PDA

View Full Version : இரத்தப் பிரிவும் திருமணமும் பற்றிய சந்தேகம்?

சிவா.ஜி
28-06-2008, 01:38 PM
ஒரேமாதிரியான இரத்தப்பிரிவு உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா? அதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா? தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கம் தர முடியுமா?

aren
28-06-2008, 01:52 PM
ஒரேமாதிரியான இரத்தப்பிரிவு உள்ள ஆணும் பெண்ணும் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளலாம். அதில் எதுவும் பிரச்சனையிருக்காது.

நெருக்கமான சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றி கொஞ்சம் யோசிக்கவேண்டும். ஏனெனில் இருவருக்கும் ஒரேமாதிரியான ரத்தப்பிரிவு, குணாதிசயங்கள் ஆகியவை இருக்கும். அது பிறக்கும் குழந்தையை பாதிக்கலாம், ஆகையால் அது மட்டும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிவா.ஜி
28-06-2008, 02:16 PM
நன்றி ஆரென். நம் மன்ற உறுப்பினர் ஒருவருக்காகத்தான் இந்த சந்தேகத்தைக் கேட்டேன். அவரது அலுவலகத்தில் மன்றம் தடை செய்யப்பட்டிருப்பதால் அவரால் மன்றம் வரமுடியவில்லை.

அறிஞர்
30-06-2008, 02:17 AM
அன்பரே..

இரத்த பிரிவில் + மற்றும் - வகை இருக்கும்.

கணவனுக்கு பிளஸ், மனைவிக்கு மைனஸ் அல்லது மாறியோ இருந்தால்... குழந்தை பிறந்தவுடன் கவனிப்பாக இருக்க வேண்டும்...

குழந்தையின் இரத்தபிரிவை சோதித்து.. தாய்க்கும், குழந்தைக்கும்... ஒருவிதமான தடுப்பூசி.... போட வேண்டும்... அது டாக்டர்களுக்கு தெளிவாக தெரியும்....

பிறகு இளசு.. விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்.

தீபன்
30-06-2008, 05:01 AM
ஒரேமாதிரியான இரத்தப்பிரிவு உள்ள ஆணும் பெண்ணும் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளலாம். அதில் எதுவும் பிரச்சனையிருக்காது.

நெருக்கமான சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றி கொஞ்சம் யோசிக்கவேண்டும். ஏனெனில் இருவருக்கும் ஒரேமாதிரியான ரத்தப்பிரிவு, குணாதிசயங்கள் ஆகியவை இருக்கும். அது பிறக்கும் குழந்தையை பாதிக்கலாம், ஆகையால் அது மட்டும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்கள் பதிலே முரணாக இருக்கிறதே. ஒரே பிரிவினர் செய்யலாமென்றுவிட்டு நெருங்கிய சொந்தத்தில் செய்யக்கூடதென்பதற்கு காரணமாகவும் ஒரே இரத்தப் பிரிவென்பதை குறிபிட்டுள்ளீர்கள்...? (மேலும் குணாதிசயங்கள் ஒன்றாயிருப்பதில் எந்த பிரசினையுமில்லையே...!)
நெருக்கமான சொந்தத்தில் திருமணம் செய்யகூடதென்பதற்கு உண்மைக்காரணம், பரம்பரை நோய்தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதுதான்.

விரிவான பதிலை மருத்துவ நண்பர்கள் தாருங்களென்..!

பூமகள்
30-06-2008, 05:41 AM
எனக்குத் தெரிந்த அளவில் விடையளிக்கிறேன்..

ரத்தப்பிரிவில் ப்ளஸ்... மைனஸ்... பிரிவுகள் மட்டுமின்றி Rh என்ற காரணியும் மிக முக்கியமானது..

இந்த Rh பொறுத்துத் தான் ரத்தப் பிரிவு கவனிக்கப்பட்டு.. திருமணம் செய்து கொள்ளலாமா என்பதினைத் தீர்மானிக்க முடியும்..

