PDA

View Full Version : ஆசிய கோப்பை : கிரிக்கெட் விருந்து



ராஜா
24-06-2008, 10:09 AM
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று லாகூரில் தொடங்குகிறது.

இதில், `ஏ' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இப்போட்டியின் லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர், புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

கடந்த முறை 2004-ல் ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணி, இம்முறையும் கைப்பற்றுவதற்கு முனைப்புடன் விளையாடும்.

ஆசிய கோப்பை போட்டியில் முதன்முறையாக, இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் மகேந்திர சிங் தோனி, இளம் வீரர்கள் படையுடன் கோப்பையைத் தட்டி வரும் நோக்கில் உள்ளார்.

அதேபோல், சொந்த மண்ணில் கோப்பையை வென்றே தீருவோம் என்று சூளுரைத்துள்ளார், பாகிஸ்தான் கேப்டன் ஷோயிப் மாலிக்.

இம்மூன்று அணிகளுக்குதான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ள நிலையில், இடையிடையே வங்கதேசமும் அதிர்ச்சியளிக்கும் என்று கிரிக்கெட் ஆருடர்கள் நம்புகின்றனர்.

இன்றைய தொடக்க ஆட்டங்கள், லாகூரில் வங்கதேசம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கராச்சியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இவற்றில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹாங்காக் ஆகியவை வளரும் கிரிக்கெட் அணிகள் என்பதால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளின் ஆதிக்கமே மேலோங்கும் என தெரிகிறது. இவ்விரு பகலிரவு ஆட்டங்களும் மதியம் 3.30 மணியளவில் தொடங்குகின்றன.
(மூலம் - வெப்துனியா)

ராஜா
24-06-2008, 10:12 AM
ஈ.எஸ்.பி.என் அலைவரிசையும், ஸ்டார் கிரிக்கெட் அலைவரிசையும் போட்டிகளை ஒளிபரப்புகின்றன.

ராஜா
24-06-2008, 10:16 AM
ஆசியக் கோப்பை அட்டவணை..

Jun 24 [Tue], 2008 Group A
Bangladesh Vs United Arab Emirates Gaddafi Stadium, Lahore

Jun 24 [Tue], 2008 Group B
Pakistan Vs Hong Kong National Stadium, Karachi

Jun 25 [Wed], 2008 Group A
Bangladesh Vs Sri Lanka Gaddafi Stadium, Lahore

Jun 25 [Wed], 2008 Group B
Hong Kong Vs India National Stadium, Karachi

Jun 26 [Thu], 2008 Group B
Pakistan Vs India National Stadium, Karachi

Jun 26 [Thu], 2008 Group A
Sri Lanka Vs United Arab Emirates Gaddafi Stadium, Lahore

Jun 28 [Sat], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jun 29 [Sun], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jun 30 [Mon], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 2 [Wed], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 3 [Thu], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 4 [Fri], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 6 [Sun], 2008 Final
not known Vs not known National Stadium, Karachi
________________________________________________________________________

aren
24-06-2008, 10:24 AM
ஆனால் இந்த மாதிரியான போட்டிகள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க மட்டுமே ஒழிய வேறு எதற்கும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் கூடிய விரைவில் நம் இந்திய மக்கள் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

ராஜா
24-06-2008, 11:27 AM
உண்மைதான் மாட்டிரிக்ஸ்..

தற்போதைய கிரிக்கெட் ஓவர் டோஸ் ஆகக் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது தன் கவர்ச்சியை இழக்கும்.

அகத்தியன்
24-06-2008, 04:46 PM
உண்மைதான் மாட்டிரிக்ஸ்..
.:smilie_abcfra::smilie_abcfra:

அறிஞர்
24-06-2008, 08:06 PM
அந்த காலத்துல ஒரு நாள் போட்டியை லீவு போட்டு பார்ப்பாங்க..

இப்ப 20-20 வந்ததால்.. ஒரு நாள் போட்டிக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.

