PDA

View Full Version : கே.புளியம்பட்டி பேருந்து நிலையம்சுஜா
26-06-2008, 11:43 AM
கே.புளியம்பட்டி பேருந்து நிலையம்

நாய்கள் உறங்கும் சாலையில் ,
பேருந்துகள் வாரம் தவறாமல் வந்துவிடுகின்றன .
_______________________________________

அன்புடன் சுஜா

அக்னி
26-06-2008, 11:46 AM
அதான் புளியம்பட்டி ஆச்சே...
அப்புறம் நாய் சாலையில் உறங்குவதில் என்ன அதிசயம்...?
:D

சுஜா அவர்களே...
எனக்குப் புரியலீங்க, இரண்டிற்குமான தொடர்பு...

கண்மணி
26-06-2008, 12:41 PM
வாரமொரு முறை
வரும் பேருந்துக்குச் சாலையா?
புளியம்பட்டி
முன்னேறித்தான் விட்டது..

நிமிடம் மூணு பஸ்
சாலை தேடித்தேடி
வருகுதாம் வேப்பம்பட்டிக்கு!!!

(ஹி ஹி கோவிச்சுக்காதீங்க:icon_rollout: இப்போ அக்னிக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். பேருந்து நிலையம் கட்டியாச்சு. சாலைகள் போட்டாச்சு. ஆனால் பஸ் மட்டும் வாரத்துக்கு ஒண்ணு. நியாயமான கவலைதான். ஆனால் ஏனுங்க நாய் தூங்கற ரோட்ல வாரத்துக்கு ஒரு பஸ் எதுக்குங்க? இங்க மனுஷங்க இருக்கற ஏரியாவுக்கே பஸ்ஸைக் காணோம்!!)

மன்மதன்
26-06-2008, 03:48 PM
அதான் புளியம்பட்டி ஆச்சே...
அப்புறம் நாய் சாலையில் உறங்குவதில் என்ன அதிசயம்...?
:D
.

நல்ல டைமிங்...

இளசு
26-06-2008, 06:16 PM
பக்கத்தில் இருக்கும் பெரிய ஊரை
தலையெழுத்தாய் வச்சிருக்கும் ஊருக்கு
பஸ்நிலையம் வந்தும் பஸ் வரவில்லையாமே
என்ன ஒரு தலையெழுத்து!!!!

பாராட்டுகள் சுஜா..
படைப்புகள் தொடர்ந்து அளிக்க என் ஊக்கங்கள்..

சிவா.ஜி
26-06-2008, 07:40 PM
கண்மணி நீங்க நினைக்கற மாதிரி கான்கிரீட் சாலை இல்லைங்க....சாதாரண மண்சாலைதான்...வாரத்துல ஆறு நாளைக்கு நாய் உறங்கும் சாலைதான்.....அதில் ஒருமுறை வரும் பேருந்து பற்றிதான் சுஜா எழுதியிருக்கிறார். இதை அனுபவிப்பவருக்குத்தான் இதன் அவலம் புரியும்.

பென்ஸ்
27-06-2008, 12:58 AM
சுஜா நல்வரவு...

கரு அருமை.. சொல்ல வந்ததும் அருமை...
வாழ்த்துகள்....

மன்றத்தில் பல கவிதைபோட்டிகள், கவிதை பட்டறை பகுதியில் கலந்து கொள்ளுக்கள் உங்கள் கவிதை வடிவு இன்னும் செம்மையாகும்.

கண்மணி
27-06-2008, 02:08 AM
கண்மணி நீங்க நினைக்கற மாதிரி கான்கிரீட் சாலை இல்லைங்க....சாதாரண மண்சாலைதான்...வாரத்துல ஆறு நாளைக்கு நாய் உறங்கும் சாலைதான்.....அதில் ஒருமுறை வரும் பேருந்து பற்றிதான் சுஜா எழுதியிருக்கிறார். இதை அனுபவிப்பவருக்குத்தான் இதன் அவலம் புரியும்.

(வேப்பம்பட்டி புதூர்)வி. புதூரில் இருந்தவளுக்கும் கே. புளியம்பட்டி கவலை புரியுது, ஆனால் பஸ் நிலையம் தான் இடிக்குது சிவாஜி அண்ணே!

பஸ் நிறுத்தமா? நிலையமா? அப்படீங்கற கன்ஃபியூஷன்..

ரோடும் சரி இல்லை.. நிறுத்தமும் இல்லை, ஆனா சரக் சரக்னு போற பேருந்து பார்க்கிற கிராமங்கள் இருக்கு. தெரியுமா? நிறுத்தம் வேண்டும்னு அலுவலக அலுவலகமா மனு கொடுத்து தவம் கிடந்து, கருணை காட்டுற ஓரிரண்டு கண்டக்டர்களால் சிலருக்குப் பயண வரம் கிடைத்து விடுகிறது.

இது வினோதமான விஷயம் இல்லையா, குண்டும் குழியுமாய், இருந்தும் இல்லாத சாலை.. அதில் நிமிடத்தில் 3 பேருந்து வேப்பம்பட்டி போகிறது. ஆனால் புதூர் மக்கள் வேப்பம்பட்டி போய்த்தான் பேருந்தில் ஏற முடியும்

புளியம் பட்டிக் கவலை அப்படியே நேரெதிர்.. பேருந்து நிலையம் உண்டு பேருந்து வருவதில்லை.

