PDA

View Full Version : அகால மரணம்....!!ஓவியன்
30-06-2008, 02:03 AM
வீடு விட்டிறங்க
வாசலை நாடுகையில்
திடீர் பிரசன்னமாகும்
விளக்குமாறு....!!

வாசலைக் கடந்து
வீதியில் இறங்குகையில்
குறுக்கே தாவும்
கறுப்புப் பூனை..!!

வாகன ஒலி கேட்டு
வீதி விட்டகன்று
சிறகடித்து ஒழியும்
ஒற்றை மைனா...!!

காலை வாரவென்றே
காத்திருந்து தடுக்கி
கலகம் செய்யும்
வீதியோரக் கருங்கல்...!!

இத்தனையும் இணைந்து
முயன்றிருந்தால்
அகன்று போயிருக்குமோ
அந்த அகால மரணம்.....!!!


பி.கு - நேற்றைய தினம் எனக்கு நன்கு பரிட்சயமான ஒருவருக்கு ஈழத்தில் நிகழ்ந்த கோராமான அகால மரணத்தின் தாக்கத்தில் உதித்தது இந்தக் கவிதை...

செய்தி... (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26188)

அந்த அண்ணனது ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்.....

தீபன்
30-06-2008, 02:21 AM
உங்கள் உணர்வுகள் வார்த்தைஜில் நன்றாகவே பிரதிபலிக்கிறது நண்பா. ஆனால், சகுனங்களை நம்பினால் மரணங்கள் நடக்காதென்ற மூட நம்பிக்கையை வலியுறுத்துவதாக உங்கள் கவிதை அமைகிறது. இது ஒரு தவறான கருத்தியலாக எனக்கு படுகிறது.

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற வேகத்தில் மறுவளமாக சகுன்ங்களை நம்புங்கள் என்ற போதனையை செய்துவிட்டீர்களென நினைக்கிறேன். வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கலம்.

ஆழ ஊடுருவியவர்களால் அகாலமான நண்பருக்கு என் அஞ்சலிகளும்.

ஓவியன்
30-06-2008, 02:35 AM
தீபன் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு......

ஒரு ஆற்றாமை, இயலாமை இரண்டின் வெளிப்பாடாக இந்தக் கவிதையை வரைந்தேன்....

அறிவுக்குத் தப்பென்று தெரிந்தாலும் அவர் உறவினர்கள் மனதில் இப்படிப் பட்ட ஒரு ஆற்றாமையே இருக்கும்....

அதன் வெளிப்பாடே இக் கவிதை....

_______________________________________________________________________________________________________

நன்றி தீபன், உங்கள் ஆலோசனைக்கேற்ப கவிதையின் போக்கினைக் கொஞ்சம் திருத்தி, திருப்பியுள்ளேன்...

aren
30-06-2008, 02:56 AM
வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்திருந்தால் இந்த மரணம் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு இந்த மாதிரி விஷயங்கள் முன்னே தெரிந்திருந்தால் நாம் இறைவனுக்கு மதிப்பு கொடுப்போமா என்று தெரியாது.

கவிதை ஆழமாக இருக்கிறது, ஆனால் சகுனம் என்ற சகதியில் யாரும் விழவேண்டாம்.

உங்களுக்குத் தெரிந்தவரின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்,

ஓவியன்
30-06-2008, 03:29 AM
வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்திருந்தால் இந்த மரணம் நடக்காமல் இருந்திருக்கலாம்.
,

இந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்தக் கவிதை அண்ணா....
மற்றும்படி சகுனத்தின் மேல் எனக்கும் நம்பிக்கை இல்லை....

புரிதலுடான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா...!!

தீபன்
30-06-2008, 04:09 AM
நன்று நண்பா... உங்கள் மாற்றத்தின்பின்னான கவிதை சரியாக அமைந்துள்ளது.
தசாவதாரத்தில் கடைசியில் கமல் கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லுவதைப் போல சகுனத்தை நம்பினாலாவது நம் வாழ்க்கை வாழப்பட மாட்டாதா என்ற ஆதங்கத்தை சரியாக பிரதிபலிக்கிறது.
வாழ்த்துக்கள். வருத்தங்கள்.

இளசு
30-06-2008, 05:50 AM
உன்னோடு சேர்ந்து எனது ஆழ்ந்த வருத்தங்களும்..ஓவியா.

ஆற்றாமை, அதிக வலி -இவை வாட்டும்போது
மனம் தாவிப்பற்றும் கிளைகள் -
ஊழ்வினை, விதி...

நம்மை மீறிய நட்டங்கள் நடக்கும்போது எப்படி மனதைத் தேற்ற?

அன்னாரின் குடும்ப சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.

பூமகள்
30-06-2008, 05:53 AM
மனம் வேதனையான சம்பவங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிகையில் இப்படியான சில தேற்றல்கள் பிதற்றலென அறிவுக்குத் தெரிந்தும் சொல்லி தேற்ற வேண்டியிருப்பதை மறுக்க முடியாது..

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாருக்கு..

உங்களின் துக்கத்தோடு நானும் கலந்து கொள்கிறேன் ஓவியன் அண்ணா..!

ஆதவா
30-06-2008, 05:56 AM
உங்களது எண்ண வெளிப்பாடு எனக்குப் புரிந்தது ஓவியன். அதன்படி கவிதையினை அந்தப் போக்கிலே படித்து கவிதை நாயகரின் மனஅலைச்சலைப் படித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.