எனினும்.. இப்போதைய நவீன மருத்துவ வளர்ச்சிகளால்.. எவ்வகை இடர்பாடுகள் இருப்பினும்.. அறிஞர் அண்ணா சொன்னது போல.. குழந்தையைச் சுமக்கும் தாய்க்கு தகுந்த தடுப்பூசிகள் கொடுப்பதன் மூலம் எளிதில் சரியாக்கிவிடலாம்.. கொஞ்சம் அதிகப்படியான மருத்துவ கண்காணிப்புத் தேவைப்படும்..

மேலும் விரிவாக பெரியண்ணா விளக்குவாரென எதிர்பார்க்கிறேன்.

இளசு
30-06-2008, 05:58 AM
இங்கே முழுபதில்களும் அன்பின் ஆரென், அறிஞர், பாமகள் ஆகியோரால் வழங்கப்பட்டுவிட்டன.. சிவா.

1) ஒரே குருதிவகை (A,B,O) உள்ளவர்கள் மணம் செய்யலாம்.
2) கணவர் Rh Positive ஆகவும், மனைவி Rh Negative ஆகவும் இருந்தால், முதல் குழந்தை பாஸிட்டீவாக அமைய 50 சதம் வாய்ப்புண்டு.

அப்படிப்பட்ட சூழலில், கருவின் குருதி கொஞ்சம் கொஞ்சம் தாய்க்குருதியில் கலப்பதால், தாய் அதை எதிர்த்து ஒரு புரதம் உருவாக்குவார்.

இரண்டாவது குழந்தையும் பாஸிட்டீவ் என்றால், இந்த புரதம் அந்த இரண்டாவது கருவை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

அதனால், முதல் பிரசவத்தின்போதே இந்த எதிர்ப்பு நிகழாமல் இருக்க
தடுப்பூசி தாய்க்கு போடப்படும். எனவே பயமில்லை.

குருதி வகைகள் பற்றி மன்றத்தில் விரிவான கட்டுரைகள் உள்ளன..
மரபியல் ஆலோசனை பற்றி நான் முன்னர் தனியே எழுதியிருக்கிறேன்.

சிவா.ஜி
30-06-2008, 06:07 AM
பதில் வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள். நம் மன்ற உறுப்பினர் தளபதி அவர்களுக்காக இந்தக் கேள்வியை எழுப்பினேன். அவருக்கு இந்த பதில்களை அனுப்பிவிடுகிறேன்.

Narathar
30-06-2008, 06:07 AM
எனக்கு விஞ்சான ரீதியாக ப்தில் சொல்லதெரியாது....
ஆனால் அனுபவத்தில் சொல்கிறேன்..... ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ( அண்ணன் தங்கை - அண்ணன் தம்பி ) பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வதால் பிரச்சணைகள் வரும் சாத்தியம் அதிகம்...... அவற்றை தவிர்ப்பது சாலச்சிறந்தது.

lolluvathiyar
30-06-2008, 08:03 AM
எனக்கு விஞ்சான ரீதியாக ப்தில் சொல்லதெரியாது....
ஆனால் அனுபவத்தில் சொல்கிறேன்..... ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ( அண்ணன் தங்கை - அண்ணன் தம்பி ) பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வதால் பிரச்சணைகள் வரும் சாத்தியம் அதிகம்...... அவற்றை தவிர்ப்பது சாலச்சிறந்தது.

இந்த ரத்தபிரிவு போன்ற சமாசாரங்கள் எல்லாம் மிக சமீபகாலமாக கன்டறியபட்டவை, அதற்க்கு முன்பு இதை பற்றி அறியாத நமது முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களாக நெருங்கிய உறவில் திருமன செய்து பல குழந்தைகள் பெற்று வளர்த்து செல்வ செழிப்புடன் வாழ்ந்திருகின்றனர். அதுவும் ஆரோக்கியமாக நீன்ட ஆயுளுடன் வாழ்ந்திருகின்றனர். அவர்களின் வழிதோன்றல்கள் தான் நாம், இத்தனை குழப்பி கொள்கிறோம்.

