வவுனியா மாவட்டத்தில் உள்ள குஞ்சுக்குளம் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கபட்டுள்ளது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

7) முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தென்னாபிரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த நிலைப்பாடுகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்

9) யுத்த நடவடிக்கைகளை சாதகமாக மாற்றியமைக்கும் ஆற்றலை புலிகள் நிரூபித்துள்ளனர்.

10) ராஜீவ் காந்தி கொலைவழக்குத் தண்டனைக் கைதி நளினிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கை சமர்ப்பிப்பு.

11) சார்க் மாநாடு நடைபெறும் காலங்களில் தமிழர்கள் கொழும்பை மறந்துவிடவேண்டும் என சகல தரப்பினராலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் கொழம்பில் சார்க் மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு;ள்ளது. இப் பலத்த பாதுகாப்பின் நோக்கம் தமிழர்களை இம்சைப்படுத்துவதே என்று கூறப்படுகிறது.

12) 15 வது ஆசியான் பிராந்திய மாநாடு நாளையும் நாளை மறுதினமும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தலைமையில் குழு ஒன்று செல்கிறது.

13) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14) இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையின் கரையோரத் தொடரூந்துப் பாதைகளை விரைவுப் பாதைகளாகப் புனரமைக்கும் உடன்படிக்கையை நேற்று ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

15) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து உத்தியோக பூர்வமாக தமது பணிகளை நோர்வே கண்காணிப்புக் குழு நிறைவு செயடத போதும் நோர்வேயில் சில பணியாளர்களுடன் அவர்களது கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக அந்த அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீபன்
23-07-2008, 12:14 AM
1) யுத்த நிறுத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

2) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செம்மலை கரைவலைத் தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரின் பீரங்கிப் படகுகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

3) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

4) சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார்.

5) யாழ். நவாலிப் பகுதியில் திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் இருவரும் வர்த்தகர்களாவர். கல்முனையில் இளைஞன் கடத்தல்.

6) மடுமாதா திருச்சொரூபம் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

7) மதுரை சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக விசாரணையை நடத்துமாறு தமிழக அரசாங்கம் உத்தரவு

8) கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

9) சார்க் மாநாட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மசாஹிகோ கொமுரா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

10) யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படைவீரர்களக்கு வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் புவியியல் நிலைமைகளை விளக்கும் வகையிலான தெளிவான வரைபடங்களை இலவசமாக விநியோகிக்கக் காணி அமைச்சு தீர்மானித்துள்ளது.

11) கண்டி பிரதான வைத்தியசாலைக் கட்டிடங்களை நேற்று மாலை கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடித்த மூன்று இளைஞர்களைக் கண்டி காவற்துறையினர் கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12) அம்பாறை மகாஓயா சோதனைச் சாவடியில் தமிழர்களை வேறாகப் பிரித்துக் கடுஞ்சோதனை: மனித உரிமை மீறலெனத் தெரிவிப்பு.

13) கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவிடம் அதனை ஒப்படைக்க முடியாது அது குறித்துப் பேசுவதற்கு எதுவுமில்லை என்கிறார் கொஹண.

14) மன்னார் மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கை காரணமாக வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதி மக்கள் பெருமளவாக இடம்பெயர்ந்து வருகின்றனர். பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு உதவும் பணியில் தமிழர் புனர்வாழ்வு கழகம்.

15) சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களுக்குச் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை.

மறத்தமிழன்
23-07-2008, 06:01 AM
1) யுத்த நிறுத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
புலிகள் பயந்துதான் இந்த அறிவிப்பை விட்டிருப்பதாக அரசு நினைக்கிறதோ...?
ஆனால், புலிகள் யுத்தத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் நிரம்பவே திறமையுடையவர்களாக ஆகிவிட்டார்கள் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.

ஓவியன்
23-07-2008, 06:11 AM
புலிகளின் ஒரு தலைப் பட்ச யுத்த நிறுத்தம், சரியான நேரத்தில் சரியாக நிகழ்த்தப்பட்ட அரசியல் சாணக்கியம்...

சார்க் மகா நாட்டைப் புலிகள் குழப்புவினம் எண்டு சொல்லி, மகிந்த சார்க் பிரதேசத்தில இருக்கிற எல்லா இராணுவத்தையும் வாங்கோ, வாங்கோ வந்து பாதுகாப்புத் தாங்கோ எண்டு கெஞ்சிக் கொண்டிருக்கேக்க....

நமக்கு வேற வேலை இல்லையே, நாங்க ஏன் அதைக் குழப்ப வேணும், நாங்களும் சார்க் பிராந்திய பிரஜைகள் தான் எண்டு புலிகள் அழுத்திச் சொல்லி இருக்கினம்...

