PDA

View Full Version : கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு சந்திப்பு



சிவா.ஜி
25-06-2008, 11:45 AM
2006 தீபாவளி சமயம். நான் வளைகுடா நாடான பஹ்ரைனிலிருந்து தாய்நாடு திரும்பிக்கொண்டிருந்தேன். இடையில் அபுதாபியில் விமானம் மாறுவதற்காக மூன்றுமணிநேரம் விமான நிலையத்தில் இருக்க்கும்படி நேர்ந்தது. அந்த விமானநிலையத்தில் மூன்றுமணிநேரம் கடத்துவது அப்படியொன்றும் போரடிக்கும் விஷயமல்ல.

நிறைய கடைகள். அதிலும் எனக்குப் பிடித்த மின்னணு சாதனங்கள் கொட்டிக்கிடந்தன. அவற்ரைப் பார்வையிட்டபடியும், சில பொருள்களை
வாங்கிக்கொண்டும் இருந்தபோது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு. கறுப்புச்சட்டையணிந்த ஒரு கூட்டம் புயலாக நுழைந்தார்கள்.

என்னடா பெரியாரின் கண்மணிகள் இங்கும் ஏதாவது புரட்சி செய்ய வந்துவிட்டார்களா என்று பார்த்தால் அடிக்கடி ஊடகங்களில் பார்த்த முகங்களாக இருந்தன. பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது....வந்திருப்பது நமது இந்தியத் திருநாட்டின் ஏகபோக செல்லப்பிள்ளைகளான மட்டைபந்து குழுவினர்(கிரிக்கெட் குழுதாங்க) என்பது. பாகிஸ்தானுடன் இரண்டு ஒருநாள் பந்தயங்களில் கலந்துகொள்ள வந்தவர்கள்...முதல் பந்தயத்தில் தோற்று அடுத்த பந்தயத்தில் வெற்றிபெற்ற கையோடு தாய்நாடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அதோ தோனி....அதோ திராவிட்....இதோ பட்டான்...என்று அனைவரும் காட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் எனக்கும் தோன்றியது. சரி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று. கையோடு கொண்டு போயிருந்த டிஜிட்டல் கேமிராவில் பக்கத்திலிருந்தவரிடம் படம் பிடிக்கச் சொல்லி உதவி கேட்டுக்கொண்டு ஒவ்வொருவராய் அனுகினேன். ஆச்சர்யம் யாருமே மறுக்கவில்லை. திராவிட்-ஐ மட்டும்தான் நெருங்க விடவில்லை.

அவருடைய நன்பர்களா அல்லது பாதுகாவலர்களா தெரியவில்லை. எப்போதும் அவரைச் சூழ்ந்தே நின்றுகொண்டிருந்தார்கள். தோனி அதிகமாக அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடையில்தான் இருந்தார். சாதனங்களை வாங்கி குவித்துக்கொண்டிருந்தார்.(அப்போது யார் அவருடைய நன்பி என்று தெரியவில்லை)


ஹர்பஜன் சிங்கிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். மனிதர் பாவம் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு என்னிடம் பேனா இல்லையே என்றார். என்னிடம் இருக்கிறது என்று, அதைக் கொடுத்து கையெழுத்து வாங்கினேன்.(மறக்காமல் பேனாவையும் வாங்கிக்கொண்டேன்)

அடுத்து கிரேக் சேப்பலைப் பிடித்தேன். அவருடன் ஒரு கிளிக்.



மீதி ஆட்களைப் பிடிப்பதற்குள் சுனாமி வந்ததைப்போல, அங்கிருந்த இந்தியப் பயணிகள் அனைவரும் அவர்கள் மீது பாய....அவசரமாய் மாயமாகிவிட்டார்கள்.

மும்பை வந்து இறங்கியதும், பெட்டிகளை எடுக்க வந்த இடத்தில் இர்ஃபான் பட்டானை மடக்கினேன்.

