PDA

View Full Version : வாழையடி வாழை



shibly591
24-06-2008, 08:01 AM
ஒரு வழியாக
அந்த
அரக்கனைக் கொன்றுவிட்டோம்

காண்போரையெல்லாம்
கொடுமைப்படுத்தி
ஊரெங்கும் அட்டூழியம் செய்த
அவனை
எப்படியோ கொன்று விட்டோம்

செத்துக்கிடக்கும்
அவன் மீது
எல்லோரும்
தத்தமது
தனிப்பட்ட குரோதங்களை கல்லெறி மூலம்
தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

வெளிப்படும்
அவன் இரத்தத்துளிகளைப் பார்த்து
பலரும்
வெற்றிக் களிப்பில்
சிரிக்கின்றனர்

அவனுடன் ஒட்டித்திரிந்த
குட்டி அரக்கர்களும்
தங்களுக்கும் இப்படி
நேரலாமென்று
குறித்த அரக்கன் பற்றி
குறை சொல்லி அலைகின்றனர்

எல்லாம் கொஞ்ச
நேரம்தான்
இவனை எரித்து
சாம்பலாக்குமுன்னே
வந்துவிட்டான்…
அடுத்த அரக்கன்!

ஆதவா
24-06-2008, 08:20 AM
அருமை ஷிப்லி...

ஒவ்வொரு வீழ்தலுக்குப் பின்னரும் அடுத்த எழுச்சி

முன்பு
சோழருக்குப் பின் பாண்டியர்,
மொகலாயருக்குப் பின் ஆங்கிலேயர்

இன்று எய்ட்ஸ்
நாளை?

கவிதையின் உள்ளார்ந்த மறைபொருள் (நன்றி இளசு) கவிஞரின் பார்வையில் அறிய விரும்புகிறேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 08:42 AM
கவிதை அருமை சிப்லி. ஆனால் எந்த கருத்தை உட்வாங்கி அதை வரைந்திருக்கிறீர்கள் என்று புலன்படவில்லை. சற்று மேற்கோடிட்டி காட்டினால் இன்னும் அதன் சுவை சற்று கூடுமென்று நினைக்கிறேன்.

shibly591
24-06-2008, 08:45 AM
நன்றி ஆதவா.........

அரசியல் காலங்களில் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது இப்போதிருப்பவர் வேண்டாம் புதியவர் ஒருவரே நமக்கெல்லாம் பொருத்தமானவர் என நாம் தேர்ந்தெடுப்பவர் இப்போதிருப்பவரை விட மோசமானவராக இருப்பார் இல்லையா?...........

அரசியலாளர்கள் குறித்ததே இக்கவிதை

கலைவேந்தன்
24-06-2008, 08:51 AM
இதில் எதையும் உள்வாங்க அவசியமில்லையே!

உள்ளார்ந்த மறைபொருளும் இதில் பலவிதமாய் பொதிந்துந்துள்ளதே!

உலகம் பிறந்து மனிதம் முளைத்த நாள்முதல் ஏதேனும் ஒரு இடையூறு மனிதத்தை அசைக்கமுயன்றே வந்துள்ளது!

அவையனைத்தையும் மனிதமும் வெற்றிகரமாய் வென்றே வந்துள்ளது!
இடையறாது மனிதத்தை ஆட்டுவிக்கும் அரக்கர்களை நாம் எம் மனவலிமையால் வென்றே வந்துள்ளோம்!

அருமையாய் பிறிது மொழிதல் அணியுடன் கூடிய புதுக்கவிதை சிப்லி நண்பரே!

எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

shibly591
24-06-2008, 08:56 AM
நன்றி கலைவேந்தன்....

உங்களு; விமர்சனம் அருமை..

ஆதவா
24-06-2008, 09:09 AM
நன்றி ஆதவா.........

அரசியல் காலங்களில் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது இப்போதிருப்பவர் வேண்டாம் புதியவர் ஒருவரே நமக்கெல்லாம் பொருத்தமானவர் என நாம் தேர்ந்தெடுப்பவர் இப்போதிருப்பவரை விட மோசமானவராக இருப்பார் இல்லையா?...........

அரசியலாளர்கள் குறித்ததே இக்கவிதை

எனக்கு அந்த ஸ்பார்க் இருந்தது.. ஆனால் இன்றைய அரசியலாளர்கள் பற்றி யோசிக்கவில்லை... பழைய அரசுகள் பற்றியே யோசித்தேன்...

க.வேந்தன்... இதன் அணிகுறித்த உங்கள் பதிவும் அருமை...