PDA

View Full Version : விமானத்தில், பறப்பில் தூங்கிய விமானிகள்...



அக்னி
26-06-2008, 08:26 AM
டுபாயிலிருந்து கிளம்பி மும்பைக்குச் சென்ற விமானத்தின் இரு விமானிகளும் தானியங்கி பறப்பில் விமானத்தைப் பறக்க வைத்துவிட்டுத் தூங்கி விட்டனராம்.
மும்பையில் தரையிறங்க வேண்டிய விமானம், மும்பையைத் தாண்டி, கோவா வரைக்கும் சென்று, திரும்பி வந்து தரையிறங்கியதாம்.
தரையிறங்குவதற்காக, உயரத்தைக் குறைக்கும்படி விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவுக்கு, விமானத்திலிருந்து பதில் வராததால், விமானம் கடத்தப்பட்டதோ என்ற பரபரப்பு ஏற்பட்டதாம். தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் ஒலிக்கவைக்கப்பட்ட விசேட அலாரத்தின் சத்தத்திலேயே இரு விமானிகளும் விழித்தார்களாம்.

மேலதிக தகவல்களுக்கு... (http://thatstamil.oneindia.in/news/2008/06/26/india-plane-overshoots-mumbai-as-both-pilots.html)


மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது.

துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.

இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு பைலட் தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை பைலட்டும் தூங்கிவிட்டார்.

விமானம் 'A 474 South route' என்ற பாதையில் சென்று கொண்டிருந்தது. விமானத்தை இயக்கியது ஆட்டோ பைலட்.

இந் நிலையில் மும்பை வான் வெளியில் இந்த விமானம் நுழைந்தது. அப்போது, மும்பை விமான நிலையத்தின் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பறக்கும் உயரத்தைக் குறைக்குமாறு விமானிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனால், அவர்களிடமிருந்து பதில் இல்லை.

மும்பை விமான நிலையத்திற்கு 100 மைல் தொலைவில் வரும்போதே உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த விமானம் தொடர்ந்து அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

இதனால் விமானம் கடத்தப்பட்டுவிட்டதோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து SELCAL (selective calling) என்ற முறையை பயன்படுத்தி விமானத்தை தரைக் கட்டுப்பாட்டு பிரிவினர் தொடர்பு கொண்டனர்.

இந்த முறையை பயன்படுத்தினால் விமானிகளின் காக்பிட் அறையில் அலாரம் ஒலிக்கும். இதை அவ்வளவு சீக்கிரத்தில் பயன்படுத்திவிட மாட்டார்கள்.

அதே போல SELCAL அலாரம் ஒலிக்கவே அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர். இவர்களை எழுப்புவதற்குள் விமானம் மும்பையைத் தாண்டி கோவாவுக்கு பாதி தூரம் வரை போய்விட்டது.

இதையடுத்து விமானத்தை திருப்பி மும்பையில் பத்திரமாக தரையிறக்கினர் இரு விமானிகளும்.

இந் நிலையி்ல் இந்த சம்பவத்தை பூசி மொழுகும் வகையில் புதிய 'திரைக்கதையை' ஏர்-இந்தியா எழுதி வருவதாகத் தெரிகிறது. விமானத்தின் தொலைத் தொடர்பில் பழுது ஏற்பட்டதாக 'கதை' ரெடியாகி வருகிறது.


என்ன கொடுமை இது...

நன்றி: தட்ஸ்தமிழ் இணையம்

மதி
26-06-2008, 08:43 AM
விஞ்ஞானத்தின் வளர்ச்சியே தனி தான்.. அதுக்காக இப்படியா...? நல்லவேளை அலாரத்தால் முழிச்சாங்க. இல்லேன்னா... 100 பேரோட கதியும் என்னாயிருக்கும்..?

aren
26-06-2008, 08:49 AM
இது நம்பும்படியாக இல்லை.

மதி
26-06-2008, 08:52 AM
இது நம்பும்படியாக இல்லை.

ஆரென் விமானத்தில் இதற்கான சாத்தியகூறுகள் இருக்கு. ஆனால் விமானிகள் இவ்வளவு அசட்டையாகவா தூங்குவார்கள் என்பது தான் நம்பும்படியா இல்லை.

சிவா.ஜி
26-06-2008, 09:35 AM
ஆரென் ஏர் இந்தியாவில் இதுவும் நடக்கும் இதற்கு மேலேயும் நடக்கும். மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்த அரசாங்க ஊழியர்கள் என்னும் கேவலப்பிறவிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்தியநாட்டின் அரசு ஊழியர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கில்லாத.....மன்ற மான்பு கருதி அடக்கி வாசிக்கிறேன். சுருக்கமாய் சொல்லப்போனால் அரசு ஊழியர்கள் இந்தியாவின் அவமான சின்னங்கள்.

மதி
26-06-2008, 09:46 AM
சிவா ண்ணா.. பொத்தம் பொதுவாக எல்லோரையும் தாக்காதீர்கள். என்னளவில் நான் நிறைய நல்ல அரசு ஊழியர்களையும் பார்த்திருக்கிறேன் என் தந்தை உட்பட. :)

சிவா.ஜி
26-06-2008, 10:08 AM
மதி....நானும் பதினோரு வருடங்களாக அரசு ஊழியனாக பணிபுரிந்தவன்தான். நான் பார்த்த வரையில்...உங்கள் தந்தையைப்போல மிகச் சிறந்த மனிதர்கள் வெகு சொற்பமே. ஆனால் அவர்களால்தான் சில நன்மைகள் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக அவர்களை நான் வணங்குகிறேன்.

ஆனால் 99 சதவீத அரசு ஊழியர்களால் சாதாரன மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்று வெளி உலகத்தில் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு சோகக்கதையை வைத்திருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கும் நன்மை செய்யும் அந்த மகத்தான மனிதர்களை பற்றி நான் பேசவில்லை...பேச அருகதையும் இல்லை. நான் சொல்வதெல்லாம் அந்த 99 சதவீத கேவலமான அரசு ஊழியர்களைப்பற்றிதான்.

மீண்டும் சொல்கிறேன் மதி...நேர்மையான அந்த ஒரு சதவீத அரசு ஊழியர்களை நான் உளமாற மதிக்கிறேன். அதையும் தாண்டி என்னுடைய பதிவு உங்கள் மனதை பாதித்ததென்றால்....என்னுடைய உண்மையான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

மதி
26-06-2008, 10:16 AM
அட.. மன்னிப்பெல்லாம் எதுங்க...? நீங்க ஒன்னும் தப்பா சொல்லிடலை.. உங்க அனுபவங்களை சொன்னீர்கள்.. நானும் என் அனுபவத்தை சொன்னேன்.. இதில் ஒன்றுமில்லை.

மேற்கூறிய சம்பவத்தில் விமான விதிகள் மிக கடுமையானது. இப்படி ஒரு சம்பவம் மட்டும் நிகழ்ந்திருந்தால் இன்னேரம் சீட்டை கிழித்திருப்பார்கள்.. (இந்தியாவிலும் கூட). விமானக் கோளாறு என்பது அந்த ஏர்லைன்ஸ் தன் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று ஜோடனை செய்வதாயிருக்கும்.

ஓவியன்
26-06-2008, 11:31 AM
அவர்களை நம்பித்தான் பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்ற எண்ணம்
மனதில் விழிக்காது தூங்கியதால்
வந்த தூக்கம் இது...!!

செய்திப் பகிர்வுக்கு நன்றி அக்னி..!!

அறிஞர்
26-06-2008, 01:53 PM
வெகுதொலைவு விமாங்களில் ஓய்வெடுக்க.. தானியங்கி வசதி இருக்குமென்றே தெரிகிறது...

அலாரம் வைத்துவிட்டு தூங்கினால் சரி.. அதுக்குன்னு இப்படியா..

ராஜா
26-06-2008, 02:04 PM
ஏர் இந்தியா.. விமானி தூங்கலேன்னா

எறங்கி வந்தியா..

கண்மணி
26-06-2008, 02:42 PM
ஆனாலும் இந்தச் செய்தியில் பிரச்சனை இருக்கற மாதிரி தெரியுதே!..

விமானங்கள் விமான நிலையத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்குள் வரம் பொழுது ரேடார் திரையில் தெரியும். விமான நிலைய அதிகாரிகளும் விமானைகளும் தொடர்பு கொள்ளணும். அதன் பிறகுதானே அப்டிக்கா போங்க இப்டிக்கா வாங்கன்னு சொல்வார்களாம்.

