PDA

View Full Version : எனது படைப்பும் & நான் ரசித்ததும்("பொத்தனூர்"பிரபு)



"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 08:36 PM
வணக்கம்
என் பெயர் பிரபு.
கதை,கவிதைகளை நன்கு ரசிப்பவன்.எல்லா ரசிகனுக்குள்ளும் ஒரு படைப்பாளி இருப்பான் அல்லது இருப்பதாய் அ(இ)ந்த படைப்பாளிக்கு நம்பிக்கை இருக்கும் .அந்த நம்பிக்கையில் நானும் என் படைப்புகளை இங்கே தொகுத்து வைக்கிறேன்.

" அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தரையிற் கீறிடில் தச்சருங் காய்வாரோ
இறையு ஞானமி லாத என் புன்கவி
முறையின் நூலுணர்ந் தாரும் முனிவரோ? "

இது கம்பன் எழுதியது அதே நம்பிக்கையில் "முறையின் நூலுணர்ந்த" பலர் இருக்கும் இந்த சபையில் நானும் அமர்கிறேன்.தவறுகள் ஏதேனும் இருந்தல் கூறவும்.வேண்டாத பாகங்களை செதுக்கிய பின்புதான் அழகிய சிற்பம் கிடைக்கும்.நன்றி
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 09:13 PM
காய்கறி வெட்டும்போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டங்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னால்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலாட்டாய் இரு" என்று....

நிச்சயதார்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதனமாய் இரு" - என்று

திருமன நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடுக்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதவது
முணுமுணுது சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலாண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"
என்று சொல்லி
என்ன பயன் முருகா????

என்றும் பிரியமுடன்
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

mukilan
28-06-2008, 09:35 PM
மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள். கவிதை அழகாக இருக்கிறது. எழுத்துப்பிழைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும் நீங்களே மற்றுமொருமுறை படித்துப் பார்த்து தட்டச்சுப் பிழைகள் கண்டால் களைந்து விடுங்களேன். அஃதோடு இந்தப் பகுதி கவிஞர்களின் அறிமுகப் பகுதி என்பதால் உங்கள் படைப்புக்களை இங்கே பதிய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புதியவர் என்பதால் மன்ற ஆலோசகர்கள் இத்திரியினை தகுந்த இடத்திற்கு மாற்றி விடுவார்கள். இனி படைப்புக்களை அந்தந்தத் தலைப்புகளின் கீழ் உள்ள உப தலைப்புக்களின் கீழ் பதியலாம். முதல் முயற்சியாக இந்த மன்றத்தில் தமிழில் கவிதையெழுதிய உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மன்றத்தில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் உங்கள் படைப்புக்களை மெருகேற்றட்டட்டும்.!

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 09:56 PM
மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள். கவிதை அழகாக இருக்கிறது. எழுத்துப்பிழைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும் நீங்களே மற்றுமொருமுறை படித்துப் பார்த்து தட்டச்சுப் பிழைகள் கண்டால் களைந்து விடுங்களேன். அஃதோடு இந்தப் பகுதி கவிஞர்களின் அறிமுகப் பகுதி என்பதால் உங்கள் படைப்புக்களை இங்கே பதிய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புதியவர் என்பதால் மன்ற ஆலோசகர்கள் இத்திரியினை தகுந்த இடத்திற்கு மாற்றி விடுவார்கள். இனி படைப்புக்களை அந்தந்தத் தலைப்புகளின் கீழ் உள்ள உப தலைப்புக்களின் கீழ் பதியலாம். முதல் முயற்சியாக இந்த மன்றத்தில் தமிழில் கவிதையெழுதிய உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மன்றத்தில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் உங்கள் படைப்புக்களை மெருகேற்றட்டட்டும்.!
முதலில் நன்றி
நான் எழுதியதை என்னையும் என் உறவுக்காரர் ஒருவரையும் தவிர வேரு யாரும் படித்ததில்லை
தமிழ்மன்றத்திற்க்கும் உங்களுக்கும் நன்றி
நான் பள்ளிப்படிப்பில் அதிகம் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை.சிங்கப்பூருக்கு வந்த பிறகு அதிக ஆர்வத்தி நூலகங்களுக்கு சென்று வளர்த்துகொண்டேன்.இதுவரை என் எழுத்துக்களை யாரும் படிக்காததால் அதில் உள்ல தவறுகள் எனக்கே தெரியாது.சில மட்டுமே தட்டச்சு பிழையாக இருக்கும்.மற்றவை என் தவறுகளே.தவறுகள் இருப்பதாய் சொல்லுவதோடு அதை சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன்
வேண்டாத பாகங்களை செதுக்கிய பின்புதான் அழகிய சிற்பம் கிடைக்கும்.உங்களுக்கு என் நன்றி.எங்கே என் படைப்புகளை பதியவேண்டும் என்பதற்க்கு ஆலோசகர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்

mukilan
28-06-2008, 10:20 PM
காய்கறி வெட்டும்போது
வேண்டாம் பெண்ணே
"வெண்டங்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னால்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலாட்டாய் இரு" என்று....

நிச்சயதார்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதனமாய் இரு" - என்று

திருமன நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடுக்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதவது
முணுமுணுது சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலாண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"
என்று சொல்லி
என்ன பயன் முருகா????

என்றும் பிரியமுடன்
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

நான் குறிப்பிட்டவை போக சில வார்த்தைகள் சற்று மாறியிருந்தாலும் அவ் வார்த்தைகளை நான் எழுத்துப்பிழையாய் நினைக்கவில்லை. காலாண்டர் என்பது நான் படித்த பல ஆக்கங்களில் காலண்டர் என்று இருக்கிறது. இருப்பினும் ஆங்கில சொல் என்பதால் அதில் இதுதான் சரி தவறென்று சொல்ல முடியாது. பேச்சு வழக்கை வைத்தே ஆங்கில வார்த்தைகளில் சில வெவ்வேறு முறைகளில் அழைக்கப்படுகிறது. நம் ஈழத்தமிழ் நண்பர்கள் டாக்டரை "டொக்டர்" என்றும், கம்ப்யூட்டரை "கொம்ப்யூட்டர்" என்றும் அழைப்பார்கள். அது அவர்கள் பேச்சுவழக்கு என்பதால் அதை தவறாகக் கருதக் கூடாதல்லவா அது போல காலண்டரும். வெண்டங்காய்- வெண்டைக்காய்? அலாட்டாய் -அலர்ட்டாய்??
நீயே சமையல் செய்யும்- நீரே சமையல் செய்யும் என்பதா? இருப்பினும் இவை எழுத்துப் பிழை என்று கொள்ள முடியாது. ஒரு கவிஞன் எவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அவ்வாறே நாமும் கொள்ள வேண்டியதுதான்.:icon_b:

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 10:26 PM
நன்றி.இதுபோல அதிகம் எதிர்பார்க்கிறேன்.

kavitha
30-06-2008, 08:55 AM
அழகிய எள்ளல் கவிதை. துவக்கமே அமர்க்களம். இனி, புதிய கவிதைகள் பக்கத்தில் பிரசுரியுங்கள். நன்றி.

மறத்தமிழன்
01-07-2008, 04:08 AM
அழகான நகைச்சுவை கவிதை. இதை கவிதைகள் பகுதிக்கு மாற்றினால் அதிக விமர்சனம் கிடைக்க வாய்ப்புண்டு.