PDA

View Full Version : அறுந்து போன சிறகுகள்



shibly591
26-06-2008, 03:49 AM
உன்னால்
முளைத்த சிறகுகள்
உன்னாலேயே
கத்தரிக்கப்பட்டன.

நீ தந்த
காதல் கடிதங்களை
எரித்து விடலாம்
மனப்பாடம்
செய்து வைத்த மனசை
எங்கே போயத்;தொலைப்பது?

உன் கனவுகளைச்
சுமந்த என்
கண்களைப்பார்
என் ஆத்மாவின்
மரணப்படுக்கையை
அது துல்லியமாய் சொல்கிறது

உன் கூடவே
நடந்த என் கால்கள்
இன்று நொண்டியாய்
என் வாழ்க்கையைப் போல…

என் விரல்களில்
நீ தீண்டிய
தடயங்கள்
நெருஞ்சி முள்ளாய்க் குத்துகிறது
என்னையும்
என் மனசையும்

நான் உனக்களித்த பரிசு
காதல்
நீ எனக்களித்த பரிசு
காயம்

கடைசியில்
இன்னொரு காதலோடு
நீ
அறுந்து போன
சிறகுகளோடு நான்....!

Narathar
26-06-2008, 04:19 AM
கடைசியில்
இன்னொரு காதலோடு
நீஅறுந்து போன
சிறகுகளோடு நான்....!

உங்கள் காதலியால் முடியுமென்றால் ( கவிதையில் தான்!!)
ஏன் உங்களால் முடியாது இன்னொறு காதலை தேடிக்கொள்ள?

முழுக்கடலுக்கும் என்ன ஒரு மீனா இருக்கிறது.... ???


நீ தந்த
காதல் கடிதங்களை
எரித்து விடலாம்
மனப்பாடம்
செய்து வைத்த மனசை
எங்கே போயத்;தொலைப்பது?....!

உங்களின் அடுத்த காதலியிடம் தான் ஹீ ஹீ :D

shibly591
26-06-2008, 04:48 AM
நல்லா சொன்னீங்க போங்க

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2008, 06:33 AM
நீங்க சொல்றதெல்லாம் பாரதிராஜா கால படத்துலதான். இப்பல்லாம் பையன்கள் ரொம்ப உஷார் மச்சி. இப்டியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் ரெண்டு மூணு ஃபிகர்ஸ் கைல வச்சுருக்காங்க பசங்க. இந்தக்காலத்துலயும் இப்டி அப்பாவியாவா இருப்பீங்க. வரிகள் சும்ம நச்னு இருக்குங்க. பாராட்டுக்கள்