ஒண்ணு பண்ணலாம், விமானிங்க சீட்ல ஒரு சின்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பண்ணி மண்டையில் செல்லமா குட்டுகிற மாதிரி வைக்கலாம். ரேடார் சிக்னல் டிடெக்ட் ஆகி 5 செகண்டுக்குள்ள விமான நிலையத்தை தொடர்பு கொள்ளலைன்னா நங்கு நங்குன்னு கொட்ற மாதிரி....

;)

அன்புரசிகன்
26-06-2008, 02:52 PM
அப்படியே தூங்கியிருந்தால் ரஷ்யாவில் தரையிறங்கியிருக்குமோ? அல்லது வெடித்து சிதறியிருக்குமோ??? :eek:

குறட்டை எல்லாம் விட்டிருப்பாங்களா??? :rolleyes:




ஒண்ணு பண்ணலாம், விமானிங்க சீட்ல ஒரு சின்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பண்ணி மண்டையில் செல்லமா குட்டுகிற மாதிரி வைக்கலாம். ரேடார் சிக்னல் டிடெக்ட் ஆகி 5 செகண்டுக்குள்ள விமான நிலையத்தை தொடர்பு கொள்ளலைன்னா நங்கு நங்குன்னு கொட்ற மாதிரி....

;)

இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....:icon_b:

அக்னி
26-06-2008, 02:59 PM
Originally Posted by கண்மணி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=360218#post360218)

ஒண்ணு பண்ணலாம், விமானிங்க சீட்ல ஒரு சின்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பண்ணி மண்டையில் செல்லமா குட்டுகிற மாதிரி வைக்கலாம். ரேடார் சிக்னல் டிடெக்ட் ஆகி 5 செகண்டுக்குள்ள விமான நிலையத்தை தொடர்பு கொள்ளலைன்னா நங்கு நங்குன்னு கொட்ற மாதிரி....
இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....:icon_b:
எனக்கும்தான்... :sport-smiley-019:
யக்கோவ்... எதுக்கும் உரிமம் வாங்கி வச்சுக்கோங்க...

பூமகள்
26-06-2008, 03:47 PM
விமான ஓட்டிகளை மேய்க்க.. வேற யாரையாவது நியமிக்கனும்..!! அப்போதான் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்...!! (பூவு நீ ரொம்ப புத்திசாலியாயிட்டே...அதுக்குன்னு இப்படியா??!! :D:D)

இல்லாங்காட்டி.. கண்மணி அக்கா சொன்ன மாதிரி.. நங்கு நங்குன்னு குட்டுற மாதிரி.. சீட் மேலேயே... ஒரு ரகசிய கொட்டு மிசின் ஒளிச்சி வைச்சிருக்கனும்...!! விமானி தூங்கினா.... ஒரு கொட்டு.. அதுக்கு தப்பிச்சிட்டா... சீட்டுக்கு மேலே.. ஒரு வாளி தண்ணியை தலையில் கொட்டிடனும்... ஹா ஹா.. :D இது எப்படி இருக்கு...!! ;)

அன்புரசிகன்
26-06-2008, 03:51 PM
அதுக்கு தப்பிச்சிட்டா... சீட்டுக்கு மேலே.. ஒரு வாளி தண்ணியை தலையில் கொட்டிடனும்... ஹா ஹா.. :D இது எப்படி இருக்கு...!! ;)
ஸ்..........ஸ்............. முடியல.....

மன்மதன்
26-06-2008, 04:05 PM
ம்ம் இவங்களுக்கு நம்ம மன்ற விமானி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4392)ங்க எவ்வளவோ தேவலை.:icon_hmm:..

மதி
27-06-2008, 08:32 AM
இதைப் பற்றி சற்று நேரத்திற்கு முன் தான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஏர் இந்தியாவில் விமானிகளுக்கு விமானம் ஓட்டும் நேரம் பொறுத்து தான் சம்பளமாம். அதனாலேயே பல விமானிகள் உடல் அலுப்பையும் கண்டுகொள்ளாமல் விமானங்களில் பறக்க கிளம்பிவிடுவார்களாம். இதனாலேயே நடந்த நிகழ்வு தான் இது. விமானத்தில் விமானிகள் தூங்குதல்.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ?