PDA

View Full Version : காதலும் மனைவியும்



"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 08:43 AM
காய்கறி வெட்டும்போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....

நிச்சயதார்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிறுத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு" - என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடுக்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"
என்று சொல்லி
என்ன பயன் முருகா????

என்றும் பிரியமுடன்
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

பூமகள்
29-06-2008, 09:42 AM
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!! :D:D

முருகனிடம் முறையிடாதீர்கள்..!! ;)
அவரே.. இருபுறமும் வள்ளி தெய்வானையை வைத்துக் கொண்டு.. திண்டாடிட்டு இருக்கார்..!! ;) :D:D

நல்ல கவிதை..!!
மனைவியிடம் காட்டினீர்களா?? ;)

நிறைய எழுதுங்கள்.. இங்குள்ள படைப்புகள் படித்து பின்னூட்டமிடுங்கள்..!

பாராட்டுகள் சகோதரரே..!!

ஓவியன்
29-06-2008, 10:04 AM
எந்த ஒரு விடயத்தின் அழகும் ஆபத்தும்
அதனை நாம் எதிர்கொள்ளும்
கோணத்திலேயே இருக்கிறது பிரபு..!!

நல்ல விதமாக நாம் கையாண்டால்
ஆபத்தும் அழகுதான்...!!!

இனியும் அழாமல் வாழ்வை ஜெயிக்க என் வாழ்த்துக்கள்...!!! :)

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 04:13 PM
ஐயா! நான் திருமணம் ஆகாதவன்.எல்லாம் கற்ப்பனையே.அதிலும் அங்கே நாடப்பது ஊடல் தான் சண்டையில்லை.எல்லோருக்கும் நன்றி

என்றும் பிரியமுடன்
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

செல்வா
29-06-2008, 06:02 PM
நல்லா எழுதுறீங்க பிரபு.... கற்பனையிலேயேவா....
கற்பனை என்றாலும் நிஜம் என்றாலும் ஊடல் என்பது சுவாரசியமானது தான்...

சரி கடைசியில் யார்தான் கறிசமைத்தது...

ஹா....ஹா.... தொடார்ந்து எழுதுங்கள்...

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 06:31 PM
கணவனே சமைத்து அதை மனைவிக்கு ஊட்டிவிட்டல் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்

arun
30-06-2008, 12:54 AM
படித்தேன் ரசித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இது உண்மையாக இருக்குமோ என்று கொஞ்சம் பயபடுகிறேன்.. :mini023::mini023::mini023: