PDA

View Full Version : உஷ்……….. பேசாதீங்கஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-06-2008, 07:34 AM
அளவு கோல் தேவையில்லை
அவ்வப்போது கடித்துக்கொள்ளும்
நாச்சேதாரமும் இல்லை
ஒன்றுமில்லாததிற்கெல்லாம்
காற்றில் வீணைமீட்டும் அவசியமில்லை
எப்படி பேசுவதன்று
தலையை பிடித்துக்கொள்ளவும்
இப்படியா பேசினேன்று
தலையில் அடித்துக்கொள்ளவும்
அவசியமில்லை
பழைய வார்த்தை
தங்கிப் போயிருக்குமோவென்று
பம்மிப் பேசவும் விம்மி அழுகவும்
தேவையே இல்லை
ஒரு வாசகமென்றாலும்
அது பெரு வாசகமென்று
முச்சந்தியில் நிற்க வைத்து
நாக்கைப் பிடுங்கும் கேள்வி
எப்பொழுது வருமென்று
எதிர்பார்க்கத்தேவையில்லை
உங்கள் நாவுகளே நீண்டு
உங்கள் கழுத்துக்களை
கட்டி நெறிக்கும்
கனவுகளை கண்டிப்பாய்
காணும் அவசியமில்லை
எல்லாவற்றிக்கும் மேலாய்
உள்ளாறும் தீயினால் சுட்ட புண்
ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று
கீழார்களிடமெல்லாம்
தவணை முறையில்
உபதேசம் வாங்கிக் கட்டிக்கொள்ளும்
நிலையெல்லாம் ஏற்படாது
ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
சில நாவுகளும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும் போது.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

kavitha
30-06-2008, 09:24 AM
ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
சில நாவுகளும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும் போது.
அருமையான வரிகள்.
உணர்ந்ததால் தானோ என்னவோ... படித்தும் பதில் போடாமல் போய்விட்டார்கள். நானும் எஸ்கேப்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-06-2008, 10:25 AM
ரொம்ப நன்றி கவிதாக்கா. உங்களுக்காச்சும் பதில் போடணும்னு தோணுச்சே.

ஆதவா
30-06-2008, 10:49 AM
சொற்களும் மௌனமும் வேறு வேறு வர்க்கங்கள்..
ஆனாலும் சொற்களுக்கிடையிலான மௌனங்களின் அர்த்தத்தை
முன் - பின் சூழ்ந்த சொற்கள்தாம் தீர்மானிக்கின்றன..


மெளனத்தை விவரிக்க இதைவிட வேறு வார்த்தைகள் உண்டா?

மெளனம் நமக்கு நல்லதா கெட்டதா?

மெளனம் எந்தெந்த நேரத்தில் நமக்குத் தேவைப்படுகிறதோ அதை அந்தந்த நேரத்தில் மெளனிக்கப் பழகவேண்டும். வார்த்தையின் அளவும், வார்த்தைக்கு இடைப்பட்ட மெளனமும் நம்மை எவ்வளவு தூரத்தில் வைக்கவேண்டுமோ அவ்வளவு தூரத்தில் வைக்கும்.

வார்த்தையின் வீரியம் அடுத்தவரைப் பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும். மெளனத்தின் தூரம், அடுத்தவர் எரிச்சலைக் கிளப்பாத வண்ணம் இருக்கவேண்டும். அவசர வார்த்தைகளும் நிதான மெளனமும் ஆகாதது நமக்கு.

என்றேனும் உணர்ந்துகொள்ளும் போது நமக்குள்ளான நாவடக்கம் எத்தனை தூரத்தில் நிலைத்து நிற்கும்?

கவிதை உங்களை யோசிக்க வைத்து எழுதியிருக்கிறது.. ஆழப்புரிதல் அதில் ஆழப்புதைந்திருக்கிறது.

வாழ்த்துகள் ஜுனைத்அருமையான வரிகள்.
உணர்ந்ததால் தானோ என்னவோ... படித்தும் பதில் போடாமல் போய்விட்டார்கள். நானும் எஸ்கேப்.

சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "அடி"?
நல்லவேளை.. நான் இப்பத்தான் பார்த்தேன்./


ரொம்ப நன்றி கவிதாக்கா. உங்களுக்காச்சும் பதில் போடணும்னு தோணுச்சே.

