PDA

View Full Version : சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு !!!



கண்மணி
27-06-2008, 09:59 AM
நன்றி - மின்னஞ்சல் அனுப்பிய தோழிக்கு!!! - இனி மேலப் படிங்க..

-------------------------------------------------------------------------------



ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு.. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு.. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

மன்மதன்
27-06-2008, 03:23 PM
நல்லாவே யோசிக்கிறாங்க..!! சூப்பர்..

மதி
27-06-2008, 03:28 PM
இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

"மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."

mukilan
27-06-2008, 03:31 PM
சூப்பர்! அப்படியே மற்ற துறை சார்ந்தவங்களைப் பத்தியும் யோசிச்சு பதிவு போட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க. :)

mukilan
27-06-2008, 03:34 PM
இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

"மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."

இதில என்னங்க கஸ்டம்... உங்க துறையிலேயே நீங்களே தேடிக்கோங்க :D
டிப்ஸ் வேணும்னா .....................................................................


என்னைக் கேட்காதீங்கன்னு சொன்னேனப்பு

ஓவியன்
27-06-2008, 03:36 PM
"மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."

மதி...!!

உங்களுக்கு பொண்ணு பார்கிறது கஸ்ரம்னு அப்பா சொன்னாரா......???? :D

இல்லை, நீங்க ரொம்ப கஸ்ரப் படப் போறீங்கனு சொன்னாரா....?? :aetsch013:

(அப்பாடா, அலுவலகத்தில் மதியோட பொசிசனைப் பற்றிக் கொஞ்சம் குழப்பி விட்டாச்சு..!!! :icon_rollout: )

அன்புரசிகன்
27-06-2008, 03:37 PM
நம்ம மன்றத்தில் யாராவது டெவலப்பர் குழாம் இருக்கா????

ஓவியன்
27-06-2008, 03:38 PM
சூப்பர்! அப்படியே மற்ற துறை சார்ந்தவங்களைப் பத்தியும் யோசிச்சு பதிவு போட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க. :)

முக்கியமாக ஒரு கையில் கரட்டுடன் இருப்பவங்களைப் பற்றி, இல்லையா முகில்ஸ்........!!! :D:D:D

மதி
27-06-2008, 03:40 PM
இதில என்னங்க கஸ்டம்... உங்க துறையிலேயே நீங்களே தேடிக்கோங்க :D
டிப்ஸ் வேணும்னா .....................................................................


என்னைக் கேட்காதீங்கன்னு சொன்னேனப்பு

அந்த துறை எந்த துறைனு தெரியாம தானே முழிச்சிகிட்டு இருக்கோம்
டிப்ஸ் வாங்கற வேலையெல்லாம் இன்னும் பார்க்க ஆரம்பிகல..:icon_ush::icon_ush::icon_ush:

அன்புரசிகன்
27-06-2008, 03:40 PM
இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

"மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."
நிரூபணம் ஆகிவிட்டது. நீங்க அந்த டெவலப்பர் குறூப் தான். காரணம் உங்களுக்கு திருமணம் ஆவது கஷ்டம் என சொல்லவில்லை. மாறாக உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம் என்று சொல்லியிருக்காங்க....

கண்மணி அக்கா... ஆனாலும் மதியாருக்கு ஏன் இன்னமும் திருமணம் ஆகல????? அவருதான் ரொம்ப நல்லவராச்சே..... நல்லவங்களத்தான் ரொம்ப கடவுள் சோதிப்பாரா,,,,???? :rolleyes:

செழியன்
27-06-2008, 03:40 PM
ரொம்ப சந்தோசமாக இருக்கு , எங்கள கட்டிக்கவும் பொண்ணு இருக்கு மக்கா...........


அப்படியே வெளிநாட்டு மாப்பிளைகளை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க கண்மணி அக்கா

mukilan
27-06-2008, 03:40 PM
முக்கியமாக ஒரு கையில் கரட்டுடன் இருப்பவங்களைப் பற்றி, இல்லையா முகில்ஸ்........!!! :D:D:D

அதே! அதே!! சபாபதே!!!:rolleyes:

மதி
27-06-2008, 03:41 PM
நம்ம மன்றத்தில் யாராவது டெவலப்பர் குழாம் இருக்கா????

எத டெவலப் பண்றத பத்தி கேக்கறீங்கப்பூ? :D:D:eek::eek::icon_ush::icon_ush:

அன்புரசிகன்
27-06-2008, 03:42 PM
எத டெவலப் பண்றத பத்தி கேக்கறீங்கப்பூ? :D:D:eek::eek::icon_ush::icon_ush:

மன்னிச்சுக்குங்க... உங்க பதிவ பார்க்காம போட்டது அது... இப்ப தான் புரிஞ்சுபோச்சே................. மன்றத்தில இருக்காங்க..............

mukilan
27-06-2008, 03:42 PM
நிரூபணம் ஆகிவிட்டது. நீங்க அந்த டெவலப்பர் குறூப் தான். :rolleyes:

இதன் மூலம் மதியார் டெவெலப்ப்ர் இல்லைன்னு சொல்ல வர்றாரு அன்பு. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.

மதி
27-06-2008, 03:43 PM
நிரூபணம் ஆகிவிட்டது. நீங்க அந்த டெவலப்பர் குறூப் தான். காரணம் உங்களுக்கு திருமணம் ஆவது கஷ்டம் என சொல்லவில்லை. மாறாக உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம் என்று சொல்லியிருக்காங்க....

