PDA

View Full Version : என் கனவுகள்..



rambal
19-07-2003, 02:32 PM
என் கனவுகள்..

கன்னிமாட படுதா வழியே
தயங்கி தயங்கி
பார்க்கின்றாய்
வசீகரிக்க வைக்கும்
பெண்ணின் புன்னகையைப் போலும்..

ஓட்டைப் பிரித்து
உள்ளே இறங்க
முயற்சிக்கின்றாய்
கைதேர்ந்த திருடன் போலும்..

கடைக்கண் காட்டி
மயக்க முயல்கிறாய்
ஒரு காதலி போலும்..

ஒரு போதும் இனி
உன்னுடனான உறவு இல்லை..
விவாகரத்து வாங்கிய
கணவன் மனைவியாகவே இருப்போம்..

எதிர்பாரா தருணங்களில்
சந்தித்தால் ஒற்றைப்
புன்னகையோடு
ஒட்டி உறவாடாமல்
தள்ளி நிற்போம்..

ஏற்கனவே
நீ போட்ட புதிர்களுக்கு
முடிவு
தெரியாத பொழுது
தினம் ஒரு புதிர்
போட்டுப் பார்க்க
என் வாழ்க்கை ஒன்றும்
செய்தித்தாள் அல்ல..

ஆதலினால்,
என்னை கொஞ்ச
நாளாவது தொந்தரவு செய்யாதிரு..

karavai paranee
19-07-2003, 02:39 PM
ஏற்கனவே
நீ போட்ட புதிர்களுக்கு
முடிவு
தெரியாத பொழுது
தினம் ஒரு புதிர்
போட்டுப் பார்க்க
என் வாழ்க்கை ஒன்றும்
செய்தித்தாள் அல்ல..


இது ஒன்றே போதும்
விமர்சிக்க அவசியம் இல்லை

வாழ்த்துக்கள் நண்பா
அருமையாக எழுதுகின்றீர்கள்

குறிப்பு-
எனக்கும் கொஞ்சம் உங்கள் கற்பனை தாருங்களேன்............இரவலாக

mayuran
19-07-2003, 04:03 PM
உங்கள் தொந்தரவு இல்லாத கனவு வளரட்டும் மேலும்..

எதிர்பாரா தருணங்களில்
சந்தித்தால் ஒற்றைப்
புன்னகையோடு
ஒட்டி உறவாடாமல்
தள்ளி நிற்போம்..

ஹ்ம் அது எப்படித் தான் தள்ளி நிற்பதோ.....

rambal
20-07-2003, 10:39 AM
குறிப்பு-
எனக்கும் கொஞ்சம் உங்கள் கற்பனை தாருங்களேன்............இரவலாக

உங்கள் அளவிற்கு காதல் பற்றியெல்லாம் என்னால் எழுதமுடியாது..
நன்றி கரவை பரணீயாரே...

gankrish
22-07-2003, 11:31 AM
அருமை நண்பா ராம்பால்.. நின் கனவு கவிதைகள்

Narathar
25-07-2003, 07:02 AM
காதலை எவ்வளவு வேண்டுமானாலும்
கவிதையாக்கலாம்....................
ஆனால் கவிதையே காதலாய் வர
கொடுத்துவைத்திருக்க வேண்டும் !