ஜுனைத்.. இங்கே வருபவர்கள் தொழில்முறைக் கவிஞர்களோ விமர்சகர்களோ அல்ல. அவசர யுகத்தில் சிறிதுநேரம் நிதானிக்க வருபவர்கள். தங்கள் திறமையைக் காட்டிகொள்ள இடமாக இதை வைத்திருக்கிறார்கள். ஏதாவது நிர்பந்தமாகவோ பணிப்பளுவாகவோ அல்லது வேறெந்த காரணமாகவோ பதில் போடாமல் போயிருக்கலாம்... உங்கள் பதிலில் ஒளிந்திருக்கும் கேள்வியை உங்களுக்கே நீங்கள் கேட்டுப்பாருங்கள்.. உண்மை விளங்கும்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-06-2008, 11:10 AM
சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "

கடைசியா ஒரு வாசகத்தை சொல்லி எனக்கு ஒரு அடி அடிச்சுட்டீங்க. உங்கள் வார்த்தை நன்றாய் உள்ளத்தில் தைத்திருக்கிறது ஆதவா.

ஆதவா
30-06-2008, 11:28 AM
சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "

கடைசியா ஒரு வாசகத்தை சொல்லி எனக்கு ஒரு அடி அடிச்சுட்டீங்க. உங்கள் வார்த்தை நன்றாய் உள்ளத்தில் தைத்திருக்கிறது ஆதவா.

உடலில் மருந்துக்காக ஊசியிடுவதற்கும், வெறுமே ஊசியைக் குத்துவதற்கும் வித்தியாசம் உண்டு ஜுனைத்.. நான் வலியோடு குத்தினால் கூட "பக்க"விளைவுகள் நன்றாகவே இருக்கும். சிலர் ஊசியைத் திருப்பிக் குத்தி குருதியெடுத்ததும் உண்டு. நீங்கள் வாஞ்சையோடு தடவுகிறீர்கள்...

அன்புடன்
ஆதவன்

ஷீ-நிசி
30-06-2008, 03:45 PM
ரொம்பவே வித்தியாசமான கரு!

பேசினால்தானே இங்கே பிரச்சினைகள்.....
பேசாமலே இருந்துவிட்டால்... இது தீர்வா... இது தீர்வை தராது.. உள்ளத்திற்கு சோர்வை தான் தரும்...

இடம் பொருள் பார்த்து, பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எப்பொழுதுமே மரியாதை உண்டு.
அடுத்தவர் மனம் புண்படாவண்ணம் பேசுவது கலை...

எத்தனை பேருக்கு அது கைவந்த கலை?!

யோசிக்க வைத்தீர்கள்... வாழ்த்துக்கள் நண்பரே! தொடருங்கள்!

இளசு
05-07-2008, 03:29 PM
அருமை ஜூனைத்..

அளவான அவசியத்துக்கேற்ற மௌனம் - ஒரு ரத்தினம்.

கவீ தொடங்க
ஆதவன் மிக ஆழ்ந்து அலச
ஷீ உணர்ந்து எழுத

பின்னூட்டங்களால் மின்னும் திரி இது!

அனைவருக்கும் என் அன்பு!

பூமகள்
05-07-2008, 03:45 PM
ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
சில நாவுகளும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும் போது.முதலில் மன்னியுங்கள் ஜூனைத் அண்ணா...!
ஏற்கனவே படித்து அசந்த கவிதை.. பின்னூட்ட மிட நேரம் ஒத்துழைக்கவில்லை..

உங்களின் அழகான வரிகளில் மிளிர்கிறது கவிதை..!!

பேச்சின் அவசியத்தில்
மௌனம்.. வில்லங்கம்..

அமைதியின் அவசியத்தில்
மௌனம்.. மாணிக்கம்..!

வெற்றிக்கு பின்..
மௌனித்தல் தான்..
மேன்மை...!!

சில நேரங்களில் தலைக்கனமென தவறாகக் கொள்ளவும் வாய்ப்புண்டு..

தோல்வியின் பின்..
அழுந்தி உடுத்தனும்.
மௌனம்..

சில நாவுகள் நம் உணர்வுகளை அப்போது தான்.. பதம் பார்க்கும்...!!

அவசியமும்..
ஆளுமையும்
ஒரு சேர...
மௌனப் பிகடனம்..
அவ்வப்போது
தேவையே...!!

மனமார்ந்த பாராட்டுகள் சகோதரரே..!!

பெரியண்ணாவின் ரத்தினப் பதில்..
இம்புட்டு நேரம் நான் சொல்ல விளைந்ததைச் சொல்லிவிட்டது...!! ;)