PDA

View Full Version : வற்றாத வட்டமேஜை மாநாடுஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-06-2008, 08:38 AM
கோடி பெறுமான
அழகிய பங்களாவை
அலங்கோலப்படுத்தும்
முகப்பு திருஸ்டி பொம்மையாய்
சில பல கெட்டவார்த்தைகளுடன்
ஆரம்பமாகும்
தெரு நண்பர்களின்
தெருவோர வட்டமேஜை மாநாடு.

நேத்து கொஞ்சம் தண்ணி ஓவரோ!
சீதாவ கரெக்ட் பண்ணட்டியா!
இப்படி போக்கிரிகளாய் ஆரம்பித்தாலும்
எவ்ளோடா வேணும் சொல்லு!
எங்க டிராப் பண்ணணும்!
எதுவா இருந்தாலும போன் பண்ணு மச்சி!
நான் பாத்துக்கறேன் மாப்ள!
இப்படி அழகிய தமிழ்மகன்களாகவும்
ஆகிவிடுவதுண்டு.

சற்று ஓவராக பீட்டர் விடும்
வடிவேல்களுக்கும்
கருத்துசொல்ல முயலும்
விவேக்குகளுக்கும்
மச்சி அடங்குறியா என்ற
அளவுகோல்
எவரிடமிருந்தும் பாயலாமென்ற
பயம் இருக்கும்

பக்கத்துவீட்டுச்செட்டியாரிடம்
பாத்துவச்சிக்க!
எதிர்வீட்டு பாப்பான்
எல்லாத்தையும் ஏப்பான்!
தந்தைமார்களுக்கு இருக்கும்
இது போன்ற தேசபக்தியை மிஞ்சும்
ஜாதிபக்தியெல்லாம்
கடனில் வாங்கிய
ஒரு தேநீர் குவளையை
நாலைந்துபேர்கள் சேர்ந்து
பரிமாறிக்கொள்ளும்
பிள்ளைகளிடமெல்லாம் எடுபடுவதில்லை

சின்னத்திரை சீரியலில்
சீரியஸாய் அழுது வடியும்
வீட்டு பொம்மனாட்டிகளுக்கும்

இப்படி ஆடியிருந்தால்
அவுட்டாயிருக்கமாட்டானென்று
இலவச வணண்த்தொலைக்காட்சிக்கு
முன்னால் அமர்ந்துகொண்டு
டெண்டுல்கருக்கு கோளாறு சொல்லும்
தந்தை மார்களுக்கும்

நாங்களெல்லாம் அந்த காலத்துல என்று
வீட்டுத்திண்ணைமீதமர்ந்து
பழம்பெருதை பேசும் பெருசுகளுக்கும்

அப்படி அவர்கள் செய்யாத
எதைஒன்றை பெரிதாய்
செய்துவிட்டார்களென்று
நணபர் பட்டாளத்தை கண்டால்
இப்படி கரித்துக்கொட்டுகுறார்களென்றுதான்
புரியவில்லை.


எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

இதயம்
25-06-2008, 08:51 AM
தலைப்பால் பலவீனமான கவிதை, தலைப்பு மாறி புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி அந்த தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நல்ல படைப்பாளியான உங்களின் கடமை.

இளைஞர்களின் பலம், பலவீனங்களை அலசும் அர்த்தமுள்ள ஒரு கவிதையை படைத்திருக்கிறீர்கள். கருத்தாழம் மிகுந்த கவிதையில் தடைக்கற்களாய் சில எழுத்துப்பிழைகள். எழுத்தாளன் எழுத்துப்பிழைகளில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் அவன் பிரசவித்த குழந்தையை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது..!! நீங்கள் எழுத்துப்பிழைகளில் பலவீனம் என்றால் கவலையே வேண்டாம். தவறாது மன்றம் வந்து படைப்புக்களை படைத்தால், படித்தால் கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் பலவீனம் காணாமல் போகும். கவிதைக்கு பாராட்டுக்கள்..!!

எனக்கு தெரிந்து, திருத்திய பிழைகள்:

முகப்பு திருஷ்டி பொம்மையாய்
சில பல கெட்ட வார்த்தைகளுடன்

சீதாவ கரெக்ட் பண்ணிட்டியா!


பக்கத்து வீட்டுச்செட்டியாரிடம்
பாத்து வச்சிக்க!
எல்லாத்தையம் ஏய்ப்பான்!

இது போன்ற தேச பக்தியை மிஞ்சும்
ஜாதி பக்தியெல்லாம்

இலவச வண்ணத்தொலைக்காட்சிக்கு

தந்தைமார்களுக்கும்

வீட்டுத்திண்ணை மீதமர்ந்து
பழம்பெருமை பேசும் பெருசுகளுக்கும்

எதை ஒன்றை பெரிதாய்

இப்படி கரித்துக்கொட்டுகிறார்கள் என்றுதான்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-06-2008, 09:24 AM
பாராட்டுக்கும் குட்டுக்கும் நன்றி இதயம் அவர்களே. இது எனது இரண்டு வருடங்களுக்கு முந்தைய கவிதை. தூசி படர்ந்து செல்லரிக்க இருந்ததை தேடிப்பிடித்து வெளியிட்டு இருக்கிறேன். எழுத்துப்பிழை என்பது தட்டச்சில் நேர்ந்திருக்கிறது. இனி அதில் கொஞ்சம் அதிக கவனமெடுக்கிறேன். நன்றி

kavitha
27-06-2008, 08:56 AM
அப்படி அவர்கள் செய்யாத
எதைஒன்றை பெரிதாய்
செய்துவிட்டார்களென்று
நணபர் பட்டாளத்தை கண்டால்
இப்படி கரித்துக்கொட்டுகுறார்களென்றுதான்
புரியவில்லை.
அவர்கள் செய்த தவறை நீங்களாவது செய்யாமல் இருக்கக்கூடாதா என்று தான் குமைகிறார்கள்.
வயசுக்கோளாறில் அடங்கிவிடும் வண்ணத்தவறுகள்,
கறுப்பு வெள்ளையில் வட்டமாய்ச் சுழலலாம்.
அப்போது பிள்ளைகளுக்குச் சொல்வோம் "திருந்துடா" னு.
டாக்டர். அண்ணாதுரை யின் "ஊனப் பூனைகள்" கவிதையைப் படித்துப்பாருங்கள்.