PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 5



ஆதவா
25-06-2008, 06:40 AM
வெளிச்சமில்லா பிரபஞ்ச அறை
பால்நிலா ஒழுகியதில்
மீன்கள் தோன்றின.
கருவறை காலம் முடிந்தபின்
பிரபஞ்சம் விட்டு மீன்கள் அகன்றது
இருளில் மூழ்கியது
மொத்த உலகம்

அகன்ற மீன்கள்
இருளில் நீந்தின
செய்வதறியா உலகம்
மீன்களை விற்க முடிவெய்தியது.

கடை விரித்தது உலகம்
வாங்குவோர் விலை பேசினர்
கோடியல்ல லட்சமல்ல
மடிந்தது மலிவாக

விற்ற உலகம்
வேதனையை அடைத்துக் கொண்டது
மலிவாக விற்கப்பட்ட காரணமா?
பிரிவின் வலியா?

பிகு: கோடியை அள்ளித்தரும் திருப்பூர் மாநகராட்சியில் ரூபாய் நாற்பதுக்கு ஒரு பிஞ்சுக்குழந்தை விற்கப்பட்டது..

இளசு
25-06-2008, 06:47 AM
மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறுங்கூடு --

இறந்தபின்னர் சந்தைமதிப்பில்லை என நன்கறிவேன்..
பிறந்த புதிதிலும் என சந்தையூரில் அறிந்தேன்..

நாயாகப் பிறந்தாலும் ''நல்ல'' வீட்டில் பிறக்கணும் என்பார்கள்..
இல்லா வீட்டில் பிறந்ததால் இக்கொடுமை!

பூமகள்
25-06-2008, 11:26 AM
இன்று தான் செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது.. அப்பிஞ்சின் முகத்தில் என்ன ஒரு தெய்வீக வெளிச்சம்...??!!

கண்கள் ஒரு நிமிடம் கலங்கி விட்டன..

பிச்சையெடுத்தும் பிழைக்க வைக்கும் தாய்களுக்கு மத்தியில் இப்படியுமா??!!

உயிரில்லாமல் படபடக்கும் பணத்துக்குத்தான் எத்தனை மதிப்பு??
கொடும் வேதனை.. அதுவும் நம் தமிழகத்தில் நடப்பது இன்னும் வேதனை..!

உடனே கவி வடித்த தம்பி ஆதவாவுக்கு பாராட்டுகள்..!!

MURALINITHISH
25-06-2008, 11:40 AM
விற்ற உலகம்
வேதனையை அடைத்துக் கொண்டது
மலிவாக விற்கப்பட்ட காரணமா?
பிரிவின் வலியா?



விற்கப்பட்ட விலையின் காரணமாக வேதனையை அடைத்து கொண்டது
வருங்காலத்தில் இருப்பவர்களுக்கு விஷவிதையை தூவி விட்டு

ஆதவா
27-06-2008, 07:45 AM
மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறுங்கூடு --

இறந்தபின்னர் சந்தைமதிப்பில்லை என நன்கறிவேன்..
பிறந்த புதிதிலும் என சந்தையூரில் அறிந்தேன்..

நாயாகப் பிறந்தாலும் ''நல்ல'' வீட்டில் பிறக்கணும் என்பார்கள்..
இல்லா வீட்டில் பிறந்ததால் இக்கொடுமை!

மிக்க நன்றி அண்ணா.

ஒரு குழந்தையின் மதிப்பு எவ்வளவு கேவலமாக.... அதிலும் பிறந்த உடனே விற்கும் நிர்பந்தம் அந்தத் தாய்க்கு என்ன வந்தது? குருதியைக் கொடுத்தும் காப்பாற்றும் தாய்மார்கள் உள்ள இந்நாட்டில்.... ( தீடீரென்ற வேதனை.. உங்களின் தவறா வருகை... கவிதையின் விளைச்சல்... )


விற்கப்பட்ட விலையின் காரணமாக வேதனையை அடைத்து கொண்டது
வருங்காலத்தில் இருப்பவர்களுக்கு விஷவிதையை தூவி விட்டு

மிக்க நன்றி முரளி.

kavitha
27-06-2008, 07:59 AM
செய்வதறியா உலகம்
மீன்களை விற்க முடிவெய்தியது.
எதையும் விற்றுவிடுகிறது இவ்வுலகம். அதிர்ச்சியில் உறைவிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை

ஆதவா
29-06-2008, 06:01 AM
எதையும் விற்றுவிடுகிறது இவ்வுலகம். அதிர்ச்சியில் உறைவிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை

மிக்க நன்றி கவீக்கா! எனது கவிதைகள் அனைத்திலும் உங்கள் கரம் படும்போது அக்கவியோடு சேர்ந்து பெருமிதம் பொங்குகிறது.... நன்றி