PDA

View Full Version : டூம்ஸ் டே கொன்ஸ்பைரசி



மயூ
30-06-2008, 09:23 AM
http://bp2.blogger.com/_cXy91K5_Avs/SGiU6TzvuSI/AAAAAAAAAFQ/DYpFanuNOnM/s320/Doomsday_Conspiracy.jpg (http://bp2.blogger.com/_cXy91K5_Avs/SGiU6TzvuSI/AAAAAAAAAFQ/DYpFanuNOnM/s1600-h/Doomsday_Conspiracy.jpg)
ஆங்கில எழுத்தாளர்களில் மிகப் பிரபலமான எழுத்தாளரான சிட்னி ஷெல்டன் (http://bookimpact.blogspot.com/2008/01/blog-post_16.html) எழுதிய புத்தகமே இந்த டூம்ஸ் டே கொன்ஸ்பைரசி. வழமை போல சிட்னி ஷெல்டன் எம்மை கதை மூலம் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்கின்றார். அதுவும் மின்னல் வேகத்தில் ஐரோப்பாவை சுற்ற வைக்கின்றார்.

அதிகாலை 4.00 மணிக்கு அழைப்பு ஒன்றைப் பெறும் கொமான்டர் பெல்லாமி அவசரம் அவசரமாக NSA (National Security Agency) இயக்குனரைச் சந்திக்குமாறு பணிக்கின்றனர். இங்கு இவருக்கு ஒரு பணி வழங்கப்படுகின்றது. இந்தப் பணியை செவ்வனே பெல்லாமி நிறைவேற்றிய பின்னர் தன்னை கொலைசெய்யவும் உயர்மட்டத்தில் முயற்சி நடக்கின்றதை அறிகின்றார். சில வேற்று கிரக வாசிகள் பற்றிய இரகசியத்தை மறைக்க உலக நாடுகள் நடத்தும் நாடகத்தில் பெலாமியை இழுத்து விடுகின்றனர். இதில் இவர் பாத்திரம் முடிந்ததும் அவரைக் கொலை செய்ய முயல்கின்றனர். இதில் இருந்து பெல்லாமி தப்பி ஒடும் கதைதான் இது.


போர்ன் திரைப்படம், புத்தகம் வாசித்திருந்தால் அதில் கிடைக்கும் அதே திருப்தியும் பர பரப்பும் இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். சிட்னி இரசிகர்களுக்கு விருந்து போடக்கூடிய புத்தகம்

RRaja
30-06-2008, 09:54 AM
சிட்னி ஷெல்டன் கதைகள் எனக்கும் மிக மிகப்பிடிக்கும். விறுவிறுப்பிற்கு குறை இருக்காது. நன்றி.

ஆதவா
30-06-2008, 10:08 AM
அனுபவி ராஜா அனுபவி,... வெளி இலக்கியங்கள் படிச்சு நல்லா அனுபவி. நமக்கும் ஆங்கில இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்...

மயூ
30-06-2008, 10:44 AM
அனுபவி ராஜா அனுபவி,... வெளி இலக்கியங்கள் படிச்சு நல்லா அனுபவி. நமக்கும் ஆங்கில இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்...
சிட்னியின் புத்தகங்களின் வெற்றிக்கு காரணமே எளிமையான ஆங்கிலம்தான்... யாருக்கும் புரியும் ஆங்கிலம்.. இல்லாட்டி மயூரேசன் ஆங்கில நாவலா!!!

ஆதவா
30-06-2008, 10:51 AM
சிட்னியின் புத்தகங்களின் வெற்றிக்கு காரணமே எளிமையான ஆங்கிலம்தான்... யாருக்கும் புரியும் ஆங்கிலம்.. இல்லாட்டி மயூரேசன் ஆங்கில நாவலா!!!

எனக்குத் தமிழ் நாவல் கூட படிக்க நேரமில்லை.. முந்தியெல்லாம் கழிவறை தவிர வேற இடங்களிலெல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். இப்ப அப்படியில்லை. ஆங்கில நாவல் அதிலும் ஷிட்னியின் நாவல் படிக்க எனக்கும் ஆசைதான். கிடைத்தால் நிச்சயம் படிப்பேன் மயூ!