PDA

View Full Version : மண்வாசம்



shibly591
24-06-2008, 08:50 AM
துப்பாக்கி முனைகளில்
அடகு வைக்கப்பட்ட
எங்கள் வாழ்க்கையை
நினைந்து
ஒரு போதும் வருந்தவில்லை

தந்தை கொல்லப்படும்போதோ
நண்பன் கடத்தப்படும்போதோ
இவ்வளவு வருத்தம்
எனக்குள் எழுந்ததில்லை

என் வீட்டில்
பதிந்திருந்த
சநN;தகக் கண்காணிப்போ
பசியின்
கோரப்பிடிக்குள்
சிக்கித் தவித்த
நரக நிமிடங்களோ
என்னை இத்தனை தூரம்
அழவைத்ததில்லை

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது

கலைவேந்தன்
24-06-2008, 09:01 AM
தம் தாயகத்தில் அனாதரவாய் நம்மை நாமே உணரும் நரகவேதனையை சொற்களால் படைக்கமுடியாது என்றாலும் இந்த வரிகளில் அந்த வலிகள் அழகாய் ஒளிர்கின்றன!

பாராட்டுக்கள் ஷிப்லி!