உறவே இல்லாமல் டோட்டலா வேற இடத்தில் திருமனம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் வ ந்து ஆஸ்பத்திரி போய் லட்ச லட்சமாய் செலவு செய்தவர்களும் உண்டு.

நாம் வாழ்கையில் பழக்க வழக்கங்கள் முக்கியமாக உனவு பழக்க வழக்கங்கள் மாறி விட்டது. நேட்டிவ் வகை இல்லாமல் முற்றிலும் அந்நிய வகை உனவுக்கு போய் விட்டோம், இதனால் நமக்கு எதிர்ப்பு சக்தி குரைந்து தாய்க்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேன்டிய அவசியமாகி விட்டது. அதுபோக அவ்வபோது ஏதாவது புதிய பெயர்களில் நோய்களை கன்டுபிடித்து பனம் கறந்து கொன்டு இருப்பார்கள்.

இது தான் உன்மை மற்றபடி இந்த ரத்த க்ரூப் நெருங்கிய உறவில் திருமனம் எல்லாம் பிரச்சனையே அல்ல என்று நான் கருதுகிறேன்.

ரத்த க்ரூப் பற்றி அறியாத காலத்திலும் கூட முன்னோர்கள் ஏதோ சில பாகுபாடுகள் பிரித்து வைத்திருந்தார்கள் அது குலம் கூட்டம் போன்றவை. ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் திருமனம் செய்யகூடாது என்று. இது ஆண்பிள்ளையின் குலத்தை வைத்து மட்டுமே கனிக்கபடுகிறது. இதே போல இஸ்லாமிய மதத்திலும் சில வழிகாட்டு முரைகள் இருக்கு. இந்து மதம் இஸ்லாமிய மதம் இந்த இரன்டும் முற்றிலும் வேறு படுகிறது. இதில் எது சிறந்தது என்று பார்பதை விட அவரவர் அவரவர் மதத்தின் படி பின்பற்றினால் போதும் பிரச்சனைகள் வராது என்று நினைக்கிறேன்.

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 07:19 PM
எனக்குத் தெரிந்த அளவில் விடையளிக்கிறேன்..

ரத்தப்பிரிவில் ப்ளஸ்... மைனஸ்... பிரிவுகள் மட்டுமின்றி Rh என்ற காரணியும் மிக முக்கியமானது..

இந்த Rh பொறுத்துத் தான் ரத்தப் பிரிவு கவனிக்கப்பட்டு.. திருமணம் செய்து கொள்ளலாமா என்பதினைத் தீர்மானிக்க முடியும்..

எனினும்.. இப்போதைய நவீன மருத்துவ வளர்ச்சிகளால்.. எவ்வகை இடர்பாடுகள் இருப்பினும்.. அறிஞர் அண்ணா சொன்னது போல.. குழந்தையைச் சுமக்கும் தாய்க்கு தகுந்த தடுப்பூசிகள் கொடுப்பதன் மூலம் எளிதில் சரியாக்கிவிடலாம்.. கொஞ்சம் அதிகப்படியான மருத்துவ கண்காணிப்புத் தேவைப்படும்..

மேலும் விரிவாக பெரியண்ணா விளக்குவாரென எதிர்பார்க்கிறேன்.

பூமகள் இரத்தப் பிரிவு A, B மற்றும் O ஆகும். Rh தான் நீங்கள் கூறிய + & -

இளசு அவர்கள் சரியாக கூறியுள்ளார்.

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 07:23 PM
இந்த ரத்தபிரிவு போன்ற சமாசாரங்கள் எல்லாம் மிக சமீபகாலமாக கன்டறியபட்டவை, அதற்க்கு முன்பு இதை பற்றி அறியாத நமது முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களாக நெருங்கிய உறவில் திருமன செய்து பல குழந்தைகள் பெற்று வளர்த்து செல்வ செழிப்புடன் வாழ்ந்திருகின்றனர். அதுவும் ஆரோக்கியமாக நீன்ட ஆயுளுடன் வாழ்ந்திருகின்றனர். அவர்களின் வழிதோன்றல்கள் தான் நாம், இத்தனை குழப்பி கொள்கிறோம்.