யுவராஜ்-ஐ தனியாக கிளிக்கினேன்.

http://www.imagehosting.com/out.php/i1808825_yuvaraj.jpg

அதற்குள் அவர்களின் பெட்டிகள் வந்துவிட அனைவரும் வெளியேறிவிட்டார்கள். இந்தப் புகைப்படங்களால் என் பிள்ளைகளுக்கு ஒரு சந்தோஷம். நன்பர்களிடம் காட்டிப் பேச ஒரு விஷயம் கிடைத்தது. அவ்வளவுதான்.

கண்மணி
25-06-2008, 11:56 AM
அண்ணே! சிவாஜியண்ணே!!

தமிழில் புது வார்த்தைகளைப் புகுத்தும் பொழுது நாலு பேரைக் கேளுங்கண்ணே!!

நீங்க பாட்டுக்கு மட்டை வீரர்கள் அப்படின்னுட்டீங்க.. இப்பப் பார்த்து ஆசியக் கோப்பை போட்டியில மட்டையாயிட்டாங்கன்னு வச்சுக்குங்க.. பிரச்சனை உங்களுக்குத் தானே!!!


அப்புறம் பார்த்தால் பயண இடைச் சந்திப்பு அப்ப்டின்னு சொல்றீங்க..

இடையில இருக்கிற இடை எவ்வளவு பாடு படுது பாருங்க..


சந்திப்போட இடையைச் சேர்த்தா, ஆரம்பச் சந்திப்பு எப்போ முடிவுச் சந்திப்பு எப்போன்னு கேள்வி வருதில்லையா?

இடை அப்படின்னு தனியாப் பார்த்தா சிம்ரனைப் பார்த்தீங்களான்னு கேட்கத் தோணுது

பயண இடை அப்படின்னா கைகாலெல்லாம் என்ன ஆச்சுன்னு கேட்கத் தோணுது,

பயணத்தின் இடையில் சில சந்திப்புகள் (அல்லது ஒரு சந்திப்பு) அப்படின்னு விகுதிகள் தெளிவு கொடுக்கத்தானே அண்ணே இருக்கு.

சிவா.ஜி
25-06-2008, 11:59 AM
அய்யோ தல்லை சுத்துது....அதனால தலைப்பை மாத்திடறேன்.

தாமரை
25-06-2008, 12:00 PM
ஒரு அன்பு வேண்டுகோள். மன்றத்தில் யாரும் தமது உருவப் படங்களைப் பகிர்ந்து கொள்ள் வேண்டாம். யாருக்காவாது காட்ட வேண்டும் என எண்ணினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொள்ளவும்.

இணையம் நல்லவர்களும் தீயவர்களும் வித்தியாசம் தெரியாமல் உலவும் இடம். சில விஷமிகளின் செயல்கள் வெளியில் தெரிவதற்கு முன்னரே மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

சிவா.ஜி
25-06-2008, 12:03 PM
தங்கள் அறிவுரைக்கு நன்றி தாமரை. எனக்குப் பிரச்சனை இல்லை. எதையும் சமாளிக்கும் திடத்தை நான் பெற்றிருக்கிறேன். வீராப்புக்குச் சொல்லவில்லை...உண்மையிலேயே சொல்கிறேன். மறுத்து சொல்வதாய் தயவுசெய்து எண்ண வேண்டாம். பெண்கள்தான் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். விஷமிகளின் பார்வை அவர்கள் மீதுதான்.

கண்மணி
25-06-2008, 12:04 PM
இப்ப்பயும் தப்பாய்த்தானே தோணுது.. கிரிக்கெட் வீரர்களுடன் பயணம் போனீங்களா? இடையில் யாரைச் சந்திச்சீங்க?


பயணத்தின் இடையில் கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு சந்திப்பு!

கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு சந்திப்பு

இப்படி நேரா இருந்தா தெளிவா இருக்குமே!!

எப்படியோ சந்தி சிரிக்கற உப்பா இல்லாம, சந்தி(த்தி)ப்பா இருந்ததா?

