PDA

View Full Version : திடீரென!



நாகரா
26-06-2008, 04:18 PM
வெறித்து நோக்கிய வெறுவெளியில்
திடீரெனப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி!

இளசு
26-06-2008, 05:53 PM
காட்சிப்பிழையல்ல எனில்
காட்சிப்பா அருமை!

உள்நோக்கிய மன இருளில்
ஞான ஒளி போல..

தக்கவைப்பதுதான் கடினம்..


வாழ்த்துகள் நாகரா அவர்களே!

Narathar
26-06-2008, 08:15 PM
வெறித்து நோக்கிய வெறுவெளியில்
திடீரெனப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி!

ஆஹா தசாவதாரம் பார்த்தீங்களா?
சாவோஸ் தியரியின் பாதிப்பாய் இருக்குமோ

நாராயணா!!!!

ஓவியன்
29-06-2008, 11:28 AM
வாழ்க்கையும் இப்படித்தான்
வெறுத்துப் போய் ஓய்கையில்
சிறகடித்து வரும் நம்பிக்கைகள்
உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!! :)

நாகரா
29-06-2008, 04:40 PM
இளசு, நாரதர், ஓவியன், உற்சாகமூட்டும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி பல.