இது கிண்டல் இல்லை சிவாஜி.. உங்க கைச் சமையல் சாப்பிடும் பொழுது எங்க அம்மா ஞாபகம் வந்திடுச்சின்னு இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவீங்களே அது மாதிரி!..

சோகத்தையும் சிரிச்சிகிட்டே சொல்ற நையாண்டி..::lachen001::traurig001::lachen001:

ஷீ-நிசி
27-06-2008, 02:08 AM
என்னவோ சொல்ல வந்திருக்கீங்க..
கரு இன்னும் வளரவில்லை....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

நம்பிகோபாலன்
27-06-2008, 06:13 AM
இது இப்படி இருக்கலாமா....

வராத பேருந்திற்க்கு
காத்திருக்கும் நிழற்குடை !!!!

சிவா.ஜி
27-06-2008, 07:05 AM
இது கிண்டல் இல்லை சிவாஜி.. உங்க கைச் சமையல் சாப்பிடும் பொழுது எங்க அம்மா ஞாபகம் வந்திடுச்சின்னு இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவீங்களே அது மாதிரி!..

சோகத்தையும் சிரிச்சிகிட்டே சொல்ற நையாண்டி..::lachen001::traurig001::lachen001:

புரியுது கண்மணி. எனக்கும் அந்த பேருந்து நிலையம் என்பதில் குழப்பம்தான். அது நிறுத்தமாய் இருக்கலாம். அதுகூட பக்காவான நிறுத்தமாய் இருக்காது. ஒரு குத்துமதிப்பான இடமாகத்தான் இருக்கும்.

உங்கள் நையாண்டியை ரசித்தேன்.

சுஜா
27-06-2008, 08:29 AM
அதான் புளியம்பட்டி ஆச்சே...
அப்புறம் நாய் சாலையில் உறங்குவதில் என்ன அதிசயம்...?
:D

சுஜா அவர்களே...
எனக்குப் புரியலீங்க, இரண்டிற்குமான தொடர்பு...

பேருந்து வர தாமதமாகும் சாலையில் நாய்கள் பயமறியாமல் துங்கும்
அதைதான் சொல்லவருகிறேன்.
___________________________________

அன்புடன் சுஜா

சுஜா
27-06-2008, 08:31 AM
வாரமொரு முறை
வரும் பேருந்துக்குச் சாலையா?
புளியம்பட்டி
முன்னேறித்தான் விட்டது..

நிமிடம் மூணு பஸ்
சாலை தேடித்தேடி
வருகுதாம் வேப்பம்பட்டிக்கு!!!

(ஹி ஹி கோவிச்சுக்காதீங்க:icon_rollout: இப்போ அக்னிக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். பேருந்து நிலையம் கட்டியாச்சு. சாலைகள் போட்டாச்சு. ஆனால் பஸ் மட்டும் வாரத்துக்கு ஒண்ணு. நியாயமான கவலைதான். ஆனால் ஏனுங்க நாய் தூங்கற ரோட்ல வாரத்துக்கு ஒரு பஸ் எதுக்குங்க? இங்க மனுஷங்க இருக்கற ஏரியாவுக்கே பஸ்ஸைக் காணோம்!!)

பேருந்து வர தாமதமாகும் சாலையில் நாய்கள் பயமறியாமல் துங்கும்
அதைதான் சொல்லவருகிறேன்.
______________________________________
அன்புடன் சுஜா

kavitha
27-06-2008, 10:07 AM
தலைப்பு தேடிப்படிக்கும்படி இருக்கிறது சுஜா. தொடர்ந்து எழுதி வாருங்கள்.

கண்மணி
27-06-2008, 10:10 AM
உங்க கவிதையை அச்சரசுத்தமாக்ப் புரிந்து கொண்டேன். அப்படியே நம்ம ஊரு ஆதங்கத்தையும் கொஞ்சம் கொட்டுவமேன்னு சொன்னேன்

கோவிச்சுக்காதீங்க!!!கே. புளியம்பட்டி நேரெதிர்

சுஜா
28-06-2008, 08:15 AM
கண்மணி அக்கா நான் கோவிச்சுக்கவே இல்லை.
நீங்க விமர்சனம்தான் செஞ்சீங்க அதுக்குபோய் யாரவது ...............................

இன்னும் நான் சிரத்தையெடுத்து எழுதுவேன் .
அன்புக்கு நன்றி .
_______________________________________________
அன்புடன் சுஜா

சுஜா
28-06-2008, 08:18 AM
தலைப்பு தேடிப்படிக்கும்படி இருக்கிறது சுஜா. தொடர்ந்து எழுதி வாருங்கள்.

யையோ ரகசியத்தை கண்டு புடுச்சிடின்களே !

இன்னும் நான் சிரத்தையெடுத்து எழுதுவேன் .
அன்புக்கு நன்றி
________________________________________
அன்புடன் சுஜா .