20-20 போட்டிக்கு பணம் கட்டி வீட்டில் பார்த்தோம். ஒரு நாள் போட்டிக்கு பணம் கட்டவா என கேட்டால்... மனைவியும், என் அப்பாவும்.. "அதை யாரு உட்கார்ந்து பார்ப்பது... வேறு வேலையில்லையா எங்களுக்கு.. " என கூறிவிட்டனர்.

இதில் ஹாங்காங்கும், ஐக்கிய அரபு எமிரெடும்.. பலிக்கடாக்கள்...

அனுராகவன்
25-06-2008, 04:49 AM
நேற்று பாக்கிஷ்தான்,பங்களாதேஷ் வெற்றி!!!!!!!!!!!

ராஜா
25-06-2008, 04:58 AM
எதிர்பார்த்த முடிவுதான்..!

ராஜா
25-06-2008, 05:02 AM
உண்மைதான் மாட்டிரிக்ஸ்..

:smilie_abcfra::smilie_abcfra:

அதுவா..?

என்னை ஒவ்வொரு திரியிலும் நல்லா கோர்த்து விட்டுடுவார்..

நல்லா மாட்டிவிட பல ட்ரிக்ஸ் செய்வதால் அன்பின் ஆரென்னுக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் அது..!

அறிஞர்
25-06-2008, 06:27 PM
இன்றைக்கு ஹாங்காக் நிலை பரிதாபம்....

இந்தியா 374/4 ரன்கள் (தோனி 109, ரைனா 101)

ஹாங்காக் 118

ராஜா
26-06-2008, 06:35 AM
இந்தியா 256 ஓட்டங்கள் வேறுபாட்டில் வெற்றி..!

(ஆசியக் கோப்பை போட்டிகளில் அதிக ஓட்ட வேறுபாட்டில் வெற்றி பெற்ற அணி என்னும் சாதனை, ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக ஓட்ட வேறுபாட்டுச் சாதனை.)

அறிஞர்
26-06-2008, 11:03 AM
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மெதுவாக விளையாடுகிறது

விக்கெட்டை பாதுகாக்கிறார்கள்...

38/0 12 ஓவர்கள்.

அறிஞர்
26-06-2008, 11:06 AM
http://www.justin.tv/cricket_1 இங்கு ஒளிபரப்புகிறார்கள். இலவசமாக காணலாம்.

அறிஞர்
02-07-2008, 02:08 PM
இன்று இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியடையுமா என்பது கேள்விக்குறி...

முதலில் பேட் செய்த இந்தியா
86/0 (10 ஓவர்)
150/4 23.6 ஓவர்
200/4 33.2 ஓவர்
250/5 43.2 ஓவர்
308/7 50.0 ஓவர்

தோனி, ரோஹிந்தர் சர்மா, இர்பான் பதான் ஆட்டம் சிறப்பு.

சுழல் பந்து வீச்சு நன்றாக எடுக்கிறது.

ப்ரியூஸ் சாவ்லா, சேவாக், யுவராஜ், யூசுப் பதான்.. சிறப்பாக பந்து வீசினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு.

பணத்திற்காக, விளம்பரத்திற்காக.. கடைசி ஓவர் வரை ஆட்டம் செல்லும்.. பாகிஸ்தான் வெற்றி காண வாய்ப்புள்ளது.

arun
02-07-2008, 05:54 PM
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது 45.3 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி உள்ளனர்

Salman Butt 36

Nasir Jamshed 53

Younis Khan (not out )123

Mohammad Yousuf 20

Misbah-ul-Haq (not out )70

அனைவரும் எதிர்பார்த்தபடி பாகிஸ்தான் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது :aetsch013::aetsch013::aetsch013::D

பாலகன்
02-07-2008, 06:08 PM
உடனெ தகவல் தந்த அருன் க்கு மிக்க நன்றி

பில்லா

அறிஞர்
02-07-2008, 06:28 PM
இன்று விளையாடி களைத்த.. இந்தியா...
இலங்கையை எப்படி நாளை எதிர்கொள்கிறது எனப் பார்ப்போம்..