செல்வா
25-06-2008, 12:33 PM
அந்த கதை எல்லாம் சொன்ன நீங்க இந்த கதைய சொல்லலியே...அண்ணா. :sauer028::sauer028:
(அப்பாடா அண்ணாவோட இன்பாக்ஸ் ஃபுல் ஆகப் போகுது... :icon_rollout: )

யக்கா... கண்மணியக்கா... என்னக்கா இது பிரிச்சி மேயிறது தெரியும் இது பிரிச்சி மேஞ்சி மறுபடியும் பிரிக்கிற மாதிரில்ல இருக்கு

Narathar
25-06-2008, 01:57 PM
கிரிக்கட் வீரர்களைவிட...............
சிவாவைப்பார்த்த திருப்தி எனக்கு...
சும்மா சத்தியராஜ் கணக்கா இருக்கீங்க..............
சரியான விக் கிடைத்தால் நமீதாவோடு டூயட் பாடலாம்!!!! :aetsch013:

நாராயணா!!!!!!! :D :D

ஷீ-நிசி
25-06-2008, 02:04 PM
அட! அருமைங்க... நம்ம வீரர்களோட புகைப்படம் எடுத்து கலக்கிபுட்டீங்க.... வாழ்த்துக்கள்!

ஆதி
25-06-2008, 02:04 PM
சிவாவைப்பார்த்த திருப்தி எனக்கு...

எனக்கும் தான் நாரதரே..




சும்மா சத்தியராஜ் கணக்கா இருக்கீங்க..............
சரியான விக் கிடைத்தால் நமீதாவோடு டூயட் பாடலாம்!!!! :aetsch013:

நாராயணா!!!!!!! :D :D

சத்யராஜு னு சொன்னதப் பார்த்து அண்ணனின் உயரத்ததான் குறிப்பிடுறீங்க னு நிசைச்சேன்..

அடுத்த வரிலதான் உங்க வில்லத்தனம் புரிஞ்சுது, நாராயணா... :)

நேசம்
25-06-2008, 02:07 PM
சிவாண்ணா பார்க்க ஜெயசூர்யா மாதிரி இருக்கிங்கா..சரியான விக் கிடைக்கவில்லையென்றால் யாரு கூட ஆடலாமுன்று நாரதரிடம் கேளுங்க.சரியா..

ஆதவா
25-06-2008, 02:29 PM
வாவ் அண்ணே!! நம்ம சச்சினைப் பார்த்தீங்களா?

இத்தனை நாளா இதைப் போடாம விட்டுட்டீங்களே!!! (தோனிகூட நிக்கும்போது ரொம்ப க்ளேர் அடிக்குதுண்ணே! :D :D)

அக்னி
25-06-2008, 02:59 PM
அட... சூப்பர்...
பிரபல்யமான முகங்களை, நேரில் காண்பதே ஒரு சந்தோஷம்தான்.
அரிதாகக் கிடைத்த அந்தக் கணங்களைப் பதிவு செய்து, அதையே மன்றத்திற் பதிவாக்கி, சந்தோஷப் பொறாமையை ஏற்படுத்திவிட்டீர்கள்.

mania
25-06-2008, 03:32 PM
அந்த கால ஜி ஆர் விஸ்வனாத் மாதிரி எல்லா படங்களிலும் இருக்கிறாரே....!!!!????
ஆச்சர்யத்துடன்
மணியா....:D:D:D

mania
25-06-2008, 03:35 PM
உன்ஹ நிழற்படம் நிஜ படமாக என் மனதில் பதிவாகி விட்டது....அன்பு தாமரை சொல்லியது போல உன் படங்களை தயவு செய்து டிலீட் செய்து விடேன்.....????
அனுபவபட்டவன்
மணியா.....!!!!???:rolleyes:

அன்புரசிகன்
25-06-2008, 04:36 PM
ஜூப்பராத்தான் இருக்கேள். ஆனால் படங்களில் இவ்வளவு அசண்டையீனம் வேண்டாமே....

துடுப்பாட்டம் என்பது நல்ல பெயர் தானே.....

Narathar
25-06-2008, 04:48 PM
சத்யராஜு னு சொன்னதப் பார்த்து அண்ணனின் உயரத்ததான் குறிப்பிடுறீங்க னு நிசைச்சேன்..

