PDA

View Full Version : உன்னை காதலிக்க பிடிக்கும்



நம்பிகோபாலன்
27-06-2008, 10:46 AM
உன்னை காதலிக்க
பிடிக்கும்
அது என்னவோ உன்னை
காதலிக்க மட்டுமே
பிடிக்கிறது

தனிமையில் சிரிப்பது
முதல்
என்னை நானே
ரசிப்பது வரை
உன்னை காதலிக்க
ஆரம்பித்தபிறகுதான்…

ஒவ்வொரு நிமிடமும்
உன்னை பற்றியே
நினைப்பதால்
எங்கெ உனக்கு
இருமல் வந்து
உடல் சரி இல்லாமல்
போய்விடுமோ
என்ற பயத்துடனே
நினைக்கிறேன்..

நீ என்னருகில்
வருகையில்
என்னை சுற்றியுள்ள
அனைத்து உயிர்களும்
உயிரற்று போகிறது
என்னையும் சேர்த்து…

பெண்ணே
உன் உதடுகள் பேசும்
அழகை விட
இமை திரந்து
பேசும் விழிகளே
எனக்கு அதிகம்
பிடிதிருக்கிறது….

பெண்ணே
மீன்டும் ஒருமுறை
கூறுகிறேன்
எனக்கு
என் காதலை
உன்னிடம்
காதலிக்க பிடிக்கிறது.