PDA

View Full Version : மிருகமும் மனிதமும்



நாகரா
26-06-2008, 10:59 AM
நான்கு கால்கள்
கூட்டினால் ஒன்று
இயற்கையின் கணக்கில்
மிருகம்
அடைந்துவிட்டது முழுமை

இரண்டு கால்கள்
கூட்டினால் அரை
இயற்கையின் கணக்கில்
மனிதம்
அடையவில்லை முழுமை

அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

அரைக்கு மேலே
மிக மிக உயரத்தில்
வைக்கப்பட்டிருக்கிறது
தலை

கால்கள் இரண்டும்
இல்லையென்றாலும்
மனிதம்
முழுமையாக முடிவதே
எண் சாண் உடம்புக்குப்
பிரதானமான
அவ்வொன்றால் தான்

தலையின்றேல்
பூஜ்ஜியந் தான்
தலையிருந்தும்
பயன்படவில்லையென்றால்
மனிதம்
முழுமையடைய முடியாத
அரை தான்

இயற்கையால்
படைக்கப் பட்டிருக்கிறது
ஒரு பாதியாய்
மனிதம்
அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

kavitha
27-06-2008, 07:53 AM
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

சம்பவம் = நடந்து முடிந்தது
அசம்பவம் = நடந்தும் முடியாதது?

1/4, 1/2 கணிதத்தில் முழுமையையும், சுழியையும் இணைத்து பொருள் கொள்ளவைத்துவிட்டீர்கள்.


தலையிருந்தும்
பயன்படவில்லையென்றால்
மனிதம்
முழுமையடைய முடியாத
அரை தான்
தலையில்லாத மண்புழு கூட மண்ணை வளப்படுத்தி முழுமையடைகிறது. மனிதன்?! ..... நிறைய யோசிக்கவேண்டும். நல்லதொரு கவிதை ஐயா.

நாகரா
29-06-2008, 04:25 PM
சிந்திக்க வைக்கும் உம் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி கவிதா.