PDA

View Full Version : அடிபடாத உயிர்ப்பு!



நாகரா
26-06-2008, 04:20 PM
கற்களிடையே புற்கள்
சொற்களிடையே மௌனம்
அடிபடாத உயிர்ப்பு!

ஓவியன்
29-06-2008, 11:32 AM
அடிபடாத உயிர்ப்பு
எனக்கு பிடிபடாத
காரணமென்னவோ...?? :traurig001:

நாகரா
29-06-2008, 04:21 PM
ஒளிந்திருக்கும் உயிர்ப்பே
வெளிப்பட்டிருக்கும் உன் மெய்
பிடிபடும் உண்மை அது.
உள் மையாம் உயிர்ப்பின் உள் மெய்
பிடிபடாத காரணத்தால்
மரணப் பொய்யின் மாயாஜாலம்.
வள்ளலின் வாய்மை பிடித்தால்
பெருவாழ்வு பிடிபடும்!
உண்மையிது
வெறும் வாய்வீச்சல்ல!

காரணங் கேட்டதற்கு
நன்றி ஓவியரே!

ஓவியன்
30-06-2008, 01:44 AM
புரிகிறது அண்ணலே, மூன்று வரிகளுக்குள் அழகாக சொல்லிய விடயம் இப்போதுதான் உறைகின்றது எனக்கு.....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா...!!

நாகரா
30-06-2008, 06:29 AM
புரிந்து கொண்டமைக்கு நன்றி பல தம்பி.