கண்மணி அக்கா... ஆனாலும் மதியாருக்கு ஏன் இன்னமும் திருமணம் ஆகல????? அவருதான் ரொம்ப நல்லவராச்சே..... நல்லவங்களத்தான் ரொம்ப கடவுள் சோதிப்பாரா,,,,???? :rolleyes:

இல்லியே..இல்லியே...
நான் டெவலப்பர் இல்லியே..டெஸ்டிராயராக்கும்.:D:D

மயூ
28-06-2008, 05:31 AM
வாசிக்கும் போது பெருமையா இருந்தது...
ஏன்னா.. நான் ஒரு டெட் என்ஜினீயராத்தான் வேலையில் சேர்ந்திருக்கிறன்...!! QTP, LoadRunner தான் வாழ்க்கை...!!! டெவ் ஆகோணும் என்றிறுந்த கனவு இதைப் பார்த்ததும் ஒடியே பொயிடுச்சு...

என் ஞானக் கண்ணைதிறந்த சகோதரியே.. நன்றி நன்றி!!!

மன்மதன்
28-06-2008, 09:05 AM
வாசிக்கும் போது பெருமையா இருந்தது...
ஏன்னா.. நான் ஒரு டெட் என்ஜினீயராத்தான் வேலையில் சேர்ந்திருக்கிறன்...!! QTP, LoadRunner தான் வாழ்க்கை...!!! டெவ் ஆகோணும் என்றிறுந்த கனவு இதைப் பார்த்ததும் ஒடியே பொயிடுச்சு...



டெஃபனட்டாவா??

டெட்டிலிருந்து டெவ் வரைன்னு சீக்கிரம் ஒரு கட்டுரை கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்..:D:D

மயூ
28-06-2008, 01:25 PM
சின்ன எழுத்துப் பிழையை இப்படியா தூக்கிப் பிடிப்பீங்க!!!
டெட் இல்லை டெஸ்ட்!

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 04:50 PM
நன்றி - மின்னஞ்சல் அனுப்பிய தோழிக்கு!!! - இனி மேலப் படிங்க..
நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

பாவம் அவுங்க விட்டுடுங்க

விகடன்
29-06-2008, 06:32 PM
டெவலப்பர் தொழில் ரீதியாக படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். டெவலபரின் அடிமாட்டு வாழ்க்கையை சொல்லும்போது மற்றய தரத்திலிருப்போர் ஊறுகாயானது ஒரு மாதிரியாக இருந்தாலும் கரு பிறழ்ச்சியடையவில்லை :D .

மின்னஞ்சல் அனுப்பியவரிற்கும் அதை இங்கே பலரிற்கு விருந்தாக்கிய கண்மணிக்கும் நன்றிகள்.

மயூ
30-06-2008, 03:48 AM
நம்ம மன்றத்தில் யாராவது டெவலப்பர் குழாம் இருக்கா????

ஒரு காலத்தில எங்கட பிரதீப் அண்ணா எல்லாம் பெரிய டெவலெப்பர்!!

இப்பத்தான் ஏதோ லீட் ஆகிட்டாராம்!!! :redface:

மயூ
30-06-2008, 03:49 AM
டெவலப்பர் தொழில் ரீதியாக படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். டெவலபரின் அடிமாட்டு வாழ்க்கையை சொல்லும்போது மற்றய தரத்திலிருப்போர் ஊறுகாயானது ஒரு மாதிரியாக இருந்தாலும் கரு பிறழ்ச்சியடையவில்லை :D .

டெவ் அடிமாட்டு வாழ்க்கையா??? அவனுகளுக்குத்தான் சம்பளம் அதிகம்.... மண்ட கனம் அதைவிட அதிகம்!!! :mad:

கண்மணி
30-06-2008, 04:04 AM
நிரூபணம் ஆகிவிட்டது. நீங்க அந்த டெவலப்பர் குறூப் தான். காரணம் உங்களுக்கு திருமணம் ஆவது கஷ்டம் என சொல்லவில்லை. மாறாக உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம் என்று சொல்லியிருக்காங்க....

கண்மணி அக்கா... ஆனாலும் மதியாருக்கு ஏன் இன்னமும் திருமணம் ஆகல????? அவருதான் ரொம்ப நல்லவராச்சே..... நல்லவங்களத்தான் ரொம்ப கடவுள் சோதிப்பாரா,,,,???? :rolleyes:

மதியாருக்கு எப்படிங்க கல்யாணம் நடக்கும்.. மதிப்பவங்களுக்கும் மிதிப்பவங்களுக்கும் தான் கல்யாணம் நடக்குது!!!:D:D:D

திரு. மதி யார்? மதியார் திருமதி யார்? மதி யார்? திருமதி யார்?:D:D:D

பையன் பொண்ணு பார்த்துக் கொள்வார் என அப்பா கவலைப் படவில்லை.

அப்பா பொண்ணு பார்ப்பார் என பையன் கவலைப் படவில்லை.

அப்பாவும் பையனும் கவலைப் படலையேன்னு அம்மா கவலைப்படலை.

யாருமே கவலைப் படலையேன்னு நானும் கவலைப் படலை!:icon_b: