PDA

View Full Version : புல்லாங்குழல்



pkarthi28
24-06-2008, 09:04 AM
*புல்லாங்குழல்*
மூச்சுக்காற்றை சுவாசிக்கும்
மூங்கில் தருகிறதே கானமழை...!:)

ஆதவா
24-06-2008, 09:14 AM
உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தரலாமே பி.கார்த்தி//

உங்கள் கவிதை பிரமாதம். தொடர்ந்து எழுதுங்கள் புதுமையாக...

பூமகள்
24-06-2008, 09:45 AM
மூச்சுக் காற்றினை
குழல் நாசியில்
நுழைந்ததால்
கட்டியதோ..
ராகமாளிகை..!

பாராட்டுகள் இனிய புதுவரவுச் சகோதரர் பி.கார்த்திக்.

pkarthi28
24-06-2008, 04:14 PM
இரண்டு விருது பெற்ற உங்களிடம் இருந்து இந்த பாராட்டை பெறுவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.... மிக்க நன்றி பூமகள்...! ...!:)

பூமகள்
24-06-2008, 05:51 PM
இங்கே விருதுகள் பெற்றிருப்பதால் பெரிதெனக் எண்ணி பயப்பட அவசியமில்லை சகோதரரே..!!

மன்றத்தில் அனைவரும் சமமே..!!

பிரித்துப் பார்க்க கூடாது என்பது தான் இங்கு அமரன் அண்ணா உட்பட பலரின் கோணம்.. நானும் அப்படியே..!

உங்களைப் பற்றிய அறிமுகம் கொடுத்துவிட்டீர்களா? இல்லையெனில் அறிமுகப் பகுதியில் கொடுத்துவிடுங்கள் சகோதரரே..!

ஓவியன்
29-06-2008, 11:56 AM
நாம் சுவாசித்தால்
கெட்டுப் போகும் காற்று
மூங்கிலின் சுவாசத்தால்
முக்தி பெற்று விடுகிறது..!!

பாராட்டுக்கள் கார்த்தி, இன்னும் நிறையக் கவிதைகளைப் படையுங்கள்..!! :)