"பொத்தனூர்"பிரபு
03-07-2008, 01:35 AM
ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்க்கு சாதகமாக உள்ளது.95.3 ஓவரில் 620 ரன்கள்
இதுபோன்ற ஆடுகளத்தில் மட்டுமே சேவக் அதிக ரன் அடித்துள்ளார்.இலங்கை செல்ல உள்ளது அதில் பர்க்கலாம்

shibly591
03-07-2008, 03:17 AM
இன்று இலங்கை வெற்றி பெறும் சாத்தியம் அதிகம்.இந்தியா களைப்படைந்துள்ளது...ஆயினும் இதில் வென்றேயாக வேண்டும் என்கிற கட்டாயம் இந்தியாவுக்கு இருப்பதால் பார்க்கலாம் சபாஷ் சரியான போட்டி.........

அறிஞர்
03-07-2008, 02:00 PM
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 308/8 ரன்கள் எடுத்துள்ளது...

இந்தியாவுக்கு சரியான போட்டி...

சேவாக், கம்பீர், ரைனா நிலைத்தாடினால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும்....

போட்டிகளை espn360.com மூலம் பார்க்கலாம்.

minmini
03-07-2008, 03:13 PM
எது எப்படியோ இல்ங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி விட்டது. இலங்கை அணியுடன் மோதுவது யார்? என்பது தான் கேள்வி இன்றைய போட்டியில் இந்திய அணீ வெற்றீ பெறும் போலத்தான் தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.


முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 308/8 ரன்கள் எடுத்துள்ளது....

எடுத்துள்ளதா? கொடுத்துள்ளதா?

சூரியன்
03-07-2008, 04:34 PM
தற்போதைய நிலவரம்:
India 186 / 2 in 30.3 overs (RR: 6.07)

arun
03-07-2008, 05:54 PM
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

G Gambhir 68

V Sehwag 42

SK Raina 54

MS Dhoni 67

Yuvraj Singh not out 36

RG Sharma not out 22



எதிர்பார்த்தபடியோ எதிர்பார்க்காதபடியோ தெரியவில்லை இந்தியா வெற்றி பெற்று விட்டது

ஓவியன்
03-07-2008, 05:59 PM
பொதுவாக எல்லாத் துடுப்பாட்டக் காரர்களும் நன்றாக விளையாடியிருந்தார்கள்....

வெற்றி பெற்ற அணியினருக்கு என் வாழ்த்துக்களும்......

ஓவியன்
06-07-2008, 10:28 AM
இன்று இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய தோனி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்...

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இதுவரை சங்ககாரவின் விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களை ஆறு பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் பெற்றுள்ளது....

மன்மதன்
06-07-2008, 11:19 AM
15 ஓவர் 100/4

ஜெயசூர்யா இதுவரை 4 சிக்ஸர்..
பட்டய கிளப்பிக்கொண்டிருக்கிறார்..

மன்மதன்
06-07-2008, 11:22 AM
16வது ஓவர் -

பந்துவீச்சு : ஆர்.பி,சிங்

ஜெயசூர்யா 26 ரன்கள் எடுத்தார்

6 6 4 4 0 6

ஓவியன்
06-07-2008, 11:32 AM
ஜெயசூர்யா 26 ரன்கள் எடுத்தார்

6 6 4 4 0 6

பாவம் ஆர்.பி சிங்...!!

டில்சானுடனான 50 இணை ஓட்டங்களில் டில்சான் அடித்தது வெறும் 4 ஓட்டங்களே..

ராஜா
06-07-2008, 12:23 PM
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி.

இலங்கை.

ஓவர்கள் : 34

ஓட்டங்கள் : 192

விக்கெட்டுகள் : 04

ஜெயசூரிய : 123*

தில்ஷான் 42*

ராஜா
06-07-2008, 01:06 PM
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி.

இலங்கை.

ஓவர்கள் : 44

ஓட்டங்கள் : 234

விக்கெட்டுகள் : 06

ராஜா
06-07-2008, 01:38 PM
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி.

இலங்கை.

ஓவர்கள் : 49.5

ஓட்டங்கள் : 273

விக்கெட்டுகள் : 10
__________________

ஓவியன்
06-07-2008, 03:54 PM
அஜந்த மெண்டிஸ் இந்தியாவின் வெற்றிக் கோப்பைக் கனவை அசைத்துக் கொண்டிருக்கிறார்....

அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சில் இந்தியா இதுவரை நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்துள்ளது.....

5 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களுடன் களத்தில் டோனியும் உத்தப்பாவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

ராஜா
06-07-2008, 05:14 PM
எதிர்பாராவிதமாக இந்தியா தோல்வி..!

ஆசிய கோப்பையை இலங்கை தக்க வைத்துக் கொண்டது.

arun
06-07-2008, 05:26 PM
100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி வீழ்த்தி உள்ளது

விளம்பர காரணங்களுக்காக கூட போட்டி 50 ஓவர்கள் வரை ஆட படவில்லை


G Gambhir 6

V Sehwag 60

SK Raina 16

Yuvraj Singh 0

MS Dhoni 49

RG Sharma 3

RV Uthappa 20

IK Pathan 2

RP Singh 0

PP Ojha( not out) 6

I Sharma 8

அன்புரசிகன்
06-07-2008, 05:38 PM
நூறு ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கையணியின் வின்ஸ்லோ மென்டிஸ் ஆறுவிக்கட்டுக்களை கைப்பற்றியதோடு இன்றய ஆட்டநாயகனாகவும் இந்த தொடரில் 17 விக்கட்டுக்களை கைப்பற்றி தொடரின் சிறந்த நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


http://gulf.cricinfo.com/db/PICTURES/CMS/84400/84439.jpg

Narathar
06-07-2008, 05:56 PM
ஆசிய கோப்பையை தனதாக்கிக்கொண்ட இலங்கைக்கு......
மன்றம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...............

புதிய நட்சத்திரமான மெண்டிஸுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்

ஓவியன்
06-07-2008, 06:03 PM
பாகிஸ்தான் அணியின் விருந்தோம்பும் திறனை, பர்வோஷ் முஷாரப் பாராட்டியுள்ளார்........!! :D:D:D

விருந்தாளிகளான இரு அணிகளை இறுதிப் போட்டியில் விளையாட அனுமதித்து, மகிழ்ந்துள்ளதாக.....!! :D:D:D

arun
06-07-2008, 06:09 PM
பாகிஸ்தான் அணியின் விருந்தோம்பும் திறனை, பர்வோஷ் முஷாரப் பாராட்டியுள்ளார்........!! :D:D:D

விருந்தாளிகளான இரு அணிகளை இறுதிப் போட்டியில் விளையாட அனுமதித்து, மகிழ்ந்துள்ளதாக.....!! :D:D:D

அவருக்கு ரொம்ப தான் குசும்பு :D:mini023::mini023:

shibly591
07-07-2008, 09:21 AM
ஆசிய கோப்பையை தக்க வைத்த எங்கள் மதிப்பக்குரிய இலங்கை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்..
ஜெயசூரியா இல்லாத இலங்கையைப்பற்றி இலங்கை கிரிக்கெட் சபை யோசித்துப்பார்க்க வேண்டும்..இன்னும் அலரை நம்பியிருப்பது ஆரோக்கியமற்றது..மெண்டிஸ் இலங்கையின் இராணுவப்படையைச்சேர்ந்தவர.அவருக்கும் எனத வாழ்த்துக்கள்...

அகத்தியன்
07-07-2008, 09:35 AM
வாழ்த்துக்கள் இலங்கைக்கு.
40 வயது இளைஞர் இல்லாத இலங்கை அணி (அட ஜய சூர்யா வை சொன்னேன் அப்புகளா :) :) :)..) கடையாணி இல்லா தேர் போல

minmini
07-07-2008, 09:53 AM
புதிய ப்ந்து வீச்சாளரின் அபாரவீச்சினால்,
இல்ங்கை பெற்ற வெற்றீக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:icon_b:

xavier_raja
07-07-2008, 10:00 AM
தோனி சொல்கிறார்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு மெண்டிஸின் பந்தை எதிர்கொள்ளதெரியவில்லை. மிகப்பிரமாதமாக அவர் பந்து வீசினார். (மானங்கெட்டதனமா இல்ல இருக்கு)

ராஜா
07-07-2008, 10:14 AM
தோனி சொல்கிறார்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு மெண்டிஸின் பந்தை எதிர்கொள்ளதெரியவில்லை. மிகப்பிரமாதமாக அவர் பந்து வீசினார். (மானங்கெட்டதனமா இல்ல இருக்கு)

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

அக்னி
07-07-2008, 10:24 AM
போட்டியில் வென்ற இலங்கை அணியினருக்கு வாழ்த்துகள்...


Originally Posted by xavier_raja http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=363545#post363545)
தோனி சொல்கிறார்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு மெண்டிஸின் பந்தை எதிர்கொள்ளதெரியவில்லை. மிகப்பிரமாதமாக அவர் பந்து வீசினார். (மானங்கெட்டதனமா இல்ல இருக்கு)

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
எதுக்கு இத்தனைக் கட்டைவிரல்கள்...
தோனி உண்மையைச் சொன்னதற்கா அல்லது அடைப்புக்குள் இருப்பதற்கா... :lachen001:
;)

செல்வா
07-07-2008, 10:30 AM
தோனி சொல்கிறார்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு மெண்டிஸின் பந்தை எதிர்கொள்ளதெரியவில்லை. மிகப்பிரமாதமாக அவர் பந்து வீசினார். (மானங்கெட்டதனமா இல்ல இருக்கு)
இதில் மானங்கெட என்ன இருக்கிறது ஐயா? உண்மையைச் சொல்லியிருக்கிறார். பந்துவீச்சாளரின் திறமையையும் அதைஎதிர்கொள்ளுமளவிற்கு இவர்கள் தயார் செய்யவில்லை , தெரியவில்லை. அதை ஒத்துக்கொள்வதில் மானங்கெட எதுவுமில்லை. இன்னும் அடுத்த அடுத்தப் போட்டிகளில் திறனை வளர்த்துக் கொள்ளாமல் போய் அவரிடமே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் தான் மானம் கெடும்.

மன்மதன்
07-07-2008, 01:27 PM
கடைசியாக பங்குபெற்ற 22 இறுதியாட்டங்களில் "திறமை மிக்க" இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை..!
வெற்றி : 2 , கோப்பை பகிர்வு : 2 , தோல்வி : 18 ( மட்டும்..! ).

இந்தியா ஃபைனல் வந்தாலே மழை வர்ர மாதிரி ஏதாச்சும் பண்ண முடியாதா??:D:D

ராஜா
07-07-2008, 02:37 PM
இந்தியா ஃபைனல் வந்தாலே மழை வர்ர மாதிரி ஏதாச்சும் பண்ண முடியாதா??:D:D

கோப்பை பகிர்வுன்னு ஒரு காலம் இருக்குல்ல..

அது மழைக்காலத்தால் கிடைச்சதுதான்..!

மன்மதன்
07-07-2008, 03:00 PM
கோப்பை பகிர்வுன்னு ஒரு காலம் இருக்குல்ல..

அது மழைக்காலத்தால் கிடைச்சதுதான்..!

அதானே பார்த்தேன்....

அகத்தியன்
07-07-2008, 03:03 PM
இது இந்திய அணிக்கு மட்டுமா?

இல்லை எல்லா அணிகளும் அடக்கமா ராஜா சார்?

ஓவியன்
07-07-2008, 03:24 PM
இது இந்திய அணிக்கு மட்டுமா?

இல்லை எல்லா அணிகளும் அடக்கமா ராஜா சார்?

இந்திய அணிக்கு மட்டும்தான் அகத்தியன், நேற்றைய போட்டியில் வர்ணனையாளர்கள் அடிக்கடி நினைவூட்டிய விடயமும் இதுதான்...

இதற்கு டோனி கூறிய பதில், இறுதிப் போட்டிக்குள் நுளைவதும் ஒரு வகையில் திறமைதானே....

அறிஞர்
07-07-2008, 03:27 PM
வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு..

ஜெயசூர்யா, மெண்டீஸ் ஆட்டம் வெகு சிறப்பு.

பொறுப்பற்ற இந்திய மட்டையாளர்களை என்ன சொல்வது....