மறத்தமிழன்
24-07-2008, 02:58 AM
புலிகளின் ஒரு தலைப் பட்ச யுத்த நிறுத்தம், சரியான நேரத்தில் சரியாக நிகழ்த்தப்பட்ட அரசியல் சாணக்கியம்...

சார்க் மகா நாட்டைப் புலிகள் குழப்புவினம் எண்டு சொல்லி, மகிந்த சார்க் பிரதேசத்தில இருக்கிற எல்லா இராணுவத்தையும் வாங்கோ, வாங்கோ வந்து பாதுகாப்புத் தாங்கோ எண்டு கெஞ்சிக் கொண்டிருக்கேக்க....

நமக்கு வேற வேலை இல்லையே, நாங்க ஏன் அதைக் குழப்ப வேணும், நாங்களும் சார்க் பிராந்திய பிரஜைகள் தான் எண்டு புலிகள் அழுத்திச் சொல்லி இருக்கினம்...

சரியாக சொன்னீர்கள். அது மட்டுமல்ல, இலங்கை வந்த நாடுகள் அக்காலப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதுவிட்டால் இலங்கை அமைதியான நாடு என்ற கருத்துக்கு வந்துவிடும். இதன்மூலம் இலங்கை பல பொருளாதார நன்மைகளை அடைய ஏதுவாக இருக்கும். அதற்காக அக்கலப் பகுதியில் ஏதும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தினாலும் அது இலங்கைக்கே சாதகமாக இருக்கும். இந்த இக்கட்டான நிலையை புலிகள் வெகு சாமர்த்தியமாக கையாண்டிருக்கின்றனர். தாங்களே தற்போதைய அமைதிக்கு காரணம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி உலக நாடுகள் இந்த மானாடு மூலம் எந்த முடிவுக்கும் வரமுடியாத சூழலை உருவாக்கியுள்ளனர். புலியள் அரசியலிலும் எங்கயோ போட்டினம்...!

தீபன்
25-07-2008, 12:16 AM
1) அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் அமைந்துள்ள உடும்பன்குளம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறீலங்கா அதிரடிப்படையினர் அம்முகாமை விட்டு அங்கிருந்து ஒட்டம் எடுத்துள்ளனர்.

2) வன்னிக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் நான்கு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

3) கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பிள்ளையான் பதவியேற்றது முதல் இதுவரையில் 22 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றங்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.

4) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலிய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

5) தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வை தரமுடியாதுவிட்டால் அவர்களின் வழியில் செல்லவிடுங்கள். உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்று செயற்படுவதற்கான வளம் தமிழர்களிடம் உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் - இரா.சம்பந்தன்.

6) இந்தியாவின் மத்திய அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா அரசு, இந்தியாவின் இந்த வெற்றி தமது அரசு மேற்கொண்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

7) இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார். தமது செவ்வியின் உட்கிடக்கையைத் திரிபுபடுத்தி கத்தலிக்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதாக பேராயர் மறுப்பு.

8) மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைப் படையினரை விரட்டியடித்துத் தங்களைத் திரும்பவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

9) தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இல*ங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வ*லியுறு*த்தியுள்ளார்.

10) தமிழ்நாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்திய அரசாங்கம் மற்றும் "றோ" புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடன் நடைபெற்று வருவதாக ஜே.வி.பி. குற்றஞ் சாட்டியுள்ளது.

11) பிரித்தானியாவில் கறுப்பு ஜுலை கவன ஈர்ப்பு 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு.

12) கொழும்பில் நடைபெறவிருக்கின்ற சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் யாழ் குடாநாட்டிற்கான அனைத்து போக்குவரத்துக்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13) வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் நோக்கி சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு படை நடவடிக்கையில், 35 ஆயிரம் முன்பள்ளி, மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட, ஒரு இலட்சத்து. 35 ஆயிரம் பேர் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

14) வவுனியா வேப்பங்குளம் பகுதியில், அடையாளம் காணப்படாத தாக்குதலாளிகளால், இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

15) தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓவியன்
25-07-2008, 04:08 AM
15) தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தையும் புலிகள் பிடிச்சுப் போடுவினம், முன்னரே அடையாள அட்டை வைத்திருந்தால், எதுக்கும் உதவியாக இருக்கும் எண்டு யோசித்திருப்பார் போல...!! :lachen001:

தீபன்
25-07-2008, 04:17 AM
சிரிக்காதையப்பு...:icon_ush: முழு இலங்கையையும் பிடிக்கும் திட்டத்தில் புலிகள் இருப்பதாக இராணுவத் தளபதியே அண்மையில் புலம்பியிருந்தார்...
அப்ப, சாதாரண மக்கள் உண்மையிலேயே முன்ஜாக்கிரதையாக இருந்திருக்க கூடும்...!:lachen001: