PDA

View Full Version : ரத்தக் காட்டேரியும் பூவும்..!! - நிறைவு



பூமகள்
24-06-2008, 07:25 AM
ரத்த காட்டேரியும் பூவும்..!!


தலைப்பு கொஞ்சம் பயங்கரமா இருக்குதோ?? :eek::eek:பயப்படாதீங்க.. அப்படியொன்னும் நடந்திடலை.... கொஞ்சம் படபடப்பு இல்லாம மேல படிங்க..!

சென்ற ஞாயிறு விடுமுறை ஆதலால்.. நானும் எனது அப்பாவும் உறவினர் வந்தமையால் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டோம்..

என் தேர்வு.. எங்கள் ஊரில் இருக்கும் மிருகக் காட்சி சாலை.. ஆமாம்.. ஒரே ஊரில் இருந்தாலும் பார்த்து ரொம்ப வருடமாச்சேன்னு கொஞ்சம் மனம் வருத்தமடைந்ததால் சரி போய் பார்ப்போமென மழையின் வரவேற்போடே நனைத்த படி பயணப்பட்டோம்..

உள்ளே சென்று.. விதவிதமான நாரைகள்.. ஒத்த காலில் தவமிருக்கும் கொக்குகள்... எதுக்கு தான் தவமிருக்கோன்னு கிண்டலடிச்சிட்டே அடுத்து இருந்த மஞ்ச மூக்கு வாத்துகள்.. அப்புறம்.. வண்ணமயமான பறவைகள்.. ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ்.. பார்க்க பார்க்க வரவே மனமில்லை..

அப்புறம்.. நம்ம மிருக காட்சியகத்தில் அதிகமாக இருந்தது... பாம்புகளே.. ஒரு மலைப்பாம்பு அசைஞ்சி.. உள்ளே பயணித்தது பாருங்க.. நேர்கோட்டில்.. யப்பா... எப்பவும் மலைப்பாம்பு பார்த்தா என் பால்ய பருவ நிகழ்வொன்று நினைவு வரும்.. அதை பின்பு சொல்கிறேன்..

அப்புறம் நம்ம மன்ற வாலுகளின் சொந்தக்காரங்களை.. அதாங்க.. நம்ம மூதாதையர்.. குரங்கு குடும்பங்களை பார்த்தோம்..

அப்புறம் நகர்ந்தால்..கூண்டுகள் எல்லாம் காலியாக...

அங்கே... புலி.. சிங்கம்.. கரடி.. இவற்றை எல்லாம் பார்க்கவே முடியலீங்க.... ஏன்னா... அவை கூண்டிலேயே இல்லை.. ஒருவேளை இறந்துவிட்டதோ?? கட்.. இந்த இடத்தில் பூவுக்கு ஒரே வருத்தம்..

கூண்டினுள் குகை போல இருந்தது.. ஆனா அங்கே கும்மிருட்டு.. இருக்கா இல்லையா?? இருக்கு...ஆனா இல்லன்னு எஸ்.ஜே.சூர்யா ரேஜ்ஜுக்கு மனசு குழம்பிச்சி.... ஏன்னா.. அவ்விடத்திலிருந்து வந்த அந்த நெடி... ஒருவேளை உள்ளே தூங்குதோ??

சரி இத்தனை களேபரமும் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சது... அப்புறம் பார்த்தா மணி 6.30.. இன்னும் டைம் இருக்கே என்ன செய்யலாம்??

என்னடா இன்னும் ரத்தக் காட்டேரி காணோமேன்னு பார்க்கறீங்களா?? இருங்க இருங்க.. இன்னும் இருட்டத் துவங்கலை இல்ல.. சொல்றேன் சொல்றேன்..!!


(காட்டேரி ஆன் தி வே...!!:D:D)


பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=359521&postcount=4)
நிறைவு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=360039&postcount=20)

தாமரை
24-06-2008, 07:43 AM
காட்ல இருந்த ஏரிதானே காட்டேரி... ? அங்க கோழி அறுத்ததால் சிந்திய இரத்தம் பார்த்து பூ பயந்திடுச்சி சரியா?

இரத்தக் காட்டேரி பத்தி ஒரு சுவையான சம்பவம் உண்டு..
திகில் தொடர் எழுதி ரொம்ப நாளாச்சி.. சீக்கிரமா எழுதிடறேன்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 07:47 AM
ஆங்கிலப்படத்துல பேய்படம்னு சொல்லிட்டு ஒரு ரெண்டு மூணு சீன் மட்டும் பேய காட்டுவாங்க. அந்த மாதிரி நீங்களும் ஒரு ரெண்டு மூணு வரியிலயாச்சும் காட்டேறிய வுட்டுருக்கலாம். பாப்போம் அடுத்து என்ன சொல்ல வர்றீங்கன்னு.

பூமகள்
24-06-2008, 07:56 AM
ரத்தக் காட்டேரியும் பூவும் - பாகம் 2


எல்லாவற்றையும் பார்த்துவிட்டு.. மிருக காட்சி சாலையை விட்டு வெளியே ஒரு வழியாக வர முற்பட.. வாத்துக் கூட்டம்.. அழகாக முன்னே வந்து... பாவமாய் பார்த்து நின்றன... என்னடா.. அதுக்குள்ளே பூவு மேல பாசமா அப்படின்னு ஒரு செண்டிமெண்ட் சீன் மனசுக்குள் வந்து போனது... கொஞ்சம் கண் கலங்கினாலும் காட்டிக்கொள்ளாமல்.. அங்கு அருகே இருந்த குட்டீஸ் கையில் வைத்திருந்த பொரியை வீசிப் போட.. அவை.. கூண்டின் உள்ளே.. அவற்றை கொத்தி(?) சாப்பிட ஆரம்பித்திருந்தன.. சரி.. இது தான் தருணமென்று... வாத்துகளிடமிருந்து பிரியா விடைபெற்று வெளியே வந்தேன்..

மணி மாலை 6.35. அப்பா, என்னை நோக்கி, எங்கே போலாம்.. என்று இரண்டு ஆப்சன் கொடுத்தார்... உடன் எனது தம்பியும் வந்திருந்தான்.. அவனின் விருப்பமென நான் தப்பிக்க.. அவனோ மௌனமே பதிலாக்கி நீங்களே சொல்லுங்க அக்கா அப்படின்னு என்னை மாட்டி விட்டுட்டான்..

அப்பா கொடுத்த ஆப்சன்ஸ்..

1. சர்க்கஸ்
2. கேரளத்திலிருந்து வந்து போட்டிருக்கும் மேடை நாடகம்.

இரண்டுக்கும் அப்பா சொன்ன காரணம் மிகப் பிடித்திருந்தது.. அதாவது, சர்க்கஸ் என்ற கலையும் மேடை நாடகம் என்ற கலையும் அழிந்து வரும் ஒன்று.. அவற்றைக் கட்டிக் காப்பாற்ற எத்தனையோ கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையை பல இடர்களுக்கு இடையில் நடத்துறாங்க.. அவங்களை வாழ வைப்பது நமது பொறுப்பு.. அதுக்கு இப்படித்தான் நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்..

இப்படி அப்பா ஒரு லக்சர் கொடுத்ததும்.. ஒரு கணம் அப்பாவை பெருமிதத்தோடு பார்த்து, ஐயோ.. அப்பா.. அசத்திட்டீங்க.. எப்படி இப்படின்னு கேட்டுட்டு.. இந்த முறையும் நானே முடிவெடுத்தேன்..

சர்க்கஸ் ஆண்டுக்கொருமுறையேனும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.. அல்லது இருமுறைகள் கூட சாத்தியப்படுகிறது.. சின்ன வயது முதலே பார்த்தும் இருக்கிறேன்..

ஆகவே.. ஒரு முடிவுக்கு வந்தேன்..

நான் இதுவரை நேரிலேயே கண்டிராத மேடை நாடகமே பார்ப்போமே.. அந்த கலையை வாழ வைக்கிறோமோ இல்லையோ... என் வாழ்க்கையில் அதைப் பார்த்தேனென திருப்தி கொள்வோமென நினைத்து அங்கேயே போகலாம்பா என்று அழைத்துச் சென்றேன்..

அங்கு போய் சேரவே 6.45 ஆகிவிட்டிருந்தது.. அங்கே பார்த்தா... தலைப்பு "ரத்தக் காட்டேரி..!!" கொஞ்சம் அப்படியே நின்றுவிட்டேன்...

வெளியில் கேட்கும் டிடிஎஸ் சவுண்டு எபக்டுகள் ஏற்கனவே ஆரம்பித்ததை காட்டின.. (வயிற்றுக்குள்ளும் பயத்தால் டிடிஎஸ் எபக்டுகள் கேட்க ஆரம்பித்திருந்தன..:eek::eek:) டிக்கெட் வாங்குபவர்.. இப்போ தாங்க ஆரம்பிச்சாங்க.. அப்படின்னு நம்மை நம்ப வைத்தார்.. சரி.. 10 நிமிடம் தான் ஆகியிருக்குமென நம்பிபீஈஈஈ... டிக்கெட்கள் வாங்கி உள்ளே நுழைந்தால் கும்மிருட்டு..

கொஞ்சம் மௌபைலால் வெளிச்சமடித்து.. அங்கு போட்டிருகும் நாற்காலிகள் தேடி ஓரத்தில்.. ஸ்பீக்கருக்கு முன்னால்.. (ஹூ...:traurig001::traurig001:) அழுதேன்.. இல்ல இல்ல அமர்ந்தேன்..

முன்னரே போகாததால்.. நடுவில் அமர்ந்து மேடையினை முழுமையாக பார்க்க முடியாமல்.. போனது வருத்தமாக இருந்தது..

அப்போது... மேடையில்....................

(நெருங்கிட்டோம்.. காட்டேரியிடம்.. வெயிட் ப்ளீஸ்:rolleyes::icon_rollout:)

சிவா.ஜி
24-06-2008, 09:02 AM
அட இன்னுமாம்மா அந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். 1982 லேயே இந்த நாடகத்தை பார்த்திருக்கிறேன். “ரக்த ராக்ஷசி” என்பது அப்போது பெயர். ஜெயில் கலையரங்கத்தில் பார்த்தது. மேடையில் கலக்கியிருப்பார்கள். யானையெல்லாம் மேடையில் வரும். சிதை எரிவதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.

இப்போது மீண்டும் தங்கையின் பார்வையில் அது எப்படி இருக்கிறது என்பதை உன்னுடைய எழுத்துக்களிலேயே படிக்க ஆவலாக இருக்கிறது.

பூமகள்
24-06-2008, 09:41 AM
சிவா அண்ணா... அதே அதே அதே நாடகம் தான்.. அப்பா பயங்கரமா அந்த நாடகம் பற்றி புகழ்ந்தார்.. அவரது நட்பு வட்டத்தில் அப்படியெல்லாம் கேள்விப்பட்டாராம்..

அடடே... அண்ணா... நீங்க பார்த்தாச்சா.... சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே... உங்க ஆர்வக் கோளாறுக்கு அளவே இல்லாம போச்சு.. இருங்க அப்புறமா பேசிக்கிறேன்... நற நற நற....!!

கண்மணி
24-06-2008, 09:48 AM
. ஜெயில் கலையரங்கத்தில் பார்த்தது. மேடையில் கலக்கியிருப்பார்கள். யானையெல்லாம் மேடையில் வரும். சிதை எரிவதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.

இப்போது மீண்டும் தங்கையின் பார்வையில் அது எப்படி இருக்கிறது என்பதை உன்னுடைய எழுத்துக்களிலேயே படிக்க ஆவலாக இருக்கிறது.

ஜெயில் கலையரங்கமா? அண்ணே! சொல்லவே இல்லை!!:lachen001::lachen001::lachen001:

பூமகள்
24-06-2008, 09:48 AM
காட்ல இருந்த ஏரிதானே காட்டேரி... ? அங்க கோழி அறுத்ததால் சிந்திய இரத்தம் பார்த்து பூ பயந்திடுச்சி சரியா?
ஆஹா... நல்லாவே கற்பனை செய்யறீங்க..:rolleyes::icon_rollout: ஆனா அங்க தானே நான் டிவிஸ்ட் வைச்சிருக்கேன்..!! :icon_p::icon_p: (பூவு அதையெல்லாம் பார்த்து பயப்படாதாக்கும்.. தைரியமான பொண்ணு தெரிஞ்சிக்கோங்க..!!) :rolleyes:

ஹீ ஹீ..:D:D அண்ணா... மாட்டிக்கிட்டீங்களா??!! :aetsch013::aetsch013:

திகில் தொடர் எழுதி ரொம்ப நாளாச்சி.. சீக்கிரமா எழுதிடறேன்
இப்படி சொல்லி பயங்காட்டினால் எப்படின்னா?? :icon_ush::icon_ush: :eek::eek:

பூமகள்
24-06-2008, 09:51 AM
ஜெயில் கலையரங்கமா? அண்ணே! சொல்லவே இல்லை!!:lachen001::lachen001::lachen001:
கண்மணி அக்கா... அது கைத்தறி மைதானம் இருக்கும் கலையரங்கத்தை சொல்றார்.. (ஏங்க சிவா அண்ணா இப்படி மாட்டிக்கிறீங்க.. பாருங்க.. எப்படி உங்களை மாட்டி விடறாங்கன்னு.. பேசாம இப்படி சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கலாமில்ல..!!:icon_rollout::wuerg019:)

சிவா.ஜி
24-06-2008, 11:37 AM
அடடா...நீ சொன்ன மாதிரி ஆர்வக்கோளாறுல அந்த கலையரங்கத்தோட பேரை அப்படிச் சொல்லிட்டேன். இந்த கண்ணு இப்படியெல்லாம் கேக்குமுன்னு தெரியலையேம்மா....

(ஸாரிம்மா சஸ்பென்ஸ் வெக்கப் போறேன்னு தெரியாம சொல்லிட்டேன்)

பூமகள்
24-06-2008, 12:41 PM
சாரி பூரியெல்லாம் பூவுக்கு வேணாம் சிவா அண்ணா.. உங்க கிட்ட மொத்தமா ட்ரீட் வாங்கி இதை சரி செஞ்சுக்கிறேன்..!! :D:D

சிவா.ஜி
24-06-2008, 01:00 PM
சாரி பூரியெல்லாம் பூவுக்கு வேணாம் சிவா அண்ணா.. உங்க கிட்ட மொத்தமா ட்ரீட் வாங்கி இதை சரி செஞ்சுக்கிறேன்..!! :D:D

அப்ப ட்ரீட்ல இதெல்லாம் வேணாமா...?

பூமகள்
24-06-2008, 01:10 PM
ம்ஹூம்.. பூரி வேணாம் சிவா அண்ணா...!!
அது பூவுக்கு பிடிக்காதே...!! :D:D
(டிபன் ஐட்டத்தோடு நிப்பாட்டிக்கலாம்னு பார்க்கறீங்க..!! விடமாட்டோம்ல..!! ;))

பூமகள்
24-06-2008, 02:07 PM
ஆங்கிலப்படத்துல பேய்படம்னு சொல்லிட்டு ஒரு ரெண்டு மூணு சீன் மட்டும் பேய காட்டுவாங்க. அந்த மாதிரி நீங்களும் ஒரு ரெண்டு மூணு வரியிலயாச்சும் காட்டேறிய வுட்டுருக்கலாம். பாப்போம் அடுத்து என்ன சொல்ல வர்றீங்கன்னு.
ஹா ஹா.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையில் வர்றீங்க அண்ணா...!!:lachen001::lachen001:
ஆனா அடுத்த பதிவிலேயே தெரிஞ்சிருக்குமே...!! :rolleyes:
சரி மேற்கொண்டு சொல்லுறேன் படிங்க..!! :icon_rollout::icon_rollout:
விபூதி ஏதும் அல்லது தாயத்து ஏதும் கட்டிட்டு வந்து படிங்க..!! :eek: :p:cool:

கண்மணி
25-06-2008, 01:28 AM
கண்மணி அக்கா... அது கைத்தறி மைதானம் இருக்கும் கலையரங்கத்தை சொல்றார்.. (ஏங்க சிவா அண்ணா இப்படி மாட்டிக்கிறீங்க.. பாருங்க.. எப்படி உங்களை மாட்டி விடறாங்கன்னு.. பேசாம இப்படி சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கலாமில்ல..!!:icon_rollout::wuerg019:)

வெய்ட்! வெய்ட்! வெய்ட்!

கைத்தறி மைதானத்தில கலையரங்கமா? இல்லை கலை அரங்கத்தில கைத்தறி மைதானமா?

மாட்டி விடறது மற்றும் எஸ்கேப் ஆகிறதா? அப்போ கன்ஃபார்மா ஜெயில்தான்..

இப்ப முடிச்சு போட்டுப் பார்த்தா!!!

ஜெயில்ல ஆளுக்கொரு கைவேலை தருவாங்களாமே!!! அப்ப கைத்தறி அப்படி வருதா? அதனாலதான் ஜெயில் அரங்கத்தில் கைத்தறி மைதானமா?

ஹைய்யோ ஹைய்யோ.. பூவு தப்பிச்சு விடறேன்னு சொல்லி இப்படி மாட்டி விட்ருச்சே சிவாஜியண்ணா!!!

SivaS
25-06-2008, 02:35 AM
அட விடுங்கப்பா சிவாஜியண்ணா ஏதோ தெரியாம உண்மய சொல்லிட்டார் அதுக்குப்போய் இப்படியா ஆளாளுக்கு வறுத்தெடுப்பீங்க!!!

சிவா.ஜி
25-06-2008, 04:22 AM
இப்ப முடிச்சு போட்டுப் பார்த்தா!!!

ஜெயில்ல ஆளுக்கொரு கைவேலை தருவாங்களாமே!!! அப்ப கைத்தறி அப்படி வருதா? அதனாலதான் ஜெயில் அரங்கத்தில் கைத்தறி மைதானமா?


ஹய்யோ....ஹைய்யோ......அநியாத்துக்கு இந்த பொண்ணு அறிவாளியா இருக்கே..! தேவுடா.....!!!!
(அதெப்படி கண்மணி இவ்ளோ அழகா முடிச்சு போடறீங்க?)

mukilan
25-06-2008, 05:07 AM
பில்டப்பு கொஞ்சம் ஓவராயிருக்கே! ரத்தக்காட்டேரியா :) என் ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியர் வெற்றிலை சுண்ணாம்பு மெல்லும் பழக்கமுடையவர். அவர் வாயெல்லாம் சிவந்து இருப்பதால் எங்கள் பள்ளியில் வழி வழியாக அவரை "ரத்தக் காட்டேரி" என்றுதான் அழைப்பார்கள். அப்படி ஏதாவது சமாச்சாரமா இருக்கும்னு வந்து பார்த்தா அருமையான அனுபவக் கட்டுரைக்கான முன்னுரையாய் இருக்கிறது. படிக்க காத்திருக்கிறேன் பாமகளே!

பூமகள்
25-06-2008, 11:21 AM
கைத்தறி மைதானத்தில கலையரங்கமா? இல்லை கலை அரங்கத்தில கைத்தறி மைதானமா?
ஹையோ...:eek::eek: இரண்டு எழுத்தை விட்டுட்டேன் அதுக்கு இத்தனை அக்கப்போரா?? :confused: :icon_rollout:
ஆனாலும் உங்களுக்கு அறிவு ரொம்ப அதிகமாயிடிச்சி கண்மணி அக்கா..!! :rolleyes::icon_ush:

கைத்தறி மைதானத்தில் அவ்வப்போது பல கலையரங்க நிகழ்வுகள் நடக்கும்.. அவ்வகையில் அம்மைதானத்தில் போடப்பட்ட கலையரங்கத்தில் தான் இந்த "ரத்தக் காட்டேரி" வந்தது..


பில்டப்பு கொஞ்சம் ஓவராயிருக்கே! வந்து பார்த்தா அருமையான அனுபவக் கட்டுரைக்கான முன்னுரையாய் இருக்கிறது. படிக்க காத்திருக்கிறேன் பாமகளே!
நன்றிகள் முகில்ஸ் அண்ணா..!!
விரைவில் ரத்தக் காட்டேரியை காட்டிடறேன்..!! :)

பூமகள்
25-06-2008, 05:30 PM
ரத்தக் காட்டேரியும் பூவும் - நிறைவு


ரத்தக் காட்டேரி கதைச் சுருக்கம்..

ஒரு வழியாக மேடையை பார்க்க அமர்ந்தால்.. அங்கே கும்மிருட்டு... சத்தம் மட்டும்.. ஊ....... ஆ.... சடசடசடவென்று பறவை பறக்கும் சத்தம்... (பயங்கரமான சவுண்ட் எபக்ட்..) இப்படி பல குரல்கள் ஒன்று சேர்ந்து.. திக் திக்னு நம் மனதை ஆக்க முயற்சித்திருந்தது..

அங்கே.. மேடையில் ஒரு பாழடைந்த மாளிகை போன்ற செட்.. அதில் இருவர் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.. "செண்பகத் தரை" என்ற மாளிகையென பெயரும் சொல்கின்றனர்.. அதில் வெகு காலமாக ரத்தக் காட்டேரி உலவுவதாக பீதி பரவ.. அதை பொய்யென்று உரைக்க.. இரு ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள்.. இரவாகிவிட.. அங்கே தங்கும் அவர்கள் கதை என்னாகுமென பார்த்து வியர்த்திருந்தோம் நாங்களும்...

அந்த பயந்தாங்கோளி.. ஆசாமி நம்ம ஹீரோவை(அப்படித்தானிருந்தார்:D:D) பயத்தில் படுத்தும் பாடு நன்கு சிரிக்கும் படி இருந்தது.. அவர் பயத்தில் பென்சிலில் குறிப்புகள் எழுதுகையில்.. கூர் உடைய.. அதை கூராக்க ப்ளேடால் சீவ.. கை விரலில் பட்டு ரத்தம் வடிகிறது.. அதைப் பார்த்துக் கொண்டு.. பயந்து அளறும் காட்சி இயல்பாக இருந்தது..

அவரை ஒரு அறையில் உறங்க செய்து விட்டு.. ஹீரோ தைரியமாக முன் அறையிலிருக்க.. ஒரு அழகான சுந்தரி மல்லிகை சூடி.. வீட்டில் வருகிறார்.. அப்போது கனமழை பெய்கிறது.. மேடையில் ஜன்னல்கள் வழியே மின்னல்.. இடியோடு அதனை தத்ரூபமாக காட்டியமைக்கு ஒரு சபாஷ் போட்டோம்.. கை தட்டினேன்..:icon_rollout::icon_rollout:

சுந்தரி.. ஹீரோவை மயக்கி.. அருகில் அழைத்து.. கழுத்து கடித்து காட்டேரியாகும் காட்சி.. கண் முன் ஏதும் வித்தை நடக்கிறதோ என அஞ்ச வைத்து குழம்ப வைக்கிறது.. கண் மூடி முழிப்பதற்குள் காட்டேரி நம் கண் முன்... அப்போது வரும் சத்தமிருக்கிறதே.. அப்பப்பா... நிஜமாக எந்த ஒரு பேய் படத்துக்கும் இந்த நாடகம் குறைவாக சொல்லவே முடியாது.. மேடையில் அத்தனை மின்விளக்கு எபக்டுகள்.. அற்புதமாக இருந்தது..

அடுத்த காட்சியில்.. ஹீரோ அதாங்க ஆராய்ச்சி பண்ண வந்தவர் இறந்து போய்விடுகிறார்.. அடுத்த நாள், அந்த இடத்துக்கு வரும் போலீசாரிடம் அந்த இல்லத்துக்கு தெரிந்தவரும் வெகு காலமாக அவ்வில்லத்தில் இருந்தவருமான ஒரு முதியவர் அந்த செண்பகத் தரை பற்றிய உண்மைக் கதையைச் சொல்கிறார்.. அந்த பயந்தாங்கோளி நண்பரிடமிருந்து விழுந்த இரு சொட்டு ரத்தத்தால் அவ்வீட்டில் அடங்கியிருந்த ரத்தக் காட்டேரி உயிர்த்தெழுந்ததாகச் சொல்கிறார்..

சரி இப்படி நான் கதை சொன்னா... உங்களுக்கு போரடிக்கும்.. சுருக்கமாக சொல்கிறேன்..

கண்ணு முன்னாடி வட்டவட்டமா சுத்துதுங்களா? :p:cool: அப்போ ப்ளாஸ் பேக் போறோம்னு அர்த்தம்.. கூடவே வாங்க...!:rolleyes::wuerg019::icon_rollout:

காடன் மற்றும் சுந்தரலிங்கம்(மன்னிக்கவும் பெயர் நினைவிலில்லை:icon_ush::confused:) இருவரும் ராணுவத்தில் வேலை செய்து வெளியே வந்தவர்கள்.. இருவரும் நெருங்கிய நண்பர்கள்..

இவர்களிருவரிடமும் ஒரு ஒப்பந்தம்.. இருவரில் யார் முதலில் மரணமடைய நேர்ந்தாலும் மற்றவர்.. இறந்தவரது குடும்பத்தினைத் பாதுகாக்க வேண்டுமென்பதே..

அப்படி பேசி ஒப்பந்தம் செய்து விட்டு பிரிந்தனர்.. சுந்தரலிங்கம் நகரத்துக்கு வந்து ஒரு போலீஸ் கமிஷ்னர் ஆகிறார்.. சுந்தரலிங்கத்துக்கு இரு குழந்தைகள்.. ஒரு பெண். திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிள்ளை வைத்திருக்கிறார்.. ஒரு ஆண் மகன்.. சந்திரன்(இவரும் நம்ம ஹீரோ போலவே இருந்தாருங்க..!:icon_ush::D) பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

காடன்... காட்டுக்குச் சென்று.. சித்த வைத்தியம் செய்கிறார்.. பல மூலிகை மருந்துகள் கண்டுபிடித்து அங்கிருக்கும் காட்டுவாசிகளுக்கு உதவியாக இருக்கிறார்.. அவருக்கு ஒரு மகள்.. பெயர் லட்சுமி.. ஆனால்.. அவளுக்கு ஒரு குறை.. அழகின்றி முகம் கொஞ்சம் சரியில்லாதது போல் காட்சியளிக்கும்.. ஆனால்.. காடன் தன் மகள் மேல் அளவில்லா அன்பு வைத்திருந்தார்.. அவரது பல மருத்துவ சூத்திரங்களை மகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்..

ஒருமுறை மருத்துவம் பார்க்க வருபவர்கள் மூலம் சுந்தரலிங்கத்தின் இருப்பிடம் பற்றி அறியப்பெறுகிறார்.

வயதாகி காடன் இறக்க.. அவர் இறுதியாக ஒரு வாக்கினை மகளிடம் வாங்குகிறார்.. அதாவது.. அவரது சிதையிலேயே அவரின் எல்லா மருத்துவக் குறிப்புகளையும் இட்டு எரித்து விட வேண்டும்.. அப்புறம்.. லட்சுமி.. சுந்தரலிங்கத்திடம் சென்று அவரோடே அவரது இல்லத்தில் அவரது பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்றும் சொல்லிவிடுகிறார்..