அடுத்த வரிலதான் உங்க வில்லத்தனம் புரிஞ்சுது, நாராயணா... :)

ஹா ஹா ஹா....................
நாராயணா!!!! :lachen001:

சத்தியராஜ் என்ரதும் சும்மா வில்லத்தனம் ஒட்டிக்கிச்சு.. ;)

சிவா.ஜி
25-06-2008, 06:24 PM
ஜூப்பராத்தான் இருக்கேள். ஆனால் படங்களில் இவ்வளவு அசண்டையீனம் வேண்டாமே....

துடுப்பாட்டம் என்பது நல்ல பெயர் தானே.....

அசண்டையீனம் என்றால் என்ன அன்பு? தெரிந்தால்...அதனால் பிரச்சனை என்றால் விலக்கிக்கொள்வேன்.

மக்கள் தொலைக்காட்சியில் மட்டைப் பந்து வீரர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

அன்புரசிகன்
26-06-2008, 01:59 AM
அசண்டையீனம் என்றால் என்ன அன்பு? தெரிந்தால்...அதனால் பிரச்சனை என்றால் விலக்கிக்கொள்வேன்.

மக்கள் தொலைக்காட்சியில் மட்டைப் பந்து வீரர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
இங்கு நம்மவர்கள் கள்ளி வல்லி என்கிறார்களே... அப்படி இருக்க வேண்டாம் என்றேன்... (சரியாக சொல்ல தெரியவில்லைங்கோ)

தவிர மட்டை என்றால் BAT என்ற பொருள் அடங்கும் என்றால் சரி. ஆனால் துடுப்பு என்பது BAT என்றாகும் என்று சிறுவயதில் கேட்டஞாபகம்... எது சரி எது தவறு என்பது எனக்கு தெரியாது. ஆனால் மட்டைப்பந்து என்பது ஏதோ ஒருமாதிரியா இருக்கு....

நம்மூரீல் மட்டை என்று பலவற்றை சொல்வர். தடித்த கடதாசியையும் மட்டை என்பர். பனை மற்றும் தென்னைமர இலைத்தண்டுகளையும் மட்டை என்பர். சிறுவயதில் பனைமர மட்டையால் தான் துடுப்பாட்டம் விளையாடுவோம். நேராக ஓங்கி அடித்தால் கை வலிக்கும். அதற்காக பக்கவாட்டாக இல்லை நேராக குத்தி அடிப்போம். அதே போல் பின்னர் BAT ஆல் விளையாடும் போது அந்தவாறு அடித்தால் டேய் மட்டையடி அடிக்காத என்று நம் அங்கு சூழ்ந்திருக்கும் இளவட்டங்கள் பொரிந்து தள்ளும்.

சிவா.ஜி
26-06-2008, 04:12 AM
ஹா ஹா ஹா....................
நாராயணா!!!! :lachen001:

சத்தியராஜ் என்ரதும் சும்மா வில்லத்தனம் ஒட்டிக்கிச்சு.. ;)
ஆஹா....என்னா ஒரு வில்லத்தனம்............?

சிவா.ஜி
26-06-2008, 04:14 AM
உன்ஹ நிழற்படம் நிஜ படமாக என் மனதில் பதிவாகி விட்டது....அன்பு தாமரை சொல்லியது போல உன் படங்களை தயவு செய்து டிலீட் செய்து விடேன்.....????
அனுபவபட்டவன்
மணியா.....!!!!???:rolleyes:

உங்கள் மனதில் பதிவானது ரொம்ப சந்தோஷம் மணியா சார். எல்லோரும் அபிப்பிராயப்படும்போது கேட்காமல் இருப்பது தவறு. எடுத்துவிடுகிறேன்.

ராஜா
26-06-2008, 04:20 AM
சிவாவை பார்த்ததில் மகிழ்ச்சி..!

( இளம் வாலிபர் என்று இவ்வளவு நாட்களாக நினைத்திருந்தேன்..)

கிரிக்கெட் வீரர்கள் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கியது, வியப்பையும், அவர்கள்பால் மதிப்பையும் உண்டாக்குகிறது.