இறந்து போனபின்னர், இப்படி செய்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டாரோ என்று நினைப்பதுண்டு.. எனது உறவினர்/நண்பர் ஒருவர் இறக்கும்போது நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். (என்னே அலைவரிசை!) சகுனங்களில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்பியிருந்தால் ஆகியிருக்குமோ என்ற நப்பாசை.

இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.

இன்னும் நிறைய படைப்புகள் எழுதுங்கள். இரங்கல்களாக அல்ல.

அன்புடன்
ஆதவன்

சிவா.ஜி
30-06-2008, 06:01 AM
ஆதவா சொன்னதைப்போல உளியின் வலி தெரிகிறது. மிகச் சரியான எண்ண ஒட்டங்கள். ஒரு மரணத்துக்குப்பிறகு இப்படித்தான் நினைக்கத் தோன்றும்.

இனி இப்படி நினைக்கா வண்ணம் எந்த நெருங்கிய நட்புக்கும் நேரக்கூடாது என்றெ நெஞ்சம் நாடுகிறது. உங்கள் நன்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஓவியன். வார்த்தைகள் கவிதையில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

அக்னி
30-06-2008, 06:44 AM
தற்பொழுதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன்.
பார்த்துவிட்டு மன்றம்வந்தால், தெரிந்த உறவு பிரிந்த, வேதனை வெளிப்படும் கவிதையும் மன்றில்...

தினம் காலையில் எழுந்து,
கணினியை எழுப்பி,
தினச்செய்தி பார்த்ததும்,
வலிக்கும் செய்திகளும் தரும் ஒரு ஆறுதல்,
இன்று உன் சொந்தங்கள் நலம் என்று...

செய்தி பார்த்து முடித்து, மூடிய நொடியில்,
மனதில் மீண்டும் சலனம்;
இன்று ஏது நடக்குமோ என்று...

தினம் காலையில்,
இணையச்செய்திகளுக்குள் மரணச்செய்தி
தேடும் என் மனதுக்குப் புரியவில்லை;
நான் தேடுவது சரியா என்று...

தேடல் தொடர்கின்றது...
எதுவரை என்று தெரியாமலே...


இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.
:icon_b:

kavitha
30-06-2008, 07:51 AM
மிகவும் வருத்தமாக இருக்கிறது ஓவியன். அண்ணாரின் குடும்பத்திற்கு நமது இரங்கலைத் தெரிவியுங்கள். முடியுமானால் அவர்களோடு இருங்கள். பிரிவுத்துயர் கொடியது.

ஓவியன்
30-06-2008, 08:33 AM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

இந்த திரியில் நான் குறிப்பிட்ட திரு. நந்தகுமார், அவர்கள் 2006 ம் ஆண்டின் இடப் பெயர்வின் போது அவர்களது ஊரில் நாம் வசித்த போது எனக்கு அறிமுகமானவர். பட்ட படிப்பு முடித்து பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கையில், SLAS (இந்தியாவின் IAS பரீட்சை போன்றது) பரீட்சையில் சித்தியடைந்து உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றத் தொடங்கியவர்.

நல்ல பணியுடன் காதலும் கைகூடி அழகான குழந்தை என வாழ்க்கை நகர்ந்த போது இந்தக் கோர நிகழ்வு....

இணையத்தில் செய்தித் தலைப்பினைக் கண்டு, விரிவான செய்திக்காக கிளிக் பண்ணிக் கொண்டு ஆண்டவனே அவராக இருக்க கூடாது என நினைத்தேன்.....

ஆனால்......

அப்படியே நிகழ்ந்துவிட்டது.

அன்புரசிகன்
30-06-2008, 08:42 AM
முன்பு நாம் விமானங்களுக்கும் எறிகணைத்தாக்குதல்களுக்கும் தான் பயந்திருந்தோம். இப்போது இந்த பாழாய்ப்போன ஆழ ஊடுருவும் அணி என்ற பெயரில் பலரது உயிர்களை வாங்கிவிட்டது. கவிதை என்பதிலும் நிஜம் என்பது மேலோங்குகிறது.

என் தந்தையாருக்கு தெரிந்தவர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஓவியன்
30-06-2008, 09:03 AM
இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.

இன்னும் நிறைய படைப்புகள் எழுதுங்கள். இரங்கல்களாக அல்ல.

நன்றி ஆதவா,

நிறைய எழுதவேண்டுமென நானும் நினைத்துக் கொள்வேன், ஆனால் நேரம் அதற்கு இடம் கொடுக்காது முரண்டு அடம் பிடிக்கும்...

இருந்தாலும், நிறைய எழுத வேண்டும், நிச்சயமாக எழுதுவேன்....

Riaz
26-02-2012, 06:46 AM
:eek:இன்றைய பிணத்தின் எதிரில் : நாளைய பிணங்கள் ஒப்பாரீடுகின்றனர்....... இந்த வரிகள் எதோ கவிதையில் படித்ததாக ஞாபகம். தயவு செய்து எவ் வரிகள் எந்த செய்யுளில் , கவிதையில் , சித்தர் padalgalil வருகிறது என கூற முடியுமா ? தமிழ் மன்ற அன்பர்களே ?
Riaz