PDA

View Full Version : அடி முடி அளத்தல்



நாகரா
30-06-2008, 03:48 PM
பூமி பெரிது தான்
மிக மிகப் பெரிது
நீயோ சிறு விதை தான்
மிக மிகச் சிறிது
வீரிய முளை விடும்
சீரிய முனைப்போடு
மேலெழு
மிகப் பெரிய பூமியும்
பிளந்து
உன் தாளடியில்
அடங்கி விடும்

வானம் பெரிது தான்
மிக மிகப் பெரிது
உன் சிறகுகள் சிறியன தாம்
மிக மிகச் சிறியன
சிறகு விரி
பற
விசுவரூப வானம்
வாமனன்
உன் உடம்பில்
ஒடுங்கி விடும்

ஓவியன்
30-06-2008, 04:22 PM
பென்னம் பெரிய
வானத்தை அளக்க
சின்னஞ் சிறு சிறகும்
தளரா முயற்சியும்
போதுமென பகர்ந்து
நிற்கும்
கவிதை அழகு...!! :)

பூமகள்
30-06-2008, 04:29 PM
விண்ணைக் காண
விதையிலை போதும்..

தள்ளி வை..
நடுங்கும் வேரரும்பை..

வானமளக்க..
இறகுகள் போதும்..

இறக்கி வை..
அழுகை மூட்டையை..

வெற்றி காண..
உழைப்பு போதும்..

ஒதுக்கிவிடு..
பொல்லாத நினைவுகளை..

------------------------------------
வெற்றி நிச்சயமென தன்னம்பிக்கையூட்டும் கவி படைத்த நாகராஜன் அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..!!

தொடர்ந்து இன்னும் பல எழுதுங்கள் அண்ணா. :)

நாகரா
02-07-2008, 04:52 PM
ஓவியன், பூமகள், உம் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி பல. பூமகளின் பின்னூட்டக் குறுங்கவி அருமையிலும் அருமை.