நல்ல பகிர்வு சிவா.

சிவா.ஜி
26-06-2008, 04:26 AM
நன்றி ராஜா சார். என்னுடைய புரொஃபைலில் குறிப்பிட்டிருக்கிறேனே என் வயதை.....இருந்தாலும் வாலிபன்தானுங்கோ....ஹி...ஹி...

ஓவியன்
26-06-2008, 04:39 AM
கொஞ்சம் லேட்டாகத் தான் இங்கே வந்திருக்கிறேன் போல...

பரவாயில்லை, சிவாவைப் பார்க்க முடியாவிட்டாலும் யுவாவையாவது பார்க்க முடிந்ததே...!! :)

உண்மைதான் சிவா, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து அகற்றிய விடயம் நல்லதொரு விடயமாகவே தோன்றுகிறது எனக்கும்....

அடடே டோனியின் அழகின் இரகசியம் இதுதானா, இதுக்காவது அபுதாபி விமான நிலையத்துக்கு ஒருக்கா போகணும் போலிருக்கே...!! :D:D:D

ஓவியன்
26-06-2008, 04:42 AM
அய்யோ தலை சுத்துது....அதனால தலைப்பை மாத்திடறேன்.

ஆமா, தலை சுத்தினால் ஏன் திரியின் தலைப்பை மாத்தணும்..........??? :mini023:

தலையைத் தானே மாத்தணும்...!! :D:D:D


இருந்தாலும் வாலிபன்தானுங்கோ....ஹி...ஹி...

அப்படினா, எழும்பி நின்றால் வயோதிபனோ..........???? :lachen001:

சிவா.ஜி
26-06-2008, 04:45 AM
அடடே டோனியின் அழகின் இரகசியம் இதுதானா, இதுக்காவது அபுதாபி விமான நிலையத்துக்கு ஒருக்கா போகணும் போலிருக்கே...!! :D:D:D

அவர் வாங்கிய பொருட்களெல்லாமே லேடீஸ் சமாச்சாரங்கள்(கவனிச்சுக்கிட்டுதானே இருந்தேன்) அப்ப யாரோட அழகுக்கு இவர் ஆராதகர்ன்னு தெரியலையே....

ஓவியன்
26-06-2008, 04:47 AM
அவர் வாங்கிய பொருட்களெல்லாமே லேடீஸ் சமாச்சாரங்கள்(கவனிச்சுக்கிட்டுதானே இருந்தேன்) அப்ப யாரோட அழகுக்கு இவர் ஆராதகர்ன்னு தெரியலையே....

அட, நீங்க வேற சிவா...
அவர் தன்னோட தங்கைக்கு அவற்றை வாங்கினாராம்......!! :aetsch013:

இதயம்
26-06-2008, 04:48 AM
இது சீரியஸ்:
நான் ஆரம்பத்தில் மனதில் நினைத்து எண்ணியவை மற்றவர்களின் கருத்துக்களாக வெளிப்பட்டிருக்கிறது. சிவா என்னிடம் இந்த புகைப்படங்களை காட்டி, மன்றத்தில் பதிக்க முற்பட்ட போது என் மனதில் "அதை அவர் பதிக்கத்தான் வேண்டுமா..?" என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதை சொன்னால் அவர் மனம் புண்படும் என்பதால் விட்டுவிட்டேன். ஆனால், அனுபவப்பட்டவர்கள் சொல்லியிருப்பதால் அதை பின்பற்றுவதே சரி என உணர்ந்து நீக்கிய சிவாவுக்கு பாராட்டுக்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் நம் சுய அடையாளங்களை இணையத்தில் பொதுவில் இடுவது அத்தனை சிறப்பல்ல. வேண்டாத நபர்களால் அது பல்வேறு வகைகளில் நமக்கு தீங்கு விளைவிக்கும்.