இங்கே சிதை மூட்டப்படும் காட்சி மிக எதார்த்தம்... கை தட்டல் பறக்கிறது இங்கே... மேடை தானா?!!!!!!:icon_rollout::icon_b: என்று ஒரு கணம் நமக்கு மறந்தே விடுகிறது.. :eek::eek:

சிதையில் குறிப்புகள் இடுகையில்.. ஒரு தாள் விடுபட.. அதை எதேட்சையாக லட்சுமி பார்க்க.. அதில் அதிரூப அழகியாவதற்கான குறிப்புகள் இருக்கிறது.. அப்பாவிடம் எத்தனையோ முறை பலர் கேலி செய்து புண்படுத்திய பொழுதெல்லாம் அழகியாக்க மருத்து தயாரிக்கக் கேட்டும் செய்யாத அவர்.. இப்படி ஒரு குறிப்பை என்னிடமிருந்து மறைத்து விட்டாரே என பெரும் கோபம் கொண்டு.. தந்தைக்கு தன் மேல் பாசமில்லை என்று வெறுத்து விலகுகிறாள்.. அந்த குறிப்புகள் படி அழகும் ஆகிறாள்..
காட்டை விட்டு சுந்தரலிங்கத்திடம் அப்பா கொடுத்த கடித்ததோடு புறப்படுகிறாள் லட்சுமி.. அழகான பின்னணி இசையில் சிறிய விடைபெறும் பாடல்.. காட்டுவாசிகளிடமிருந்து விடைபெறுகிறாள்..

சுந்தரலிங்கத்தின் வீட்டில் தனது மகனுக்கு பெரிய மந்திரவாதியின் மகள் ராதா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர்..

அப்போது.. அங்கே லட்சுமி வருகிறார்.. சுந்தரலிங்கமும் அவளைத் தன் அன்பு மிகுந்த காடனின் நினைவால் வருந்தி அவர்கள் ஒப்பந்தப்படியே அங்கேயே தங்க வைக்கிறார்.. அப்போது லட்சுமிக்கும் சுந்தரலிங்கத்தின் மகனுக்கும் காதல் ஏற்படுகிறது.. இதில் ஒரு காதல் டூயட் பாடல்.. அவர்களே எழுதியது.. ரம்யமான இசை.. வரிகள் அற்புதம்.. திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது.. கனவுப்பாடல்..

அடுத்து எதையும் தடுக்க முயலாமல், ராதாவையே சுந்தரலிங்கத்தின் மகன் மணமுடிக்கிறார்... லட்சுமி அப்போது கர்ப்பமாகி.. கோபத்தில் அவ்வீட்டை விட்டே வெளியேறுகிறாள்.. வெகு காலம் காட்டிலேயே இருக்க... திடீரென.. சுந்தரலிங்கத்தின் மகனுக்கு பாம்பு கடித்துவிட.. அதை அறிந்து லட்சுமி காப்பாற்ற அவ்வீட்டை அடைகிறாள்..

சுந்தரலிங்கத்தின் வீட்டில் ராதாவால் வெறுக்கப்பட்டாலும் அந்த சமயத்தில் தன் தந்தை சொல்லிக் கொடுத்த வைத்திய முறையால் காப்பாற்ற அனுமதி வாங்கி.. பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை உறிஞ்சி வெளியேற்ற முற்படுகிறாள்..

அப்போது திடீரென லட்சுமி.. ரத்தக் காட்டேரியாகிறாள்.. இதற்கு காரணம், அதிரூப சுந்தரியாக.. ஒருத்தி மருந்துட்கொண்டு மாறினால்.. பின்னர் எப்போதேனும் மனித ரத்தத்தை சுவைக்கும் நிலை வந்தால்.. அவள் காட்டேரியாவாள் என்பது தான்.. அதை காடன் அறிந்திருந்ததால் தான்.. தன் மகளுக்கு அந்த மருத்துவத்தை பயன்படுத்தாமலே இருந்தார்.. அதையறியாமல் லட்சுமி பயன்படுத்த இப்படியாகிவிட்டதென சொல்லப்படுகிறது..

ரத்தக் காட்டேரியான லட்சுமி.. அவ்வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒவ்வொருவராக கொன்று விடுகிறது.. அப்போது மேடையில் வரும் அத்தனை ஒலி-ஒளி புறத்தோற்றங்கள் அனைத்தும் புகழ் வார்த்தைகளை விஞ்சிவிடுகிறது...

எப்படி அந்த ரத்தக் காட்டேரி அடங்குகிறது?? என்பது தான் மீதிக் கதை...:icon_rollout::icon_rollout:(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. கதை சொல்லிட்டேன்..! :icon_ush::rolleyes:)


ரத்தக் காட்டேரி - பூவின் விமர்சனம்

அரைவினாடியில் அற்புத அற்புதமான செட்டுகள்..
இதில்.. ஜன்னலின் வழியே காட்டும் மழை வரும் காட்சியும்.. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆடுவது... காடன் வீட்டினைச் சித்தரிக்கும் மேடையமைப்பு... பேய் காட்டேரியாக மாறும் காட்சிகள்.. நிஜமான காவல் நிலையம் போலவே காட்சிதரும் அமைப்பு... பூந்தோட்டம் போலவே காட்டும் வீட்டின் பின்புற அமைப்பு.. குளம் போலவே காட்டும் அமைப்பு.. அசல் திருமண மணவறை போலவே காட்டும் அமைப்பு.. கனவுக் காட்சியில் வரும்.. தங்க கதவுகள் ஜொலிக்கும் அமைப்பு.. காட்டில் ஆடும் காட்டுவாசிகளின் நடனம்.. வாயின் வழியே தீயை தொட்டு விளையாடும் நிஜமான தீர விளையாட்டு.. அந்த நபருக்கு ஒரு சபாஷ்..:icon_b:

கோயிலில் நிஜமாகவே ஒரு யானையை மேடைக்கு அழைத்து வந்த பாங்கு.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..:rolleyes::icon_rollout:

இத்தனை மாயாஜாலமும் அரை நொடியில் காட்டிவிடும் பாங்கு.. அசர வைக்கிறது... அதற்கேற்றாற் போன்ற கலைஞர்களின் நடிப்பும்.. மிகக் கச்சிதமான வசன உச்சரிப்புகள் பின்புலத்தில் சரியான அளவு பின்னணி இசையோடு வரும் பாங்கும் மனதை அசையாமல் கட்டிப் போட வைக்கிறது.. ஆங்காங்கே வரும் சின்ன சின்ன பாடல்கள் மனத்தினை கட்டிப் போட்டுவிடுகின்றன..

