PDA

View Full Version : *அழிவின் அரவணைப்புகள்*



pkarthi28
24-06-2008, 04:45 PM
கண்கள் களவாடும் கனவுகள்,
மனதை மயக்கும் மகிழ்வுகள்,
உள்ளத்தை உரசும் உறவுகள்
அனைத்தும் அழிவின் அரவணைப்புகளே....!:)

அனுராகவன்
25-06-2008, 05:20 AM
அசதல் கவிதை !!
இன்னும் தொடருங்க..!!

இளசு
25-06-2008, 06:34 AM
கண்கள் களவாடும் கனவுகள்,
மனதை மயக்கும் மகிழ்வுகள்,
உள்ளத்தை உரசும் உறவுகள்
அனைத்தும் அழிவின் அரவணைப்புகளே....!:)

தான், தனக்குமட்டும், தனிமை - என்ற நிலையை அழிக்கும் ...
அப்படித்தானே?

பாராட்டுகள் கார்த்தி அவர்களே!

pkarthi28
02-07-2008, 01:12 AM
தான், தனக்குமட்டும், தனிமை - என்ற நிலையை அழிக்கும் ...
அப்படித்தானே?

பாராட்டுகள் கார்த்தி அவர்களே!



ஆம் தோழரே, மேலும், உலகில் "எதுவும் நிரந்தரம் இல்லை" என்பதையும் உணர்த்தும்.
பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே. :)

பாலகன்
02-07-2008, 02:34 AM
கண்கள் களவாடும் கனவுகள்,
.!:)

கனவுகள் உறக்கத்திலேயே வருவதால் கண்களை களவாட வாய்ப்பே இல்லை,,,

இருந்தாலும் அது இப்படி கண்களை களவாடும் கனவுகள் ன்னு இருந்தால் நல்லாயிருக்கும்

வாழ்த்துக்கள்- தொடர்ந்து பங்களியுங்கள்

அன்புடன்
பில்லா

pkarthi28
08-07-2008, 02:26 AM
உண்மைக்கு அப்பால் கனவு காணும்போது கண்களுக்கு வேலை இல்லை,
அதைத்தான் - கண்களை திருடி கனவு வருவதாக குறிப்பிட்டிருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டது சரிதான். "கண்களை களவாடும் கனவுகள்" என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே..!:)