இப்ப கொஞ்சம் காமெடி:
உங்கள் புகைப்படத்தை மன்றத்தில் இட்டதில் உங்களுக்கு பெரும் நஷ்டம் சிவா..! நஷ்டத்தின் பட்டியல் கீழே..!!
1. உங்களுக்கு தலைப்பு வைக்கத்தெரியவில்லை என்ற புகார் செய்த தாமரை (தலைப்புக்கு தீர்வு சொல்வதாக ஆரம்பித்து தலை சுற்ற வச்சிட்டார்.!:eek:)
2. வேறு ஏதோ விவகாரமான கதை உங்களிடம் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கிய செல்வா (எனக்கு தெரியாம நிறைய நடந்துக்கிட்டு இருக்கு, அப்புறம் கவனிச்சுக்கிறேன்.!:sauer028:)
3. விக் வைக்கச்சொல்லி உங்களை கலாய்த்த நாரதர்..! (நாரதர் கலகம் நன்மையில்.! ஆனால் இவர் கலகம் எப்பொழுதும் கலவரத்தில்..!!:p)
4. ஜெயசூர்யா என்று வஞ்சப்புகழ்ச்சி செய்த நேசம் (பேரை பாருங்க, நேசமாம்.. அதுக்கு மட்டும் குறைச்சலில்லை:D)
5. சைக்கிள் கேப்பில் வழுக்கை எதிரொலிப்பதை சுட்டிக்காட்டிய ஆதவன் (அண்ணனாம்..!! ஒரு அண்ணனை பார்த்து தம்பி சொல்ற கமெண்ட்டா இது..?!!:eek:)
6. ஜி ஆர் விஸ்வனாத் மாதிரி என்று சொல்லி குழப்பிய தலை..!! (என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க தலை..!:confused:)
7. குட்டையை குழப்புவது போல் இந்த குழப்பத்தை பயன்படுத்தி அசண்டயீனம் என்ற வார்த்தையை கண்டு பிடித்த அன்பு..! (உங்கள் கண்டுபிடிப்பையும் "கல்லி வல்லி" என்று சொல்லி தள்ளி விடலாமா..?!:icon_rollout:)
8. உங்களை பெரும் வயதானவராக உறுதி செய்து விட்ட ராஜா அண்ணா.! (அவரையே நான் அண்ணான்னு தான் கூப்பிடுவேன்.. ஆனா அவரே பெரும் முதியவர் என்று சொன்ன சிவாவை..?!!:wuerg019:)

அப்பாடி வந்த வேளை முடிஞ்சது.... நாராயணா..!! நாராயணா..!!:D:rolleyes:

சிவா.ஜி
26-06-2008, 05:02 AM
அடப்பாவிங்களா.....என்னைய வெச்சு இந்தளவுக்கு காமெடி பண்ணிட்டாங்களே......எல்லாத்தையும் தாங்கிக்குவேன்...ஆனா இந்த நேசம் சொன்னதைத்தான் என்னால தா...........................ங்க முடியல்ல. அநியாயத்துக்கு ஜெயசூர்யா மாதிரின்னு சொல்லிட்டாரே...:traurig001::traurig001:

அறிஞர்
27-06-2008, 08:19 PM
பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதில் தனி சந்தோசம் தான்....

அக்னி
27-06-2008, 08:30 PM
அப்பாடி வந்த வேளை முடிஞ்சது.... நாராயணா..!! நாராயணா..!!:D:rolleyes:
:lachen001::aetsch013::D:icon_rollout:
ஏதாச்சும் சொல்லி மழுப்புவாங்களே...

Narathar
02-07-2008, 03:00 AM
[விக் வைக்கச்சொல்லி உங்களை கலாய்த்த நாரதர்..! (நாரதர் கலகம் நன்மையில்.! ஆனால் இவர் கலகம் எப்பொழுதும் கலவரத்தில்..!!:p)

அப்பாடி வந்த வேளை முடிஞ்சது.... நாராயணா..!! நாராயணா..!!:D:rolleyes:


அப்போ உங்க பார்ட் டைம் கலவரம்???? :D

ஓவியன்
02-07-2008, 08:10 AM
அப்போ உங்க பார்ட் டைம் கலவரம்???? :D

அப்படினா உங்க ஃபுல் டைம்............????