குறிப்பாக.. காடனின் நண்பராக வரும் சுந்தரலிங்கம் அவர்களின் நடிப்பும் அந்த போலீஸ் உடைக்கேயான மிடுக்கும் நம் நடிகர் திலகத்தினை நினைவுறுத்தியது..

பல இடங்களில் நைசாக நக்கல் தெறிக்கிறது.. ஒற்றை குருக்களை வைத்து காட்டும் காட்சிகள் நகைச்சுவையானாலும்.. கொஞ்சம் நகைச்சுவை ஜொள்ளு ரீதியில் போவதால் மனதில் ஒட்ட மறுத்துவிடுகிறது...:icon_p:

கதையில் நமக்கு உடன்பாடில்லையெனினும்..(பேய்.. காட்டேரி.. மாந்திரீகம் என்ற ரீதியில் போவதால்..) இந்த காட்சியமைப்புகளுக்காகவும்... மேடையின் விதவிதமான அமைப்புகளுக்காகவும்.. சிறந்த கலைஞர்களின் நடிப்புக்காகவும் கட்டாயம் பார்க்கலாம்...

கதையில் பல காட்சிகள்.. கொஞ்சம் தேவையற்றதாகவே தோன்றியது.. கொஞ்சம் அவற்றின் நீளத்தை சென்சார் செய்திருக்கலாம்.. :icon_p:

மொத்தத்தில்.. ஒரு அழிவை நோக்கிப் பயணப்பட்டு வரும் மேடை நாடகக் கலைக்கு மறுவாழ்வு கொடுக்கும் ரீதியில் இத்தகைய மகத்தான சேவை செய்யும் 200 கலைஞர்களுக்கும்.. அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி.. ஒன்றாக எங்கள் ஊருக்கு கூட்டி வந்து அழகான அரங்கம் முதல் அழகிய அரை வட்ட வெண் கூடாரம் வரை எல்லாம் அமைத்து ஒரு மாத காலம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த "கலா நிலையம்" அவர்களுக்கும் நன்றிகள் சொல்லியே ஆக வேண்டும்..!

குறிப்பு:
சமீபத்தில் தினமணியில் வந்த விமர்சனத்தை படிக்கையில்.. குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிருங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.. என் வேண்டுகோளும் அதுவே.. நம் நெஞ்சே கொஞ்சம் அத்தகைய சத்தங்களால் அதிரும்.. குழந்தைகளை தயை கூர்ந்து அழைத்துச் செல்லாதீர்கள்.


(முற்றும்)

பாரதி
25-06-2008, 05:59 PM
நம்மிடையே இருந்து வந்த பல கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி, திரைப்படங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. மிகக்குறைவான நேரத்தில் கொஞ்சமும் நேரப்பிசகின்றி, அத்தனை வசனங்களையும் மனதில் இருத்தி, வாத்தியக்கலைஞர்கள், ஒப்பனைக்கலைஞர்கள்.. இன்னும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒருமித்து வேலை செய்யும் அற்புதக்கலை! தவறிழைத்தால் திருத்த வழியில்லாத கடினமான கலை!

கதையின் பிரமாண்டத்தை விட, அனைவரையும் மீண்டும் நாடகமேடைக்கு அழைத்திருப்பதற்கே பூமகளை மனமார பாராட்டுகிறேன்.

ரத்தக்காட்டேரியைக் காட்டுகிறேன்.. காட்டுகிறேன் என்று இழுத்த பரபரப்பு... நன்றாகத்தான் இருக்கிறது. கண்ட காட்சிகளை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சிக்கும் பாராட்டு.

பதிவின் நீளத்தை சற்றே குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி தொடர்ந்து வித்தியாசமான பதிவுகளைத் தருவதற்கு தனிப்பாராட்டு.

தொடருங்கள் பூ.

mukilan
25-06-2008, 06:22 PM
அப்பாடா ஒருவழியாய் ரத்தக்காட்டேரி தரிசனம் கிடைத்து விட்டது. நல்ல விமர்சகராக மட்டுமில்லாமல் படிப்போரின் மனக்கண் முன் காட்சிகளைக் கொணர முயலும் முயற்சி அருமை. அதில் வெற்றியும் பெற்றிருப்பது பாரதி அண்ணாவின் பாராட்டிலேயே தெரிகிறது.

மேடை நாடகக்கலையை தற்பொழுது படித்த இளைஞர்கள் நடத்தி வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அலைபாயுதேவில் அமெரிக்க மாப்பிள்ளையாகவும், கண்டநாள் முதல் திரைப்படத்தில் இரு கதநாயகர்களில் ஒருவராகவும் வந்த கார்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இது போன்ற நாடககங்களை நடத்தி வருகிறாராம்.

ஆமா குழந்தைங்களை அந்த நாடகத்துக்கு கூட்டிட்டுப் போகக்கூடாதுன்னு சொன்னதறகப்புறமுமா உங்கள் அப்பா உன்னை அழைத்துச் சென்றார் :)

பூமகள்
25-06-2008, 06:29 PM
என் மனதில் இருப்பதினை சரியாக நாடிபிடித்து சொல்லிவிட்டீர்கள் பாரதி அண்ணா..!

நாடகக் கலை என்றால் என்னவென்றே நேரில் அறிந்திராத நான்.. அத்தகைய கலையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது...

ஆகவே தான் இப்பதிவு...

"யான் பெற்ற இன்பம்.. பெறுக இம்மன்றமும்..!!"