உறவே இல்லாமல் டோட்டலா வேற இடத்தில் திருமனம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் வ ந்து ஆஸ்பத்திரி போய் லட்ச லட்சமாய் செலவு செய்தவர்களும் உண்டு.

நாம் வாழ்கையில் பழக்க வழக்கங்கள் முக்கியமாக உனவு பழக்க வழக்கங்கள் மாறி விட்டது. நேட்டிவ் வகை இல்லாமல் முற்றிலும் அந்நிய வகை உனவுக்கு போய் விட்டோம், இதனால் நமக்கு எதிர்ப்பு சக்தி குரைந்து தாய்க்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேன்டிய அவசியமாகி விட்டது. அதுபோக அவ்வபோது ஏதாவது புதிய பெயர்களில் நோய்களை கன்டுபிடித்து பனம் கறந்து கொன்டு இருப்பார்கள்.

இது தான் உன்மை மற்றபடி இந்த ரத்த க்ரூப் நெருங்கிய உறவில் திருமனம் எல்லாம் பிரச்சனையே அல்ல என்று நான் கருதுகிறேன்.

ரத்த க்ரூப் பற்றி அறியாத காலத்திலும் கூட முன்னோர்கள் ஏதோ சில பாகுபாடுகள் பிரித்து வைத்திருந்தார்கள் அது குலம் கூட்டம் போன்றவை. ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் திருமனம் செய்யகூடாது என்று. இது ஆண்பிள்ளையின் குலத்தை வைத்து மட்டுமே கனிக்கபடுகிறது. இதே போல இஸ்லாமிய மதத்திலும் சில வழிகாட்டு முரைகள் இருக்கு. இந்து மதம் இஸ்லாமிய மதம் இந்த இரன்டும் முற்றிலும் வேறு படுகிறது. இதில் எது சிறந்தது என்று பார்பதை விட அவரவர் அவரவர் மதத்தின் படி பின்பற்றினால் போதும் பிரச்சனைகள் வராது என்று நினைக்கிறேன்.

அந்த காலத்தில் ஜாதகத்தை பார்த்தே இதனை கணிப்பார்கள். செவ்வாய் தோசம் என்பது மிகவும் பிரபலம். அனைவரும் கேள்வி பட்டிருப்பீர்கள்.

பூமகள் கூறுவது போல் +, - பார்ப்பதுதான் அது.

shibly591
07-08-2008, 07:27 PM
எனது தாயும் தந்தையும் ஒரே இரத்தப்பிரிவுதான்...(நேரடி உறவு இல்லை கொஞ்சம் நெருங்கிய சொந்தம்)..

நானும் எனது மூத்த சகோதரரும் ஆரோக்கியமாகவே உள்ளோம்..

எனது இளைய சகோதரர்தான டவுன் சிண்ட்ரொம் எனும் நோயினால் பிறப்பிலிருந்தே பாதிக்கப்பட்டுள்ளார்...(ஹைபர் ஆக்டிவ் எனும் துரிதமாக செயலாற்றும் அசுர வேக நோயும் தம்பிக்கு இருக்கிறது..குணப்படுத்தவே முடியவில்லை)..

அதே வேளை எனது சிறிய தந்தையும் சிறிய தாயும் நேரடி உறவு (சொந்த மச்சான் மச்சாள்..அவர்களும் நேரடி ஒரே இரத்தப்பிரிவு)

அவர்களின் பிள்ளைகள் ஆரோக்கியமாக உள்ளகர்...

என்னைப்பொறுத்தவரை ஒரே அரத்தப்பிரிவிலுள்ளவர்களை மண முடிப்பதை தவிர்ப்பது நல்லது...