நாராயணா......!! :D

கண்மணி
07-07-2008, 12:30 PM
நீங்க பாட்டுக்கு மட்டை வீரர்கள் அப்படின்னுட்டீங்க.. இப்பப் பார்த்து ஆசியக் கோப்பை போட்டியில மட்டையாயிட்டாங்கன்னு வச்சுக்குங்க.. பிரச்சனை உங்களுக்குத் தானே!!!




:icon_ush::eek::rolleyes::icon_rollout::D

சிவா.ஜி
07-07-2008, 12:35 PM
ஜோதிட சிகாமணி.....நம்ம கண்மணி....கணிச்சாங்களே....முன்னாலயே....மட்டையாளர்ங்க இப்ப மட்டையாயிட்டாங்களே..பாக்கறமே கண்ணாலயே....

பரஞ்சோதி
17-03-2009, 10:03 AM
வாழ்த்துகள் அண்ணா.

கிரிக்கெட் என்று கண்ணில் பட்டால் ஓடி போய் பார்பேனுல்ல, அதான் இத்திரி என் கண்ணில் பட்டது.

இந்திய வீரர்களுடனான உங்கள் இனிய அனுபவங்கள் அருமை.

புகைப்படம் தான் பார்க்க முடியவில்லை. எல்லோரும் சத்யராஜ் என்றதும் மறைச்சிட்டீங்க போலிருக்குது.

அன்புரசிகன்
17-03-2009, 10:27 AM
புகைப்படம் தான் பார்க்க முடியவில்லை. எல்லோரும் சத்யராஜ் என்றதும் மறைச்சிட்டீங்க போலிருக்குது.
மன்னிக்கவேண்டும். யாரை சொல்றீங்கள்???

பரஞ்சோதி
17-03-2009, 01:21 PM
சிவா அண்ணாவை நாரதர் சத்யராஜ் என்று சொல்லியிருக்கார் பாருங்க, அதனால் தான் புகைப்படத்தை மறைச்சிட்டாரான்னு சும்மா கேட்டேன்.

தலை மணியா ஏன் மறைத்தார் என்று தெளிவாக சொல்லிட்டார்.

அன்புரசிகன்
17-03-2009, 01:25 PM
சிவா அண்ணாவை நாரதர் சத்யராஜ் என்று சொல்லியிருக்கார் பாருங்க, அதனால் தான் புகைப்படத்தை மறைச்சிட்டாரான்னு சும்மா கேட்டேன்.

தலை மணியா ஏன் மறைத்தார் என்று தெளிவாக சொல்லிட்டார்.
அப்போ சத்தியராஜ் இன் தலை அப்படி தான் இருக்குமா......... அடடா.. தெரியாமல் போச்சே... இன்று சிவா அண்ணாவை சந்திப்பேன். மீண்டும் பார்த்துக்கிறேன். :lachen001:

பரஞ்சோதி
17-03-2009, 01:31 PM
அவரை நான் விசாரித்ததாக சொல்லுங்க.

நான் விரைவில் என் கிரிக்கெட் அனுபவங்களை படங்களோடு பதிகிறேன்.

ஓவியன்
17-03-2009, 02:19 PM
நான் விரைவில் என் கிரிக்கெட் அனுபவங்களை படங்களோடு பதிகிறேன்.

பதியுங்க, பதியுங்க, ஆவலுடன் காத்திருக்கிறோம்...

அப்படியே நாங்கள் விரும்புவதால் இந்தத் திரியினையும் தொடருங்க... !! :)



தொடரும்[FONT=SimSun]�.. (நீங்கள் விரும்பினால்)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8909

அறிஞர்
17-03-2009, 02:47 PM
அவரை நான் விசாரித்ததாக சொல்லுங்க.

நான் விரைவில் என் கிரிக்கெட் அனுபவங்களை படங்களோடு பதிகிறேன்.
மன்ற கிரிக்கெட் நாயகனாக கொடுத்து கலக்குங்க..

சூரியன்
18-03-2009, 02:32 PM
எனக்கும் அந்த படங்களை அனுப்பினால் பார்த்துவிட்டு சொல்வேன் அல்லவா?