இனிமேல் பதிவின் நீளத்தினை குறைக்க முயல்கிறேன் பாரதி அண்ணா..!

நன்றிகள் கோடி.

பூமகள்
25-06-2008, 06:36 PM
மேடை நாடகக்கலையை தற்பொழுது படித்த இளைஞர்கள் நடத்தி வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அலைபாயுதேவில் அமெரிக்க மாப்பிள்ளையாகவும், கண்டநாள் முதல் திரைப்படத்தில் இரு கதநாயகர்களில் ஒருவராகவும் வந்த கார்த்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இது போன்ற நாடககங்களை நடத்தி வருகிறாராம்.
மிக நல்ல செய்தி..!! :icon_b::icon_b:
யாரடி நீ மோகினியில் கூட நடிச்சிருக்காரே..!! அப்புறம்.. "வானம் வசப்படுமே" படத்தில் நாயகர் அவரே தான்.. கார்த்திக்..
மகிழ்ச்சியான செய்தி..!! நான் இவரது தமிழ் பேச்சையும் நடிப்பையும் ரசித்திருக்கிறேன்..!! :)

அவரது நாடக ட்ரூப்பின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் முகில்ஸ் அண்ணா..!! வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாமல்லவா..!!:rolleyes::cool:

ஆமா குழந்தைங்களை அந்த நாடகத்துக்கு கூட்டிட்டுப் போகக்கூடாதுன்னு சொன்னதறகப்புறமுமா உங்கள் அப்பா உன்னை அழைத்துச் சென்றார் :)அப்படி போகக்கூடாதுன்னே நாங்க பார்த்த அடுத்த நாள் தானே சொன்னாங்க...!! :rolleyes::cool::p :lachen001::lachen001:

mukilan
25-06-2008, 06:48 PM
EVAM- இவம் அல்லது ஈவம் அல்லது எவம்.
இதுதான் அந்த நாடகக் குழுவின் பெயர்.

www.evam.in

பூமகள்
25-06-2008, 06:55 PM
EVAM- இவம் அல்லது ஈவம் அல்லது எவம்.
இதுதான் அந்த நாடகக் குழுவின் பெயர்.

www.evam.in (http://www.evam.in)
"கேட்டதும் கொடுப்பவரே... முகில்ஸ் அண்ணா..
கேரட்டின் நாயகரே.. முகில்ஸ் அண்ணா..!!"

இப்படி பாடனும்னு தோணுதுங்க அண்ணா..!! :rolleyes: :D:D

கேட்டதும் தந்தமைக்கு நன்றிகள் பலப்பல..!! :)

mukilan
25-06-2008, 07:06 PM
விரல் நுனியில் உலகம்... கூகிளான்டவர்தான் அவர். கேட்டது எல்லாம் கொடுப்பார். இல்லை என்றே ஒரு பொழுதும் சொல்ல மாட்டார்.

கண்மணி
26-06-2008, 02:10 AM
[CENTER]குறிப்பு:
சமீபத்தில் தினமணியில் வந்த விமர்சனத்தை படிக்கையில்.. குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிருங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.. என் வேண்டுகோளும் அதுவே.. நம் நெஞ்சே கொஞ்சம் அத்தகைய சத்தங்களால் அதிரும்.. குழந்தைகளை தயை கூர்ந்து அழைத்துச் செல்லாதீர்கள்.

[CENTER]


அப்புறம் பூ குழந்தை ஏன் போச்சாம்? சொல் பேச்சுக் கேட்காதாமா?

lolluvathiyar
26-06-2008, 07:11 AM
நாடக கலை அழிந்து வருகிறது உன்மைதான் ஆனால் பூ சொன்ன இந்த ரத்தகாட்டேரி நான் பார்த்ததில்லை. நான் நாடகம் பார்பதை விட்டு கிட்டதட்ட 20 வருடம் ஆகி இருக்கும் என்று நினைகிறேன். ஆனால் பூமகள் சொல்லும் அளவுக்கு டெக்னிகல் சமாசாரம் அப்போடு நாடகங்களில் இருந்ததாக எனக்கு நினைவில்லை.

நாடக கலை அறிவிலை புகுத்தி இந்த அளவுக்கு அப்டேட் செய்திருகிறார்கள் என்பது அறிந்து சந்தோசம்.
நான் பொம்மலாட்டம் பார்த்து கூட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது

சிவா.ஜி
26-06-2008, 07:52 AM
ஆனால் பூமகள் சொல்லும் அளவுக்கு டெக்னிகல் சமாசாரம் அப்போடு நாடகங்களில் இருந்ததாக எனக்கு நினைவில்லை.


இல்லை வாத்தியார். நான் இந்த நாடகத்தைப் பார்த்தது 1982-ல் 26 வருடங்களுக்கு முன்னும் இதே அளவுக்கு டெக்னிகல் விஷயங்களில் அசத்தியிருந்தார்கள். கலாநிலையம் நாடகக்குழு நம் தமிழ்நாட்டு R.S.மனோகர் அவர்களின் நாடகக்குழுவைப்போல கேரளத்தில் பிரபலமானது. இந்த டெக்னிகல் சமாச்சாரங்களுக்காகவே பிரபலமான குழூ.

அவர்களின் இன்னும் சில நாடகங்களை நான் கோவையில் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவில்லை. மேடைக்கே கார் கொண்டு வருவார்கள். விமானத்திலிருந்து இறங்கும் காட்சி தத்ரூபமாகக் காட்டியிருப்பார்கள். ஒரு அறையில் கை அலம்பும் பேஸினில் இருக்கும் குழாயில் தண்ணீர் வரும். இதெல்லாம் அந்த காலத்தில் நாடக மேடையில் அதிசயமானவை.