PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 6

ஆதவா
30-06-2008, 05:06 AM
வெண்ணிலவின் காலத்தில்
சலனமில்லா திரவக் கண்ணாடி
பிரதிபலித்த வண்ணமிருந்தது.

அது நடுங்காத பொழுதினில்
பிரதிபலிப்பு தெளிவாக இருக்கும்
நெருங்கி நின்று பார்த்தால்
கறைநிலவின் குறைநிலவு
சிரித்துக் கொண்டிருக்கும்

சிறிது நேரத்தில்
எங்கும் நிறைந்த
கட்புலனாகதவனால்
சலனங்கள் பெருகும்
குறைநிலவு துண்டாகும்

சில நேரங்கள் தான்

பெரும்பகுதி நேரத்தில்
நிலவைப் பிரதிபலிக்கப் போராடுவதே
திரவத்தின் வேலையாக இருக்கிறது.

இளசு
30-06-2008, 06:58 AM
பிம்பம் நிஜத்தை விட கூடுதலாய் ஜொலிப்பதும்
அல்லது குறைந்து பின்னமாகிச் சிதைவதும்...

பிரதிபலிப்பில், அதைப் பார்க்கும் விழி பாதிப்பில்..

நிஜத்துக்குக் கூட்டலுமில்லை, கழித்தலுமில்லை!

பாராட்டுகள் ஆதவா!

kavitha
30-06-2008, 07:22 AM
பெரும்பகுதி நேரத்தில்
நிலவைப் பிரதிபளிக்கப் போராடுவதே
திரவத்தின் வேலையாக இருக்கிறது.

(கால) கண்ணாடியின் வேலையும் இது தானே. 'நச்' சான கவிதை.

அமரன்
30-06-2008, 07:33 AM
ஒரு சில கணவர்கள்/மனிதர்கள் நிலை கண்முன் வந்தது... நீண்ட நாளைக்கு பின்னர் மன்றத்தில் ஆதவ விருந்து.. உண்ட களைப்புத் தீர உறங்கபோகிறேன். வீட்டு மாந்தர்கள் சிலரை அடுத்து எப்படி ஜொலிப்பாகப் பிரதிபலிப்பது என்ற சிந்தனை தான் உறங்குமா... என்னை உறங்கவிடுமா.

ஆதவா
01-07-2008, 04:48 AM
பிம்பம் நிஜத்தை விட கூடுதலாய் ஜொலிப்பதும்
அல்லது குறைந்து பின்னமாகிச் சிதைவதும்...

பிரதிபலிப்பில், அதைப் பார்க்கும் விழி பாதிப்பில்..

நிஜத்துக்குக் கூட்டலுமில்லை, கழித்தலுமில்லை!

பாராட்டுகள் ஆதவா!

மிக்க நன்றி இளசு அண்ணா.

பிரதிபலிப்பில், அதைப் பார்க்கும் விழி பாதிப்பில்..

உண்மைதான். அந்த விழியின் பாதிப்பு, நமக்குத் தோன்றும் மாயத்தோற்றம் ( கானல்நீர் போல )

மிக்க நன்றி.

ஆதவா
01-07-2008, 04:51 AM
(கால) கண்ணாடியின் வேலையும் இது தானே. 'நச்' சான கவிதை.

நன்ற

ஒரு சில கணவர்கள்/மனிதர்கள் நிலை கண்முன் வந்தது... நீண்ட நாளைக்கு பின்னர் மன்றத்தில் ஆதவ விருந்து.. உண்ட களைப்புத் தீர உறங்கபோகிறேன். வீட்டு மாந்தர்கள் சிலரை அடுத்து எப்படி ஜொலிப்பாகப் பிரதிபலிப்பது என்ற சிந்தனை தான் உறங்குமா... என்னை உறங்கவிடுமா.

நன்றிங்க சகோதரி. உங்கள் பார்வை விமர்சனமும் நச்,,

அதே அதே!! அமரன்... நான் என்னை வைத்துத்தான் இந்தக் கவிதையே எழுதினேன். ஒன்று எனக்கு மட்டுமே தெரியவேண்டிய, தெரிந்த அர்த்தம். மற்றது உங்கள் கருத்து... இளசு அண்ணா, கவிக்கா, நீங்கள் என மூவரும் மூன்றர்த்தத்தில்..

நெஞ்சம் நிறைகிறது. உங்கள் பதிவுகளால்